புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
47 Posts - 46%
T.N.Balasubramanian
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
249 Posts - 50%
ayyasamy ram
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
12 Posts - 2%
prajai
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
9 Posts - 2%
jairam
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Apr 01, 2013 10:45 am

அரசோ, தனிமனிதர்களோ என்ன செய்தாலும் அடக்க முடியாத கலவரம் கொசுக் கலவரம். கொசுவர்த்தியில் தொடங்கி, எலெக்ட்ரானிக் கொசு விரட்டும் இயந்திரம்வரை அறிவியல், ஆயிரம் தீர்வுகளைஇதற்குக் கொடுத்தாலும், எல்லாவற்றையும் முறியடித்து, ங்கொய்" என்றுகாதில் ரீங்கரித்து, மனிதனுக்கு பெப்பே காட்டும் புரட்சி வீரன் கொசு. ராணுவத்தால்கூட அடக்கமுடியாத இப்பிரச்சினைக்கு நம்மூர் பாட்டி வைத்தியம் மூலமாக அதிரடித் தீர்வு காணகளமிறங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. கொசுக்களுக்கு எதிரான மனிதர்களின் உரிமைப்போருக்கு சென்னை மாநகராட்சி பயன்படுத்தப் போகும் ஆயுதத்தின் பெயர் நொச்சிச் செடி.
-
நீர்வழித்தடங்களின் ஓரத்தில் நொச்சிச் செடிகளை வளர்த்தல், வீடுகளுக்கு நொச்சிச் செடி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்தப் போவதாக சென்னை மாநகராட்சியின் சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
-
வாசிக்க வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், நொச்சியின் மகத்துவத்தை அறிந்தவர்கள் இதை வரவேற்கவே செய்வார்கள். சென்னை மாநகருக்கு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்குமேகூட இத்திட்டத்தை விரிவுபடுத்தலாம். வெப்பமண்டலப் பிரதேசங்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மாபெரும்கொடை நொச்சிச் செடி.
-
இதென்ன புதுச்செடி என்று ஆச்சரியப்படாதீர்கள். வேலியோரங்களிலும், கிராமச்சாலைகளின் இருபுறங்களிலும் புதராக வளர்ந்த நொச்சிச் செடிகளை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். வெண்ணொச்சி, கருநொச்சி என்று இதில் இரண்டு வகைகள் உண்டு. வெண்ணொச்சி சுமார் 30 அடிவரை மரம் மாதிரி வளரக்கூடிய தன்மை கொண்டது. இதன் கிளைகள் வெண்மை நிறத்தில் இருக்கும். ஆற்றங்கரையோரங்களில் புதர்மாதிரி வளரும். இதன் கிளைகள் ஒல்லியானதாக இருந்தாலும் வலிமையானவை. முன்பெல்லாம் வகுப்பறைகளில் மாணவர்களை மிரட்ட, ஆசிரியர்கள் வைத்திருக்கும் பிரம்பு பெரும்பாலும் நொச்சிப் பிரம்பாக இருக்கும். கிராமங்களில் இதன் இளம் கிளைகளைக் கொண்டு கூடை பின்னுவார்கள். இந்தக் கூடையில் வைக்கப்படும் பொருட்களை பூச்சிபொட்டு நெருங்காது. வயற்காடுகளுக்கு வேலியாக நொச்சி வளர்ப்பதுண்டு. வலிமையான வேலியாக கால்நடைகளிடமிருந்து பயிரைக் காக்கும். வெள்ளாடுகூட நொச்சி இலைகளை சாப்பிட விரும்புவதில்லை. நொச்சித் தழைகளை இயற்கை உரமாகவும் பயன்படுத்துகிறார்கள்.
-
தமிழர் போர் மரபிலும் நொச்சிக்கு இடமுண்டு. சங்க காலத்தில் உறையூரை தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்த தித்தன் என்கிற சோழ மன்னன் தன்னுடைய நாட்டு எல்லைக்கு நொச்சிவேலி அமைத்ததாக வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது.
-
சங்க இலக்கியத்தில் நொச்சித்திணை என்று ஒரு திணையே உண்டு. நொச்சித்திணைவீரர்கள் நொச்சிப்பூ மாலை சூடி, எதிரிகளின் முற்றுகையை ஊடறுப்பார்கள் என்று பாடல்கள் குறிப்பிடுகின்றன. நொச்சிப்பூக்கள் மயில்நீல நிறம் கொண்டவை.
நொச்சியின் எல்லாப் பயன்பாடுகளைக் காட்டிலும் அதன் மருத்துவக்குணங்களே சிறப்பானதாக இருக்கிறது. இன்றும் கிராமங்களில் கொசுக்களையும் பூச்சிகளையும் விரட்ட, நொச்சி இலைகளை எரித்து புகைபோடும் பழக்கம் நீடிக்கிறது (நொச்சி இல்லாதஇடத்தில் வேம்பு). சிறுநகரங்களில், ஈக்கள் மொய்க்கக்கூடிய பழங்களை விற்கும் வியாபாரிகள், இலைகளோடு கூடிய நொச்சிக்குச்சிகளை விசிறி, அவற்றை விரட்டுவதைக் கவனித்திருக்கலாம். நொச்சி இலைகளை தலையணை உறைக்குள் பஞ்சுக்குப் பதிலாக அடைத்துப் பயன்படுத்தினால்கழுத்து வலி, தலைவலி நீங்கும் என்பது பழங்காலத்து வைத்தியம். நொச்சி இலையை சாறெடுத்து, கட்டிகளின் மீது தடவிவர, கரைந்துவிடுமாம். எதற்கெல்லாம் தைலம் பயன்படுத்துகிறோமோ அந்த உபாதைகளுக்கு எல்லாம் நொச்சிஇலைச் சாற்றை தைலத்துக்குப் பதிலாக உபயோகப்படுத்தலாம். குடிநீருக்கு வெட்டிவேர் பயன்படுத்துவதைப்போல நொச்சி வேரையும் பயன்படுத்தலாம். நொச்சிவேர்போட்டு,நீர் காய்ச்சிக் குடித்தால் வயிற்றில் பூச்சித்தொல்லை தீரும். இவ்வாறாக நம்முடைய பாட்டி வைத்திய முறைகளில் இன்னும் ஏராளமான பிரச்சினைகளுக்கு நொச்சி தீர்வளிக்கிறது.
-
கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் நொச்சியை வளர்க்க பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. ஆறு, ஓடை, காடுகளில் கிடைக்கும் நொச்சிச் செடிகளை பெயர்த்தெடுத்து வந்து வளர்க்கலாம். நகரங்களில் வசிப்பவர்கள் நொச்சி வளர்க்க விரும்பினால், அருகிலிருக்கும் வனத்துறை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை உதவிக்கு நாடலாம். சில தனியார் நர்சரிகளிலும் நொச்சிச்செடி வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்டோமானால், ஏற்பாடு செய்து தருவார்கள். அரசு சித்த மருத்துவ வளாகங்களில் நொச்சி வளர்க்கப்படுகிறது.
-
சென்னை மாநகராட்சியின் நொச்சி வளர்ப்புத் திட்டம் பெரும் வெற்றியடையும் பட்சத்தில், இதற்கு வணிக அந்தஸ்தும் கிடைத்துவிடக்கூடும். யாருக்குத் தெரியும்? இப்போது கேட்பாரற்று ஆங்காங்கே வளரும் நொச்சியைக்கூட பயிர் செய்யக்கூடிய நிலைமை வந்தாலும் வரும்.
தற்போது கொசுவை ஒழிக்க நாம்பயன்படுத்தி வரும் கெமிக்கல் முறைகளை எதிர்க்கும் திறன், கொசுக்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விட்டிருக்கிறது. எனவே, இயற்கை ஏற்கெனவே நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஏற்பாடுகளை மீண்டும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். என்ன இருந்தாலும் உலகம் உருண்டைதானே... வாழ்க்கை வட்டம்தானே?
-
புதிய தலைமுறை

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 01, 2013 10:53 am

நொச்சி நொச்சிதான் - சூப்பர் மச்சின்னு சொல்லுங்க.

இயற்கை இயற்கை தான் - நல்ல பகிர்வு பவுன்ராஜ்.

நொச்சிகுப்பத்தில் அப்ப கொசு இருக்காதோ? இல்ல இருக்கும் பெயர் மட்டும் தானே - கொசுவுக்கு பெயரை படிக்க தெரியாதுல்ல!!!

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Apr 01, 2013 12:48 pm

நொச்சி செடிக் கிளையை உடைத்து நட்டு வைத்தாலே போதும். தானாக வளர்ந்து விடும்.
சளித்தொல்லை க்கு வேது பிடிப்பதற்கு இதன் இலை பயன்படும்.

நல்ல பகிர்வு !

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 01, 2013 4:25 pm

எல்லாம் சரி....நொச்சிக் குச்சியில் அடி வாங்கி இருக்கின்றீர்களா ? ஒரு மாதம் வரை வலிக்கும். தழும்பு மறைய ஆறுமாதம் கூட ஆகும்.

நீளமான நொச்சிக்குச்சியை ஒரு முனையில் கூராக்கி ஈட்டிபோல் செய்துகொள்வோம். அதை வேகமாக வீச, தற்காலத்தில் ஜாவலின் என்கிறார்களே அதுபோல் நீண்ட தூரம் பாய்ந்து தரையில் குத்திக்கொண்டு நிற்கும். யாருடைய நொச்சிக்குச்சி அதிக தூரம் பாய்கிறது என்பதை வைத்து எங்கள் வலிமை முடிவு செய்யப்படும். சில சமயம், சோளக்காட்டில் திருட்டுத்தனமாக வந்து பயிரை நாசம் செய்யும் பன்றியைகூட இதை வீசி காயப்படுத்தி உள்ளேன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 01, 2013 4:32 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எல்லாம் சரி....நொச்சிக் குச்சியில் அடி வாங்கி இருக்கின்றீர்களா ? ஒரு மாதம் வரை வலிக்கும். தழும்பு மறைய ஆறுமாதம் கூட ஆகும்.

நீளமான நொச்சிக்குச்சியை ஒரு முனையில் கூராக்கி ஈட்டிபோல் செய்துகொள்வோம். அதை வேகமாக வீச, தற்காலத்தில் ஜாவலின் என்கிறார்களே அதுபோல் நீண்ட தூரம் பாய்ந்து தரையில் குத்திக்கொண்டு நிற்கும். யாருடைய நொச்சிக்குச்சி அதிக தூரம் பாய்கிறது என்பதை வைத்து எங்கள் வலிமை முடிவு செய்யப்படும். சில சமயம், சோளக்காட்டில் திருட்டுத்தனமாக வந்து பயிரை நாசம் செய்யும் பன்றியைகூட இதை வீசி காயப்படுத்தி உள்ளேன்.

சின்ன வயதில் பல சாகசம் செய்து உள்ளீர் என்று சொல்லுங்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 01, 2013 4:32 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எல்லாம் சரி....நொச்சிக் குச்சியில் அடி வாங்கி இருக்கின்றீர்களா ? ஒரு மாதம் வரை வலிக்கும். தழும்பு மறைய ஆறுமாதம் கூட ஆகும்.

நீளமான நொச்சிக்குச்சியை ஒரு முனையில் கூராக்கி ஈட்டிபோல் செய்துகொள்வோம். அதை வேகமாக வீச, தற்காலத்தில் ஜாவலின் என்கிறார்களே அதுபோல் நீண்ட தூரம் பாய்ந்து தரையில் குத்திக்கொண்டு நிற்கும். யாருடைய நொச்சிக்குச்சி அதிக தூரம் பாய்கிறது என்பதை வைத்து எங்கள் வலிமை முடிவு செய்யப்படும். சில சமயம், சோளக்காட்டில் திருட்டுத்தனமாக வந்து பயிரை நாசம் செய்யும் பன்றியைகூட இதை வீசி காயப்படுத்தி உள்ளேன்.

அடி வாங்கினதில்ல ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக