புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
3 Posts - 2%
jairam
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
2 Posts - 1%
சிவா
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
1 Post - 1%
Manimegala
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
1 Post - 1%
Poomagi
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
17 Posts - 4%
prajai
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
7 Posts - 2%
jairam
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
4 Posts - 1%
Jenila
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
3 Posts - 1%
Rutu
உறைந்த புன்னகை. Poll_c10உறைந்த புன்னகை. Poll_m10உறைந்த புன்னகை. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறைந்த புன்னகை.


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Mon Feb 25, 2013 1:45 pm

உறைந்த புன்னகை.
(சிறுகதை)

'ஏங்க…கொஞ்சம் இப்படி வர்றீங்களா?” மூச்சு விடவே திணறியபடி மிகவும் மெல்லிய குரலில் கணவனை அழைத்தாள் வேதவல்லி.

'என்னம்மா?…என்ன வேணும்?”பரிவான விசாரிப்போடு தன் மனைவி படுத்திருக்கும் அந்த அறைக்குள் நுழைந்தார் ஜெயராம்.

'குழந்தைக பட்டாசு கேக்குதுக…ஏதோ கொஞ்சமாவது வாங்கிக் குடுங்க..பாவம்” சிரமப்பட்டுப் பேசினாள்.

'என்ன வேதம்…நீயும் புரிஞ்சுக்காமப் பேசறே?…ஏதோ நீ சொன்னேன்னுதான் குழந்தைகளுக்குப் புதுத் துணியே வாங்கினேன்…உனக்கு இருதய ஆபரேஷன் பண்ணிட்டு வந்து ஒரு வாரம் கூட ஆகலை….உன்னைய இந்த நெலமைலே வெச்சுக்கிட்டு இந்த வருஷம் தீபாவளி கொண்டாடணுமா?…சொல்லும்மா…”

'நம்ம கஷ்டம் நம்மளோட இருக்கட்டும்ங்க…அதுக பாவம் குழந்தைக அதுகளுக்கு இதெல்லாம் புரியவா போகுது? அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளெல்லாம் பட்டாசு வெடிக்கும் போது இதுக மட்டும் சும்மா பார்த்திட்டு இருக்கணுமா?..ஒரு அம்பதோ..நூறோ…செலவாகும் அவ்வளவுதானே?”

'அய்யோ..நான் செலவுக்காக சொல்லலை வேதம்…..டாக்டர் என்ன சொல்லியிருக்காரு?..'உன்னோட இருதயம் இப்ப இருக்கற கன்டிஷன்ல அதிகப்படியான சத்தங்களைக் கேட்கக்கூடாது…அந்த அதிர்வு மோசமான பாதிப்புகளையும்..விளைவுகளையும் கொடுக்கும்”ன்னு சொன்னாரா இல்லையா?…அக்கம் பக்கத்துல வெடிக்கற சத்தத்துல இருந்து உன்னை எப்படிப் பாதுகாக்கறதுன்னு தெரியாம ஏற்கனவே நான் கவலைப்பட்டுக்கிட்டிருக்கேன்..நீ என்னடான்னா நம்ம பசங்களுக்கே வாங்கிக் குடுக்கச் சொல்றே…அய்யயோ…நான் மாட்டேன்”

'பரவாயில்லை வாங்கிக் குடுங்க…நான் வேணா என்னோட அறைக் கதவு…ஜன்னல்களையெல்லாம் 'கப்”புன்னு இறுகச் சாத்திக்கிட்டு உள்ளார படுத்துக்கறேன்…எந்த அதிர்வும் ஏற்படாது”

'என்ன வேதம் சொன்னா கேட்க மாட்டேங்கறே…இவனுக எப்படியும் நம்ம காம்பௌண்டுக்குள்ளாரதான் வெடிப்பானுக..அப்படி வெடிச்சானுகன்னா…இந்த பில்டிங்கே அதிரும்…உன்னால தாங்க முடியாது…ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா?…,”

'அதெல்லாம் ஒண்ணும் ஆகாது நீங்க வாங்கிக குடுங்க..” கண்டிப்புடன் சொன்ன வேதம் தன் படுக்கையருகே மிரண்டு போன குட்டி ஆடுகளாய் நின்று கொண்டிருந்த பத்து வயது ஸ்ரீதரையும், எட்டு வயது ஹரியையும் கை நீட்டி அருகில் அழைத்து 'கவலைப்படாதீங்க கண்ணுகளா…அப்பாகிட்ட சொல்லிட்டேன்…இன்னிக்கு சாய்ந்திரமே வாங்கிட்டு வந்திடுவார்…போங்க போயி வெளையாடுங்க”

குழந்தைகளிரண்டும் சந்தோஷமாய்க் குதித்துக் கொண்டு ஓட 'ஹூம்” என்று அதுகளைப் பார்த்து பெருமூச்சு விட்டபடியே நகர்ந்தார் ஜெயராம்.

தீபாவளி.

'அம்மா…அம்மா…கதவைத் திறம்மா….என்னோட புது டிரஸ் எப்படி இருக்குன்னு பாத்துச் சொல்லும்மா…” குட்டிப் பையன் ஹரி நிலைமை தெரியாமல் கதவைத் தட்ட,

பாய்ந்து வந்து தடுத்தார் ஜெயராம் 'டேய்…டேய்…விடுடா…அம்மா தூங்கறாங்க”

'தீவாளியன்னைக்கு காலைல நேரத்துல எந்திரிச்சுக் குளிக்கணும்ன்னு அம்மாதான் சொன்னாங்க…அப்புறம் ஏன் அவங்களே இன்னும் தூங்கறாங்க?”

பதில் சொல்ல முடியாமல் ஜெயராம் திணறி நிற்க, கதவு திறந்தது.

உள்ளிருந்தவாறே மகனை கை நீட்டி அழைத்தாள் வேதவல்லி.

ஹரி ஓடிப் போய் தன் புது டிரஸ்ஸை திருப்பித் திருப்பிக் காண்பித்தான். வேதவல்லியின் முகத்தில் சோகமான சந்தோஷம்.

'அடடே…ராஜாவாட்டம் இருக்குதே என் தங்கம்.” அவனை அருகே அழைத்து நெற்றியில் முத்தமிட்டாள் 'அது செரி…அவன் எங்கடா?” அவள் கேட்டு முடிக்கும் முன் எங்கிருந்தோ பறந்து வந்தான் மூத்தவன் ஸ்ரீதர். அவனுக்கும் ஒரு முத்தத்தை தீபாவளிப் பரிசாய் அவள் வழங்கிய போது….

'பட்…படார்…படார்..” பக்கத்தில் யாரோ வைத்த சரவெடியொன்று அதிர்வை உண்டாக்க கண்களை இறுக மூடி…உதட்டைக் கடித்து அந்த அதிர்வைத் தாங்க முயன்றாள் வேதவல்லி.

ஜெயராம் ஓடிச் சென்று கதவுகளைச் சாத்தினார்.

'ம்மா…ம்மா…நான் ஒரு செங்கோட்டை வெடி வைக்கறேன்னா அப்பா விட மாட்டேங்குதும்மா..” தந்தையைக் குறுகுறுவென்று பார்த்தபடியே மூத்தவன் ஸ்ரீதர் சொல்ல வேதவல்லி கணவனிடம் பார்வையால் கெஞ்சினாள். ஜெயராம் தர்ம சங்கடமாய் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.

'போப்பா…நீ போய் உன் ஆசைப்படியே செங்கோட்டை வெடி வை…நான் இங்கிருந்தே கேக்கறேன்….” வேதவல்லி சொல்ல மகிழ்ச்சியுடன் ஓடினான் மூத்தவன்.

'டேய்..டேய்..இருடா நானும் வரேன்” சின்னவனும் அவன் பின்னாலேயே ஓடினான்.

நெஞசைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்து படுத்த வேதவல்லி 'போய்ப் பசங்களைப் பாத்துக்கங்க…கைல கால்ல வெடிச்சுக்கப் போறானுக” என்றாள். உள் வலியின் தாக்கம் அவள் வார்த்தைகளில் நடுக்கமாய்த் தெரிந்தது.

ஜெயராம் அறைக் கதவை இறுகச் சாத்தி விட்டு குழந்தைகளிடம் வந்தார்.

படுத்திருந்த வேதவல்லி தன் மகன் வைக்கப் போகும் செங்கோட்டை வெடியின் சத்தத்தை ரசிக்க தன்னைத் திடப் படுத்திக் கொண்டு காத்திருந்தாள்.

'பட்…படார்…டமார்…டுமீர்..படார்”

வெடிச் சத்தத்தில் பில்டிங்கே அதிர்ந்தது.

வேதவல்லியின் இருதயம் அந்தச் சத்தத்தில் ஏகமாய் அதிர, அவள் உடல் படபடக்கத் துவங்கியது. அந்த நிலையிலும் அது தன் குழந்தைகள் வைத்த வெடிச் சத்தம் என்கிற மகிழ்ச்சி உதட்டில் பெருமிதப் புன்னகையாய் தோன்றியது.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஜெயராம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர கூடவே ஓடி வந்த ஸ்ரீதர் 'அம்மா…இப்ப வெடிச்சுதே அது நான் வெச்ச செங்கோட்டை வெடியாக்கும்…..எப்படியிருந்தது?” தாயின் தாடையைப் பிடித்துக் கேட்டான்.

பதிலில்லை.

'சொல்லும்மா…”

முகத்தில் உறைந்த பெருமிதப் புன்னகையை மகனுக்கு பதிலாய் வைத்து விட்டு வேதவல்லியின் உயிர்ப்பறவை எப்போதோ பறந்து விட்டிருந்தது.

(முற்றும்)


முகில் தினகரன்
கோயமுத்தூர்
9894125211






ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 1:58 pm

அடப்பாவமே சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக