புதிய பதிவுகள்
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
72 Posts - 46%
heezulia
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
5 Posts - 3%
prajai
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
2 Posts - 1%
Jenila
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
2 Posts - 1%
jairam
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
1 Post - 1%
M. Priya
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
72 Posts - 34%
mohamed nizamudeen
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
9 Posts - 4%
prajai
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
6 Posts - 3%
Jenila
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
4 Posts - 2%
Rutu
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
2 Posts - 1%
jairam
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10கன்னியாகுமரி மாவட்டம். Poll_m10கன்னியாகுமரி மாவட்டம். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னியாகுமரி மாவட்டம்.


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jun 13, 2012 1:33 pm

மாவட்டங்களின் கதைகள் - கன்னியாகுமரி ( Kanyakumari)

தமிழ்நாட்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யும் ஒரே மாவட்டம்

திருவள்ளுவருக்கு கடலுக்குள் அமைந்த பாறையின் மீது 133 அடி உயர சிலை அமைந்த மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம்.

மாவட்டத்தைப் பற்றிய அரியதகவல்களை இங்கு காணலாம்.


தலைநகர் நாகர்கோவில்
பரப்பு 1,672 ச.கி.மீ
மக்கள்தொகை 16,76,034
ஆண்கள் 8,32,269
பெண்கள் 8,43,765
மக்கள் நெருக்கம் 995
ஆண்-பெண் 1,014
எழுத்தறிவு விகிதம் 87,68%
இந்துக்கள் 8,59,307
கிருத்தவர்கள் 7,49,406
இஸ்லாமியர்கள் 70,360
புவியியலமைவு
அட்சரேகை 803-805N
தீர்க்கரேகை 7705 - 77036

இணையதளம்
www.kanyankumari.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrkkm@tn.nic.in
தொலைபேசி: 04652-279555
எல்லைகள்: இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கு முனையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் கிழக்கில் திருநெல்வேலி மாவட்டமும், தென் மேற்கே மன்னார் வளைகுடாவும், இந்தியப் பெருங்கடலும்: மேற்கு மற்றும் வடமேற்கில் கேரள மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: வேணாடு என்று வழங்கப்பட்ட இப்பகுதி வீர கேரளவர்மா காலத்தில் முழுவதுமாக திருவிதாங்கூர் ஆதிக்கத்தின் கீழ் வந்த்து. மதுரை விஸ்வநாத நாயக்கருக்கு சிறிது காலம் கப்பம் காட்டியது.

டச்சுகாரர்களுடன் நடைபெற்ற குளச்சல் போரில் மன்னர் மார்த்தாண்டவர்மா வெற்றி பெற்ற போதிலும்,மேற்கொண்டு அழிவுகள் ஏற்படாமல் தடுக்க சந்தா சாகிப்பிற்கு பெருந்தொகை கையூட்டமாக கொடுக்கப்பட்டது.

மார்த்தாண்டவர்மா காலத்திற்குப் பின் பிரிட்டீஷாரின் ஆதிக்கம். இது 1947 வரை தொடர்ந்த்து. 1947-இல் திருவிதாங்கூர் இந்திய யூனியனுடன் இணைந்தது. தொடர்ந்து 1951இல் கொச்சின், திருவிதாங்கூருடன் இணைக்கப்பட்டு திருவாங்கூர்-கொச்சின் என்றழைக்கப்பட்டது.

மொழிவாரி மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் அடிப்படையில், திருவாங்கூர்-கொச்சின் மாநிலத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம், தோவானை, கல்குளம், விளவங்கோடு என்னும்நான்கு தமிழ் பேசும் தாலுகாக்ககள் உள்ளடங்கிய கன்னியாகுமரி மாவட்டம் உருவானது. தொடர்ந்து 1956, நவம்பர் ஒன்றாம் தேதி தமிழகத்தின் ஒரு மாவட்டமானது.
வரலாறு
கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ்பெற்ற குமரி அம்மன் என்னும் தேவதையை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு கிடைத்திருக்கிறது. இதுபார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாக கூறுகிறது.
சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளை ஆய் என்னும் சிற்றரசனே ஆண்டதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் நிரம்ப வயல்கள் இருந்ததால், நிலத்தை (வயலை) உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து (கலப்பை) இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்கள் துணிபு. தற்போது அகத்தீஸ்வரம் மற்றும்தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பாண்டியர்களின்ஆட்சிப்பகுதியாக இருந்து பின் சேரர்கள் வசம் வந்ததாகத் தெரிகிறது.



கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ளதிருவள்ளுவர் சிலை மற்றும்விவேகானந்தர் மண்டபம்
தற்போது கல்குளம், விளவங்கோடு வட்டங்களாக இருக்கும் இடை நாடு, சேரர்கள் ஆட்சிப்பகுதியாக இருந்தது. பின்ஓய்சலயர்கள் மற்றும் மேற்கு சாளுக்கியர்களின்வளர்ச்சியினால் சேரர்கள் வலுவிழந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட (வேணாடு) திருவிதாங்கூர் மன்னர்கள்நாஞ்சில் நாட்டின் பெரும்பான்மைப் பகுதிகளை கைவசப்படுத்திக்கொண்டனர். வீர கேரள வர்மாவால்துவங்கப்பட்ட இக் கைப்பற்றுக்கொள்கை அவரின் பின்காமிகளால் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டு கி.பி.1115 -ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டது.
ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வேணாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள், தொடர்ந்து பக்கத்து பாண்டிய மன்னர்களுடன் எல்லைத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் விஜயநகர மன்னர்கள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்தனர். இதன் விளைவாக, கன்னியாகுமரி, 1609- ஆம் ஆண்டு மதுரை, விஸ்வநாத நாயக்கரின் வலுவான கரங்களுக்குள்ளானது. இதன் விளைவாக 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்த விதமான வலுவான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருந்தது. பின்னர் ரவி வர்மா, மார்த்தாண்ட வர்மா, ஆகிய அரசர்களின் காலகட்டத்தில் வேணாடு கடும் உள்நாட்டு குழப்பங்களை சந்தித்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டஆற்காடு சந்தா சாகிபு நாஞ்சில் நாட்டை தாக்கினார். குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மா டச்சு போர்வீரர்களை வெற்றிகொண்ட போதிலும் சந்தா சாகிபுவை சமாளிக்க முடியாததால் போர்க்களத்தை விட்டு பின்வாங்க வேண்டியிருந்தது. மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்களின் தலையீடு இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்த வேணாட்டை 1947 வரை அவர்களே ஆண்டுவந்தனர்.
பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலைப் போராட்டம்வெடித்தது. 1956, நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் பகுதியாக மாறியது.
இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர், திரு. திருமலை IAS , 01.11.1956 அன்று பொறுப்பு அமர்ந்தார்

புவியியல்
இம்மாவட்டம், முன்பு நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் மற்றும் சிறந்த வாய்க்கால் விவசாயம்ஆகியவற்றின் மூலம் திருவிதாங்கூரின் களஞ்சியம் என அறியப்பட்டது. ரப்பர் மற்றும்நறுமணப்பொருள்கள் மலைச்சரிவுகளிலும் நெல், வாழை, தென்னை ஆகியன கடற்கரையை ஒட்டியசமபூமிகளிலும் பெருமளவில் காணப்படுகின்றன. இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது. இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன. இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9% விவசாய நிலமாகவும், 32.5% அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது.
மாவட்டத்தின் கடற்கரைகள் பல பாறை மயமாகவும் மற்றவிடங்கள் வெள்ளை மணற்பகுதியாகவும் காணப்படுகின்றன. கிழக்கு கடற்கரைகளில் பவழப்பாறைகளின் அம்சங்கள் (பெரும்பாலும் அழிந்திருந்தாலும்) பல காணப்படுகின்றன. பல வகையான வண்ண சங்கு வகைகளும் காணப்படுகின்றன. மேலும் சில கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மணல் தாது வளம் நிறந்ததாக இருக்கிறது.
தட்பவெப்ப நிலை
கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், வடகிழக்கு பருவக்காற்று வீசும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர்மாதம் வரை, 24 மழை நாட்களில் 249 மி.மீ மழையும், தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜூன் முதல்செப்டம்பர் மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே மார்ச் முதல் மேமாதம் வரையிலான வேனில் காலத்தில் 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில் அக்டோபர் மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், பெப்ரவரி மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது. மாவட்டத்தின்ஈரப்பதம் 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.
ஆறுகள்
இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் தாமிரபரணி, வள்ளியாறு, பழையாறு ஆகியன.
தாமிரபரணி
முதன்மைக் கட்டுரை: தாமிரபரணி
இந்நதி குழித்துறையாறு என பரவலாக அறியப்படுகிறது. இதற்கு இரண்டு துணை ஆறுகள் உள்ளன. அவைகோதையாறு மற்றும் பரளியாறு ஆகியன. இவைகள் முறையே பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணிஅணைக்கட்டுகளிலிருந்து வருகின்றன. மேலும் கோதையாறு ஆற்றுக்கும் இரண்டு துணை ஆறுகள் உள்ளன. இவை சிற்றாறு - 1, மற்றும் சிற்றாறு - 2 ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்தத் தாமிரபரணி கன்னியாகுமரிக்கு 56 கி.மீ மேற்காக அமைந்திருக்கும் தேங்காய்ப்பட்டணம் என்னும் சிற்றூரில் அரபிக் கடலில் கலக்கிறது.
வள்ளியாறு
இவ்வாறும் இதன் ஒரு துணை ஆறாகிய தூவலாறும், வேளிமலை மலையில் உற்பத்தியாகி,பி.பி.கால்வாய், மற்றும் அதன் பிரிவுக் கால்வாய்களிலிருந்தும் வரும் ஓடைகளின் நீரையும் வாங்கிக்கொண்டு, மணவாளக்குறிச்சி அருகே அரபிக்கடலில் கலக்கிறது.
பழையாறு
இவ்வாறு நாகர்கோவிலுக்கு 18 கி.மீ வடமேற்காக அமைந்திருக்கும் சுருளகோடு என்னும் சிற்றூரில் தொடங்குகிறது. இது தோவாளை, அனந்தன் நகர், மற்றும் என்.பி. கால்வாய்களின் ஓடைகளின் நீர்களை வாங்கும் ஒரு ஓடையாறாகவே இருக்கிறது. மணக்குடியில் கடலில் கலக்கிறது.
தாவர மற்றும் விலங்கு வகைகள்
கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணிச் செடிகளையும் பல வெப்பமண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறை பகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு இலைகளியும் பூக்களையும் உடைய மரங்கள், பச்சை படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் ஜொலிப்பதை பார்க்க முடியும்.
இம்மாவட்டத்தில் காணப்படும் விலங்குகளில் முள்ளம் பன்றி, காட்டுப் பன்றி, பல்லி வகைகள், பல இனகொக்கு, நாரை, நீர்க்கோழி, மலைப் பாம்பு, பல வகைப் பாம்புகள் உட்பட பல வகைப்பட்ட ஊர்வனஆகியவை அடங்கும்.மேலும் மகேந்திரகிரி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்துக்கு மேல்)முயல்கள், மான்கள், சிறுத்தை ஆகியவற்றை காண முடியும். அதன் அருகாமையிலுள்ள நெடுஞ்சாலையில் சிறுத்தை குட்டிகள் சாதாரணமாக வந்து போவதை பார்க்க முடியும். கீரிப்பாறை சார்ந்த பகுதிகள் யானைகள், காட்டு எருமை, கரடி போன்ற விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. தேரூர்பகுதியில் பல வகையான கொக்குகளை சில குறிப்பிட்ட காலச் சூழல்களில் பார்க்க முடியும்.
மருத்துவ வரலாறு
இம்மாவட்டத்துக்கு இயற்கை பல அரிய மூலிகைவகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் நன்கொடையாகத் தந்திருக்கிறது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலை அசோகர்காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும்ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்தகாப்பிய யுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன்புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.
மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல்சித்தருமான அகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் அகஸ்தீஸ்வரம்என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால், அகஸ்தீஸ்வரமுடையாருக்குசமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது. மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்ம சாஸ்திரத்திலும் அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணி, வர்ம சாஸ்திரம்ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.
பொருளாதாரம்
தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயம்
முக்கிய பயிர்வகைகள்
1. அரிசி - 400 ச.கி.மீ
2. தென்னை - 210 ச.கி.மீ
3. ரப்பர் - 194.78 ச.கி.மீ
4. மரவள்ளிக்கிழங்கு - 123.50 ச.கி.மீ
5. வாழை - 50 ச.கி.மீ
6. பருப்பு - 30 ச.கி.மீ
7. முந்திரி - 20 ச.கி.மீ
8. பனை - 16.31 ச.கி.மீ
9. மாம்பழம் - 17.70 ச.கி.மீ
10. புளி - 13.33 ச.கி.மீ
11. கமுகு - 9.80 ச.கி.மீ
12. பலா - 7.65 ச.கி.மீ
13. கிராம்பு - 5.18 ச.கி.மீ
கைவினைப் பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்
குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாததேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ரப்பர்
ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள இல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. மேலும்,நேந்திரம் பழம், செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி, உட்பட பல வகையானவாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.
மீன் பிடிப்பு
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 200 - க்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.
கல்வி
கல்வியறிவு விகிதத்தில் (100%) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது.
குமரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள்
1. மழலையர் பள்ளிகள் - 83
2. தொடக்கப் பள்ளிகள் - 413
3. நடுநிலைப் பள்ளிகள் - 147
4. உயர் நிலைப் பள்ளிகள் - 121
5. மேல் நிலைப் பள்ளிகள் - 120
6. மொத்தம் 884
கல்லூரிகள்
1. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் - 12
2. சுயநிதி கல்லூரிகள் - 4
3. Colleges for special education -8
4. தொழில் கல்லூரிகள் - 20
5. கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி|அரசு மருத்துவக்கல்லூரி - 1
6. அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி - 1
சுற்றுலாத் தலங்கள்
 கன்னியாகுமரி
 நாகர்கோவில்
 சுசீந்திரம்
 வட்டக் கோட்டை
 பத்மநாபபுரம் அரண்மனை
 சிதறால் சமண நினைவு சின்னங்கள்
 மாத்தூர் தொட்டிப் பாலம்
 திருநந்திக்கரை குகைக் கோவில்
 திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
 உதயகிரிக் கோட்டை
 உலக்கை அருவி
 பேச்சிப்பாறை அணைக்கட்டு
 பெருஞ்சாணி அணைக்கட்டு
 முக்கடல் அணைக்கட்டு
 திற்பரப்பு நீர்வீழ்ச்சி
 சொத்தவிளை கடற்கரை
 முட்டம் கடற்கரை
 தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
 சங்குத்துறை கடற்கரை
 ஆலஞ்சி கடற்கரை

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 2: நாகர்கோவில், பத்மநாபபுரம்.
தாலுகாக்கள் - 4: தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவ்கோடு,
நகராட்சிகள்: 4: நாகர்கோவில், குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம், ஊராட்சி ஒன்றியங்கள் - 9: அக்ஸ்தீஸ்வரம், ராஜாக்க மங்கலம், தோவாளை, கிள்ளியூர், குருந்தன்கோடு,மேல்புறம், முஞ்சிறை, திருவாட்டார், தக்கலை.

குறிப்பிட்ட இடங்கள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்: சுமார் 500 வருட பழமையான 'புற்றுமண்' கோயில். 'பெண்களின் சபரிமலை' எனவும் அழைக்கப்படுகிறது.

கேரளபுரம்: இங்குள்ள விநாயகர் சிலை ஆறு மாதம் கறுப்பாகவும், ஆறு மாதம் வெள்ளையாகவும் காட்சியளிக்கிறார்.

முக்கூடல்: நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீர் வழங்குகிறது. இந்த அணையைக் கட்டியவர் சித்திரைத் திருநாள் மகாராஜா. சிறந்த சுற்றுலாத்தளம்.

சுசீந்திரம்: இசைத்தூண்கள், பெண் விநாகர், மும்மூர்த்திகள் ஒன்றிணைந்து காட்சியளிக்கும் தாணூமாலயன் 18 அடி உயர ஒற்றைக் கல் அனுமான் என பல்வேறு சிறப்பு கொண்டது.

வள்ளிமலை கோவில்: ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று அடுக்குகள் கொண்ட இக்கோவில் பல்லவர் மற்றும் நாயக்கர் கால கட்டடக் கலைபாணியில் அமைந்துள்ளது.

அய்யன் திருவள்ளுவர் சிலை: கடல் நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயர அய்யன் திருவள்ளவர் சிலை கன்னியா குமரி மாவட்டத்தின் தனிச்சிறப்பு ஆகும்.


130 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையில், 38 அடி உயரமான பீடம் உள்ளது. இது திருக்குறளின் 38 அதிகாரங்களை குறிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தின் மேல் உள்ள 95 அடி உயரம் கொண்ட சிலை திருக்குறளிலுள்ள 95 அதிகாரங்களையும் குறிக்கும் வகையில் அமைக்கப்படிருக்கிறது.


இரவு நேரத்தில் ஒளிரும் அய்யன் திருவள்ளுவர் சிலை


133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை

மண்டபத்தில் உள்ளே இருக்கும் சுவற்றில் ஒவ்வொரு அதிகராத்திலிருந்தும் ஒரு குறளைத் தேர்ந்தெடுத்து, மொத்தம் 133 குறட்பாக்கள் அதற்குரிய ஆங்கில மொழிப்பெயர்ப்புடன் பொறிக்கப்பட்டுள்ளது.

பிற இடங்கள்: கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, நாகராஜா கோவில், கோட்டாறு சவேரியார் கோவில், தக்கலை ஞானி பீர் முகமது மசூதி.
இருப்பிடமும், சிறப்புகளும்


சென்னையிலிருந்து 689 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மாவட்டத்தின் முக்கிய கோட்டைகள்த பத்பநாபபுரம் கோட்டை, மருந்துக்கோட்டை, உதயகிரிக்கோட்டை, மருந்துக்கோட்டை, மையக்கோட்டை.
மூலிகைச் செடிகள் மிகுந்த 'மருத்துவா மலை' நாகர்கோவிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது.
குளச்சல் பழமையான இயற்கைத் துறைமுகம்
நாகர்கோவில் நகரத்தின் அடையாளச் சின்னமாக விளங்கும் மணிக்கூண்டு (மணி மேடை) 1893, ஆகஸ்டு 14 ஆம் தேதி, திருவிதாங்கூர் மன்னர் ஶ்ரீமூலம் திருநாளால் திறந்து வைக்கப்பட்டது. நாகர் கோவில் நகராட்சியின் அதிகாரபூர்வ முத்திரையாக பயன்பட்டுவருகிறது.
குறிப்பிட்டதக்கோர்: அதங்கோட்டாசான், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சதாவதானி செய்குதம்பி பாவலர், ஜீவானந்தர், நேசமணி, என். எஸ். கிருஷ்ணன்.


கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமானவர்கள் சிலர்
1. தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான்-தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதிஉள்ளார்
2. தமிழ் புலவர் சதாவதானி செய்கு தம்பி பாவலர் - சதாவதானம் எனும் கலையில் சிறப்பு பெற்றவர்
3. புன்னைக்காடு கொச்சன் ஆசான் - திருவாங்கூர் மன்னர் ஆயில்லியம் திருநாள் ராமவர்மா (காலம் 1860-1880) விடமிருந்து வீரவாளும் முத்துக்குடையும் பரிசாக பெற்றவர்
4. புலிப்புனம் இசக்கிமாடன் தண்டல்காரன் - பத்மநாபபுரத்திலிருந்து – கண்ணணூர் வரை நாயரை கொண்டு ஓலை சுமக்கவைத்தவர்
5. பளுகல் இரத்தசாட்சி தேவசகாயம் நாடார் - 1854-ல் வேலைக்கு கூலி வேண்டும் என்று போராடியவர் (காலம் உத்திரம் திருநாள் மாகாராஜா 1847-1860)
6. புலிப்புனம் குட்டிநாடார் மற்றும் உடன்பிறந்தவர்கள் - திருவாங்கூரில் முதல் பேருந்துதை இயக்கியவர் காலம் ஸ்ரீமூலம் திருநாள் ராமவர்மா (1885-1924)
7. சாமிதோப்பு வைகுண்ட சுவாமிகள் - சாதியை ஒழிக்க போராடியவர். புதியதோர் சமயம் நிறுவியவர் காலம் (1808 -1851)
8. களியக்காவிளை சத்தியநாதன் நாடார் - தென் திருவாங்கூரில் முதன் முதலில் கமேர்ஷியல் பயிற்சி பள்ளியை நிறுவியவர் காலம் (1923)
9. பொன் பாக்கியநாதன் நாடார் - “சான்றோர் குல சந்திரிகை” என்ற தாய்மொழி தமிழில் குமரியில் முதல் சமுதாய நூல் எழுதியவர் காலம் (1892)
10. நாகர்கோவில் எம். டானியேல் - தென் திருவாங்கூரில் முதல் பட்டதாரி காலம் (1889)
11. பள்ளியாடி Dt. Yesudian Henry - திருவாங்கூரில் முதல் டாக்டர் (தெரசர்) காலம் (1847-1934)
12. மேட்டுகடை S. பீருக்கண்ணு - இசுலாமியராக மாறிய முதல் நாடார் சமுதாயத்தவர்.
13. இராமன்புதூர் D.D. பிறான்சிஸ் - குமரிக்கு ரயில் பாதை வேண்டும் என்று குரல் கொடுத்த முதல் மனிதர் மற்றும் கன்னியாகுமரி முதல் குளச்சல் வரை கடலோரம் சாலை அமைத்தவர் (காலம் 15-09-1873 to 17-10-1967)
14. நாகர்கோவில் பாக்கியம் - திருவாங்கூரில் முதன் முதலில் வீட்டுக்கு ஓடு போட்டு கூரை வேய்ந்தவர்
15. காரங்காடு சவரிமுத்து நாடார் - தனியார் துறையில் முதன் முதலில் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்தவர் காலம் 1893
16. வெள்ளைய நாடார் - குமாரகோவில் முருகன் கோவிலில் முதன் முதல் ஆலைய பிரேவேசம் சென்றவர் காலம் (1854)
17. குருந்தன்கோடு, நங்கள்விளை ஆன்டிநாடார் - முதன் முதலில் நங்கள்விளையில் முருகன் கோவில் கட்டியவர் காலம் 12-05-1870-08-01-1961
18. அகஸ்தீஸ்வரம் ஜோசப் செல்லையா டானியேல் - மலையாள படஉலகில் “விகதகுமாரன்” என்ற முதல் படத்தை தயாரித்து வெளியிட்டவர்
19. நாகர்கோவில் சுந்தரராஜ் டானில் - மலையாள படஉலகில் இரண்டாவது “மார்த்தாண்டவர்மா” என்ற ஊமை படத்தை தயாரித்தவர்
20. ஆலஞ்சி திருப்பாப்பு நாடார் -கள்ளியங்காட்டு நீலி ( பெண் பேய்) யை வீட்டு வேலைக்கு அமர்த்திய மாந்திரீகன்
21. கண்ணனுர், தச்சன்விளை அனந்தபத்மநாடார் ஆசான் - மன்னன் மார்தாண்டவர்மாவின் முதன்மை தனபதி காலம் (09-08-1697-14-09-1749)
22. ஆற்றூர், n;சவரகோடு செல்லம்மை ஆசான் - யானைக்கு பிணி தீர்த்தவர்
23. கள்ளியங்காடு பி.சி ஜோசப் - திருவாங்கூரில் முதல் செய்திதாள் தொடங்கியவர் "திருவாங்கூர் அபிமானி"
24. பள்ளியாடி, முருங்கவிளை H. ஜெயபால் வக்கீல் - தென்இந்திய திருச்சபை ஐக்கியத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் காலம் ( 20-08-1906 19-03-1967)
25. அப்பட்டுவிளை மரியேந்திரன் ஆசாரியார் - மாட்டு வண்டிக்கு மரக்குடம் கண்டுபிடித்தவர்
26. தென்தாமரைகுளம், கோட்டையடி ஏ. ஞானசிகாமணி – திருவாங்கூரில் முதல் முனிசிப் காலம் (13-2-1870 - 18-11-1941)
27. மார்த்தாண்டம் ஜி.எஸ் மணி – குமரியின் முதல் பொது உடமை சிந்தனையாளர்
28. பால். வி. டானியல் - குமரி மாவட்டம் பிரிவதற்கு வித்திட்ட முதல் நபர் ;
29. அகஸ்தீஸ்வரம் ஜாஷிவா கண்டிராக் - பேச்சுபாறை அணையைக் கட்டிய முதல் அரசாங்க காண்டிராக்டா

http://www.thangampalani.com/2011/10/kanyakumari.html
மற்றும் wikipedia




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jun 13, 2012 1:45 pm

கன்னியாகுமரி மாவட்டம். Images2jl

கன்னியாகுமரி மாவட்டம். Images3lv

கன்னியாகுமரி மாவட்டம். Images4ztl

கன்னியாகுமரி மாவட்டம். Images5hv

கன்னியாகுமரி மாவட்டம். Images6z

கன்னியாகுமரி மாவட்டம். Images7tm

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jun 13, 2012 1:48 pm

கன்னியாகுமரி மாவட்டம். Images8ki

கன்னியாகுமரி மாவட்டம். Images9yl

கன்னியாகுமரி மாவட்டம். Images10bh

கன்னியாகுமரி மாவட்டம். Images11ow

கன்னியாகுமரி மாவட்டம். Images12muh

கன்னியாகுமரி மாவட்டம். Kanyakumaristatues

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jun 13, 2012 1:51 pm

நன்றி ...எம் மாவட்டத்தை பற்றிய தகவல்களுக்கு ............



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 13, 2012 2:17 pm

நன்றி.. படங்களுடன் பகிர்வுக்கு மகிழ்ச்சி




கன்னியாகுமரி மாவட்டம். Power-Star-Srinivasan
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 13, 2012 6:14 pm

சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி முகைதின் அண்ணா இது என்ன நியாயம் எங்க மாவட்டத்துக்கு எல்லாம் புகை படம் போடாம உங்க சொந்த , பக்க்ரி அண்ணாவால நொந்த மாவட்டத்துக்கு மட்டும் இப்படி புகைப்படமா கோபம் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Jun 13, 2012 6:56 pm

கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள கல்லூரிகள்
Colleges for General Education

Sun College of Engineering & Technology
Udaya School of Engineering
Ponjesly College of Engineering
CSI Institute of Technology
St.Xaviers Catholic College of Engineering
Marthandam College of Engineering and Technology, Kuttakuzhi
Cape Institute of Technology
Mar Ephraem College of Engineering & Technology
Annai Velankanni College, Tholayavattam
Arignar Anna College, Aralvoimozhy
Annaii Medical College & Hospital, Pennalur,Sriperumbudur
Devikumari Women's College, kuzhithurai
Holy Cross College, Nagercoil
Lekshmipuram College of Arts & Science, Lekshmipuram
Malankara Catholic College, Mariagiri, Kaliakkavilai
Nesamony Memorial Christian College, Marthandam
Noorul Islam College of Arts & Science, Kumarakoil
Loyola Institute Of Technology And Science, Thovalai
Pioneer Kumaraswamy College, Nagercoil
South Travancore Hindu College, Nagercoil
Scott Christian College, Nagercoil
Sivanthi Athithanar College, Pillaiyarpuram
Sree Iyyappa College for Women, Chunkankadai
St. Judes College, Thoothoor
Vivekananda College, Agasteeswarem
Women Christian College, Nagercoil
Muslim Arts College, Tiruvithancode
VTM Arts & Science College, Arumanai
Vins Christian Women's Collge of Engineering
Vins Christian College of Engineering
Annai Vailankanni College Of Engineering, Pottalkulam
Arunachala College of Engineering for Women, Manavilai, Vellichanthai
Sathyam College of Engineering Aralvoimozhi
James College of Engineering and Technology, Jamespuram, Navalcaud, Nagercoil
University College of Engineering Nagercoil

Colleges for Special Education

DMI Engineering College
S.A.Rajaas Polytechnic College, Vadakkangulam
Morning Star Polytechnic College, Chunkankadai
Sree Krishna Polytechnic College, Kalliancaud
Noorul Islam Polytechnic College, Punkarai
Sun Institute of Technology
Moderator Gnanadasan Polytechnic College, Nagercoil
Kalaivanar N.S.K Polytechnic College, Chenbagaraman Pudur
N.M.S.Kamaraj Polytechnic, Pazhavilai
Govt Polytechnic College (Nagercoil), Nagercoil
Sun Polytechnic College
Ditto Polytechnic
Udaya Polytechnic
Surya Polytechnic College
Udaya Institute of Technology
Sun Institute of Polytechnic
Mar Ephraem College of Engineering & Technology
CSI Institute of Technlogy, Thovalai, Kanyakumari
Lord Jegannath College of Engineering and Technology
PSN Institute of Technlogy, Ramanathichenpudhur
PSN Institute of Technlogy, Ramanathichenpudhur

Colleges for Professional Education

Kanyakumari Government Medical College and Hospital, Asaripallam
Govt.Ayurveda Medical College, Kottar
Sarada Krishna Homoeopathic Medical College & Hospital, Kulasekhram, Kanyakumari District
White Memorial Homoeopathy Medical College, Attor


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக