புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்ப்ப யாகம்! Poll_c10சர்ப்ப யாகம்! Poll_m10சர்ப்ப யாகம்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சர்ப்ப யாகம்! Poll_c10சர்ப்ப யாகம்! Poll_m10சர்ப்ப யாகம்! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
சர்ப்ப யாகம்! Poll_c10சர்ப்ப யாகம்! Poll_m10சர்ப்ப யாகம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
சர்ப்ப யாகம்! Poll_c10சர்ப்ப யாகம்! Poll_m10சர்ப்ப யாகம்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
சர்ப்ப யாகம்! Poll_c10சர்ப்ப யாகம்! Poll_m10சர்ப்ப யாகம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சர்ப்ப யாகம்! Poll_c10சர்ப்ப யாகம்! Poll_m10சர்ப்ப யாகம்! Poll_c10 
3 Posts - 1%
jairam
சர்ப்ப யாகம்! Poll_c10சர்ப்ப யாகம்! Poll_m10சர்ப்ப யாகம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சர்ப்ப யாகம்! Poll_c10சர்ப்ப யாகம்! Poll_m10சர்ப்ப யாகம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சர்ப்ப யாகம்! Poll_c10சர்ப்ப யாகம்! Poll_m10சர்ப்ப யாகம்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சர்ப்ப யாகம்! Poll_c10சர்ப்ப யாகம்! Poll_m10சர்ப்ப யாகம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்ப்ப யாகம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 14, 2011 2:16 am

பூஜை அறையில் எப்பொழுதும் மங்கலான மஞ்சள் ஒளி இருந்துகொண்டே இருக்கும். சுதா, காலையில் அவ்வறைக் கதவைத் திறந்தபோது, மஞ்சள் ஒளி வழக்கத்தைவிட, சற்றுக் கூடுதலாக இருப்பதுபோல் அவளுக்குப்பட்டது.

ஸ்வாமிப் படங்களுக்குப் பின்னால் ஜன்னல். வீட்டுக்கு வெளியேயிருந்த மரத்தின் இலைகள் காற்றில் உறைந்த நிலையில் இருப்பனபோல் அசையாமல் நிற்பன போல் தெரிந்தன.

அறை உயிர்பெற்று எழுவதுபோல் அவளுக்குத் தோன்றிற்று.

"சுரேஷ் இன்று பெல்ட் போட்டுக் கொள்ளவில்லையா? அலுவலகத்துக்குச் சீக்கிரம் போகவேண்டுமென்று நேற்றிரவு படுக்கும்போது முன் சொன்னான். புறப்பட்டுப் போய்விட்டானா? ஏழரை மணிக்குள்ளாகவா? சாத்தியமில்லை. பெல்ட் போடாமல் போகமாட்டானே?' அவனுடைய பெல்ட், பாலாஜி படத்துக்கு எதிரே வட்டமாய்ச் சுருண்டு கிடந்தது.

சுரேஷ் கனகச்சிதமாய் தன் உடம்பை வைத்துக் கொண்டிருந்தான். நாள் தவறாமல் "ஜிம்'முக்குப் போவான். ஒருவேளை, இப்பொழுது "ஜிம்'முக்குப் போயிருப்பானோ? இருக்காது... சுரேஷ் எங்கே?

அவள் அறையைவிட்டு வெளியே வந்தாள்.

சுரேஷ் வாசலிலிருந்து உள்ளே வந்தான். கையில் ஒரு ஃபைல்?.

"எங்கே போனே?' என்றாள் சுதா.

அவன் "ஃபைலைக்' காண்பித்தான். "கார்லேந்து எடுத்துண்டு வந்தேன்,' என்றான்.

"உன் பெல்ட் பெருமாள் படத்துக்கு முன்னாலே கீழே கிடக்கே?'

"என் பெல்ட்டா? என் பேன்ட்லியே இருக்கு அது. எப்படிக் கீழே கிடக்கும்?'

"ஸ்வாமி உள்ளே போய் பாரு.'

சுரேஷ் போனான்.

"எங்கே இருக்கு? என்ன சொல்றே நீ?' என்றான் அவன்.

சுதா, ஸ்வாமி அறைக்குள் வந்தாள்.

பெல்ட் அங்கு இல்லை!

"இங்கேதானே இருந்தது? எப்படிப் போச்சு?' என்றாள் சுதா.

அதற்குள் சுரேஷ் தன் பேன்ட்டை எடுத்துக் கொண்டு வந்தான்.. அதை சுதாவிடம் காண்பித்தான்.

பெல்ட், பேன்ட்டில் தொங்கியது.

பெல்டிலிருந்த துளைகள் அவளுக்குக் கண்களாகத் தெரிந்தன.

"இது பெல்டா?' என்று குரலைச் சற்றே உயர்த்தி, கலவரத்துடன் கேட்டாள்.

"ஆர் யூ கிரேஸி?' என்றான் சுரேஷ்.

"நிச்சயமா சொல்றேன், அப்போ நான் பார்த்தபோது ஒண்ணு சுருண்டு கிடந்தது. உன் பெல்ட்ன்னு நினைச்சேன்...'

"அது இப்போ எங்கே?'

"தெரியலையே?'

"பாம்பா இருக்குமோ?' பெல்டில் மறைந்தது பாம்பு, பாம்பில் மறைந்தது பெல்ட். இப்போ பெல்டையும் காணோம், பாம்மையும் காணோம். சூன்யவாதம்... என்று புன்னகையுடன் கூறுனான் சுரேஷ்.

"விளையாடாதே. பாம்புதான். அதோ அந்த மரத்திலேந்து ஜன்னல் வழியா உள்ளே வந்திருக்கு? ட்யூப் லைட்டைப் போடு.'

"ஜன்னல் சாத்தியிருக்கே, எப்படி வரமுடியும்? சூட்சும் சரீரமா?' என்று கேட்டுக் கொண்டே அவன் விளக்கை போட்டான்.

விளக்கு சிறிது நேரத் தயக்கத்துக்குப் பிறகு ஒளிர்ந்து, பிறகு அணைந்து விட்டது.

சுதா, கணவனைக் கலவரத்தடன் பார்த்தாள்.

"ஏன் அப்படிப் பார்க்கறே? ஃப்யூஸ் ஆயிருக்கு, அவ்வளவுதான்,' என்றான் சுரேஷ்.

"இப்போவா ஆகணும்? எனக்கு என்னவோ பயமாயிருக்கு, பாம்புதான்,' என்றாள் சுதா.

"சரி, அதான் இந்த விளக்கு இருக்கே? நான் ஸ்வாமிப் படங்களுக்குப் பின்னாலே பார்க்கறேன்...' என்று கூறிக்கொண்டே போகத் தொடங்கினான் சுரேஷ்.

"ப்ளீஸ்... போகாதே! இங்கேவா,' என்று கத்தினாள் சுதா.

"வாட் ஈஸ் யுவர் ப்ராப்ளம்?' என்று கேட்டான் சுரேஷ்.

"அங்கே பாம்பு இருந்தா, உன்னாலே என்ன பண்ண முடியும்? வேண்டாம், விஷப் பரிட்சை.'

"விஷப்பரீட்சை! கரெக்டா சொன்னே! விஷப்பரீட்சை, லிட்டரலி,' என்று திரும்பி வந்து அவள் கைகளைக் குலுக்கினான் சுரேஷ். "ஆமாம், நீ எப்போ குளிச்சே?' என்றான் தொடர்ந்து

"நான் இன்னும் குளிக்கலே. ஸ்வாமியை நமஸ்காரம் பண்ணலாம்னு கதவைத் திறந்தேன்... அது இருந்தது.'

"எது பாம்பா, கழுதையா?'

"உனக்கு எல்லாம் விளையாட்டா இருக்கு. எனக்கு பயமா இருக்கு,' என்றாள் சுதா.

"நான் அப்போ கேட்டது "metaphorical' கேள்வி, "நீ எப்போ குளிச்சேங்கிறது...' பாம்பு ஒரு "fertility symbol'. புரியறதா?'

"நாப்பது நாளாறது. அப்போ பாம்பு என் வயத்துக்குள்ளே இருக்குங்கறியா?'

"ரியலி? என்கிட்டே நீ சொல்லவேயில்லையே? குட்! கிரேட் நியூஸ்,' என்று சொல்லிக்கொண்டே அவளைக் கட்டிக் கொண்டான் சுரேஷ்.

"என்ன சொல்றே நீ? பாம்பு என் வயத்துக்குள்ளே இருக்கிறதா க்ரேட் நீயூஸ்?'

"பாம்பு இல்லே, ஒரு குட்டி சுதா இருக்கா. பாம்பு ஒரு fertility symbol. உன் அடிமனசிலே..' அவன் சொல்வதற்குள் சுதா குறுக்கிட்டாள்.

"ப்ளீஸ்... உன் ஸ்டுப்பிட் சைகாலஜியெல்லாம் வேணாம். பாம்புக்கே பொறுக்காமே, அது இங்கே இருந்ததுன்னா, உன் போர் தாங்காமே ஓடிப் போயிடும். சொர்ணம் வருவா இப்போ. ரெண்டு மாசம் முன்னாலே அவ வீட்டுக்குள்ளே பாம்பு வந்துடுத்தாம். அவ புருஷன்தான் பிடிச்சு வெளியே வயக்காட்டிலே கொண்டு போய் விட்டானாம். பாம்பை அடிச்சுக் கொல்லக் கூடாது. அவகிட்டே சொல்லி அவ புருஷனை வரச்சொல்லலாம்' என்றாள் சுதா.

அப்பொழுது வாசல்மணி ஒலிக்கும் சப்தம் கேட்டது.

"இதோ அவளே வந்துட்டா. கதவைத் திற. நான் ஸ்வாமி ரூம் கதவை சாத்திண்டு வரேன்.'

"எனக்கு ஆபீஸ் சீக்கிரம் போயாகணும்.பாம்பு, மந்திரவாதியெல்லாம், உன் பொறுப்பு. நான் வாசல் கதவைத் திறந்துட்டுக் குளிக்க போறேன்.'

சுரேஷ் வாசல் கதவைத் திறந்தபோது, கரு கருவென்று வளர்ந்திருந்த ஒரு நீண்ட தாடி அவனை வரவேற்றது. திருநீறு பூசிய நெற்றி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்ட வட்ட வடிவமான குங்குமப் பொட்டு. மலைக்குப் போகும் கோலத்தில் ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான்.



சர்ப்ப யாகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 14, 2011 2:16 am

"சொர்ணம் குழந்தையைக் கூட்டுக்கிட்டு ஸ்கூலுக்குப் போயிருக்காங்க. டீச்சர் வரச் சொன்னாங்களாம். சொல்லச் சொன்னாங்க.'

சுரேஷ் ஒன்றும் புரியாமல் தன்னைப் பார்ப்பதைக் கண்டு, அவன் புன்னகையுடன் சொன்னான்: "சொர்ணம் என்னைச் சொல்லிட்டு வரச் சொன்னாங்க. என் பேரு ராஜு.'

சொர்ணத்தின் கணவன் என்று யூகித்துக் கொண்டான் சுரேஷ்.

"அப்படியா? உள்ளே வாங்க. உங்களுக்குப் பாம்பைப் பத்தித் தெரியுமா?' என்றான் சுரேஷ்.

"எதுக்குக் கேக்கறீங்க?' என்றான் ராஜு. தன் தாடியைப் பரிவுடன் நீவிக்கொண்டே.

"சொர்ணம் வரமாட்டாளா?' என்று கேட்டுக் கொண்டே, சுதா அப்பொழுது வந்தாள்.

"வருவாங்க. டீச்சர் வரச் சொன்னாங்களாம், பாப்பாகூட பள்ளிக்கூடம் போயிருக்காங்க.'

"ஸ்வாமி உள்ளே ஒரு பாம்பு வந்திபருக்கு. வந்திருக்கான்னு நிச்சயமாத் தெரியலே. காத்தாலே பார்த்த மாதிரி இருந்தது. இப்போ காணோம். எனக்கு ஒரே பயமா இருக்கு. நீங்க கொஞ்சம் வந்து பார்த்தீங்கன்னா மனசு நிம்மதியா இருக்கும்.'

"அவருக்க டயம் இருக்கான்னு கேட்காமே நீ பாட்டுக்கு பேசிண்டே போறியே?' என்றான் சுரேஷ்.

"பரவாயில்லீங்க... இன்னிக்குத் திருவாதிரை நட்சத்திரம், பஞ்சமி திதி. நாகம் வந்திருந்துச்சுன்னா விசேஷங்க.'

"யாருக்கு விசேஷம்? நமக்கா, நாகத்துக்கா?' என்றான் சுரேஷ்.

"சரி, நீ குளிக்கப்போ... ஆபீஸுக்குச் சீக்கிரம் போகணும்னு சொன்னியே,' என்றாள் சுதா.

"நாகம் எந்த உள்ளேங்க இருக்கு?'என்றான் ராஜு.

"நாகம் இருக்கான்னு எனக்குத் தெரியலே. நீங்கதான் சொல்லணும். முதல்லே பெல்ட் மாதிரி தெரிஞ்சுது. அப்புறம் மறைஞ்சு போச்சு. என் பிரமையாவுமிருக்கலாம்...'

ராஜுவை அழைத்துக் கொண்டு ஸ்வாமி அறை அருகே சென்றாள் சுதா.

இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்போல் சுரேஷûக்குப் பட்டது. ஆனால் அன்று அவனால் அலுவலகம் போகாமலிருக்க முடியாது. பத்து மணிக்கு ஒரு முக்கியமான "மீட்டிங்'. அவன் குளிப்பதற்காகச் சென்றான்.

குளியலறைக்குச் சென்று விளக்கைப் போட்டதும். அவனுக்கு ஏதோ ஒன்று நிழலாக ஓடிமறைவதுபோல் ஓர் உணர்வு தோன்றியது.

இதென்ன பைத்தியக்காரத்தனம்? சுதாவைக் கிண்டல் செய்துவிட்டுத் தானே பயந்துக்கு அடிமையாவது வேடிக்கைதான்! பயம் ஒரு தொற்றுநோய். சுதாவுக்கு அவனுடைய பெல்ட் ஏன் பாம்பாகத் தெரிந்தது? அவள் கனவில் பாம்பு வந்திருக்குமோ? உலகமெங்கும் பழங்காலத்திலிருந்தே பாம்பைப் பற்றி ஏராளமான கதைகள், நம்பிக்கைகள். பைபிளில், ஏவாளுக்குப் பாலுணர்வு தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது பாம்புதான்! நாகர்கோயிலருகே ஒரு கோயிலில் ஏராளமான பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கிடந்த காட்சி அவன் மனக்கண் முன்வந்து நின்றது. அவன் திருமணம் ஆவதற்கு முன் அங்குப் போயிருக்கிறான்.

அந்தக் கோயிலுக்குச் சென்று பாம்புக்குப் பாலூற்றினால், புத்திர பாக்கியம் உண்டாகுமென்பது நம்பிக்கை! சுதா அங்கு போக வேண்டுமென்று நச்சரித்துக் கொண்டிருந்தாள். போகவேண்டுமென்று எண்ணியதாலோ என்னவோ அவள் "குளித்து' நாற்பது நாட்களாகி விட்டன!

அவன் குளியலறையை விட்டு வெளியே வந்தான்.

சுதா ஸ்வாமி அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தாள்.

"ஏன் இங்கே நிக்கிறே? ராஜு எங்கே?'

அவள் ஸ்வாமி அறையை நோக்கிக் கையை காண்பித்தாள்.

"பாம்பு இருக்கா?'

"உள்ளே போனவுடனேயே "இங்கே நாகம் வந்திருக்கு. இப்போ இருக்கான்னு தெரியலே, பாக்கறேன், நீங்க வெளியே இருங்க'ன்னான். நான் வந்துட்டேன்' என்றாள் சுதா.

"வந்திருக்குன்னு எப்படித் தெரிஞ்சுதாம்?'

"பாம்புலேயே புழங்குகிறவாளுக்குப் பாம்பு வாசனை தெரியாதா?'

"பாம்புலியே புழங்கறானா? உனக்கு எப்படித் தெரியும்?'

"திருத்தணி பக்கத்திலே அவன் கிராமத்திலே பாம்புக்குன்னு ஒரு கோயில் இருக்காம். பரம்பரை பரம்பரையா இவன் குடும்பந்தான் கோயில் பூசாரியாம். இவன் அப்பா சின்ன வயசிலேயே போயிட்டாராம். இவன் தாத்தா அங்கே இன்னும் பூசாரியா இருக்காராம்.'

"உனக்கு அவனைப் பத்தி இவ்வளவு தகவல்கள் எப்படித் தெரியும்?'

"அவன்தான் இப்போ சொன்னான்.'

"பாம்பு ஒளிய உள்ளே எங்கே இடமிருக்கு?' என்றான் சுரேஷ்.

"தெரியலியே! இன்னொரு விஷயம் "பாம்பு' "பாம்பு'ன்னு சொல்லாதே "நாகம்'ன்னு சொல்லு. அப்படித்தான் சொல்லணும்னான் ராஜு.'

"சமஸ்கிருதத்தில் சொன்னால்தான் மரியாதையா? இதோபாரு, ஜன்னலோ மூடியிருக்கு. நம்மைத்தாண்டி பாம்பு - ஐ ஆம் சாரி - பாம்பார், தமிழ்லியே மரியாதையா சொல்றேன், போயிருக்க முடியாது. அதனாலே,' என்று சொல்லிவிட்டு நிறுத்தினான் சுரேஷ்.

"அதனாலே?'

"உனக்கு நேத்து ராத்திரி பாம்பு சொப்பனம் வந்திருக்கலாம். உனக்கே ஞாபகம் இருக்கணும்னு அவசியமில்லே. என்ன சொப்பனம்னு கொஞ்சமும் கூட நினைவுக்கு வராமே போகறதுமுண்டு. அதனாலே உனக்கேற்பட்ட பிரமைதான் பாம்பு.'

சுதா அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றாள். பிறகு சொன்னாள்: "அப்போ பாம்பு வந்திருக்குன்னு ராஜு ஏன் சொல்லணும்?'

"ஒரு வேளை உன் சொப்பனத்திலே வந்த பாம்பையும் அவனாலே மோப்பம் பிடிக்க முடிஞ்சதோ என்னவோ?'

"அந்த வாசனை, படுக்கை அறையிலேன்னா இபுருக்கணும், ஸ்வாமி உள்ளே எப்படி வந்தது?'

"உன்கிட்டே இருக்கு அந்த வாசனை, "ரூம்' எதிலியுமில்லே.'

அப்பொழுது ஸ்வாமி அறைக்கதவு திறந்தது. ராஜு வெளியே வந்தான். அவன் அவர்களுடன் எதுவும் பேசாமல் அவர்களைக் கடந்து சென்றான்.

"நாகம் இல்லியா?' என்றாள் சுதா.

அவன் பதில் சொல்லவில்லை. தாடியை நீவிக்கொண்டே "ஹாலி'ல் "டைனிங்டேபிள்' நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுகொண்டு உட்கார்ந்தான். அவன் சிந்தனையில் ஆழ்ந்திருப்பது போல் தோன்றிற்று.

"என்ன யோசிக்கறீங்க?' என்றான் சுரேஷ்.

"தட்சகன் தெரியுமா உங்களுக்கு?' என்று கேட்டான் ராஜு.

"யார் அவர், எங்கே இருக்கார்? அவர் பாம்... நாகம் பிடிப்பாரா?' என்றாள் சுதா.

"என்ன அறியாமை!' என்று வேதனையின் வெளியீடாக அவன் முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது.

"பழத்தில் வந்து பரிட்சித்தைக் கொன்றவன் தட்சகன். மஹாபாரதம் படிச்சிருக்கீங்களா?'

"மஹாபாரதத்துக்கும் எங்க ஸ்வாமி உள்ளே பாம்... நாகம் வரதுக்கும் என்ன சம்பந்தம்?' என்றாள் சுதா.

"உங்க முன்னோர்கள் யாரோ ஒருவர் நாக ஹதம் செய்திருக்காரு. பரிகாரம் பண்ணணும்.'

"உங்க முன்னோர்தான். கல்யாணத்துக்கப்புறம் உங்க முன்னோர்தான் இவங்களுக்கும் முன்னோர்,' என்றான் ராஜு.

"திருவாதிரை, பஞ்சமி, பாம்பு வரது விசேஷம்னு சொல்லிட்டு இப்போ பரிகாரம் பண்ணணுங்கறீங்க. இப்போ அங்கே பாம்பு இருக்குங்கறீங்களா?' என்றான் சுரேஷ்.

"இதோ பாருங்க. பரிகாரம் பண்ணறதும், பண்ணாமே இருக்கிறதும் உங்க இஷ்டம். இப்போ அங்கே நாகம் இல்லே. மறுபடியும் வராதுன்னு என்னாலே உறுதியா சொல்லமுடியாது. நல்ல நாளுங்கறதினாலேதான் எச்சரிக்கை கொடுக்க வந்திருப்பாரு நாகராஜான்னு எனக்குத் தோணுது.

நம்பறதும், நம்பாமேயிருக்கிறதும் உங்க பிரியம்,' என்று சொல்லிக்கொண்டே எழுந்தான் ராஜு.

"உட்காருங்க ராஜு. பரிகாரம்னா என்ன செய்யணும்?' என்றாள் சுதா.

"ஜனமேஜயன் சர்ப்ப யாகம் பண்ணி நாகப் பரம்பரையே அழிக்கப் பாத்தாரு, முடிஞ்சுதா? அடக்க முடியலேன்னா, அடி பணியணும், அதுதான் வாழ்க்கைத் தத்துவம், இல்லீங்களா?' என்றான் ராஜு சிரித்துக் கொண்டே.



சர்ப்ப யாகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 14, 2011 2:16 am

"உங்களுக்கு எப்படித் தெரியும், என் முன்னோர் யாரோ ஒருவர் நாக ஹதம் பண்ணார்னு?' என்று கேட்டான் சுரேஷ்.

"அது தொழில் ரகசியம். அதபத்தியெல்லாம் கேட்க கூடாது,' என்றான் ராஜு மர்மப் புன்னகையுடன்.

"நீங்க பரிகாரம் சொல்லுங்க. இன்னொண்ணு... நான் முழுகாமேயிருக்கேன், நாப்பது நாளாறது. நான் பரிகாரம் பண்ணலாமா?'

"பார்த்தீங்களா, பார்த்தீங்களா! அதே நீங்க முதல்லே சொல்லியிருக்கணும். நாகராஜா கடாட்சந்தான் இது. இப்போத்தான் நீங்க பூஜை பண்ணி ஆகணும். அது தான் பரிகாரம்.'

"என்ன பூஜை?'

"நாப்பத்தெட்டு நாள், ஸ்நானம் செய்திட்டு, ஈரப்புடவையோட பாம்பு புத்தை ஒம்பது தடவை பிரதட்சணம் செய்திட்டு பாம்பு புத்தக்குப் பால் வார்க்கணும். புரிஞ்சதுங்களா?'

"நாப்பத்தெட்டு நாள் ஈரப்புடவையோடவா? நான் பாம்புப் புத்தை எங்கு போய்த் தேடறது' என்றாள் சுதா.

"அப்படி முடியாட்டா, பாம்புக்குப் பதிலா கண்ணுக்குப் படற ஒர பூஜைக் குட்டிக்குப் பால் வார்க்கலாம். இல்லியா? நம்ம சாஸ்திரங்களெல்லாம் கெடுபிடி பண்ணாது. திருத்தங்கள் இல்லாமே இருக்காது. சரிதானே ராஜு?' என்றான் சுரேஷ், ஏளனத்தின் சாயைத் துளிகூடத் தெரியாத குரலில்.

ராஜு அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தான். முகத்தில் புன்னகை லேசாகத் தெரிந்தது.

"சரி... நான் உங்க பூஜை அறைக்குப் போய் ஒருமணி நேரம் தியானம் பண்றேன். நீங்க எந்தக் காரணத்துக்காகவும் இந்த அறைக்கதவைத் திறந்து பார்க்கக்கூடாது. ஒரு மணிநேரத்துக்குப் பிறகு திறக்கலாம். இதுதான் பரிகாரம். அப்புறம் எந்த நாகமும் உங்க வீட்டுக்கு வராது. பிறக்கிற குழந்தைக்கு ஆணாயிருந்தா நாகராஜான்னு பேர் வைங்க. பொண்ணா இருந்தா நாகம்மான்னு வைங்க... என் பேரும் நாகராஜன்தான், கூப்பிடறது, ராஜு,' என்றான் அவன்.

சுதா, சுரேஷைப் பார்த்தாள். இதுபற்றி அவன் முடிவுசெய்ய வேண்டுமென்று அவள் விரும்புவதுபோல் அவனுக்கு பட்டது.

"சரி செய்யுங்க...' என்றான் சுரேஷ்.

"நீ ஆஃபீஸ் போகலியா?' என்றாள் சுதா.

"நான் மீட்டிங்கை மத்தியானம் வச்சுக்கிறேன். ஃபோன் பண்றேன் ஆஃபீஸுக்கு' என்றான் சுரேஷ்.

"எனக்கு ஒரு லிட்டர் பால் வேணும். பாலை ஒரு பாத்திரத்திலே ஊத்தி கொடுங்க. சரியா, ஒரு மணிநேரம் கழிச்சுக் கதவைத் திறங்க,' என்றான் ராஜு.

சுதா கேட்டாள்: "ஃபிரிட்ஜ் பால் தேவலையா?'

"பரவாயில்லே... எந்தப் பாலா இருந்தா என்ன? பாத்திரத்திலே கொடுங்க.'

சுதா ஒரு பாத்திரத்தில் பாலை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.

அவன் பாலை வாங்கிக் கொண்டு பூஜை அறைக்குள் சென்றான்.

அவன் கதவை சாத்தினான்.

"நான் தாழ்ப்பாள் போட்டுக்கிலீங்க. உங்களை நம்பறேன், கதவைத் திறக்க மாட்டீங்கன்னு,' என்றான் புன்முறுவலுடன்.

சுரேஷ் ஆஃபீஸுக்கு போன் செய்தான். அவனுடைய செக்ரட்ரி ரஞ்சனா எடுத்தாள்.

"மீட்டிங் லஞ்சுக்கு அப்புறம்னு எல்லார்கிட்டேயும் சொல்லிடு. இப்போ எனக்கு வீட்டிலே கொஞ்சம் அவசரம் காரியமிருக்கு.'

"சரி... நான் குளிச்சிட்டு வந்துடறேன். ஹால்லே இருங்க. சொர்ணம் வந்தாலும் வரும்.'

"சீக்கிரம் குளிச்சிட்டு வா...'

ராஜு ஒருமணி நேரம் தியானம் செய்கிறேன் என்று சொன்னதற்கு தான் உடனே ஒப்புக்கொண்டது சுரேஷûக்குச் சற்று ஆச்சர்யமாகவிருந்தது.

ஏதோ ஓருணர்வு அவனுக்குள்ளிருந்து அவனை ஒப்புக்கொள்ள தூண்டியதுபோல் அவனுக்கு இப்பொழுது பட்டது.

என்ன காரணம்?

சுதா அவனுடைய பெல்ட் போன்ற ஒன்றைப் பார்த்ததாகச் சொல்கிறாளே, அது பிரமைதானா? அவனுடைய குடும்பத்தில் யாரோ நாகஹதம் செய்திருக்க வேண்டுமென்று கூறினானே, அம்மாவின் குடும்பத்தில் இருக்காது. அப்பா குடும்பத்தில்தான். அவனுடைய அப்பா கும்பகோணத்தில் அவர் தாத்தா வீட்டுக் கொல்லைப்புறத்தில் பாம்புகளின் நடமாட்டம் உண்டு என்று கூறியிருக்கிறார். அந்த வீடுகளிலெல்லாம் கழிப்பறை கொல்லைப்புறத்துக் கோடியிலிருக்கும். இரவு கழிப்பறைக்குப் போகவேண்டுமென்றால் அது பெரிய சாகஸந்தான் என்று அவன் அப்பா சொல்லியிருக்கிறார். கொல்லைப்புறப் பாம்புகளில் ஏதேனுமொன்று அடித்துக் கொல்லப் பட்டிருக்கலாமோ?

அவனுக்கு சிரிப்பு வந்தது. விஞ்ஞான உலகில் இப்படியெல்லாம் சிந்திப்பது என்ன பைத்தியக்காரத்தனம்!

சுதா குளித்துவிட்டு வந்தாள்.

"இன்னும் சொர்ணம் வரலியா?' என்றுகேட்டுக் கொண்டே வந்தாள்.

வாசல் மணி ஒலித்தது.

சுதா திறந்தாள்.

ஓர் இளைஞன் நின்றுகொண்டிருந்தான்.

"யாரு, என்ன வேணும்?' என்றாள் சுதா.

"நான் சொர்ணத்தோட கணவன், இன்னிக்கு அவ வேலைக்கு வரமாட்டா. சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.'

சுதா திடுக்கிட்ட நிலையில் கணவனைப் பார்த்தாள். சுரேஷ் அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.

அப்படியானால் ராஜு யார்?

"நீங்க சொர்ணம் வர நேரமாகும் சொல்ல வேற யாரையானும் அனுப்பிச்சங்களா?' என்றான் சுரேஷ்.

"இல்லியே?' என்றான் சொர்ணத்தின் கணவன்.

"ராஜு தன்னை சொர்ணத்தின் கணவன் என்று சொல்லிக் கொள்ளவேயில்லையே அவர்களாகவேதானே அப்படி நினைத்தக் கொண்டார்கள்!'

"வேற யாரானும் வந்து சொன்னாங்களா?' என்றான் சொர்ணத்தின் கணவன்.

"உங்க பேர் என்ன?' என்று கேட்டான் சுரேஷ்.

"நாகராஜன். ராஜுன்னு கூப்பிடுவாங்க.'

சுரேஷûம் சுதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சுரேஷ் மணியைப் பார்த்தான். இன்னும் கால்மணி நேரம் இருந்தது.

பரவாயில்லை. யார் இந்தப் போலி ஆள்? அவனை சும்மாவிடக் கூடாது.

சுரேஷ் பூஜை அறையைத் திறந்தான். அறை காலியாக இருந்தது! பால் பாத்திரம் கழுவிவிடப்பட்டது போல் பளபள என்றிருந்தது. பால் இல்லை!

ஜன்னல் கதவு திறந்திருந்தது!

வெளியே மரத்தில் சலனம்! இலைகள் அசைந்தன.

"ட்யூப் லைட்' எரியத் தொடங்கியிருந்ததால், அறை பிரகாசமாயிருந்தது!

- இந்திரா பார்த்தசாரதி



சர்ப்ப யாகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக