புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_m10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10 
202 Posts - 50%
ayyasamy ram
வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_m10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_m10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10 
17 Posts - 4%
prajai
வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_m10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_m10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_m10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10 
8 Posts - 2%
Jenila
வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_m10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10 
4 Posts - 1%
jairam
வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_m10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_m10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_m10வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Jan 24, 2011 2:49 pm

துறைதோறும் துறைதோறும் நாட்டை விற்பதற்கு வணிக முகவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் என்ற அலங்காரப் பெயரில் இவர்கள் பவனி வருகிரார்கள். தலைமை முகவர், தலைமை அமைச்சர் என்ற பெயரில் இருக்கிறார். அவர் தான் மன்மோகன் சிங். இவரது தலைமையில் கல்வி வணிக முகவராக செயல்படுகிறவர் கபில் சிவில். மனிதவள மேம்பாட்டு அமைச்சர் என்பது இவரது பதவிக்கான சட்டப்பூர்வ பெயர்.

உயர்கல்வியை உள்நாட்டு வணிகர்களுக்கு திறந்துவிட்டது போதாதென்று வெளிநாட்டு கொள்ளையர்களுக்கும் திறந்துவிட முயல்கிறார். இதற்காகவே “வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள்(நுழைவு மற்றும் செயல்பாடு ஒழுங்காற்று) சட்ட வரைவு, 2010”(Foreign Educational Institutions[Regulation of Entry and Operation] Bill, 2010) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

உலகத் தரத்திற்கான உயர்கல்வியை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவிற்குள்ளேயே வழங்குவது இச்சட்டத்தின் நோக்கமாக சொல்லப்படுகிறது. “இந்தியாவில் பள்ளிக் கல்வியில் சேர்ப்பவர்களில் 100க்கு 12 பேர் மட்டுமே உயர்கல்வியில் நுழைகின்றனர். இது வளர்ச்சியடைந்த நாடுகளில் 55 விழுக்காடாகவும் உலக சராசரி அளவில் 23 விழுக்காடாகவும் இருக்கிறது. 2015ஆம் ஆண்டிற்குள் இந்த அளவை இந்தியாவில் 23 விழுக்காடாக உயர்த்துவதற்கு அரசிடம் போதிய நிதி இல்லை. இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டும் இப்போதுள்ள நிலையை மாற்ற முடியாது. இதற்காகவே வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவிற்குள் கல்வி நிலையங்கள் அமைக்க அழைக்கிறோம்” என்று கபில் சிபல் கூறுகிறார்.

இப்போது வட அமெரிக்கா, பிரிட்டன், ஆத்திரேலியா போன்ற மேற்குலக நாடுகளில் மருத்துவம், மேலாண்மை, பொறியியல் போன்ற உயர்கல்வி பெறுவதற்கு 5 இலட்சம் இந்திய மாணவர்கள் சென்றுள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு 750 கோடி டாலர், அதாவது 34,500 கோடி ரூபாய் வெளிநாடுகளில் செலவழிக்கின்றனர்.

இந்த வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவிற்குள் வரவழைத்துவிட்டால் அதைவிட குறைவான செலவில், இந்திய சூழலில் குடும்பத்தைவிட்டு அதிக தொலைவு செல்லாமல் படிக்க வசதி ஏற்படும் என்பதும் கபில்சிபிலின் வாதம்.

ஆனால் கூர்ந்து நோக்கினால் திறமையற்ற வணிக முகவரின் விளம்பர உத்தி இது என்பது தெளிவாகும்.

பள்ளிக் கல்வியில் சேர்பவர்களில் மிகச் சிலரே உயர்கல்வி வரை செல்வதற்கு கல்வி நிறுவனங்களில் போதாமை முதன்மைக் காரணி அல்ல, மாறாக மக்களிடம் நிலவும் வறுமையும், வாய்ப்பின்மையுமே உயர்கல்வியில் நுழைவோர் 12 விழுக்காடாக தேங்கியிருப்பதற்கு முதன்மைக் காரணம் ஆகும். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த அனைவருக்குமே இடம் கொடுத்த பிறகும் காலி இடங்கள் இருக்கின்றன. பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கைப் போதாமல் இல்லை.

வெளிநாடு சென்று உயர்கல்வியில் சேருவது அந்நாடுகளில் வேலையில் சேருவதற்கு வாய்ப்பை வழங்குகிறது என்பதால் தான் பெரும்பாலானவர்கள் வெளிநாடு சென்று படிக்கிறார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டில் எதிர்கால வாழ்க்கை என்ற கனவில் வெளிநாடு சென்று படிப்பவர்களை கபில்சிபிலின் திட்டம் நிறுத்திவிடாது.

இலாப வேட்டைக்காக வரும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது என்றும், நியாயமான இலாபம் ஈட்டுவதை அரசு தடுக்காது என்றும் இச்சட்ட வரைவு கூறிக்கொள்கிறது. வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்கள் 51 விழுக்காடு வரை தான் தங்கள் பங்கு மூலதனத்தை வைத்துக் கொள்ளமுடியும் என்றும், குறைந்தது 49 விழுக்காடு பங்கு மூலதனத்திற்கு இந்தியக் குடிமக்களை பங்காளியாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இச்சட்ட வரைவு நிபந்தனை விதிக்கிறது.

மேலும் இக்கல்வி நிறுவனங்கள் கிடைக்கும் இலாபத்தை இங்கேயே மறுமுதலீடு செய்ய வேண்டுமே தவிர தங்கள் நாட்டிற்கு எடுத்து செல்லக்கூடாது என்றும் இச்சட்ட நிபந்தனை கூறுகிறது.

வெளிநாடுகளில் இலாப நோக்கமின்றி தரமான உயர்கல்வி வழங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் இருக்கவே செய்கின்றன, இவ்வாறான பல்கலைக்கழகங்களை இப்புதிய சட்டம் இந்தியாவிற்குள் ஈர்த்துவிடாது. ஏனெனில் 49 விழுக்காடு பங்கு மூலதனத்திற்கு இவர்கள் இலாப நோக்கம் இல்லாதவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இது அரிதிலும் அரிது. ஆர்வார்டு, கேம்பிரிட்சு போன்ற இத்தகைய பல்கலைக்கழகங்கள் இலாப நோக்கமற்ற இந்திய குடிமக்களை தேடுகிற கடுமையான பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் மாட்டா.

மேலும், இச்சட்டம் வெளியார் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவில் பல்கலைக்கழக நல்கைக் குழு சட்டப்படி ‘நிகர்நிலைப் பல்கலைக்கழக’ அந்தஸ்து தான் முதலில் வழங்கப்படும் என்கிறது. உலகப் புகழ் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்த நிபந்தனையை ஏற்பதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே, உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் பல்கலைக்கழகம் துவங்குவதற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்படுவதாக கபில்சிபில் கூறுவது முற்றிலும் பொய்யானது.

வெளிநாடுகளில் சேருவாரின்றி கடைதிறந்து வைத்திருக்கும் தரமற்ற பல்கலைக்கழகங்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வருவதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது.

உயர்படிப்பு பயிற்சித்திட்டம், களப்பயிற்சி விரிவாக்கத்திட்டம், தொழில் மேலாண்மை நேரடிப் பயிற்சி என்ற பல மோசடிப் பெயர்களில் இலாபத் தொகையை தங்கள் நாடுகளுக்கு எடுத்து செல்லத் தெரிந்த தில்லுமுல்லு நிறுவனங்களே இச்சட்டத்தின் மூலம் அதிகம் பயன்பெறத்தக்கவை.
அவ்வகை பல்கலைக்கழகங்களே இங்கு கடை விரிக்கும் என்பது தெளிவு.

இவ்வகை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு இருக்காது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என்ற வணிக முத்திரையை பயன்படுத்தி கண் மண் தெரியாத கட்டணக் கொள்ளையில் இந்நிறுவனங்கள் ஈடுபடும். பிற தனியார் கல்வி நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள ஒரு நியாயத்தை வழங்கிவிடும்.

மேற்கத்திய நுகர்வுப் பண்பாட்டு படையெடுப்பை இக்கல்வி நிறுவனங்கள் தீவிரப்படுத்திவிடும்.

எல்லா வகையிலும் தீமை நிறைந்த, கல்விக் கொள்ளையில் வெளிநாட்டு நிறுவனங்களைத் தடையேதுமின்றி அனுமதிக்கின்ற “வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் சட்டத்தை” கல்வியில் அக்கரையுள்ள அனைவரும் எதிர்த்து நின்று முறியடிக்க வேண்டும்.


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 24, 2011 3:47 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக