புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
74 Posts - 44%
heezulia
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
6 Posts - 4%
prajai
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
6 Posts - 4%
Jenila
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
2 Posts - 1%
jairam
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
2 Posts - 1%
kargan86
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
10 Posts - 5%
prajai
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
8 Posts - 4%
Jenila
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10சண்டிகேஸ்வர நாயனார் Poll_m10சண்டிகேஸ்வர நாயனார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்டிகேஸ்வர நாயனார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2023 4:42 pm

சண்டிகேஸ்வர நாயனார் Nayana10

சண்டிகேஸ்வர நாயனார் -2-9-210

“மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க‌
வெகுண்டெழுந்த தாததாள் மனுவினால் எறிந்த‌
அம்மையான் அச்சண்டி பெருமானுக்கு அடியேன்” : சுந்தர மூர்த்தி நாயனார்



சோழ நாட்டில் கும்பகோணம் அருகில் காவேரியின் கிளையான மண்ணியாற்றின் கரையில் அமைந்திருந்த ஊர் அந்த #திருசேய்நல்லூர், அது இன்றும் உண்டு

அது அன்று வளமான ஊர் என்பதால் அந்தணர் நிரம்பியிருந்தார்கள், அந்தணர் எனப்படும் பிராமணர்கள் நீர் நிலைகள் நிறைந்த வளமான பூமியில் தான் வசிப்பார்கள் அல்லது அவர்கள் வசிக்கும் பூமி வளமாய் இருக்கும்

அப்படி மண்ணியாற்றிலும் நிரம்ப அந்தணர்கள் இருந்தார்கள் அந்த திருசேய்நல்லூரின் #சத்தியகிரீஸ்வரர் ஆலயத்தில் அவர்களுக்கான பணி நிரம்ப இருந்தது இதுபோக அக்கம் பக்கம் உள்ள ஊர்களிலெல்லாம் அவர்களின் பணி தேவைபட்டது

அந்த ஊர் இதனால் எப்பொழுதும் மந்திரம் முழங்கவும் யாக வழிபாடுகள் நடக்கும் இடமாகவும் சதா சர்வ காலமும் பக்தி கமழும் இடமாகவும் இருந்தது.

திரும்பும் இடமெல்லாம் திறுநீறு அணிந்த முகங்கள் இருந்தன, எல்லா திசையிலும் சிவநாம ஒலித்தது
ஆறு இருந்தால் அதன் கரை மரங்கள் மட்டுமல்ல ஆற்றங்கரை பசுக்கள் மட்டுமல்ல மனிதர்களும் நலமாக வளமாக ஜொலிப்பார்கள், அப்படி அந்த ஊர் மக்களும் மின்னினார்கள்

அந்த ஊர் புராதன சிறப்பும் மிக்கது, அந்த பெருமையும் அவர்களுக்கு இருந்தது. அந்த தொன்ம பெருமை முருகனுடன் சம்பந்தபட்டது

முருகபெருமா சூரனை அழிக்க திருச்செந்தூருக்கு செல்லும் முன்னால் அங்குதான் அன்னையினை வேண்டி தவமிருந்ததார், அங்கு வந்த அன்னை பார்வதி அவரை வாழ்த்தி அனுப்பினார்

அந்த சத்தியகிரீஸ்வரர் ஆலயம் அப்படி உருவானதே, இதனால் ஆதியில் இருந்து அங்கு முருகனுக்கு தனி சன்னதி உண்டு

அந்த ஊர் திருசேய்நல்லூர் என பெயர் பெற்றது இவ்வாறே, அன்னை பார்வதியின் மகன் முருகன் பெயராலே அது அழைக்கபட்டது

அங்கு #எச்சதத்தன் என்றொரு பிராமணர் இருந்தார், அவர் மனைவிபெயர் பவித்திரை. எச்சதத்தன் என்பது யட்சதத்தன் என்பதன் மருவு என்பார்கள்.

யட்சன் எனும் வார்த்தை அசுரருடன் தொடர்புடையது என்றாலும் பொதுபொருள் “அதி சக்தி வாய்ந்த” எனும் வகையில் வருவதால் சிவன் புகழ்பாடும் பூத கணங்களுக்கும் அப்பெயர் பொருந்தும் , அவ்வகையில் அவர் யட்சதத்தன் அது பின் எச்சதத்தனாயிற்று

இந்த எச்சதத்தன் பவித்திரை தம்பதியருக்கு ஒரு மகன் இருந்தார் அவர் பெயர் விசாரசருமர்
விசாரசுருமர் என்பது விசார சர்மா என்பதே, ஆம் அவர்களின் குலபெயர் சர்மா. சர்மா என்பது சாஸ்திரி, சர்மா என பிராமணர்களின் பிரிவுகளில் ஒன்று, இன்றும் அந்த பிரிவு இந்தியா முழுக்க உண்டு

பெயர்களை கவனியுங்கள், இது #சேக்கிழார் காலம் பல நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம். அப்பொழுதே யட்சதத்தன் பவித்திரை விசாரசர்மர் என வடமொழி பெயர்களும் பிராமண இனமும் இங்கு தமிழ் இனங்களில் ஒன்றாய் இருந்தன, இதனாலேதான் இன்றளவும் செப்பேடுகளும் கல்வெட்டும் சமஸ்கிருதம் தாங்கி நிற்கின்றது

தமிழும் சமஸ்கிருதமும் அப்படி இரண்டற கலந்துவிட்டவை இரு கண்போன்றவை. சமஸ்கிருதம் ஒரு ஞானமொழி, எல்லா இந்திய மொழிகளின் ஞானத்தையும் இணைத்து தமிழுக்கு கொண்டுவரும் ஞானமொழியாய் இருந்தது

அந்த அந்தண குடியிருப்பில் பிறந்த விசார சர்மா 6 வயதுக்குள் தமிழ் சமஸ்கிருதம் என இரண்டிலும் கற்று தேர்ந்தார், ஒரு பிராமணனுக்கு இரண்டும் வராவிட்டால் அது பூர்வ ஜென்ம பாவமன்றி வேறு எதுவாக இருக்க முடியும்

அற்புத பிறப்பான, அவதார தளிரான விசாரதர்மருக்கு இரண்டுமே மிக எளிதாக வந்தது. புளியம்பழத்தில் இருந்து ஓடு பிரிவது போல் எளிதாக வந்தது. கற்று மிக எளிதாக தேர்ந்தார்.

பிராமணர் என்பவர்களுக்கு 6 வகை குணங்கள் உண்டு, அதை கொண்டவர்கள்தான் பிராமணர் என அழைக்கபடுவர்

ஒரே நோக்கமாக திருநீறு , இரண்டு வாழ்வு அதாவது பூனூல் அணிவதற்கு முன் ஒரு வாழ்வு பின் ஒரு வாழ்வு, மூன்றுவேளை வழிபாடு, நான்குவகை வேதம் உணர்தல், ஐந்துவகை புலன்களை அடக்கி புலன்களை மனதின் பின்னால் நிறுத்ததல்

அது போக 6ம் குணம் ஒன்று உண்டு, அது ஓதல் ஓதுதல், கற்றல் கற்பித்த, தானம் வாங்குதல் தானம் கொடுத்தல் என ஆறு இயல்பு உண்டு

அதாவது பிராமணன் வேதம் தனக்காக‌ ஓத வேண்டும் வேதத்தை மக்களுக்காக யாகங்களிலும் ஓத வேண்டும், அவன் நிறைய கற்க வேண்டும் கற்றதை சொல்லவும் வேண்டும், தானம் பெறவும் வேண்டும் தானம் கொடுக்கவும் வேண்டும்

ஆறு இயல்பான குணங்களை கொண்டதாலே ஆரியர் என்றானார்கள், அந்தணர்களின் இன்னொரு பெயராகவே அது அறியபட்டது. அவர்களுக்கு இருக்க வேண்டிய குணமாகவும் அது சொல்லபட்டது.

இக்குணங்களோ அடையாளமும் இல்லாதவர்கள் ஒரு காலமும் ஆரியர் என்றோ, அந்தணர் என்றோ அழைக்கபடமாட்டார்கள், தகுதி இழந்தோர் ஆகிவிடுவார்கள். அந்தணர் என்பது பிறப்பால் வந்தாலும் இந்த பண்புகளாலே அது உறுதிபெறும்

அந்த வழக்கபடி உபநயனம் எனும் பூனூல் பூட்டும் சடங்கினை விசாரசர்மாவுக்கு செய்ய ஏற்பாடுகள் நடந்தன‌
உபநயனம் என்பது வேறொன்றுமல்ல, நயனம் என்றால் கண், இரு கண்களுக்கு இடையே இருக்கும் ஞானக்கண் திற்க்கும் சடங்கு என பொருள்

சாஸ்திர படிப்புகளிலும் மந்திர உச்சாடனங்களிலும் படிப்புகளிலும் சேரபோகும் மாணவர்களுக்கு செய்யபடும் சடங்கு அது

இளமையிலே முதிர்ந்துவிட்ட அவருக்கு பூனூல் இட முடிவுசெய்யபட்டு அதுவும் நடந்தேறிற்று
அந்தணர் திரண்டு வந்து சடங்கு முடித்து பூனூல் அணிவித்து வாழ்த்த, ஊர் திரண்டு வந்து விருந்துண்டு வாழ்த்த எல்லாம் இனிதே நடந்தேறிற்று

வணிகன் வீட்டு குழந்தைக்கு கூட்டல் கழித்தல் கணக்கு எளிதாக வருவது போல, மந்திரங்களும் இதர பாடங்களும் விசார சர்மாவுக்கு இயல்பாய் வந்தன‌

பல ஆண்டுகாலம் படிக்க வேண்டிய பாடங்களை அவர் வெகு எளிதாக சிலவாரங்களிலே முடித்தார், அவரின் பிறவிபலன் அப்படி இருந்தது

கடலை செடியின் நுனியினை இழுத்தால் விளைந்த மொத்த கடலையும் மண்ணில் இருந்து வெளிவருவது போல மந்திரங்கள் எளிதாக அவருக்கு வந்தன, தொடக்க வரியினை சொன்னால் அவரால் முழு மந்திரத்தையும் சொல்ல முடிந்தது

7 வயதிலே எல்லா சாஸ்திரங்களிலும் தேறியிருந்தார் #விசாரசர்மர். விளைந்த வயலை அறுவடை செய்தாக வேண்டும், வளர்ந்த காளையினை ஏரில் பூட்டியாக வேண்டும்

மங்கையர் கழுத்தில் ஏறும் மங்கல நாண் என்பது அவர்களின் இரண்டாம் வாழ்வுக்கான அடையாளம் என்பது போல, பிராமணர் மார்பில் ஏறும் பூனூல் அவர்களின் இரண்டாம் வாழ்வுக்கான அடையாளம்

சாஸ்திரங்களையும் போதனைகளையும் கற்பது கடினம் அதைவிட கடினம் அதன் படி வாழ்வது, இதைத்தான் வள்ளுவன் “கசடற கற்க, நிற்க அதற்கு தக” என சொன்னான்

விசார சர்மர் 7 வயதிலே உபநயனம் பெற வந்திருந்தாலும் நல்ல முதிர்ச்சியுடன் சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தார், கொஞ்ச நாளிலே சாஸ்திர சம்பிரதாயங்களில் தேர்ந்தார்.

தந்தைக்கு யாகம் நடத்த உதவி முதல் பல உதவிகளை செய்தபடி அந்த ஊரில் வலம் வந்தார்.

இப்படியே சில காலம் சென்றபின்புதான் அந்த காட்சி நடந்தது

ஆம், அந்தணர் இருக்குமிடமெல்லாம் பசுக்கள் இருக்கும், பசு என்பது இல்லாமல் இந்து வழிபாடே இல்லை. திறுநீறு முதல் பால் தயிர் நெய் என எல்லாம் கொடுத்து கடைசியில் மேளம் இசைக்க தோலையும் கொடுத்துவிட்டு செல்லும் அந்த பசுக்கள் இந்து வழிபாட்டின் ஆதார சக்தி

இந்த மாடுகளை மேய்க்க சிலர் இருப்பார்கள், காலையில் உணவினை கட்டி அதை கோலில் தொங்கவிட்டு ஊரில் உள்ள மாடுகளையெல்லாம் காலை கறவை முடிந்தபின் மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் அவர்கள் மாலை திரும்ப அழைத்து வருவார்கள்

அவர்களுக்கு ஊரார் தானியமும் கூலியும் கொடுப்பார்கள், பசுக்களுக்கும் அவைகளின் பாலுக்கும் அவனே பொறுப்பு

அப்படி விசாரசர்மர் வீட்டு பசுக்களும் மேய்ய்சலுக்கு செல்லும், அனுதினமும் காலையில் மாடுகளை மேய்ப்பவனிடம் ஒப்படைப்பதும் மாலை அவற்றை திரும்ப கொண்டு தொழுவத்தில் கட்டுவதும் அவர் அன்றாட வேலையாய் இருந்தது

அன்றும் அப்படி ஊர்மாடுகள் வரவுக்காக அவர் காத்திருந்த பொழுதுதான் இடையன் ஒருவன் ஒரு பசுவினை கடுமையாக அடிப்பதை கண்டார்

பொதுவாக பசுக்கள் கன்றுகளை பிரியும் நேரம் வரமறுக்கும், அடம்பிடிக்கும் ஆனால் வலிய இழுத்து செல்வார்கள் , வளர்ந்த கன்றுகளை கூட விட்டால் பாலை குடித்துவிடும் என சிலர் கொஞ்ச நாளைக்கு கன்றுகளை கூட அனுப்பமாட்டார்கள்

அந்நேரம் பசு தாயுள்ளத்தால் மேய்ய்சலுக்கு செல்லாமல் அடம் பிடிக்கும் அதை வலிய இழுப்பார்கள், அப்படித்தான் அந்த பசு அடம் பிடிக்க அதை அடித்துவிட்டான் இடையன்

அந்த காட்சியினை கண்டதும் ஓடிசென்று அவன் கையில் இருந்த குச்சியினை வாங்கி தூர எறிந்துவிட்டு மிக தெளிவான போதனையினை கடுமையாக சொல்ல ஆரம்பித்தார் விசாரசர்மர்

“நீ எப்படி பசுவினை அடிக்கலாம், பசு எவ்வளவு மரியாதைகுரியது என வேதங்கள் சொல்கின்றன, நீ செய்தது பாவம்

உனக்கு புரியும்படி சொல்கின்றேன், பசுக்கள் இல்லாவிடில் பால் ஏது, வெண்ணெய் ஏது, நெய் ஏது இது இல்லாவிடில் எப்படி கோவில் இயங்கும்? அபிஷேகம் முதல் விளக்கு வரை எப்படி நடக்கும்

வீடுகள் நெய் இல்லாமல் எப்படி இயங்கும்? அவ்வளவு ஏன் திறுநீறு எங்கிருந்து கிடைக்கும்? அதை தாண்டி வயலுக்கு எங்கிருந்து உரம் கிடைக்கும்? வீட்டு முன் முற்றம் தெளிப்பது எப்படி?

பசுவின்றி பஞ்சகவ்யத்தை எப்படி உருவாக்குவாய்?

பசுவின்றி வலிமை மிக்க காளைகள் எப்படி வரும்? அதுவன்றி உழுவது முதல் வண்டி இழுப்பது வரை எப்படி நடக்கும்?

ஆம், பசுக்களே மூலம், பசுக்களே எல்லா வரமும் அளிப்பவை, பசுவின்றி இந்த ஊரும் இல்ல உலகமும் இல்லை, நீயும் இல்லை நானும் இல்லை

சாஸ்திரம் பசுக்களையும் பெண்களையும் ஒரே இடத்தில் வைத்து பூஜிக்கின்றது, என் கண் முன்னால் நீ பசுக்களை அடித்தது தவறு” என எடுத்து சொன்னார்

அந்த பசு அவரை பாசமாய் நோக்கிற்று அதன் கண்ணோரம் நீர் கசிந்தது

ஆனால் அந்த யாதவ சிறுவனோ திமிராய் சொன்னான் “ஓஹோ இவ்வளவு பேசுகின்றாய் அல்லவா? இனி நீயே மாடுகளை மேய்த்துகொள்”

விசாரசர்மர் கொஞ்சமும் தயங்கவில்லை, அந்தணனின் மிகபெரும் கடமை பசுக்களை பாதுகாப்பது என் தர்மத்தை செய்ய நான் தயார் என பொறுப்பினை ஏற்றார்.

அந்தணர் குடும்பங்களும் அதை ஒப்பு கொண்டன, அவர்களின் தர்மம் அது

மாடுகளை அவர் மேய்க்க கிளம்பிய அழகுகோலம் ஆயர்பாடியில் கண்ணன் மாடுமேய்த்த காட்சி போலவே இருந்தது

மாடுகளை மணியாற்றின் கரைக்கு அழைத்து செல்வதும் அவைகளை நன்கு பராமரிப்பதும் அவற்றின் தேவை அறிந்து புல் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்வதுமாக பசுக்களை உள்ளன்போடு மேய்த்து வந்தார் விசாரசருமர்

விலங்குகளுக்கு அறிவு இல்லாமல் இருக்கலாம் ஆனால் மனம் உண்டு, மனம் என்பது மனிதனுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒன்றே

அந்த மனம் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும், அன்பு எனும் உணர்ச்சியால் அந்த விலங்குகளின் மனதில் சில செய்திகளை சொல்லமுடியும், விலங்குகளின் மனமும் மானிட மனதோடு பேசும்

இது அன்புநிறை மாந்தருக்கு எளிதான விஷயம், இதனால்தான் யோகிகளும் ரிஷிகளும் விலங்குகளுடன் பேசமுடிந்தது

அய்யப்பனால் புலிமேல் அமர முடிந்தது,ரமணரால் குரங்குகளுடனும் சிறுத்தைகளுடனும் பேச முடிந்தது

அன்பால் நிறைந்த மனம் இறைவனில் கலந்திருக்கும், இறைசக்தி எல்லா உயிர்களிடமும் உண்டு என்பதால் இன்னொரு உயிரின் மனதை அதனால் தொட முடியும், பேசி பழக முடியும்

இதுதான் விசாரசர்மர் வாழ்விலும் நடந்தது, மாடுகளும் அவரும் கண்களாலும் மனதாலும் பேசி கொண்டார்கள்
அன்புக்கு அடிமையாகிவிட்டால் மானிடர் மட்டுமல்ல விலங்குகளும் சில அறிகுறிகளுடன் வெளிபடுத்தும்

நாய் வாலை ஆட்டியவாரு வரும், யானை துதிக்கையினை ஆட்டியபடி வந்து துதிக்கையால் தொட்டு விளையாடி உரசும். குதிரை தன் தலையால் இடித்து கொண்டே இருக்கும். பூனை தன் உடலால் மனிதன் காலை உரசியபடியே கொஞ்சும்

இப்படி ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு இயல்பு உண்டு

பசுக்கள் பாசத்தை வெளிபடுத்தும் விதம் அலாதியானது, மெல்ல அருகில் வரும் அவை நாவால் நக்கும், பின் தன் உடலால் மெல்ல உரசும் , அப்படி அன்பின் உச்சபெருக்கில் அவை நிற்கும் பொழுது ஒரு விஷயமும் நடக்கும்

ஆம் தன் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் தாய்க்கு பாச உணர்வில் மார்பில் பால் சுரப்பது போல, அன்பின் உச்சத்தில் பசுக்களுக்கும் சுரக்கும்.

இன்றும் இந்த வித்தை கறவை நடக்கும் இடங்களில் உண்டு, பசுவின் முன் கன்றினை நிறுத்தித்தான் பால் கறப்பார்கள், கன்றினை தாய்மை உணர்ச்சியில் நக்கியபடிதான் பசு பால் சுரந்து கொண்டிருக்கும், கன்று இல்லாது எந்த பசுவும் பால் கொடாது மடியினை சுருக்கி கொள்ளும்

அந்த மணியாற்றின் கரையில் தங்கள் மேல் பாசமாய் இருந்த விசாரசர்மரை பசுக்கள் முதலில் அடிக்காத ஆசிரியரை போலத்தான் மகிழ்வுடன் கண்டன, ஆனால் அவர் காட்டிய அபரிமிதமான அன்பில் அவை அவரை ஒரு கன்றாக பாவித்தன‌

மேய்ச்சல் முடிந்து அவை அசைபோட செல்லும் தருணம் மரத்தடியில் இருக்கும் விசாசர்மரை சூழந்து நின்று உரசும், அப்பொழுது தாய்மை உணர்ச்சியில் அவற்றின் பால் தானாக சொரியும்

பசுக்களின் முகத்தை கட்டி கொண்டு பதிலுக்கு முத்தமிடும் விசார சர்மரின் அன்பில் அவை இன்னும் கூடுதலாக சொரிந்தன, பின் அவை தள்ளிசென்று அசைபோட ஆரம்பிக்கும்

அப்பொழுதுதான் பசுக்களின் பால் தரையில் சிந்தியிருப்பதை கண்டார் விசார ச‌ர்மர்

அன்பான விசாரதர்மரின் அனுசரணையான மேய்ச்சலில் மகிழ்ந்த மாடுகள் நன்கு மேய்ந்ததால் பால் பெருகிற்று, இது அந்தணர் குடியிருப்பில் பெரும் மகிழ்ச்சியினை கொடுத்தது விசாரசர்மரின் பசு பாசம் பிரசித்தியாயிற்று

அது அன்பால் நிகழ்ந்த மாற்றம், ஆன் அன்பின் சக்தி அது. எங்கெல்லாம் உயிர்கள் உண்டோ அங்கெல்லாம் மனமும் உண்டு, மனதால் அவைகளை நெருங்கினால் , அவை மனம் மகிழ்ந்தால் பெரும் மாற்றம் நடக்கும் என்பது இதுதான்

இது மாயம் அல்ல, சித்து அல்ல, கடவுளின் அதிசயம் அல்ல, அடிப்படை காரணம் அன்பு. அது மானிட இன பெண்கள் போல் மிக மென்மையான மனம் கொண்ட பசுக்களிடம் எளிதில் அதிசயம் புரிகின்றது
பால் கூடிற்று என மக்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள் அதே நேரம் தன்னை பசுக்கள் கொஞ்சும் நேரம் வீணாகும் பாலை பற்றி சிந்தித்தார் விசார சர்மம்

பூ , தூபம், சந்தணமெல்லாம் இவற்றில் சிறந்ததெல்லாம் இறைவனுக்கு, எல்லா விளைச்சலிலும் எது முதலில் கிடைப்பது அது இறைவனுக்கு என்பது அவர் படித்த சாஸ்திரம்

அப்படி புதிதாக ஊறும் பாலில் முதல் படி பால் இறைவனுக்கு என அவர் மனம் எண்ணிற்று, அது வீணாக தரையில் கொட்டுவதை அவர் விரும்பவில்லை, இறைவனுக்குரியது வீணாக கூடாது என உறுதி பூண்டார்

ஆமம் பாம்பு புற்றையே லிங்கம் என கருதி பாலூற்றி வழிபட்ட சமூகம் இது, நாகம் குடியிருக்கும் அந்த லிங்க வடிவ புற்று சிவனையே குறிப்பதாக கருதி பாலூற்றிய சமூகம் இது

அதை பிடித்து கோவிலுக்கு அபிஷேகம் என கொண்டு செல்லவும் முடியாது, அது மேய்ச்சல் கானகம் தூரமும் அதிகம் மாடுகளையும் பார்க்க வேண்டும்

என்ன செய்யலாம் என சிந்தித்த அவருக்கு அழகான யோசனை உதித்தது, இந்த பாலை அப்படியே எடுத்து சென்று இறைவனுக்கு கோவிலில் கொடுத்து அபிஷேகம் செய்வதை விட இங்கேயே வரவழைத்து அபிஷேகம் செய்தால் என்ன?

என்ன செய்ய வேண்டும்? லிங்கத்துக்கு திருஞ்சனம் என இந்த பாலை ஊற்ற வேண்டும் அவ்வளவுதானே, அந்த லிங்கத்தை இங்கேயே ஸ்தாபித்து பாலை ஊற்ற்றினால் போதாதா? மந்திரங்கள் முழுக்க நம்மிடம் உண்டு, பால் உண்டு

பூக்களை இங்கே பறிக்கலாம், அழகான கொன்றை பூக்கள் உண்டு நறுமணம் பரப்பும் போதும், சுருக்கு பையில் எப்பொழுதும் இருகும் விபூதி கைவசம் இருகின்றது

தீபம்? ஆ.. சூரியனே தீபமாய் வானில் எரியும் பொழுது அதைவிட என்ன வேண்டும்? சரி தூபம்? இந்த மணியாற்றினை கடந்துவரும் இதமான தென்றலை விடவா? அந்த தென்றல் இந்த கொன்றை பூக்களை கலக்கும் பொழுது எழும் சுகந்ததினை விடவா தூபம் நறுமணம் கொடுக்கும்

சட்டென திட்டத்தில் இறங்கினார் விசாரசர்மர்

பசுக்கள் மேயும் நேரம் அவருக்கும் வேலை இருக்கும் என்பதால் பசுக்கள் அசைபோடும் மதியத்தை ஒட்டிய நேரத்தை கணக்கிட்டார், அது அவரின் பூஜை வேளை என குறித்து கொண்டார்.

ஆற்றோரம் ஓடி சென்று களிமண் எடுத்து வந்து நீரால் பிசைந்து லிங்கம் செய்தார், மிக அழகாக செய்தார் வெயிலில் அதை கொஞ்சம் காய வைத்தார்

பக்கத்தில் சிறிய மணல் மேடை செய்தார், அபிஷேக பால் வழிந்தோட மேடையில் இருந்து ஒரு சிறிய கால்வாயும் வெட்டினார்

மேடையினை சுற்றிபிள்ளைகள் மணலால் கோட்டை கட்டுவது போல் கோட்டை கட்டினார், கோவில் மதிலாம்
உட்பிரகாரமெல்லாம் அப்படியே அமைத்து கொண்டார், வாசல் என சில கற்களை வைத்தார் அதன் அருகே ஒரு குச்சியினை நட்டு வைத்து கொடிமரம் என சொல்லி கொண்டார், ஆகமம் பிசறாமல் கிழக்கு நோக்கி எல்லாம் அமைத்தார்

எல்லாம் தயாராயிற்று

கொன்றை பூக்களும், வில்வ இலைகளுமாய் சேகரித்து வந்தார், இடையர்கள் வைத்திருகும் இரும்பு வளை கொண்ட கழி அதற்கு உதவிற்று பின் வெயிலில் காய்ந்த லிங்கத்தை மண்மேடைமேல் ஏற்றி வைத்தார், பூக்களில் சிலவற்றை முன் அடுக்கினார், கொஞ்சம் பூக்களையும் லிங்க இலையினையும் தன் மேல்துண்டின் மேல் வைத்து கொண்டார்

இதை செய்து முடிக்கவும் மாடுகள் மேய்ந்து அவரை நெருங்கவும் சரியாக இருந்தது

மாடுகள் இவற்றை காலால் மிதித்திவிடாதபடி தள்ளி அழைத்து சென்று கொஞ்சினார், விளையாடினார், அப்பொழுது அவை பால் சொரியும் பொழுது சேகரித்தார், பின் கொஞ்சம் கறக்கவும் எண்ணினார், காரணம் தானாய் சொரியும் பால் சாரலின் தூரல் போலத்தான் இருந்தது

அவர் மடியில் கைவைக்கும் முன் பாலை பீச்சின பசுக்கள்

பசுக்களை ஓய்வெடுக்கவிட்டு தன் கோவில் பக்கம் பாலோடு ஓடிவந்தார் விசார சர்மர், இப்பொழுது கோவில் தயார், லிங்கம் தயார் அதன் முன்பூக்களும் தயார், திறுநீற்றினை எடுத்து லிங்கத்தில் பூசினார்

எல்லாம் சரியென்ற பொழுதும் ஏதோ ஒன்று அவருக்கு குறைந்தது, அது நந்தி

அட மாட்டுமந்தையில் இருந்து கொண்டு நந்திக்கு அலைவதா? என சொல்லி ஒரு விடபருவ காளைகன்றினை பிடித்து வந்து லிங்கம் முன் படுக்க சொன்னார், அதுவும் காலைமடக்கி படுத்து லிங்கத்தை பார்க்க அசைபோட்டு கொண்டிருந்தது

எல்லாம் சரி என நிறைவு கொண்ட விசாரசருமர் ஓடி போய் ஆற்றில் ஒரு மூழ்கு மூழ்கி ஓடிவந்து நெற்றிக்கு நீறு பூசி பின் லிங்கத்துக்கும் பூசி பூஜையில் லிங்கத்தின் இடபக்கமாக அமர்ந்து கொண்டார்

மந்திரங்கள் அவருக்கு அத்துபடி என்பதால் உரிய மந்திரங்களை சொல்லியபடி பாலினை லிங்கத்தின் மேல் ஊற்றி வலதும் இடதுமாக ஆட்டி சப்தமாய் மந்திரங்களை சொல்லியபடியே திருமஞ்சணம் செய்ய தொடங்கினார்

பின் வில்வ இலையினை பொழிந்து மந்திரம் சொன்னார், பின் பூக்களை தூவி அர்ச்சனை மந்திரம் சொன்னார்.

எல்லாம் நிறைவாக முடிந்ததும் மகிழ்ச்சியோடு தள்ளி சென்று அமர்ந்து லிங்கத்தையே பார்த்து கொண்டிருந்தார்

இதையெல்லாம் சிவனும் பார்த்து கொண்டே இருக்கிறார் என்பதை அவர் அறியவில்லை.

அனுதினமும் பூஜைகள் தொடர்ந்தன, மாடுகளும் பாலை கொடுத்து கொண்டே இருந்தன, அவரும் மணலால் லிங்கம் செய்து தன் வழிபாடுகளை தவறாமல் செய்து கொண்டே இருந்தார்

இதை செய்தபின்புதான் மதிய உணவு என்பதே அவர் வழக்கமாயிற்று

பால் அபிஷேகம் என்பது இந்துக்கள் வழிபாட்டில் மகா முக்கியமானது, முதலாவது சுத்தமான பால் என்பது தூய்மையின் அடையாளமாக கருதபட்டது, மாசற்ற அந்த பாலை இறைவனுக்கு படைப்பது பெரும் காணிக்கையாயிற்று

பால் அபிஷேகம் என்பது ஆயுளை நீட்டிக்கும் விஷயம் என்றார்கள் இந்து ஞானிகள், ஆம் பால் அபிஷேகம் செய்து அபிஷேக பால் எனும் நற்பொருளும் சிவனருளும் கலந்த பாலை குடிக்கும் பொழுது மருத்துவ ரீதியாகவும் உடல் பலமாகும்

பால் என்பது மிகசிறந்த கிருமி நாசினி என கண்டிருந்தது அக்கால சமூகம், இன்றும் சில பொருட்களை கழுவமும் சுத்தபடுத்தவும் பால் பயன்படும், கவனித்தால் புரியும்

அந்த சிறப்பான பாலை கொண்டு லிங்கத்தை அபிஷேகம் செய்து அதை அருந்தி அருளும் வளமும் பெற்ற சமூகம் இது, அதை ஒரு வழிபாடாகவே கருதிற்று

பால் அபிஷேகம் ஆயுளை விருத்தியாக்கும் என்பது பொய்யல்ல‌

சலசலத்து அலை அடித்து ஓடும் மணியாற்றின் கரையில் இளவெயில் மெல்ல காய்ச்ச, குளிர்ந்த காற்றடிக்க பசுக்களெல்லாம் புல்தரையில் படுத்திருக்க, பின்னணியில் உயர்ந்த மரங்களெல்லாம் காற்றில் அசைய, அதில் இருக்கும் பறவைகளெல்லாம் இசையெழுப்ப, அந்த ரம்மியமான சூழலில் இந்த திடீர் கோவிலும் அந்த பால் அர்ச்சனையும் அனுதினமும் நடக்க ஆரம்பித்தது

மாடுகள் தினமும் மேய்ந்தாக வேண்டும், மாடுமேய்க்கும் தொழிலும் அதனால் அனுதினமும் நடந்தாக வேண்டும், அதில் விடுமுறையே இல்லை

அதனால் அனுதினமும் சிவனுக்கு இப்படி பாலாபிஷேகம் செய்வது விசாரசருமருக்கு வழக்கமாயிற்று, அனுதினமும் ஆலயத்துக்கு சென்று வழிபட முடியாத அவருக்கு இது பெரும் ஆறுதலும் அடைக்கலமாயிற்று.

எந்நாளும் நடக்கும் இந்த வழிபாட்டினை ஒரு நாள் ஒருவன் கண்டான், பார்க்கும் கண்களை பொறுத்தே விஷயங்கள் புரியும்

அதை கண்ட அந்தணனுக்கு விசாரசருமர் பாலை வீணாக கொட்டுவது போல் தோன்றிற்று, அருகிருந்து பார்த்தபொழுது இன்னும் அதிர்ச்சி அடைந்தார்

காரணம் அந்த அந்தணர் யாகம் செய்வதே உன்னத பக்தி, யாகத்தின் அவிஸை ஏற்றுகொள்ளும் தெய்வமே பெரும் தெய்வம் எனும் வகையில் நம்பிக்கை கொண்டிருந்தார்

ஒரு சிறுவன் மணல் லிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்வது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திற்று, இதனால் கண்ட காட்சியினை அப்படியே திரித்து அவர் தகப்பனார் எச்சதத்தனிடம் சொன்னார்

“பார் எச்சதத்தா, உன் மகன் எங்களையெல்லாம் நூதனமாக பழிவாங்குகின்றான். அவனை மாடுமேய்க்க அனுப்பிய கோபத்தில் பாலை எல்லாம் கறந்து மண்ணில் இறைக்கின்றான்” என மிக கடுமையாக மூட்டிவிட்டான்

அந்த அந்தணன் சொன்னதை இன்னும் சில அந்தணர்கள் பார்த்துவிட்டு வந்து எச்சதத்தனிடம் சொன்னார்கள், இதனால் இதை நேரிலே பார்த்துவிட முடிவு செய்தான் எச்சதத்தன்

மகனுக்கு தெரியாமல் முன்பே சென்று ஒரு குருந்த மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு நடப்பதை கவனித்தான் எச்சதத்தன்

அது தைமாதம் உத்திர நட்சத்திர நாளாய் இருந்தது, அறுவடை நடந்து முடிந்த வயல்களில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன‌

வழக்கமான காட்சிகள் நடந்தன மாடுகளை மேய்த்து கொண்டே கொன்றை பூ பறித்தல், நீண்ட கழியால் வில்வ இலை பறித்தல் என பொருட்களை சேர்த்து கொண்டார் விசாரசர்மர்

அதை ஒரு ஆத்தி மரத்து அடியில் வைத்தார்.

இதில் ஆத்தி பூவும் இருந்தது, ஆத்தியும் கொன்றை பூக்களும் சிவனுக்கு மிக விருப்பமான பூக்கள். சிவன் இரண்டையுமே விரும்பி ஏற்பார்

இதனால் கொன்றை பூக்களுக்கு நிகரான மரியாதை அன்று ஆத்தி பூவுக்கும் இருந்தது
(சோழநாட்டில் அவை அதிகம் இருந்தன சோழ மன்னர்கள் சூடும் பூக்களில் ஆத்தி பூவே அவர்கள் அடையாளமாக இருந்தது

ஆத்தி மர பூக்களும், கொன்றை மர பூக்களும் இந்துக்களின் தனி அடையாளமாய் இருந்தது

அவ்வையார் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் என பாடியதெல்லாம் இவ்வகையே. அப்பூக்கள் மகா புனிதமானதாகவும் மிக உயர்ந்த அடையாளமாகவும் கருதபட்டது)

பின் அவற்றை தன் மேல் துண்டில் பத்திரமாக வைத்துவிட்டு லிங்கம் செய்து கோட்டை கட்டி தன் பூஜைக்கான தயாரிப்பில் இறங்கினார்

இடை இடையே மாடுகளை நீருக்கு அழைக்கவும் அவற்றினை ஆங்காங்கே திருப்பவும் அவர் தவறவில்லை
அப்படியே லிங்கம் முதல் எல்லாம் தயாராயிற்று, மறைவில் இருந்து இதை பார்த்ததும் பல்லை கடித்து கொண்டிருந்தார் அந்த எச்சதத்தன் காரணம் அவர் காசிப குலத்தவராய் யாகத்திலே கடவுளை காணும் நம்பிக்கையினை கொண்டிருந்தார்

லிங்க அபிஷேக வழிபாடு அவருக்கு உவப்பானது அல்ல, எனினும் இங்கு வழிபாடு சிக்கல் அல்ல பால் என்னாகின்றது என்பதுதான் விஷயம் என்பதால் கோபத்தை கட்டுபடுத்தி நடப்பதை பார்த்து கொண்டிருந்தார்
வழக்கம் போல் குறிப்பிட்ட நேரத்தில் மாடுகள் விசாரசருமரை சூழ்ந்தன, அவரை நக்கின, கொண்டாடின உரசிகொண்டு நின்று மகிழ்ந்தன, விசாரசருமரும் அவற்றை முத்தமிட்டு மகிழ்ந்தார்

குழம்பி தவித்தார் எச்சதத்தன், கோபமும் குழப்பமும் அவரை ஆழ்த்தியிருந்தன‌

அப்பொழுது மாடுகள் தானாக பால் சுரந்தன அதை கலயங்களில் ஏந்தி கொண்டார் விசாரசர்மர் ,இது எச்சதத்தன் கண்ணுக்கு விசாரசர்மரே கற‌ப்பது போல் தெரிந்தது

கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல் விடகாளையினை நந்திபோல் கட்டி போட்டுவிட்டு லிங்கத்தின் இடபுறம் இருந்து மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்

அருகில் பால் கலயங்கள் அடுக்கி வைக்கபட்டிருந்தன, மந்திரம் சொல்ல சொல்ல வில்வ அர்ச்சனையும் பூ அர்ச்சனையும் நடந்து கொண்டிருந்தது

முழு தவத்தில் ஆழ்ந்த மனத்தில் இருந்து வழிபாடு நடத்தி கொண்டிருந்த அடியார் முதல் கலய பாலை எடுத்து மந்திரம் சொன்னபடியே ஊற்றியபொழுது மறைவில் இருந்து ஓடிவந்தான் எச்சதத்தன்

“முட்டாளே, என்ன காரியம் செய்கின்றாய்? பாலை எடுத்து வீணாக ஊற்றுவாயோ?” எனும் ஆத்திரமான வார்த்தையுடன் அருகில் இருந்த பிரம்பினை எடுத்தான்

அது கொடிமரம் என விசாரசர்மா நட்டு வைத்த பிரம்பு

பால் வீணாகின்றது எனும் ஆத்திரத்தை விட ஒரு யாகவழி பிராமணன் அதற்கு தலைகீழான லிங்க அபிஷேகம் செய்வதா அதுவும் தன் மகனே செய்வதா எனும் ஆக்ரோஷமே அவனில் ஓங்கியிருந்தது

ஆனால் அவன் கத்தியதோ குச்சியினை பிடுங்கியதோ விசாரசர்மருக்கு சிறுசலனமும் ஏற்படுத்தவில்லை
காரணம் அவர் ஆழ்ந்த தியானத்தில் சிவனோடு ஒன்றி இருந்தார், கைகள் மட்டும் பாலை ஊற்றின‌

ஆத்திரத்தில் விசாரசருமரின் முதுகில் அடித்தான் எச்சதத்தன், அவரோ காற்று வீசியது போல் அவர் போக்கில் இருந்தார்

இது இன்னும் எச்சதத்தனின் கோபத்தை அதிகரித்தது, ஒருவன் கோபபடும் பொழுது உடனே பதில் கிடைக்காவிட்டால் அவன் கோபம் இன்னும் கூடுமே தவிர குறையாது

அடித்தும் அசராத விசாரதர்மரை திட்டி கொண்டே பிரம்பை போட்டுவிட்டு இன்னும் ஆக்ரோஷமாக கத்தியபடி பால் கலயங்களை காலால் தட்டிவிட்டான் எச்சத்தன், அப்பொழுது கண்திறந்தார் விசாரதருமர்

ஆம் பூஜையில் இருந்த மனம் பூஜைக்கு இடையூறு என்பதால் உடனே விழித்தது

அவருக்கு எதிரே நிற்பது தந்தை என்பதோ அவரின் குரலோ தெரியவில்லை மாறாக அவரின் கால் லிங்கத்தை நோக்கி வருவதை மட்டும் கண்கள் கண்டன‌.

#சண்டிகேஸ்வர_நாயனார் #சண்டிகேஸ்வரர் #நாயனார்

psri இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2023 4:47 pm

ஆம் அடுத்து லிங்கத்தை காலால் உதைக்க எத்தணித்தான் எச்ச தத்தன், அவனை பொறுத்தவரை அது மணல், ஆரோகணமும் முறையான அபிஷேகமும் இல்லா கோவில் லிங்கம் அல்ல, வெறும் மணல்
இதனால் அதை மிதிக்க காலை ஓங்கினான்

அப்பொழுது தன் அருகே கிடந்த பிரம்பு, தன்னை தகப்பன் அடித்த அதே பிரம்பினை எடுத்து அந்த காலை நோக்கி வீசினார் விசாரதர்மர்

அது அப்படியே மழு எனும் கொடாரியாக மாறி எச்சதத்தன் ஓங்கிய அந்த‌ காலை வெட்டி அதன் நின்றிருந்த அடுத்த காலையும் வெட்டி துண்டாக்கியது

அடியற்ற மரம் போல் வீழ்ந்து அலறினான் எச்சதத்தன், மிகுந்த ரத்தம் வெளியேறி இரு கால்களும் இல்லா நிலையில் கையால் அடித்து அலறி கொண்டிருந்தான்

ஆனால் அந்த குரல் விசாரசருமரை உலுக்கவில்லை, அவரை பொறுத்தவரை லிங்கத்தை உதைக்க வந்த காலை விரட்டியாயிற்று அவ்வளவுதான் என தவத்தில் மூழ்கினார்

எதிரில் கிடப்பது தந்தை என்றோ அவரின் கதறல் என்றோ கவனம் செல்லாத அளவில் அவரின் முழு கவனமும் வழிபாட்டிலே முழு மனதாய் இருந்தது

அப்படி அவர் அதில் மூழ்கிவிட்டு எல்லாம் ஜெபித்து கண்ணை திறக்கும் பொழுதுதான் அதாவது சுயநினைவுக்கு வரும்பொழுதுதான் நடந்த விபரீதமே புரிந்தது

தியானத்தில் இருந்தபொழுது பால் கலயம் உடைபடும் சத்தம் கேட்டதும் ஒரு கால் லிங்கத்தை உதைக்க வந்ததும் அதை ஒரு பிரம்பை எடுத்து வீசியதும் மட்டுமே நினைவிருந்தது

வேறு எதுவுமே நினைவில் இல்லை

இது முந்தைய நாள் வரை வழிபாடு நடக்கும் நேரம் மாடுகள் அப்பக்கம் வந்தால் அவர் பிரம்பை காட்டி விரட்டும் சாதாரணம் நிகழ்வே, அப்படித்தான் அவர் இப்பொழுதும் செய்தார்

ஆனால் அது தந்தை காலை வெட்டி அவர் இறந்து கிடப்பது என்பதை அவரால் நம்ப முடியவில்லை
ஒரு பிராமணனாக அது அவருக்கு முப்பாவம், மூன்று பெரும் பாவம்

இதனால் இனி சாஸ்திரமும் தர்மமும் அறிந்த விசாரசர்மருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அவரே தீயில் இறங்கி சாவது, வேறு வழி இல்லை காரணம் நடந்திருக்கும் குற்றத்தின் வீரியம் அப்படி

அவர் அப்படி கலங்கி நின்ற நேரத்தில்தான் இனி மணியாற்றில் விழுந்து சாகலாம் என முடிவெடுத்த நேரத்தில்தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது

அவர் கட்டி வைத்திருந்த மணல் லிங்கம் அப்படியே உருமாறிற்று, பேரோளி சூழ்ந்தது அதில் சிவனும் பார்வதியும் தோன்றினார்கள்

சிவன் கொன்றை பூக்களை அணிந்திருந்தார், அவர் மேனியெங்கும் வில்வ இலைகள் இருந்தன, பாலின் துளிகளும் அவர் மேல் ஓட்டியிருந்தன, பால் வாசனை எங்கும் சூழ்ந்திருந்தது

ஆம் சிவலிங்கத்துக்கு அவர் சூட்டிய அதே கொன்றை பூக்களும், வில்வ இலையும் பாலும் அப்படியே ஒட்டியிருந்தன‌

“பெருமானே..” என உரக்க ஓலமிட்டு விழுந்து வணங்கினார் விசார சர்மர், அவரை தட்டி எழுப்பி தன் மடியில் அமர்த்தி கொண்டார் அன்னை பார்வதி

சிவன் சொன்னார் “எம்மேல் கொண்ட பக்தியால் உன் தந்தையினையே இழந்த விசாரசர்மனே இனி நானே உனக்கு தந்தை, தந்தையினை கொன்ற உன்னை இனி ஏற்ககாத அன்னைக்கு பதிலாக உமையவளே உன் அன்னை

நாம் உன் தந்தையாகிவிட்டதால் இனி எமக்கு படைக்கபடும் உணவு, எமக்கு செய்யபடும் அபிஷேகம், எமக்கு சாத்தபடும் ஆடைகளில்லெல்லாம் உமக்கும் பங்கு உண்டு, அது போக எங்கெல்லாம் சிவனாகிய எமக்கு உரித்தான சொத்து உண்டோ அதெல்லாம் உன் கண்காணிப்பில் வரும்

ஆம் எமக்காக தந்தையினை அழிக்கும் அளவுக்கு கோபம் கொண்ட நீ இனி சண்டேஸ்வரர் எனும் பதவியினை அடைவாய், எம் இடபக்கம் எல்லா ஆலயத்திலும் அமர்வாய், எல்லா பொறுப்புக்களையும் உம்மிடமே ஒப்படைக்கின்றோம்” என சொல்லி தன் கொன்றை பூக்களை அவர் தலையில் சூடி வாழ்த்தினார்,

அது இளவரசனுக்கு அரசன் முடிசூட்டும் காட்சி போல் இருந்தது. அன்னையின் கரங்கள் பட்ட மாத்திரத்தில் அந்த முப்பெரும் பாவம் தீர்ந்தது

பின் விசாசர்மரை தன்னோடு அணைத்து கொண்டார் சிவன், அத்தோடு புது பிறப்பு போல் தங்கமாக ஜொலித்தார் விசாரசர்மர் அவர் அன்றுமுதல் அவர் சிவன் சொன்னபடி சண்டேஸ்வரர் என்றானார்

அத்தோடு சிவன் அவரையும், இறந்து கிடந்த தந்தையினையும் தன்னோடு சேர்த்து கொண்டு கயிலாயம் ஏகினார்

சிவனின் இந்த அருள்நிலையால் சண்டேஸ்வர பதவி அடைந்த விசாரசர்மருக்கு சண்டேஸ்வர சந்நிதி என எல்லா சிவாலயங்களிலும் லிங்கத்தின் இடப்புறம் தனி இடம் ஒதுக்கபட்டது

சிவாலயங்களில் லிங்கத்தை அடுத்து நந்தியும் சண்டேஸ்வரரும் கட்டாயம் என்றானது, சிவலிங்கத்தை சுற்றி வரும்பொழுது அவரையும் சுற்றிவர வேண்டும் என அறிவிக்கபட்டது

சிவனுக்கு சாற்றும் பொருளெல்லாம் அது உணவோ, உடையோ அபிஷேகமோ சண்டேஸ்வரருக்கும் செல்லுமாறு ஏற்பாடுகள் செய்யபட்டன, சிவனுக்கும் சண்டேஸ்வரருக்கும் குறுக்கே யாரும் வர கூடாது என்பதால் அவர் சந்நதி சிறு சுவரோடு லிங்கத்து கருவறையோடு ஒட்டி வைக்கபட்டது

கோவிலின் எல்லா வரவு செலவு கணக்குகளையும் அவரே பார்ப்பவர் என்பதான் சிவாயத்தில் வணங்கி வரும் பக்தர்கள் அங்கிருந்து சிவன் அருளை தவிர எதையும் எடுத்து செல்லவில்லை என்பதை காட்ட கைகளை மெல்ல தட்டி காட்டும் வழக்கமும் வந்தது

கோவிலின் சொத்துக்கள் கூட சண்டிகேஸ்வரர் பெயரிலேதான் வாங்கபட்டன , ஆதார செப்பேடுகள் இப்பொழுதும் உண்டு

இன்றும் சிவாலயம் தோறும் அவர் வீற்றிருக்கின்றார், உற்சவங்களில் அவரும் வருவார்

சிவனுக்கும் அவருக்கும் நேரடி பரிமாற்றம் எனும் தத்துவத்தில் பக்தர்கள் நந்திகாதில் சொல்வது போல தங்கள் கோரிக்கைகளை சண்டேஸ்வரரிடமும் சொல்வார்கள், சிவன் அவர் மூலமே வரம் தருவார் என அவரிடம் கையேந்தி நிற்கும் பக்தர்களும் உண்டு, அதில் அர்த்தமும் உண்டு

தேவாரம் சண்டிகேஸ்வரர் பற்றி இப்படி சொல்கின்றது

“மாணி பால்கறந்து ஆட்டி வழிபட
நீணு லகெலாம் ஆளக் கொடுத்த என்
ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணுவைத் தமியேன் மறந்து உய்வனோ”
திருஞான சம்பந்தர் மிக உருக்கமாக சொல்கின்றார்

“வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பாலாட்டும்
சிந்த செய்வேன் தன்கருமம் தேர்ந்து சிதைப்பான் வருமத்
தந்தைதனைச் சாடுதலும் சண்டீசன் என்றருளிக்
கொந்தணவு மலர் கொடுத்தான் கோளிலி எம்பெருமானே”

சுந்தரரும் “சண்டிக்கு உன்சடைமிசை மலர் அருள் செயக்கண்டு” தான் சிவனை வணங்குவதாகக் கூறியுள்ளார்.

“தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்”
ஆம் பெரியபுராணமெங்கும் அவர் பெருமை திரும்பும் இடமெல்லாம் நிற்கின்றது

கிட்டதட்ட திருசேய் நல்லூர் எனும் அந்த ஊரில் சிறுவனாய் முருகன் வழிபடும் பொழுது பார்வதி அம்மையார் வந்ததற்கும் , விசாரசர்மாவுக்கு அப்படியே சிவனும் பார்வதியும் வந்ததற்கும் ஏக ஒற்றுமைகள் உண்டு
தெய்வத்தின் ஆட்டம் மனிதனுக்கு புரிவதில்லை எனினும் மிகபெரும் கர்மபலனின் எஞ்சிய காலத்தை ஒரு நாயனாராய் கழிக்க வந்து உய்வடைந்திருக்கலாம், இல்லாவிடில் ஒரு சிறுவனுக்கு இவ்வளவு ஞானமும் பக்தியும் வழிபாடும் சாத்தியமில்லை

எனினும் மனிதனாய் பிறந்த அந்த அவதாரம் எளிதாக அந்த பதவியினை அடையவில்லை எப்படி அந்த மாபெரும் இடம் அவருக்கு கிடைத்தது, அவர் வாழ்வு சொல்லும் போதனை என்ன?
ஏராளம் உண்டு

விசாரசருமர் எனும் சாதாரண அந்தண சிறுவன் பெரும் அடையாளமான நாயன்மாரையும் தாண்டி சண்டேஸ்வரர் பட்டம் பெற்றது எப்படி?

முதல் விஷயம் அன்பு, அந்த அன்புதான் பசுக்களிடம் இருந்தது, சிவன் மேலும் இருந்தது. சிவவழிபாட்டுக்கு முதல் விஷயம் அன்புநிறை மனம். அந்த மனதில் பால்போல் அன்பு பொங்கி கொண்டே இருந்தது
அந்த விசாரசருமர் முழுநேரமும் கடவுளை நினைந்து கொண்டிருந்தார், அதைவிட முக்கியமாக அவர் தன் கடமையினை செய்து கொண்டே கடவுளை தேடினார்

மாடுமேய்க்கும் தொழிலை செய்து கொண்டேதான் அதில் கிடைத்த கூடுதல் பாலைத்தான் லிங்க அபிஷேகத்துக்கு செலுத்தினார்

இதுதான் கவனிக்கதக்கது, ஆம் நீங்கள் செல்வந்தராக , வியாபாரியாக, எழுத்தாளராக, கட்டடம் கட்டுபவராக இல்லை எத்தொழில் செய்பவராகவும் இருங்கள் ஆனால் தேவைக்கு அதிகமானது எல்லாம் இறைவனுக்கு என்பதில் தெளிவாக இருங்கள்

விசாரசர்மர் கூடுதல் பாலை கலயத்தில் ஏந்தி வீட்டுக்கே கொண்டு வந்திருக்கலாம் இல்லை அவரே காய்ச்சி குடித்திருக்கலாம் இன்னும் என்னவெல்லாமோ செய்து அவருக்கு பயன்படுத்தியிருக்கலாம்
ஆனால் தேவைக்கு அதிகமானது எல்லாம் சிவனுக்கு என்பதில் சரியாக இருந்தார், நீங்களும் அப்படி நில்லுங்கள்

தொழிலிலும் சிந்தையிலும் அதிகம் வருவதையெல்லாம் சிவனுக்கு கொடுத்து கொண்டே இருங்கள்,
ஒரு நேரம் அது லிங்கம் மேல் ஊற்றபட்ட பாலோடு சிவன் வந்தது போல உங்களுக்கே ஆசியாய் வரும்

நீங்கள் வியாபாரியாக இருந்தால் அதை பொருளாக கொடுங்கள், கட்டடம் கட்டுபவராக இருந்தால் சிவாலயமாக கொடுங்கள், ஓவியராக இருந்தால் கூடுதல் நேரத்தில் சிவனுக்காய் வரையுங்கள்

பூ தொடுப்பவரோ கற்பூரம் செய்பவரோ யாராக இருந்தாலும் தேவைக்கு அதிகமானதை அவருக்கு கொடுங்கள் அது உங்களுக்கே பலமடங்கு ஆசியாய் திரும்ப வரும்

இன்று பல சிவாலயங்களும் தெப்பகுளங்களும் பாழ்பட்டு கிடக்கின்றது, இன்னொரு பக்கம் பொழுதுபோக்கு பூங்காவும், திரையரங்குகளும், குடிவெறி மையங்களும் நிரம்பி வழிகின்றன‌

ஏன் டிவி முன்னால் இருந்து நேரம் போக்கும் கூட்டம் ஏகபட்டது உண்டு

இவர்களெல்லாம் தங்கள் நேரத்தை ஆலயத்தில் செலுத்தலாம், அதை சீரமைக்கலாம் சுத்தபடுத்தலாம் ஜொலிக்க வைக்கலாம்

அக்காலம் அப்படித்தான் இருந்தது, அதில்தான் அன்று ஆலயங்கள் மின்னிகொண்டிருந்தன, பக்தி மிக்க மக்கள்தான் ஆலயத்தை தாங்கி கொண்டிருந்தனர், பக்தி மக்களிடம் குறைந்தபின்பே இந்த வீழ்ச்சி நடந்தது
இங்குதான் சண்டேஸ்வர நாயனாரின் வாழ்வு திரும்ப திரும்ப கவனிக்கபடுகின்றது, ஆம் உபரியாய் இருப்பதை சிவனுக்கு கொடுங்கள், அது நேரமாக உழைப்பாக பொருளாக எதுவாக இருந்தாலும் சரி, சிவன் அருள் புரிவார்

வழிபாடு செய்யும்பொழுது மனம் முழுக்க லயிக்க வேண்டும், கண் ஓரிடமும் சிந்தை ஓரிடமும் இருப்பதெல்லாம் வழிபாடு அல்ல, மனம் ஆத்மா புத்தி நினைவு எல்லாம் ஒரே புள்ளியில் இருக்க வேண்டும்
விசாரசருமர் அப்படி இருந்தார், அந்த அளவு அவர் மனல் அதில் லயித்திருந்தது இதில்தான் அவர் அடிபட்டும் அவர் எழவில்லை, கத்தவில்லை, தான் வீசிய பிரம்பு மழுவாக மாறி எச்சதத்தனை கொன்றது வரை அவரை தொடவில்லை

அந்த அளவு அவர் மனம் பக்தியில் கலந்திருந்தது, அப்படி ஒரு பக்தி எப்பொழுது வரும்? அன்பில் வரும், முழு அன்பில் மட்டுமே வரும், அன்பான பக்தி ஒன்றில்தான் மனம் அப்படி லயிக்கும்

ஆம், அன்பில் வரும் பக்தி முக்கியம் அது கொடுக்கும் ஆத்மார்த்தமான வழிபாடு மகா முக்கியம்
சரி இப்படி மனம் லயித்த பக்தி இருந்தால் என்ன நடக்கும், சிவனின் பலன் எப்படி இருக்கும் என்பதற்கு தொடர்ந்து வரும்

ஒருவன் தன் பொருட்டு எதெல்லாம் இழக்கின்றானோ அதை எல்லாம் இறைசக்தி பன்மடங்கு கொடுத்து காக்கும்

இங்கே தவத்தில் இருந்த விசாரதருமரை எந்த பிரம்பால் எச்சதத்தன், அதே பிரம்பு மழுவாக மாறி அவன் கால்களையே வெட்டியது, மழு என்பது ருத்திர கோல‌ சிவன் கையில் இருக்கும் ஆயுதம் என்பது எல்லோரும் அறிந்தது

அதேதான், தன்மேல் பக்தி கொண்டவனை தனக்காக தவமிருப்பவனை சிவன் தன் குழந்தையாகவே பாதுகாக்கின்றார், அவனை தொட்டவனை தானே தண்டிக்கின்றார்

ருத்ரகோலத்தில் தண்டிக்கின்றார், ஆம் அந்த அளவு தன் குழந்தையாகவே அவனை கருதுகின்றார்

சிவன் பொருட்டு உறவினை இழந்த, குருவினை இழந்த அந்த விசாரதருமருக்கு தானே தந்தையாக இருந்து தன் பொருளில் எல்லாம் மகன்போல் முழு உரிமை கொடுத்து தன்னில் ஒருவனாகவே ஏற்றும் கொள்கின்றார்
இந்த பாக்கியம் யாருக்கு வாய்க்கும்? சிவன் அடியார்களுக்கு மட்டுமே வாய்க்கும்

எதை எல்லாம் சிவனுக்காய் இழப்பீர்களோ அதெல்லாம் நிச்சயம் பன்மடங்கு திரும்ப பெறுவீர்கள் அது நிச்சயம்.

சிவனிடம் சரணடையும் பொழுது உங்கள் பாவமெல்லாம் மன்னிக்கபடும், இதோ இந்த விசார சர்மருக்கு குருவினை கொன்ற பாவம், தந்தையினை கொன்ற பாவம், பிராமணனை கொன்ற பாவம் என எல்லாமும் தீர்ந்தது.

விசாரசருமர் அப்படி பாவமெல்லாம் தீர்ந்து பெரிதற்கரிய‌ சண்டேஸ்வரர் பதவியினையும் அடைந்தார், நிலைத்தார்.

சண்டிகேஸ்வரர் என்பது ஒரு பக்தனுக்கான‌ அடைமொழி அல்ல, சிவபெருமான் அளிக்கும் சண்டிகேசுவரர் பதவி யுகத்திற்கு யுகம் வேறு வேறு நபர்களுக்கு அளிக்கப்படுகிறது. சிவாகம புராணங்களில் ஒவ்வொரு யுகத்திற்கும் சண்டிகேசுவரர்கள் உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது

கிருத யுகத்துக்கு நான்கு முக சண்டிகேசுவரர், திரேதா யுகத்துக்கு மூன்று முக சண்டிகேசுவரர், துவாபர யுகத்துக்கு இரண்டு முக சண்டிகேசுவரர், கலியுகத்துகு ஒரு முக சண்டிகேசுவரர் என்கின்றது சிவாகமம்
இதனால் சிவாலயம் உள்ள இடமெல்லாம் சண்டீகேஸ்வரர் இருப்பார், அந்த பதவிதான் விசாரசருமருக்கு கொடுக்கபட்டது.

சிவனின் சொத்துக்களையும் இதர காரியங்களையும் காணிக்கை உட்பட எல்லா கணக்கையும் காக்கும் தெய்வமாக சண்டீஸ்வரர் அடையாளபடுத்தபடுவார்

சிவாலயம் செல்லும் பொழுது சிவனுக்கு கொடுக்கபடும் எல்லாம் அவர் பார்வையில்தான் கொடுக்கபடும் சமர்பிக்கபடும் என்பதை உணர தவறாதீர்கள், அவர் சந்நதிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்

சரி இந்து ஆகமம் ஏன் அந்த தெய்வத்துக்கு தனி சன்னதி கொடுக்க வேண்டும்? கண்படா தெய்வமாக அதை யமன் போல் சித்திர குப்தன் போல் வைத்திருந்தால் என்ன?

அங்குதான் இருக்கின்றது சண்டேஸ்வரர் பற்றிய சிந்தனை

சிவாலயம் செல்லும் பக்தர்கள் லிங்கத்தில் உருகும் பொழுது சண்டேஸ்வரரையும் சிந்திக்க வேண்டும், சண்டேஸ்வரராக தங்களையும் நினைத்தல் வேண்டும்

பக்தியுள்ள மனம் அப்படி தானே உணரும்

அப்படி உணரும் பட்சத்தில் சிவாலய சொத்துக்களையும் ஆலயத்தையும் மிக கவனமாக பார்த்து கொள்வார்கள், காணிக்கை முதல் இதர வஸ்துக்கள் வரை கவனமாக முறையாக இருக்கும், சிவனி சொத்துக்கள் ஒரு குண்டுமணி கூட குறையாமல் பாதுகாக்கபடும்

ஆனால் அப்படி பக்திகள் இல்லாததாலே ஆலயங்கள் பாழ்பட்டு ஆலய சொத்துக்களெலாம் கொள்ளை போயின பல்லாயிரம் ஏக்கர் நிலம் உட்பட‌

நெருப்பு நிச்சயம் சக்தி வாய்ந்தது ஆனால் நீரில் எரியாது, அப்படி இறைசக்தி என்பது மிக பெரிது ஆனால் பக்தி இல்லா இடத்துக்கு அது தன் சக்தியினை காட்டாது

பக்தி பெருகுதல் வேண்டும், ஒரே ஒருவனுக்கு வரும் உன்னத பக்தி கூட பெரும் மாற்றத்தை கொண்டுவரும்
இதனால் ஆலயம் செல்லும்பொழுது சண்டிகேஸ்வரை ஒரு கணம் மனதில் நிறுத்த தவறாதீர்கள், மனதை அவரை நினைத்து நெய்யாக்குங்கள், அதில் இறை நெருப்பு ஜோதியாக எரிய தொடங்கும்

எந்த நாயனாருக்கும் இல்லாமல் அவருக்கு சண்டிகேஸ்வரர் பட்டம் ஏன் வந்தது என்றால் இதுதான் அதில் இருக்கும் தத்துவம்

ஆம், சிவன் கோவிலை காக்கும் ரகசியம் சண்டிகேஸ்வரரின் பக்தியில்தான் இருக்கின்றது. அவர் எப்படி சிவனுக்குரிய அபிஷேக பாலை தன் தந்தை எனும் பாராமல் வீழ்த்தி காத்தாரோ அப்படி சிவனுக்குரிய பொருட்களில் சமரசமே செய்ய கூடாது எனும் தத்துவத்தை ஆலயத்திலே வைத்தார்கள்

ஆலய விவகாரத்தில் உறவுகள் இல்லை, பெற்றோர் இல்லை, நண்பர் இல்லை எனும் மிக கடுமையான நிலைப்பாட்டை அங்கு வைத்து சிவனும் அவன் ஆலயமுமே முதன்மையானது என்பதை சொல்லிவைத்தார்கள்
ஆலய விவகாரங்களில் உற்றார் உறவினர் பெரியோர் சிறியோர் என்பதே இருக்க கூடாது என்பதே சண்டீஸ்வரர் சந்நதி சொல்லும் மிகபெரும் தத்துவம்

இன்னும் சிந்திக்க சிந்திக்க ஏராளம் வரும், ஒரு கோவிலை எப்படி சிவன்போல் பக்தி மிக பாதுகாக்க வேண்டும் எனும் சிந்தனைகளெல்லாம் பெருகி பெருகி வரும்

அதனாலே சிவனுக்கு அருகில் சிவன் உத்தரவுபடியே சண்டீஸ்வரர் அமரவைக்கபட்டார்

சிவனுக்கும் சண்டேஸ்வரருக்கும் இடையில் யாரும் செல்ல கூடாது எனும் கட்டுபாட்டை ஏன் வைத்தார்கள், அந்த அளவு சிவனோடு பக்தன் கலக்க வேண்டும் என தத்துவமாக சொல்லி வைத்தார்கள்

அடியார் வாழ்ந்த திருசேய் நல்லூர் இன்றும் சேங்கணூர் என அழைக்கபட்டு மணியாற்றின் கரையில் கும்பகோணம் அருகில் உண்டு

நம்புகின்றீர்களோ இல்லையோ இன்றும் தமிழக அரசியல்வாதிகள் அதிகாரம் பெற அங்கு ரகசிய பூஜையெல்லாம் செய்வார்கள்

சேங்கணூர் ஆலயத்தில சண்டிகேஸ்வரருக்கு தனி சந்நதி உண்டு, முன்பே சொன்னபடி அது முருகனுக்கு அன்னை காட்சியளித்த இடம் என்பதால் அங்கு சத்தியகிரீஸ்வரர் , சகிதேவியம்மை ஆகியோருகான ஆலயமாக அர்பணிக்கபட்டிருக்கிறது

சண்டேஸ்வரர் லிங்கம் கட்டி பாலாபிஷேகம் செய்த அந்த இடம் கோவில் கட்டபட்டு ஆலமாயிற்று, அது சேங்கணூர் அருகிருக்கும் திருவாய்பாடி எனும் ஊரில் உண்டு

அதாவது அந்த இடத்தில் கோவில் வந்து அதை சுற்றி ஆயர்பாடி எனும் ஊரும் வந்தது, அது திரு ஆயர்பாடி என்றானது, பின்பு திரிந்து திருவாய்பாடி என மாறிவிட்டது

அதன் பண்டைய பெயர் ஆயர்பாடியே

அந்த திருவாய்ப்பாடி ஆலயத்திலும் சண்டிகேஸ்வரருக்கு தனி சன்னிதி உண்டு , அவர் ஆத்தி மரத்தின் கீழ் இருந்து வழிபட்ட நினைவாக இன்றும் அங்கு தலவிருட்சம் ஆத்தி மரமே

தைமாதம் உத்திர நட்சத்திரமன்று அவருக்கு குருபூஜை நடக்கும் பொழுது மேற்சொன்ன இரு ஆலயங்களிலும் அவருக்கு சிறப்பு வழிபாடும், அவர் நடத்தியபடியே லிங்கத்துக்கு பால் அபிஷேகமும் நிரம்ப செய்யபடும்
வாய்ப்பு கிடைத்தால் அந்த திருசேய்நல்லூர் மற்றும் திருவாய்ப்பாடி ஆலயங்களுக்கு செல்ல தவறாதீர்கள், அங்கு சென்று பாலாபிஷேகம் செய்ய தவறாதீர்கள்

அப்படி செய்தால் உங்கள் இல்லத்திலும செல்வமும் வளமும் அமைதியும் பால்போல் பொங்கும், இது சத்தியம்
அப்படியே உங்கள் ஆயுளும் நீளும் அதுவும் உறுதி

இரண்டுமே வரமருளும் ஆலயம், ஒன்று முருகனே வழிபட்ட இடமாதலால் அதிகாரமும் பலமும் திருசேய்நல்லூரில் கிடைக்கும்

திருவாய்ப்பாடி ஆலயம் தோஷம் நீக்கும் தலம், பிரம்மகத்தி தோஷம் முதல் பிதுர் தோஷம், குரு தோஷமெல்லாம் அங்கு கழியும்

ஒவ்வொரு நாயன்மார் வாழ்ந்த இடங்களும் அவர்களுக்காக மட்டும் அருள்புரிந்த தலம் அல்ல, அவர்கள் பின்னால் அந்த இடத்தில் பல்லாயிரகணக்கான மக்கள் வளம் பெற இறை செய்திருக்கும் ஏற்பாடு அது
அதனால் சண்டேஸ்வரர் மன்னிப்பு பெற்றது போல் உங்கள் பாவமும் அழியும்

சண்டிகேஸ்வரர் வாழ்வில் அன்பே பிரதானம் , அது பசுக்கள் மேலும் இருந்தது

பசுக்கள் நிச்சயம் சிவ வழிபாட்டுக்கும் இந்துமத வாழ்வ்க்கும் அவசியமானது, பசு என ஒன்று இல்லாவிடில் சைவர்களின் ஆச்சார பூஜைமுறையே நடக்காது, என்றும் எக்காலமும் பசுக்கள் நமக்கு மகா அவசியம் வழிபாட்டுக்கு அவசியம் என்பதால் அவற்றை பேணுங்கள்

தனியாக பசுக்களை ஆதரிக்க முடியாதவர்கள் சில குடும்பமாக சேர்ந்து பராமரிக்கலாம், அது சிவாலயங்களுக்கு மிக மிக உன்னதமான தொண்டாக அமையும், சிவ பூஜைக்குரிய பொருளை கொடுப்பதும் சிவதொண்டே

பசுபராமரிப்பு அதில் மகா முக்கிய இடம் பெறுகின்றது, அதை செய்யுங்கள்

சிவாலயம் செல்லும் பொழுதெல்லாம் சண்டிகேஸ்வரரின் அளப்பரிய பக்தியினையும் சிவன் வைத்த சோதனையில் அவர் வென்று சிவனிடமே மிகபெரும் வரம் வாங்கியதையும் நினைவில் வையுங்கள்
மிகபெரும் பலம் உங்கள் மனதில் வந்தடையும் அதில் ஆயிரமாயிரம் அற்புதங்களை செய்வீர்கள்

சிவதரிசனம் முடிந்து வரும்பொழுது சண்டிகேஸ்வரரிடம் கைதட்டி வணங்கும் முறை உண்டு, அவர் தியானத்தில் இருப்பார் எனவும் அவரை எழுப்பி கைதட்ட வேண்டும் எனும் தவறான போதனை இங்கு உண்டு
அது இன்றும் சிலரால் பின்பற்றபடுகின்றது, சிலர் இன்னும் உச்சகொடுமையாக சொடக்கு போட்டெல்லாம் அங்கு அழிச்சாட்டியம் செய்கின்றார்கள் இது கண்டிக்கதக்கது

உண்மையில் சண்டிகேஸ்வரர் முன் கைதட்ட வேண்டும் என்பது எதற்காக என்றால் ஆலயத்துக்கு வந்து சிவன் அருளை தவிர நான் எதையும் எடுத்து போகவில்லை என்பதை வெறுங்கையாக காட்ட செய்யபட்ட ஏற்பாடு
இன்னொரு வகையில் சிவன் அருளே கடைசிவரை கூட வரும் சேர்த்து வைக்கும் பொருளெல்லாம் வராது எனும் ஞானம் பெற செய்யபட்ட ஏற்பாடு

அதைத்தான் சிந்தித்து அங்கு கைகளை விரலால் அமைதியாக தட்டி காட்ட வேண்டுமே தவிர பெரும் கரவொலியோ சொடக்கு போடுதலோ செய்தல் கூடாது

இதுவரை செய்திருந்தால் இனி மாற்றிகொள்ளுங்கள்

சிலர் சண்டிகேஸ்வரர் சன்னதியில் நூலை எறிவார்கள் அதுவும் சரியானதன்று, நிறுத்தபடல் வேண்டும்
சண்டிகேஸ்வரர் சன்னதியில் முன்பு ஓலைசுவடி நூலை வைத்து எடுப்பார்கள், அது ஆசீர்வாதமானது பின்பு மரபை தொலைத்துவிட்டு வெறும் நூலை வீசும் அளவு எல்லாம் மாறிபோயிற்று

இன்னொரு விஷயமும் உண்டு, அது சிவன் கழுத்தில் இருக்கும் மாலையினை கேட்டு வாங்குவது, அது தவறானது, அர்ச்சகர்கள் அப்படி எடுத்து கொடுத்தால் அதுவும் தவறானது

ஆம் சிவன் கழுத்து மாலை சண்டீஸ்வரர் சன்னதி சென்ற பின்பே உங்கள் கைக்கு வரவேண்டும், அப்படி நீங்கள் கொடுக்கும் பொருளும் அவர் சன்னதி சென்ற பின்பே சிவனுக்கு வரவேண்டும், சண்டீஸ்வரர் வழியாகவே வேண்டுதல்களும் சிவனுக்கு செல்ல வேண்டும், அருளும் அவர் வழியாக வரவேண்டும்

சண்டேஸ்வரர் என்பது வெறும் கணக்கு பிள்ளை வேலை அல்ல, யார் வரத்துக்கு உரியவன் , யார் தகுதி உள்ளவன் என பார்த்து சிவனிடம் சொல்லும் வேலை. முன்பு யமதர்ம ராஜன் எனும் மிக நியாயமான தெய்வம் அந்த வேலையில் இருந்தது என்றால் அதன் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும்

இதனால் சண்டிகேஸ்வரரை தொழாமல் சிவாலய வழிபாடு முழுமை அடையாது

இதுதான் சிவாலய வழிபாட்டு விதி, இதை பின்பற்றி பழகுங்கள்

சிவனை தொழுங்கள் அருள் கிடைக்கும், சுற்றி வரும்பொழுது சண்டிகேஸ்வரரை வணங்குங்கள் ஞானமும் கிடைக்கும்

சண்டிகேஸ்வரர் சந்நதியோடு கருவரையினை இணைத்து பாருங்கள் “ஓ” எனும் ஓங்கார வடிவமும் பார்வைக்கு கிடைக்கும்

சுருக்கமாக சண்டேஸ்வர நாயனார் வாழ்வு சொல்லும் அதி உன்னத தத்துவத்தோடு முடிக்கலாம், யாகங்களும் இதர மந்திரங்களும் வழிபாடு அல்ல, மனமுருகி செய்யபடும் வழிபாடே இறைவனுக்கு உகந்தது

ஆம் சிவனை தேடாமல் தட்சன் செய்த யாகம் ஒழிந்தது, சிவனை தேடி மண்ணில் இட்ட பால் விசாரசருமருக்கு அருள் வழங்கிற்று.

ஆலயம் தேடித்தான் இறைவனை அடைய வேண்டும் என்பதல்ல, வாய்ப்பு கிடைக்கா பட்சத்தில் சூழல் எதிராக இருந்தால் இருக்குமிடத்திலே இறைவனை அழையுங்கள் ஓடிவருவார்

சிவன் தன் பக்தர்களை கண்காணித்து கொண்டே இருக்கின்றார், வீணாய் போகும் பாலை கூட இவ்வளவு கண்ணும் கருத்துமாக தனக்கு தரும் அந்த சீடன் தன் பொருட்களளை மிக கண்ணும் கருத்துமாக பார்ப்பான் என்றுதான் அந்த பெரும் பதவியினை கொடுத்தார்

ஆம் சிறிய விஷயங்களிலும் கவனமாய் இருங்கள், ஆன்மீக வாழ்வின் ஒவ்வொரு செயலும் கவனமாக செய்யவேண்டியது அதை அவ்வழியில் முழு பக்தியுடன் செய்யுங்கள் பெரும் இடம் அடைவீர்கள்

தன் பக்தர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் ஒவ்வொரு நொடியும் சிவன் கவனித்து கொண்டே இருக்கின்றார், அதே நேரம் எப்பொழுது வரவேண்டுமோ அப்பொழுது மிக சரியாக வந்து தன் பக்தர்களை காக்கவும் அவர் தவறுவதில்லை

இதனால் செய்யும் சிவதொண்டினை உற்சாகமாக செய்யுங்கள், உரிய நேரத்தில் வர வேண்டிய நேரத்தில் இறைசக்தி ஓடிவரும் அல்லது அதுவரை உங்கள் அருகிருக்கும் சக்தி அப்பொழுது தன்னை வெளிகாட்டும்

அதற்கு ஆகமவிதியும் இதர கட்டுபாடுகளும் விதிகளும் தேவையில்லை, எல்லாம் மிகுந்த ஆலயத்தில் வந்து வழிபடுவதை காட்டிலும் நடுகாட்டில் இருந்து உளமார தேடினாலும் இறைவன் முன் வந்து நின்று அணைத்து கொள்வார்

ஆகமம் , விதி, மந்திரம், யாகம் என எல்லாவற்றையும் தாண்டியது உளமார்ந்த பக்தி, தெய்வம் அதற்குத்தான் இறங்கிவந்து தன்னோடு சேர்த்து கொள்ளும் என்பதே

அதை உணருங்கள், அப்படியே சண்டேஸ்ரரை தியானித்து அவரில் ஒருவராக மாறுங்கள் உங்கள் பக்தியும் மேம்படும் சிவன் சொத்தான ஆலயமும் செழிக்கும், சைவ தர்மம் தளைத்தோங்கும்

சண்டேஸ்வரர் கோவிலில் இருப்பதும் அங்கு கையினை வீசிகாட்டி வெறுங்கையினை உறுதிபடுத்திவிட்டு திரும்ப சொல்வதும் சிவனருளை தவிர ஆலய சொத்து எதையும் எடுத்து செல்லவில்லை என்பதை காட்டும் என்பது சிவாலய தத்துவம்

ஆனால் அதன் உள்கடந்த தந்துவம் ஒன்று உண்டு அது என்னவென்றால் வெறும் கையோடு வரும் மனிதன் ஒன்றுமில்லாமலே இவ்வுலகை கடக்கவும் போகின்றான், அவன் கொண்டு செல்லபோவது ஒன்றுமில்லை
சிவனருளை தவிர ஒருமனிதன் வாழ்வின் முடிவில் எதை கொண்டு சென்றுவிட முடியும்?

அந்த சிவன் அருள் ஒன்றையே தேடி நாடி அவன் வாழ்வு அமைய வேண்டும், அப்படியே அவன் சண்டிகேஸ்வரரை போல் சிவனை அடைய வேண்டும் எனும் சூட்சும பாடம் அது

அதை ஆலயம் தோறும் அருளி கொண்டிருக்கின்றார் சண்டிகேஸ்வரர்.

நன்றி: பிரம்ம ரிஷியார் @ முகநூல் பக்கம்



psri இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக