புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
44 Posts - 43%
heezulia
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
43 Posts - 42%
prajai
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
4 Posts - 4%
Jenila
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
1 Post - 1%
kargan86
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
1 Post - 1%
jairam
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
8 Posts - 5%
prajai
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
6 Posts - 4%
Jenila
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
4 Posts - 3%
Rutu
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
1 Post - 1%
kargan86
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?


   
   

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4267
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2017 2:18 pm

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 18, 2017 2:31 pm

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? 103459460



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4267
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 18, 2017 2:57 pm

18 .12 .2017

கவிஞரும், இயக்குனரும்

கவிஞர் - கண்ணதாசன் ; இயக்குனர் - ஸ்ரீதர்

நெஞ்சில் ஓர் ஆலயம் 1962

தேசிய விருது பெற்ற படம். ஸ்ரீதர் இந்தப் படத்தை 22 நாள்ல எடுத்து வெற்றி கண்டவர். இந்தப் படத்தில ஒரு பாட்டு ஸீன். ஸ்ரீதர் கண்ணதாசன்ட்ட situationஐ detailed டா சொன்னார். புற்று நோயாளியான முத்துராமனுக்கு, அவருடைய மனைவியும், அவருக்கு treatment கொடுக்கும் டாக்டரும், முன்னாள் காதலர்கள்னு தெரிய வருது. அதிர்ச்சி. அவருடைய மரணத்துக்கு அப்புறம் அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கணும்னு ஆசைப்பட்றார். மனைவியையும், டாக்டரையும் கூப்பிட்டு, தன் விருப்பத்தை சொல்றார். இப்போ அவங்களுக்கு அதிர்ச்சி. இது தான் situation.

[அவங்க பேசிய வசனங்கள் : ]

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? BZqpVLciTl2TvOqMJEuy+Doctor'swish

கணவன் : சீதா, நீ இப்படி அழக்கூடாது. வாழ்க்கையை ரொம்ப லேசா நெனக்கணும். எது நேர்ந்தாலும் சரின்னு, தை......ரியமா இருக்கணும். இப்டி அழுதுட்டே இருந்தா, எத சாதிக்க முடியும்?

மனைவி : இல்லேங்க, [தயங்கி தயங்கி, கண்ணீரை தொடச்சுகிட்டே] நான் ......... அழல.

கணவன் : டாக்டர், நான் சில விஷயங்கள மனம்விட்டு பேசபோறேன். நீங்களும் இங்கேயே இருக்கணும்.

டாக்டர் : இருக்கேனே.

கணவன் மனைவியை பார்த்து : சீதா, நீ என்ன பரிபூர்ணமா நம்ப்ரே இல்லியா?

மனைவி : நீங்க இப்டி கேக்றது எனக்கு ரொம்ப வேதனயா இருக்குங்க. [விசும்புறா]

கணவன் : இல்ல சீதா. நான் ஒங்கிட்ட ஒரு வாக்குறுதி கேக்க போறேன். நீ உண்மயா என்ன நேசிக்கிறதா இருந்தா, என்ன எதுக்குனு கேக்காம, எனக்கு சத்தியம் செய்து தர்வியா ?

மனைவி முழிக்கிறா.

கணவன் : ஏன் சீதா தயங்குற ?

மனைவி அமைதியா நிக்கிறா.

கணவன் : இதுக்காகதான் கேட்டேன், ஏம்மேலே ஒனக்கு நம்பிக்கை இருக்கான்னு.

மனைவி : நீங்க எத கேட்டாலும் சத்தியம் செய்து தர தயா ...ரா இருக்கேன். சொல்லுங்க.

கணவன் அமைதியா தன வலது கைய நீட்றான். அவளும் தயங்கிகிட்டே தன் வலது கையை அவன் கை மேலே வைக்கிறாள். அவள் கையை பிடிச்சுக்கிட்டே டாக்டரை திரும்பி பார்க்கிறான்.

கணவன் : டாக்டர், இவ செய்து கொடுத்திருக்கிற சத்தியத்துக்கு, நீங்களும் சாட்சி. என்னுடைய மனப்பூர்வமான ஆசைய, நான் இப்போ வெளியிட போறேன். அத கேட்டு, நீங்க ரெண்டு பேரும் திடுக்கிடலாம். ஹ்ருதயம் உள்ள ஒரு மனிதன் செய்ய வேண்டிய கடமயத்தான், நான் செய்ய நெனக்கிறேன். சீதா, இன்னும் மூண் நாள்ல, எனக்கு ஆப்ரேஷன் நடக்க போகுது. ஆப்ரேஷன் தோல்வியடஞ்சா, நான் எறந்துட்டா

மனைவி அழுறா.

டாக்டர் : வேணு [அலர்றார்]

கணவன் : பதறாதீங்க டாக்டர். நான் சொல்ல நெனச்சத சொல்லி முடிச்சுர்றேன்.

மனைவி பக்கம் திரும்பி : சீதா, அப்டி நேர்ந்தா, நான் உயிருக்குயிரா நேசிக்கிற டாக்டர் முரளிய நீ மறுவிவாகம் செய்து கொள்ளணும்.

டாக்டர் : ஐயோ

ரெண்டு பேருக்கும் பயங்கரமான அதிர்ச்சி. திகைப்பு. டாக்டர் அழ, மனைவி கதர்றா.

டாக்டர் : ஐயோ, வேணு, நீங்க இப்படி பேசலாமா? எந்த மனிதனும் மனசால கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத எண்ணம் உங்களுக்கு ஏற்படலாமா வேணு?

கணவன் : ஏன் ஏற்படக்கூடாது டாக்டர். நல்லவங்க தங்கள் நெஞ்சில கைய வச்சு சொல்லட்டும், என் எண்ணம் தவறுன்னு. இளம் விதவ கண்ணீரும் கம்பலயுமா, ஆயுள் பூரா சங்கடப்படறதுதான் ந்யாயமா? அதுதான் மனித சமுதாயத்தின் நீதியும் சட்டமுமா? நான் சொன்னதும், செய்ய நினைப்பதும் பாவமா? ஆனா அந்த பாவத்த செய்றதுக்காக நான் வெக்கப்படல. பெருமபட்றேன்.

டாக்டர் : இந்த அதிர்ச்சிய என்னால தாங்க முடியல வேணு.

இப்படி சொல்லிட்டு டாக்டர் ரூமை விட்டு வெளியே போயிர்றார். கணவன் மனைவியை பார்க்கிறான். அவள் ஏங்கி ஏங்கி அழுதுட்டு அங்கிருந்து போயிர்றாள்.

ஸ்ரீதர், situationஐ சொன்னதுதான், கவிஞருக்கு சொல்லணுமா? "மடை திறந்து பாயும் நதியலை நான்" னு வரிகள் தானா வந்து கொட்டுச்சாம்.

"சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே"


திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? ET2lkr4ZSGWIZdl0QEnS+சொன்னதுநீதானா

இந்தப் பாட்ல, "தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா"
என்ற வரிகளை ஸ்ரீதர் பார்த்ததும், சிலிர்த்துட்டாராம். கண்ணீருடன் கவிஞர் கையை கண்ல ஒத்திக்கிட்டாராம்.

இந்தப் பாட்டுக்கு ஒரு சிறப்பு உண்டு. உங்களுக்கு தெரிஞ்சதுதான். நான் இப்பதான் படிச்சேன். இந்தப் பாட்டு 60 வேற வேற கோணங்களில் எடுக்கப்பட்டதாம்.

டைரக்டர் கேட்ட situationக்கு ஏத்தமாதிரி கவிஞர் பாட்டை கொடுத்தது பெருசில்ல. கவிஞர் ஸ்ரீதர்ட்ட இந்த காட்சியை பற்றி கேட்டாரே கேள்விகளை.


கண்ணதாசன் : கதை என்னவோ நல்லாத்தான் இருக்கு. ஆனா ஒருத்தன் உயிரோடு இருக்கும்போது, தன்னுடைய மரணத்துக்கு அப்புறம் இன்னொரு கல்யாணம் செய்யணும்ன்னு தன் மனைவிட்டயே சொல்வானா அல்லது யாரோ ஒரு ஆம்பளைட்ட, தான் இறந்து போன பின்னால தன் மனைவியை கட்டிக்கணும்ன்னு கேட்பானா? இது நம்ம பண்பாட்டிற்கு ஒத்து வருமா? ஜனங்கள் இதை ஒத்துக்கலேன்னா படம் ஓடாதே.

கவிஞர் ஒரு போடு போட்டுட்டாராம்.

இப்போ ஸ்ரீதருக்கு அதிர்ச்சி. பயந்துட்டார்.
"அடடா இந்த ஸீன் ப்ராபளமா இருக்கும்போலியே. படத்துக்கு ஆணிவேரே இந்த ஸீன்தானே. இந்த ஸீன் இல்லேன்னா மற்ற படங்க மாதிரி, இந்தப் படமும் சாதாரண படமா இருக்குமே. ஆனா கவிஞர் சொல்றதுல இருக்கிற உண்மையையும் மறுக்கிற மாதிரியும் இல்ல. என்ன செய்றது"ன்னு குழப்பத்ல இருந்தார், ஸ்ரீதர்.

ஸ்ரீதர் : சரி கவிஞரே, இப்ப என்ன செய்றது?

கவிஞர் : யோசி யோசி, நல்..............லா யோசி.

அவர்பாட்டுக்கு ஒரு குண்டை போட்டுட்டு, அவர்பாட்டுக்கு போயிட்டார். வித்தியாசமான இந்த ஸீனை ஸ்ரீதர் படத்திலிருந்து நீக்குற மாதிரி இல்ல. ஆனா கவிஞர் சொன்னதையும் யோசிக்கணும். அந்தக் குறையை போக்க, அதுக்கேத்த மாதிரி வேற ஏதாவது செய்யணும். தமிழ்நாட்டு பண்பாடு மாறாமலும் ஸீன் அமையணும்னு யோசிச்சி யோசிச்சு அவருக்கு தூக்கமே வரலியாம்.

அப்பாடா, எப்படியோ ஒரு யோசனை வந்துச்சு. புதுசா ஒரு ஸீன் எடுத்து, பழைய ஸீனோடு சேர்த்தார். கூட கொஞ்சம் வசனம். அம்புட்டுதான்.

இப்போ புதுசா சேர்த்த ஸீனுக்கு வருவோம். கணவன் சொன்னதை கேட்ட மனைவி, அழுதுட்டே ரூமைவிட்டு வெளியே வந்து. கட்டில்ல உக்காந்து அழுறா. கணவன் மெதுவா அவள் பக்கத்தில வந்து நிக்கிறான்.

கணவன் : சீதா [அவள் எழுந்து நிக்கிறாள்.]

மனைவி : [அழுதுட்டே] நான் உங்களுக்கு என்ன தவறு செய்தேன்? என் உயிரே நீங்கதான்னு, என் உள்ளத்தில வச்சு பூஜ செய்து வந்ததுக்கு தண்டனயா இது ? பண்பு கெட்டவள்னு பழிதானா எனக்கு ஏற்படுத்தறது ?

கணவன் : எப்டி சீதா ஏற்படும்? ஒரு இளம் பெண் விதவையானா, பெத்த தாய் தகப்பன் நெஞ்சு பதைக்கிறதில்லையா? கூடப் பிறந்த சகோதரன் மனசு வேதனபட்றதில்லையா? மகளுக்கு மறுமணம் செய்து வைக்கிறதுக்கு, தங்கைக்கு புனர்வாழ்வு தரணும்னு ஆசைப்படாத ஹ்ருதயம், எத்தன மனுஷனுக்கு இருக்க முடியும்? அந்த மாதிரி தங்க மேல அண்ணனுக்கிருக்கிற பாசம், மனைவி மேல கணவனுக்கு ஏன் இருக்ககூடாது ? தன்னோடு சேர்ந்து சுகதுக்கங்களை அனுபவிச்ச மனைவிக்கு மறுவாழ்வு அளிக்கணும்னு கணவன் ஆசப்பட்டா, அது எப்படி தவறாகும், பாவமாகும், பழியாகும்? சமுதாயத்துக்கு பயந்து, மத்தவங்க இத சொல்றதில்ல. நான் துணிஞ்சு சொன்னேன். அவ்வளவுதான்.

மனைவி : என் மனசாட்சிக்கு மாறுபட்ட கருத்து சொல்லி, என்ன சமாதானப்படுத்திற முடியும்னு நீங்க நெனக்கிறீங்களா?

கணவன் : நான் நெனச்சத சொன்னேன். விரும்புனத கேட்டேன். அத நிறைவேத்துறதும், நிறைவேத்தாம போறதும் ஓம்பொறுப்பு.

இப்படி சொல்லிட்டு கணவன் போறான். மனைவி அவள் அழுகையை continue பண்றாள்.


திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? 0LmT5ZS6SlGoWygA6VEr+நெஞ்சம்மறப்பதில்லை

கவிஞர் கேட்ட கேள்விகளுக்கு, வசனத்தாலேயே ஸ்ரீதர் பதில் சொல்லிட்டார். கவிஞர் கேட்ட கேள்விகள் மத்தவங்க சிலருக்கும் வந்துச்சாம். அவங்க நேரடியா கேட்கல. அவங்களுக்கும் சேர்த்துதான் இந்த பதில்.

படத்தை பார்த்த கவிஞர் சமாதானமாயிட்டாராம். அவர் மட்டும் ஸ்ரீதர்ட்ட அப்படிப்பட்ட கேள்விகளை கேட்காமல் இருந்திருந்தா, இந்த அளவுக்கு படம் வெற்றிகரமா ஓடியிருக்குமான்னு சந்தேகம்தான்.


நான் பார்த்த வரைக்கும் இங்க சினிமாவைப் பற்றிய புது தகவல்கள்தான் இருக்கு. பழைய சினிமா விஷயங்கள் வேற யாராவது எழுதிட்டு இருக்காங்களா? புது தகவல்கள் ஒரு கிளிக்லியே கெடக்குது. பழைய தகவல்கள் தேடினால்தான் கிடைக்குது. அதனால்தான் இதெல்லாம் எழுதுறேன். பழைய சினிமா யாருக்கும் பிடிக்கலியோ?


Baby Heerajan

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 18, 2017 3:42 pm

நெஞ்சில் ஓர் ஆலயம்

அருமை திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? 3838410834



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4267
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 18, 2017 3:54 pm

18 .12 .2017

நன்றி SK.

ரஜினி நடிச்ச எஜமான் படம் வெள்ளிவிழா கொண்டாடியது. AVM தயாரிப்பில் நடிக்கணும்னு ரஜினி விரும்பி நடிச்ச படமாம். இந்தப் படத்துக்குப் பின்னால சுவாரசியங்கள் இருக்கு. படிச்சு பாருங்க.

சினிமா உலக விருந்து ஒண்ணு நடந்துச்சாம். அதுல ரஜினி, வைரமுத்துவும் கலந்துக்கிட்டாங்களாம். அங்க வந்திருந்த தயாரிப்பாளர் ஒருவர் "இனிமே AVM தயாரிக்கிற படங்கள் ஓடாது" ன்னு சொன்னாராம். ஏன்னா எஜமான் படம் ஏவிஎம்மின் தயாரிப்புல. ரஜினி வேற அதுல நடிக்கிறாரா? அதனால அந்த தயாரிப்பாளர் இப்படி புலம்பியிருக்கார். இந்த புலம்பலை யா ............. ரும் கண்டுக்கலியாம். ஆனா ஏவிஎம்மை ஒருத்தர் மட்டமா பேசுறது வைரமுத்துவுக்கு பிடிக்கலியாம். ஏவிஎம் சரவணண்ட்ட ஃபோன்ல சொல்லி வருத்தப்பட்டிருக்கார்.

SP முத்துராமன், ஏவிஎம், இவங்க படங்கள்ல ரஜினி நடிக்க மாட்டார்னு ஏதோ ஒரு தகவல் ஏவிஎம் சரவணனுக்கு வந்திருக்கு. இந்த தகவலை சொன்ன அந்த புலம்பல் தயாரிப்பாளரின் மூக்கை உடைக்கணும்னு ரஜினியும், சரவணனும் நெனச்சாங்களாம்.

இந்த சமயத்தில SP முத்துராமன் &கோ, தம் படத்தில நடிக்கணும்னு ரஜினிட்ட கேட்டிருக்குது. அவர் சம்மதிச்சது நட்டுமில்லாம, இந்த படத்தை ஏவிஎம் தயாரிக்கணும்னு ரஜினி சொல்லியிருக்கார். SPM ரஜினியின் இந்த ஆசையை சரவணண்ட்ட தெரிவிச்சிருக்கார். சரீன்னுட்டு எஜமான் படம் உருவாச்சு. ரிலீசும் ஆயிருச்சு. ஆனா சில படங்கள் மாதிரி இந்தப் படம் ஆரம்பத்துல ஓடல.

ரஜினியின் ரசிகை திலகவதின்னு ஒருத்தராம். எஜமான் படம் சரியா ஓடலேன்னு கவலை அவருக்கு. அவர் செஞ்சதுதான் ஒரு ஹைலைட். "வானவராயன் மாதிரி மாப்பிள்ள கெடச்சா நான் கண்ணாலம் கட்டிக்குவேன்"னு ஒருலெட்டர் எழுதினாராம். இந்த லெட்டரை எல்லாருக்கும் தெரியுற மாதிரி செய்யணும்னு ஏவிஎம் & கோ நெனச்சுதாம். அதுக்காக அந்த திலகவதியை போய் பார்த்தாங்களாம். "இதுல என் பேர் வந்தா எங்க அப்பா கோவிச்சுப்பார்"னு அவர் சொல்லியிருக்கார். அப்பா பர்மிஷனையும் எப்படியோ வாங்கிட்டாங்க. அதுக்கப்புறமா திலகவதியின் கடிதம் விளம்பரமாச்சு. எஜமான் படமும் கன்னாபின்னான்னு ஓட ஆரம்பிச்சுது.

Baby  Heerajan


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 18, 2017 4:02 pm

அந்த திலகவாதிக்கு மாப்பிள்ளை கிடைச்சாரா



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4267
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 18, 2017 4:41 pm

18 .12 .2017

திலகவதிக்கு மாப்பிள்ளைதானே. எஜமான் படம் வந்து இருபத்து நா ....................... லு வருஷமாயிருச்சு. அவ இப்போ பாட்டி ஆயிருப்பா.

"அது சரி, பாட்டி ஆனதெல்லாம் இருக்கட்டும், கல்யாணமாயிருச்சா?" ன்னு கேட்டு வைக்காதீங்க.சிரி சிரி

Baby Heerajan


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 18, 2017 4:59 pm

அதெல்லாம் கேட்கமாட்டேன் பட்டி ஆயிருப்பானு சொன்னீங்களே பேரக்குழந்தையோட பெயர் சொல்லி இருக்கலாமே



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4267
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 18, 2017 5:12 pm

18 .12 .2017

பேரப்புள்ள  பேர்தானே,  

பேரப்புள்ள பேரு ...................... பேரப்புள்ள பேரு ......................

ஆங் ........... அது பொம்பளையா, ஆம்பளையான்னு தெரீமா, தெரீமா? தெரீமா .................. ?

Baby Heerajan


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4267
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Dec 27, 2017 4:18 pm

27.12.2017 

ராஜா தேசிங்கு 

நடிகர் திலகத்துக்கு ஈ ................. க்குவலா வசனத்தை பேசுறவர் ஒருத்தர் இருக்கார்னா அவர் SSR. MGRரின் க்ளோ ..................... ஸ் fரெண்ட். தயாரிப்பாளர் லேனா செட்டியார் ‘தேசிங்கு ராஜா’ன்னு ஒரு படம் எடுக்கணும்னு முடிவு செஞ்சாராம். ஹீரோயின், ஹீரோவா பத்மினியும், MGRரும்னு தீர்மானிச்சாங்களாம். MGRரின் fரெண்டா நடிக்கிறதுக்கு NTRரையும், அவருக்கு ஜோடியா பானுமதியையும் லேனா செலெக்ட் செஞ்சாராம்.

கவியரசர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதினாராம். NSK அந்த வசனங்களை வாசிச்சு பார்த்திருக்கார். கெக்கேபிக்கேன்னு சிரிச்சாராம். எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்களாம். இவர் சிரிக்கிற மாதிரி கவிஞர் என்ன வசனம் எழுதியிருப்பார்னு யோசிச்சாங்களாம். கவிஞர் எழுதினது ராஜா கதைக்கு வசனம். இந்த வசனத்தை NTR பேசினா கேவலமா இருக்கும்னு NSK சொல்லியிருக்கார். எல்லாருக்கும் அது சரியா பட்டுச்சாம். தவிர NTRக்கு பதிலா SSRஐ நடிக்க வச்சா, வசனங்கள் பேசுற விதம் நல்லா இருக்கும்னும் சொன்னாராம். அவங்களும் SSRகிட்ட போய், MGR fரெண்டாவும், படைத்தளபதியாயும் நடிக்கிறீங்களான்னு கேட்டாங்களாம். கரும்பு திங்க கூலியா? உடனே சரீன்னுட்டாராம், SSR.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த பானுமதி, அவருக்கு ஜோடி SSRனு தெரிஞ்சு, கன்னபின்னான்னு கத்தினாராம், பானுமதி. ஆக்சுவலா பானுமதி பயங் ................ கர கோவக்காரராம். SSR அவருக்கு ஜோடியா நடிக்கிறது பிடிக்கலியாம். ஏன்னா கலைஞர் கருணாநிதி தயாரிச்சு, சிவாஜி, பானுமதி ஜோடியா நடிச்ச ரங்கூன் ராதா படத்தில, SSR பானுமதியின் மகனா நடிச்சாராம். பானுமதியின் கோவத்தைப் பார்த்த SSR தயாரிப்பாளர்கிட்ட, பானுமதி MGR கூட நடிக்கட்டும்னு சொல்லிட்டார். தயாரிப்பாளர் இந்த சூழ்நிலையை NSKட்ட சொன்னாராம். அவர் ஸ்டூடியோவுக்கு போயி, எல்லார்ட்டயும் பேசி சரி செஞ்சாராம். ஆனா இதுல பிரச்ன என்னான்னா, பொதுவா MGR பானுமதிகூட நடிக்க விரும்பமாட்டாராம். ஆனா ராஜா தேசிங்கு படத்தில பானுமதி கூட நடிக்க வேண்டிய கட்டாயம். அதுக்கப்புறம் ஷூட்டிங் ஆரம்பமாச்சாம். பானுமதி – MGR, பத்மினி – SSR ஜோடிகளா நடிச்சாங்க.


Heezulia


Sponsored content

PostSponsored content



Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக