புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
18 Posts - 62%
heezulia
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
60 Posts - 63%
heezulia
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 09, 2017 12:00 pm

கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)

நெல்லியான் அவனுடைய பெயர்; நெல்லியானும் நானும்தான் ஒன்றாகத் திரிவோம்; ‘இரட்டையர்கள்’என்று எங்களைச் சொல்வார்கள்!

நான் ஒன்றாம் வகுப்பில் சேரப்போகும்போது அவனும் கூடவந்ததால் அவனையும் எங்கப்பாவிடம் சொல்லி ஒன்றாம் கிளாசில் சேரச் செய்தேன்! “எப்பா! எங்களுக்கு ஒண்ணும் தெரியாதுப்பா; நீ எப்படிப் படிக்கிறாயோ அதே படிப்பில் நெல்லியானையும் சேர்த்து விட்டுடுப்பா” என்ற அவனின் அப்பா சொன்னதை நான் நெடு நாட்களுக்கு மறக்காமல் அப்படியே செய்துவந்தேன்!

பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரிப் படிப்பிலும் இரண்டு பேரும் ஒரே வகுப்பில் சேர்ந்தோம்! அதன்பிறகு , நான் முனைவர் பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தபோது நெல்லியானையும் கூட்டிக்கொண்டு வந்தேன்! எனது பேராசிரியர் மூலமாக ஓர் அச்சகத்தில் பொறுப்பாளர் வேலையும் கிடைக்கச் செய்தேன்; இருவரும் அப்போதும் ஒரே அறையில்தான் தங்கினோம்!

ஒருநாள் இருவரும் எங்கள் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது , என் அம்மா , “ஏண்டா! நீ உனது உதவித் தொகையை எனக்கு அனுப்புகிறாய் சரி! அதை நான் கண்டபடி செலவு செய்யறதா எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருக்கிறாயாமே? … இந்தாப்பா ! ..நீ இனி ஒத்தப் பைசா எனக்கு அனுப்பவேண்டாம்! தெரிஞ்சதா?” – என்றைக்குமில்லாமல் சத்தம் போட்டார்கள்!

எனக்குள் ஒரு மின்னல்! - நான் வீட்டுக்குப் பணம் அனுப்புவது பற்றி நெல்லியானிடம் மட்டும்தான் கூறியுள்ளேன்! வேறு யாருக்கும் தெரியாது! .. அப்படியானால் அவன்தான் ஏதோ கூடுதல் குறைச்சலாக அம்மாவிடம் போட்டுக்கொடுத்துள்ளான் !

நேரே நெல்லியானைப்போய்ப் பிடித்துவந்தேன் !

அம்மா பக்கத்தில் நிற்கவைத்தேன்! “டேய்! அம்மா கிட்ட என்னடா சொன்னே? . பணத்தை அம்மா கண்டபடி செலவு பண்றதா நான் ஒங்கிட்டே சொன்னேனாடா?” என்று இரைந்தேன்!

அவன் அப்படியே திருடன் மாதிரி திருதிருன்னு முழித்தான் !

“இல்லியே ! நீ எங்கே அப்படிச் சொன்னாய்?” – மென்று முழுங்கினான் !

“சரிப்பா! இனி உன் சமாச்சாரமே எனக்கு வேண்டாம் ! என் முகத்திலே முழிக்காதே போ!” – என்று துரத்திவிட்டேன் !

அதற்கு முன் நடந்த சில சம்பவங்கள் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தன!

என் அக்காள் ஒருநாள் “ஏண்டா! எனக்கு அத்தான் வீட்டில் செய்த தாலியில் அரக்கு எவ்வளவு இருக்குன்னு ஒன்னக் கேட்டாங்களா? நீ ஏன் அதப்பத்தி மத்தவங்க கிட்ட சொல்லிக்கொண்டு இருக்கிறாய்?” என்று சண்டைக்கு வந்தார்கள் !
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போது புரிந்தது !

இன்னொருநாள், “டேய் ! உங்க சித்தப்பா சொத்து விஷயத்தில் ஒன்ன ஏமாத்திட்டதா , சொல்லிக்கொண்டிருக்கிறாயாமே?” என்று அம்மா என்னைச் சத்தம் போட்டார்கள்!
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போ தெரிந்தது !

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக இருந்து எத்தனையோ நன்மைகளைச் செய்து அவனை மனிதனாக்கிய எனக்கு ஒரு சமுதாய உண்மையைச் சொல்லித் தந்துள்ளான் நெல்லியான் !

‘கெடுதலைக்காரர்கள்’ எனத் தனியாக நன்றிகெட்ட மனித இனமே நமிடையே ஒன்று உள்ளது !




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 09, 2017 11:31 pm

எதிர்மறையாக தாம் சொல்ல நினைப்பதை ,
மற்றவர் சொன்னதாக கூறி ,மகிழும் ஜென்மங்கள்,
இன்றளவும் நம் கூட இருக்கிறார்கள் ,என்பது நான் கண்கூடாக
கண்டதுண்டு.

சூப்பருங்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 10, 2017 6:31 am

வெளிப்பகை கண்ணுக்குத் தெரியும் ; ஆனால் உட்பகை கண்ணுக்குத் தெரியாது . எனவே வெளிப்பகையைவிட உட்பகை மிகவும் ஆபத்தானது ,

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு .

என்பது ஐயனின் வாக்கு .

நெல்லியான் போல உட்பகை என்றும்
....நீங்க நிழலாய் நம்முடன் இருந்து
தொல்லை தருவர் தினமும் ஒன்றாய் !
...தொல்லை எல்லை மீறும் முன்பாய்
புல்லைப் பிடுங்கி எறிதல் போல
...புல்லர் தொடர்பை அறவே நீக்கும்
வல்லமை ஒன்றே நம்மைக் காக்கும்
...வழியென அறிந்து அதனை செய்வோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 10, 2017 11:54 am

கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) 1571444738 கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 10, 2017 7:47 pm

ஐயா !

" கெடுதலைக்காரர்கள் " என்ற தங்களது சொற்பயன்பாடு புதுமையாக உள்ளது .

கெடுதல் செய்வோரை கெடுதலைக்காரர்கள் என்று அழைத்தால்
நன்மை செய்வோரை நன்மைக்காரர்கள் என்றும்
உண்மை பேசுவோரை உண்மைக்காரர்கள் என்றும் ,
பொய் பேசுவோரை பொய்மைக்காரர்கள் என்றும் அழைப்பது
சரியாகுமா ?


மற்றவர்களுக்குக் கெடுதல் செய்பவனை  " கேடன் "  என்ற சொல்லால் வள்ளுவர் அழைக்கின்றார் .

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின் .  

என்பது ஐயனின் வாக்கு .

" கெடுதலைக்காரர்கள் " என்ற சொற்பயன்பாடு நம் தமிழிலக்கியங்கள் எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 10, 2017 8:09 pm

அருமை ஜெகதீசன் அவர்களே!
முகவை மாவட்டத்தில் , ‘கெடுதலைக் காரன்’ என்று கூறும் வழக்கு உள்ளது!
இடையில் வந்த ‘ஐ’ , சாரியை (Euphonic extention)ஆகும் !
‘நன்மைக்காரர்’ , ‘உண்மைக்காரர்’ என்பவற்றில் இடையே உள்ள ‘ஐ’ , சாரியை அல்ல! விகுதியே !
மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக