புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Poll_c10பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Poll_m10பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram

56 Posts - 37%
சண்முகம்.ப

8 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
Poomagi

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Poll_c10பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Poll_m10பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Poll_c10 
195 Posts - 50%

139 Posts - 36%

17 Posts - 4%
prajai

9 Posts - 2%

8 Posts - 2%

7 Posts - 2%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு!

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:48 am

கடும் எதிர்ப்பு எதிரொலி: பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு!

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! PRuHAEiR8iNQj57gg88P+garments_2820302f
பெங்களூருவில் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்!

சந்தாதாரர்களின் கடும் எதிர்ப்பின் எதிரொலியாக, வருங்கால வைப்பு நிதியில் (பிஎப்) உள்ள தொகையை திரும்பப் பெறுதலில் புதிய விதிமுறைகள் ஜூலை 31 வரை அமல்படுத்தப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இப்போதைய விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனத்தின் பணியிலிருந்து விலகிய ஒரு ஊழியர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், தனது பிஎப் கணக்கில் உள்ள முழு தொகையையும் (100%) திரும்பப் பெற முடியும்.

இந்நிலையில், மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, 54 வயதை எட்டிய சந்தாதாரர்கள் வேலையிலிருந்து விலகினாலும் பிஎப் தொகையை உடனடியாக எடுக்க முடியாது. 58 வயதான பிறகே பிஎப் தொகையை எடுக்க முடியும்.

இதுபோல, வீடு கட்டுதல் அல்லது வாங்குதல், தனது அல்லது தனது குடும்ப உறுப்பினர்களின் முக்கிய மருத்துவ செலவுகள், குழந்தைகளின் கல்வி செலவு அல்லது திருமணம் ஆகியவற்றுக்காக பிஎப் தொகையை திரும்பப் பெறவும் இந்த புதிய அறிவிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்கள் சார்பில் நிறுவனங்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையை (3.67%) வெளியில் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கைக்கு தொழிற்சங்கங்களும் இதர அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஏப்ரல் 30 வரை இந்த அறிவிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. பின்னர் மே 31 வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, புதிய அறிவிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமூக இணையதளங்கள் மூலமும் இது தொடர்பாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

பெங்களூருவில் உள்ள ஒரு ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இந்தப் பிரச்சினை தீவிரமடைந்ததையடுத்து, புதிய அறிவிக்கை அமல்படுத்துவதை மேலும் 3 மாதங்களுக்கு (ஜூலை 31 வரை) ஒத்தி வைப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.

இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஎப் நிதியில் உள்ள தொகையை சந்தாதாரர்கள் திரும்பப் பெறுவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட புதிய அறிவிக்கை ஜூலை 31 வரை ஒத்தி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடப்படும். அது ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்” என கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிஎப் தொகையை திரும்ப எடுப்பது தொடர்பான அறிவிக்கைக்கு சந்தாதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

தி ஹிந்து

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:49 am

ரொம்ப கலாட்டாவாம் இன்று அங்கு, எங்காத்தில் இருந்து சர்ஜாபூர் போக முடியலை......ஹொசா ரோடு பூரா 5 பஸ் ஒரு போலிஸ் ஜீப் கொளுத்தி இருக்காங்க  சோகம்
.
.
.
மது, நீங்க EC ஆபீஸ் தானே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 20, 2016 9:09 am

தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி...
-

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 20, 2016 9:56 am

krishnaamma wrote:ரொம்ப கலாட்டாவாம் இன்று அங்கு, எங்காத்தில் இருந்து சர்ஜாபூர் போக முடியலை......ஹொசா ரோடு பூரா 5 பஸ் ஒரு போலிஸ் ஜீப் கொளுத்தி இருக்காங்க  சோகம்
.
.
.
மது, நீங்க EC ஆபீஸ் தானே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203747ஆமாம் அம்மா.... பக்கத்திலேயே தான்.. புன்னகை

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Mபி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Aபி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Dபி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Hபி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! U

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 9:59 am

ayyasamy ram wrote:தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி...
-
மேற்கோள் செய்த பதிவு: 1203764

ஆமாம் அண்ணா, ஆனால் கிருஷ்ணா நிறைய போடோஸ் வீடியோ அனுப்பி இருந்தான்..............பார்க்கவே பயமாய் இருந்தது சோகம் .....ரோட்டில் உட்கார்ந்து 'தர்ணா' பண்ணட்டும் எதுக்கு அத்தனை பஸ்களை எரிக்கணும்?..மேலே flyover இல் வண்டிகள் செல்ல முடிந்ததா என்று தெரியலை.அவ்வளவு உயரத்துக்கு நெருப்பு, புகை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 9:59 am

மதுமிதா wrote:
krishnaamma wrote:ரொம்ப கலாட்டாவாம் இன்று அங்கு, எங்காத்தில் இருந்து சர்ஜாபூர் போக முடியலை......ஹொசா ரோடு பூரா 5 பஸ் ஒரு போலிஸ் ஜீப் கொளுத்தி இருக்காங்க  சோகம்
.
.
.
மது, நீங்க EC ஆபீஸ் தானே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203747ஆமாம் அம்மா.... பக்கத்திலேயே தான்.. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203768

ம்ம்.. டேக் கேர் மது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 20, 2016 10:24 am

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! GR5fFJvQS3ijTn4XLfXB+IMG-20160419-WA0009

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! AmAKHr4eQzKtiCWSnIU1+IMG-20160419-WA0001

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! X9i4gsjNRLKJfpcdYYCb+IMG-20160419-WA0003

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! C6ikQFRWRImRE366aVZh+IMG-20160419-WA0007

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Mபி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Aபி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Dபி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Hபி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! U

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 10:34 am

ம்ம், எனக்குக் கிருஷ்ணா நிறைய அனுப்பினான்......இங்கே போட எனக்குத் தயக்கமாய் இருந்தது மது சோகம்.ஒரு வீடியோ கூட இருக்கு ! பயம் பயம் பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 10:43 am

புதன், ஏப்ரல் 20,2016, பெங்களூரு,

பெங்களூருவில், ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நேற்று நடத்திய போராட்டத்தின்போது ஹெப்பகோடி போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது. அவர்கள் நடத்திய தாக்குதலில் உதவி போலீஸ் கமிஷனர் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். மேலும், போராட்டக்காரர்கள் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 வாகனங்களுக்கு தீவைத்தனர்.

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! ZHF1TWkoSH208Bn9JYl5+201604200043421052_In-Bangalore-garment-workers2nd-day-of-strike_SECVPF

வாகனங்களுக்கு தீவைப்பு

வருங்கால வைப்பு நிதி தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள புதிய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 2–வது நாளாக ஆயத்த ஆடை தொழிலாளர்கள் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு ஹெப்பகோடி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் ஹெப்பகோடி போலீஸ் நிலையம் முன்பு, போலீசார் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர். இதனால், அந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீப்பிடித்து எரிந்த வாகனம் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தாலும், 20–க்கும் அதிகமான வாகனங்கள் எரிந்து நாசமாயின. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பறிமுதல் செய்து, அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த 100–க்கும் அதிகமான கியாஸ் சிலிண்டர்களுக்கு தீ பரவவில்லை. இதனால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

போலீஸ் நிலையம் சூறை

இதற்கிடையே, ஹெப்பகோடி போலீஸ் நிலையத்தின் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இந்த கல்வீச்சில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சந்தர்ப்பத்தில், திடீரென போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த ஒரு கும்பல் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு தீவைக்க முயன்றது. அவர்களின் இந்த அசம்பாவித செயலை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

இந்த வேளையில் போலீசார் மற்றும் அந்த கும்பலுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீசாரை தாக்கிய அந்த கும்பல் போலீஸ் நிலையத்தை சூறையாடியது. இந்த தாக்குதலில் உதவி போலீஸ் கமிஷனர் ஓபலேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரீஷ் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அங்கு 500–க்கும் அதிகமான போலீசார் மற்றும் நகர ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 10:45 am

பெங்களூரு,

ஆயத்த ஆடை தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம் வாகனங்களுக்கு தீ பெங்களூருவில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் வன்முறை வெடித்து வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கல்வீச்சும் நடைபெற்றது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர். துப்பாக்கி சூட்டில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். போராட்டம் காரணமாக கர்நாடகம்-தமிழகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! JhVzuIjRtyT21fnZLGej+201604200037234749_Garment-workers2nd-day-of-strike_SECVPF

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம்

வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கொண்டுவரப்பட்டு உள்ள மாற்றம் வருகிற 1-ந் தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் செய்யக்கூடாது, பழைய முறையை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் பெங்களூரு-ஓசூர் ரோட்டில் பொம்மனஹள்ளி ஜங்ஷனில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்போது சிலர் போலீஸ்காரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். கல்வீச்சு மற்றும் போலீஸ் தடியடியில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2-வது நாள் போராட்டம்

இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு-ஓசூர் ரோடு, பெங்களூரு-துமகூரு ரோடு உள்பட நகரில் ஆங்காங்கே ஆயத்த ஆடை தொழிலாளர்கள் சாலைமறியல் செய்தனர்.

இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரக்கூடாது எனவும், தடியடி நடத்திய போலீசாருக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். பெங்களூரு-ஓசூர் ரோடு, பெங்களூரு-துமகூரு ரோடு உள்பட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து சாலைகளிலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸ் தடியடி

இதனால் போராட்டக் காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினாலும் அவர்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பெங்களூரு சர்ஜாபுரா ரோட்டில் பெல்லந்தூர் கேட் அருகே சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீது கல்வீசியுள்ளனர். இதையடுத்து, போலீசார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

இதேபோல், ஹெப்பகோடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனியார் நிறுவனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதேபோல், பொம்மனஹள்ளி ஜங்ஷன் மற்றும் பன்னரக்கட்டா ரோடு ஆகிய பகுதிகளிலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த தடியடியால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பெண் தொழிலாளர்களும் தடியடிக்கு தப்பவில்லை.

...........................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக