புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவையாறு Poll_c10திருவையாறு Poll_m10திருவையாறு Poll_c10 
3 Posts - 60%
Manimegala
திருவையாறு Poll_c10திருவையாறு Poll_m10திருவையாறு Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
திருவையாறு Poll_c10திருவையாறு Poll_m10திருவையாறு Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவையாறு Poll_c10திருவையாறு Poll_m10திருவையாறு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
திருவையாறு Poll_c10திருவையாறு Poll_m10திருவையாறு Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
திருவையாறு Poll_c10திருவையாறு Poll_m10திருவையாறு Poll_c10 
11 Posts - 4%
prajai
திருவையாறு Poll_c10திருவையாறு Poll_m10திருவையாறு Poll_c10 
9 Posts - 4%
Jenila
திருவையாறு Poll_c10திருவையாறு Poll_m10திருவையாறு Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருவையாறு Poll_c10திருவையாறு Poll_m10திருவையாறு Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
திருவையாறு Poll_c10திருவையாறு Poll_m10திருவையாறு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருவையாறு Poll_c10திருவையாறு Poll_m10திருவையாறு Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருவையாறு Poll_c10திருவையாறு Poll_m10திருவையாறு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருவையாறு Poll_c10திருவையாறு Poll_m10திருவையாறு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவையாறு


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 26, 2015 11:38 am

திருவையாறு எனும் இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் நமக்கு இங்கு வானோங்கி நிற்கும் அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனாய ஐயாறப்பர் ஆலயம் எனப்படும் காவிரிக்கோட்டமும், இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்து மறைந்த தியாகராஜ சுவாமிகளின் கர்நாடக இசையின் பெருமையும், காவிரியாறு வளம் பரப்பி இருபுறமும் சோலையாக விளங்கும் இயற்கை அழகும்தான் நம் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட இந்த வரலாற்றுப் புகழ்மிக்கத் தலம் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தலங்களில் ஐம்பத்தோறாவது திருத்தலமாகும். சைவத் திருத்தலங்களை மூவர் பாடிய தேவாரங்களின் அடிப்படையில், காவிரியின் வடகரைத் தலங்கள், தென்கரைத்தலங்கள் என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். தேவாரத் தலங்கள் 274இல் காவிரியின் வடகரைத் தலங்கள் 63, தென்கரைத் தலங்கள் 127 ஆகும். இவை தவிர ஈழநாட்டுத் தலங்கள் 2, பாண்டிநாட்டுத் தலங்கள் 14, மலைநாட்டுச் சிவத்தலம் 1, கொங்குநாட்டுச் சிவத்தலங்கள் 7, நடுநாட்டுச் சிவத்தலங்கள் 22, தொண்டைநாட்டுத் தலங்கள் 32, துளுவநாட்டுத் தலம் 1, வடநாட்டுத் தலங்கள் 5 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தலம் பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க சிவத் தலங்களுள் ஒன்று, சிறப்புமிக்க பெருமைகளையுடையது. இக்கோயில் திருக்கயிலாயப் பரம்பரை திருத்தருமையாதீனத்துக்குச் சொந்தமான 27 ஆலயங்களில் சிறப்பானதொன்று. ஊரின் நடுநாயகமாக நான்கு பிரகாரங்களுடன், தேரோடும் முக்கிய வீதிகள் நான்கும் கொண்ட அமைப்புடன் சுமார் 50 ஏக்கர் பரப்புடையதாகும். கிழக்குப் பார்த்த முதல்நிலை கோபுரம், வடக்கு தவிர மற்ற மூன்று புறங்களிலும் கோபுரங்கள் உடையது. தஞ்சாவூர் நகரத்திலிருந்து வடக்கே சுமார் 12 கி.மீ. தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ளது இத்தலம். தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டுச் செல்பவர்கள் வழியில் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என்று பல ஆறுகளையும், சுற்றிலும் பசுமையான வயல் வெளிகளையும், சோலைகளையும் காணமுடியும். நீர்வளமும் நில வளமும் ஒருங்கே பெற்ற இந்தப் பகுதி பண்டைய சோழநாட்டில் சிறப்பாக விளங்கியிருக்கிறது. முன்பொருமுறை திருவானைக்கா ஆலய குடமுழுக்கை முடித்துக் கொண்டு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்குத் தாடகம் முதலியன செய்து போட்டபின் கையிலிருந்த பணம் முழுவதும் செலவழிந்துவிட்ட நிலையில், அப்போது காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த 6ஆம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (1816ஆம் ஆண்டு) பொருளதவி நாடி தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனை அணுகினாராம். (1798 முதல் 1832 வரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி) அதற்கு அந்த மன்னன் உதவ மறுத்துவிடவே, சுவாமிகள் தன் பரிவாரங்களுடன், திருவானைக்காவில் புறப்பட்டு காவிரியின் வடகரையோடு கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம். அச்சமயம் சுவாமிகள் திருவையாற்றைக் கடந்து செல்கையில் மன்னன் தன் படை வீரர்கள் சிலரை அழைத்து, குடந்தை செல்லும் காஞ்சி சுவாமிகளை தஞ்சைக்கு விஜயம் செய்யும்படி கேட்டுக்கொண்டும், அவர் மறுத்துவிடவே, அவரை அவர் பயணம் செய்த சிவிகையோடு சிறை பிடித்து தஞ்சைக்கு அழைத்து வரச் செய்தான். அப்படி அவர் தஞ்சைக்குள் நுழையும் சமயம் அவரை எதிர்கொண்டு பூர்ணகும்ப மரியாதையுடனும், மங்கள வாத்தியம், வேத கோஷங்களுக்கிடையே வரவேற்று மரியாதை செய்து, அவருக்குத் தேவையான பொருளுதவிகளையும் செய்ததாக வரலாற்றுச் செய்தியொன்று உண்டு. அந்த நிகழ்ச்சி நடைபெற்றதும் இந்தத் திருவையாற்றுக்கு அருகேதான். அந்நாளில் பூம்புகாரிலிருந்து கண்ணகியுடன் பிழைப்பு நாடி மதுரைக்குச் சென்ற கோவலன், காவிரியின் வடகரையோடுதான் திருவரங்கம் சென்று அங்கு காவிரி நதியைக் கடந்து உறையூர் வந்து அங்கிருந்து மதுரைக்குச் சென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அப்படி அவர்கள் காவிரியின் வடகரையோடு சென்ற வழித்தடத்தில்தான் திருவையாறு எனும் புனித நகர் அமைந்திருக்கிறது. அவர்கள் இந்தப் பாதையில் நடந்து செல்கையில் வழியெங்கும் வேதியர்கள் செய்யும் யாகங்களின் புகை மேக மண்டலங்களைப் போல எங்கும் பரவிக்கிடந்ததாக இளங்கோவடிகள் வர்ணிக்கிறார்.

நன்றி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 26, 2015 11:40 am

மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில் மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து" என்று அப்படி இறைவழிபாடும், புனித வேள்விகளும் மக்கள் நலன்களுக்காக நாள்தோறும் நடந்து வந்த இடம்தான் திருவையாறு. இப்புனித நகருக்கு வருபவர்கள் அனைவரும் உணரக்கூடிய ஓர் அபூர்வமான செய்தி, இங்கு பூமியில் கால்வைத்து நடக்கும்போதே இது ஓர் புண்ணிய பூமி, புனிதமான தலம் என்ற உள்ளுணர்வுதான். எப்படி திருவண்ணாமலை சித்த புருஷர்களையும், மஹான்களையும் தன்வசம் வரவழைத்துக் கொள்கிறதோ, அதுபோல எல்லா கலைகளிலும் வல்லவர்கள் திருவையாற்றுக்கு வருவதென்றால் மகிழ்ச்சியும், மன அமைதியும் கொள்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மாயூரம் என்கிற மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் நடைபெறும் கடைமுகம் சிறப்பானது. அதற்கு அடுத்தபடியாக திருவையாற்றில் அதே நாளில் நடைபெறும் கடைமுழுக்கும் மக்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சியாகும். இங்கு காவிரி நதியில் நீராடுவது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. தேவாரத் திருப்பதிகங்களில் திருவையாறு. இவ்வளவு புகழுக்கும் உரித்தான இந்த புனிதத் தலம் திருவையாறு எனப் பெயர் பெற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இத்தலத்தைப் பஞ்சநதம் என்று அழைப்பதோடு, இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனுக்கு பஞ்சநதீஸ்வரர் அல்லது ஐயாறப்பர் எனப் பெயர் விளங்குவதாலும் இங்கு பாயும் ஐந்து நதிகளையொட்டியே இந்தப் பெயர் வந்ததாக ஒரு கருத்து இருக்கிறது. ஆகவே இவ்வாறுகள் முறையே வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி, கொள்ளிடம் இவற்றையொட்டியே இந்தப் பெயர் வந்ததாகக் கருதலாம். இத்தலத்தின் பெயரே இங்கு கோயில் கொண்டுள்ள இறைவருக்கும் அமைந்திருப்பது சிறப்பு. இத்தலத்தின் தலபுராணப்படி சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கை, பாலாறு, நந்திவாய்நுரை எனப்படும் நந்திதீர்த்தம் ஆகிய தெய்வீக தீர்த்தங்கள் இங்கு கலப்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் செய்திகள் உண்டு. 'ஐயாறு' எனும் சொல்லுக்கு அகன்ற ஆற்றையுடைய ஊர் என்ற தெளிபொருளும் உண்டு. இதன்பொருட்டே நல்லாறும், பழையாறும், கோட்டாற் றொடு நலந்திகழும் நாலாறும், திருவையாறும், தெள்ளாறும் ... என்று தனது திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் கூறுகிறார். திருவையாற்றுக்கு பஞ்சநதம், பூலோக கைலாசம், ஜெப்பேசம், ஜீவன் முக்திபுரம் எனப் பல பெயர்கள் உண்டு என்று கூறுகிறார்கள். 'ஐ' என்றால் மேலான, உயர்வான என்றும் 'ஆறு' என்பதற்கு வழிகள், மார்க்கங்கள் என்றும் பொருள் உண்டு. இவற்றை மூலாதாரம், ஸ்வாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்கள் என்றும் சொல்லுகிறார்கள். இப்படிப் பலப்பல பெயர்க்காரணங்கள் கூறப்பட்டாலும், திருவையாறு எனும் பெயர் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவிட்டது. இத்திருத்தலத்தைக் குறித்துப் பாடப்பெற்று நமக்குக் கிடைக்ககூடிய நூல்கள் அனைத்துமே சைவ இலக்கியங்கள்தான். தேவாரம் பாடிய மூவர் காலம் முதல் இன்றுவரை இத்தலம் மிகச் சிறந்த சைவத் தலங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. திருப்புகழிலும் அருணகிரிநாத சுவாமிகள் இத்தலைத்தைப் போற்றிப் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் பெருமானும் 'திருவாசகம்' கீர்த்தித் திருவகவலில் "ஐயாறதனில் சைவனாகியும்" என்று இங்கு சிவபெருமான் தனக்கு பூசை செய்யும் ஆதிசைவர் காசிக்குச் சென்றிருந்தபோது அவர் உருவில் வந்து தனக்கே பூசித்த வரலாற்றைக் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் தேவாரம் இப்படிப்பட்ட புனிதமான நகருக்கு தேவாரம் பாடிய மூவரும் வந்து பாடியிருப்பது மிகமிகச் சிறப்புடையது. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருவையாற்றுத் தலத்தைப் போற்றி ஐந்து திருப்பதிகங்கள் பாடியுள்ளார். இப்பதிகங்கள் முதல் இரு சைவத்திருமுறைகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவர் திருவையாற்றின் இயற்கை எழிலையும், கலைச் சிறப்புக்களையும், ஐயாறப்பரின் அளப்பரிய கருணையையும் விரிவாக எடுத்தியம்புகிறார். ஆடற் கலையும் இசைக் கலையும் இத்தலத்தில் எங்ஙனம் செழித்து வளர்ந்தது என்பதை மிக அழகாக எடுத்துக் கூறுகிறார். காலை வேளைகளில் ஆலயத்தில் இன்னிசை முழக்கம்தான். இளமாதர்கள் கோயிலை வலம்வந்து நடனமிடுகின்றனர். திருஞானசம்பந்தப் பெருமான் இந்த க்ஷேத்திரத்திற்கு வருகை புரிந்தபோது, இவ்வூர் மக்கள் ஊரை நன்கு அலங்கரித்து வாயில் தெளித்து கோலங்கள் போட்டு, தோரணங்கள் கட்டி பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்றிருக்கிறார்கள். நந்தி அருள்பெற்ற நன்னகராம் இவ்வூரினுள் வரும்போது தான் கண்ட வளங்களை திருஞானசம்பந்தர் பாடும் அழகைச் சிறிது காண்போமே!



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 26, 2015 11:42 am

திருநாவுக்கரசர் திருவையாற்றில் கைலைக் காட்சியைக் கண்டு பாடிய பதிகம் இது. மாதர்ப் பிறைக் கண்ணியாளை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந்து ஏத்திப் புகுவார் அவர்பின் புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். போழிளம் கண்ணி யினானைப் பூந்துகி லாளோடும் பாடி வாழியம் போற்றியென்று ஏத்தி வட்டமிட்டு ஆடவருவேன் ஆழி வலவனின் றேத்தும் ஐயாறடை கின்றபோது கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். எரிப்பிறைக் கண்ணியினானை ஏந்திழை யாளொடும் பாடி முரித்த இலயங்களிட்டு முகமலர்ந் தாடா வருவேன் அரித் தொழுகும் வெள்ளருவி ஐயாறடைகின்ற போது வரிக்குயில் பேடையோடாடி வைகி வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். பிறையிளங் கண்ணியினாளைப் பெய்வளை யாளொடும் பாடித் துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன் அறையிளம் பூங்குயிலாலும் ஐயாறடைகின்ற போது சிறையிளம் பேடையோடாடிச் சேவல் வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். ஏடு மதிக்கண்ணியானை ஏந்திழை யாளொடும் பாடிக் காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன் ஆட லமர்ந்துறை கின்ற ஐயாறடைகின்ற போது பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். தண்மதிக் கண்ணி யினானைத் தையல் நல்லளோடும் பாடி உண்மெலி சிந்தையனாகி உணரா வுருகா வருவேன் அண்ண லமர்ந்துறைகின்ற ஐயாறடைகின்ற போது வண்ணப் பகன்றிலோடாடி வைகி வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி வடிவொடு வண்ண மிரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன் அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயாறடைகின்ற போது இடி குரல் அன்னதொர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். விரும்பு மதிக் கண்ணியானை மெல்லியலாளொடும் பாடிப் பெரும்புலர் காலை எழுந்து பெறுமலர் கொய்யா வருவேன் அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயாறடைகின்ற போது கருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். முற்பிறைக் கண்ணியினானை மொய்குழ லாளொடும் பாடிப் பற்றிக் கயிற்றுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன் அற்றருள் பெற்று நின்றாரோடு ஐயாறடைகின்ற போது நற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். திங்கள் மதிக்கண்ணியானைத் தேமொழி யாளொடும் பாடி எங்கருள் நல்குங்கொ லெந்தை எனக்கினி யென்னா வருவேன் அங்கிள மங்கைய ராடும் ஐயாறடைகின்ற போது பைங்கிளி பேடையொ டாடிப் பரந்து வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். வளர்மதிக் கண்ணியி நானை வார்குழலாளொடும் பாடிக் களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன் அளவு படாததோர் அன்போடு ஐயாறடைகின்ற போது இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். இந்தப் பாடலை சிறந்த நாவலாசிரியரான 'கல்கி' அவர்கள் தனது "சிவகாமியின் சபதம்" எனும் நெடுங்கதையில் சிவகாமி எனும் நடனப்பெண் சிவபெருமானின் அருளொன்றே உள்ளத்திற்கு ஊக்கமும் உறுதியும் தருவது என்று பாடுவது போலவும், வாழ்க்கையில் புதிய பாதையை நிர்ணயித்துக் கொண்டது போலவும் மிக அருமையாக அமைத்திருக்கிறார். அது போலவே மேலும் சில தேவாரப் பாடல்களையும் சிவகாமி பாடுவதாகத் தன் கதையில் அமைத்திருப்பது மிகவும் சிறப்பு.

நன்றி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:32 am

திருவையாறு பற்றிய நிறைய தகவலுக்கு நன்றி கார்த்தி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக