புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
68 Posts - 45%
heezulia
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
5 Posts - 3%
prajai
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
4 Posts - 3%
Jenila
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
2 Posts - 1%
jairam
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
1 Post - 1%
kargan86
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
9 Posts - 4%
prajai
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
6 Posts - 3%
Jenila
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
2 Posts - 1%
jairam
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_m10கடன்கார நாடென்னும் போதினிலே..!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன்கார நாடென்னும் போதினிலே..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 13, 2015 11:59 am


'மார்ட்டின் லூதர் கிங்குக்கு, அமெரிக்கா குறித்து பெரும் கனவு ஒன்று உண்டு. அதைப்போல, சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கும் உண்டு. வறுமை ஒழிப்பு, கல்வி, குடிநீர், துப்புரவு, பாதுகாப்பு, வளம், அமைதி... ஆகியவற்றை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்பது எனது லட்சியம். வரும் நூற்றாண்டில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ வேண்டும் என நான் கனவு காண்கிறேன்’ - 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் - 2023’ என்ற ஆவண வெளியீட்டு விழாவில், தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பேசியது இது.

அந்தக் கனவின் இப்போதைய கதி என்ன தெரியுமா? 2015-16ம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய். இது ஓ.பி.எஸ் ஒப்புக்கொண்ட கணக்கு. இதற்காக தமிழ்நாடு அரசு கட்டும் வட்டி, ஆண்டு ஒன்றுக்கு 17 ஆயிரத்து 139 கோடி ரூபாய். கேட்கவே பீதியாக இருக்கிறதா? அதைவிட அதிர்ச்சி, தமிழ்நாட்டின் உண்மையான கடன் இதைவிட அதிகம்.

''முதலமைச்சர் ஓ.பி.எஸ்., மாநில அரசு நேரடியாகப் பெற்ற 2,11,483 கோடி ரூபாயை மட்டுமே கடனாகக் குறிப்பிடுகிறார். ஆனால், 2014-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, தமிழக மின்வாரியத்தின் கடன் நிலுவை 1.60 லட்சம் கோடி ரூபாய். போக்குவரத்துத் துறைக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இன்னும் மற்ற பொதுத் துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால் தமிழ்நாடு அரசின் கடன் சுமை சுமார் 4 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும்'' என்கிறார் மருத்துவர் ராமதாஸ். மாநில அரசே நேரடியாகக் கடன் பெறுவதில், குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் நம்மைவிட முன்னிலையில் இருக்கின்றன. ஆனால், மற்ற பொதுத் துறை நிறுவனங்கள் பெற்றுள்ள கடனையும் சேர்த்துக் கணக்கிட்டால், தமிழ்நாடு முன் வரிசைக்கு வந்துவிடும்.

'ஒரு மாநில அரசு, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் (நிஷிஞிறி) ஆண்டுக்கு மூன்று சதவிகிதத்துக்கு மேல் கடன் வாங்க முடியாது. அதே சமயம் எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்தமாக 25 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது’ என்கிறது மத்திய நிதி கமிஷன். இந்த வரம்பை தமிழ்நாடு அரசு இன்னும் தாண்டவில்லை. ஆனால், 19.24 சதவிகிதம் கடன் பெற்று அபாய வரம்பைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. 2015-16ம் ஆண்டில் 17,139 கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டும். இப்படி ஆண்டுதோறும் வட்டியைக் கட்டுவதற்காகப் புதிய கடன் வாங்குகிறார்கள். இப்படியாக கடன் சேர்ந்துகொண்டே செல்கிறது. கடைசி குண்டுமணித் தங்கம் வரையிலும் அடகுவைத்து குடும்பம் நடத்தும் ஏழைக் குடியானவனைப்போல, தமிழக அரசு முடிந்தவரை கடன் வாங்கிக்கொண்டிருக்கிறது. இப்படி கடன் மேல் கடன் வாங்குவதன் மூலம் மாநில அரசு கடுமையான பணவீக்கத்தைச் சந்திக்க நேரிடும். பணம் அதன் மதிப்பை இழந்து, பொருட்களின் விலை கடுமையாக உயரும். அது மாநிலத்தின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும்.

இந்த அபாயத்தின் அறிகுறியை, மாநில அரசு உணர்ந்துதான் இருக்கிறது. பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் 'தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது’ என ஓ.பி.எஸ் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், கருணாநிதிக்கும் ராமதாஸுக்கும் சொல்லும் பதில்களில் மட்டும் இழுத்துப் பிடித்து மறுக்கிறார். 'தமிழ்நாடு திவாலாகும் நிலையை நோக்கிச் செல்லவில்லை’ என்கிறார். ஆனால், அந்த மறுப்பு மிகவும் பலவீனமாக வெளிப்படுகிறது. ஏனெனில், தமிழ்நாடு கடனில் மூழ்கிக்கொண்டிருக்கிறது என்பது மிகவும் வெளிப்படையான உண்மை. தமிழக முதலமைச்சர் நினைத்தாலும், மக்களின் முதல்வர் நினைத்தாலும் மறைக்க முடியாத உண்மை. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ரிசர்வ் வங்கி ஆகியவற்றிடம் இருந்து தமிழ்நாடு பெற்றுள்ள கடன், தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது.

ஓர் அரசு கடன் வாங்குவதில் தவறு இல்லை. உலகம் எங்கும் அரசுகள் கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படிப் பெறப்படும் கடன், வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்; மூலதனமாக மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் கடனை அடைக்க முடியும். ஆனால் தமிழக அரசோ, கடன் பெற்ற பணத்தைக்கொண்டு புதிய திட்டங்கள் எதையுமே உருவாக்கவில்லை.

'கடந்த நான்கு ஆண்டுகளாகப் பெற்ற கடனில், 79,528 கோடி ரூபாய் மூலதனச் செலவாகச் செய்யப்பட்டிருக்கிறது’ என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், அப்படிச் செய்யப்பட்ட மூலதனத்தில் இருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வருவாயும் அரசுக்கு வந்ததாக கணக்கு இல்லை.

அரசுக் கடனின் பெரும்பகுதி இலவசப் பொருட்களுக்குத்தான் செல்கிறது. பொதுவாக புதிய அறிவிப்புகள் எல்லாம் பட்ஜெட்டில்தான் அறிவிக்கப்படும். ஆனால், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்ற விதி 110-ன் கீழ் தொடர் அறிவிப்பு மேளா நடத்தினார். அப்படி 110-ன் கீழ் இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு மட்டும் சுமார் 1,27,501 கோடி ரூபாய். இது, ஒரு பட்ஜெட்டின் மதிப்பு. இவ்வளவு நிதிக்கும் எங்கே போவது? அதனால்தான் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 50 சதவிகிதம்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மானியம் மற்றும் இலவசத் திட்டங்களுக்கு 59,185 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது, அரசுக்கு எந்த வகையில் வருமானத்தைத் தரும்?

ஓர் அரசு வருமானத்தை மட்டுமே பார்க்கக் கூடாது என்பது உண்மைதான். மானியம் என்பது, எளிய மக்களைக் கைதூக்கிவிடுவதற்காக அரசு மேற்கொள்ளவேண்டிய கடமை. ஆகவே, ஒட்டுமொத்தமாக மானியமே தவறு எனக் கூற முடியாது. ஆனால், அப்படி வழங்கப்படும் மானியத்தால் மக்களின் பொருளாதார வாழ்வு மேம்பட வேண்டும். மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றால் அரசியல்வாதிகளின் வாக்குவங்கி மேம்படுமே தவிர, மக்களின் வங்கிக் கணக்கில் என்ன மாற்றம் வரும்?

மாநில அரசுக்கு கலால் வரி, முத்திரை மற்றும் பதிவுத் துறை வரி ஆகியவைதான் முக்கிய வருவாய் மூலங்கள். இதற்காக தமிழ்நாடு அரசு நிர்ணயித்த இலக்கு 91,835 கோடி ரூபாய்; கிடைத்ததோ 85,772 கோடி ரூபாய். இத்தகைய பற்றாக்குறை எல்லா துறைகளிலும் நீடிக்கும் நிலையில், மாநில அரசுக்கு அமுதசுரபியாக இருப்பது டாஸ்மாக் வருவாய். அதனால்தான் தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து, ஏதோ அத்தியாவசிய சேவையைப்போல காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சரக்கு விற்கிறார்கள். உண்மையை சொல்வதானால், டாஸ்மாக் வருவாய்தான் தமிழக அரசைத் தாங்கிப்பிடிக்கும் முக்கியமான தூண்.

2014-15ம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் 26,188 கோடி ரூபாய். 2015-16ம் ஆண்டுக்கான டாஸ்மாக் இலக்கு, 29,672 கோடி ரூபாய். ஒவ்வொரு தமிழனையும் சாராயம் குடித்து நாட்டைக் காப்பாற்றவேண்டிய நிலையில் வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

இந்தத் துயர நிலையில் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டுமானால், தொழில் வாய்ப்புகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப் போல, வரும் மே மாதம் சர்வதேச முதலீட்டா ளர்கள் மாநாட்டை நடத்தப்போகிறது தமிழ்நாடு அரசு. இதில் ஒரு லட்சம் கோடி முதலீட்டை எதிர்பார்க்கிறார்கள். மின்வெட்டு, நிர்வாகச் சீர்கேடுகள் உள்ளிட்ட பல காரணங்களால் முதலீட்டாளர்களே வெளியேறிக்கொண்டு இருக்கும் நிலையில், அரசின் இந்த முயற்சி பலன் அளிக்குமா என்பது சந்தேகமே. நிர்வாகத் திறமையின்மை மற்றும் முடிவெடுப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஏற்படும் தாமதத்தால் அரசின் திட்டச் செலவுகள் அதிகரிக்கின்றன. மின் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தி இருந்தால், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கவேண்டி இருக்காது. உடன்குடி திட்டம் இதற்கு நல்ல உதாரணம். நாம் எதையும் அதிக விலை கொடுத்துதான் பாடம் கற்றுக்கொள்கிறோம். ஆனால், அந்த விலை மக்களின் வரிப்பணம் என்பதை அரசு நினைவில்கொள்ள வேண்டும்!

விகடன்



கடன்கார நாடென்னும் போதினிலே..!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 13, 2015 12:10 pm

கடன்கார நாடென்னும் போதினிலே..!  3838410834 கடன்கார நாடென்னும் போதினிலே..!  103459460

நம்ம மக்கள் எப்ப இதையெல்லாம் படித்து திருந்தி இந்த திராவிட கட்சிகளை செருப்பால் அடித்து துரத்துகிரார்களோ அப்ப தான் உருப்படுவார்கள்.

பக்கத்து வீடு தானே எரிகிறது நமக்கென்ன என்று , அரசாங்கம் கொடுக்கும் இலவச பிச்சைகளை வாங்கிகொண்டு இருந்தால் கூடிய விரைவில் உள்ளதும் போச்சே என்று ஆகா வேண்டியது தான்

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Mon Apr 13, 2015 12:27 pm

திருந்தவும் மாட்டார்கள்!திருத்தவும் முடியாது!தமிழரின் சுயநலம் அப்படி!

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Apr 13, 2015 12:38 pm

பயம் பயம் பயம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கடன்கார நாடென்னும் போதினிலே..!  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon Apr 13, 2015 1:56 pm

புதிய ஓய்வூதிய திட்டத்தில் போட்ட பணம் இன்னமும் மத்திய அரசை சென்றடையவில்லை. எங்கே போனது பணம்...?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 13, 2015 5:23 pm

'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் - 2023’ ...!!
-
2023 வரை அதிமுக பதவியில் நீடித்தால், சொன்னபடி சாதனை செய்வார்களாம்...!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக