புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_c10 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_m10 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_c10 
20 Posts - 65%
heezulia
 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_c10 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_m10 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_c10 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_m10 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_c10 
62 Posts - 63%
heezulia
 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_c10 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_m10 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_c10 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_m10 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_c10 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_m10 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,,


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Oct 17, 2013 2:36 pm

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டியில் எட்ட முடியாத இலக்கை எட்டிக் காட்டிய இளம் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி அதிகவேக சதம் அடித்து சாதித்தார். ரோகித் சர்மாவின் சதம், தவானின் அதிரடி துவக்கம் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. புனேயில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
பின்ச் அரைசதம்:
ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச், பிலிப் ஹியுஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த போது, ரெய்னாவின் "த்ரோ'வில் பின்ச் (50) "ரன்-அவுட்' ஆனார். அடுத்து வந்த வாட்சன்(59), ஒருநாள் அரங்கில் தனது 30வது அரைசதத்தை பதிவு செய்தார். மற்றொரு துவக்க வீரர் ஹியுஸ், ஒருநாள் போட்டியில் தனது இரண்டாவது அரைசதம் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவர், வினய் குமார், யுவராஜ் சிங் ஆகியோரது பந்தில் அடுத்தடுத்து தலா இரண்டு பவுண்டரி விளாசினார். இவர், 83 ரன்கள் எடுத்த போது அஷ்வினிடம் சரணடைந்தார்.
பெய்லி அதிரடி:
பின் இணைந்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி, மேக்ஸ்வெல் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. இஷாந்த் வீசிய 45வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி அடித்த பெய்லி, ஒருநாள் போட்டியில் தனது 10வது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் சிக்சர் அடித்து ரன் கணக்கை துவக்கிய மேக்ஸ்வெல், வினய் குமார் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். தொடர்ந்து அசத்திய இவர், 30 பந்தில் அரைசதம் எட்டினார். தேவையில்லாமல் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட மேக்ஸ்வெல் (53), "ரன்-அவுட்' ஆனார்.
அடுத்து வந்த ஆடம் வோஜஸ் (11) ஏமாற்றினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய பெய்லி, அஷ்வின் வீசிய 47வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இஷாந்த் வீசிய கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த பெய்லி, அணியின் ஸ்கோரை வலுவாக்கினார்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்தது. பெய்லி (92 ரன், 50 பந்து, 5 சிக்சர், 8 பவுண்டரி), ஹாடின் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் வினய் குமார் 2, அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சபாஷ் தவான்:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. வாட்சன் வீசிய 9வது ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த தவான், தோகர்டி பந்தில் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி விளாசி, அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அசத்திய தவான், பால்க்னர், வாட்சன் பந்தில் அடுத்தடுத்து தலா இரண்டு பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் சேர்த்த போது, பால்க்னர் "வேகத்தில்', தவான் (95) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
ரோகித் சதம்:
மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ரோகித், மெக்கே பந்தில் இரண்டு பவுண்டரி விளாசினார். மேக்ஸ்வெல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித், ஜான்சன் பந்தில் பவுண்டரி அடித்து, ஒருநாள் போட்டியில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். அசத்தலாக ஆடிய இவர், ஜான்சன் வீசிய 40வது ஓவரில் மூன்று பவுண்டரி அடித்தார்.
விராத் விளாசல்:
அடுத்து வந்த விராத் கோஹ்லி, அதிரடியாக ரன் சேர்த்தார். பால்க்னர் வீசிய 29வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த கோஹ்லி, தோகர்டி, மெக்கே, வாட்சன் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். மேக்ஸ்வெல் வீசிய 42வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த கோஹ்லி, தோகர்டி "சுழலில்' சிக்சர் அடித்தார். இவர், 52வது பந்தில் அதிவேகசதம் அடித்து அசத்தினார்.
மேக்ஸ்வெல் வீசிய 44வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ரோகித், அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 43.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 362 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் (141), கோஹ்லி (100) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருது இந்தியாவின் ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டி மொகாலியில், வரும் அக்., 19ம் தேதி நடக்கிறது.
சிறந்த துவக்க ஜோடி
நேற்று ஜெய்ப்பூரில், 176 ரன்கள் சேர்த்த ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி வரலாற்றில், முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி என்ற பெருமை பெற்றது. இதற்கு முன், 1998ல் கங்குலி-சச்சின் இணைந்து கான்பூரில் 175 ரன்கள் சேர்த்திருந்தனர்.
அதிவேக சதம் அடித்த இந்தியர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 52 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த விராத் கோஹ்லி, அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். இவர், சேவக் சாதனையை தகர்த்தார்.
அதிவேக சதம் அடித்த "டாப்-11' வீரர்கள் விவரம்:
வீரர் எதிரணி/ஆண்டு மொத்த ரன் பந்து*
அப்ரிதி(பாக்.,) இலங்கை/1996 102 37
பவுச்சர்(தெ.ஆப்.,) ஜிம்பாப்வே/2006 147 44
லாரா (வெ.இண்டீஸ்) வங்கதேசம்/1999 117 45
அப்ரிதி (பாக்.,) இந்தியா/2005 102 45
ஜெயசூர்யா (இலங்கை) பாக்.,/1996 134 48
கெவின் ஓ பிரையன் (அயர்லாந்து) இங்கிலாந்து/2011 113 50
கோஹ்லி (இந்தியா) ஆஸி.,/2013 100 52
அப்ரிதி (பாக்.,) வங்கதேசம்/2010 124 53
ஜெயசூர்யா (இலங்கை) வங்கதேசம்/2008 130 55
டிவிலியர்ஸ் (தெ.ஆப்.,) இந்தியா/2010 102 58
சேவக் (இந்தியா) நியூசி.,/2009 125 60
* வீரர்கள் சதம் அடிக்க எடுத்துக்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை
சிறந்த "சேஸ்'
ஜெய்ப்பூர் போட்டியில் நேற்று 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், தனது சிறந்த "சேசிங்கை' பதிவு செய்தது. இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிரான மிர்புர் (2012) போட்டியில், 330 ரன்களை "சேஸ்' செய்து வெற்றி பெற்றது.
சிறந்த "சேஸ்' வரிசையில் "டாப்-3' விவரம்:
அணி எதிரணி/இலக்கு எடுத்த ரன்கள் இடம்/ஆண்டு
தென் ஆப்ரிக்கா ஆஸி.,/434 438/9 ஜோகனஸ்பர்க்/2006
இந்தியா ஆஸி.,/359 362/1 ஜெய்ப்பூர்/2013
நியூசிலாந்து ஆஸி.,/346 350/9 ஹாமில்டன்/2007
சிறந்த "சேஸ்'
நேற்று ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 360 ரன்களை "சேஸ்' செய்த இந்தியா (362 ரன்), ஒருநாள் போட்டி வரலாற்றில் தனது சிறந்த "சேஸிங்கை' பதிவு செய்தது. முன்னதாக 2012ல் மிர்பூரில் நடந்த போட்டியில், பாகிஸ்தான் நிர்ணயித்த 330 ரன்களை "சேஸ்' செய்து வெற்றி பெற்றது. தவிர இது, சர்வதேச அளவில் இரண்டாவது சிறந்த வெற்றி. முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா (438 ரன்கள், எதிர்-ஆஸ்திரேலியா, 2006, ஜோகனஸ்பர்க்) உள்ளது.
சரியான பதிலடி
கடந்த 2003 (ஜோகனஸ்பர்க்), 2004ல் (சிட்னி) நடந்த போட்டிகளில், முதலில் "பேட்' செய்த ஆஸ்திரேலிய அணி 359 ரன்கள் குவித்தது. இதனை "சேஸ்' செய்த இந்திய அணி, சொற்ப ரன்னில் (234, 151 ரன்கள்) சுருண்டு, தோல்வி அடைந்தது. நேற்று மீண்டும் ஆஸ்திரேலிய அணி 359 ரன்கள் எடுத்தது. இதனை மிகச் சுலபமாக "சேஸ்' செய்து, கடந்த இரண்டு முறை கண்ட தோல்விகளுக்கு சரியான பதிலடி கொடுத்தது.
362
நேற்று 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. முன்னதாக, 2009ல் நாக்பூரில் நடந்த போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 7 விக்கெட்டுக்கு 354 ரன்கள் எடுத்தது.
359
நேற்று அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. முன்னதாக, 2007ல் இங்கு நடந்த போட்டியில், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 306 ரன்கள் (எதிர்-இந்தியா) எடுத்தது.
* இது, இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக 2009ல் ஐதராபாத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்தது.
* தவிர இது, ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக ஜோகனஸ்பர்க் (359/2, 2003), சிட்னி (359/5, 2004) மைதானங்களில் நடந்த போட்டியில் தலா 359 ரன்கள் எடுத்தது.

"டாப்-5' அரைசதம்
ஆஸ்திரேலிய அணியின் "டாப்-5' பேட்ஸ்மேன்களான பின்ச் (50), ஹியுஸ் (83), வாட்சன் (59), மேக்ஸ்வெல் (53), பெய்லி (92*) ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதன்மூலம் ஒரு நாள் போட்டியில் முதன்முறையாக, ஒரு அணியின் "டாப்-5' பேட்ஸ்மேன்கள் அரைசதத்தை பதிவு செய்து, புதிய உலக சாதனை படைத்தனர். தவிர, ஒருநாள் போட்டியில் ஒரு அணியின் ஐந்து பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தது இரண்டாவது முறையாக அரங்கேறியது. முன்னதாக 2008ல் கராச்சியில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், துவக்க வீரர் சல்மான் பட் (4) மட்டும் சொற்ப ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஜாம்ஷெத் (61), யூனிஸ் கான் (79), முகமது யூசுப் (72), சோயப் மாலிக் (63), மிஸ்பா (55*) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
thinamalar

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 17, 2013 9:03 pm

 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Xsf7rOptTHOitUrmOQeW+1023339-16520234-640-360
-
இந்திய அணிக்கு வாழ்த்துகள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Oct 18, 2013 12:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  வாழ்துக்கள் இந்தியா இந்த வெற்றி மறக்க முடியாத வெற்றி தான்




 இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, M இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, U இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, T இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, H இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, U இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, M இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, O இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, H இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, A இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, M இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, E இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக