Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீரன் சின்னமலை பிறந்த தினம்
2 posters
Page 1 of 1
தீரன் சின்னமலை பிறந்த தினம்
சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு என அத்தனை வீரவிளையாட்டுகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார் அந்த இளைஞன். தனது வீரத்தாலும், அசாத்திய திறமைகளாலும் தன் சொந்த ஊரான மேலப்பாளையத்தையும் தாண்டி அவரது பெயர் பரவத்தொடங்கியது. ஈரோடு, காங்கேயம், சென்னிமலை, சங்ககிரி என கொங்கு மண்டலத்தில் ஒலிக்கத் தொடங்கிய அந்த வீரக்குரல், ஒருகட்டத்தில் இந்தியாவையே கட்டியாண்ட ஆங்கிலேயரையே அதிரச் செய்தது. |
அந்த விடுதலை வீரரின் பெயர் தீரன் சின்னமலை.
‘தீர்த்தகிரி’ என்ற இவரது இயற்பெயர் ‘சின்னமலை’ என மாற்றம் அடைந்ததற்கு சில வரலாறுகள் கூறப்படுகின்றன. கொங்கு மண்டலம் முழுவதும் மைசூர் பேரரசின் ஆளுமைக்குள் இருந்த நேரம். மைசூர் அரசால், மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப்பணம் சங்ககிரி வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, வேட்டையில் ஈடுபட்டிருந்த தீர்த்தகிரி, அப்பணத்தை பறித்து ஏழை மக்களுக்கு கொடுத்தாராம். வரிப்பணத்தைக் கொண்டு சென்ற தண்டல்காரனிடம், ‘சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’, எனக் கூறினாராம். அன்றிலிருந்து, தீர்த்தகிரி ‘சின்னமலை’ என அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தவர் தீரன் சின்னமலை. 1782-ல் மைசூரை ஆண்ட ஹைதர் அலி மறைவுக்குப் பின்னர் அரசராக பதவியேற்றார் அவரது மகன் திப்பு சுல்தான். மேலும், ஆங்கிலேயர்களுடன் தொடர் யுத்தத்திலும் அவர் ஈடுபட்டு வந்தார். திப்புவிடம் நன்மதிப்பு பெற்றிருந்த தீரன் சின்னமலை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வேரறுக்க, திப்பு படையினருடன் கைகோத்தார். கொங்கு மண்டலத்தில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த தீரன் சின்னமலை, பயிற்சி பெற்ற இளைஞர் படையுடன் மைசூர் விரைந்தார். மைசூர் போர்களில் ஆங்கிலேயரை திப்பு சுல்தானின் படையினர், திணறடித்து வெற்றி வாகைச் சூடிட முக்கிய பங்காற்றியது சின்னமலையில் கொங்குப் படை. சித்தேஸ்வரம், மழவல்லி, ஶ்ரீரங்கப்பட்டினம் பகுதிகளில் நடந்த போர்களில் திப்புவுடன் கூட்டணி அமைத்து திறம்பட போரிட்டார் சின்னமலை. 1799-ம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், களத்திலேயே மரணமடைந்தார் திப்பு சுல்தான்.
திப்புவின் மரணத்துக்குப் பின்னர், அரச்சலூர் அருகே ஓடாநிலையில் கோட்டைக் கட்டிய சின்னமலை, பிரிட்டிஷாரை எதிர்ப்பதற்காக சிவன்மலை அருகே இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கத் துவங்கினார். திப்பு படையில் இருந்தபோது, தனக்கிருந்த நட்புகளையும், போரில் ஈடுபட்டவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார் சின்னமலை. ஃபிரெஞ்சு நாட்டவர்களுடன் இணைந்து பீரங்கிகளை தயார் செய்யும் பணியில் முழுவீச்சாக இறங்கினார். திப்புவின் படையில் முக்கிய வீரராக அறியப்பட்ட தூண்டாஜிவாக் மற்றும் பரமத்தி அப்பாச்சி, விருப்பாச்சி கோபால நாயக்கர் ஆகியோருடன் இணைந்து 1800-ம் ஆண்டு கோவைக் கோட்டையைத் தகர்க்க திட்டமிட்டார் சின்னமலை. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தன் முயற்சியைக் கைவிடாத சின்னமலை பிரிட்டிஷாரை தாக்குவதற்கு நேரம் எதிர்பார்த்து காத்திருந்தார். 1801-ம் ஆண்டில் பவானி - காவிரிக் கரையில் நடைபெற்ற போரில் தன் முழுபலத்தையும் பிரயோகித்து ஆங்கிலேயப் படைகளை துவம்சம் செய்தார். 1802-ல் சென்னிமலைக்கும், சிவன் மலைக்கும் இடையே நடந்த போரிலும், 1804-ல் அரச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையையும் வென்று வரலாற்று வெற்றிகளை பதிவு செய்தார் சின்னமலை. பீரங்கி ப்ரயோகம், குறிவைத்து கையெறி குண்டுகள் வீசுதல் என சின்னமலையின் போர் யுத்திகளைக் கண்டு பிரிட்டிஷார் கலங்கி நின்றனர். அவர்களுக்கு, சிம்மசொப்பமனமாகிப் போனார் சின்னமலை.
சிலம்பம், வாள் வீச்சு என தான் கற்றுத்தேர்ந்த தற்காப்புக் கலைகள் மூலம் தன்னையும், படைத் தளபதிகளையும் தற்காத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவாராம் சின்னமலை. 1802-ம் ஆண்டு நடந்த போரின்போது சின்னமலையின் அதிரடி சிலம்பாட்டம் குறித்து இன்றைக்கும் கொங்கு மண்டலத்துக்காரர்கள் சிலாகித்து பேசுவதுண்டு.
வீரத்தை, சூழ்ச்சியால் வீழ்த்துவதுதானே வழக்கம். அதேதான், தீரன் சின்னமலையின் வாழ்க்கையிலும் நடந்தது. சின்னமலையை சிக்க வைக்க திட்டமிட்ட ஆங்கிலேய அரசு, அவரின் சமையல்காரர் மூலம் வலைவிரித்தது. இறுதியாக அவரது சகோதரர்களுடன் கைது செய்யப்பட்டார் தீரன் சின்னமலை. எந்த சங்ககிரியில் தனது முதல் ‘வேட்டை’யை சின்னமலை துவக்கினாரோ… அதே சங்ககிரியில் உள்ள மலைக் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தீரன் சின்னமலை 1805-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
பெரும் படையுடனும், செல்வாக்குடனும் வலம் வந்த ஆங்கிலேயர்கள் தீரன் சின்னமலையை கடைசி வரை நேரடியாக போரிட்டு வெல்ல முடியவில்லை என்பதே வீரத்தமிழர் வரலாறு! |
குறிச்சொற்கள் #தீர்த்தகிரி #சின்னமலை #தீரன்_சின்னமலை |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தீரன் சின்னமலை பிறந்த தினம்
வாழ்க தீரன் சின்னமலை புகழ்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» தீரன் சின்னமலை
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
» தீரன் சின்னமலை
» தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு
» தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம்
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
» தீரன் சின்னமலை
» தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு
» தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|