புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
prajai
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
383 Posts - 49%
heezulia
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
256 Posts - 32%

72 Posts - 9%
T.N.Balasubramanian
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
26 Posts - 3%
prajai
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for வியர்வை

வெயில் காலத்தில் பாடாய்ப்படுத்தும் வியர்க்குரு... இயற்கை முறையில் எளிய தீர்வுகள்!

வியர்க்குரு பிரச்னையை, தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சமாளிக்கலாம்; எளிதாகத் தடுக்கலாம்

கோடை வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. சில நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வியர்வை கொட்டுகிறது. கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் எனப் படையெடுக்கும் நோய்களின் பயமுறுத்தல்.

கோடைக்கால நோய்களில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடாய்ப்படுத்தும் முக்கியமான பிரச்னை வியர்க்குரு. இதனை, நம் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சமாளிக்கலாம்; தடுக்கலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். வியர்க்குரு பிரச்னைக்கான தீர்வுகளாக அவர் பகிர்ந்தவை...

எப்படி உருவாகிறது வியர்க்குரு?

உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்குப் படிந்து அடைத்துக்கொள்வதால் தோன்றுகிறது வியர்க்குரு.

வியர்வையால் இந்தச் சிறிய கட்டிகள் வருவதால், இதை `வேர்க்குரு’ அல்லது `வியர்க்குரு’ (Prickly Heat) என்கிறோம். இது தொந்தரவே தவிர, வியாதி அல்ல. அதே நேரத்தில் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அரிப்புடன் கூடிய படை, தேமல் எனப் பல தோல் நோய்கள் ஏற்படக் காரணமாகிவிடும்.

வியர்க்குரு யாரை பாதிக்கும்?

கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை இது. அதிலும், உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற நடைமுறைப் பழக்கங்களாலும் இது ஏற்படலாம்.

இயற்கை முறையில் தீர்வுகள்

* நுங்கு, கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வியர்க்குரு நீங்கும்.

* வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேரத்துத் தடவலாம். மஞ்சள், கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை மட்டுப்படுத்தும்; கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.

* வெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் பருகலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்யும். வியர்க்குருவைப் போக்க உதவும்.

* இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை சுடுதண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும். இதேபோல வெட்டி வேர் பவுடரையும் பயன்படுத்தலாம்.

* அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது 'அறுகன் தைலம்', 'தூர்வாரி தைலம்' என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

* மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.

* பாசிப்பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும்.

* கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.

* சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிக்காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து, அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி சேர்த்து கலந்துகொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை டீஸ்பூன் அளவுக்கு இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களையும் வியர்க்குருவையும் தடுக்கலாம்.

* உணவு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கூட்டு, குழம்பாக சமைத்துச் சாப்பிட வேண்டும். கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* நேரம் தவறித் தூங்கக் கூடாது. சூடான தரையில் படுத்து உறங்கக் கூடாது. காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும்.

* குப்பைமேனிக் கீரையை பருப்பில் சேர்த்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்; வியர்க்குரு நெருங்காது.

கோடை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சில அவசியமான பழக்கங்கள்...

* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

* முடிந்த வரையில் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் இரு முறை குளிக்க வேண்டும்.

* வாரத்தில் இரு தினங்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.

* வெயிலில் வெகு நேரம் அலைவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, காலை 12 முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம். அப்படிச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், கறுப்பு நிறக் குடைகளை தவிர்த்துவிட்டு, வெளிர் நிற குடைகளைப் பயன்படுத்தலாம்.

* உடல் சூடு அதிகம் ஆகாமல் இருக்க, இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

குறிச்சொற்கள் #வியர்வை #வியர்க்குரு #வேர்க்குரு #miliaria #prickly_heat
Topics tagged under வியர்வை on ஈகரை தமிழ் களஞ்சியம் 4YMhEdH

வியர்வை என்றால்கூட சமாளித்துவிடலாம். வியர்வையோடு வரும் வாடைதான் சமாளிக்கக் கடினமானது. வியர்வை வாடையைக் கட்டுப்படுத்தும் வழிகளைச் சொல்கிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

வியர்வை வாடைக்குக் காரணம்

வியர்வையில் சில வகைப் புரதங்கள் இருக்கும். அவற்றுடன் பாக்டீரியா சேர்ந்து வினைபுரியும்போது அந்தப் புரதங்கள் அமிலங்களாக மாறுகின்றன. அவைதான் வியர்வை நாற்றத்துக்குக் காரணம்.

பூப்பெய்தும் பருவம், பருமன், அதிக காரமான மசாலா சேர்த்த உணவுப்பழக்கம், நீரிழிவு போன்ற சில உடல்நலக் குறைபாடுகள் போன்றவை வியர்வையைத் தூண்டும் காரணிகள். வியர்வைக்கென பிரத்யேக மணமோ, நிறமோ கிடையாது. பாக்டீரியா மற்றும் அதன் தாக்கத்தால் வெளியேறும் அமிலங்களின் காரணமாகவே வியர்வைக்கென பிரத்யேக வாடை உருவாகிறது.

எக்ரைன், அப்போக்ரைன் என இரண்டு வகையான வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. எக்ரைன் சுரப்பிகள் உடல் முழுவதும் இருக்கும். குறிப்பாக உள்ளங்கைகள் மற்றும் பாதங்களில் அதிகமிருக்கும். எப்போக்ரைன் சுரப்பிகள் அக்குள், அந்தரங்க உறுப்புகள், காதுகளின் பின்புறம் போன்ற பகுதிகளில் அதிகமிருக்கும். மன அழுத்தம், பதற்றம், பூப்பெய்தும் காலம் போன்றவை அப்போக்ரைன் சுரப்பிகளைத் தூண்டுபவை.

கட்டுப்படுத்தும் வழி

அக்குள் பகுதிகளில் வியர்வைச் சுரப்பிகள் அதிகமிருப்பதால் அங்கு #வியர்வை_வாடை அதிகமிருக்கிறது. ட்ரைக்ளோசன் உள்ள ஆன்டி பாக்டீரியல் சோப் உபயோகித்துக் குளிப்பது இந்தப் பிரச்னைக்குத் தீர்வளிக்கும். அக்குள் பகுதியில் ரோமங்கள் நீக்கப்பட வேண்டும். ஆன்டி பெர்ஸ்பிரன்ட் மற்றும் டியோடரன்ட் உபயோகிக்கலாம். டியோடரன்ட் என்பது வாடையை நீக்கும். ஆன்டி பெர்ஸ்பிரன்ட் என்பது அதிக வியர்வையைக் கட்டுப்படுத்தும்.

சிலருக்கு உள்ளங்கைகளிலும் பாதங்களிலும் அதிகம் வியர்க்கும். இந்தப் பிரச்னைக்கு ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்று பெயர். தொடர்ச்சியாக ஷூ அணிவது, ஒரே சாக்ஸை தொடர்ந்து அணிவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். லெதர் காலணிகளைத் தவிர்த்து, கால்களில் காற்றோட்டம் உள்ள மாதிரியான காலணிகளை அணிய வேண்டும்.

தினமும் இருமுறை கால்களை நன்கு கழுவ வேண்டும். பாதங்களில் உள்ள இறந்த செல்களை பியூமிஸ் ஸ்டோனால் தேய்த்து அகற்ற வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் தினம் இருவேளை குளிக்க வேண்டும். காற்றோட்டத்தை அனுமதிக்கும்படியான காட்டன் உடைகளை அணிய வேண்டும். அலுமினியம் குளோரைடு உள்ள ஆன்டி பெர்ஸ்பிரன்ட் உபயோகிக்கலாம். காரமான, மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பூண்டு, சிவப்புநிற இறைச்சி போன்றவை வியர்வை வாடையை அதிகப்படுத்தலாம்.

மருத்துவ ஆலோசனை தேவையா?

இவற்றையெல்லாம் தாண்டி அதீத #வியர்வை உள்ளவர்களுக்கு ’போட்டாக்ஸ்’ சிகிச்சை பலனளிக்கும். வியர்வையைக் கட்டுப்படுத்தச் சொல்லி மூளைக்கு சிக்னல் கொடுக்கும் இந்தச் சிகிச்சை ஆறு முதல் எட்டு மாதங்களுக்குப் பலனைத் தக்கவைக்கும். இதைச் செய்வதற்கு முன் மருத்துவ ஆலோசனை அவசியம்.

தைராய்டு, மெனோபாஸ், கல்லீரல், கிட்னி கோளாறுகள், நீரிழிவு போன்றவற்றின் காரணமாக வியர்க்கிறதா என்பதை மருத்துவரால்தான் அறிய முடியும். இரவில் அதிகமாக வியர்த்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

வியர்வை வாடையைப் போக்க பெர்ஃப்யூம், டியோடரண்ட்… இவற்றில் எது சிறந்தது... சருமத்துக்கு நல்லது?

முதலில் எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். வியர்வைக்கென தனி வாடையே கிடையாது. அதாவது நாம் நினைக்கிற மாதிரி வியர்வைக்கென கெட்ட வாடை என ஒன்று கிடையாது. வியர்வையோடு பாக்டீரியா அல்லது பூஞ்சைக் கிருமிகள் சேரும்போதுதான் அதன் கெட்ட வாடை வருகிறது.

பெர்ஃபியூம் உபயோகிக்கும்போது என்பது நம் உடலிலிருந்து ஒருவித நல்ல வாடையை உணர முடியும். டியோடரண்ட் என்பது வியர்வையின் வாடையை, தன் வாடையின் மூலம் மறைக்கும். ரோல் ஆன் என்பது அதில் சேர்க்கப்படும் அலுமினியம் கூற்றைப் பயன்படுத்தி வியர்வை வெளியேறாதபடி, வியர்வை சுரப்பிகளை மூடிவிடும். பட்டு ஜாக்கெட் போன்ற உடைகளை அணியும் போது வியர்வை கசிந்து, அதன் அடையாளம் உடையில் தெரியாமலிருக்க ரோல் ஆன் உபயோகிக்கலாம்.

இவற்றையெல்லாம் உபயோகிப்பது சரியா, தவறா என்றால் இவற்றில் வாசனைக்காகப் பயன்படுத்தும் கூறுகள் நிச்சயம் சருமத்தை பாதிக்கும். அதனால்தான் அதிக வாசனை உள்ள பவுடர், சோப் போன்றவற்றைக்கூட உபயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கான்டாக்ட் அலர்ஜி என்கிற ஒவ்வாமைக்கு அதுதான் பிரதான காரணமே. மாநிற சருமம் கொண்ட நம்மைப் போன்ற தென்னிந்தியர்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பு இன்னும் அதிகம். உதாரணத்துக்கு அக்குள் பகுதியில் வியர்வைக்காக உபயோகிக்கும் இந்த வாசனைப் பொருள்களால், அந்தப் பகுதி அளவுக்கு அதிகமாக கருமை ஆகலாம்.

‘அப்படியென்றால் வியர்வை நாற்றத்தை மறைக்க எதைத்தான் உபயோகிப்பது’ என்ற கேள்வி வரலாம். ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்ட டஸ்ட்டிங் பவுடர்கள் கிடைக்கின்றன. இந்த பவுடர்கள் பாக்டீரியாவோ, பூஞ்சையோ வளரவிடாமல் பார்த்துக்கொள்வதோடு, ஈரப்பதம் இல்லாமலும் பார்த்துக்கொள்ளும். எனவே நீங்கள் கேட்ட எல்லா வற்றையும்விட டஸ்ட்டிங் பவுடரே சருமத்துக்குப் பாதுகாப்பானது.

விகடன்

Back to top