புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_m10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10 
366 Posts - 49%
heezulia
நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_m10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_m10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_m10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_m10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10 
25 Posts - 3%
prajai
நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_m10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_m10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_m10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_m10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_m10நினைவுகளின் பதிவு - ஆதிரா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளின் பதிவு - ஆதிரா


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 09, 2013 7:07 pm

நாம் எத்தனையோ நாள்களை எப்படி எப்படியோ கழித்துக் கொண்டிருக்கிறோம். யாராவது நம்மிடம் “அங்கு வருகிறீர்களா இங்கு வருகிறீர்களா?” என்று அழைத்தால் உடனடியாக நம் பதில் “எனக்கு வேலை இருக்கிறது. மன்னிக்கவும்” என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கும். திருமதி பூமா அவர்கள் நல்ல தோழி. அதிகம் தொடர்பில் இருப்பதில்லை நாங்கள். எப்போதாவது பேசிக்கொள்வோம். ஏதேனும் விழாவில் எதிரெதிர் சந்தித்துக் கொள்வோம். “சனிக்கிழமை செங்கல்பட்டில் ஒரு நிகழ்ச்சி. வருகிறீர்களா” என்று அழைத்த போது அப்படித்தான் சொன்னேன். அடுத்ததாக “செங்கல்பட்டுக்கா? அவ்வளவு தூரமாச்சே” என்று சற்று நீளமாக இழுத்தேன். அவரோ விடுவதாக இல்லை. “நான் உங்களையும் எங்களுடன் இணைத்துக்கொண்டு மேலே செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். டெரெயினில் வந்தால் ஒன்றும் சிரமமில்லை. சென்னையில் இருந்து கிளம்பி வந்து விடுங்கள். நான் உங்களைச் செங்கல்பட்டு ஸ்டேஷன்ல அழைத்துக்கொள்கிறேன். நிகழ்ச்சி முடிவுற்றதும் மீண்டும் செங்கல்பட்டு ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்து விட்டுவிடுகிறேன்” என்றார். அவர் கூறியதில் இருந்து செங்கல்பட்டிலிருந்தும் செல்ல வேண்டிய இடம் தொலைவு என்பது புரிந்தது. மறுக்க முடியாத அன்பில் “சரி வருகிறேன்” என்று அரை மனதாகக் கூறிவிட்டு என் வேலையைப் பார்க்கத் தொடங்கினேன்.

நான் அப்படிக் கூறியதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. கவிஞர் ஒருவர் அவரது கவிதைப் புத்தகத்திற்காகத் தொடர்ந்து நான்கு நாட்களாக என் இல்லத்திற்கு வந்து வேலை வாங்கிக் கொண்டு இருந்தார். மறுபுறம் நான் இதழ்களுக்கு அனுப்ப வேண்டிய இரண்டு கட்டுரை வேலைகள். திடீரென என்னுடைய கவிதைகளை ஒரு நண்பர் தொகுப்பாகக் கொண்டு வந்தே தீர்வேன் என்று அடம்பிடித்து, என்னிடம் “படம் அனுப்புங்கள், கவிதை அனுப்புங்கள், அணிந்துரை அனுப்புங்கள்” என்று மிரட்டிக்கொண்டு இருந்தார். அப்படி அவர் மிரட்டா விட்டாலும் நான் அவருக்குப் பெப்பே காட்டி விட்டு செல்லும் ஆசாமிதான். வேறு வழியின்றி வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் உறங்காமல் கூகுல் ஆண்டவர் அமைத்த புகைப்படப் பூங்காவில் இருந்து படம் என்று என் கண்களுக்குத் தென்பட்டதையெல்லாம் என் கணினிக்குத் தரவிறக்கி அனுப்பியதில் விடிந்து விட்டது மொத்த இரவும்.

ஐந்து மணிக்குக் கணினியின் கண்களை மூடி அதற்கு ஓய்வு கொடுத்து விட்டு களைத்த என் கண்களுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தேன். ஆறரை மணிக்கு ஒரு காபியை அருந்தி வீட்டை விட்டு கிளம்பினேன். கிளம்பும்போது அலைபேசியில் பூமா. “குறுஞ்செய்தி கிடைத்ததா? பார்த்தீர்களா?” என்றார். மனித மனம் எவ்வளவு மோசமனாது பாருங்கள். அதற்குள் எனக்குள் ஒரு பளிச்... ஒரு வேளை நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்களோ! என்று துள்ளியது என் மனம் ஒரு நொடி. நான் தான் அந்தக் கவிஞரின் வேலைக்கு இடையூறு வேண்டாம் என்று நான்கு நாட்களாக அலைபேசியை சைலண்ட் மோடில் போட்டு இருந்தேனே. பக்கத்தில் இருந்து இருந்தால் வைபரேட் தெரிந்து இருக்கும். வேலையில் அது தெரியவில்லை. “பார்க்க வில்லை, சொல்லுங்கள்” என்று உற்சாகத் தொனியில் கேட்டேன். “பேருந்தில் வருவதாக இருந்தால் இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் ஆகும். நீங்கள் புகை வண்டியில் வந்து விடுங்கள். ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம். எப்படியும் எட்டரையில் இருந்து ஒன்பதுக்குள் செங்கல்பட்டு புகை வண்டி நிலையத்தில் சந்திப்பது போல வந்து விடுங்கள்” என்றார். முதல் நாள் பேசும்போது பேருந்தில் வருவதாகக் கூறியிருந்தேன். அதுவரைக்கூட எதில் பயணம் செய்யப் போகிறோம் என்று முடிவு செய்யாத நான், பூமா சொன்னது போலவே புகை வண்டியில் போவதாக முடிவு செய்து புறப்பட்டேன்.

கோடம்பாக்கம் புகைவண்டி நிலையம் சென்று, அங்கு என் வாகனத்தைப் பார்க் செய்து விட்டு உள்ளே சென்றேன். செல்வதற்கும் திரும்பி வருவதற்குமான டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டேன். “தாம்பரம் புகைவண்டி என்றால் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் உண்டு. செங்கல்பட்டு புகைவண்டி அரைமணி நேரத்திற்கு ஒன்றுதான்” என்று என் அண்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. புகைவண்டிக்காகக் காத்திருக்க வேண்டுமோ என்று நினைத்து திரும்புகையில் சத்தமே இல்லாது அமைதியாக ஊர்ந்து வந்தது செங்கல்பட்டு புகைவண்டி. நல்ல வேலைகள் செய்யக் கிளம்பும் போது நம்மை இறைவன் காக்க வைக்க மாட்டான் என்று நினைக்கிறேன்.

இவ்வளவு எளிமையாகப் பயணம் அமையுமா என்பது எனக்குள் வியப்பு. சுகமான பயனமும். ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு நாள் என் இரு சக்கர வாகனத்திற்கு உடல் நிலை சரியில்லை. அன்று வடபழனிவரைப் பேருந்தில் சென்று வர நான் பட்டுள்ள சிரமங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டே சென்றேன். சரியாக ஒரு மணி நேரத்தில் செங்கல்பட்டு இரயில் நிலையம் வந்தது.

இறங்கி அங்கு நாளிதழ் வாங்கினேன். பெண்மணி இதழ் அழகிய வண்ணப்படத்துடன் கண்ணில் பட்டது. அது ஒன்று வாங்கினேன். மாதம்தோறும் அதில் என் கட்டுரையும் இடம்பெறுகிறதே. நண்பர் முகில் தினகரன் பாக்யாவில் அவரது சிறுகதை வந்துள்ளதாகச் சொல்லியிருந்தார். பாக்யாவையும் வாங்கிக்கொண்டு பூமாவின் கணவர் திரு. இராஜேந்திரன் அவர்கள் எண்ணுக்கு அழைத்து நான் செங்கல்பட்டு அடைந்ததைத் தெரிவித்தேன். அவர்தான் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

அவர் வெளியில் இனோவா காருடன் காத்திருப்பதாகக் கூறினார். நாங்கள் வேறொரு விழாவில் முன்னரே சந்தித்திருக்கிறோம். பளிச் முகத்துடன் காரிலிருந்து இறங்கி வரவேற்றார். பூமா அவர்கள் தாம்பரத்தில் இருந்து அங்கு வர வேண்டும் அவர் நான் பயணித்த புகைவண்டியைத் தவற விட்டுவிட்டார். அவருக்காக அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. காரில் அமர்ந்தவாறே நிகழ்வைப் பற்றிக் கேட்டு அறிந்தேன். அவர் சொன்ன தகவல்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை. உச்ச கட்டக் கோபத்தின் பக்க விளைவாக அடி வயிற்றில் என்னவோ செய்ய ஆரம்பித்திருந்து. அந்த விபரம் எழுத்தில் வடிக்க முடியாதது.

சற்று நேரத்தில் பூமா வந்தார்கள். கார் புறப்பட்டது. 13 கி.மி. தூரத்தை நலம் விசாரித்தலில் கடந்தோம். .


தொடரும்....




நினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Tநினைவுகளின் பதிவு - ஆதிரா Hநினைவுகளின் பதிவு - ஆதிரா Iநினைவுகளின் பதிவு - ஆதிரா Rநினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 09, 2013 10:56 pm

ரொம்ப ரொம்ப பிசியாத்தான் இருக்கீக புன்னகை

நல்லாருக்கு நிகழ்வுகள் ஆதிரா - சஸ்பென்ஸ் வேற வெச்சிருக்கீங்க...




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 09, 2013 11:56 pm

யினியவன் wrote:ரொம்ப ரொம்ப பிசியாத்தான் இருக்கீக புன்னகை

நல்லாருக்கு நிகழ்வுகள் ஆதிரா - சஸ்பென்ஸ் வேற வெச்சிருக்கீங்க...
ம்ம்ம் படிங்க... மிகவும் நெகிழ்ச்சியான தருணம் அது. சொல்கிறேன். நன்றி



நினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Tநினைவுகளின் பதிவு - ஆதிரா Hநினைவுகளின் பதிவு - ஆதிரா Iநினைவுகளின் பதிவு - ஆதிரா Rநினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 10, 2013 12:14 am

புதிய தலைமுறை நிகழ்ச்சியா ஆதிரா?




ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jun 10, 2013 8:50 am

சூப்பருங்க நினைவலைகள் தொடரட்டும் அக்கா... அருமையிருக்கு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 10, 2013 9:43 am

யினியவன் wrote:புதிய தலைமுறை நிகழ்ச்சியா ஆதிரா?
கூடாது இல்ல



நினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Tநினைவுகளின் பதிவு - ஆதிரா Hநினைவுகளின் பதிவு - ஆதிரா Iநினைவுகளின் பதிவு - ஆதிரா Rநினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 10, 2013 9:43 am

ரா.ரமேஷ்குமார் wrote: சூப்பருங்க நினைவலைகள் தொடரட்டும் அக்கா... அருமையிருக்கு
நன்றி ரமேஷ்குமார். இதோ பதிவிடுகிறேன்



நினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Tநினைவுகளின் பதிவு - ஆதிரா Hநினைவுகளின் பதிவு - ஆதிரா Iநினைவுகளின் பதிவு - ஆதிரா Rநினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 10, 2013 9:47 am

இருபுறமும் பசுமையான மரங்கள். சாலையில் இடப்புறம் ITWWS, IRULA TRIBAL WOMEN’S WELFARE SOCIETY, THANDARAI என்னும் ஆங்கில எழுத்துகளைத் தாங்கிய போர்டு செல்ல வேண்டிய இடம் வந்து விட்டது என்பதை காட்டியது.

நினைவுகளின் பதிவு - ஆதிரா 179754_546129748762564_1880599730_n

அந்த இடத்தில் இடப்பக்கம் கார் சென்றது. முக்கிய சாலையில் இருந்து ஒரு கிலோ மிட்டர் உள்ளே போனோம்.
‘இயற்கையை நேசிப்போம்; இயற்கையைச் சுவாசிப்போம்” என்னும் வாக்கியத்தின் கீழ் “இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பு” என்னும் சிவப்பு எழுத்துகளைத் தாங்கிய அழகியல் நிறைந்த பலகை வரவேற்றது. கொடைக்கானலின் இதமான காற்றும் சேர்ந்து வரவேற்றதாக எனக்குத் தோன்றியது. மாலை திரும்புவதற்குள் திரு இராஜேந்திரன் அவர்களிடம் நான் இதைப் பல முறை சிலாகித்துக் கூறினேன்.

நினைவுகளின் பதிவு - ஆதிரா 419044_546128755429330_1888123273_n
உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய ஹாலில் சுமார் 45 மாணவிகள் இருந்தார்கள். எழுந்து குட்மானிங் சார், குட்மானிங் மேடம் என்று கூறினர். . “எல்லாரும் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே ஒவ்வொரு பெண்ணின் முகத்தையும் ஆழமாகப் பார்த்தார் இராஜேந்திரன். சிலரின் பெயரையும் சொல்லி அழைத்தார். “சாப்டோம் சார்” என்று கூறிய அவர்கள் முகத்தில் எப்படி மகிழ்ச்சி இருந்ததோ அதே மகிழ்ச்சி திரு இராஜேந்திரன், திருமதி. பூமா முகத்திலும் இருந்ததை என்னால் சுலபமாக உணர முடிந்தது ”நாங்களும் சாப்பிட்டு வந்துருட்டுமா” என்று கேட்டுக்கொண்டே சாப்பிடும் இடத்திற்கு நடந்தனர். சாப்பிடும் இடம் அழகான ஒரு நிழற்குடை. பனை ஓலையால் வேய்ந்தது. உள்ளே ஒரு வட்ட சாப்பாட்டு மேசை. நான்கைந்து நாற்காலிகள்.
ஒரு பெண் உப்புமா, வெங்காயச் சட்னி, கடலைச் சட்னி, எல்லாவற்றையும் அழகான மூடி போட்ட பாத்திரத்தில் கொண்டு வந்து வைத்தார். தட்டுகள், கண்ணாடி டம்ளர், தண்ணீர் ஜக்கு என்று அழகாகக் கொண்டு வந்து வைத்தார்.
இதில் விளக்க என்ன இருக்கிறது என்று நினைப்பது புரிகிறது. இதை ஒரு நாகரிகத்தில் வளர்ந்த இனப்பெண் செய்திருந்தால் நானும் ஆச்சரியப்பட்டு இருக்க மாட்டேன். இன்னும்கூட நாட்டு நடப்பு எதுவும் தெரியாமல் எங்கோ ஒரு மூளையில் கூட்டுப் புழுவாய் வாழ்க்கையைக் கழிக்கும் ஒரு இனத்தில் இவ்வளவு நாகரிகமாகப் பரிமாறத் தெரிந்துள்ளது என்பதுதான் என் வியப்புக்குக் காரணம். என்னதான் அவர்களுக்குப் பயிற்சிகள் கொடுத்திருந்தாலும்….??? வியப்பின் விளிம்பில் நான் இருந்தேன். அவர் கொண்டு வந்து வைக்கும்போது செவிகளைச் சற்று கூர்மையாக்கிக் கொண்டேன். சந்தம் வருகிறதா என்று பார்க்க. ம்ம்ம் வரவே இல்லையே.
அவர்களின் கலாச்சாரம். மண வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய பல சுவையான விஷயங்களைத் திரு. ராஜேந்திரன் கூறிக்கொண்டு இருந்தார். பேசிக்கொண்டே சாப்பிட்டோம். “உப்புமா நன்றாக இருக்கிறது. இவர்களே செய்ததா?” என்றேன். “ஆமாம். இருளர் மகளிர்க்காக ஃபாஸ்ட் ஃபுட் (Fast food) பயிற்சி அரங்கம் ஒன்று நடத்தினோம். அதில் நன்றாக சமைத்தவரை இங்கு பணிக்கு அமர்த்தி விட்டோம்” என்று திரு. இராஜேந்திரன் சொல்லிக்கொண்டு இருக்கும்போது, பீங்கான் கோப்பையில் மூடி வைத்தபடி மூன்று கோப்பை தேநீர் ஒரு தட்டில் வைத்து கொண்டு வந்தார் அப்பெண்.
தேநீரை அருந்திக்கொண்டு இருக்கும்போது பூமா நேரம் ஆயிற்று என்று சைகை காட்ட, “மிகவும் ருசியான டீயைக் கொடுத்து விட்டு அவசரமாக அருந்தச் சொல்கிறீர்களே” என்று சொல்லிக்கொண்டே தேநீரை அருந்தினேன். பொதுவாகவே என் முக்கிய உணவு டீ, காபி. அவைதான் என் உயிர் என்று கூட சொல்லலாம். நன்றாக வேறு இருக்கிறது. கேட்கவா வேண்டும். கோப்பையில் ஒரு சொட்டு தேநீர் கூட மிச்சம் வைக்காமல் குடித்து விட்டுக் கிளம்பினேன். மூவரும் கிளம்பினோம்.
விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள் ஆர்வமாகக் காத்திருக்க உள்ளே நுழைந்தோம். பக்கச் சுவர்கள் இல்லாத காற்றோட்டம் நிறைந்த அரங்கம் அது. முன்னால் போட்டிருந்த விருந்தினர் நாற்காலிகளில் மூவரும் அமர்ந்த பின்னர் இரண்டாவது முறையாக வணக்கம் சொன்ன மாணவர்கள் அமர்ந்தனர். “தெய்வானை எழுந்து வா. ஒரு பாட்டு பாடு” என்றார் இராஜேந்திரன். சுமார் பத்து வயது மதிக்கத் தக்க அவள் முகத்தில் பெரிய தயக்கம். அமர்ந்த படியே இப்படியும் அப்படியும் நான்கைந்து முறை நெளிந்தாள். எழுந்திருக்கவே இல்லை. அவர் பல முறை அழைத்தவுடன் வந்து பாடினாள். “தேவன் எங்கே தேவி எங்கே, நீ காணவில்லை அதுதான் என் மனவேதனை” என்று ஈனஸ்வரத்தில் பாடி முடித்தாள். அவளுக்குச் சக்தி அவ்வளவுதான்.
எழுத்தாளர் பூமா கேட்டுக்கொண்டதன் பேரில் என் சுய விவரத்தை திருமதி. பூமா, திரு. இராஜேந்திரன் இருவரது முகவரிக்கும் மின்னஞ்சல் செய்திருந்தேன். திரு. இராஜேந்திரன் அவர்களின் முகவரி தவறாக இருந்ததால் மின்னஞ்சல் அனுப்பிய உடனே என்னைவிட்டுப் போக மனமில்லாதது போல என் சுயவிவரம் என்னிடமே திரும்பி விட்டது. பூமா அவர்களது மின்னஞ்சலுக்கு அனுப்பிய கோப்பு திறக்கவில்லை என்று கூறிவிட்டார்கள். எதற்கும் இருக்கட்டும் என்று சுருக்கமாக என் விவரங்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக்கொண்டு போனது வசதியாகப் போனது. அவள் பாடி முடித்தவுடன் திரு. இராஜேந்திரன் அந்தத் தாளை வைத்துக் கொண்டு என்னை அறிமுகம் செய்தார். என் பெயரையும் கல்வித்தகுதியையும் கூறியவுடனே பெரிய லிஸ்டே கொடுத்திருக்கிறார்கள். அவர் எழுத்தாளர்; தொலைக்காட்சிகளில் அவ்வப்போது சமூகச் சிந்தனையைப் பற்றி பேசுபவர் என்று சொந்தமாகக் கூறி முடித்தார். தலையெழுத்துக்கு ஏற்றாற்போலதானே கையெழுத்தும் அமையும். என் எழுத்தின் அழகு அப்படி என்று நான் நினைத்துக் கொண்டேன். வேறு என்ன செய்வது. அப்போது பூமா என் காதில் ஏதோ குசுகுசுத்தார்.
நினைவுகளின் பதிவு - ஆதிரா 971991_546128852095987_1093865204_n
அந்தப் பரம இரகசியத்தை அடுத்த பதிவில் சொல்கிறேனே.




நினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Tநினைவுகளின் பதிவு - ஆதிரா Hநினைவுகளின் பதிவு - ஆதிரா Iநினைவுகளின் பதிவு - ஆதிரா Rநினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 10, 2013 10:19 am

எப்படியாவது இங்கு போகாமல் போக்கு காட்டி தப்பிக்க நெனச்ச நீங்க நல்ல வேளை அங்கே சென்றீர்கள - நல்ல அனுபவம் கிடைக்கப் பெற்றீர்கள்.

நல்லாவேற இருந்துச்சாமே காப்பி - நீங்க கலக்கலேல்ல நல்லாத்தான் இருக்கும் புன்னகை




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 10, 2013 11:44 am

யினியவன் wrote:எப்படியாவது இங்கு போகாமல் போக்கு காட்டி தப்பிக்க நெனச்ச நீங்க நல்ல வேளை அங்கே சென்றீர்கள - நல்ல அனுபவம் கிடைக்கப் பெற்றீர்கள்.

நல்லாவேற இருந்துச்சாமே காப்பி - நீங்க கலக்கலேல்ல நல்லாத்தான் இருக்கும் புன்னகை
ஆமாம் நல்ல அனுபவம். இன்னும் எழுதறேன்



நினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Tநினைவுகளின் பதிவு - ஆதிரா Hநினைவுகளின் பதிவு - ஆதிரா Iநினைவுகளின் பதிவு - ஆதிரா Rநினைவுகளின் பதிவு - ஆதிரா Aநினைவுகளின் பதிவு - ஆதிரா Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக