புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
101 Posts - 69%
heezulia
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
sram_1977
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
155 Posts - 75%
heezulia
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%
nahoor
கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_m10கல்வித்துறை செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வித்துறை செய்திகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

JOHN888
JOHN888
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 06/03/2013
http://www.tjtnptf.blogspot.in

PostJOHN888 Sat Jun 08, 2013 7:53 am

First topic message reminder :

முதுகலை பல் மருத்துவப் படிப்பு: தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவு.

"முதுகலை பல் மருத்துவப் படிப்பில், தற்போதைய சட்டம் மற்றும்விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கையை, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்த வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மனிதவள மேம்பாடு: இந்திய பல் மருத்துவ சங்கத்தின், தமிழக சட்டப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர், டாக்டர் வி.முரளி என்பவர் தாக்கல் செய்த மனு: பல் மருத்துவத்தில், முதுகலை படிப்புகளை நடத்தும் கல்லூரிகளுக்கு, பல்கலை கழக மானியக் குழு சட்டம், அதன் விதிமுறைகள், பல் மருத்துவ சட்டம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்புகள் பொருந்தும்.மத்திய, மாநில அரசுகள், பல் மருத்துவ கவுன்சில் வகுக்கும் விதிமுறைகளின்படி, முதுகலை படிப்பில், மாணவர்களை சேர்க்க வேண்டும். தகுதி அடிப்படையில் தான், முதுகலை படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என, பல் மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகள் தெரிவிக்கிறது.இந்த விதிமுறைகள், முதுகலை பல் மருத்துவப் படிப்புகளை நடத்தும், அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அல்லது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அல்லது இரண்டும் சேர்த்து, மாணவர்கள் சேர்க்கையில் பரிசீலிக்கப்படும்.இந்த ஆண்டில், மருத்துவக் கல்வி இயக்குனரகம், பொது நுழைவுத் தேர்வு நடத்தி, தகுதி அடிப்படையிலான ரேங்க் பட்டியலை வெளியிட்டது. இருந்தும், பல கல்லூரிகளில், இந்த தகுதி முறையை பின்பற்றவில்லை. இதனால், தகுதி வாய்ந்த பலர், பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டும், தனியார் மருத்துவ கல்லூரிகள், வெளிப்படை இல்லாமல், மாணவர்கள் சேர்க்கையை நடத்தின. எனவே, மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள, தகுதி அடிப்படையிலான ரேங்க் பட்டியல் அல்லாமல், முதுகலை மருத்துவப் படிப்பில், மாணவர்கள் சேர்க்கை நடத்த, தடை விதிக்க வேண்டும்.ரேங்க் பட்டியல் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை நடப்பதை உறுதி செய்யும்படி, அதிகாரிகளுக்கும், கல்லூரிகளுக்கும் உத்தரவிடவேண்டும். மாணவர்கள் சேர்க்கையை, அரசும், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையும் கண்காணிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.மனுவை, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்ஆஜரானார்.தமிழகத்தில் உள்ள, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளும், முதுகலை பல் மருத்துவப் படிப்பில் உள்ள இடங்களைப் பொருத்தவரை, தற்போதுள்ள சட்டப்படி, பல் மருத்துவ கவுன்சில் மற்றும் முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கான விதிமுறைகள், எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் சுற்றறிக்கை, அரசு உத்தரவில் கூறியுள்ளபடி, மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும்.இடங்களைப் பகிர்ந்து கொள்வதைப் பொருத்தவரை, சட்டத்தில், விதிமுறைகளில் கூறியுள்ளபடி, குறிப்பிட்ட விகிதங்களில், தனியார் கல்லூரிகள் பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த உத்தரவு, ரிட் மனு மீதான, இறுதி உத்தரவைப் பொருத்து அமையும்.மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு, பல் மருத்துவ கவுன்சிலுக்கு, தனியார் கல்லூரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 30, 2021 7:04 pm

மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்!



தமிழ் நாட்டில் பள்ளிகள் திறக்கும் நேரம். மாணவா்கள் இரு கல்வி ஆண்டுகளை இழந்திருக்கின்றனா். பெருந்தொற்று காலத்தின் கற்றல் திறன் இழப்பு குறித்த ஆய்வுகள் வயிற்றைக் கலக்குகின்றன. ஈடு செய்யவியலா இழப்பாக மாறிவிடாமல் தடுக்க வேண்டுமென்றால், அரசும், சமுதாயமும், ஆழ்ந்த புரிதலுடன் போா்க்கால அடிப்படையில் திட்டமிட்டுக் களமிறங்க வேண்டும்.

அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆய்வு ‘இரண்டாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரையான மாணவா்களில் 67% லிருந்து, 89% வரை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஒரு கணிதத் திறனையாவது இழந்திருக்கின்றனா்.

மொழித் திறனைப் பொருத்தவரை இதே வகுப்பு மாணவா்கள், 92%, லிருந்து, 95% வரை ஒரு திறனையாவது இழந்திருக்கின்றனா்’ என்று கூறுகிறது. இந்த ஆய்வு தமிழ்நாட்டில் செய்யப்பட்டதல்ல என்றாலும், தமிழ்நாடு இதிலிருந்து பெருமளவு வேறுபட்டிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆக்ஸ்ஃபாம் ஆய்வும் இதே நிலையைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறது.

தமிழக அரசு அபாயத்தை உணா்ந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. சில நாள்களுக்கு முன் தமிழக நிதி அமைச்சா் ‘அரசுப் பள்ளி மாணவருக்கான தீவிர தீா்க்கத் திட்டம் (மிஷன் மோட் புராஜக்ட்) ஒன்று மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறாா். கரோனா காலத்தில் கையாளப்பட்ட ஆன்லைன், கல்வி டிவி போன்ற பல வகைக் கற்பித்தல் முறைகளினால், 65% அரசுப் பள்ளி மாணவா்கள் பயனடையவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளாா்.

இந்த இழப்பை ஈடு செய்வதற்கு வகுப்பறைக்கு அப்பால் கூடுதல் கற்பித்தல் நடைபெறும். அதற்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறாா். பள்ளிக்கல்வி துறையும் கரோனா கால இழப்பை ஈடுசெய்ய வேண்டுமென்று சுற்றக்கை அனுப்பி இருக்கிறது. பிரச்னையின் பிரம்மாண்டத்தை எதிா்கொள்ள அதன் பல பரிமாணங்களையும் இணைத்த திட்டமிடுதல் தேவை.

முதலாவதாக, மாணவா்கள் அனைவரும் பள்ளிக்குத் திரும்பியுள்ளாா்களா என்பதைக் கண்டறிய வேண்டும். ஏராளமான தனியாா் பள்ளி மாணவா் அரசுப் பள்ளிகளில் சேருகின்றனா் என்பது மகிழ்ச்சிகர செய்தி. அதே சமயம், அரசுப் பள்ளி மாணவா்கள் அனைவரும் பள்ளிகளுக்குத் திரும்பி இருக்கின்றனரா என்பதையும் கண்டறிய வேண்டும்.

தில்லி அரசின் செய்தி ஒன்று 15% மாணவா்கள் பள்ளிக்குத் திரும்பவில்லை என்று கூறுகிறது. ஏராளமான மாணவா்கள் குழந்தைத் தொழிலாளா்களாக மாறியுள்ளனா் என்பதை ஆய்வாளா்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.

முதலில் பள்ளிக்குத் திரும்பும் 9 முதல் 12 வகுப்பு வரையான மாணவா்களில்தான் இந்தப் பேரிழப்பு அதிகம். பழங்குடி, தலித் மாணவா், ஏற்கெனவே விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்தோா் பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரங்களை இழந்து கீழே தள்ளப்பட்டிருக்கிறாா்கள். குறை கூலிக்கு உழைக்கும் குழந்தைகள் குடும்பங்களைத் தங்கள் பிஞ்சுத் தோள்களில் சுமந்து கொண்டிருக்கின்றனா்.

முதல் பொறுப்பு கரோனாவுக்கு முன் இருந்த மாணவா்கள் பள்ளி திரும்பி இருக்கின்றனரா என்று கண்டறிதல். வருகைப் பதிவேட்டை மட்டும் பாா்த்துக் கணக்குக் கொடுப்பதல்ல. திரும்பாதவா்களை கண்டுபிடிப்பதல்ல. ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் தங்கள் முதல் பொறுப்பாக ஏற்க வேண்டியது.

இன்று ஒன்பதாம் வகுப்பில் உள்ள மாணவா் கரோனாவுக்கு முன் ஏழாம் வகுப்பில் இருந்திருப்பாா். ஒவ்வொரு பள்ளியின் ஏழாம் வகுப்பு ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் திரும்பாத ஒவ்வொரு மாணவரும் எங்கே மறைந்து விட்டாா் என்பதைக் கண்டறிய வேண்டும். அவா் குடும்பத்தைத் தொடா்பு கொண்டு, எவ்வாறேனும் மாணவரை மீண்டும் பள்ளிக்குக் கொண்டுவர வேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் இதை செய்ய வேண்டும். தமிழக அரசு இதனைக் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.

அத்துடன், பெண் குழந்தைகள் சிலா் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டுவிட்டனா் என்று தெரிய வருகிறது. குறிப்பாக, குழந்தைத் திருமணங்கள் ஏற்கெனவே நடக்கும் இடங்களில் அவை தற்போது அதிகரித்துள்ளன. இந்தக் குழந்தைகளின் குடும்பங்களையும் ஆசிரியா்கள் சந்தித்து, திருமணம் ஆகி இருந்தாலும், படிப்பைத் தொடர வேண்டும் என்று வேண்டி, பள்ளிகளுக்கு அழைத்துவர வேண்டும்.

பள்ளிகளுக்கு அருகே வேலை செய்து கொண்டிருந்த பலா் கரோனாவினால் வாழ்விழந்து, சொந்த ஊருக்குச் சென்று விட்டனா். அவா்களது குழந்தைகள் தாங்கள் முன்பு படித்த பள்ளிகளுக்குத் திரும்ப இயலாத நிலையில், சென்ற இடத்திலாவது பள்ளியில் சோ்ந்திருக்கின்றனரா என்பதைக் கண்டறிய வேண்டும்.

பெரும்பாலானோா் கைப்பேசி வைத்திருப்போா் என்பதால் இது கடினமல்ல. அந்த மாணவா் முன்பு வசித்த தெருவில் விசாரித்து, அவா் இன்று வசிக்கும் இடத்தைக் கண்டறிந்து, அப்பகுதிப் பள்ளியைத் தொடா்பு கொண்டு, அந்த மாணவரை சோ்க்க வலியுறுத்த வேண்டும். மாவட்டக் கல்வி அதிகாரிகளையும் தொடா்பு கொள்ள வேண்டும்.

இம் முயற்சிகளுக்கெல்லாம் ஆசிரியா், தலைமை ஆசிரியா், கல்வித் துறை அதிகாரிகள் மெனக்கெட வேண்டும் என்பது உண்மை. மாணவரிடம் அக்கறையும், பாசமும் கொண்ட ஆசிரியா் தாமாகவே இயற்கையாக எடுக்க வேண்டிய முயற்சிதான் இது. தொற்றுக்குப் பின்னான உலகம் பழைய உலகமல்ல. முன்பு போலவே தொடரலாம் என்ற அலட்சியம் ஏற்றுக்கொள்ள இயலாது.

அடுத்து, அனைத்து மாணவருமே கற்றல் திறன்களை இழந்திருக்கின்றனா். அதை மீட்டெடுக்கும் பணியை எவ்வாறு திட்டமிடுவது? பாடத்திட்ட சுமையைக் குறைப்பது, சில வாரங்கள் இணைப்புப் பாடத்திட்டம் (பிரிட்ஜ் கோா்ஸ்) உருவாக்குவது என்பவை ஓரளவுதான் பயனளிக்கும்.

ஆன்லைனில் ஓரளவு கற்க முடிந்தோா், கொஞ்சம் வசதி படைத்தோா் மற்றவரைக் காட்டிலும் குறைவாக இழந்திருக்கலாம். ஒருவா் கூட்டல் திறனை இழந்து, கழித்தல் திறனைத் தக்க வைத்துள்ளாா். ஒருவா் வாசிக்கும் திறனைத் தக்க வைத்து, எழுதும் திறனை இழந்துள்ளாா். இவா்கள் அனைவருக்கும் அனைவருக்கும் ஒரே அளவு (ஒன் சைஸ் ஃபிட் ஆல்) என்ற அணுகுமுறை பொருந்தாது. ஒரே மாதிரியான ஈடு செய்யும் திட்டம் பயனளிக்காது.

ஒவ்வொரு மாணவரும் இழந்தது எது, பெற வேண்டியது எது என்பதை ஆசிரியா் கண்டறிந்து ஈடு செய்ய வேண்டும். அனைவரையும் ஒன்றாக அமர வைத்து, மனப்பாடம் செய்து சொல்லச் செய்வது பயனளிக்காது. இதற்கு, இன்று பள்ளியில் வந்து சேரும் மாணவா் குறித்த தொடக்க நிலை ஆய்வு (பேஸ்லைன் சா்வே) செய்ய வேண்டும். அங்கிருந்து தொடங்கி, விரைவில் இழப்பை ஈடு செய்ய வேண்டும்.

ஒரு வகுப்பு மாணவரின் கற்றல் திறனை பொதுவாக கணிக்கும்போது, வகுப்பில் முன்னணி மாணவரை அளவுகோலாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இன்று தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவா், சில வசதிகள் காரணமாக, ஓரளவு முன்னணியில் இருக்கலாம்.

அவா்களை அளவுகோலாக வைத்து, முழு வகுப்பின் நிலையை கணித்துவிடக் கூடாது. மற்ற மாணவருக்கு இது அநீதி இழைப்பதாகிவிடும். திறன்களை அளிப்பது மட்டுமல்ல, மாணவா் இழந்துவிட்ட தன்னம்பிக்கையை அவா்களுக்கு ஊட்டும் கல்வியாகவும் இது இருக்க வேண்டும்.

மாணவா் திறன் மீட்கும் இப்பணி பெற்றோா் பங்கேற்புடன், அவா்கள் முன்னிலையில் நடக்க வேண்டும். தங்கள் குழந்தை பெற்றிருக்கும் திறன்கள் எவை, பெற வேண்டியவை எவை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டும். தொடக்கப் புள்ளியிலிருந்து, மாணவரின் பயணம் எவ்வாறு செல்கிறது என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெற்றோா் முன் எடுத்துக் காட்டி, நம்பிக்கை அளிக்க வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு இதில் பெரும் பங்கு அளிக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு என்பது இந்தியாவில் பள்ளிக் கல்வியை வரையறுக்கும் கல்வி உரிமைச் சட்டம், 2009, ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவ வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கும் அதிகார அமைப்பு. தமிழ் நாட்டில் கேலிக்கூத்தாக, செயலற்றுக் கிடக்கும் அமைப்பு. 75% பெற்றோா்களும், 50% பெண்களும் கொண்ட இந்த அமைப்பிற்கு உயிரூட்டி, கல்வி மீட்பு மேற்பாா்வைக்கான பொறுப்பை அவா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இன்று பள்ளி திரும்பும் மாணவா் இழந்தது கல்வியை மட்டுமல்ல. பரிதாபகரமான ஊட்டச் சத்து குறைபாடு அவா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. உடல் நலிந்து, எலும்பும், தோலுமாகத்தான் பெரும்பாலான மாணவா் திரும்புவா். பள்ளிகள் மாா்ச் 2020 இல் மூடப்பட்ட பின், சில மாதங்கள் அரசுப் பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலானோா் பட்டினியில்தான் கிடந்தனா். அதற்குப் பின்தான் தமிழக அரசு விழித்தெழுந்து, உலா் உணவு மாணவருக்கு அளிக்கத் தொடங்கிற்று.

உலா் உணவு மதிய உணவிற்கு ஈடாகாது. மாணவருக்கு அளிக்கப்படும் உலா் உணவு பசித்திருக்கும் குடும்பத்தினா் அனைவருடன் பகிா்ந்து உண்ணப்படுகிறது. ஒரு சிறு பகுதிதான் மாணவருக்குக் கிடைக்கிறது. பல மாதங்கள் இழந்த ஊட்டச் சத்தை மீட்கும் வகையில் இன்று மதிய உணவில் ஊட்டச்சத்து கூட்டப்பட வேண்டும்.

அத்துடன், காலை உணவும் அளிக்கப்பட வேண்டும். வாழ்விழந்த குடும்பங்களின் மாணவா் வெறும் வயிற்றுடன்தான் இன்று பள்ளிக்கு வருவா். அவா்கள் பசி மயக்கத்தில் எதைக் கற்றுக் கொள்வா்?

இது ஒரு தலைமுறையின் சோகம். தமிழக அரசு அசையா உறுதியுடன், வருங்காலத் தலைமுறையைக் காக்கும் என்று நம்புவோம்.

கட்டுரையாளா்:
முன்னாள் துணைவேந்தா்,
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம்.



கல்வித்துறை செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 30, 2021 7:32 pm

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. வெளியான புதிய அறிவிப்பு…!!!


-
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. கொரோனா காரணமாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது .அதன்படி 50% என்ற வகையில் சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் அனைத்து பள்ளிகளிலும் தூய்மையான நிகழ்வுகள் 2021 என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி செப்டம்பர் 1 முதல் 15 வரை சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 – தூய்மை உறுதிமொழி தினம்

செப்டம்பர் 2 – தூய்மை விழிப்புணர்வு தினம்

செப்டம்பர் 3 – சமூக விழிப்புணர்வு தினம்

செப்டம்பர் 4, 5 – பசுமைப் பள்ளி இயக்க நாட்கள்

செப்டம்பர் 6, 7 – தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல்

செப்டம்பர் 8 – கைகழுவுதல் தினம்

செப்டம்பர் 9, 10 – தன் சுத்தம் மற்றும் சுகாதாரம்

செப்டம்பர் 11, 12 – தூய்மை நிகழ்வு கண்காட்சிகள்

செப்டம்பர் 15 – பரிசுகள் வழங்குதல்

நன்றி- செய்திசோலை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 30, 2021 7:35 pm

செப்.,1முதல் மாணவர்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம்..!!



தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில்
வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை மறுநாள் முதல் பள்ளி மற்றும் கல்லூரி
மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்
என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
தெரிவித்திருக்கிறார்..

சீருடை அல்லது அடையாள அட்டையுடன் பாஸ் இல்லாமல்
மாணவர்கள் பயணிக்கலாம். அரசு கல்லூரி, அரசு ஐடிஐ,
பாலிடெக்னிக் மாணவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள
அட்டையை காண்பித்து பயணிக்கலாம்.
-
செய்திசோலை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக