புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
156 Posts - 79%
heezulia
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
3 Posts - 2%
Pampu
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
1 Post - 1%
prajai
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
321 Posts - 78%
heezulia
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
8 Posts - 2%
prajai
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 மலையாளம் செம்மொழியா ?  Poll_m10 மலையாளம் செம்மொழியா ?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையாளம் செம்மொழியா ?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 30, 2013 11:44 am

இந்திய நடுவண் அரசு மலையாள மொழிக்கு செம்மொழி தகுதி வழங்க தீர்மானித்துள்ளது. மலையாள மொழி சுமார் 3 கோடியே 30 லட்சம் பேரால் உலகம் எங்கும் பேசப்படுகின்றது. கடந்த நூற்றாண்டில் பல உலகத் தரம் வாய்ந்த இலக்கியப் படைப்புக்களை உருவாக்கியுள்ளது. இருந்த போதும் மலையாளம் எவ்வகையில் செம்மொழியாகும் என்ற வினாவை உலகம் எங்கும் உள்ள மொழியியல் வல்லுநர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

மலையாள மொழிக்கு செம்மொழி தகுதியை வழங்கியதை கேரள அரசும், அரசியல்வாதிகளும் வரவேற்று உள்ளனர். மலையாளத்துக்கு செம்மொழி தகுதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர்கள் ஞானபீட விருது பெற்ற ஒற்றபிலாக்கல் நம்பியாடிகள் வேலு குருப் மற்றும் புதுச்சேரி ராமச்சந்திரன் போன்றோரே.

ஆனால் மலையாளத்தை செம்மொழி என மலையாள இலக்கியவாதிகள் கூறி வருவதை கேரளத்தைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும், இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் முன்னாள் இயக்குநருமான முற்றயில் கோவிந்தமேனோன் சங்கர நாராயணன் கடுமையாக எதிர்ந்திருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு நடைப்பெற்ற மலையாள பாசை வராச்சரண விழாவில் பேசிய போதே இவ்வாறு கூறியிருந்தார்.

மலையாளத்தின் தொன்மத்தை நிறுவ பலர் தேனி, நிலாம்பூர், இடைக்கல் போன்ற இடங்களில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகளில் உள்ள மலையாளச் சொற்களை முன் வைத்தனர். ஆனால் இவை யாவும் மலையாளத்தின் தொன்மையை நிறுவாமல் தமிழின் தொன்மையையே நிறுவும். இதை வைத்துக் கொண்டு பழந்தமிழில் இருந்து இன்றைய தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளைப் போல மலையாளம் கிளைத்து வந்தது எனக் கூறுவதை விமர்ச்சித்து இருந்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு கேந்திர சாகித்திய அகாடமியின் துணைக்குழுவினர் மலையாளத்துக்கு செம்மொழி தகுதி வழங்குவது ஏற்புடையது அல்ல எனக் கூறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008-ஆம் ஆண்டு தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு செம்மொழி தகுதி வழங்க மத்திய அரசு முடிவு செய்த போது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே அரசு தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு செம்மொழி தகுதியை வழங்கியது. இப்போது மலையாள மொழிக்கும் செம்மொழி தகுதியை வழங்கி இருப்பதன் மூலம் தென்னிந்திய மொழிகள் அனைத்துக்கும் செம்மொழி தகுதியைக் கொடுத்துள்ளது.

" சமஸ்கிருதத்திற்கு இணையான உதவியைத் தமிழுக்கு அளிக்க மத்திய அரசு விரும்பவில்லை. எனவேதான் இந்திய மாநில மொழிகள் என்பது போன்று செம்மொழிப் பட்டியலை உருவாக்கி வருகின்றது. அவ்வரிசையில் இன்று மலையாளம் சேர்க்கப்பட்டுள்ளது. " என தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் கூறியுள்ளார். செம்மொழி வரிசையில் அனைத்து இந்திய மொழிகளையும் சேர்க்கப் படும் நாள் வெகு தொலைவில் இல்லை, இதன் மூலம் செம்மொழி தகுதி என்பதை தகுதி இழக்கச் செய்யும் முயற்சியே இதுவாகும்.

"முதல்வராக இருந்த பொழுது கலைஞர் முதலில் 1000 ஆண்டு வரையறைக்கு ஒப்புக்கொண்டதால், வலுத்த எதிர்ப்பினால் 1500 ஆண்டு என மாற்றினார். உன் மொழிக்குத் தகுதி கிடைத்துவிட்டது. அடுத்த மொழிக்குக் கிடைப்பதாக இருந்தால் உனக்கு என்ன என்ற தொனியில் நேரில் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமும் சொல்லி உள்ளார்" என முதல்வராக இருந்த மு. கருணாநிதியின் கவன்மின்மையே காரணம் என இலக்குவனார் திருவள்ளுவன் குற்றம்சாட்டியுள்ளார்.

'செம்மொழி' (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும் என பெர்க்லி பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவரும், மொழியியல் வல்லுநருமான ஜோர்ஜ் எல். கார்ட் குறிப்பிடுகின்றார்.

ஆனால் மலையாள மொழியோ மிக அண்மையக் காலம் வரை முழுவதுமாக தமிழ் மொழியைச் சார்ந்தே இயங்கி வந்தது. சொல்லப் போனால் தமிழின் உட்பிரிவாகவே இருந்துள்ளது.

பழம் தென் திராவிட மொழியில் இருந்து மலையாளமும், தமிழும் சகோதர மொழிகளாக உருவாகின எனக் கூறுவது முறையல்ல, தமிழுக்கும், மலையாளத்துக்கும் உள்ள தொடர்பான பெற்றோருக்கும் - மக்களுக்கும் உள்ள தொடர்பு போன்றது என பேராசிரியர் கிருஸ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

1820-களுக்கு முன்னர் கேரளத்தின் பல சாதி மக்களும் மலையாண்மை, மலபார் தமிழ் என்ற மொழியே பேசி வந்துள்ளனர். பிராமணர், நம்பூதிரிகள் போன்றோரே வடமொழி கலந்த மலையாளத்தை பேசி வந்துள்ளனர்.

1556-யில் கொச்சினில் போர்த்துகேயர்களால் உருவாக்கப்பட்ட டாக்ட்ரினா கிறிஸ்தம் என்ற புத்தகம் ரோமன் எழுத்துக்களால் மலபார் தமிழில் உருவான முதல் புத்தகமாகும். அன்று அங்கு முழு மலையாளம் வழக்கில் இருந்திருந்தால் ஏன் போர்த்துகேயர்கள் மலபார் தமிழில் புத்தகத்தை உருவாக்க வேண்டும்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை உருவாக்கிய ராபர்ட் கால்ட்வேலும் மலையாளம் என்பது தமிழின் கிளை மொழி என்பதை நிறுவியுள்ளார். சேரர்களின் ஆட்சிக்கு பின்னர் கேரளத்தில் புகுந்த பார்ப்பனர்கள் பலரும் கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தி பல பக்தி இலக்கியங்களை உருவாக்கத் தொடங்கினார்கள்.

அந்த வகையிலேயே 16-ம் நூற்றாண்டில் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன் போன்றோரும் தமிழ் வட்டெழுத்துக்களை கைவிட்டு கிரந்த எழுத்துக்களில் எழுதத் தொடங்கினார். இதுவே மலையாள மொழி தனித்துப் போவதற்கான முதற்படியாக இருந்தது. இதேக் காலக் கட்டத்தில் மக்களிடம் கிறித்தவத்தை பரப்பும் நோக்கில் எழுதப்பட்ட தம்பிரான் வணக்கம் என்ற நூலும் கூட மலையாளத் தமிழிலேயே எழுதப்பட்டவை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

17-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசவையில் எழுதப்பட்ட இரவிக்குட்டி பிள்ளைப் போர் என்ற இலக்கிய நூல் கூட கிரந்தத்தில் எழுதப்படவில்லை, மாறாக மலையாண்மை எனப்படும் வட்டெழுத்தில் எழுதப்பட்ட இலக்கிய நூலாகும். இந்த நூல் தமிழ் மொழி நூலாகவே இன்றளவும் கருதப்பட்டு வருகின்றது.

மலையாளத்தை தனி மொழியாக மாற்றியதில் பார்ப்பனர்கள், பிரித்தானியர்களின் பங்கே மிக அதிகமாகும். 1805-களில் கேரளம் முழுவதையும் தமது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்த பிரித்தானியர்கள். வட கேரளத்தை மலபார் மாவட்டமாக மாற்றி சென்னை மாகாணத்தோடு இணைத்துக் கொண்டார்கள்.

அப்போது அங்கு மதப் பணிகளுக்கு சென்ற ஜெர்மானிய, டச்சு சீர்த்திருத்த கிறித்த மதவாதிகளான பெஞ்சமின் பெய்லி, கெ'ர்மன் குண்டர்ட் போன்றோர்கள் வட்டெழுத்துக்களையோ, தமிழ் எழுத்துக்களையோ பயன்படுத்தாமல் நம்பூதிரி பிராமணர்கள் வழங்கி வந்த துளு மொழி எழுத்துக்களை கொண்டு சமஸ்கிருத மயமாக்கப்பட்ட மலையாள மொழியை வளர்த்தெடுத்தார்கள். இவர்களுக்கு பெரும் துணை புரிந்தவர்கள் மலபார் பகுதிகளில் பிரித்தானிய அரசு வேலைகளுக்கு சென்ற தமிழக பார்ப்பனர்கள் தான்.

இதற்கு முக்கிய காரணமே சீர்த்திருத்த கிறித்தவர்கள் தமிழை விட சமஸ்கிருதமே ஐரோப்பிய மொழிகளோடு தொடர்ப்பு பட்டு இருந்ததை அறிந்து கொண்டதாலும், உயர்சாதியினர் சமஸ்கிருதத்தை பயன்படுத்துவதாலும் வடமொழி கலந்த மலையாளத்தை ஊக்குவித்தனர். காலப் போக்கில் துளு கிரந்த எழுத்துக்களில் எழுந்த சமஸ்கிருந்தம் கலந்த மலையாள மொழியை அச்சுத் துறை, பத்திரிக்கை துறைகள், பள்ளிகள் போன்றவற்றில் புகுத்தினார்கள்.

காலப் போக்கில் மக்கள் பேசுகின்ற மொழியை புறக்கணிக்கப்பட்டு ஆதிக்கச் சாதியினராலும், வந்தேறிகளாலும் புகுத்தப்பட்ட புதிய மலையாள மொழி பரப்பப்பட்டது. வேறு வழியின்றி இன்ன பிற மக்களும் அதனைக் கற்றுக் கொண்டனர். மிக அண்மையக் காலம் வரை இலக்கியம், சினிமா போன்றவற்றில் சமஸ்கிருதம் புகுத்தப்பட்ட மலையாளமே பயன்பாட்டில் இருந்தது. இன்றளவு கூட அரசு இயந்திரங்கள் அவற்றையே முன்னிறுத்தி வருகின்றனர். ஆனால் சினிமா, இலக்கியம் போன்றவற்றில் இன்று கணிசமான சமஸ்கிருதம் குறைந்து பச்சை மலையாளம் ( தமிழ் ) பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது.

இவ்வாறான நிலையில் மலையாளத்திற்கும் செம்மொழி தகுதி வழங்கி இருப்பதன் மூலம் தமிழை இழிவுப் படுத்தவே முயன்றுள்ளது மத்திய காங்கிரஸ் அரசாங்கம். இதற்கு துணையாக கேரள அரசியல்வாதிகளும், சில இலக்கியவாதிகளும், தமிழகத்தைச் சேர்ந்தோரும் துணை நிற்கின்றனர். இருந்த போதும் முற்றயில் கோவிந்தமேனோன் சங்கர நாராயணன் போன்ற வரலாற்று அறிஞர்கள் "எந்த மொழிக்கும் செம்மொழி தகுதி வழங்கும் உரிமை எந்தவொரு அரசுக்கும் இல்லை என" இவ்வகையான கேலிக் கூத்துக்களை கண்டித்திருப்பது பாராட்டத்தக்கவை ஆகும்.

~ இக்பால் செல்வன்

 மலையாளம் செம்மொழியா ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 30, 2013 11:47 am

பிரபலங்களுக்கு முனைவர் பட்டம் தருவது போல் ஆகிட்டது
மொழிகளுக்கு செம்மொழி பட்டம் வழங்கறது - சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 30, 2013 11:59 am

மலையாளம் செம்மொழி கட்டுரையை படிக்கவே சிரிப்பா வருது , மத்தியில் இருக்கும் மலையாள ஆதிக்க சக்திகளால் இப்படி தங்களுக்கு தானே certificate கொடுத்ததுக்க முடியும் ஆனால் உண்மை என்று ஒன்று இருக்குல்ல.

இன்னும் கொஞ்ச நாளில் தமிழே மலையாளத்துல இருந்து உருவானது தான் என்று சொல்லுவார்கள் அதை எதிர்க்க கூட முடியாமல் நாம் நமக்கென்ன என்று இருக்க போகிறோம். புன்னகை

"முதல்வராக இருந்த பொழுது கலைஞர் முதலில் 1000 ஆண்டு வரையறைக்கு ஒப்புக்கொண்டதால், வலுத்த எதிர்ப்பினால் 1500 ஆண்டு என மாற்றினார். உன் மொழிக்குத் தகுதி கிடைத்துவிட்டது. அடுத்த மொழிக்குக் கிடைப்பதாக இருந்தால் உனக்கு என்ன என்ற தொனியில் நேரில் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமும் சொல்லி உள்ளார்" என முதல்வராக இருந்த மு. கருணாநிதியின் கவன்மின்மையே காரணம் என இலக்குவனார் திருவள்ளுவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழுக்கும் தமிழினத்திற்கும் வாய்த்த சாபம் இந்த கருணாநிதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 30, 2013 12:03 pm

மத்தியில் மல்லுக்களின் ஆதிக்கம் செல்லுபடியாகிறது
அதற்காக எடுப்பார் கைபிள்ளையாக கலஞ்சரை கைப்புள்ளயா
ஆக்குவதே தமிழகத்தில் தொழிலாகி போயிடிச்சு புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 12:05 pm

ராஜா wrote:இன்னும் கொஞ்ச நாளில் தமிழே மலையாளத்துல இருந்து உருவானது தான் என்று சொல்லுவார்கள் அதை எதிர்க்க கூட முடியாமல் நாம் நமக்கென்ன என்று இருக்க போகிறோம். புன்னகை
சூப்பரா சொன்னிங்கன்னே அண்ணே கொச்சின் பேலஸில் மலையாளம் தனி மொழி பழமையான மொழின்னு சில பல கல்வெட்டுகள் தயார் பண்ணி ம்யுசியத்துல வச்சிருக்காங்க தெரியுமா எல்லாம் கோழிகோடு பகுதியில் இருந்து எடுத்ததாம் படிக்கவே காமடியா இருந்துது

ஈகரை தமிழ் களஞ்சியம்  மலையாளம் செம்மொழியா ?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 12:22 pm

மத்தியில் மலையாளிகள் ஆதிக்கம் இருக்கும் போது இது போன்ற செய்திகள் ஒன்றும் வியப்பில்லை. சொல்ல போனால் கொஞ்ச நாளில் மலையாளம் இந்தியாவின் துணை தேசிய மொழியானாலும் ஆகும்.

இப்படியே பண்ணுனா இந்தியா பீசா மாதிரி தான் ஆகும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 30, 2013 12:27 pm

ராஜு சரவணன் wrote:மத்தியில் மலையாளிகள் ஆதிக்கம் இருக்கும் போது இது போன்ற செய்திகள் ஒன்றும் வியப்பில்லை. சொல்ல போனால் கொஞ்ச நாளில் மலையாளம் இந்தியாவின் துணை தேசிய மொழியானாலும் ஆகும்.
already Gluf நாடுகளில் துணை தேசிய மொழியா ஆகிவிட்டது. இங்குள்ள அரசு அலுவலகங்கள் , தொலைபேசி நிலையத்தின் ப்ரோவுச்சர் போன்றவற்றில் ஆங்கிலம் , அரபி இவைகளுக்கு அடுத்து இந்த தேசிய மொழியை காணலாம் புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 12:30 pm

யினியவன் wrote:பிரபலங்களுக்கு முனைவர் பட்டம் தருவது போல் ஆகிட்டது
மொழிகளுக்கு செம்மொழி பட்டம் வழங்கறது - சூப்பருங்க

பேசுவது மலையாளம் எனும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நம் தமிழ். எழுதுவது திரிக்கப்பட்ட தமிழ் எழுத்துவடிவம், இதுல இவங்களுக்கு செம்மொழி தகுதி வேறு.

விளக்குவது வெறும் குச்சியாம்
கொப்பளிப்பது நல்ல பன்னீராம்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 1:31 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:மத்தியில் மலையாளிகள் ஆதிக்கம் இருக்கும் போது இது போன்ற செய்திகள் ஒன்றும் வியப்பில்லை. சொல்ல போனால் கொஞ்ச நாளில் மலையாளம் இந்தியாவின் துணை தேசிய மொழியானாலும் ஆகும்.
already Gluf நாடுகளில் துணை தேசிய மொழியா ஆகிவிட்டது. இங்குள்ள அரசு அலுவலகங்கள் , தொலைபேசி நிலையத்தின் ப்ரோவுச்சர் போன்றவற்றில் ஆங்கிலம் , அரபி இவைகளுக்கு அடுத்து இந்த தேசிய மொழியை காணலாம் புன்னகை

தேசிய மொழியா ???

 மலையாளம் செம்மொழியா ?  M மலையாளம் செம்மொழியா ?  U மலையாளம் செம்மொழியா ?  T மலையாளம் செம்மொழியா ?  H மலையாளம் செம்மொழியா ?  U மலையாளம் செம்மொழியா ?  M மலையாளம் செம்மொழியா ?  O மலையாளம் செம்மொழியா ?  H மலையாளம் செம்மொழியா ?  A மலையாளம் செம்மொழியா ?  M மலையாளம் செம்மொழியா ?  E மலையாளம் செம்மொழியா ?  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 1:32 pm

யினியவன் wrote:பிரபலங்களுக்கு முனைவர் பட்டம் தருவது போல் ஆகிட்டது
மொழிகளுக்கு செம்மொழி பட்டம் வழங்கறது - சூப்பருங்க

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

 மலையாளம் செம்மொழியா ?  M மலையாளம் செம்மொழியா ?  U மலையாளம் செம்மொழியா ?  T மலையாளம் செம்மொழியா ?  H மலையாளம் செம்மொழியா ?  U மலையாளம் செம்மொழியா ?  M மலையாளம் செம்மொழியா ?  O மலையாளம் செம்மொழியா ?  H மலையாளம் செம்மொழியா ?  A மலையாளம் செம்மொழியா ?  M மலையாளம் செம்மொழியா ?  E மலையாளம் செம்மொழியா ?  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக