புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_m10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_m10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_m10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_m10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_m10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_m10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_m10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_m10மனிதனும், மருத்துவர்களும்.... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும், மருத்துவர்களும்....


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 9:08 am


அந்தப் பிரம்மாண்டமான மருத்துவமனையின், ஐ.சி.யு., அறைக்கு வெளியே கவலை தோய்ந்த முகத்துடன் பலர் அமர்ந்திருந்தனர். ஐ.சி.யு., அறைக்குள், ஆறு பேர், தங்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அறைக்கு வெளியே தவிப்போடு காத்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் எண்ணங்களோடு போராடி கொண்டிருந்தனர்.

சாலை விபத்தில் மாட்டிக் கொண்ட, 20 வயது மகனுக்காக, இறைவனிடம் என்ன வேண்டிக் கொள்வது என்று கூட தெரியாமல், பிரமை பிடித்தவரைப் போல் உட்கார்ந்திருந்தார் அவனுடைய தந்தை.

"இன்னும் 24 மணி நேரம் போனாத்தான் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா, முடியாதாங்கிறதே தெரியும்.'

கைக்குட்டையை வாயில் புதைத்துக் கொண்டு, ஓரமாக போய் உட்கார்ந்து கொண்டார் பையனின் தந்தை. பையனின் தாய், அமெரிக்காவிற்கு பெண் வீட்டிற்கு போயிருக்கிறாள். செய்தி தெரிந்து, விமானத்தில் பறந்து வந்து கொண்டிருக்கிறாள். அவள் வரும் வரை, பையன் இருப்பானா?

வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் வள்ளிசாக, இரண்டு லட்சம் ரூபாயை ஏப்பம் விட்டு விட்டனர். மருத்துவமனையில், பணம் வேண்டும் என்றால், ஒரு சின்ன சீட்டில் வெறும் எண்களை மட்டும் எழுதி தருகின்றனர். இரண்டு மணி நேரத்திற்குள் கட்டாவிட்டால், வார்டு பாயிலிருந்து பெரிய டாக்டர் வரை எல்லாரும், "பணத்தை கட்டிவிடுங்கள். இல்லாவிட்டால் பிரச்னையாகிவிடும்...' என்று அறிவுரை சொல்கின்றனர்.

பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவரை பார்த்தார் பையனின் தந்தை. அவருக்கு எழுபது வயது இருக்கும். கருப்பாக இருந்தார். முகத்தில் கம்பீரமும், பணக்காரகளையும் தெரிந்தது.

"எப்படி இருந்தால் என்ன? இங்கே இரண்டு நாள் உட்கார்ந்திருந்தால் கம்பீரத்தை குலைத்து, பணத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்வர். நோயாளியை பிணமாக அனுப்புவார்களா இல்லை உயிருடன் அனுப்புவார்களா என்பதில் வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம். ஆனால், கூட வந்தவர்களை நடைப்பிணங்களாக தான், வீட்டிற்கு அனுப்புவர்!

"பாவம். நெடுநேரமாக இதே நிலையில் அமர்ந்திருக்கிறாரோ ஏதாவது பேச்சுக் கொடுத்து பார்ப்போம் என்று தோன்றியது. அடுத்தவர்கள் பிரச்னையைப் பற்றி தெரிந்து கொள்வது, இந்தச் சமயத்தில் கொஞ்சம் ஆறுதலாக இருக்குமே என்று நினைத்தார், அந்த தந்தை...'

""உள்ள யாரு இருக்காங்க?''

திடுக்கிட்டு நிமிர்ந்தார் பெரியவர். அவர் கண்களைப் பக்கத்தில் பார்த்தபோது தான், அதில் பொதிந்திருந்த அதிர்ச்சியும், சோகமும் தெரிந்தது. கண்கள் சிவந்திருப்பதை வைத்துப் பார்த்தால், நேற்று இரவு இவர், ஒரு வினாடி கூடத் தூங்கியிருக்க மாட்டார் என்று தெரிந்தது.

பையனின் தந்தையை வெறித்துப் பார்த்து விட்டு, மீண்டும் மவுனமானார் பெரியவர்.

""உள்ள யாரு இருக்காங்கன்னு கேட்டேன்.''

பெரியவருக்கு காது கேட்கவில்லை என்று நினைத்து, இன்னும் கொஞ்சம் சத்தமாக பேசினார் பையனின் தந்தை.

""என் மனைவி.''

""ஆக்சிடெண்டா?''

""இல்ல. ஸ்ட்ரோக்.''

""பயப்பட ஒண்ணும் இல்லையே...''

விரக்தியாய் சிரித்தார் அவர்.

பெரியவரின், தோள் மேல் ஆதரவாக கை போட்டார் பையனின் தந்தை.

""நீங்க...''

""பலராமன். டாக்டர் பலராமன்.''

""நான் லோகநாதன். இந்தியன் பாங்க்ல வேலை பார்க்கிறேன். எப்படி ஆச்சு?''

""திடீர்ன்னு.''

பாவமாக இருந்தது லோகநாதனுக்கு. நடந்த நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தார் பலராமன்.

கறுப்பாக ஒடிசலாக, கிராமத்திலிருந்து வந்த, பலராமனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கொஞ்சம் அதிகமாகவே கலாய்த்தனர். அப்போதெல்லாம், பலராமனுக்கு ஆதரவாக நின்றது ஷீலா மட்டுமே. இருவருமே, ஒரே வகுப்பில் இருந்தனர். பார்க்க சுமாராக இருந்த மாணவன் பலராமன், படிப்பில் படுசுட்டியாக இருந்தான். பேராசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பளீரென்று பதில் சொல்வான்.

ஷீலாவை மிகவும் கவர்ந்தது, பலராமன் கையில் இருந்த திறமை தான். பிணங்களை அறுக்கும் போது, பலராமனின் கை பேசும். எந்த அளவிற்கு தேவையோ, அந்த அளவிற்கு கச்சிதமாக அறுப்பான். பலராமனிடம் தான், பாடங்களில் சந்தேகங்கள் கேட்பாள் ஷீலா. ஒரு நாள், அவள் கையைப் பிடித்து, எப்படி வெட்டுவது என்று சொல்லிக் கொடுத்தான் பலராமன்.

பலராமனின் தந்தை இறந்த போது, அவனைத் தேற்றி படிப்பில் முழு கவனம் செலுத்த வைத்தவள் ஷீலா தான். தேர்வு கட்டணம் கூடச் செலுத்த முடியாமல் இருந்தவனுக்கு உதவி செய்து, ஊக்கம் கொடுத்தவள் ஷீலா.

பலராமனுக்கு அறுவை சிகிச்சைத்துறையில், முதுகலை வகுப்பில் இடம் கிடைத்த போது, ஷீலாவிற்கு ஒரு பெரிய ஓட்டலில் விருந்து கொடுத்தான். விடை பெறும் போது, அவள் கைகளை பற்றியபடி, தன் காதலை கம்பீரமாக சொன்னான். அந்த ஆண்டே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த லோகநாதனை பார்த்தார் பலராமன்...

""ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல. 47 ஆண்டு ஒண்ணா வாழ்ந்திருக்கோம்யா. 47 ஆண்டுல, ஒரு தரம் கூட சண்டை போட்டதில்ல தெயுமா?''

திடீரென்று பலராமன், இப்படி பேசியதைக் கேட்டு திடுக்கிட்டார் லோகநாதன். ஆனால், எதுவும் பேசவில்லை. மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் பலராமன்.

கணவன் - மனைவி அன்னியோன்யமாக இருந்தது உண்மை தான். ஆனால், அவர்கள் வாழ்க்கை வெறும் ரோஜா படுக்கையாக இல்லை. சமயத்தில் நெருஞ்சி முட்கள் குத்தத்தான் செய்தன.

ஒரு மகன். ஒரு மகள் என்ற அளவான குடும்பம். ஷீலா நகரின் புகழ் பெற்ற மகப்பேறு மருத்துவரானாள். பலராமன் பிளாஸ்டிக் சர்ஜரானார். இருவரும் தங்கள் தொழிலில் பெயரும், புகழும், பணமும் சம்பாதித்தனர்.

அவர்களுடைய மகன் வினோத், கட்டடக்கலை படிப்பு முடித்து, சென்னையில் தொழில் செய்து கொண்டிருந்தான்.

அவர்களுடைய மகள் மாலினி மருத்துவம் படித்தாள். அறுவை சிகிச்சை துறையில், முதுகலை பயின்று இப்போது, பெங்களூரில் ஒரு நரம்பியல் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

திடீரென்று வினோத், ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்த போது, பலராமனும், ஷீலாவும் நொறுங்கிப் போயினர். ஒரு மாதம் வரை, அவர்கள் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் பிரமை பிடித்தவர்களைப் போல் இருந்தனர். பின், மனதை ஒருவாறு தேற்றிக் கொண்டனர்.

ஷீலாவின் கையைப் பிடித்துக் கொண்டு இருந்த போது, மகனின் இழப்பைக் கூடத் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது யார் கையை பிடித்துக் கொள்வது? எனக்கென்று யார் இருக்கின்றனர்? என்ற நினைப்பு பலராமனின் கண்ணீர் சுரப்பிகளை தூண்டி விட்டது.

பலராமன் அழுவதைப் பார்த்த லோகநாதன், அவர் தோளை அழுந்த பற்றினார்.

""புள்ள செத்த போது, அவ இருந்தாய்யா. தாங்கிகிட்டேன். இப்போ எனக்குன்னு யாருய்யா இருக்கா? நான் என்னய்யா செய்யப் போறேன்; தெரியாமத் தான் கேக்கறேன்... நான் என்னய்யா தப்பு செய்தேன்?''

இப்போது கண்ணீர் பொங்கியது லோகநாதனுக்கு.

கணவன், மனைவி இருவருமே ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருந்தனர். தங்கள் குழந்தைகளுடன், அதிக நேரம் செலவிட்டனர். அடிக்கடி சேர்ந்து வெளியூர் போவர். வாரம், ஒரு நாள் குடும்பத்துடன் வெளியில் சாப்பாடு.என்றாலும், பலராமன் - ஷீலாவின் தொழில் பக்தி அசாதாரணமானது. அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று, இரவு பகலாக வேலை பார்க்க மாட்டார்கள். ஆனால், ஒரு அவசரம், ஆத்திரம் என்றால் நோயாளியைக் காப்பாற்ற, எதையும் விட்டுக் கொடுப்பர்.

மகளின் திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. நகரின் பிரபலங்கள் வரிசையில் நின்று வாழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது, ஷீலாவிற்கு மருந்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. ஷீலாவிடம் வேலை பார்க்கும் ஆயாவிற்கு பிரசவ நேரம். பிரசவத்தில் ஆயிரத்தெட்டு சிக்கல். ஷீலா வந்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று, நர்ஸ் போனில் அழுதாள்.

பலராமனிடம் விஷயத்தை சொன்னாள் ஷீலா...

"நீ போய்ட்டு வா. நான் பாத்துக்கறேன். எப்படியாவது அம்மாவையும், குழந்தையையும் காப்பாத்திட்டு வா...' என்று வாழ்த்தி அனுப்பினார் பலராமன்.

தன், ஒரே மகளின் திருமண வரவேற்பு விருந்தைச் சாப்பிடாமல், இரவு முழுவதும் போராடி, அந்தப் பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றி, விடியற்காலை 2:00 மணிக்கு வீட்டிற்கு வந்தாள்.

அழைப்பு மணியை, அவள் அடிக்கும் முன்பே கதவு திறந்தது. அவளுக்காக காத்துக் கொண்டிருந்தார் பலராமன்.

"நீங்க எதுக்கு இன்னும் தூங்காம...'

"நீ இல்லாம, நான் என்னிக்குத் தூங்கியிருக்கேன் டார்லிங். உனக்காக டிபன் கேரியர்ல விருந்து சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். வா, என் கையால போடறேன்...'




மனிதனும், மருத்துவர்களும்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 9:08 am


தன் கணவன் மார்பில் முகம் புதைந்து, நெடுநேரம் அழுது கொண்டிருந்தாள் ஷீலா.

""அவள மாதிரி ஒருத்திய... இனிமே எங்கய்யா பாக்கப் போறேன்.''

லோகநாதனும், பலராமனும் சேர்ந்து அழுதனர்.

குழந்தைகள், சிறகு முளைத்துப் பறந்து போய் விட்டால், வீட்டில் வெறுமை தான் மிஞ்சும் என்பர். ஆனால், பலராமனுக்கும், ஷீலாவிற்கும் அப்படி நடக்கவில்லை.

பிள்ளைகள் வீட்டை விட்டுப் போனதும், பலராமன் வெளியுலக நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டார். அரசாங்க வேலையில்இருந்து ஓய்வு பெற்றதும், ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் நோயாளிகளை பார்த்தார். இரவு 8:00 மணிக்கு மேல் கணவன், மனைவி இருவரும் வீட்டில் தான் இருப்பர். "டிவி'யை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை.

அன்று நடந்த நிகழ்வுகளை பரிமாறிக் கொள்வர். பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வர். சில ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில், ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, தோட்டத்தில் அமர்ந்து தேனீர் பருகுவர்.

இரண்டு நாட்களுக்கு முன், அப்படி அமர்ந்திருந்த போது தான் திடீரென்று ஷீலாவின் முகம் வித்தியாசமாகக் கோணிக்கொள்வதை பார்த்த பலராமன். பதறிப் போனார். அவள் கீழே விழாமல் தாங்கிக் கொண்டார்.

அதன் பின் ஆம்புலன்ஸ், மருத்துவமனை, காத்திருப்பு, பதைபதைப்பு, துடிப்பு என்று ஆகிவிட்டது. அதன்பின், இப்போது தான் பேசவே செய்தார் பலராமன்.

""அவ ஒண்ணுமே செய்ய வேண்டாம்யா. பேச வேண்டாம். சமைக்க வேண்டாம். சும்மா என் கூட இருந்தாலே போதும். என்ன ஆகப் போகுதோ?''

""ஒண்ணும் ஆகாது டாக்டர். உங்க நல்ல மனசுக்கு ஒண்ணும் ஆகாது. கவலப்படாம இருங்க.''

""நீங்க எப்படி இங்க?''

லோகநாதன், தன் சோகத்தை சொன்னார். அவர் தோள் மேல் கை போட்டுத் தழுவி கொண்டார் பலராமன். பத்து ஆண்டுகளுக்கு முன், தன் மகன் சாலை விபத்தில் இறந்ததை நினைத்துக் கொண்டார். ஆனால், வெளியே ஒன்றும் சொல்லவில்லை.

வெள்ளை கோட் அணிந்த டாக்டர்கள் கும்பலாக பலராமன் இருக்குமிடம் நோக்கி வந்தனர். பலராமன், அவர்களை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவர்கள் அனைவருமே, அவருடைய மாணவர்கள். ஒருகாலத்தில், அவரிடம் படித்தவர்கள்.

""டாக்டர் நிலைமை மோசமா இருக்கு. வைட்டல் சைன்ஸ் பேடிங். என்ன செய்யறதுன்னே தெரியல.''

சொன்ன டாக்டரை, முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் பலராமன். சட்டென்று எழுந்து நின்றார்.

""எனக்கு, ஒரு உதவி செய்ய முடியுமா?''

""சொல்லுங்க டாக்டர். காத்துக்கிட்டு இருக்கோம்.''

""இதோ இவரோட பையன் ஆக்சிடண்ட் ஆகி, ஐ.சி.யு.,வுல இருக்கான். நாலு மணி நேரமா, இவருக்கு யாருமே எந்தக் தகவலுமே சொல்லல. கொஞ்சம் விசாரிச்சுச் சொல்றீங்களா? பெத்த மனசுய்யா. துடிச்சிட்டு இருக்கு. பையன் பேர சொல்லுய்யா.''

குரல் நடுங்க பையன் பேரை சொன்னார் லோகநாதன்.

இரண்டு டாக்டர்கள் உள்ளே ஓடினர்.

அவர்கள் திரும்பி வரும் வரை, யாருமே எதுவுமே பேசவில்லை.

""டாக்டர்... பையன் ஆபத்தை தாண்டி விட்டான். பிழைச்சுக்குவான். முகத்துல மட்டும் கொஞ்சம் பெரிய தழும்பா வரும்ன்னு.''

""லோகநாதன். இனிமே கவலைப்பட வேண்டாம். முகத் தழும்ப பத்திக் கவலைப்படாதய்யா. அத நான் பார்த்துக்குறேன். டாக்டர்ஸ், கொஞ்ச நாள்ல நானே, அவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யறேன்.''

""டாக்டர், நீங்க எப்படி...''

""இப்போ ஷீலா, என் பக்கத்துல இருந்தாலும் அதத்தான்யா சொல்லியிருப்பா.''

""டாக்டர்... அத எப்படி சொல்றதுன்னே தெரியல.''

""சொல்லுங்க.''

""உங்க மனைவி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. இப்ப வென்டிலேட்டர் வைக்கறதா வேண்டாமான்னு தெரியல.''

ஒரு இளவயது டாக்டர், தன் கருத்தை சொன்னார்.

""வென்டிலேட்டர் வச்சிரலாம் டாக்டர். அற்புதங்கள், எப்ப வேணும்னாலும் நடக்கலாம்.''

ஒரு வயதான டாக்டர் அதனை மறுத்தார்... ""மூளை பெரும்பாலும் செயலிழந்து போச்சு. இனிமே பிழைச்சி வந்தாலும், ஆயிரத்தெட்டு பிரச்னை வரலாம். அவங்கள கடைசி காலத்துல நிம்மதியாக போக விடுங்களேன்.''

என்ன சொல்வது என்று தெரியவில்லை பலராமனுக்கு. டாக்டர்கள் அவரிடம் மிகவும் பவ்யமாக பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த லோகநாதன், சற்றுத் தள்ளிப் போய் உட்கார்ந்திருந்தார்.

அவரிடம் ஆலோசனை கேட்க வந்த டாக்டர்கள், பொறுமையை இழந்தனர்.

""ஏதாவது ஒரு முடிவ சொல்லுங்க டாக்டர்.''

"இத முடிச்சிட்டு எங்களுக்கு அடுத்த கேசுக்கு போகணும்ல்ல...' என்ற அர்த்தம், அந்த வார்த்தைகளில் தொனித்தது.

""எனக்கு, ஒரு அஞ்சு நிமிஷம் டைம் கொடுக்க முடியுமா?''

டாக்டர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

""தாராளமாக.''

டாக்டர்கள், மரியாதையாக விலகி நின்று கொண்டனர்.

சிந்தனையில் ஆழ்ந்தார் பலராமன். இன்றைய மருத்துவத்தில் மனிதத்தன்மை குறைந்து விட்டது. ஏறக்குறைய மறைந்தே விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன், அவரது மாணவன் ஒருவன், மருத்துவ கல்லூரி முதல்வராக பதவி ஏற்ற போது, அவன் பேசுவதைக் கேட்க போயிருந்தார் பலராமன். "வசூல்ராஜா' படத்தில் பிரகாஷ்ராஜ் பேசுவதை, அப்படியே ஒப்பித்தான் அந்த மாணவன். அதற்குப் பலத்த கைதட்டல் வேறு கிடைத்தது.

"நம்மளப் பொறுத்த மட்டும் நோயாளிங்கறது, ஒரு புள்ளி விவரம். இதயத்துடிப்பு. ரத்த ஓட்டம். உடம்புல இருக்கற சூட்டோட அளவு, ரத்தத்துல இருக்கற, சர்க்கரை அளவு, சிறுநீர்ல இருக்கற அல்புமின். இதுமாதிரி, சில புள்ளிவிவரங்கள் தான். அதுல எந்தப் புள்ளிவிவரம் நல்லது, எது கெட்டதுன்னு தெரிஞ்சிக்கிட்டு, அதுக்கு ஆக வேண்டியதை செய்யணும். அதவிட்டுட்டு, நாம நோயாளிய மனுஷனாப் பாத்து, அவன் படற வலிக்காக நாம வேதனைப்பட்டா, நாம டாக்டராக இருக்கவே முடியாது. ஏன் மனுஷனாக் கூட வாழ முடியாது. பைத்தியம் பிடிச்சி அலைய வேண்டியது தான்...' என்றான்.

அதிர்ச்சியாக இருந்தது பலராமனுக்கு.

நோயாளியை, ஒரு புள்ளிவிவரமாக பார்க்கும் மருத்துவர்களுக்கு வென்டிலேட்டர் என்பது ஒரு உபகரணம் தான். அதை வைப்பதா, வேண்டாமா என்பது, ஒரு நிர்வாக பிரச்னை.ரத்தமும், சதையும் உள்ள ஒரு மனிதனின் அன்பு, அவருக்கு தேவைப்பட்டது. தள்ளி அமர்ந்திருந்த லோகநாதனைப் பார்த்துச் சைகை செய்தார்.

பாய்ந்தோடி வந்தார் லோகநாதன்.

""உக்காருய்யா. இந்தப் பிரச்னைக்கு என்னய்யா செய்யலாம்?''

தன் மனைவிக்கு, வென்டிலேட்டர் வைப்பதா, வேண்டாமா என்று, நகரின் புகழ் பெற்ற மருத்துவர், ஒரு அரசு வங்கி குமாஸ்தாவான லோகநாதனிடம் ஆலோசனை கேட்டார்.

மருத்துவர்கள் குழு சற்றுத் தள்ளி நின்று, பலராமனை லேசான பயத்துடனும், அதீதக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார் லோகநாதன்...

""மூணு மாசத்துக்கு முன், எனக்கும் என் மனைவிக்கும் ஒரு உரையாடல் நடந்தது.

""எனக்கு உடம்பு ரொம்ப முடியாம போய், மருத்துவமனையில் சாகக் கிடந்து, வென்டிலேட்டர் வைக்கும் நிலைமைக்கு வந்தா, எதையும் வைக்க விட வேண்டாம் என்று நான் கண்டிப்பாக கூறி விடுவேன் என்றேன். அப்போ என் மனைவி, அவருக்கு அந்த நிலைமை வந்தால் நான் என்ன செய்வேன் என்று அதே கேள்வியை திருப்பி கேட்டாள்.

""அதற்கு நான், "உலகத்துல என்ன என்ன மிஷின் இருக்கோ எல்லாத்தையும் வைக்கச் சொல்வேன். நீ பேச்சு மூச்சு இல்லாமப் படுத்துக்கிட்டு இருந்தாலும் எனக்கு நீ வேணும்டி. நீ இல்லாத உலகத்த, என்னால கற்பனை கூட செஞ்சி பாக்க முடியாதடி. அப்படி ஒரு நிலைமை வந்தா, என் சொத்து பூரா வித்து, மருத்துவமனைக்கு காசக் கட்டிட்டு, உன் பக்கத்துலேயே சோறு தண்ணியில்லாம உக்கார்ந்துருப்பேண்டி'ன்னு என்று சொன்னேன்.''

சில நொடிகள் லோகநாதனை முறைத்துப் பார்த்தார் பலராமன். இருவர் கண்களிலிருந்தும், "குபுக்' என்று தண்ணீர் பொங்கியது. இருவரும் சொல்லி வைத்த மாதிரி, ஒரே நேரத்தில் எழுந்து நின்றனர்.

பெயரும், புகழும் பணமும் மிக அதிகமாக சம்பாதித்த, அந்த மருத்துவத்துறை வல்லுனர், அந்த அரசு வங்கி குமாஸ்தாவை அணைத்துக் கொண்டு அழத் துவங்கினார். மருத்துவர்களால் கொடுக்க முடியாத ஆறுதலை, ஒரு மனிதனிடம் பெற்று விட்ட பலராமன், தொடர்ந்து அழுது கொண்டிருந்தார்.

வரலொட்டி ரெங்கசாமி



மனிதனும், மருத்துவர்களும்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 9:54 am

மனதை பாரமாக்கும் கதை சிவா , பகிவுக்கு நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக