புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை பாட ஆசை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !      நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கவிதை பாட ஆசை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !      நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கவிதை பாட ஆசை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !      நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 60%
heezulia
கவிதை பாட ஆசை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !      நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கவிதை பாட ஆசை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !      நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கவிதை பாட ஆசை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !      நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
கவிதை பாட ஆசை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !      நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கவிதை பாட ஆசை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !      நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கவிதை பாட ஆசை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !      நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை பாட ஆசை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon May 27, 2013 9:13 pm

கவிதை பாட ஆசை !

நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
viji.masi@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

விஜயா பப்ளிகேசன் .தென்றல் .100.அன்னை தெரசா நகர் ,மடிப்பாக்கம் ,சென்னை .91. விலை ரூபாய் 12.

நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் "என்னைக் கவிதை எழுதத் தூண்டிய மடிப்பாக்கம் பாரதி இயக்கத்திற்கு " என்று எழுதி நூலை காணிக்கையாக்கி உள்ளார்கள் .சொற்கள் நடந்தால் வசனம் .சொற்கள் நடனமாடினால் கவிதை .இந்த நூலில் சொற்கள் களி நடனம் புரிந்துள்ளன .உள்ளத்தில் உள்ளது கவிதை .உண்மையை உரைப்பது கவிதை .இயற்கையாகப் பொங்கி வருவது கவிதை .படித்ததும் மனதில் பதிவது கவிதை .இப்படி கவிதைக்கு பல்வேறு விளக்கங்கள் எழுதிக் கொண்டே போகலாம் .இந்த நூலில் உள்ள கவிதைகள் கவிதைக்கான எல்லா விளக்கங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது .நல்ல கவிதை நூலை இவ்வாளவு ஆண்டுகளாக வாசிக்க விலையே என்று வருத்தப்பட்டேன் .இந்நூல் பதிப்பித்த ஆண்டு 1999.இன்றும் பொருந்துவதாக கவிதைகள் உள்ளது .அதுதான் நூல் ஆசிரியர் வெற்றி .

மரபுக் கவிஞர் ஆலந்தூர் கோ .மோகனரங்கன் ,புலவர் திலகம் சி .வித்யாசாகரம் இருவரின் அணிந்துரையும் அழகுரை .
இந்நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் , பதச்சோறாக சில கவிதைகள் மட்டும் உங்கள் பார்வைக்கு .

கவிதை பாட ஆசை !
நான் கவிதை பாட வேண்டும் !
நான் கவிஞனாக வேண்டும் !
எதுகையும் மோனையும் தெரியுமா ?
தெரியாது .
இலக்கணம் பயிலாதவர் பாட்டெழுதுவதா ?
எதுகையும் மோனையும்
எதுவென்று தெரிந்துதான்
எழுதுகோலை எடுக்க வேண்டுமெனில்
என் எண்ணங்கள் -
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு ஓடிவரும் கருத்துக்கள்
கரை போடா முடியாது !
காணாமல் பொய் விடுமே !

இலக்கணம் என்ற பூட்டுப் போட்டுப் பூட்டிக் கொள்ளாமல் மிகவும் சுதந்திரமாக கவிதை வடித்துள்ளார்கள் .மனதில் பட்டத்தை கவிதை ஆக்கி உள்ளேன் என்று முதல் கவிதையிலேயே முரசு கொட்டி உள்ளார்கள் .
.
இயற்கை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு கவிதை எழுதும் ஆற்றல் மிக இயல்பாக வசப்படும் .நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணிஅவர்கள் இயற்கையின் ரசிகை என்பதால் ரசித்து கவிதை எழுதி உள்ளார்கள் .

கொட்டிக் கிடக்கும்
பவள மல்லி பார்த்தேன் !
பாரிஜாதமலரே ! பாரிஜாதமலரே !
பவளக் காம்போடு
பழுப்பு வெண்மையில்
பச்சை இலைக் கொம்பு நுனியில்
பார்ப்பவர் உள்ளம் கொள்கிறாயே !
உன்னைப் படைத்தவர் யார் ?

இந்தக் கவிதை படிக்கும் வாசகர்களுக்கு மனத்திரையில் மலர் , இலை, இயற்கை காட்சியாக விரியும் என்பது உறுதி .

சின்னச் சின்ன மின்னல் போல சின்னச் சின்ன துளிப்பாக்கள் சிந்திக்க வைக்கின்றன .வாழ்வியல் சூத்திரம் சொல்லித் தருகின்றன .

வேலை செய் !

வெற்றி வேண்டுமெனில்
வேலை செய் !
செல்வம் வேண்டுமெனில்
செயல் தொடங்கு !
புகழ் வேண்டுமெனில்
புண்ணியம் செய் !

அறிவு !

தோண்டத் தோண்ட கிணற்றில் தண்ணீர் !
படிக்கப் படிக்க உனக்குள் பன்னீர் - அறிவுப்பன்னீர் !

படிப்பின் அவசியத்தை மிக எளிமையாகவும், இனிமையாகவும் சொற்ச்சிக்கனத்துடன் உணர்த்தி உள்ளார்கள் .

தற்போது நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் கவிதை ,கதை ,கட்டுரை ,விமர்சனம் எழுதும்
பன்முக ஆற்றல் மிக்கவராக இருந்தபோதிலும் .முதலில் எழுதிய கவிதைதான் என்பதால் இந்நூலில் தனி முத்திரை பதித்து உள்ளார்கள் .ஹைக்கூ கவிதைகளும் உள்ளன .அதில் ஒன்று.

நீந்தச் சென்றவார்கள்
மூழ்கி விட்டார்கள்
மதுப்பழக்கம் !

டாஸ்மாக் கடை சென்று சும்மா பீர் மட்டும் தான் என்று ஆரம்பித்து பிராந்தியில் மூழ்கும் இன்றைய இளைய தலைமுறை கவனத்தில் கொள்ள வேண்டிய ஹைக்கூ இது .

கவிதை காணாமல் போகிறது !
காலைப் பொழுது
கவிதைப் பிறக்கும் பொழுது
கவிதை காட்டாற்று வெள்ளமாய்க்
கரை புரண்டு ஓடி வந்து நெஞ்சில் மோதுகிறது !
காகிதம் எடுத்துப் பேனா பிடித்து
வெள்ளத்தை வெள்ளைத்தாளில்
தாவிப் பிடித்து அடக்க நினைக்கையில்
காபி ரெடியா ?குரல் ஒழிக்க
சாவி கொடுத்த பொம்மையாய்
கால்கள் ச்மையலறை நோக்கக்
கைகள் காபி கலக்க
கரை புரண்டு வந்த கவிதை
காணாமல் போயிற்று !

இலக்கிய நண்பர்களே உங்கள் மனைவிக்கு கவிதை எழுதும் ஆற்றல் இருந்து ,காலையில் கவிதை எழுத அமர்ந்தால் ,ஆணாதிக்க சிந்தனை விடுத்து நாமே காபி கலந்து கொண்டால் .தமிழுக்கு நல்ல கவிதை கிடைக்கும் .பெண்ணுரிமையை மிக மென்மையாய் கவிதையில் உணர்த்து உள்ளார்கள் .பாராட்டுக்கள் .நட்சத்திர விடுதியில் சமையல் கலைஞராக இருப்பார் .ஆனால் தன் வீட்டில் சமையல் அறைக்குள் நுழையவே மாட்டார் .

ஆண்களே ஆணாதிக்கம் விட்டு
அனுசரனைக்கு வாருங்கள் .
அறிவிலோங்கிக் சமமென்றால்
ஆண் ஒரு நாளும் பெண் ஒரு நாளும்
சமைத்தால் தவறில்லையே !
ஆண்மகனே உன்னுருவில்
பெண்மகள் பாதியென்றால்
காலையில் நீ காபி போடு !
கவிதைபாடத் துடிக்கும்
கண்மணிக்கு கைக்குதவு !

ஆண் ,பெண் சமம் என்று மேடையில் பேசி,இதழ்களில் எழுதும் முற்போக்குவாதிகள் கூட வீட்டில் மனைவிக்கு சமையலறையில் உதவுவதே இல்லை என்பதே கசப்பான உண்மை .நானும் இதில் அடக்கம் .ஆணாதிக்க சிந்தனையை அகற்றி .மனைவிக்கு உதவுங்கள் என்று புத்திப் புகட்டும் விதமாக கவிதை உள்ளது .இது தான் பெண்ணியக் கவிதை .

கருப்பனைக் கை தூக்கி விடுங்க !

கருப்பனைக் கை தூக்கி விடுங்க
கவிதை வானில் அவனை
நிரந்தர நிலாவாக்கவிட்டாலும்
நட்சத்திர அந்தஸ்தாவது கொடுங்க !
மின்னி விட்டுப் போகட்டும் .!

எனக்கு இந்தக் கவிதை படித்ததும் .ஒருமுறை கவியரசு கண்ணதாசன் அவர் கவிதையை ஒரு மாணவனை படிக்க வைக்கிறார் யாரும் கை தட்ட வில்லை .மாணவன் கவிதையை கவியரசு கண்ணதாசன் படிக்கிறார் பலத்த கைதட்டல் .நடந்த உண்மையை சொல்லி விட்டு படைப்பாளி யார் ? என்று பார்த்து ரசிப்பதை விடுத்தது படைப்பை ரசியுங்கள் என்று உணர்த்தினார் .கருப்பனுக்காக குரல் கொடுத்த நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்களுக்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து நீங்கள் கவிதைத் துறையில் ஆர்வம் செலுத்துங்கள் .விரைவில் ஹைக்கூ நூல் ஒன்று வெளியிட வாழ்த்துக்கள் .


--

.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக