புதிய பதிவுகள்
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
3 Posts - 2%
jairam
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
1 Post - 1%
சிவா
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
1 Post - 1%
Manimegala
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
17 Posts - 4%
prajai
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
8 Posts - 2%
jairam
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதே சிரிப்பு! Poll_c10அதே சிரிப்பு! Poll_m10அதே சிரிப்பு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதே சிரிப்பு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 8:46 pm

“வாம்மா அர்ச்சனா... அம்மாவுக்கு எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொல்றாரு’ என்று அகிலா மாமி கேட்டபோது, பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை அர்ச்சனாவால்.
“அப்படியேதான் இருக்காங்க. மூச்சு விடறது மட்டும்தான் இருக்கு. வேறு எந்த அசைவும் இல்லை. நாங்க யார் வரோம், போறோம்னு ஒண்ணும் தெரியாது. டாக்டர்கள் பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க. வேற என்ன சொல்றதுன்னு புரியலை மாமி.’
மேலே பேச முடியாமல் நெஞ்சை அடைத்தத.
“ஓய்வே இல்லாம உழைச்சிருக்கா உங்கம்மா! அதான் கடவுளா பார்த்து கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துருக்கார்னு நெனைச்சுக்கோ. நல்ல மனசு படைச்ச அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது. நீ கவலைப்படாதே.’
அகிலா மாமி ஆறுதல்தான் சொன்னாள். ஆனால், அது துக்கத்தை மேலும் கிளறிவிட்டது. மாமியிடம் சொல்லிவிட்டு மாடிக்குப் போனாள் அர்ச்சனா. கதவைத் திறந்ததும், அழுகைதான் வந்தது. காலையில் பூட்டி விட்டுப் போன வீடு. அணிலுக்கு பயந்து ஜன்னல்களையும் மூடிவைத்துவிட்டுப்போனதால், குப்பென்ற புழுக்கம், வாரி இறைந்து கிடந்த புத்தகங்கள், துணி மணிகள்...
அம்மா இருந்தால், வீடு இப்படியா இருக்கும்? ஒரு தூசு, துரும்பு இருக்குமா? சுத்தமான வீட்டில், விளக்கேற்றி, ஊதுபத்தி மணம் காற்றில் கலந்து வரும். மலர்ந்த முகத்துடன், சூடான டிபனுடன் காத்துக் கொண்டு இருப்பாள் அம்மா.
“வா அர்ச்சனா, முருங்கைக்கீரை போட்டு, சூடா அடை பண்ணியிருக்கேன். முதல்ல சாப்பிடு. அப்புறமோ எல்லா வேலையும் பார்த்துக்கலாம்’ என்பாள்.
அன்பை மட்டுமே காட்டியிருந்த அம்மாவுக்கு தான் பதிலுக்கு என்ன கொடுத்திருக்கிறோம்? வெறுப்பு கலந்த வார்த்தைகளை நெருப்பாய் தானே கொட்டியிருக்கிறோம்!
தானே தேர்ந்தெடுத்த காதல் வாழ்க்கை தப்பாய் போனதற்கு அம்மாவா காரணம்? இத்தனைக்கும், அம்மா, “வேண்டாம் அர்ச்சனா, என் மனசுக்கு சரியாப்படல’ என்று சொல்லத் தான் செய்தாள். காதல் மட்டும்தானே இருந்தது! அம்மாவின் அறிவுரை புறந்தள்ளப்பட்டது. பிடிவாதம் பிடித்துத்தான் மணம் புரிந்தாள். அப்போது கூட, “என் பேச்சை மீறி கல்யாணம் பண்ணிக்கற, நீ நல்லாவே இருக்கமாட்டே’ என்றெல்லாம் அம்மா சபிக்கவில்லை.
“பட்டுன்னு வார்த்தைய போடற வழக்கம் இருக்கு உனக்கு. போற இடத்துல பொறுமையா நடந்துக்கோ’ என்று ஆசீர்வதித்துத்தான் அனுப்பினாள். ஆனால் அம்மாவின் சந்தேகம் நிஜமானது. காதலன் வேஷம் கலைந்து, கணவன் முகத்தைக் காட்டியபோது, அர்ச்சனாவால், தாங்க முடியவில்லை. குடிகாரன், முழுச்சோம்பேறி, பெரிய வேலையில் இருப்பதாக சொன்னதெல்லாம் பொய் என்று சீட்டுக்கட்டுகள் கலைந்து விழுந்தன. பின் எந்த தைரியத்தில் காதல் செய்தான்? மணமேடைக்கு வந்தான்? கேட்ட அர்ச்சனாவுக்கு, பதிலுக்குக் கிடைத்ததெல்லாம் அடியும், உதையும்தான். பொறுக்க முடியாமல், எட்டு மாத கர்ப்பிணியாக அம்மா வீட்டுக்குத்தான் வர முடிந்தது.
அன்றிலிருந்து இதோ குழந்தை அருணுக்கு எட்டு வயது கூட ஆகிவிட்டது. நேற்றுவரை, “ஏன் என் பேச்சை மீறினாய்?’ என்று ஒரு நாள் கூட கேட்டதில்லை. ஆறுதல் தந்து அணைத்துக் கொண்டாள். வீட்டையும், குழந்தை அருணையும் கவனமாகப் பார்த்துக் கொண்டாள். அப்பா, என்றோ வாங்கிப் போட்டிருந்த வீடும், அவர் இறந்தபோது கம்பெனியில் கொடுத்த பணமும், கூடுதலாகக் கைகொடுத்தது.
அக்கா நந்தனாவுக்க திட்டமிட்ட வாழ்க்கை. அப்பா இருந்தபோதே மணம் முடித்த விட்டார். ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள். அன்பான கணவன், மாமனார், மாமியார் என்ற சொந்தங்கள். சாதாரண குடும்பத்தில் வரும் சிறு பிரச்னைகள் மட்டுமே அவளுக்கு. தன்னைப்போல வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கவில்லை என்ற எண்ணம் அர்ச்சனாவுக்கு எப்போதுமே உண்டு. ஆனால் அதற்கு அம்மா என்ன செய்வாள்? இந்தப் பக்குவமெல்லாம், அம்மா செயலாய் இருந்து, நடமாடிக் கொண்டு இருந்தபோது புரியவில்லையே!
எப்போதும் போல, அன்றும் அதிகாலையில் அம்மா எழுந்தாள். வாசலில் கோலமிட்டாள், குளித்தாள்; சமைத்தாள்.
“என்னவோ போல படபடன்னு வருது அர்ச்சனா. தலை சுத்துது’ என்றாள். அப்போதுகூட “ஒண்ணும் சாப்பிடாம, பட்டினியா இருந்திருப்பே, சாப்பிட்டா சரியாப்போயிடும்’ என்று அலட்சியமாக பதில் சொல்லிவிட்டுக் குளிக்கப் போய்விட்டாள். திரும்பி வந்தபோது, தரையில் நிலைகுலைந்து கிடந்த அம்மாவைப் பார்த்ததும், விபரீதம் உணர்ந்தாள். அக்கம் பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனையில் சேர்த்தாள். இன்றோடு நாற்பது நாட்கள் ஓடிவிட்டது. அன்று மூடிய கண்களை அம்மா திறக்கவே இல்லை. “உயர் ரத்த அழுத்தம்’ என்றார்கள். “தலையில் கட்டி’ என்றார்கள். ஆபரேஷன் வேண்டும் என்றார்கள். வேண்டாம் என்றார்கள். சரியாகலாம் என்றார்கள் டாக்டர்கள். புரியாத மருந்துலக வார்த்தைகள்! புரிந்துதான் என்ன ஆகப் போகிறது? அம்மா கண் விழிப்பாளா? நடமாடுவாளா? எப்போது? எல்லாமே பதிலற்ற கேள்விகளாக மட்டுமே நிற்க விட்டன. அம்மாவை காலையில் அக்கா சென்று கவனித்துக் கொள்ள, மாலையில் அர்ச்சனாவும், இரவு நர்ஸ் கவனிப்புமாக நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
அம்மாவின் அருமை, வீடு வெறுமையானதும் தான் புரிகிறது. ஒருவேளை அப்படியே காலன் அழைத்துக் கொள்வானோ? அன்பாய், அழுத்தமாய் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு சிரிப்பாளே! அந்த சிரிப்பை இனி ஒரு முறை பர்க்கவே முடியாமல் போய்விடுமோ? கதற வேண்டும் போலிருந்தது அர்ச்சனாவுக்கு.
ஒரு நாளாவது அம்மாவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருப்போமா! கால்களைப் பிடித்து விட்டிருப்போமா? பக்கத்தில் உட்கார்ந்து பிரியமாய் பேசினதுகூட இல்லை. தன் வெறுமைக்கு வடிகாலாய்தான் அந்த தெய்வத்தை வைத்திருந்தோம் என்ற உண்மை முகத்தில் அறைந்தது.
“அம்மா மீண்டு வாயேன். சாவை ஜெயித்து விடேன். என் அன்பை காண்பிக்க ஒரு சந்தர்ப்பம் கொடு.’
செல்ஃபோனில் ஏதோ மேஸேஜ் வந்தது. அலுவலகத்தோழிதான். “நாளைக்கு மதர்ஸ் டே’ என வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தாள்.
மறுநாள் எழுந்தபோதும் அம்மாவின் நினைவுகளே ஆக்கிரமித்து இருந்தன. சமைக்கக்கூடத் தோன்றாமல், சலிப்புடன் உட்கார்ந்தாள். வழக்கமாக சீக்கிரம் வேலைக்கு வரும் ஜோதி, அன்று எட்டு மணிக்குத்தான் வந்தாள்.
“என்ன ஜோதி, இத்தனை லேட்டு? தூங்கிட்டியா?’
“இல்லேக்கா... எங்க வீட்டுப் பக்கம், “முதியோர் இல்லம்’ ஒண்ணு இருக்கு. அங்க சமையல் செஞ்சுகிட்டு இருந்த அம்மாவுக்கு திடீர்னு உடம்புக்கு முடியலையாம். அதான் ஓனர் அம்மா எங்களைக் கூப்பிட்டாங்க. நானும், செல்வியும் போயி பால் காய்ச்சி, கஞ்சி போட்டு எல்லாருக்கும் குடுத்தோம். மொத்தமா நாற்பது பேரு இருந்தாங்க. ராத்திரி சமைச்ச பாத்திரமெல்லாம் கிடந்தது. தேய்ச்சுப் போட்டுட்டு வந்தோம். அதான் லேட்டு!’
“சரி மதியம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க?’
“யாருக்குத் தெரியும்? வேலை இருக்குன்னு கிளம்பியாந்துட்டோம்’
“இரு ஜோதி சூடா காப்பி தரேன், குடிச்சுட்டுப் போ.’
காப்பி கலக்கும்போது, சட்டென யோசனை வந்தது. மதியான சாப்பாட்டை நாமே சமைத்துக் கொடுத்தால் என்ன, நம் அம்மாவுக்கு ஒருவேளை உட்கார வைத்து பிரியமாய் சாப்பாடு போட்டதில்லை. அந்த சந்தர்ப்பம் திரும்ப கிடைக்குமோ தெரியாது. முதியோர் இல்லத்தில் இருக்கும் முதிய தாய்மார்களை, அம்மாவாக நினைத்துக் கொண்டால்? மனதில் அரிக்கும் குற்ற உணர்வு கொஞ்சமே குறையாதா? தன் எண்ணத்தை ஜோதியிடமும் சொன்னாள்.
“ஜோதி, நேத்து ஆபீஸ்லந்து வரும்போது நிறைய காய்கறி வாங்கிட்டு வந்தேன். இங்கேயே சமைச்சு முதியோர் இல்லத்துல குடுத்துடலாம். செல்விய கொஞ்சம் கூப்பிட்டுக்கோ. கூடமாட உதவி செய்யட்டும். காப்பி குடிச்சுட்டு, பரண்மேல ஏறி பெரிய பாத்திரங்கள் எடுத்துக்குடு, அகிலா மாமிகிட்ட, குக்கரும், பெரிய பேசினும் வாங்கிட்டுவா.’
மளமள உத்தரவிட்டாள். புடைவையைத் தூக்கி சொருகிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். முடியாத உடம்புடன், அகிலா மாமியும் மேலே ஏறிவர, வேலை இன்னும் எளிதானது.
சர்க்கரைப் பொங்கல், காய்கறிகள் போட்ட கதம்ப சாதம், தயிர்சாதம், உருளைக்கிழக்கு பொரியல் என்று மணக்க மணக்க எல்லாம் தயாரானது. அப்பளத்தைப் பொரித்து, கூடையில் போட்டு நிமிர்ந்தபோது, களைப்பையும் மீறி, திருப்தியாக இருந்தது.
ஒரு ஆட்டோவில் வைத்து சாப்பாட்டை எடுத்துச் சென்றாள். எல்லா அம்மாக்களையும் உட்கார வைத்து கவனத்துடன் பரிமாறினாள். வயிறும் மனமும் நிறைந்து அத்தனைபேரும் வாழ்த்தியபோது, நெகிழ்வாக இருந்தது. வணக்கம் சொல்லி விடை பெற்றுக் கிளம்பினாள். மனதிலிருந்த பாரம் குறைந்தது போலிருந்தது. எதையோ செய்த திருப்தி இருந்தது. படி ஏறி வீட்டுக் கதவை திறந்தபோது, செல்ஃபோன் ஒலித்தது. அக்காதான்!
“அர்ச்சனா, அம்மாகிட்ட அசைவு தெரியுதுடி. கண் திறந்து பார்க்கறா. பெரிய டாக்டர் வந்து பார்த்தாரு. அம்மா பிழைச்சு வந்துடுவாங்கன்னு தோணுதுடி’
மகிழ்ச்சியைத் தெரிவித்து ஃபோனை வைத்த அர்ச்சனாவுக்கு, முதியோர் இல்ல “அம்மாக்கள்’ சிரித்தது, அம்மாவின் சிரிப்பு போலவே அச்சு அசலாய் இருந்தது நினைவிலாடியது!

நன்றி : ர. கிருஷ்ணவேணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 24, 2013 9:07 pm

நல்ல கதை பகிர்வு சூப்பருங்க
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




அதே சிரிப்பு! Mஅதே சிரிப்பு! Uஅதே சிரிப்பு! Tஅதே சிரிப்பு! Hஅதே சிரிப்பு! Uஅதே சிரிப்பு! Mஅதே சிரிப்பு! Oஅதே சிரிப்பு! Hஅதே சிரிப்பு! Aஅதே சிரிப்பு! Mஅதே சிரிப்பு! Eஅதே சிரிப்பு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat May 25, 2013 12:44 pm

சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 25, 2013 1:31 pm

நல்ல கதை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 28, 2013 9:33 pm

நன்றி சரவணன், நன்றி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 7:57 pm

அருமையான பதிவு மா....



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக