புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:36 am

» கருத்துப்படம் 01/03/2024
by mohamed nizamudeen Today at 8:52 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:35 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Yesterday at 9:54 pm

» ஷேக்ஸ்பியர் கவிதை மொழிபெயர்ப்பு -பேராசிரியர் ஆ.செம்மலர்
by bharathichandranssn Yesterday at 9:47 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Yesterday at 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Yesterday at 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Yesterday at 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Yesterday at 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Yesterday at 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Yesterday at 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:40 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 8:21 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 8:21 pm

» பாம்புத் தலையில் பாலன் நடனம்-சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:15 pm

» அன்னையின் அறிவுரை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:14 pm

» என் வீட்டுத் தோட்டத்தில்…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:13 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Wed Feb 28, 2024 5:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Feb 28, 2024 4:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_m10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 
79 Posts - 27%
TI Buhari
 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_m10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 
77 Posts - 26%
Dr.S.Soundarapandian
 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_m10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 
63 Posts - 21%
ayyasamy ram
 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_m10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 
55 Posts - 19%
Rutu
 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_m10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 
9 Posts - 3%
Lecy Antone.P
 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_m10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 
4 Posts - 1%
mohamed nizamudeen
 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_m10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_m10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_m10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_m10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_m10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 
12 Posts - 92%
mohamed nizamudeen
 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_m10 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 22, 2013 3:07 am


வாசல் கதவைத் தட்டிவிட்டுப் போய்விட்டான் எமன். நாடகத்துக்கு முதல் விசிலா?

டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்… ‘‘இவ்வளவு பெரிய அட்டாக்… நீங்கள் தப்பிச்சது மிராக்கிள்தான்!’’

தப்பித்தது எதற்காக என்று யோசித்தார் நடேசன்.

உலகத்தில் நடப்பன அனைத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று சிலர் சிலர் சொல்கிறார்கள்; யதேச்சையாக அமைகின்ற ஒற்றுமையை வைத்துக்கொண்டு, அதைக் காரணம் என்று குழப்பிக்கொள்வது முட்டாள் தனம் என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள்.

காரணம் இருக்கிறது என்று நம்பினால், தப்பித்தது அவர் இருப்புக்கு ஓர் அர்த்தம் கற்பித்து, அவருக்கு ஓர் அடையாளத்தைத் தருகிறது.

‘இனிமேல் என்ன சாதனை சாத்தியம், எண்பது வயதுக்கு மேல்? சரி, இதுவரையிலும் தான் என்ன சாதித்திருக்கிறேன்… உண்பது, உறங்குவது, இனப் பெருக்கம் தவிர?’ என்று சிந்தித்தார் நடேசன்.

நல்லவேளை, இனப் பெருக்கம் ஒன்றோடு நின்றுவிட்டது. இதுவே மனித சமுதாயத்துக்குப் பெரிய உதவி இல்லையா?

அவர் தப்பித்தது, எதேச்சையாக நிகழ்ந்துவிட்ட ஓர் ஒற்றுமையாக இருக்கக்கூடும். எமன் ஒரு முக்கியமான ஃபைலைக் கொண்டு வர மறந்திருக்கலாம். எடுத்து வரத் திரும்பிப் போயிருப்பானோ என்னவோ!

“அறுவை சிகிச்சை செய்ய இயலாது. நீங்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று டாக்டர்கள் சொன்னது, எதுவும் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற காரணத்தால் என்பது இப்போது புரிகிறது. ஒரே வாரிசு, போன மாதம் அமெரிக்காவிலிருந்து மூன்று வார விடுப்பில் வந்தபோது, ஆரோக்கியமாக இருந்துவிட்டு, அவன் திரும்பிப் போனவுடன் அவருக்கு இப்படி மாரடைப்பு வந்தால், மகன் மனத்தில் ஓடும் எண்ணங்களை என்னவென்று சொல்ல முடியும்?

“போன மாதம் நான் வந்திருந்த போதே இது வந்திருக்கக் கூடாதா? மறுபடியும் நான் இப்பொழுது ‘லீவ்’ எடுத்தாக வேண்டும்!”

அப்படி அவன் நினைத்தாலும் தப்பில்லை. அவன் ‘பாஸ்’ எப்படிப் பட்டவனோ?

ரயில், விமானம் இவற்றுக்குக் கால அட்டவணை இருப்பது போல், மனிதனுடைய பிறப்புக்கும் இறப்புக்கும் ஒரு அட்டவணை ஏன் இருக்கக் கூடாது? வெளிநாடுகளில் இருக்கும் மகன்களும் மகள்களும் ‘லீவ்’ எடுத்துக்கொண்டு வர எவ்வளவு சௌகர்யமாக இருக்கும்? இரண்டாம் தடவை லீவில் வந்திருக்கிறான், பாவம்… அவருடைய பிள்ளை!

ஆனால், டாக்டர்களாலேயே எதுவும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை! கால அட்டவணை இருந்தால் நிச்சயமற்ற தன்மையும், காலனின் வருகையில் ஒரு சஸ்பென்ஸூம் இருக்காது! அல்லது, பீஷ்மருடைய அதிர்ஷ்டம் இருந்தால், அவர் உத்தராயணம் வரை மரணத்தை தள்ளிப் போட்டது போல், மகனுடைய விடுமுறையை ஒட்டி அவர் தம்முடைய மரணத் தேதியைத் தள்ளிவைத்துக் கொள்ளலாம்.

“நான் பத்து வருஷத்துக்கு முன்னாடியே சொன்னேன்-, அம்மா போனவுடனே- எங்ககூட அமெரிக்காவுக்கு வந்துடுங்கன்னு. நீங்க பிடிவாதமா கேக்கலே!” என்றான் அவர் மகன் பிரபு, மருந்து மாத்திரையை அவரிடம் கொடுத்துக்கொண்டே.

“என்ன ஆகியிருக்கும்… அங்கே‘அட்டாக்’ வந்திருக்காதா?” என்றார் நடேசன்.

“வந்திருக்கலாம். ஆனா, உதவிக்கு நாங்க கூடவே இருப்போமே? டாக்டர் இப்போ உங்ககூட ஒரு ஆள் இருந்துண்டே இருக்கணும்கிறாரே?”

அமெரிக்காவில், கூடவே ஆள் இருந்திருக்க முடியுமா? கணவன், மனைவி இருவரும் வேலைக்குப்போகிறார்கள். அவர்களுடைய இரண்டு மகள்களும் வெளியூர் கல்லூரிகளில் படிக்கிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால், இதற்கு பதில் கூற இயலாமை அவன் மனச் சங்கடத்தை அதிகரிக்கும்.

அவனும் இதைப் பற்றி யோசிக்காமல் இருந்திருக்க மாட்டான். தன் மனச் சமாதானத்துக்காக இப்படி ஏதோ சொல்லிக்கொள்கிறான்.

“இப்போ என்ன செய்யறதுன்னு தெரியலியே! பத்து வருஷத்துக்கு முன்னாடியே வந்திருந்தீங்கன்னா, இந்நேரம் அமெரிக்கன் சிட்டிஸனாகவே ஆகியிருக்கலாம்!” என்றான் பிரபு.

“அப்போ புஷ்ஷுக்குப் பயந்துண்டு ‘ஹார்ட் அட்டாக்’ வந்திருக்காதா?”

“அப்பா… உங்க குதர்க்கத்துக்கு என்னால பதில் சொல்ல முடியாது. நீங்க இனிமே தனியா இந்த வீட்டிலே இருக்க முடியாது. அமெரிக்காவுக்கு என்கூட வர்றதும் சாத்தியமில்லே. டோன்ட் யூ ரியலைஸ் தி சிச்சுவேஷன்?”

“நீ சொல்றது புரியுது. ஆனா, சொல்யூஷன் என் கையிலே இல்லியே! உனக்கே இப்போ புரிஞ்சிருக்கும். எவ்வளவு பெரிய அட்டாக்! அண்ட் ஐ ஹவ்ஸர் வைவ்ட்!”

“மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா? குற்ற உணர்வினாலே நான் கஷ்டப்படணும்னே பேசறீங்களா?”

“நோ! இப்போ என்ன செய்யணும்கிறே… சொல்லு, கேக்கறேன்!”

அவன் சோபாவில் உட்கார்ந்தான். சிறிது நேரம் பேசாமல் உத்தரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தான். சொல்லத் தயங்குகிறான் என்று தோன்றிற்று நடேசனுக்கு.

“சொல்லு, என்ன யோசிக்கிறே?”

“ரிட்டையரிங் ஹோம்ஸ் பத்தி என்ன நினைக்கறீங்க? ஸம் ஆஃப் தெம் ஆர் ரியலிகுட்!’’

“சரி, இந்த வீட்டை என்ன செய்யறது?”

“பூட்டி வெச்சுக்கலாம். வாடகைக்கு விடலாம். விக்கணும்னாலும் விக்கலாம்… வீடு ஒரு பெரிய விஷயமில்லை!’’

“மூணு தலைமுறை இந்த வீட்லே இருந்திருக்கு!”

“இது உங்களோட சென்டி மென்ட்டல் சப்ஜெக்ட்! நான் அதைப் பத்திப் பேச விரும்பலே. உங்களைப் பத்திதான் என் அக்கறை!”

அவருக்கு எது நல்ல ஏற்பாடு என்பதைப் பற்றி அவன் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டான்… சில இடங்களைப் பார்த்துவிட்டும் வந்திருக்கிறான் என்று தெரிந்தது.

“நான் நம்ம வீட்டிலேயே இருக்கிறதிலே உனக்கென்ன ஆட்சேபனை?” என்றார் நடேசன். எழுந்து, சோம்பல் முறித்துக்கொண்டே உலாவ ஆரம்பித்தார்.

“வீட்டை மேனேஜ் பண்ணறது அவ்வளவு சுலபமில்லே, அப்பா! அந்த ‘ஸ்ட்ரெஸ்’ உங்க ஹார்ட்டுக்கு அவ்வளவு நல்ல தில்லேங்கிறார் டாக்டர். “ஹோம்’லே நீங்க நிம்மதியா இருக்கலாம். வேளச்சேரியைத் தாண்டி ஒரு இடத்திலே ஒரு பியூட்டிஃபுல் ஹோம் இருக்கு. அஞ்சு நட்சத்திர ஓட்டல் வசதி. இதைத் தவிர வசதி வேணும்னாலும் நாமே பண்ணிக்கலாம். மொஸைக் தரை, கார்ப்பெட் இல்லே! போட்டுக்கலாமான்னு கேட்டேன். சரின்னுட்டான். உங்களுக்கு என்ன… புத்தகம்தானே படிக்கணும்? உங்க ‘பர்சனல் லைப்ரரி’யை அங்கே ‘மூவ்’ பண்ணிக்கலாம். இப்பெல்லாம் கம்யூனிகேஷன் பத்திக் கவலையே இல்லே. இன்டர்நெட், வீடியோ கான்ஃப்ரன்ஸிங் அது, இதுன்னு வந்தாச்சு.. வி கேன் ஆல்வேஸ் பி இன் டச்! உங்களுக்கு என்ன ஆச்சோன்னு எங்களுக்கும் கவலையில்லாம இருக்கும். ‘கம்யூனிட்டி லைஃப்’, ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடியும். யோசிச்சுச் சொல்லுங்க. எனக்கு நாலு வாரம்தான் ‘லீவு’. அதுக்குள்ள ஏதானும் ஏற்பாடு செய்தாகணும்!”

“நான் என்ன யோசிக்கிறதுக்கு இருக்கு? எனக்காக நீ நிறைய யோசிச்சு வெச்சிருக்கே போல் இருக்கே?”

“அங்கே முழு நேர டாக்டர் ஒருத்தர் இருக்கார். இரண்டு நர்ஸ். கிளினிக், பார்மஸி எல்லாம் இருக்கு. ஸ்பெஷலிஸ்ட் டைப் பார்க்கணும்னாலும் உடனே ஏற்பாடு செய்து தருவா. நீங்க இடத்தைப் பாருங்க, யூ வில் லைக் இட்!’’

நடேசன், உலவிக்கொண்டு இருந்தவர், சோபாவில் உட்கார்ந்தார். கண்களை மூடிக் கொண்டார்.

“என்னப்பா சொல்றீங்க?” என்றான் பிரபு.

இன்னும் இருக்கிற மூணு வாரத்துல இந்த வீட்டை உன்னால வித்துட முடியுமா?”

“ஏன் முடியாது? ஷகரான இடம், பெரிய வீடு, போட்டி போட்டுண்டு வருவாங்க!’’

“யாரையானும் பாத்து வெச்சிருக்கியா?”

“என்னப்பா இப்படிப் பேசறீங்க, நீங்க ‘யெஸ்’னு சொல்லாம நான் விக்கிறதுக்கு ஆளைப் பார்ப்பேனா?” என்றான் பிரபு சற்று கோபத்துடன்.

“உன் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, வாழ்ந்த வீட்ல இருக்கணும்கிற ஆசையே இல்லையா உனக்கு?” என்றார் அவர் கண்களைத் திறந்துகொண்டே.

“அப்பா, நாம கொஞ்சம் பிராக்டிகலா பேசுவோம். நான் திரும்பி வந்து இங்கே இருப்பேனான்னு எனக்கு இப்போ தெரியலே. உலகம் மாறிண்டே இருக்கு. உங்க சென்டிமென்ட் எனக்குப் புரியறது. அதே சமயம் என்னையும் நீங்க புரிஞ்சுக்கணும்..”

நடேசன் ஒன்றும் கூறாமல் அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார். ‘சென்டிமென்ட்டைக் கொன்றுவிடு, அல்லது மூச்சை நிறுத்திவிடு’ என்று பாரதி பாடியிருக்க வேண்டும்.

பிரபுவின் நிலையில் நின்று பார்த்தால் அவனைப் புரிந்துகொள்ள முடிகிறது.

“நாளைக்கு நான் சொன்ன இடத்தைப் பாக்கலாமா, அப்பா?” என்றான் பிரபு.

அவர் ‘சரி’யென்று தலை அசைத்தார்.

நகரத்தை விட்டுத் தள்ளி இருந்தாலும் துப்புரவாக இருந்தது அந்த இடம்.

பிரபு சொன்னது போல எல்லா வசதிகளும் இருந்தன. ஏ.சி, டி.வி, ஃபர்னிச்சர், எல்லாம் முதல் தரத்தில் இருந்தன. நூல் நிலையத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பிரபல பத்திரிகைகள் எல்லாம் இருந்தன. புத்தகங்களும் இருந்தன. ‘குறுகிய காலத்தில் வெற்றி பெறுவது எப்படி?’ என்ற புத்தகத்தை நடேசனின் வயதுள்ள ஒருவர் படித்துக் கொண்டு இருந்தார்.

இந்த நம்பிக்கை தமக்கும் வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் வந்ததும் புன்னகை செய்தார் நடேசன்.

ஒரு கோயில் இருந்தது. சிவன், விஷ்ணு, முருகன், பிள்ளையார், துர்க்கை ஆகிய எல்லா தெய்வங்களுக்கும் சந்நிதி. நவக்கிரக வழிபாட்டுக்கும் வசதி இருந்தது. அவர்கள் போனபோது ருத்ர ஹோமம் நடந்துகொண்டு இருந்தது.

மாதிரி இல்லத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக நிர்வாகி, அவர்கள் இருவரையும் ஒரு அப்பார்ட்மென்ட்டுக்கு, அங்கிருப்பவரின் அனுமதி கேட்டு அழைத்துச் சென்றார்.

அவருக்கு 85 வயது இருக்கும். முதுகு கூனியிருந்தது. கூர்மையான பார்வை. “வாங்கோ’என்று முகமெல்லாம் புன்னகையாக வரவேற்றார்.

“கொள்ளுப் பேத்தி அழுதுண்டிருந்தா… நீங்க வந்தேள்” என்றார் அவர்.

நடேசன் சுற்றுமுற்றும் பார்த்தார். யாருமில்லை.

“என்ன பார்க்கறேள், யாரையுமே காணோம்னா? இதோ பாருங்கோ” என்று சொல்லிக் கொண்டே கிழவர் கையிலிருந்த ரிமோட்டை இயக்கினார்.

டி.வி&யில் படங்கள் வந்தன. ஒரு குழந்தை தொட்டிலில் இருந்தது.

அதைச் சுற்றிச் சிலர் குனிந்து அதைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். “வலது பக்கம் நிக்கிறானே, அவன்தான் என் பிள்ளை. அவன் பக்கத்திலே என் பேரன். இந்தப் பக்கமா நிக்கறது, என் மாட்டுப் பொண்ணு. அவ பக்கத்திலே அவ மாட்டுப் பொண்ணு. தொட்டில்லே என் கொள்ளுப் பேரன். சவுண்ட் போடட்டுமா?” என்றவாறு ரிமோட்டை அழுத்தினார் அவர். குழந்தை காலை உதைத்துக்கொண்டு அழுதது. “என் பிள்ளையும் இப்படித்தான் அழுவான், சின்ன வயசிலே” என்றார் கிழவர். அவர் கண்கள் கசிந்திருந்தன.

அவர்கள் வீட்டுக்குத் திரும்பியதும், பிரபு கேட்டான்… ‘‘எப்படிப்பா இருக்கு?”

“குட்! ஆனா, இது ‘அப்பர் மிடில் கிளாஸ§’க்குதான்னு நினைக்கிறேன். சரி தானே?” என்றார் நடேசன்.

“அஃப்கோர்ஸ்… முக்கால்வாசிப் பேரின் குழந்தைகள் வெளிநாடுகள்ல இருக்காங்க. அந்தக் கிழவர் வீட்டுக்குப் போனோமே, அவர் எவ்வளவு சந்தோஷமா இருக்கார் பார்த்தீங்களா? அதுதான் அவருக்கு ‘ரியாலிட்டி’ இல்லியா?” என்றான் பிரபு.

நடேசன் பதில் ஒன்றும் கூறவில்லை.

“உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டேன்… நீங்க பதிலே சொல்லலியே?”

“நம்ம நாட்டிலேயே இருக்கிற வசதி இல்லாத ஏழை அப்பா, அம்மா எல்லாரும் என்ன பண்ணுவா? மாட்டுப்பொண்ணு போட்டதுதான் சோறுன்னு இருப்பாளா?” என்றார் நடேசன்.

“நீங்க என்ன கேக்கறேள்னு எனக்குப் புரியலே. நான் கேட்டதுக்கும் நீங்க சொல்ற பதிலுக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் பிரபு சற்று உரத்த குரலில்.

“சம்பந்தம் இருக்கு. நீயே சொன்னே நம்ம வீடு பெரிசு, வாங்குறவங்க கொத்திண்டு போயிடுவாங்கன்னு. வீட்டை விக்கணும்னு அவசியமில்லே!” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார் நடேசன்.

“ஓ.கே! விக்க வேண்டாம்… என்ன பண்ணணும்கிறீங்க?”

‘‘நம்ம வீட்டையே ‘ஹோம்’ ஆக்கப் போறேன். நாலு ஏழைக் குடும்பம் தாராளமா இங்கே இருக்கலாம். துணக்குத் துணையும் ஆச்சு… நீயும் அமெரிக்காவிலே உன் அப்பாவைப் பத்திக் கவலைப்படாம இருக்கலாம்.

நான் இந்தத் தடவை ஹார்ட் அட்டாக்லேர்ந்து ஏன் தப்பிச்சேன்னு எனக்கு இப்போ புரியறது. எல்லாத்துக்கும் காரணம் இருக்கத்தான் வேணும். அது ஈஸ்வர சித்தமோ என்னவோ… என்னன்னு எனக்குச் சரியா சொல்லத் தெரியலே.

இன்னொரு விஷயம்… உனக்குப் பேரனோ பேத்தியோ பொறந்தா, வீடியோ எடுத்து அனுப்பு..! மறந்துடாதே!” என்றார் நடேசன்.

இந்திரா பார்த்தசாரதி எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 22, 2013 1:38 pm

காரணப்பதிவு கதை சூப்பருங்க
 எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! M எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! U எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! T எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! H எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! U எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! M எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! O எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! H எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! A எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! M எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! E எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Wed May 22, 2013 1:47 pm

உண்மை.. உண்மை.. நடக்கும் எந்த ஒரு செயலுக்கும் காரணம் இருக்கிறது என உறுதியாக நம்புபவள் நான்.. இக் கதை(கதையாக இருந்தாலும்) என் நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது..

நல்ல கதை..! சூப்பருங்கநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65812
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 10:44 am

ரொம்ப நல்ல கதை சிவா :no கூடாது இது தான் நம் நாட்டு நடப்பு இன்றைய தேதி இல் புன்னகை அருமை சூப்பருங்கhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 24, 2013 11:12 am

சூப்பருங்க
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 8:45 pm

அருமையான பதிவு ...மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9399
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 12, 2024 12:59 pm

முதியோர் பிரச்சனைகளே இன்று பேசுபொருள் ! ‘ஹோம்’ பற்றித்தான் பல வீடுகளில் பேச்சே !
சோகம்முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக