புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
48 Posts - 43%
heezulia
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
prajai
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
414 Posts - 49%
heezulia
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
28 Posts - 3%
prajai
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_m10கவிதைக் கொத்து 3  (பத்துகவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக் கொத்து 3 (பத்துகவிதைகள்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 03, 2013 10:17 pm

1. என்றும் வாழுவனாம் (2.4.2013)

கொட்டும்மழை தட்டியிடி மின்னினாலும்
கூடிவருந் தென்றல்புய லாகினாலும்
தொட்டுமழை மண்ணில்வெள்ளம் பொங்கினாலும்
துன்பம் பந்தா யென்னை விளை யாடினாலும்
வெட்டியிரு துண்டெனவே வீசினாலும்
வேளைகண்டு தீயைச்சூழ வைத்துயாரும்
சுட்டெனையே சாம்பலாக்கிக் கொட்டினாலும்
சுந்தரத் தமிழி லென்றும் வாழுவேனாம்

குட்டித் தலை மொட்டையனென் றாக்கினாலும்
கும்மாளந்தான் போட்டுக் கூத்து ஆடினாலும்
பெட்டியிலே வைத்துப் பின்னை சுற்றினாலும்
பெண்கள் வீட்டில் நிற்கவீதி தள்ளினாலும்
தட்டிமீது வைத்துத் தோளில் தூக்கினாலும்
தங்க வண்ணத் தீயிலிட்டு சுட்டபோதும்
பெட்டகத்துள் வைத்த கவிப் புத்தகத்திலே
பேசுந்தமி ழாயிருந்து புன்னகைப்பனோ

கட்டியுடல் கங்கைநீரில் விட்டக் காலும்
கண்ணிழந்து காணுங்காட்சி பொய்த்தபோதும்
சுட்டஉடல் வேகிப்புகை தள்ளினாலும்
சின்னவிழி கண்டு துயர் உற்றபோதும்
வட்டமாக நின்றவர்கள் எட்டப் போயும்
வந்தவனைக் காணவில்லை வையம் என்றும்
விட்டுப் பெரு மூச்சுடனே வீடு சென்றும்
விந்தையென் தமிழ்க்கவியில் வந்துநிற்பேனோ

சட்டியிதை ஒட்டையிட்டுத் தந்தவன் வந்தே
சஞ்சலத்தில் வாடும்பொருள் கேட்டபோதும்
வட்டியென்ன கொள்முதலும் நட்டம்போகும்
வையகத்தில் பட்டதொல்லை விட்டதாயும்
முட்ட மூச்சு கட்டியுயிர் எட்டப்போயும்
முத்தமிழின் இன்னிசையில் மெல்லக்காட்சி
இட்டுவெல்லத் தேன்தமிழில் எந்தன்பாவில்
இன்தமிழின் சொல்லடுக்கில் வாழுவேனாம்,

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 03, 2013 10:23 pm

2. தமிழும் வீரமும் ( பிரிந்தவர் இணைந்தால்...? )

ஒருநாள் இரவு உறங்கிக் கிடந்தேன்
ஓசை எதுவுமில்லை
பெருவான் வெளியில் பூத்தன மலர்கள்
பொலிந்தும் ஒளியில்லை
வருவான் உயிராய் இணைவா னென்றே
வாசல் மூடவில்லை
தெருவில் நிழலோ ஒளியோ இல்லை
திங்கள் தோன்றவில்லை

திருநாள் வருமோ தோரணம் ஆடத்
துயரம் போகும்நிலை
அருகில் வந்தே அணைக்கும் துணையை
அறியேன் காணும்வரை
மெருகாய் இனிதாய் மேனிசி.லிர்த்தே
மென்மை பரவுங்கலை
தருமே உணர்வு தனைநான் எண்ணித்
தரையிற் உறங்குவளை

படபடவென்றே அதிரும்சத்தம்
பதறித் துடிதெழுந்தேன்
கடகடவென்று காலடியோசை
கணமென் நிலைகுலைந்தேன்
தட தடஅதிர்வு தலைவா சலிடை
திடுமென் றோருருவம்
அடஎன் னதிசயம் அழகுத் திருமகன்
அவனின் நிழல்கண்டேன்

இதுநாள் வரையும் எங்கு சென்றாயோ
எண்ணம் விழியூடே
மதுகொள் மலரின் இதழாய் பனிநீர்
மருவத் துளிகொண்டேன்
பொதுவாய் தமிழும் தடந்தோள் உரமும்
பிரிந்தே காண்பதில்லை
எதுதான் இடையில் புகுந்தோ உறவும்
இதுநாள் வரையுமில்லை

விழிகள் கலங்க விரும்பிக் கலந்தோம்
வார்த்தை எதுவுமில்லை
மொழியின் துணையும் அவசியமின்றி
மௌனம் இணைத்த தெமை
வழியில் நின்றோர் கண்டோர் மாந்தர்
வாழ்க என்றுரைத்தார்
அழிவேயில்லை தமிழே நீயும்
அடைந்தாய் வீரமென்றார்

குளிரும்ஓடை குதித்தே நதியாய்
கொட்டியதோ அருவி
தளிரும் பூவும் தன்மை மெதுமை
தனைநேர் இதயமதில்
ஒளிரும் தீபம் உணர்வில் விடுதலை
உள்ளோர் திசைநோக்கி
வழியில் செல்வோர் மனதில் எழவும்
விரைந்தார் வீறுடனே!

(தமிழ்)
கண்கள் மயங்குது எண்ணம் அழிந்திடக்
காதல்தனை மறந்தே
வண்ண மிழந்திட எங்கு மறைந்தனை
வாழ்ந்தவிதம் இழிவாம்
திண்ணம் தமிழிவள் மென்மையழிந்திட
தோல்வியிலே கிடந்தேன்
கண்ணியத் தோடெனைக் காவல் புரிந்திடக்
கைபிடித்தீர் கனிந்தேன்!

மறம் (வீரம்)
மண்ணில் பேய்கூடியே மாஅரசாளது
மாண்டது நீதியெல்லாம்
உண்ணும் உணவிலும் வஞ்சனைநச்சினை
ஊற்றி குழைத் தளித்தார்
கண்ணின் முன்னே படு பொய்கள் உரைத்திடப்
காலமும் நம்பியதோ
விண்ணில் தெய்வமதும் வேடிக்கை பார்நம்பி
விந்தை விதிகெடுத்தார்

அன்பொடு வாழ்ந்த எம் இன்பத்தமிழினம்
அல்லல் அழித்ததுபார்
இன்றுஅது பெரும் எல்லை கடந்தது
ஏற்றமினி அளிப்போம்
அன்னை கலைமகள் அன்புக் குழந்தைகள்
அங்கே எழுந்தனர்காண்
மின்னல் என வீரம் மேனி சிலிர்த்திட
மிக்கபலம் கொடுப்போம்

(தமிழும் வீரமும் இணைந்திட எழும்சக்தி அங்கே பரவுகிறது)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 03, 2013 10:26 pm

3. வேண்டாமென்றால் என் செய்வேன்

வேண்டாமென்றால் வினையேன் என்னை
விட்டால் பறந்திடுவேன்
தாண்டேன் உந்தன் தர்மக்கனலை
தலைவி செய் வதையேன்
மாண்டான் என்றே மாந்தருலகில்
மறந்தே வாழ்ந்திடுவர்
ஆண்டேன் மாதம் வைத்தே என்னை
ஆக்கும் வேதனை சொல்

தோண்டேன் குழியை தூங்கேன் என்றே
தேகம் எனும்பாரம்
கூண்டே விட்டுக் கொள்ளே னென்று
சொன்னேனா யானும்
நீண்டே காணும் பிரபஞ்சத்துள்
நிற்கும் தெய்வத் தீ
மீண்டான் என்றே மின்னல் சுடருள்
மெல்லக் கருவாக்கு!

நாண்டே நானும் நின்றேனா காண்
நல்லோர் கவியென்றே
பூண்டேன் வேடம்புனைந்தேன் கவிதைப்
பூக்கள் தனைத் தூவித்
தூண்டேன் எனிலும் தீபத்திரியைத்
தொட்டே ஒளிசெய்தேன்
சீண்டேன் நின்னை சிரித்தே யிருந்தேன்
சினமேன் கொண்டாய் சொல்

ஆண்டேன் என்றே அங்கே ஒருவன்
அழகுத் தமிழ்கொன்றான்
பூண்டேன் புல்லேன் புழுவேன் எல்லாம்
போவென் றுயிர் வாங்க
மூண்டேன் தீயை முழுதும் கொல்ல
முனையா தவங் கொண்டாய்
நீண்டேன் துயரம் நெடுத்தே போக
நிலைத்தாய் சொல் சக்தி

-------------------

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 03, 2013 10:28 pm

4. தாகம்

ஒற்றுமை என்பது வெற்றித்திருமகள்
நெற்றியிலிட்ட திலகம் - தமிழ்ப்
பற்றினைக் கொண்டெழு ஒன்றெனச் சேர்ந்திடு
கிட்டிடும் வாழ்வி லுதயம் - உயர்
நற்றமிழோ உந்தன் நாவில் புரளினும்
இரத்தத்திலே கொண்டவீரம் - அதை
விற்றிடவோ விலைபேசிடவோ உந்தன்
சொத்தில்லை பாரம்பரியம்

வேற்றுமை விட்டணி செல்வாய் அதுவுந்தன்
வாழ்வினுக்கோர் அத்திவாரம் -இன்னும்
சுற்றி மனங்கொண்ட செந்தீ எழுந்துயிர்
கொள்ளும் சுதந்திர தாகம் - வெறும்
புற்றினில் சீறிடும் பாம்பின் விசம்விடப்
பொல்லாவெறியரின் மோகம் - இனி
முற்றும் எனத்துயர் கொள்வதை கண்டிட
முன்னெழுந்தார் இவர் வீரம்

பற்றிஎரியும் அடிவயிற்றி லெழும்
பாசமிகுந் திவர்போலும் - பல
கற்றிடும் மாணவர் உள்ளம் கண்டதீயும்
காற்றினிலே பெரிதாகும் - தீயைப்
பெற்றிடும் செந்தமிழ் செல்வங்களேஇனி
முற்று மெரிந்திடும் நீசம் - நீவிர்
ஏற்றிடும் தியாகத்தின் தீயும் சுதந்திரம்
வெற்றிவரை தொடரட்டும்

செங்குருதி சிந்தப் பெண்களுயிரைக்
குடித்தவன் பஞ்சணை மீதும் - அவன்
தங்கமுடி தலைகொண்டர சாளவும்
தாழ்ந்து நலிவதோ நாமும் - இனி
சங்கு ஒலித்திடப் பொங்கியெழுந்தவர்
சந்தண மார்பெடு தீரம் கண்ணே
பொங்குமிதற்கொரு பாதைவிடு இது
புத்தொளி காணுமோர் தாகம்

**********************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 03, 2013 10:30 pm

5. வாழ ஒரு வாழ்வு

நல்ல மனங்களிள் அன்புக் கோவில்கட்டி
ஆண்டவன் வாழுகிறான் - அவன்
சொல்லி வழி நடந்தின்பம் பெறுவதை
என்றுமே கொள்ளுகிறான்
எல்லை வகுத்தவர் அல்லல்தனை நீக்கி
ஓங்கிடச் செய்யுமவன் - மனம்
கல்லை நிகர்த்தவர் கொள்ளும் இதயங்கள்
மெல்ல உருக்கிடுவார்

கண்ணைத் திறக்கினும் காணுபவை வெறும்
காட்சி கனவுகளே - இந்த
மண்ணில் நடந்திடும் மாய விநோதங்கள்
மர்மக் கதை யெனவே
எண்ண மென்பதென்ன எத்தனை பேய்களின்
இன்பச் சுடுகாடு - நெற்றி
கண்ணனவன் நட மாடிக்கழிக் கும்வெண்
சாம்பல் கொள்ளும்மேடு

அள்ளிக் கொண்டுசெல்ல ஏதுமில்லை நாமும்
அந்த மென்றாகையிலே - ஒரு
வெள்ளிக் கதிரொளி ,வெற்றிடம், சூழிருள்
வேறொன் றிருப்ப தில்லை - யாவும்
துள்ளித் திரிகின்ற பொன்னெழில்வாழ்வினில்
தேடும் பொன்செல்வங்களும் - பதில்
அள்ளியெடுத்திட வந்துவிழுவது
ஆகத்துயர் அழிவே

தொல்லை தரும்விதி கொண்டவாழ்வுமிது
தூய்மையில் மாயைகளாம் - நாமும்
இல்லைஎனப் புவி நீங்கிய பின்னரே
உண்மையைக் காண்பதுண்டோ
சொல்லிலே தன்னலம் எண்ணும் மனம்விலங்
குள்ளபெருங் காடு - இவை
அல்லதென்றாகியும் மற்றவர் போற்றுவர்
ஆகா எழில் வாழ்வு

****************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Apr 27, 2013 2:00 pm

6. இரண்டில் ஒன்று

விழிகளில் உதிர்வது எமதுதிரம் - அதன்
விலை தமிழெனில் ஒரு சுழியம்
அழிவது தமிழ் இன வகை உடலம் - அதில்
அக மகிழ்வது முழு உலகம்

கொதித்தெழச் சிலகரம் அமைதிஎனும். அது
கெடுநிலை விளைவெனச் சொல்லும்
பொறுமையில் விளைவதுதனி அனர்த்தம் - அதைப்
புரிந்திடில் விடிவது திண்ணம்

வழி நெடுகலும் பல நெளி அரவம் - அதில்
வகைவகை யெனப் பல விஷமும்
நெளிவதும் வழுகிடு மதன் இயல்பும் - எனில்
நெறி மறு உயிர் தனை வதையும்

பழிபல சொலும்பழந் தமிழெனவும் - அது
பரமனின் திருநடம் பயிலும்
அழி எனப் பெருவழி புக உதவும் - சில
அறிஞரின் இழிமனம் உதவும்

துளிஎன விழும்மழை யுடனிடியும் = பெருந்
துயரமும் எனப் பகல் விடியும்
வெளி யெனப் புகுஇல்லம் முழுதழிக்கும் - அதில்
விரும்பிய அரசுகள் இணையும்

குடிநலம் பெரிதெனும் விதிவகுக்கும் - அதில்
குழந்தைகள் இறைஎன்னும் பொருமும்
பொடிபட உடைஎனத் சிறுவரையும்- இந்தப்
புவி மறுகணம் உயிர் கொல்லும்

அழியினம் தமிழெனக் கரமினையும் - அதை
அனுபவி எனமனம் ஒழுகும்
பொழுதினில் கருவிகள்பட விழியும் கொளும்
பதிவுகள் தெளிவுடன் உமிழும்

அழகென அதிஉயர் ரசிகர் களும் - தமிழ்
அழிவதை விழிகொள மகிழும்
மெழுகென உருகிடுமின மெமதும் - இதை
மெதுவென விடஉயிர் பிரியும்

சரியென உனதிடை மனமெழவும் - இனி
சகலமும் பொருள் கொளும்முடிவும்
கரியென உடல் எரி சிறைவதையும் -அது
கடவுளின் செயலென நினைவும்

இருந்திடு மெனில் உடன்விடுதோழா - தடை
இலையென எழுவுடன் நேராய்
பருந்துகள் பறக்கட்டும் உயர்விண்ணில் - அவை
பருகிட உதிரமும் மண்ணில்

வரும் குறிகொண்டு சிறு உணவெண்ணி அது
வர எடு செயல் உடன் மெய்யில்
பெருகிடப் புயலென எழு விண்ணில் . இனிப்
பிரளயம் இடம் பெறும் தன்னில்

முடிவெது புதுநிலம் உருவாகும் - முன்
பொலிந்திடு தமிழுடை மண்ணும்
குடியிரு யிது எவர் சொத்தாகு ம் - உன்
குலமதின் வழிவந்த முற்றம்

************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Apr 28, 2013 4:14 pm

7. கடற்கரையில் நானும்

தூரத்திலே அலைதுள்ளிவரும் ஒரு
நேரத்திலே எழும் வீரத்திலே
பாரத்திலே அது பாய்ந்து கணம் விழும்
ஓரத்திலே மணல் ஈரத்திலே
ஆரத்திலே மணி கோர்த்ததென ஆங்கு
ஆடிவரும் அலைத் தூறலிலே
சாரலிலே அதனோசையிலே எந்தன்
சஞ்சலமும் விட்டே நின்றிருந்தேன்

மேலையிலே ஒளிபோகையிலே மின்னும்
மாகடலில் மூழ்கும் ஆதவனும்
மாலையிலே வரும் காற்றினனையும் கொண்டு
மங்கைதரு வாசம் மோந்து நின்றேன்
சேலையிலே நீலம் கொண்டவளாம் கடல்
சில்லென் றிருப்பினும் சீறுவளாய்
பாலையிலே மணல் போல் நெளிந்தும் - அதன்
பார்வை குணம்மாறி இன்பமிட்டாள்

வாழ்க்கையிலே பல சோடிகளாய் பலர்
வந்திருந்தே கதை பேசிடவும்
ஆழ்மனமோ எனை யாரெனவே காணும்
அற்ப நினைவு வந்தாளக் கண்டேன்
சூழ்ந்தவிரி நில வாழ்வினிலே இவன்
செய்வதென்ன வரை செய்ததென்ன
தாழ்வுணர்வும் வாழும் தன்மையிலும் மனம்
தாவும் குரங்கொப்ப ஆவதென்ன

ஏன்பிறந்தாய் நீயும் எங்கிருந்தாய் இங்கு
ஏன் நடந்தாய் உந்தன் எண்ணமென்ன
தீன் கொரித்தாய் மனை தீண்டிநின்றாய் குலம்
தோற்றுவித்தாய் இன்னும்தேவையென்ன
ஊன் துடித்தாய் உயிர் தான் துடித்தாய் உணர்
வோங்கி நின்றாய் உன்னை விட்டவர்யார்
தேன்குடிக்கு மொருமந்தியென நீயும்
தீமைக் கிளைதாவி தொங்குவதேன்

வானளவோ இல்லை வாழ்வறமோ - ஒரு
வீழ்நிலவோ தென்றல் வீசுவதோ
மானமதோ மரியாதைகளோ - இவை
மாறுவதோ மனம் சோர்வதென்ன
தானமதோ தட்டிப் பற்றுவதோ - தலை
தாழுவதோ முடி சூடுவதோ
ஆனதென்ன அன்புபோனதென்ன - மதி
ஆணவமும் கொண்டு மாவதென்ன

ஆழ்கடலா அதன்ஆழமதா - அதன்
ஆரம்பமா அந்தம் உண்டல்லவா
சூழுலகில் ஒரு தூசியிவன் - சுற்றுங்
கோள்களிடை யொரு சூனியமே
ஏழுநிறம் கொண்டவானவில்லில் இவன்
எந்தநிறம் மழை நின்றபின்னே!
வாழும்வரை வந்த நீள்துயரம் எண்ணி
உள்ளழுதேன் கடல் சேர்ந்தழுதாள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக