புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_m10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10 
7 Posts - 64%
heezulia
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_m10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_m10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_m10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_m10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_m10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_m10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_m10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10 
8 Posts - 2%
prajai
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_m10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_m10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_m10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10 
4 Posts - 1%
mruthun
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_m10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_m10இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 ) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 )


   
   
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun May 12, 2013 8:26 pm

http://3.bp.blogspot.com/-NcN9Sfwudl8/UY5Nu_CkU7I/AAAAAAAACGE/n7P3-bpV_LE/s1600/indian-lady2.jpg

கதையின் முந்தைய பாகம் இங்கே http://kakkaisirakinile.blogspot.in/2013/05/2_10.html

செல்போனை உடைத்த கையோடு வண்டியை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக மறைந்தார் கலைவாணியின் அப்பா.

கலைவாணியின் கண்ணீர் நிற்கவில்லை. அழுதுகொண்டே மெதுவாக அமர்ந்தாள். உடைந்துபோன செல்போன் பாகங்களைப் பொறுக்கினாள். அவளால் ஏனோ அதை உயிரற்ற பொருளாக நினைக்க முடியவில்லை. கையில் கிடைத்த பாகங்களைப் பொறுக்கிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அவளும் நகர்ந்தாள். மீதிப் பொழுது பள்ளியில் அவளுக்கு சரியாகப் போகவில்லை. அலுவலகத்தில் சரவணன் கணினிமுன் கணினி போல அமர்ந்திருந்தான்.

இரவு எட்டுமணி... பள்ளியில் நடந்ததைச் சொல்லி அவன் யார் என்று மகளிடம் கேட்கும்படியாக தனது மனைவியிடம் சொன்னார் கலைவாணியின் அப்பா. கலைவாணி எதற்கும் பதிலளிக்கவில்லை. உணவும் உண்ணவில்லை. ஒரே செல்ல மகள் இவ்வாறு இருப்பதைப் பார்த்து கலைவாணியின் தாய் பயந்தாள். அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இரவு பதினொரு மணி... கலைவாணியின் தந்தை அவளை மீண்டும் திட்டிவிட்டு எழுந்து போனவர் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். தரையில் படுத்திருக்கும் கலைவாணியை தனது மடியில் கிடத்தினாள் அவள் தாய். ஒரு கையால் அவளது உடலை தட்டிக்கொடுத்தாள். அமைதியாக இருந்த கலைவாணியின் கண்கள் மீண்டும் கண்ணீர் அருவியானது. தாயின் மடியின் முகத்தை இறுக்கமாகப் பதித்துக் கொண்டாள்.

பொறுமையாக கலைவாணியிடம் மீண்டும் பேச ஆரம்பித்தாள் அவள் தாய். சிறிய இடைவெளிக்குப் பிறகு நடந்தது அனைத்தையும் மெதுவாக விவரித்தாள் கலைவாணி. கலைவாணியை குழந்தை முதல் நன்கு புரிந்துகொண்ட அவளது தாயிக்கு தனது மகளின் விருப்பத்தில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

உண்மையில் பெண் பார்க்க வந்த சரவணனை அன்றே அவளுக்கும் பிடித்துப்போனது. தனது மகளுக்கு சரியான துணை இவன் என்றே கருதினாள். ஆனால் கலைவாணியின் தந்தை ஜாதகத்தில் அதீத நம்பிக்கை உடையவர். அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதால் பெண் பார்க்கும் முன் அவரால் ஜாதகம் பார்க்க முடியவில்லை.

பிறகு பார்த்து முற்றிலும் ஒத்துவராது என்று ஜோசியர் சொல்லியதை கலைவாணியின் தந்தை விடாமல் பிடித்துக் கொண்டார். ஒரே பெண்ணின் வாழ்க்கை சரியாக அமையவேண்டும் என்று அவர் கருதினார். ஜாதகப் பொருத்தத்தை வைத்து அதற்கு இந்த வரன் சரிப்பட்டு வரமாட்டான் என்று முடிவுசெய்தார். அவரின் நிலைப்படும் கலைவாணியின் அம்மாவிற்கு தவறாகத் தெரியவில்லை.

இந்த எண்ண அலைகளை ஓடவிட்டுக் கொண்டே, பல வருடங்கள் கழித்து கலைவாணிக்கு உணவு பிசைந்து ஊட்டிவிட்டாள் கலைவனின் தாய். நாள் முழுதும் அழுத கலைவாணியின் கண்கள் தூக்கத்தைத் தழுவியது. மகளை தட்டிக் கொடுத்து உறங்கவைத்தாள். சரவணனால் இரவு முழுதும் உறங்க முடியவில்லை. நடந்ததை அறிந்து, கார்த்திக்கும் ஆண்டனியும் அவனைத் தேற்றினார்கள். தந்தையிடம் பேசும்படி அறிவுறுத்தினார்கள்.

அடுத்தநாள் அதிகாலையில் சரவணன் தனது அண்ணிக்கு போன் செய்து நடந்ததைக் விவரமாகக் கூறினான். கலைவாணிக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை என்று புலம்பினான். அவளே வேண்டும் என்று அடம் பிடித்தான். இந்தச் செய்தியை தனது மாமனாரிடம் நேரடியாகச் சொல்ல சுமதிக்கு தைரியம் வரவில்லை. மாமியார் வழியாக செய்தி சரவணன் தந்தையை அடைந்தது.

"கொடுக்க முடியாது என்று சொல்வர்களிடம் நான் என்ன கெஞ்சவா முடியும்" என்று அவர் தரப்பு நியாங்களை முன்வைத்தார் சரவணனின் தந்தை. இருந்தும் அரை மனதோடு பெண் வீட்டாரிடம் பேசுவதாகத் தீர்மானித்தார். கலைவாணியின் மாமா வழியாக அவளது தந்தையிடம் பேசிப் பார்த்தார்கள். அவர் ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இதை சரவணனின் தந்தை தனக்கு நிகழ்ந்த அவமானமாகக் கருதினார்.

"பொண்ணப் பெத்தவனுக்கு இந்த பிடிவாதம் இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்" என்று தனது பிடிவாதத்தை வெளிப்படித்தினார். இதை அறிந்த சரவணனுக்கு நாட்கள் நகரவில்லை.

கலைவாணி பள்ளிக்குப் போவதற்கும் தடைவிதிக்கப்பட்டது. அவளால் சரவணனிடம் பேச முடியவில்லை. அவளுக்கு நாட்கள் நெருப்பின் மீது நடப்பதாக இருந்தது. அங்கு நடப்பதை சரவணின் வழியாக அறிந்துகொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று தனக்குத் தெரிந்த ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

நாட்கள் கழிந்தது. கலைவாணி மாறுவதாக அவளது தந்தைக்குத் தெரியவில்லை. அவர் மற்றுமொருமுறை அவளிடம் பேசிப்பார்த்தார்.

"ஜாதகப் பொருத்தம் சரியா அமஞ்சவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்களா ? ஜாதகத்தவிட உங்களுக்கு என் மனசு முக்கியமா தெரியலயாப்பா ?" என்ற ஆணித்தனமான கேள்வியை காற்றில் வீசிவிட்டு அவளது தந்தையை கட்டி அழுதாள். இந்தமுறை மகள் அழுவதை அவரால் தங்கிக் கொள்ள முடியவில்லை. கலைவாணியின் தாய், அவளது தந்தையிடம் இரவு முழுக்கப் பேசினாள்.

அடுத்தநாள் காலை, கலைவாணியின் மாமா வழியாக சரவணனின் தந்தையிடம் கலைவாணியின் தந்தை பேசினார். அவர்கள் இறங்கி வந்ததைப் பார்த்துவிட்டு சரவணனின் தந்தைக்கு வேண்டாம் என்று தூக்கிஏறிய மனதில்லை. அவரும் ஒத்துக்கொண்டார். இந்தச் செய்தி கலைவாணிக்கும் சரவணனுக்கும் காற்றுவழி பறந்தது. கலைவாணி பள்ளி போவதைத் தொடர்ந்தாள். சுதந்திரப் பறவையானாள். முன்னைவிட சரவணனிடம் பேசும் நேரம் அதிகமானது.

நாள், நேரம் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டது. இரண்டு மாதத்தில் திருமணம் நல்லபடியாக முடிந்தது. சரவணனுக்கு நிகழ்ந்ததை நினைத்து கார்த்திக்கும் ஆண்டனியும் சந்தோசப் பட்டார்கள். தேன் நிலவிற்கு சிம்லா போவதாக சரவணன் திட்டமிட்டான். ஆனால் ஒரே மகளை மொழி தெரியாத ஊரிற்கு அவ்வளவு தூரம் அனுப்ப கலைவாணியின் தந்தை பயந்ததை அறிந்த சரவணன், தேன் நிலைவை கோடைக்கானலோடு முடித்துக்கொண்டான்.

பெங்களூர் மடிவாளா பகுதியில் குடியேறிய சரவணன் வீட்டிற்கு அடிக்கடி போய் வருவான் கார்த்திக். சில மாதங்கள் கழித்து சரவணன் வேலை நிமிர்த்தமாக கலைவாணியுடன் காரைக்குடிக்கு குடி மாறினான்.

சரவணனை கார்த்திக்கும், ஆண்டனியும் தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம் "You know what, I don't talk to stupid bachelors" என்று சொல்லி கலகலப்பாக சிரிப்பான்.

"எங்களுக்கும் ஒரு நேரம் வரும்டா" என்று சொல்லி கார்த்திக்கும் சிரிப்பான். சில மாதங்களுக்குப் பிறகு இவர்கள் அடிக்கடி பேசிக்கொள்வது வேலைப்பளு, குடும்ப சூழல் காரணமாக குறைந்துபோனது.

ஒரு வருடம் உருண்டோடியது.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு கார்த்திக் செல்போனிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு.

"ஹலோ..."

"டேய் உயிரோட இருக்கியா ?"

"யார் பேசறது ?"

"டேய் தெரியலையாடா மச்சி... சரவணன் டா"

"அடே அங்கிள்.. எப்பிடி இருக்க ? கலைவாணி, அப்பா, அம்மா எல்லாம் எப்பிடி இருகாங்க ?. என்னடா புது நம்பர்ல இருந்து கால் பண்ற... நம்பர மாத்திட்டியா ?"

"எல்லாம் நல்லாருகாங்கடா.. இது ஆபீஸ் மொபைல் மச்சி.."

"ஓ அப்படியா ?"

"ஆமா ஆமா.. அப்பறம் ஒரு முக்கியமான விசயம்டா. ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் அப்பாவா ஆகிட்டேன். பெண் கொழந்த பொறந்திருக்கு. ரொம்ப வேலையா இருந்ததால உடனே சொல்ல முடில. இன்னைக்குதான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தோம்"

"அடே அடே... சூப்பர் டா... பாப்பா எப்பிடி இருக்கா ? வெயிட் எல்லாம் சரியா இருக்கா ?"

"பாப்பாவெல்லம் நல்லாதான் இருக்கா ? ஆனா !"

"என்னடா ஆனா ?"

"பொறந்தது பொறந்துச்சே, அவ அம்மா மாதிரி செவப்ப பொறந்துச்சா ? என்ன மாதிரி கரு கருன்னு இருக்குடா மச்சி" சொல்லிவிட்டு சிரித்தான் சரவணன். கார்த்திக்கும் விழுந்து விழுந்து சிரித்தான்.

சற்று நேரம் பேசிவிட்டு

"சரிடா மச்சி... பாப்பா, கலைவாணிய நல்லா பத்துக்கோ. நான் அப்பறம் பேசுறேன்"

"டேய் இருடா.. ரொம்ப நாள் கழிச்சு அப்பாவா ஆகி போன் பண்ணிருக்கேன். அதுக்குள்ள வைக்கிறேங்குரா"

"You know what, I don't talk to married uncles" என்று சொல்லிவிட்டு கார்த்திக் சிரித்தான். சரவணனும் சிரித்துக் கொண்டே

"டேய் டேய்... கொஞ்ச நேரமாவது நிம்மதியா இருக்கணும் மச்சி.. ப்ளீஸ் பேசுடா" என்றான்.

அருகில் அமர்ந்திருந்த கலைவாணி, புன்முறுவலோடு சரவணை செல்லமாக அடித்துவிட்டு அவனது முழங்கையோடு தனது கைகளைப் கோர்த்து அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அருகில் இருந்த தொட்டிலில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது.

முற்றும்.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/05/3.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 12, 2013 9:02 pm

சூப்பருங்க - உண்மைக் கதைன்னு சொல்லிட்டு அந்த 6.2 யாருன்னு சொல்லவே இல்லையே அங்கிள் அகல் சிரிப்பு




அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun May 12, 2013 9:05 pm

ஹா ஹா.. கதையின் இந்த பாகத்தில் 6.2 நான் இல்லன்னு தெரிஞ்சிருக்கும். சரவணனுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு அண்ணே. But Still I am bachelor you know புன்னகை...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 12, 2013 9:14 pm

யாருக்கு தெரியும் அந்த திருப்பதி பெருமாளுக்கு தான் தெரியும் உண்மை என்னன்னு புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 12, 2013 9:18 pm

அகல் wrote:
இந்த எண்ண அலைகளை ஓடவிட்டுக் கொண்டே, பல வருடங்கள் கழித்து கலைவாணிக்கு உணவு பிசைந்து ஊட்டிவிட்டாள் கலைவனின் தாய். நாள் முழுதும் அழுத கலைவாணியின் கண்கள் தூக்கத்தைத் தழுவியது. மகளை தட்டிக் கொடுத்து உறங்கவைத்தாள். சரவணனால் இரவு முழுதும் உறங்க முடியவில்லை. நடந்ததை அறிந்து, கார்த்திக்கும் ஆண்டனியும் அவனைத் தேற்றினார்கள். தந்தையிடம் பேசும்படி அறிவுறுத்தினார்கள்.
பல வருடங்கள் ன்னு இங்க சொன்னது சரியா? கன்டின்யுடி மிஸ் ஆவுதே அகல் - அடுத்த பாராவில் சரவணன் மறு நாள் காலை அண்ணியிடம் பேசுவதாக இருக்கே?




அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun May 12, 2013 9:22 pm

ஹா ஹா... கலைவாணிக்கு பலவருடங்களுக்கு முன் (குழந்தையாக இருக்கும்போது) அவள் உணவு ஊட்டியது அதற்குப் பிறக்கு இப்போது தான் ஊட்டுகிறாள் என்பதே கதையின் சூழல்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun May 12, 2013 9:22 pm

யினியவன் wrote:யாருக்கு தெரியும் அந்த திருப்பதி பெருமாளுக்கு தான் தெரியும் உண்மை என்னன்னு புன்னகை
இந்தக் கதை பெருமாளுக்கு கதை தெரியாது புன்னகை...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 12, 2013 9:24 pm

இப்ப சொன்னவுடன் தான் புரியுது - அத கிளியரா சொல்லுங்க - என்ன மாதிரி அரை குறைங்க இருக்க மாட்டாங்கன்னு அவ்ளோ நிச்சயமா உங்களுக்கு தெரியுமா? புன்னகை




அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun May 12, 2013 9:26 pm

யினியவன் wrote:இப்ப சொன்னவுடன் தான் புரியுது - அத கிளியரா சொல்லுங்க - என்ன மாதிரி அரை குறைங்க இருக்க மாட்டாங்கன்னு அவ்ளோ நிச்சயமா உங்களுக்கு தெரியுமா? புன்னகை
ஹா ஹா நீங்க அரகுறையா ?... நம்பிட்டோம்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக