புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
68 Posts - 41%
heezulia
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
1 Post - 1%
prajai
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
319 Posts - 50%
heezulia
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
21 Posts - 3%
prajai
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மே மாத பலன்கள்  Poll_c10மே மாத பலன்கள்  Poll_m10மே மாத பலன்கள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே மாத பலன்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 7:54 pm

மேஷம்
ஏமாற்றங்கள் அடுத்தடுத்து வந்தாலும் தளராமல் எதிர்நீச்சல் போடுபவர்களே! 20 - ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். சகோதரருக்கு வேலைக் கிடைக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீடு மாறுவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் ராசிக்குள்ளேயே கேது நிற்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அடி வயிற்றில் வலி, தொண்டை புகைச்சல் வந்துப் போகும். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் பார்க்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று வருவீர்கள். 7 - ம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு அடைவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்துவிடாதீர்கள். பயணத்தின் போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். புது வேலை கிடைக்கும். மாணவர்களே! பழைய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். விளம்பர யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கலைத்துறையினரே! பரிசு, பாராட்டுகள் குவியும். பரிகாரம்: ஸ்ரீநந்தீஸ்வரரையும், ஸ்ரீசிவப் பெருமானையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 7:54 pm

ரிஷபம்

மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்பவர்களே! 27 - ந் தேதி வரை உங்கள் ராசிக்குள்ளேயே குருபகவான் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். யாருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் உறுதிமொழி தர வேண்டாம். ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். லேசாக தலைச்சுற்றல், முதுகு வலி, மூட்டு வலி வரக்கூடும். 28 - ந் தேதி முதல் குரு உங்கள் ராசியை விட்டு விலகி 2 - ல் அமர்வதால் குடும்பத்தில் அமைதி திரும்பும். பணப்பற்றாக்குறை விலகும். உடல் நலம் சீராகும். 5 - ந் தேதி முதல் சுக்ரன் ராசிக்குள் நுழைவதால் நிம்மதி கிட்டும். வற்றிப் போயிருந்த முகம் மலரும். அழகு, இளமைக் கூடும். வாகனப் பழுது நீங்கும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். டி. வி. , மிக்சி புதிதாக வாங்குவீர்கள். பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் நீண்ட நெடுநாட்களாக செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். 20 - ந் தேதி வரை செவ்வாய் 12 - ம் வீட்டிலேயே தொடர்வதால் பயணங்கள் அதிகரிக்கும். சகோதர வகையில் கொஞ்சம் அலைச்சல், செலவினங்கள் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. அரசியல்வாதிகளே! பதவிகள் தேடி வரும். மக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வேலைக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள். புது அதிகாரி உதவுவார். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிற்பகுதி எதிர்பாராத திடீர் திருப்பங்களையும், நன்மைகளையும் தரும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளை துளிசி மாலை அணிவித்து வணங்குங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 7:55 pm

மிதுனம்
சொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்காக கால நேரம் பார்க்காமல் உழைப்பவர்களே! உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் உங்களின் புகழ், கெரளவம் ஒருபடி உயரும். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வி. ஐ. பிகளும் அறிமுகமாவார்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்-. வீடு விற்பது, வாங்குவது சாதகமாக முடிவடையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உறுதுணையாக இருப்பார்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். கேது லாப வீட்டில் தொடர்வதால் வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். 28 - ந் தேதி முதல் குரு உங்கள் ராசிக்குள் நுழைவதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அரசியல்வாதிகளே! மேலிடத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். சிலருக்கு திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு உண்டு. கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். கலைத்திறன் வளரும். அதிரடி முன்னேற்றங்கள் தரும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை எலுமிச்சை தீபமேற்றி வணங்குங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 7:57 pm

கடகம்
பிறர் துயர் துடைப்பதில் ஆர்வம் காட்டுபவர்களே! சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். வி. ஐ. பிகள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாகும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். நீண்ட நாட்களாக சந்தித்து பேச வேண்டுமென்று நினைத்திருந்த உறவினர், நண்பர்களை இந்த மாதத்தில் சந்தித்து மகிழ்வீர்கள். புது வேலைக் கிடைக்கும். தந்தைவழி சொத்து வந்து சேரும்-. பழைய காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சனியும், ராகுவும் 4 - ம் வீட்டிலேயே தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். ஓய்வெடுக்க முடியாதபடியும் போகும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லையும் அதிகரித்த வண்ணம் இருக்கும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் சேர்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். பெற்றோரின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பங்குதாரரை மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி, சம்பள உயர்வு உண்டு. அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் உழைப்பை உணர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். நினைத்ததை முடித்துக் காட்டும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீஅங்காரகனை செம்பருத்தி மாலை அணிவித்து வணங்குங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 7:57 pm

சிம்மம்
மற்றவர்களுக்கு கலங்கரை விளக்கமாய் இருப்பவர்களே! செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். உடன்பிறந்தவர்கள் கூட உங்களைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்தினார்களே! அந்த நிலை மாறும். இனி உடன்பிறந்தவர்கள் ஓடி வந்து உதவுவார்கள். சகோதரருடன் மனம் விட்டு பேசுவீர்கள். ஆரோக்யம், அழகு கூடும். பார்த்தும் பார்க்காமல் சென்றுக் கொண்டிருந்த வி. ஐ. பிகள் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துக் கொடுப்பார்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பெற்றோரின் உடல் நிலை சீராகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பேச்சிலே அனுபவ அறிவு வெளிப்படும். விலை உயர்ந்த வாகனம், ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குரு 10 - ல் தொடர்வதால் உங்களைப் பற்றிய அவதூறுகளை சிலர் பரப்பிவிடுவார்கள். சிலர் உங்களை நேரில் பார்க்கும் போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த மனயிறுக்கம் நீங்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். வேலையை விட்டுச் சென்ற பழைய வேலையாள் மீண்டும் வந்து சேர்வார். உத்தியோகத்தில் உங்களை உதாசீனப்படுத்திய சக ஊழியர்கள் மதிப்பார்கள். 27 - ந் தேதி வரை 10 - ம் வீட்டிலேயே குரு தொடர்வதால் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் மாதமிது. பரிகாரம் : ஸ்ரீகுருபகவானை கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 7:57 pm

கன்னி
உள்ளதை உள்ளபடி பேசி சிக்கிக் கொள்பவர்களே! 27 - ந் தேதி வரை குருபகவான் 9 - ம் வீட்டில் இருப்பதால் ஓரளவு மகிழ்ச்சி உண்டாகும். தன்னம்பிக்கையும் பிறக்கும். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் வல்லமையும் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் இந்த மாதத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஓரளவு வலுவடைவதால் உங்களுக்கு சோர்வு, களைப்பு நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல்களும் விலகும். 28 - ந் தேதி முதல் குரு 10 - ல் நுழைவதால் வேலைச்சுமை, மறைமுக விமர்சனம் வந்துச் செல்லும். இந்த மாதம் முழுக்க திடீர் பயணங்கள் இருக்கும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கோவில் விழாக்களில் கலந்துக் கொள்வீர்கள். 5 - ந் தேதி முதல் உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் 9 - ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் ஓரளவு நிம்மதி உண்டு. கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிரிவுகள், மனக்கசப்புகளெல்லாம் சரியாகும். கல்யாணப் பேச்சு வார்த்தையும் சுமூகமாக முடியும். தீர விசாரித்து கல்யாண விஷயத்தில் முடிவெடுப்பது நல்லது. அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுங்கள். உட்கட்சி பூசல் வெடிக்கும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். எதிர்காலத்தைப் பற்றி யோசியுங்கள். பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ஆரோக்யத்தில் கொஞ்சம் அக்கறைக் காட்டுங்கள். வியாபாரத்தில் நட்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கும். வேலையாட்களாலும் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் பொறுமையாக இருங்கள். அதிகாரிகள் ஏதேனும் குறைக் கூறினாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். கலைத்துறையினரே! புது நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம். முற்பகுதி இடையூறுகளை தந்தாலும் பிற்பகுதியில் இனிக்கும் மாதமிது. பரிகாரம் : ஸ்ரீகாளிகாம்பாளை குங்கும அர்ச்சனை செய்து வணங்குங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 7:58 pm

துலாம்
தற்பெருமை பேசாத நீங்கள், புகழ்ச்சியையும் விரும்ப மாட்டீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் அணுகுமுறையை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தந்தையாருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சூரியனின் போக்கு சரியில்லாததால் செலவுகள் கூடிக் கொண்டேப் போகும். மூத்த சகோதரங்களுடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். யாரையும் நம்பி பெரிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தப்பாருங்கள். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. ஜென்மச் சனி தொடர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போல தோன்றும். மூட்டு, முதுகுத் தண்டில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. உங்கள் ராசிநாதன் சுக்ரன் 8 - ல் மறைவதால் அலைச்சல் இருந்தாலும் என்றாலும் 8 - ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் நூலிழையில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள். குரு 8 - ல் மறைந்திருப்பதால் பழைய கடன் பிரச்னைகளை நினைத்து கலங்குவீர்கள். இதுநாள் வரை கட்டிக் காப்பாற்றிய கௌரவம், நல்ல பெயரை எல்லாம் இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயமும் இருக்கும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் உத்தியோகத்தில் அலுவலகத்தில் வேலைச்சுமை இருக்கும். அதிகாரிகளுடன் மோதல்கள் வரக்கூடும். உங்களை விட வயதில் குறைவானவர்களிடம் நீங்கள் வளைந்துக் கொடுத்துப் போக வேண்டி வரும். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். யதார்த்தமான முடிவுகளும், சகிப்புத் தன்மையும் தேவைப்படும் மாதமிது. பரிகாரம் : ஸ்ரீஆஞ்சநேயரை வடமாலை சாற்றி வணங்குங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 7:58 pm

விருச்சிகம்
மற்றவர்கள் புண்படுத்தி பேசினாலும் மௌனமாய் இருப்பவர்களே! 14 - ந் தேதி வரை சூரியன் 6 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். இழுபறியாக இருந்த வேலைகளும் முடிவடையும். பிள்ளைகளின் கோப, தாபங்கள் நீங்கும். அவர்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். 20 - ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6 - ம் வீட்டில் நிற்பதால் தைரியமாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். ஆனால் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்திருப்பதால் வேலைச்சுமை, அலைச்சல் இருந்துக் கொண்டேயிருக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். 4 - ந் தேதி வரை சுக்ரன் 6 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் வாகனம் அடிக்கடி பழுதாகும். வீடு பராமரிப்புச் செலவும் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 5 - ந் தேதி முதல் சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்வதால் கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கசக்கும். 5 - ந் தேதிக்கு பிறகு தெளிவாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் மனம் புண்படும்படி பேச வேண்டாம். வியாபாரத்தில் தெளிவு பிறக்கும். நல்லவர்களின் ஆலோசனையால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே! நல்ல வாய்ப்புகள் வரும். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி கூடும் மாதமிது. பரிகாரம் : அருகிலுள்ள சித்தர்பீடம் சென்று தியானம் செய்யுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 7:58 pm

தனுசு
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்தவர்களே! சனியும், ராகுவும் வலுவாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டம் விரியும். புதிய நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். கேது 5 - ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்க்க வேண்டுமென்ற கவலைகள் வந்துப் போகும். மகனுக்கு முன்கோபம் அதிகரிக்கும். மகளுக்கும் பிடிவாத குணம் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் சென்று மாறுபட்ட சூழ்நிலையில் தங்கி வந்தால் மனஇறுக்கங்கள் குறையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். அவ்வப்போது தூக்கம் குறையும். வருங்காலம் குறித்த கவலைகளும் வந்து நீங்கும். 20 - ந் தேதி வரை உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பூர்வீக சொத்துப் பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு சில வி. ஐ. பிகளின் உதவியை நாடுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சிலர் வீடு மாறுவீர்கள். 5 - ந் தேதி முதல் சுக்ரன் 6 - ல் மறைவதால் வாகனத்தை சீராக இயக்கப்பாருங்கள். வீட்டிலும் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு போன்ற பராமரிப்புச் செலவுகள் இருக்கும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! வேலைக் கிடைக்கும். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீவிநாயகப் பெருமானை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 7:59 pm

மகரம்
வணங்குபவர்களிடம் வளைந்து செல்பவர்களே! உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சாகமான வீடுகளில் செல்வதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வி. ஐ. பிகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள். தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நண்பர் வீட்டு திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். வீடு கட்டுவதற்கு லோன் கிடைக்கும். எம். எம். டி. ஏ. , சி. எம். டி. ஏ அப்ரூவலாகி வரும். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். 20 - ந் தேதி வரை செவ்வாய் வலுவாக இருப்பதால் தாயாருக்கு இருந்து வந்த ஆரோக்ய குறைவு நீங்கும். தாய்வழி சொத்து கைக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த விலைக்கு காலி கிரவுண்டை விற்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வகையில் ஆதரவுப் பெருகும். வீட்டை இடித்துக் கட்டுவது, மாற்றுவது போன்ற முடிவுக்கு வருவீர்கள். எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரருடன் பகைமை பாராட்ட வேண்டாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்பவர் வாழ்க்கை துணையாக அமைவார்கள். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வருமானம் உயரும். கடையை அழகுப்படுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். ஆனால் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினரே! உங்கள் வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீசூரிய பகவானை ஞாயிற்று கிழமைகளில் சென்று வணங்குங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக