புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
115 Posts - 42%
heezulia
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
7 Posts - 3%
sugumaran
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
3 Posts - 1%
manikavi
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரு பெயர்ச்சி பலன்கள் - 2013


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 29, 2013 8:25 pm

First topic message reminder :

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, விஜய வருடம் வைகாசி 16 ஆம் நாள், 30.5.2013, சுப கிரகங்களில் முக்கியமானவரான குரு, ரிசபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு மாறுகிறார். இந்தக் குரு பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன பலன் என்பதை இங்கே தந்திருக்கிறோம்.

நன்றி : தமிழ் கிளப்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Apr 29, 2013 9:24 pm

பொதுவாக இந்த குரு பெயர்ச்சி பலன்கள் ராசியை வைத்தே கணிக்கபடுவதாகும். இதனால் அவரவர் ராசியில் கூறப்படும் பலன்கள் சற்று முன்னே பின்னே இருக்கும்.

நட்சத்திரம் கொண்டு கணிக்கபடும் பலன்களே சரியானது.

saranya.s
saranya.s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 18/03/2013

Postsaranya.s Tue Apr 30, 2013 9:59 am

நன்றி !!! அன்பு மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 30, 2013 11:06 am

யினியவன் wrote:அப்படியும் முயற்சி பண்ணிட்டேன் - நம்ம நேரம் அரியர்ஸ் எழுத வரவங்க நம்ம ராஜா, பாலாஜி, சிவா மாதிரியே வராங்க - அப்புறம் எங்க பாஸ் பண்றது - வருஷம் தான் பாஸ் ஆகுது புன்னகை

விடுங்க பாஸ் , இதையெல்லாம் பார்த்தா --- நாம புழைப்பு நடத்த முடியுமா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Apr 30, 2013 11:30 am

என் ராசிக்கு ராஜயோகமா....பயம் மிக்க மகிழ்ச்சி..... சிரி

பகிர்வுக்கு நன்றி கிருஷ்னாம்மா... நன்றி



குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 14, 2013 11:52 am

நன்றி : தினகரன்

மேஷம்:

அடங்கிப் படுத்திருக்கும் நாய், அலையின்றி கிடக்கும் நீர்நிலை இரண்டிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதை உணர்ந்த நீங்கள், சுற்றுச் சூழ்நிலை அறிந்து அதற்கேற்ப காய் நகர்த்துவதில் வல்லவர்கள். உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் இதுவரை உங்களின் தன வீடான 2ம் வீட்டில் அமர்ந்து செல்வாக்கையும் பணவரவையும் தந்தார். வெளிவட்டாரத்திலும் உங்கள் கை ஓங்கியிருந்தது. பலரும் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், 28.5.2013 முதல் 12.6.2014
வரை உங்களின் விரய, பாக்ய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். பல வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டியிருக்கும். முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்களும் துரத்தும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். திடீரென்று புதிதாக அறிமுகமாகும் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வரவேண்டாம்.

வசதி, செல்வாக்கை கண்டு மயங்கி தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். அசைவ மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. மூச்சுத் திணறல், வாயுத் தொந்தரவால் நெஞ்சுவலி வந்துபோகும். மருத்துவரை ஆலோசித்து மருந்து உட்கொள்வது நல்லது. மனைவிவழி உறவினர்களால் செலவினங்களும் அலைச்சலும் இருக்கும். ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வரும். அன்பும் அன்யோன்யமும் குறையாது. விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். குருபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஓரளவு பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்னையால் நிம்மதியிழப்பீர்கள். தந்தையாருடன் இருந்த கருத்து மோதல்கள் குறையும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். குருபகவான் 11ம் வீட்டைப் பார்ப்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் திறமைகள் வெளிப்படும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். சொத்துகள் மூலம் திடீர் பணவரவு உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். வாகனம் வாங்குவீர்கள். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகுபகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள், வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவு ஏற்படக் கூடும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து போங்கள். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து நீங்கும். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் பாக்ய விரயாதிபதியான குருவின் சாரத்திலேயே குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் ஓரளவு கைக்கு வரும்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு புதுவேலை கிடைக்கும். திருமணம், கோயில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பாதியில் நின்ற வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். சரக்குகளை கொள்முதல் செய்யும்போது கவனம் தேவை. சந்தை நிலவரத்தை தெரிந்து செயல்படப் பாருங்கள்.

வேலையாட்களால் பிரச்னைகள் வரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சிலர் தன் பங்கைக் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபமடைவீர்கள். அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களும் வீண் பழியும் வந்து செல்லும். திறமை இருந்தும் கடினமாக உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றமும் வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாகக் கிடைக்கும். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டாம்.

கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். காதல் கசந்து இனிக்கும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். உங்களின் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். மாணவ-மாணவிகளே! விடைகளை எழுதிப் பாருங்கள். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள். படிப்பில் ஆர்வம் காட்டுங்கள். கட்டுரை, பேச்சு, இலக்கிய போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் போராடி இடம் பிடிப்பீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆதரவு கிட்டும். போட்டிகள் இருக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் உழைப்பிற்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சியினரை தகுந்த ஆதாரமில்லாமல் தாக்கிப் பேச வேண்டாம். சகாக்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். அக்கம்-பக்க நிலத்தாரை அனுசரித்துப் போங்கள். மரப்பயிர் லாபம் தரும்.

இந்த குரு மாற்றம் ஏமாற்றங்களையும் எதிலும் தாமதத்தையும் ஏற்படுத்தினாலும் விட்டுக் கொடுத்துப் போகும் குணத்தால் மகிழ்ச்சியை தரும்.

பரிகாரம்

மதுரை - திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை சஷ்டி திதியன்று சென்று தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.


soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 14, 2013 11:54 am

ரிஷபம்

வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் வந்து சேரணும் என்ற பழமொழியை அறிந்த நீங்கள், பல நாடு நகரம் சென்றாலும் தாய்மண்ணை மறக்க மாட்டீர்கள். இயற்கையை அதிகம் நேசிக்கும் நீங்கள், எதிர்நீச்சல் போடுவதில் வல்லவர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்குள் உட்கார்ந்து கொண்டு எப்போதும் மருந்து, மாத்திரையுமாக உங்களை பாடாய்ப்படுத்தினாரே குருபகவான். குடும்பத்தில் சாதாரணமாகப் பேசினாலும் சண்டையில் முடிந்ததே! திறமை இருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்
பட்டீர்களே! சந்தேகத்தால் கணவன்-மனைவி பிரிந்தீர்களே! ஈகோவால் சில நல்ல வாய்ப்புகளை இழந்தீர்களே! தாழ்வு மனப்பான்மையால் தள்ளியிருந்தீர்களே! இப்படி உங்களை சிக்கவைத்து வேடிக்கை பார்த்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரையுள்ள காலகட்டத்தில் உங்கள் ராசியை விட்டு விலகி தனவீடான 2ம் வீட்டில் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள்.

எதிர்பார்த்த வகையில் பணம் வந்து எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் புயல் வீசிய வீட்டில் அமைதி திரும்பும். எப்போது பார்த்தாலும் முக வாட்டத்துடனும் ஒருவித பதட்டத்துடனும் வலம் வந்தீர்களே! இனி அந்த பயம் நீங்கும். முகம் மலரும். தோற்றப் பொலிவு கூடும். பெரிய நோய் இருப்பதை போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலம் சீராகும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். அவர்களின் பிடிவாதம் தளரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள், கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களிடமிருந்து விலகுவீர்கள். முன்கோபத்தால் நல்ல நண்பர்கள், விஐபிகளை எல்லாம் இழந்தீர்கள்! இனி கனிவாகப் பேசுவீர்கள்.

ஆடை, ஆபரணம் சேரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். குருபகவான் ஆறாவது வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற பயம் நீங்கும். எதிர்ப்புகள் அடங்கும். வழக்கு சாதகமாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சருமத்தில் இருந்த நமைச்சல், தேமல், முடி உதிர்தல் நீங்கும். குருபகவான் எட்டாவது வீட்டை பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மூச்சுத் திணறல், மூச்சுப் பிடிப்பு, சளித் தொந்தரவுகள் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குருபகவான் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழடைவீர்கள். புதுவேலை கிடைக்கும். சங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் சப்தம, விரயாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சகோதரர் உதவுவார். உங்களின் பலவீனத்தை சரி செய்து கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மாமனார், மாமியார் உதவுவார்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக முடியும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. மறைமுக எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். சொத்து சேரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.

வாகனம் வாங்குவீர்கள். 29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் அஷ்டம, லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். புது பொறுப்புகள், பதவிகளை ஏற்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர் பயணங்கள், வீண் செலவுகள், ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் வந்து செல்லும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.

வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்வீர்கள். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலையாட்களை நீக்கி விட்டு தகுதியான, அனுபவமிக்க, பொறுப்புணர்வு வாய்ந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். சந்தையில் மதிப்பு கூடும். ரியல் எஸ்டேட், கணினி உதிரி பாகங்கள், கட்டிடம், கெமிக்கல் வகைகளால் லாபம் கூடும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டீர்களே, பழிவாங்கப்பட்டீர்களே! இனி இதுவரை இருந்து வந்த அவமானங்கள், ஏமாற்றங்கள் நீங்கும். உங்களின் கடின உழைப்பை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள்.

வேலையில் ஆர்வம் பிறக்கும். சக ஊழியர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். சம்பளம் உயரும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். வருமானம் பெருகும். கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிட்டும். திருமணம் கூடிவரும். உங்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தாற்போல் கணவர் அமைவார். சிலருக்கு வேற்று மாநிலத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். மாணவ-மாணவிகளே! கணக்கு பாடத்துடன் இருந்த பிணக்கு நீங்கும். படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும்.

வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்று எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். கலைத்துறையினரே! மாறுபட்ட சிந்தனை பிறக்கும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மூத்த கலைஞர்களின் ஆதரவால் உங்களின் புது முயற்சிகள் வெற்றியடையும். வசதி, வாய்ப்புகள் பெருகும். கிசுகிசுத் தொல்லை நீங்கும். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நீங்கள் நெருக்கமாக இருந்தாலும் மாவட்டமும் வட்டமும் விரித்த வலையில் சிக்கினீர்களே! இனி பெரிய பொறுப்புகள் தேடி வரும். தேர்தலில் வெற்றி கிட்டும். விவசாயிகளே! மாற்றுப்பயிர் செய்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டை தீரும். மகளின் திருமணத்தை விமரிசையாக முடிப்பீர்கள்.

இந்த குரு மாற்றம் சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் வீடு, மனை, வாகன யோகத்தையும் அள்ளித் தரும்.

பரிகாரம்

சென்னை-பாரிமுனையில் உள்ள கந்தசாமி கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 14, 2013 11:56 am

மிதுனம்

ஆயிரம் காசு உள்ளவன் அமைதியாய் இருப்பான், அரைக்காசு உள்ளவன் ஆடித் துள்ளுவான் என்பதை அறிந்த நீங்கள், பணம் வந்த பின்பும் பகட்டாக வாழத் தெரியாதவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து வீண்பழி, அலைச்சல், திடீர் பயணங்கள், செலவினங்கள், தூக்கமின்மையை தந்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக தொடர இருப்பதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். தலைச்சுற்றல், காய்ச்சல், மஞ்சள் காமாலை, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல் வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. காய், கனி, கீரை வகைகளை ஒதுக்காதீர்கள்.
‘ஜென்மத்தில் சீதையை ராமர் சிறை வைத்தது போல்’ என்ற பாடல்படி கணவன்-மனைவிக்குள் பிரச்னைகள் அதிகரிக்கும்.

ஒரே வீட்டில் இருந்துகொண்டே ஒருவருக்கொருவர் சில நாட்களில், சில நேரங்களில் மௌனமாக இருக்க வேண்டியது வரும். பெரிய நோய் இருப்பதைப்போல் பயம் வந்துபோகும். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரேநாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டியது வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற டென்ஷன் இருக்கும். உங்களின் திறமை மீது அவ்வப்போது சந்தேகம் வரும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அடிக்கடி மனஅழுத்தங்களும் வரக்கூடும். குருபகவான் 7ம் வீட்டை பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்பு குறையாது. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.

அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். குருபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் புத்திர பாக்யம் உண்டு. பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக அமையும். மகள் உங்களை புரிந்து கொள்வாள். மகனின் அலட்சியப்போக்கு மாறும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் உண்டாகும். குரு உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உயர்ரக ஆபரணம் வாங்குவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை இக்காலகட்டங்களில் உங்கள் சஷ்டம லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் செலவு கூடும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். மறைமுக எதிர்ப்பு, சிறுசிறு அவமானம் வந்துசெல்லும். கை, காலில் அடிபடக் கூடும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். சகோதர, சகோதரிகளால் சங்கடங்கள் வரும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் தரக் குறைவாக பேச வேண்டாம். பழைய கடனை நினைத்து கலங்குவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகுபகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சின்னச் சின்ன மன சஞ்சலங்கள், வீண் டென்ஷன், பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என்று நினைப்பீர்கள்.

உங்கள் இளமை காலத்துடன் அவர்களை ஒப்பிட்டுப் பார்த்து கொஞ்சம் பெருமூச்சு விடுவீர்கள். உறவினர்களுடன் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. இக்காலக்கட்டத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு யூரினரி இன்பெக்ஷன், செரிமானக் கோளாறு, தோல் நோய் வந்து நீங்கும். 29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் சப்தம, ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மனைவியுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். இக்காலகட்டத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வீண் பழி, ஏமாற்றம், பணப்பற்றாக்குறை வந்துபோகும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். கடையை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். போட்டிகளை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். வேலையாட்களால் விரயம் ஏற்படும். புதிதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து அறிமுகமில்லா தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

பங்குதாரர்களுடன் சச்சரவுகள் வரும். கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி, எரிபொருள் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களின் திறமையை சோதிப்பார்கள். வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உயரதிகாரிகளால் அவ்வப்போது அலைக்கழிக்கப்பட்ட பின்னர் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வுக்கான தேர்வில் வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! மாதவிடாய்க் கோளாறு, மூச்சுத் திணறல் வந்து நீங்கும். காதல் விவகாரங்களில் சிக்காதீர்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.

வேலை தாமதமாக கிடைக்கும். மாணவ-மாணவிகளே! விடைகளை எழுதிப் பாருங்கள். சிலர் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டி வரும். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தகவல் தருவது நல்லது. உட்கட்சி பூசலில் ஆர்வம் காட்டாதீர்கள். தலைமையை பகைத்துக் கொள்ள வேண்டாம். சகாக்கள் சிலர் உங்கள் மீது அதிருப்தியடைவார்கள். கலைத்துறையினரே! புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். விவசாயிகளே! எலித் தொல்லை அதிகமாகும். கரும்பு, தேக்கு லாபம் தரும். குறுகிய காலப் பயிர்களால் நஷ்டம் வரும்.

இந்த குரு பெயர்ச்சி எதிர்காலம் பற்றிய ஒரு பயத்தையும் கேள்விக்குறியையும் தந்தாலும் அவ்வப்போது அனுசரித்துப் போவதன் மூலமாக ஓரளவு சாதிக்க வைக்கும்.

பரிகாரம்

மயிலாடுதுறையில் மேதா தட்சிணாமூர்த்தி என்றழைக்கப்படும் வள்ளலார் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.


soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 14, 2013 11:58 am

கடகம்

இழுத்துக் கொண்டே போனால் அது இழுக்காகத்தான் போய் முடியும் என்ற பழமொழியை உணர்ந்த நீங்கள், காலம் கடத்தாமல் காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். கலா ரசனை அதிகமுள்ள நீங்கள், தூய்மைக்கும் நேர்மைக்கும் பெயர் போனவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு பணவரவை தந்த குருபகவான் இப்போது 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்களின் விரய ஸ்தானமான 12ம் வீட்டில் நுழைவது ஒரு வகையில் நல்லதுதான். உங்களின் பாதக ஸ்தானமான 11ம் வீட்டை விட்டு குரு விலகுவதால் உங்களுக்கு பணவரவு குறையாது. ஷேர் மூலமும் பணம் வரும். ஆனால், சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். இரவு நேரத்தில் சொந்த வாகனத்தில் நெடுந்தூரம் பயணிப்பதை தவிர்க்கப் பாருங்கள்.

பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புகழ் பெற்ற அண்டை மாநில புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சில நாட்களில் தூக்கம் குறையும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். முன்பின் அறியாதவர்கள் நயமாகப் பேசுகிறார்கள் என்று நம்பி குடும்ப அந்தரங்க விஷயங்களையோ, தன் சொந்த விஷயங்களையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். பழைய நூல்கள் படிப்பதில் ஆர்வம் பிறக்கும்.

பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கனவுத் தொல்லை அதிகரிக்கும். குருபகவான் உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நிலை சீராகும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் புதியது வாங்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குரு 6ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். விஐபிகளின் நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு 8ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்று மதத்தவர், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். திடீர் யோகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். புது பொறுப்புகள், பதவிகள் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, வேலை கிடைக்கும். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கிவிட வேண்டுமென்று முயற்சிப்பீர்கள். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். என்றாலும் தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம்.

சின்னச் சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். 29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் சஷ்டம, பாக்யாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் விஐபிகள் அறிமுகமாவார்கள். புகழ், கௌரவம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி கிடைக்கும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஆனால், செலவுகளும் காத்துக் கொண்டிருக்கும். சொத்து வாங்குவீர்கள்.

உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை தெரிந்து கொள்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கடையை விரிவுபடுத்தி நவீன மயமாக்குவீர்கள். தொழில் ரகசியங்களை கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். துணி, மின்னணு, மின்சார சாதனங்கள், புரோக்கரேஜ், துரித உணவு வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். வேற்று மாநிலம், வெளிநாட்டிலிருப்பவர்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தந்தாலும் இரண்டாம் கட்ட அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். உங்களை சிலர் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு.

சில சலுகைகள் கிடைக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்டநாள் கனவுகள் நனவாகும். காதல் கைகூடும். சிலர் தடைபட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வேலை நிமித்தம் காரணமாக பெற்றோரை விட்டு பிரிந்து வெளிநாடு செல்வீர்கள். கூடுதல் மொழி கற்பீர்கள். திருமணம் தடைபட்டு முடியும். மாணவமாணவிகளே! கெட்ட நண்பர்களை தவிர்க்கப் பாருங்கள். எல்லாம் தெரிந்ததுபோல் இருக்காதீர்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங்களை கேட்டறிவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். சின்னச் சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள். வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தலைமையை பகைத்துக் கொள்ள வேண்டாம். தொகுதி மக்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நெருக்கமாவீர்கள். விவசாயிகளே! மகசூல் பெருகும். பக்கத்து நிலத்தை வாங்குவீர்கள்.

இந்த குரு மாற்றம் புதிய திட்டங்களை நிறைவேற்ற உதவுவதுடன் ஓரளவு வசதி, வாய்ப்புகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

தஞ்சை திருவையாறுக்கு அருகேயுள்ள திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதரையும் வீணா தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 14, 2013 12:00 pm

சிம்மம்

கிழக்கும் மேற்கும் அலைந்தாலும் கிடைப்பது தான் கிடைக்கும் என்பதை அறிந்த நீங்கள், அளவுக்கு அதிகமாக ஆசைப்பட மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10ல் அமர்ந்திருந்த குருபகவான் உங்களை பல வகையிலும் பாடாய்ப் படுத்தினார். சொந்த பந்தங்களெல்லாம் பார்த்தும் பார்க்காமலும் சென்றார்களே! உங்களுக்கு வரவேண்டிய பணம் வராமல் போனதால் நீங்கள் வாங்கியிருந்த இடத்தில் திருப்பித் தர முடியாமல் திண்டாடினீர்களே! இதுநாள் வரை காப்பாற்றி வைத்திருந்த கௌரவத்தை இழக்க வேண்டி வந்ததே! குடும்பத்தில் உள்ளவர்களும் உங்களை புரிந்து கொள்ளாமல் போனார்களே! தலைக்குனிவையும், வீண் பழியையும் ஏற்படுத்திய குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்கள் ராசிக்கு லாப வீடான 11ம் வீட்டில் அமர்வதால் பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பதுபோல இனி எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும்.

திக்கு திசையறிந்து இருட்டிலிருந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். இனி தொட்ட தெல்லாம் துலங்கும். சின்ன வேலையைக் கூட முடிக்க முடியாமல் தடுமாறினீர்களே! உங்கள் ராசிக்கு 7ம் வீட்டை குரு பார்ப்பதால் அழகு, இளமை கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். கனிவான பேச்சால் விஐபிகள் மனதில் இடம் பிடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். உங்களின் 3ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு. உங்களின் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். குரு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொந்த பந்தங்கள் மெச்சும்படி மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் சுக, பாக்யாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தாயாருக்கு இருந்த மூட்டு வலி, முதுகு வலி நீங்கும். அவருடன் இருந்த மனஸ்தாபம் விலகும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டுவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். கடன் பிரச்னையை தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர் ஆதரவாக இருப்பார்.
26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பெரிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்கள் பூர்வ புண்ய, அஷ்டமாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயத்தில் மருத்துவரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலகட்டத்தில் ஓய்வெடுக்க முடியாதபடி உழைக்க வேண்டி வரும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். காய்ச்சல், யூரினரி இன்பெக்ஷன் வந்து செல்லும். ஆனால், பணப்புழக்கம் அதிகரிக்கும்.

செல்வாக்கு கூடும். யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் இதுவரை முடங்கிக் கிடந்தீர்களே! பாக்கிகள் வசூலாகாமல் தவித்தீர்களே! வேலையாட்களாலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் இருந்ததே! இனி எல்லாம் மாறும். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். லாபம் இரட்டிப்பாகும். புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வேலையாட்கள் உங்கள் மனநிலையை புரிந்துகொண்டு உங்கள் வேலைச்சுமையை குறைப்பார்கள். வியாபார சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் அமர்வீர்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றுவீர்கள். பழைய பாக்கிகள் வேகமாக வசூலாகும். பங்குதாரர்களால் இருந்த பிரச்னைகள் ஓயும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். கம்யூனிகேஷன், புத்தகம், ஷேர், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் லாபம் பெருகும்.

உத்யோகத்தில் பலவிதங்களிலும் அசிங்கப்பட்டீர்களே! தகுதியற்றவர்களிடமெல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருந்ததே! அலுவலகத்தில் இனி மதிக்கப்படுவீர்கள். மூத்த அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். உங்களை புரிந்து கொள்ளும் புது அதிகாரி வந்து சேருவார். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். அழகு, ஆரோக்யம் கூடும். தோழிகளுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே நமக்கில்லையே என்று கலங்காதீர்கள். தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக முடியும்.

வேலை கிடைக்கும். மாணவ மாணவிகளே! இனி நினைவாற்றல் கூடும். வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ் சென்று வருவீர்கள். நுழைவுத் தேர்விலும் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினரே! புதிதாக யோசிப்பீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். சம்பளபாக்கி கைக்கு வரும். அரசு கௌரவிக்கும். மூத்த கலைஞர்கள் உங்களுக்காக பரிந்து பேசுவார்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். அரசியல்வாதிகளே! செல்வாக்குக் கூடும். புதுப் பொறுப்புகளை ஏற்பீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். சகாக்கள் மத்தியில் ஆதரவு கூடும். தேர்தலில் வெற்றி உண்டு. விவசாயிகளே! அடகிலிருந்த பத்திரத்தை மீட்பீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். விளைச்சல் அதிகரிப்பதால் சந்தோஷமடைவீர்கள். அரசாங்கச் சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.

இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன் அடுத்தடுத்து வெற்றிகளையும் பணப்புழக்கத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருவள்ளூர், அரக்கோணத்திற்கு அருகேயுள்ள தக்கோலம் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 14, 2013 12:02 pm

கன்னி

நாம் விரும்பியது கிடைக்காதபோது எது கிடைத்ததோ அதை விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அனுபவ மொழியை அறிந்த நீங்கள், கிடைப்பதை வைத்து வாழக் கற்றவர்கள். அவ்வப்போது ஆழ்ந்த யோசனையில் மூழ்கும் நீங்கள், நான்கும் அறிந்தவர்கள். கடந்த ஓராண்டு காலமாக 9ம் வீட்டில் அமர்ந்திருந்த குரு ஏழரைச் சனியால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரளவு குறைத்ததுடன் சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வைத்தார். ஓரளவு கௌரவத்தை தந்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்களின் 10ம் வீட்டில் அமர்வதால் எதிலும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. உத்தியோகம், பதவி, கௌரவத்திற்கு பங்கம் வருமோ என்றெல்லாம் கலங்க வேண்டாம்.

உங்கள் ராசிநாதனான புதனின் மற்றொரு வீடான மிதுனத்தில் குரு அமர்வதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். விஐபிகளின் ஆதரவு கிட்டும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை அமையும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை பார்க்க வேண்டி வரும். சில சமயங்களில் எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் மன இறுக்கத்திற்கு ஆளாவீர்கள். தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். அவ்வப்போது ஆழ்மனதில் ஒருவித பயம் வந்து நீங்கும். குரு உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்ப்பதால் சமயோஜித புத்தி வெளிப்படும். சாதுர்யமாகவும் இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மழலை பாக்யம் கிடைக்கும்.

உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குரு ஏழாம் பார்வையால் சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மோதல்கள் விலகும். அவருக்கு இருந்த நோய் குணமாகும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடனின் உதவியும் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். குரு 9ம் பார்வையால் 6ம் வீட்டை பார்ப்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மகள் உங்களை புரிந்து கொள்வாள். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமையும். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். ஆன்மிகப் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் திருதியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரீஷம் நட்சத்திரத்தில் செல்வதால் பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள், முன்கோபம், திடீர் பயணங்களால் செலவுகள், பாகப்பிரிவினை, சொத்துப் பிரச்னைகள் வந்து செல்லும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சி, கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அலைபேசியில் பேசிக் கொண்டே சாலைகளை கடக்க வேண்டாம். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் சுக சப்தமாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால் உத்யோகத்தில் வீண்பழி, அடிக்கடி இடமாற்றம் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்துபோகும். எந்தச் சூழ்நிலையிலும் மனைவியை மரியாதை குறைவாக பேச வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, பைப்ராய்டு பிரச்னைகள் வந்து செல்லும். சிலர் உங்களைப்பற்றி அவதூறு பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். தாயாருடன் மனத்தாங்கல் வரும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் பணவரவு, சொத்து சேர்க்கை உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

வேற்றுமதத்தவர் வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலமும் பணம் வரும். புதுவேலை கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். வியாபாரத்தில் பெரியளவில் யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். புது முதலீடுகள் வேண்டாம். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாக பேசுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் சம்பாதிப்பீர்கள். 10ம் வீட்டில் குரு அமர்வதால் உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். விரும்பத்தக்க இடமாற்றமும் இருக்கும். பாராட்டுகள் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள். சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளிடம் பணிந்து போங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பளமும் சற்று தாமதமாகி கிடைக்கும். கன்னிப் பெண்களே! உயர்கல்வியை போராடி முடிக்க வேண்டி வரும். கல்யாணம் சிறப்பாக முடியும். காதல் விவகாரங்கள் வேண்டாமே! வெளி நாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். மாணவ மாணவிகளே! கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது.

அதற்கான உழைப்பு வேண்டும். தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலால் பதவியை இழக்க வேண்டி வரும். தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவீர்கள். உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கலைத்துறையினரே! சம்பளபாக்கி கைக்கு வரும். யதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும். விவசாயிகளே! தோட்டப் பயிர்களால் லாபமடைவீர்கள். பக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்துப் போவது நல்லது.

இந்த குருமாற்றம் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிய வைப்பதாகவும் சாதிக்க வேண்டுமெனில் சகிப்புத் தன்மையும் விடா முயற்சியும் அவசியம் என்பதை அறிய வைக்கும்.

பரிகாரம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள தட்சிணாமூர்த்தியை தரிசித்து வணங்குங்கள். முதியோர் இல்லத்திற்கு சென்று உதவுங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக