புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 25, 2013 2:01 am



இணையத்திற்கு இணைப்பு தரும் வழிகள் தொடர்ந்து மாற்றம் அடைந்து வருகின்றன. இணைப்பு தரும் நிறுவனத்தின் சேவை கிளை மையத்தில் உள்ள சர்வரிலிருந்து, வயர் இழுத்து, நம் இல்லம் மற்றும் அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு இணைப்பு தரும் பழக்கம் இன்னும் இருந்தாலும், வயர் இன்றி இணைப்பு தருவதே இன்றைய சிறப்பாக இயங்கி வருகிறது. வை-பி, டேட்டா கார்ட், வை-மேக்ஸ் என இணைப்பின் தன்மைகள் மாறி வருகின்றன. ஆனால், இணைப்பு எப்படிப்பட்டதாயினும், அது வேகமான தகவல் பரிமாற்றம் தருவதையே மக்கள் விரும்புகின்றனர். மின்னல் வேக இணைய இணைப்பு கிடைக்காதா என அனைவருமே விரும்புகின்றனர். கட்டமைப்பு செலவு, கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வேகமான இணைய இணைப்பு கிடைக்கும். இந்தியா உட்பட பல நாடுகளில், இணைய வேகம் இன்னும் மிக மிக மிதமான நிலையிலேயே உள்ளது.

சரி, அதி வேகமான இணைப்பில் முதல் இடம் பெறுவது எந்த நாடாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள். அமெரிக்கா என்று உங்கள் எண்ணத்தில் பளிச்சிட்டால், அதனை மறுத்துவிடுங்கள். முதல் பத்து இடங்களில் கூட அமெரிக்கா இல்லை. அந்நாட்டின் விஸ்தீரணத் தினால், அதன் சராசரி இணைய இணைப்பு வேகம், அந்நாட்டிற்கு முதல் பத்து இடங்களில் கூட இடம் தரவில்லை. 14 ஆவது இடத்தில் உள்ளது. இங்கு உலக அளவில் அதி வேக இணைப்பு தரும் சில நாடுகளைப் பார்க்கலாம். இந்த வகையில் புளூம்பெர்க் (Bloomberg.com) தளத்தில் கிடைக்கும் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. ஹாங்காங் :

நொடிக்கு 54.1. மெகா பிட்ஸ் வேகம். பன்னாட்டளவில் அதிகமான வேகத்தில் இணைய இணைப்பு தரும் நாடு. மக்கள் பெருக்கம், இணையத்தைப் பயன்படுத்துவோர் அதிகம், இணையத்தில் எந்த பொருள் பற்றியும் பதிவதற்குத் தடையற்ற அரசின் ஆதரவு எனப் பல காரணங்களை இதற்குக் கூறலாம். சாப்ட்வேர் பைரசி எனப்படும் திருட்டு நகல் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதிலும், இணையம் வழி வழங்குவதிலும், சிறுவர்கள் சார்ந்த பாலியல் தகவல்களைத் தருவதிலும் இங்குள்ள இணைய தளங்கள் பயன்படுகின்றன. பேச்சு சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட இந்த நாடு, இவை எதனையும் தடுப்பதில்லை. இணைய தளம் அமைத்து செயல்பட எந்த உரிமமும் பெற வேண்டியதில்லை.

2. தென் கொரியா:

நொடிக்கு 48.8 மெகா பிட்ஸ். டிஜிட்டல் விளையாட்டுகளுக்கு உலக அளவில் பெயர் பெற்ற நாடு. உலக அளவில் இணைய வழி விளையாட்டு போட்டியை அடிக்கடி நடத்தும் நாடு. இந்நாட்டின் இணைய அலைக் கற்றையில் பெரும்பகுதி, விளையாட்டுகளை நடத்துவதிலேயே செலவாகிறது. இணைய இணைப்பு கட்டணம் இங்கு மிக மிகக் குறைவு.

அரசின் கொள்கைகள், இணைய பயன்பாட்டைப் பெரிதும் ஊக்குவிப்பதாக உள்ளன. அனைத்து பெரிய நகரங்களிலும், வயர் இணைப்பற்ற இணைய தொடர்பு தரப்படுகிறது. இங்குள்ள உணவு விடுதிகள் அனைத்திலும் இலவச வை-பி இணைய இணைப்பு தரப்படுகிறது.

3. ஜப்பான்:

நொடிக்கு 42.2 மெகா பிட்ஸ். எலக்ட்ரானிக்ஸ் தொழில் பிரிவில், ஜப்பான் தன் உயர்நிலையை விட்டுவிட்டாலும், தகவல் தொழில் நுட்பத்தில் இன்னும் முன்னணி இடத்தைக் கொண்டுள்ளது. இணையத் தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருப்பதை, ஜப்பான் தன் தேசியக் கொள்கையாகவும், இலக்காகவும் கொண்டுள்ளது. தகவல் பரிமாற்றத்தை எடுத்துச் செல்ல, இணைய இணைப்பு தருவதில் அதிவேக ஆப்டிக் பைபர் கேபிள்கள், நாடெங்கும் பயன்படுத்தப்படுகின்றன.

4. லத்வியா:

நொடிக்கு 37.5 மெகா பிட்ஸ்: தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடுகளை எண்ணுகையில், லத்வியா அதில் ஓர் இடம் பிடிக்கவில்லை. ஆனால், இணைய இணைப்பினைப் பொறுத்த வரை, வேகமான தகவல் பரிமாற்றம் கூடிய இணைப்பினைத் தருவதில் முன்னணி இடம் கொண்டுள்ளது.

5. ருமானியா:

நொடிக்கு 37.4 மெகா பிட்ஸ்: இந்நாட்டின் சில நகரங்கள், உலக அளவில் அதிவேக இணைய இணைப்பு தருவதில் முதலிடங்களைப் பிடித்துள்ளன. தென் கொரியாவிற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் சென்ற ஆண்டில் இடம் பெற்றிருந்தது.

6. பெல்ஜியம்:

நொடிக்கு 32.7 மெகா பிட்ஸ்: இந்நாட்டின் பெரும்பாலான மக்கள், தாங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பில் டேட்டாவிற்கான அதிக பட்சத்தினை வரையறை செய்துள்ளனர். இணைப்பு தரும் வேகம் போதுமானதாக உள்ளது.

7. ஸ்விட்சர்லாந்து:

நொடிக்கு 32.4 மெகா பிட்ஸ். ஐரோப்பிய நாடுகளில், அதிக வேகத்தில் இணைப்பு தரும் நாடு ஸ்விட்சர்லாந்து. நாட்டின் ஜனத்தொகை அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் இணையம் பயன்படுத்தும் மக்களைக் கொண்ட நாடாகவும் இது இடம் பெற்றுள்ளது.

8. பல்கேரியா:

நொடிக்கு 32.1 மெகா பிட்ஸ்: குறைந்த அளவிலான அரசு வரிகள், குறைவான செலவில் கிடைக்கும் மனித உழைப்பு ஆகியவற்றிற்குப் பெயர் பெற்றதால், பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இங்கு தங்கள் நிறுவனப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. இந்நாட்டில், பெரும்பாலான இணைய இணைப்புகள் லோக்கல் ஏரியா நெட்வொர்க் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன. வேகம் மற்றும் சேவையில் உதவி ஆகியவற்றால், மக்கள் அதனையே விரும்புகின்றனர்.

9. இஸ்ரேல்:

நொடிக்கு 30.9 மெகா பிட்ஸ். 2001 ஆம் ஆண்டில் தான், இஸ்ரேலில் மக்களுக்கு இன்ட்ர்நெட் கிடைத்தது. அதன் பின்னர், மிக வேகமாக வளர்ந்து இந்த இடத்தைப் பிடித்துள்ளது. தொலைபேசி மற்றும் கேபிள் கட்டமைப்பு மூலம், இங்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படுகிறது.

10. சிங்கப்பூர்:

நொடிக்கு 30.7 மெகா பிட்ஸ். தொழில் நுட்ப கூடு எனச் செல்லமாக அழைக்கப்படும் நாடு. 99 சதவீத மக்கள் இணைய இணைப்பினைக் கொண்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டில், ""அதிபுத்திசாலியான நாடு'' எனப் பெயர் எடுக்க வேண்டும் என்ற இலக்கோடு சிங்கப்பூர் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு முயற்சியாக, இணைய இணைப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. அதிவேக பைபர் நெட்வொர்க் அமைக்கப்பட்டு இணைப்பு தரப்படுகிறது. நேஷன் வைட் பிராண்ட்பேண்ட் நெட்வொர்க் ஒன்றை மிக வேகமாக சிங்கப்பூர் அரசு அமைத்து வருகிறது
மேலே தரப்பட்டுள்ள பட்டியல், இணைய இணைப்பு வேகத்தின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளதாகும். அந்நாட்டின் ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில், இணையம் பயன் படுத்தும் மக்கள், குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம்.

கம்ப்யூட்டர் மலர்



அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Apr 25, 2013 4:10 pm

தகவலுக்கு நன்றி அண்ணா... நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Apr 25, 2013 6:00 pm

பகிர்வுக்கு நன்றிகள்.




Uploaded with ImageShack.us
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Apr 26, 2013 11:09 am

இதில் அரபு நாடுகள் இல்லையே ,இங்கெல்லாம் கண்ணாடி இழை தொழில்நுட்பம் வந்துவிட்டது வேகம் 100 mbps தான்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Apr 26, 2013 11:19 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா.... நன்றி



அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Apr 26, 2013 5:28 pm

அனைவரும் அறிய வேண்டிய ஒன்றுதான் பகிர்வுக்கு நன்றி



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் Knight
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 26, 2013 6:10 pm

எங்க ஊருக்கு இந்த ஸ்பீட் எல்லாம் எப்ப வருமோ தெரியல?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Apr 26, 2013 6:16 pm

யினியவன் wrote:எங்க ஊருக்கு இந்த ஸ்பீட் எல்லாம் எப்ப வருமோ தெரியல?

வரும் ஆனால் வராது ?

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Apr 26, 2013 6:22 pm

அருமையான பதிவு . நாம் நாட்டில் எவ்வளவு வேகம் என்பதனயும் இணைத்து இருக்கலாம்



அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 26, 2013 6:28 pm

பூவன் wrote:
யினியவன் wrote:எங்க ஊருக்கு இந்த ஸ்பீட் எல்லாம் எப்ப வருமோ தெரியல?

வரும் ஆனால் வராது ?
2g க்கே நாங்க 1,75,000 கோடிக்கு ஊழல் பண்ணினோம்
இந்த ஸ்பீடுக்கு எவ்வளவுன்னு நீங்களே கணக்கு பண்ணிக்கோங்க
நாங்க கணக்கில் வீக்கு ஆனா ஊழலில் படு ஸ்ட்ராங்கு ஓகேவா!!!




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக