புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
6 Posts - 20%
viyasan
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_m10அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவுக்கு ஆபரேஷன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 18, 2013 5:32 pm

First topic message reminder :

அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 E_136510

தங்கையிடம் இருந்து வந்த கடிதத்தை பார்த்த கார்த்திக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனது அம்மாவுக்கு ஒரு வாரத்திற்குள்வயிற்றில் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்றும், அதற்காக 20 ஆயிரம் அனுப்பி வை என்றும் எழுதியிருந்தாள்.

நாளை தான் சம்பள நாள். அதனால் 20 ஆயிரம் அம்மாவின் ஆபரேஷனுக்கு அனுப்பி வைப்பதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் இவன் நேற்று தான் தன் காதலி பிரியாவுக்கு தங்கச் சங்கிலி வாங்கி தருவதாக சொல்லியிருந்தான்.

இப்போது அதுதான் அவனுக்கு குழப்பம். அம்மாவுக்கு பணத்தை அனுப்புவதா! அல்லது ஏற்கனவே வாக்களித்தபடி காதலிக்கு தங்கச் சங்கிலி வாங்கி கொடுப்பதா... குழம்பினான். இறுதியாக காதல் கண்ணை மறைக்க, காதலிக்கு தங்கச்சங்கிலி வாங்கி கொடுக்க முடிவு செய்தான்.

அடுத்த நாள்காலையில் ஆபீஸ் சென்றான். வாங்கிய சம்பளத்தை பர்சில் வைத்துக் கொண்டு நேராக போஸ்ட் ஆபீஸ் சென்றான். பர்சில் இருந்த சில்லறையை எடுத்து கடிதம் ஒன்றை வாங்கியவன், அம்மாவுக்கு பணம் அனுப்ப முடியவில்லை என்பதை எப்படி எழுதினால் நம்பும்படி இருக்கும் என்று யோசித்தான். அப்பொழுது சில்லறைக்காக எடுத்த தன் பர்சை மேஜை மீது வைத்ததை மறந்து விட்டான்.

கொஞ்சம் யோசித்து எழுதத் தொடங்கியபோது தான் பேண்ட் பாக்கெட்டில் பர்ஸ் இல்லாத உறுத்தல் தெரிந்தது.

அதேநேரம் பர்சை மேஜையில் வைத்தது நினைவுக்கு வர, வைத்த இடத்தில் பார்த்தான். அதிர்ந்தான். அதற்குள் பர்ஸ் மாயமாகி இருந்தது. பணம் பிதுங்கி வழிகிற ஒரு பர்ஸ் மேஜையில் இருந்தால் ஒரு திருடனின் பார்வையில் கூடவா அது பட்டிருக்காது.? எவனோ பார்த்ததும் லவட்டிக் கொண்டு போயிருக்கக் கூடும்.

அம்மாவுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? வெறுத்துப் போனான். இப்போது அம்மாவிற்கும் அனுப்ப முடியாமல், காதலிக்கும் வாங்கிக் கொடுக்க முடியாமல் போனதே!

விஷயத்தை காதலியிடம் சொன்னபோது அவள் நம்பவில்லை. தன்னை ஏமாற்றத்தான் பணம் திருட்டு போனதாக நாடகமாடுகிறான் என்றே எண்ணினாள். அதையே சொல்லியும் காட்டினாள்.

இதனால் அடுத்து வந்த நாட்களில் அவனிடம் பாராமுகம் காட்டினாள்.

அவன் செல்போனில் பேசமுயன்றபோதும் வேண்டு மென்றே கட் பண்ணினாள்.

ஒரு வாரம் கழிந்த நிலையில் தங்கையிடம் இருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது. பணம் வந்து சேர்ந்து ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்தது என்று தங்கை எழுதி இருந்ததை படித்தவனுக்கு இப்போது மறுபடியும் அதிர்ச்சி.

அடுத்த நாளே அந்த அதிர்ச்சிக்கான விடை கிடைத்தது, இன்னொரு கடிதம் மூலம். முகவரி இல்லாமல் வந்திருந்த அந்த கடிதம் இப்படி ஆரம்பித்திருந்தது.

சார் நான் தான் உங்கள்பர்சை திருடியவன். தயவுசெய்து மன்னித்து விடுங்கள். பர்சில் உங்க அம்மா ஆபரேஷனுக்கு பணம் தேவை என்று உங்களுக்கு எழுதி இருந்த கடிதத்தை பார்த்தேன். உடனே நானே அந்த பணத்தை உங்க அம்மாவிற்கு அனுப்பி வைத்து விட்டேன். என் அம்மாவுக்கு இதேமாதிரியான ஒரு இக்கட்டான நேரத்தில் கேட்ட பணத்தை அனுப்ப முடியாமல் போய்த்தான் அன்பான அம்மாவை இழந்தேன்.

அந்த வேதனை இன்னும் என்னை விட்டுப் போகவில்லை. உங்க அம்மாவுக்கும் அதே மாதிரியான நிலை ஏற்பட்டு உங்களையும் தாயில்லாத பிள்ளையாக ஆக்கிட நான் விரும்பவில்லை .என்றாலும் திருடியதற்காக மன்னித்து விடுங்கள்.

கார்த்திக்கு எல்லாம் புரிந்தது. என்னை மன்னிச்சிடும்மா...நீ நல்லாயிருக்கணும்னு ஒரு திருடனுக்குத் தோணியது எனக்குத் தோணலையே...

மானசீகமாக அவன் தன் அம்மாவிடம் மன்னிப்பு வேண்டிக்கொண்டிருந்த நேரத்தில் செல்போன் ரிங்கியது. எடுத்துப்பார்த்தான். காதலி பிரியாதான் அவனிடம் பேச முயன்று கொண்டிருந்தாள்.

அவன் போனை எடுக்கவில்லை.



அம்மாவுக்கு ஆபரேஷன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Fri Apr 19, 2013 1:30 pm

நலம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக