புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
73 Posts - 77%
heezulia
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
238 Posts - 76%
heezulia
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
8 Posts - 3%
prajai
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கேட்க நாதியில்லை! Poll_c10கேட்க நாதியில்லை! Poll_m10கேட்க நாதியில்லை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்க நாதியில்லை!


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Apr 01, 2013 8:42 am

விருத்தாசலம் அருகே தண்டவாளத்தில் விழுந்து, சிதைந்துபோன பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்களுக்காக அம்மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்றும், தமிழ் முதல்தாள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் கூறி,பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித் துறை.
-
இரு ஆண்டுகளுக்கு முன்பு, வேலூர் ஊரிஸ் கல்லூரியில் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த அறை தீ விபத்துக்குள்ளானது. தண்ணீரைப் பீய்ச்சி அணைத்ததால் சேதமான விடைத்தாள்கள் அதிகம். உடனே, அரையாண்டு மதிப்பெண்களை வைத்து ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு மதிப்பெண் அளிக்கப்பட்டது.
- அப்போதும்,கல்வித் துறை அதற்கு யாரையும் பொறுப்பாக்கவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை.
தண்டவாளத்தில் விழுந்த 357 விடைத்தாள்களில்"குறிப்பிட்ட அளவு' விடைத்தாள்கள் மட்டுமே (எத்தனை என்பதை வெளியிடவில்லை) சேதமடைந்துள்ளன என்று கூறும் கல்வித்துறை, ஏன் இந்த ஒரு கட்டு மட்டும் விழுந்தது, ஏன் சில விடைத்தாள்கள் எரிந்த நிலையில் காணப்பட்டன என்பது குறித்து விசாரிக்க ஆர்வம் காட்டியதா என்றால் அதுவும் இல்லை.
கட்டுகள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ஏற்றப்பட்டன. திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு கட்டு குறைவது தெரியவந்தவுடன் ரயில்வே ஊழியர்கள் விருத்தாசலத்தில் தேடி, தண்டவாளத்தில் சேதமடைந்த கட்டுகளைக் கண்டுபிடித்தார்கள் என்று கல்வித் துறை அதிகாரிகள் கூறியதை நம்பி, ரயில்வே துறை மீது வழக்கு தொடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் வைகை செல்வன் பேட்டி அளித்தவுடன், ரயில்வே நிர்வாகம் - இதற்குநாங்கள் பொறுப்பல்ல - என்றுமறுப்பு தெரிவித்துவிட்டது.
-
"கல்வித் துறை அதிகாரிகள் இந்த விடைத்தாள்களை ரயில்வே அஞ்சல் சேவையிடம் (ஆர்எம்எஸ்) ஒப்படைத்தார்கள். இது அஞ்சல்துறையின் கீழ் இயங்குகிறது. விடைத்தாள்களைரயில்வே தவறாகக் கையாண்டது என்பது தவறு' என்று ரயில்வே விளக்கம் அளிக்கிறது. திருச்சி அஞ்சல்துறை இன்னும் இதற்கான விளக்கத்தை அளிக்காமல் மௌனம் காக்கிறது.
-
ஆர்எம்எஸ் என்றாலும், ரயிலில் ஏற்றியதற்கான ஒப்புதல் சீட்டு இருந்ததால்தான், ஒரு கட்டு குறைகிறது என்பதை திருச்சி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்க முடிந்தது. அப்படியானால் அந்தப் பெட்டியில் இருந்த ஆர்எம்எஸ் பணியாளர்கள்தானேஇதற்கு பதில் சொல்ல வேண்டும்? ஏன் அஞ்சல்துறை மெüனம் காக்கிறது?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. 2010-ஆம் ஆண்டு முசிறியிலிருந்து பேருந்துமூலம் திருச்சிக்கு அனுப்பப்பட்ட 3 பள்ளிகளைச் சேர்ந்த 262 பிளஸ் 2 மாணவர்களின் இயற்பியல் விடைத்தாள் கட்டு காணாமல் போனது. இந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தினார்கள். இவர்களில் 4 மாணவர்கள் இயற்பியல் தேர்வில் தோல்வி அடைந்தனர். அத்துடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.
-
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிப்பு செய்து, சில மாதங்களுக்குப் பிறகு அஞ்சல்துறை அளித்த பதில்,"கண்டுபிடிக்க இயலவில்லை' என்பதுதான். அதாவது சாதாரண கடுதாசிக்குக் கொடுக்கும் மரியாதையைத்தான் மாணவர்களின் விடைத்தாள்களுக்கும் கொடுக்கிறது அஞ்சல்துறை. இதற்காக, மறுதேர்வு நடத்தியசெலவு, மாணவர்களின் மனஉளைச்சல் ஆகியவற்றுக்காககல்வித் துறை அஞ்சல்துறையிடம் இழப்பீடு கோரியிருக்க வேண்டாமா? எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே, ஏன் இந்த மெத்தனம்?
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் படிவம் நிரப்புதல் தொடர்பாக ஒரு கேள்வி. வங்கியில் காசோலை விண்ணபிப்பதுபோல அல்லது ரயில் பயண முன்பதிவு செய்வதுபோல படிவங்களை நிரப்ப வேண்டும். இதற்கான படிவத்தை மாணவர்களுக்கு வழங்க வேண்டியது கல்வித்துறையின் வேலை. ஆனால், தமிழ்நாடு முழுவதும்மாணவர்களுக்குப் படிவம் தர மறந்து விட்டார்கள்.
- இந்தக்கேள்விக்கு பதில் அளிக்க முற்பட்ட எல்லா மாணவர்களுக்கும் 5 மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டனர். கல்வித்துறை தேர்வு நடத்தும் லட்சணம் இதுதான்.
பத்தாம் வகுப்புத் தேர்வை வெறும் சடங்குபோலவே கல்வித்துறை நடத்துகிறது. இதுதான் உண்மை நிலை என்கின்றபோது, எதற்காக பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத்தேர்வாகத் தொடர வேண்டும் என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. இதையே காரணம் காட்டி அப்படிஒரு முடிவை எடுத்தாலும் எடுத்து விடுவார்கள் கல்வியைத் தரம் தாழ்த்தக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் நமது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்.
விடைத்தாள்கள் தானாகவே தீப்பிடித்து எரியும், விடைத்தாள்கள் தானாகவே பேருந்தைவிட்டு இறங்கி ஓடி மறையும், விடைத்தாள்கள் தானாகவே ரயிலின் ஆர்எம்எஸ் பெட்டியிலிருந்து குதித்துநடுவழியில் தற்கொலை செய்துகொள்ளும். இதற்கெல்லாம் யாரும் பொறுப்பேற்பது கிடையாது. பொறுப்பேற்க வேண்டிய அவசியமும் கிடையாது. காரணம், இது அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்டது. விடைத்தாள் இல்லாமல் போனால், அரையாண்டு மதிப்பெண், அல்லது முதல்தாள், அல்லது "ரேண்டம்'முறையில்கூட குலுக்கல் போட்டு மதிப்பெண் வழங்கவும் கல்வித்துறை தயார்.
-
தெரியாமல்தான் கேட்கிறோம், மின் கட்டணம், வீட்டு வரி, விற்பனை வரி, வருமான வரி என்று குடிமக்கள் அரசுக்குக் கட்ட வேண்டிய வரியைக் குறித்த காலத்தில் கட்டாமல்விட்டால் அதற்குப்பெயர் கடமை தவறல். அபராதம் அல்லது தண்டனை தரப்படுகிறது. ஆனால், மக்கள் வரிப்பணத்தில் மாதச் சம்பளம், இதர சலுகைகள் என்று பெறும் அரசுஊழியர்கள் கடமையை முறையாகச் செய்யாவிட்டால், அவர்கள் அலட்சிய மனோபாவத்துடன் நடந்துகொண்டால், கடமை தவறினால், அது தெரியாமல் நடந்துவிட்ட தவறு. நன்றாக நடக்கிறது நிர்வாகம்! சிறப்பாக இருக்கிறது மக்களாட்சி!!
-
தினமணி தலையங்கம்




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Apr 01, 2013 10:31 am

இப்படி இருந்தால் என்ன தான் செய்யமுடியும் பாவம் மாணவர்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 01, 2013 1:46 pm

இப்படியா அஜாக்கிரதையா இருப்பாங்க.... என்ன கொடுமை சார் இது

மாணவர்கள் எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதி இருப்பாங்க கோபம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 01, 2013 1:51 pm

ஜாஹீதாபானு wrote:மாணவர்கள் எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதி இருப்பாங்க கோபம்

ஆமாம் ஆமாம் அதுவும் இப்பலாம் இந்த பிளையிங் ஸ்காடு வேற கண்ட நேரத்துல ரோந்து வராங்க எல்லாத்தையும் சமாளிக்க எவ்வுளவு கஷ்டமா இருக்கும் அந்த மாணவர்களுக்கு பாவம் இப்படியா அஜாக்க்ரதையா இருக்கிறது உங்க கோவம் ரொம்ப நியாயம்த்தான் நான் அப்ரிசேட் பண்றேன் உங்களை நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் கேட்க நாதியில்லை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 01, 2013 1:52 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:மாணவர்கள் எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதி இருப்பாங்க கோபம்

ஆமாம் ஆமாம் அதுவும் இப்பலாம் இந்த பிளையிங் ஸ்காடு வேற கண்ட நேரத்துல ரோந்து வராங்க எல்லாத்தையும் சமாளிக்க எவ்வுளவு கஷ்டமா இருக்கும் அந்த மாணவர்களுக்கு பாவம் இப்படியா அஜாக்க்ரதையா இருக்கிறது உங்க கோவம் ரொம்ப நியாயம்த்தான் நான் அப்ரிசேட் பண்றேன் உங்களை நன்றி நன்றி நன்றி நன்றி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 01, 2013 1:53 pm

அடடா ஒரு பேப்பர் திருத்தற பேட்டா நஷ்டமா போச்சே நம்ம அசுரனுக்கு.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 01, 2013 1:59 pm

யினியவன் wrote:அடடா ஒரு பேப்பர் திருத்தற பேட்டா நஷ்டமா போச்சே நம்ம அசுரனுக்கு.
விடுங்க பாஸ் அரசு ஊழியர்களை திருத்தமுடியாதுன்னு அவருக்கு தெரியும் அவரு இப்போ குருபாயை திருத்துற பனியில பிசியா இருக்காராம் சிரி





ஈகரை தமிழ் களஞ்சியம் கேட்க நாதியில்லை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 01, 2013 2:01 pm

balakarthik wrote:
யினியவன் wrote:அடடா ஒரு பேப்பர் திருத்தற பேட்டா நஷ்டமா போச்சே நம்ம அசுரனுக்கு.
விடுங்க பாஸ் அரசு ஊழியர்களை திருத்தமுடியாதுன்னு அவருக்கு தெரியும் அவரு இப்போ குருபாயை திருத்துற பனியில பிசியா இருக்காராம் சிரி

மணிரத்னம் பட பாதிப்போ? ஏமனுக்கு அனுப்பிடப் போறாங்க அசுரனை.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 01, 2013 2:04 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
யினியவன் wrote:அடடா ஒரு பேப்பர் திருத்தற பேட்டா நஷ்டமா போச்சே நம்ம அசுரனுக்கு.
விடுங்க பாஸ் அரசு ஊழியர்களை திருத்தமுடியாதுன்னு அவருக்கு தெரியும் அவரு இப்போ குருபாயை திருத்துற பனியில பிசியா இருக்காராம் சிரி

மணிரத்னம் பட பாதிப்போ? ஏமனுக்கு அனுப்பிடப் போறாங்க அசுரனை.

அங்க போயும் கலை எடுக்குரவேலையை கன கச்சிதமா செய்வார் எங்கள் அசுர வாத்தியார்



ஈகரை தமிழ் களஞ்சியம் கேட்க நாதியில்லை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 01, 2013 2:10 pm

balakarthik wrote:அங்க போயும் கலை எடுக்குரவேலையை கன கச்சிதமா செய்வார் எங்கள் அசுர வாத்தியார்
ஏமனுக்கு போனாலும் எம்மண்ணுக்கு போனாலும் மண்ணுல இருக்கற களைய எடுத்துடுவாருன்னு சொல்லுங்க




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக