புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
1 Post - 1%
mruthun
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_m10ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 1:39 pm

ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் 800px-ISCON_Rajahmundry

ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்த ராஜமுந்திரி நகரம் ஆந்திர பூமியின் கலாச்சார தலைநகரமாகவே பிரசித்தமாக அறியப்படுகிறது. ஆதிகாலத்தில் ராஜமஹேந்திரி என்றழைக்கப்பட்ட இந்நகரத்தின் பெயர் நாளடைவில் திரிபடைந்து இப்படி ராஜமுந்திரி என்றாகியுள்ளது.

வரலாற்று சான்றுகளின்படி இந்த நகரத்தில்தான் நன்னய்யா எனும் மிகச்சிறந்த தெலுங்கு புலவர் தெலுங்கு எழுத்துருக்களை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. ஆதிகவி என்ற புகழுடன் அழைக்கப்படும் இந்த நன்னய்யா தெலுகு இலக்கியப் பாரம்பரியத்தின் பிதாமகராக அறியப்படுகிறார்.

தெலுஙகு லிபி மற்றும் ஆகச்சிறந்த புலவர் நன்னய்யா பிறந்த ஸ்தலமாக மட்டுமல்லாமல் வேதப்பாரம்பரியம் மற்றும் ஹிந்து அறக்கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றி திகழ்ந்த பாரம்பரிய நகரம் என்ற புகழையும் இது பெற்றுள்ளது.

இன்றும் ராஜமுந்திரியில் புராதன ஐதீகங்கள் மற்றும் வேதச்சடங்குகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு பாரம்பரிய கலையம்சங்களும் அழிந்துவிடாமல் இந்நகரில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஆந்திரமாநிலத்திலேயே மக்கள் தொகை அடிப்படையில் எட்டாவது பெரிய நகரமாகவும் இது அறியப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பரப்பளவின் அடிப்படையில் இது நான்காவது இடத்தையும் வகிக்கிறது.

ராஜமுந்திரி நகராட்சிக்கு அதிகாரபூர்வமாகவே “ மஹோன்னத கலாச்சார நகரம்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள பழமையான புராதன நகரங்களில் ஒன்றாக கருதப்படும் இந்நகரம் 11ம் நூற்றாண்டின் துவக்கத்தில் சாளுக்கிய அரசனான ஸ்ரீ ராஜராஜ நரேந்திரன் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இது குறித்த மாற்றுக்கருத்துகளும் வரலாற்று அறிஞர்களிடையே நிலவுகின்றன. இருப்பினும் சாளுக்கிய வம்சத்தின் எழுச்சியும் இந்த ராஜமுந்திரி நகரத்தின் நிர்மாணமும் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகளாகவே கருதப்படுகிறது.

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் பிரசிடென்சி மாநிலத்து உட்பட்ட பகுதியாக விளங்கிய இது 1823ம் ஆண்டில் தனி மாவட்ட அந்தஸ்தையும் பெற்றது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இது கோதாவரி மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.

மாநிலத்தலைநகரமான ஹைதராபாதிலிருந்து 400 கி.மீ தொலைவில் கோதாவரி ஆற்றின் கரையில் இந்த ராஜமுந்திரி நகரம் அமைந்திருக்கிறது. தெலுங்கு மொழி இங்கு பிறந்த காரணத்தால் இது ஆந்திர மாநிலத்தின் பிறப்பிடமாகவே கருதப்படுகிறது.

ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 1:40 pm

வரலாற்றுப்பின்னணியும் சமூகப்பங்களிப்பும்

ராஜமுந்திரி நகரத்தின் தோற்றமானது சாளுக்கிய வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஒன்றாக வரலாற்றுச்சான்றுகள் கூறுகின்றன. ஸ்ரீ ராஜராஜ நரேந்திரம் எனும் மன்னரால் நிர்மாணிக்கப்பட்டு அவரது பெயராலேயே ராஜமஹேந்திரி அல்லது ராஜமஹேந்திரவரம் என்ற பெயரால் புராதன காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது.

1893ம் ஆண்டிலேயே இந்த நகரம் ரயில் பாதை இணைப்பையும் பெற்றிருக்கிறது. அக்காலத்திலேயே பல முக்கியமான கல்வி நிறுவனங்களும் இந்த நகரத்தில் துவங்கப்பட்டுள்ளன. சுதந்திரப்போராட்டத்தோடு தொடர்புடைய பலவிதமான இயக்கங்களும் இந்த நகரின் உருவெடுத்துள்ளன.

இந்திய ஆங்கிலப்பத்திரிகைகளில் முன்னோடியான ‘தி ஹிந்து’ பத்திரிகையின் ஸ்தாபகர்களில் ஒருவரான சுப்பா ராவ் இந்த ராஜமுந்திரி நகரத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலத்தின் சமூக சீர்திருத்த தந்தையாக கருதப்படும் கண்டுகுரி வீரேசலிங்கம் பந்துலு என்பவரும் இந்த நகரத்தில் பிறந்தவரே. ராஜமுந்திரி நகரத்தில்தான் அவர் தனது சமூக சீர்திருத்த செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இவரது முயற்சியால் டவுன் ஹால் எனப்படும் நகரசபை 1890ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும், கலைத்துறையிலும் ஏராளமான முன்னோடிகளை ராஜமுந்திரி நகரம் வழங்கியிருக்கிறது.

இவர்களில் டாமர்லா ராமா ராவ் குறிப்பிடத்தக்க கலைஞர் ஆவார். இவர் ஆந்திர பாணி ஓவியக்கலையை மீட்டு வளர்த்ததில் பெரும் பங்களிப்பை அளித்துள்ளார். இந்திய ஓவிய மரபிலேயே முதல் முதலாக நிர்வாண பாணி ஓவியங்களை அறிமுகப்படுத்தியதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பலவித புதிய ஓவிய நுணுக்கங்களை பின்பற்றிய இவரது ஓவியங்கள் சர்வதேச கவனிப்பை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜமுந்திரி சித்ர கலாசாலா எனும் ஓவியக்கல்லூரியை உருவாக்கி அவர் ஓவியக்கலையை தன் மாணவர்களுக்கு கற்பித்துள்ளார்.

ராஜமுந்திரி நகரத்தில் இன்று டாமர்லா ராமா ராவ் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள காலரியில் (ஓவியக்காட்சிக்கூடம்) இவரது பிரசித்தி பெற்ற ஓவியங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த காலரி பயணிகள் அவசியம் ராஜமுந்திரி நகரத்தில் விஜயம் செய்ய வேண்டிய இடமாகும்.

ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 1:40 pm

ராஜமுந்திரி நகரத்தின் விசேஷ அம்சங்கள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளிலும் பெருமளவில் தனது பங்களிப்பை அளித்திருக்கும் ராஜமுந்திரி நகரத்தில் பல அறிவியல் கழகங்களும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்களும் அமைந்துள்ளன.

ஆர்யபட்டா சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி சொசைட்டி (ஆர்யபட்டா அறிவியல் தொழில்நுட்ப கழகம்) அவற்றில் முதன்மையான ஒன்றாகும். இங்கு அறிவியல் கருத்துகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ராஜமுந்திரி நகரத்தில் நிறைய கோயில்களும் நிறைந்துள்ளன. இவற்றில் சில முக்கியமான கோயில்கள் வருடம் முழுதுமே ஏராளமான பக்தர்களை கவர்ந்திழுக்கும் ஆன்மீக யாத்திரை மையங்களாக புகழ் பெற்றுள்ளன.

ஸ்ரீ கோடிலிங்கேஷ்வரா கோயில் மற்றும் ஸ்ரீ பால திரிபுர சுந்தரி கோயில் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. கௌதமி காட் என்றழைக்கப்படும் ISKCON கோயிலும் பிரபலமான ஆன்மீக திருத்தலமாக இங்கு பிரசித்தி பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் ‘கலாச்சார தலைநகரம்’ எனும் பெருமையை பெற்றிருப்பதால் ராஜமுந்திரி நகரம் நாட்டின் எல்லா பகுதிகளுடனும் ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், ராஜமுந்திரி நகரத்திலுள்ள சிறிய உள்நாட்டு விமானநிலையம் சென்னை, மதுரை, விஜயவாடா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு விமான சேவைகளை கொண்டுள்ளது.

இப்பகுதியின் பருவநிலை பெரும்பாலும் வெப்பமான, ஈரப்பதமான சூழலுடன் காணப்படுகிறது. குறிப்பாக கோடைக்காலத்தில் இங்கு தாங்க முடியாத வெப்பம் நிலவுகிறது. இக்காலத்தில் சராசரி வெப்பநிலை 34° C முதல் 48° C வரை காணப்படுவது மட்டுமல்லாமல், உச்சபட்சமான வெப்பநிலையாக 51° C வரையிலும்கூட செல்வதுண்டு. குளுமையான சூழல் நிலவும் குளிர்காலப்பருவமான டிசம்பர்-ஜனவரி மாதங்களில் ராஜமுந்திரிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது சிறந்தது.

ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 1:41 pm

ராஜமுந்திரி ஈர்க்கும் இடங்கள்

சித்ராங்கி பவன், ராஜமுந்திரி

http://upload.wikimedia.org/wikipedia/commons/3/34/ChitrangiPalace_Rajahmundry.jpg

சித்ராங்கி பவன் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை கீர்த்தி பெற்ற சாளுக்கிய மன்னரான ராஜ ராஜ நரேந்திராவின் இரண்டாவது மனைவியான சித்ராங்கி என்பவருக்காக கட்டப்பட்ட அரண்மனையாகும்.

கோதாவரி ஆற்றங்கரையில் அமைதி தவழும் சூழலில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த அரண்மனையைப்பற்றி ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன. புகழ்பெற்ற சலாம் இருப்பிடத்துக்கு அருகிலேயே இந்த அரண்மனை உள்ளது.

வழங்கப்பட்டு வரும் கதைகளின்படி, இந்த சித்ராங்கி ராணி முதலில் ராஜராஜ நரேந்திர மன்னரின் இளவரசரை மணமுடிப்பதாக இருந்து பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக மன்னருக்கே இரண்டாவது மனைவியானார்.

இருப்பினும் இளவரசர் மீது மோகம் கொண்டிருந்த இந்த ராணி அவரை இந்த அரண்மனைக்கு மன்னர் இல்லாத நேரத்தில் வரவழைத்து தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். இளவரசரோ ராணியின் விருப்பத்திற்கிணங்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமுற்ற சித்ராங்கி ராணி இளவரசர் தன்னை கெடுத்துவிட்டார் எனும் பெரும் பழியை அவர் மீது சுமத்தினார். அந்த பழியை நம்பிய அரசரும் இளவரசருக்கு தண்டைனையாக அவரது இரு கரங்களையும் துண்டிக்கச்செய்து விட்டார். இப்படியாக இந்த அரண்மனை குறித்த கதை சொல்லப்படுகிறது.

கதை உண்மையோ பொய்யோ, பழமையான புராதனத்தோற்றத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த அரண்மனைக்கு மறக்காமல் விஜயம் செய்து பார்த்து ரசிப்பது நல்லது.

ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 1:43 pm

கொணசீமா, ராஜமுந்திரி

கர்நாடக மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இந்த கொணசீமா என்ற பகுதி உள்ளது. இந்த இடம் தனது இயற்கை எழில் காரணமாக முக்கியமான சுற்றுலாத்தலமாகவும், பொழுதுபோக்கு தலமாகவும் புகழ் பெற்றிருக்கிறது.

கோதாவரி ஆற்றின் உப்பங்கழிப்பகுதியில், கௌதமி மற்றும் வசிஷ்டா ஆறுகளுக்கிடையே உள்ள தீவுப்பகுதியில் இந்த கொணசீமா அமைந்துள்ளது. மாசுபடாத இயற்கை அழகுடன் ஜொலிக்கும் இப்பகுதி இயற்கை ரசிகர்களை பரவலாக ஈர்க்கிறது.

கோதாவரி ஆற்றில் படகுப்பயணம் மேற்கொள்வது இங்கு தவறவிடக்கூடாத ஒரு பொழுதுபோக்கு அம்சமாகும். மொத்தத்தில், இயற்கை சுற்றுலாவிற்கு ஏற்றதொரு எழிற்பிரதேசமாக இந்த கொணசீமா பிரதேசம் காட்சியளிக்கிறது.

பரபரப்பான ராஜமுந்திரி நகரச்சந்தடிகளிலிருந்து விலகி இந்த இயற்கை பிரதேசத்தில் ஒரு நாளை கழிப்பது பயணிகளின் சுற்றுலா அனுபவத்தை நிறைவூட்டும் என்பதில் சந்தேகமில்லை. ராஜமுந்திரியை விட இதமான பருவநிலை காணப்படுவதால் சுற்றுலாக்களைப்பு தீர ஓய்வெடுக்கவும் இது பயணிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 1:43 pm

கோடிலிங்கேஸ்வரா கோயில், ராஜமுந்திரி

காகிநாடா நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் த்ரக்ஷாராமம் கோயிலுக்கு அருகிலேயே இந்த கோடிலிங்கேஸ்வரா கோயில் வீற்றுள்ளது. இது ராஜமுந்திரி நகரத்திற்கு அருகிலேயே உள்ளது.

பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் ராஜமுந்திரியின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வருடமுழுதும் ஏராளமான பக்தர்கள் புண்ணிய யாத்திரை மேற்கொண்டு இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

பக்தர்களின் பாவங்களை கழுவும் சக்தி இந்த திருத்தலத்துக்கு உள்ளதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. புராணிகக்கதைகளின்படி, கௌதமரிஷியால் சபிக்கப்பட்ட இந்திரக்கடவுள் இந்த கோடிலிங்கேஸ்வரா கோயில் ஸ்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து தன் சாபத்திலிருந்து விடுபட்டதாக சொல்லப்படுகிறது.

ஒரு லட்சம் ஆறுகளிலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்கள் மூலம் இந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வித்து பாபவிமோசனம் பெற்றதாக மேலும் ஐதீகக்கதைகள் கூறப்படுகின்றன.

ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 1:44 pm

மரேடிமல்லி ஈகோ- டூரிஸம், ராஜமுந்திரி
http://www.nativeplanet.com/photos/big/2012/12/_13545973320.jpg

மரேடிமல்லி ஈகோ- டூரிஸம் எனும் இயற்கைப்பூங்கா வளாகம் பலவிதமான இயற்கை அம்சங்களுடன் பயணிகளை வரவேற்கிறது. ராஜமுந்திரிக்கு சுற்றுலா மேற்கொள்ளும்போது இந்த இயற்கைப்பூங்காவுக்கு மறக்காமல் விஜயம் செய்வது சிறந்தது.

மரேடிமல்லி ஈகோ-டூரிஸம் பூங்கா ராஜமுந்திரியிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ளது. இயற்கைச்சுழல் சுற்றுலா மற்றும் நாட்டுப்புறச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டு நோக்கங்களுடன் இந்த பூங்காத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் வளமுரே கிராமம் மற்றும் அதைச்சூழ்ந்துள்ள வனப்பகுதி ஆகியவை உள்ளடங்கியுள்ளது. இவ்விரண்டும் மரேடிமல்லி மண்டலத்தின் கீழ் வருகின்றன. மரேடிமல்லி இயற்கைப்பூங்காவில் மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கான பொருத்தமான சூழல் காணப்படுகிறது.

காட்டுப்பகுதியின் வழியே மலையேற்றத்தில் ஈடுபடுவது இயற்கை ரசிகர்களுக்கும், சாகச விரும்பிகளுக்கும் பரவசத்தை தரக்கூடிய அனுபவமாக இருக்கும். மேலும் இந்த வனப்பகுதியில் ஓடும் வற்றாத ஓடைகள் பிரம்மாண்ட பாறைகளின் வழியே ஓடிவருவது கண்கொள்ளாக்காட்சியாகும்.

காட்டுப்பகுதியின் அமைதியும், பசுமைச்சூழலும், ஓடைகளும் பயணிகளுக்கு மறக்கவியலாத ஒரு அனுபவத்தை தர இங்கு காத்திருக்கின்றன. பல நீர்வீழ்ச்சிகள் மற்றும் விடுமுறைவிடுதிகள் (ரிசார்ட் விடுதிகள்) ஆகியவற்றுக்கும் இந்த இயற்கைப்பூங்கா பிரசித்தி பெற்றுள்ளது.

ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 1:45 pm

பால் சௌக், ராஜமுந்திரி

ராஜமுந்திரி நகரத்தின் வணிகப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான இடம் இந்த பால் சௌக் ஆகும். வந்தேமாதரம் இயக்கம் நிகழ்ந்த காலகட்டத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்த கீர்த்தி பெற்ற சுதந்திரப்போராட்ட வீரரான பிபின் சந்திர பால் அவர்களது நினைவாக இந்த இடத்துக்கு பால் சௌக் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ராஜமுந்திரியின் முக்கிய இயல்பம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த இடம் நகரின் மற்ற விசேஷமான இடங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. மூன்று பூங்காக்கள், பஸ் நிலையம் மற்றும் பெட்ரோல் பங்க் ஆகிய இந்த பால் சௌக் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

பால் சௌக் பகுதியில் ஒரு நடை சென்று வந்தாலே போது ராஜமுந்திரியின் உள்ளூர் குணாம்சங்கள் பற்றிய அனுபவத்தை பெற்றுவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜமுந்திரியின் வரலாற்று அடையாளத்தையும் இப்பகுதியில் தரிசித்துவிடலாம். ராஜமுந்திரி நகருக்கு விஜயம் செய்யும்போது தவறாமல் விஜயம் செய்யவேண்டிய நகர்ப்பகுதி இந்த பால் சௌக் ஆகும்.

nativeplanet.com

ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 24, 2013 3:15 pm

மிகவும் அருமை சிவா...நல்ல பல புதிய செய்திகள். மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக