ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by சக்தி18 Today at 12:32 am

» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» சமீபத்தில் படித்து ரசித்தது
by kandansamy Yesterday at 8:52 pm

» பஞ்சபூதத் தலங்கள்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm

» கந்தாஸ்ரமம் முருகன் கோயில், சேலம்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by T.N.Balasubramanian Yesterday at 4:30 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by aeroboy2000 Yesterday at 1:31 pm

» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by aeroboy2000 Yesterday at 1:28 pm

» இளங்கோவன் vs கருணாநிதி-சினிமாக் காட்சி
by சக்தி18 Yesterday at 12:57 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by சக்தி18 Yesterday at 12:52 pm

» அழகான பெண் யார்?
by சக்தி18 Yesterday at 12:42 pm

» இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 6:52 am

» \தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;
by ayyasamy ram Yesterday at 6:37 am

» 15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» 'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு
by ayyasamy ram Yesterday at 6:31 am

» சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்
by ayyasamy ram Yesterday at 6:27 am

» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 6:21 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 6:18 am

» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:47 pm

» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:43 pm

» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:38 pm

» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:35 pm

» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:33 pm

» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:29 pm

» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:26 pm

» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:15 pm

» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:10 pm

» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:01 pm

» அன்பு
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:24 pm

» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:22 pm

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:20 pm

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:17 pm

» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:13 pm

» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Sun Jan 24, 2021 9:12 pm

» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:09 pm

» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Sun Jan 24, 2021 1:17 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:44 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:37 pm

» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:32 pm

» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:28 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:22 pm

» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:19 pm

» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:19 pm

» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:37 pm

Admins Online

நாடகக் களஞ்சியம்

Go down

நாடகக் களஞ்சியம் Empty நாடகக் களஞ்சியம்

Post by சாமி on Wed Mar 20, 2013 2:22 pm

"கலைக்கரசு' என்று போற்றப்படும் கலை - நாடகக் கலை.

"தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என்று போற்றப்படுபவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

சமரச சன்மார்க்க நாடகச் சபையை நிறுவியவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

மனோன்மணீயம் நாடகத்தின் ஆசிரியர் - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை.

மனோன்மணீயம், இரகசியவழி என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது.

"அனிச்ச அடி' என்னும் நாடகத்தின் ஆசிரியர் - அ.பழனி.

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம் - அனிச்ச அடி.

"மண்ணியல் சிறு தேர்' என்னும் நாடகம், வடமொழி நூலான மிருச்சகடிகம் என்ற நூலைத் தழுவி பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியாரால் எழுதப்பட்டது.

தமிழில் முதன் முதலில் தோன்றிய சமூக நாடகம் - டம்பாசாரி விலாசம்.

"டம்பாசாரி விலாசம்' எனும் நாடகத்தின் ஆசிரியர் - காசி விசுவநாத முதலியார்.

"நந்தனார் சரித்திரம்' என்னும் நாடகத்தின் ஆசிரியர் - கோபால கிருஷ்ண பாரதியார்.

"தமிழ் நாடகத் தந்தை' எனப் போற்றப்படுவர் - பம்மல் சம்பந்த முதலியார்.

சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய நூல்கள் - அபிமன்யு, சுந்தரி, அல்லி அர்ஜூனா, இலங்கா, இலங்கா தகனம், கோவலன், சிறுத்தொண்டர் முதலியன.

சங்கரதாஸ் சுவாமிகளின் பட்டப்பெயர்கள் - பேரறிஞர், நடிப்புக் கலைவன பேராசான், ஞானச்செம்மல், மகாமேதை, கலங்கரை விளக்கம், நாடக உலகின் இமயமலை, நாடக உலகின் ஓர் நல்லிசைப்புலவர்.

"ஞானப்பழத்தைப் பிழிந்து' எனும் பாடலை (திருவிளையாடல் - ஒüவையார்) இயற்றியவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

"சுகுண விலாச சபை'யை நிறுவியவர் - பம்மல் சம்பந்த முதலியார்.

பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய நூல்கள் - நான்கண்ட நாடகக் கலைஞர்கள், நாடகத்தமிழ், நடிப்புக் கலை, நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்போ?, நாடகமேடை நினைவுகள்.

பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய சிறப்பான நாடகங்கள் - சதிசுலோச்சனா, யயாதி, காலவரிஷி, சபாபதி, கலையோ காதலோ?, பொன் விலங்குகள், குறமகன், தாசிப்பெண் ஆகியவை.

பரிதிமாற்கலைஞர் இயற்றிய நாடகங்கள் - ரூபாவதி, கலாவதி, மானவிசயம், சூர்ப்பனகை.

பரிதிமாற்கலைஞர் இயற்றிய நாடக இலக்கண நூல் - நாடகவியல்.

(தொடரும்) நன்றி - தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நாடகக் களஞ்சியம் Empty Re: நாடகக் களஞ்சியம்

Post by சாமி on Wed Mar 20, 2013 2:23 pm

புராணக் கதைகளை மையமாகக் கொண்டு கிராமங்களில் நடத்தப்படும் நாடக வகை - தெருக்கூத்து.

கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவது நாடகம். இதற்குக் கூத்துக்கலை என்ற பெயரும் உண்டு.

பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய நாடகங்கள் - 94.

கட்டியக்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்த நாடகங்கள் - அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரம்.

மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய நாடக நூல் - மந்தவிலாசம்.

சேக்ஸ்பியரின் நாடகங்களைப் பெருமளவில் மொழிபெயர்த்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.

மதுரையில், தமிழ் மூதாட்டி "ஒüவை' நாடகம் அரங்கேறிய ஆண்டு 1942. இதில் ஒüவையாராக வேடமிட்டு நடித்தவர் டி.கே.சண்முகம்.

நாடக வேந்தர், நடிகர் கோ, முத்தமிழ் கலா வித்துவரத்தினம் எனப் போற்றப்படுபவர் - ஒüவை டி.கே.சண்முகம்.

"நாடக அரசி' எனப் போற்றப்படுபவர் - பாலாமணி அம்மையார்.

சகஸ்ரநாமம் நிறுவிய நாடகக் குழுவின் பெயர் - சேவாஸ்டேஜ்.

டி.கே.எஸ். சகோதரர்கள் நிறுவிய சபையின் பெயர் - சண்முகானந்த சபை.

"நாடக மறுமலர்ச்சித் தந்தை' என்று போற்றப்படுபவர் - டி.கே.எஸ். சகோதரர்கள்.

"தண்ணீர் தண்ணீர்' நாடகத்தின் ஆசிரியர் - கோமல் சுவாமிநாதன்.

"பைத்தியக்காரன்' எனும் நாடகத்தை இயற்றியவர் - எஸ்.வி.சகஸ்ரநாமம்.

தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி. இதைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன.

பாரதியாரின் "பாஞ்சாலி சபதத்தை' நாடகமாக இயற்றி, அந்நாடகத்தில் தானே பாரதியாராக வேடமிட்டு நடித்தவர் - எஸ்.வி.சகஸ்ரநாமம்.

"நாடகத் தொல்காப்பியர்' என்று பாராட்டப்படுபவர் - ஒüவை டி.கே.சண்முகம்.

"தமிழ் நாடக மன்றம்' அமைத்தவர் - எம்.ஆர். ராதா.

புராண நாடகங்களைச் சிறப்பாக நடத்தியவர் - ஆர்.எஸ்.மனோகரன்.

நாடகத் திலகம், நாடகக் காவலர் என்று போற்றப்படுபவர் - ஆர்.எஸ்.மனோகரன்.

இரத்தக் கண்ணீர் நாடகத்தின் ஆசிரியர் - திருவாரூர் தங்கராசு.

அண்ணா இயற்றிய நாடகங்கள்: சந்திரோதயம், ஓர் இரவு, வேலைக்காரி, நீதிதேவன் மயக்கம், காதல் ஜோதி, சொர்க்க வாசல், இன்ப ஒளி, நல்லதம்பி, கண்ணாயிரத்தின் உலகம், சிவாஜி கண்ட இந்து இராஜ்யம்.

நாட்டியத்துக்கும் நாடகத்துக்கும் இலக்கணம் வகுத்த நூல்கள் - முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலியவை.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum