புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
107 Posts - 49%
heezulia
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
7 Posts - 3%
prajai
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
2 Posts - 1%
cordiac
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
234 Posts - 52%
heezulia
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
18 Posts - 4%
prajai
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
5 Posts - 1%
Barushree
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10திருத்துங்கள் சட்டத்தை! Poll_m10திருத்துங்கள் சட்டத்தை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்துங்கள் சட்டத்தை!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Mar 02, 2013 7:12 am

சிறார் நிர்ணய வயதை 18-லிருந்து குறைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் இரு நாள்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேவேளையில், புதுதில்லியில், பேருந்தில் பயணம் செய்த 23 வயதான துணை மருத்துவ மாணவி மீது பாலியல் தாக்குதல், வல்லுறவு, கொலை, குழுவாகச் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது, தடயங்களை அழித்தது ஆகிய குற்றங்களுக்காக 17 வயது வளர்இளம் பருவச் "சிறுவன்' மீது சிறார் நீதிமன்றத்தில் குற்றப்பதிவு தாக்கல் செய்யப்பட்டது. இத்தகைய குற்றங்களைச் செய்திருப்பவரை ஒரு சிறுவனாகக் கருத முடியுமா? இவை சிறுவன் செய்யக்கூடிய செயல்கள்தானா? என்கிற நியாயமான கேள்வி எழுகிறது.
அண்மையில் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தில் சிறுவன் என்பதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது18. இதை 16 ஆகக் குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. தில்லி வழக்கில் 17 வயது உள்ளவரை சிறுவனாகக் கருதுவது, அரசியல் சட்டத்தின் பிரிவு 14 வழங்கும் சம உரிமை, பிரிவு 21 வழங்கும் வாழ்வுரிமை மற்றும் தனியுரிமை ஆகியவற்றைப் பாதிப்பதாக இருக்கிறது என்பது இந்த பொதுநல வழக்கைத் தொடுத்தவரின் கருத்து. இந்தவழக்கு தொடர்பாக மத்திய அரசு கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும்கூட அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், மாநிலங்களவையில் எழுத்துமூலமாக அமைச்சர் அளித்த பதிலில், சிறார் வயதைக் குறைக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
துணை மருத்துவ மாணவி தில்லியில் டிசம்பர் 16-ஆம் தேதி அடைந்த துயரகதிக்கு, இந்தச் சிறுவன் மீது எத்தனை பிரிவுகளில் வழக்குகள் போட்டாலும், இதனால் அவருக்குக் கிடைக்கப்போகும் தண்டனை என்னவாக இருக்க முடியும்? இந்தக் கும்பலில், அந்தப் பெண்ணுக்கு மிகஅதிகமான கொடுமைகளை இழைத்தது இந்த 17வயது சிறுவன்தான். ஆனாலும், தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அவசர சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள தண்டனைகள்எதுவுமே இந்த சிறுவனுக்குப் பொருந்தாது. இது நன்றாகத் தெரிந்தும் சிறார் வயதைக் குறைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்றால் எப்படி?
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில், சிறார் நிர்ணய வயதைக் குறைக்க பரிந்துரைக்கப்பட்டது. இருந்தாலும், வர்மா கமிஷன் அறிக்கையில், இவ்வாறு சிறார் வயதைக் குறைப்பதை ஆட்சேபித்துள்ளதைச் சுட்டிக்காட்டி சிறார் நிர்ணய வயதைக் குறைக்கும் திட்டம் இப்போது அரசிடம் இல்லை என்று விவகாரத்தைக் கிடப்பில் போடுவது சரியல்ல.
திருடுதல், வழிப்பறி, கொள்ளை ஆகிய குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டவரைச் சிறார் சட்டத்தில் தண்டிப்பது சரியானதுதான். சில தருணங்களில் கொலையும்கூட சிறார் தண்டனைச் சட்டத்திற்குப் பொருந்தும்.ஆனால், வல்லுறவு மற்றும் பெண்கடத்தல், பெண்ணைத் தூக்கிச்செல்லுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபடும் ஆண்,18 வயது நிரம்பாதவர் என்பதால், அவரை சிறார் என்று சொல்லிவிட முடியுமா?
இன்றைய சமூகச் சூழலும், ஊடகங்களும், தகவல் தொழில்நுட்பத்தால் காணக் கிடைக்கும் தடையற்ற ஆபாசங்களும் இளைஞர்களை சுமார் 15 வயதிலேயே பாலியல்வேட்கை அதிகம் உள்ளவர்களாக மாற்றிவிடுகின்றன. இதன் விளைவாக காதல் சார்ந்த தகராறுகள் அதிகரித்துள்ளன. வல்லுறவு, பெண்கடத்தல், பெண்ணைத்தூக்கிச் செல்லுதல் ஆகிய குற்றங்களில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அளித்த, தேசிய குற்ற வழக்குகள் பதிவகத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2009,2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் தில்லி பெருநகரில் மட்டும், கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட சிறார் எண்ணிக்கை முறையே 57, 35, 37. அதாவது குறைகிறது. ஆனால் அதே தில்லியில், வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்ட சிறார் எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில் முறையே 26, 37, 47. ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. பெண்கடத்துதல், தூக்கிச்செல்லுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட சிறார் முறையே 8, 11, 30. ஆண்டுதோறும் கூடுகிறது.
இந்தப் புள்ளிவிவரம் தில்லி மாநகருக்கு மட்டுமானது என்றாலும், ஏறக்குறைய இதே நிலைமைதான் இந்தியா முழுவதிலும் என்று உணரலாம்.
தற்போது தில்லி மாணவி வழக்கில், 17 வயது என்கின்ற ஒரே காரணத்துக்காக கடுமையான தண்டனையிலிருந்துஅந்தக் குற்றவாளி தப்பிவிடுவார் என்றால், இதுஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். வல்லுறவுக் குற்றத்தில் ஈடுபடுபவரை நிச்சயமாக சிறுவனாகக் கருத முடியாது. ஆகவே, குற்றத்தின் அடிப்படையில் அவரை "வளர்ந்த மனிதன்' என்றேபார்க்க வேண்டும்.
சிறார் நிர்ணய வயதை 16 ஆகக்குறைக்கும்போது, அது சிறுமிகளுக்கும் பொருந்தும் என்பதாலும், அத்தகைய நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மகளிர் அநீதிக்கு ஆளாக நேரிடலாம், வேறு சட்ட சிக்கல்கள் எழக்கூடும் என்கின்ற அச்சம் அரசுக்கு இருந்தால் அது நியாயமானதுதான்.
இருப்பினும், "16 வயது முதல் 18 வயது வரையிலான ஒரு ஆண், வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டால், குற்றத்தின் தன்மையைக்கொண்டு அவரைச் சிறுவனாகக் கருத வேண்டியதில்லை' என்று சட்டத்திருத்தம் செய்து, குற்றத்தின் அடிப்படையில் அவரைத் தனிமைப்படுத்துவது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும்.
பெரிய வீட்டுப் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் சட்டத்திருத்தம் கொண்டுவர அரசு தயங்குகிறதோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. இந்திய நாடாளுமன்றம் ஆணாதிக்கவாதிகளின் கூடாரமாகிவிடக் கூடாது. பெண்களைத் தெய்வமாக மதிக்கும் இந்தியாவில் சட்டங்கள் பெண்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களுக்கு சாதகமாகவும் இருத்தலும் கூடாது!
-
தினமணி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 02, 2013 11:00 am

நேற்று கூட தில்லியில் மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக செய்தியில் பார்த்தேன் சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக