புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
29 Posts - 62%
heezulia
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
194 Posts - 73%
heezulia
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
8 Posts - 3%
prajai
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பால்ய காலங்களில்... Poll_c10பால்ய காலங்களில்... Poll_m10பால்ய காலங்களில்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால்ய காலங்களில்...


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Feb 25, 2013 12:50 pm



உங்களுக்கு பெர்மியை தெரியுமா? தெரியாதவர்களுக்காக சொல்கிறேன். எங்கள் வடக்குத்தெருவிலிருந்து சரியாக ரெண்டு ரைட், ஒரு லெப்ட் நடந்தால் அவளிருக்கும் நடுத்தெரு உள்ளது. நானும் அவளும் எட்டாவது படிக்கும் போது ஒரு ட்யூசனில் அறிமுகம் ஆகிக் கொண்டவர்கள். ஆண்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த அந்த ட்யூசனில் முதன்முதலாக ஒரு பெண். பவுடர் நிறம், பவள உதடுகள், எடுப்பான பல் வரிசையென பல பாசிடிவ் "ப' வைத்து எழுத வேண்டிய வெண்பா அவள். நாங்கள் ஒரு டஜன் ஆண்கள். அவள் ஒற்றைப் பெண். இரவு ஏழரைக்கு ட்யூசன் முடிந்ததும் அழைத்துச் செல்ல அவளுடைய தம்பி சேவியர் சைக்கிளோடு வந்து காத்துக்கிடப்பான். இன்னும் கொஞ்ச நேரம் அவள் இங்கேயே இருந்துவிடக் கூடாதா? என ஒரு மனக்குரங்கின் குரல். அவளில்லாத இடத்தில் நமக்கென்ன வேலை என நாங்களும் ஒட்டுமொத்தமாக கிளம்பி அவளை வீடு வரை சென்று விட்டு வரும் பரக்காவெட்டித்தனம் என அந்த நாட்களை நினைத்தால் சிரிப்பதைத் தவிர என்ன செய்து விட முடியும்?



வாத்தியார் ஜெயராஜ் ரொம்பவே கண்டிப்பானவர். பள்ளிக்கூடத்திலும் எனக்கு அவர் தான் வகுப்பு ஆசிரியர். அவரிடமே ட்யூசனும். அவர் இல்லாவிட்டால் நான் பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் சென்டம் எடுத்திருக்க வாய்ப்பில்லை.

ஜூலை மாதத்து புதன் கிழமை நாளொன்றில் பெர்மி வந்தாள். அவள் வந்ததுமே அலிபாபாவும் 11 திருடர்களுமாக இருந்த நாங்கள் அத்தனை பேரும் ஒரே நாளில் அரிச்சந்திரர்களாக மாறிப் போன திருட்டுத் தேன்மிட்டாய் குணத்தை அவர் கண்டுபிடிக்காதிருந்தால் தான் அபூர்வம். பெர்மி வந்ததில் இருந்து ரூல்ஸ் ராமானுஜம் ஆனார் வாத்தியார். புதிதாக திருமணம் செய்து கொண்ட அவருடைய மனைவி கூட அவர் மீது ஓர் எச்சரிக்கைப் பார்வை கொண்டிருந்ததை மறுப்பதற்கில்லை. பசங்க எல்லாம் பின்னாடி தான் உட்காரணும். பெர்மி மட்டும் முதல் வரிசை. பெர்மி மட்டும் வாத்தியாரின் வீட்டு சமையலறை வரை சென்று தண்ணீர் குடிக்கலாம். எங்களுக்கு வெளியே மண்பானையில் தண்ணீர். இது என்ன இரட்டை குவளை அவலம் என்று போராட நினைத்தோம். சமையலறையில் இருந்து பெர்மி எங்களை பார்த்து சிரிக்க அந்த தொலைதூரம் உதவியது. போராட்டம் கேன்சல் செய்யப்பட்டது. ட்யூசன் இனி பெர்மிக்கு மட்டும் ஏழரைக்கு முடியும். எங்களுக்கெல்லாம் எட்டு மணிக்கு தான் முடியும் என்று அடுத்த ஏழரையைக் கிளப்பினார் வாத்தியார். ""ஏன் சார் அப்புடி?'' என்று எதிர்த்துக் கேள்வி கேட்ட பிரிட்டோவிடம் பித்தாகோரஸ் தியரம் கேட்டு பிரம்படி கொடுத்தார் வாத்தியார். இன்னொரு போராட்டமும் அடக்குமுறையால் ஒடுக்கப்பட்டது.

அவள் ஓரக்கண்ணால் பார்ப்பதுவும், நாங்கள் நமுட்டு சிரிப்பு சிரிப்பதுவுமாக எங்கள் நாட்கள் வலைக்குள் விழுந்த மீனாக கழிந்தது. அவளுக்கு பச்சை நிறம் தான் பிடிக்கும். வாரத்தின் 7 நாட்களுக்கும் இலைப் பச்சை, கிளிப் பச்சை, மரகதப் பச்சை, மயில்துத்தம் கலந்த பச்சை, புல் நுனிப் பச்சை, டிஸ்டம்பர் பச்சை, பெட்ரோலோடு வண்டிக்குப் போடும் ஆயில் நிறப் பச்சை என அவள் அணிகின்ற சுடிதார் அனைத்தும் பச்சையும் பச்சை சார்ந்ததுமாகவே இருந்தன. அதனால் அவள் என்னைக் கடக்கின்ற போதெல்லாம் "பச்சை நிறமே.. பச்சை நிறமே..' என நான் பாடுவது ராணுவ அணிவகுப்புக்கு தேசியகீதம் பாடுவது போல தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆங்கிலத்தில் கிராமரை ட்யூசனில் நடத்தும் போது, எல்லாக் கேள்விகளுக்கும் அவள் மட்டும் பதில் சொல்லுவாள். ""அதெல்லாம் ஷேக்ஸ்பியர் பேத்திடா மாப்ள..'' என நண்பன் பீட்டர் பிடில் வாசிப்பான்.

""ஏன் நாமளும் பேசமுடியாதா இங்கிலீஸ்ல?''

""எங்கே.. நாலு இடியம்ஸ் சொல்லு டக்குனு''

""சரி.. இதுக்கு என்ன தான் வழி?'' என நான் அப்ரூவர் ஆனதும் பீட்டர், ""நமக்கு எது நல்லா வருமோ அதைப் பண்ணி அசத்தணும்டா அது தான் ரூட்டு.. புரியுதா?''

""அப்ப நான் பாட்டுப் பாடி காட்டட்டுமா?''

""ஏன்டா.. அவ பிஞ்ச செருப்போட வீட்டுக்குப் போகணும்னு உனக்கு ஆசையா?''

""எனக்கு தெரிஞ்சு நீ தான் கணக்கை காப்பியில கரைச்சுக் குடிக்கறவன். அதனால..கணக்குல எதாவது பிலிம் காட்டேன். ஆனால் எல்லாத்துக்கும் முன்னாடி நம்ம வாத்தியாரை நீ சாமாளிக்கணும். அந்தக் கொடுமைக்கு நீ அவளை தங்கச்சியாவே ஏத்துக்கலாம்''

எதையாவது செய்து அவளுடைய கவனத்தைக் கவர வேண்டும் என்கிற பேராவலால் உடனடியாகப் பணக்காரராவது எப்படி? கண்மூடி திறப்பதற்குள் கலெக்டர் ஆவது எப்படி? என்றெல்லாம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். வாத்தியார் நடத்தப் போகும் பாடத்தை அவர் நடத்தும் முன்பே மனப்பாடம் செய்து விடுவதென்று முடிவு செய்து, கணக்கில் எல்லா விடைகளையும் கடைசிப் பக்கம் பார்த்து மனப்பாடம் செய்தாயிற்று. அறிவியலையும் விடிய விடிய உருப் போட்டாயிற்று.

அடுத்தடுத்து வைத்த ட்யூசன் டெஸ்ட்களிலும் கணக்கில் முதல் மார்க்குக்கு துண்டு போட, ஒரு நன்னாளில் சார் இல்லாத முன் மாலைப் பொழுதில் (5:30பி.எம்) அல்ஜீப்ராவில் சந்தேகம் கேட்டாள். "இதற்கு தானே இத்தனை நாளாக காத்திருந்தாய் பாலகுமாரா' என மனசு கெக்கலிக்க, அவள் நோட்டை வாங்கி பிள்ளையார் சுழி போட்டு என் கணிதத் திறமையை 29 ஆம் வாய்பாடெல்லாம் சொல்லி அவளை அதிசயிக்க வைத்து, மற்றவர்களின் பொறாமைக்கு நெய் வார்த்தேன்.

பத்தாம் வகுப்பு வந்ததும் அவள் தம்பி பாடிகாட் வேலை பார்க்க விரும்பவில்லை என்று ஒதுங்கிக் கொண்டான். அதே நேரத்தில் ஆஷா, ப்ரியா, சாந்தி, கவிதா என இன்னும் சில பெண்களும் ட்யூசனில் சேர, பொறாமையில் கிடந்த நண்பர்கள் எல்லாம் ஆளுக்கொரு ஐஸ்கிரீம் என்ற ரேஞ்சில் சுற்றித் திரிந்தார்கள். ஆனாலும் வாத்தியார் திருந்தவில்லை. ஏழரைக்கு வகுப்பு விட்டதும், எட்டு மணி வரைக்கும் விஜயா கஃபேயில் காப்பி குடித்து, கதை பேசி விட்டு பெர்மியும் அவளுடைய கேங்கும் காத்திருக்கும் எங்களுக்காக ஒரு ஓரப்பார்வை. அவ்வளவு தான். அப்புறம் அவள் லேடீபேர்ட் சைக்கிளில் பறப்பாள். நான் ஒவ்வொரு குறுக்கு சந்தாக ஓடி, தெரு நாய்களையெல்லாம் மிதித்து, அவை என்னைத் துரத்த நான் அவளைத் துரத்த.. இப்படியே ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு நாள்.

அன்று புதன்கிழமை.

""நாளைக்கு எங்களோட காஃபி குடிக்க நீயும் ஏழரைக்கே வர்றீயா?'' என்று பெர்மி தண்ணீர் குடிக்க வெளியே வந்த என்னிடம் கேட்டாள். "ம்' என்று தலையசைத்து விட்டு வீட்டுக்குப் போயாச்சு.

அடுத்த நாள் பூஜைக் கூடை சகிதமாக ட்யூசன் வந்தேன்.

""சார். இன்னைக்கு வியாழக்கிழமை. தட்சிணாமூர்த்திக்கு விளக்குப் போட்டா சென்டம் வாங்கிடலாம்னு எங்க பாட்டி சொன்னாங்க. அதனால ஒரு ஏழே காலுக்கே இன்னைக்கு மட்டும் என்னை விட்டுடுங்க சார்..'' என்றேன். படிப்புக்காகத் தானே என்று வாத்தியார் விட்டு விட்டார்.

ஏழே கால் ஆனதுமே பையைத் தூக்கிக் கொண்டு எழுந்தேன். கையாலே போ என்று வாத்தியார் சொன்னதும். விறுவிறுப்பாக விஜயா கஃபே சென்று விட்டேன். சரியாக கால் மணி நேரத்தில் பெர்மி மற்றும் பிறர் எல்லாம் வந்திருக்க, சிறியதாக ஒரு கேக்கை சாந்தி எடுத்து வந்து வெட்டச் சொன்னாள். பெர்மிக்கு ஞாயிற்றுக் கிழமை பிறந்த நாளாம். பிறந்த நாளை பெங்களூரில் உள்ள அவளுடைய அப்பா, அம்மாவோடு கொண்டாடப் போவதால் இன்றைக்கே கேக் வெட்டினாள். முன்னமே தெரிந்திருந்தாள் எதாவது கிஃப்ட் தந்திருக்கலாம். சரி வாழ்த்தினால் போதும் என்ற நிலையில் இருக்க, கேக்கை வெட்டியதும் முதலில் எனக்கு ஊட்டினாள். ஹோட்டல்லின் கண்ணாடிக்கு வெளியே இருந்து ட்யூசன் வாத்தியாரின் மனைவி சரியாக அதைப் பார்த்தார். சொல்லவும் வேண்டுமா என்ன? பிறகு நடந்ததை..

பெர்மியை பிரிந்திருந்த மூன்று நாட்களும் நரகமாக இருந்தது. அவளில்லாத உலகம் என்ன உலகம்? என்று தோன்றியது. ஆச்சரியம் அவளுக்கும் இதே போல தோன்றியது தான். மூன்று நாட்கள் கழித்து வந்ததும் அவள் கையைப் பிடித்து சிலிர்த்த நொடிகளில் வாத்தியாரிடம் சரியாகச் சிக்கினோம். அவள் வெட்கப்பட்டு கைகளை உதறினாள்.

""இந்த வயதில் வருவது காதலே அல்ல. இன்பாக்சுவேஷன். ஜஸ்ட் எதிர் பாலின ஈர்ப்பு'' என்றெல்லாம் வாத்தியார் அன்று முழுக்க எனக்கு மட்டும் பாடம் நடத்தி என் மனதை கலைக்க ரொம்பவே பாடுபட்டார். என் அம்மாவையும் கூப்பிட்டு எச்சரித்துப் பார்த்தார். ம்ஹூம். திருந்துவதாக இல்லை நாங்கள். ட்யூசனுக்கு லீவு போட்டு ஊர் சுற்ற ஆரம்பித்தோம். பள்ளிக்கூடத்துக்கு கூட ஒரு நாள் விடுப்பு. செலவுக்கு அப்பாவிடம் அம்மா சுட்டு வைத்த அஞ்சரைப் பெட்டி காசுகள் என வாழ்க்கை ஜெகஜோதியாக போய்க் கொண்டு இருக்கையிலே படிப்பு கிழிந்த பட்டம் போல கீழே விழுந்து கொண்டிருந்தது. அடுத்த நாள் என்னுடைய அப்பா என்னை ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டுடன் ட்யூசனுக்குக் கூட்டிக் கொண்டு போனார். கலித்தொகை, குறுந்தொகை, அகநானூறு எனப் படித்ததால் தமிழில் மட்டும் பாஸ் செய்திருந்தேன். எல்லா மாணவர்களும் (பெர்மி உட்பட)இருந்த இடத்தில் ரெண்டு நல்ல வார்த்தைகளால் வாத்தியாரையும், மூன்று கெட்ட வார்த்தைகளால் என்னையும் திட்டிவிட்டு, என் கன்னத்தில் "பளார் பளார்' என்று விளாசினார் அப்பா. வாத்தியாருக்கே அந்த அடியின் கனம் வழுவானதாக தெரிய இரண்டடிகள் பின் நகர்ந்தார். நான் தேம்பி தேம்பி அழ, அவள் ஒரு ஓரமாக அவள் பனிக் கண்களை கரைய விட, அந்த மாத முடிவிற்குப் பிறகு பெண்களுக்கு ட்யூசன் எடுப்பதில்லை என வாத்தியாரும் போர்டு வைத்து வயிற்றெரிச்சலைக் கிளப்பினார்.

சனி, ஞாயிறுகளில் அவளுடைய தெருவில் இருட்டும் வரை கிரிக்கெட் விளையாடி அவள் பார்வையில் புண்ணியம் தேடினேன். அம்மா தேடி வந்து தரதரவென்று இழுத்துப் போனாள். அப்புறம் அவளை வீட்டுக்கு வெளியே விடுவதில்லை என அவள் தாத்தா முடிவெடுத்து, ஸ்கூல் பஸ்-ஸ்கூல்-ஸ்கூல் பஸ்-வீடு என அவள் வாழ்க்கையை மாற்றினார்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு நாள் வாத்தியார் என்னை ப்ரேயருக்கு கூப்பிட்டிருந்தார். அந்த ப்ரேயர் எனக்காக மட்டுமே நடந்தது. என்னுடைய பெயர் சொல்லி அவர் வீட்டில் இருபதுக்கும் மேற்பட்டோர் ஜெபித்தார்கள்.

கடைசியில் வாத்தியார் என்னை அருகில் கூப்பிட்டு,"" என்னோட கண்டிப்பு உங்களுக்கு கசப்பா இருக்கலாம். ஆனால் அதோட அருமை என்னோட வயசுக்கு நீ வந்ததுக்கு அப்புறம் தான்டா தெரியும். இது படிக்க வேண்டிய வயசு. நீ அவளை விரும்பறது உண்மையாக் கூட இருக்கட்டும். இன்னும் ஒரு ஆறு வருஷம் பர்ஸ்ட் கிளாசா ரெண்டு பேரும் எதைப் பத்தியும் சிந்திக்காம படிங்க. அப்புறம் நல்ல ஒரு பொசிஷனுக்கு நீ வந்திட்டா நீ விரும்பறதை யாரு தடுக்க முடியும்''

அவர் பாசிடிவ்வா பேசினதுல ஏதோ ஒண்ணு பிடிச்சிருந்தது. எதையும் இழக்கலைன்னு தோணுச்சு. கடைசியா இதை பெர்மி கிட்டயும் சொல்லிட்டு பிரிந்தேன்.

எந்த ஒரு விஷயத்தையும் நாலு நாள் கஷ்டப்பட்டா பழக்கவழக்கமா மாத்திடலாம். முதல்ல அழுகை, அப்புறம் ஆத்திரம், அப்புறம் நினைத்து நினைத்து தலையணையை ராத்திரியின் இருட்டில் யாருக்கும் தெரியாம கண்ணீராக்கி...

பத்தாவதுல ரெண்டு சப்ஜெக்ட்ல சென்ட்டம் பன்னிரெண்டாவதுல மூணு சப்ஜெக்ட்ல. அப்புறம் எஞ்சீனியரிங் நாலு வருஷம். இப்போ கலிப்போஃர்னியாவுல சாப்ட்வேர் என்ஜீனியர். இந்த ஆறு வருஷம் ஒரு வரியில ஓடிப் போனது மாதிரி தான் இருந்துச்சு, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பெர்மியை பேஸ்புக்குல பார்க்கற வரைக்கும்.

அரக்குப் பச்சை நிற பட்டுப்புடவையோடு அவளும், அவளுக்கு அருகில் ஒரு கோட்சூட் முதிர் இளைஞனும் மணமாலையோடு சிரித்து நிற்கிறார்கள்..

அவளுக்கு ப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்கலாமா.. வேண்டாமா?

கொஞ்சம் பொறுங்கள். என் மனைவியிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன்..

""சல்மா..''............

தினமணிகதிர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 1:02 pm

நல்ல கதை கடைசியில் சொதப்பிருச்சே...

எனக்கு தெரிஞ்சு நீ தான் கணக்கை காப்பியில கரைச்சுக் குடிக்கறவன். அதனால..கணக்குல எதாவது பிலிம் காட்டேன். ஆனால் எல்லாத்துக்கும் முன்னாடி நம்ம வாத்தியாரை நீ சாமாளிக்கணும். அந்தக் கொடுமைக்கு நீ அவளை தங்கச்சியாவே ஏத்துக்கலாம்''

சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dhurai
Dhurai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 13/02/2013

PostDhurai Mon Feb 25, 2013 3:45 pm

அட போங்க சார்




Vaalkai Oru Poraddam..
Athil Naam Poradi tan Aakanum...!!!

Yendrum Anbudan Ungal Thampi...

Dhurai R
Dhurai
Dhurai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 13/02/2013

PostDhurai Mon Feb 25, 2013 3:46 pm

எவ்ளோ ஆர்வத்தோடு படிச்சேன்.. போச்சே போச்சே... பட் கிரேட் சார்... சான்ஸ் இல்ல..



Vaalkai Oru Poraddam..
Athil Naam Poradi tan Aakanum...!!!

Yendrum Anbudan Ungal Thampi...

Dhurai R
Dhurai
Dhurai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 13/02/2013

PostDhurai Mon Feb 25, 2013 3:47 pm

எனக்கே இவ்ளோ வருத்தம் இருக்கு.. உங்களுக்கு????



Vaalkai Oru Poraddam..
Athil Naam Poradi tan Aakanum...!!!

Yendrum Anbudan Ungal Thampi...

Dhurai R
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக