புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
107 Posts - 49%
heezulia
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
7 Posts - 3%
prajai
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
234 Posts - 52%
heezulia
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
18 Posts - 4%
prajai
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Barushree
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு தகவல்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 21, 2013 9:07 pm

First topic message reminder :

நாளும் ஒரு தகவல் - Page 5 542410_139383786221154_1303990847_n

காரூன்

மூஸா
அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும்
செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது.

நிச்சயமாக,
காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது
அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக்
கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு
கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்:
“நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு)
ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.

“மேலும்,
அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்;
எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து
விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை
செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ்
குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).

(அதற்கு
அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான்
கொடுக்கப்பட்டிருக்கிறேன்!”. இவனுக்கு முன் இவனை விட மிக்க
வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து
வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ்
அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள்
செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட
மாட்டார்கள்.

அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன்
தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர்
விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு கொடுக்கப்பட்டதைப் போன்று
நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று
கூறினார்கள்.

கல்வி ஞானம் பெற்றவர்களே “உங்களுக்கென்ன கேடு! ஈமான்
கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட
மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய
மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

ஆகவே, நாம் காரூனையும் அவன்
வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி
செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக்
கொள்ளவும் முடியவில்லை.

முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை
விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான்
நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்;
அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்)
அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய
மாட்டார்கள்” என்று கூறினார்கள். அல்குர்ஆன் 28:76-82

கெய்ரோவிலிருந்து 150 கிலோமீட்டர் தென்மேற்க்கில் கஸர காரூன் என்ற இடத்தில் தான் அவனுடைய ஆலயம் உள்ளது.

காரூனின் ஆலயம்


காரூனின் கிணறு


காரூனின் ஏரி என இப்பொழுதும் அழைக்கபடுகின்ற ஏரி.


காரூனும் அவனுடைய சுற்றத்தார்களும் புதைந்துபோன இடம்.

நன்றி முகநூல்.




நாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Uநாளும் ஒரு தகவல் - Page 5 Tநாளும் ஒரு தகவல் - Page 5 Hநாளும் ஒரு தகவல் - Page 5 Uநாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Oநாளும் ஒரு தகவல் - Page 5 Hநாளும் ஒரு தகவல் - Page 5 Aநாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Eநாளும் ஒரு தகவல் - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 28, 2013 12:08 pm

நல்ல பகிர்வு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 11:47 pm

மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?

பதில்:
01. மறுமை ( இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கை கண்மூடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

அறிவியல் அறிவும் – தர்க்கரீதியான உணர்வும் கொண்ட இந்த காலத்தில் இறப்புக்கு பின்பும் ஒரு வாழ்வு உண்டு என்பதை நம்புவது எப்படி?. என ஏராளமான பேர் வியப்படைகிறார்கள். மனிதன் இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்புவது கண்மூடித்தனமானது என்று ஏராளமானபேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னுடைய மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியை அடிப்படையாகக் கொண்டது.

02. மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியான நம்பிக்கையாகும்.


அருள்மறை குர்ஆனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் உண்மைகளைப் பற்றி சொல்லுகின்றன. (இது பற்றிய முழு விபரம் அறிய டாக்டர். ஜாகிர் நாயக் எழுதிய ‘ஞரசயn யனெ ஆழனநசn ளுஉநைnஉந ஊழஅpயவiடிடந ழுச ஐnஉழஅpயவடைடிடந’ என்ற புத்தகத்தை படியுங்கள். மேற்படி புத்தகம் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது). குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகளில் பல சரியானதுதான் என்று கடந்த சில நூற்றாண்டுகளில்தான் கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகள் அனைத்தும் சரியானதுதான் என்று கண்டறியப்படும் அளவிற்கு, அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை.

உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகளில் 80 சதவீதம் உண்மைகள் 100 சதவீதம் சரியானதுதான் என்று கண்டறியப் பட்டுள்ளதாக வைத்துக்கொண்டால், எஞ்சியிருப்பது 20 சதவீத உண்மைகள்தான். அறிவியலில் ஒரு குறிப்பிட்ட உண்மையை பற்றிய விபரம் உடனடியாக கண்டறியப் படுவதில்லை. ஏனெனில் ஒரு உண்மையை உடனடியாக அது உண்மை என்று ஒப்புக் கொள்ளம் அளவிற்கோ அல்லது உடனடியாக அது பொய் என்று ஒதுக்கித் தள்ளும் அளவிற்கோ அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை.

இவ்வாறு மனித குலம் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவைக் கொண்டு – அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் இதுவரை அறிவியல் ரீதியாக சரி காணப்படாத 20 சதவீத வசனங்களில் – ஒரு சதவீத வசனம் கூட சரியானது அல்ல என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது. அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் என்பது சதவீதம் உண்மைகள் – 100 சதவீதம் சரியானதுதான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் – எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் சரியானது அல்ல என்று அறிவியல் ரீதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே தர்க்க ரீதி விதியின்படி குர்ஆன் சொன்ன அறிவியல் உண்மைகளில் எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் – சரியானதாகவே இருக்க வேண்டும். மறுமை வாழ்க்கைப் பற்றி அருள்மறை சொல்லும் வசனங்கள் யாவும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத 20 சதவீத உண்மைகளுக்குள் அடங்கியுள்ளது. எனவே தர்க்க ரீதியாக மறுமை வாழ்க்கை பற்றிய எங்களது நம்பிக்கை சரியானதுதான்.

03. மறுமை வாழ்க்கை பற்றிய நம்பிக்கை இல்லாமல், மனித நலம் மற்றும் மனித அமைதி போன்ற கருத்துக்களை கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று.

சமுதாயத்தில் திருடுவது நல்லதா? கெட்டதா? என்று கேட்டால் சாதாரண நிலையில் உள்ள ஒரு மனிதன் சமுதாயத்தில் திருடவது கெட்டது என்றே பதிலளிப்பான். சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க, பலம் மிகுந்த ஒரு சமுதாய திருடனுக்கு, திருடுவது தவறானது என்று ஒரு சாதாரண நிலையில் உள்ள மனிதன் எவ்வாறு உணர்த்த முடியும்?.

உதாரணத்திற்கு நான் சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்த – பலசாலியான ஒரு திருடன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் நான் மிகுந்த அறிவுடைய ஒரு தர்க்கவாதியும் கூட. திருடுவது சரியானதுதான் என்று நான் சொல்கிறேன். ஏனெனில் திருடுவதால் சமுதாயத்தில் ஒரு சிறந்த ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கலாம். எனவே திருடுவது என்னைப் பொருத்தவரை, எனக்கு நல்லது என்று நான் சொல்கிறேன்.

திருடுவது சரியானது அல்ல என்று யாராவது என்னிடம் தர்க்க ரீதியாக வாதிட முயலுவார்கள் எனில் அவர்களின் வாதத்தை என்னால் உடனடியாக முறியடிக்க முடியும். திருடுவது சரியானது அல்ல என்று என்னிடம் வாதிட முற்பட்டவர்கள் வைத்த வாதங்கள் பின்வருமாறு.

அ.) திருடுபவன் கஷ்டங்களை அனுபவிப்பான்.:
யார் திருடுகிறானோ, அவன் கஷ்டங்களை அனுபவிப்பான் என்று சிலர் வாதிடுவார்கள். திருட்டுக் கொடுத்தவர் வேண்டுமெனில் கஷ்டங்களை அனுபவிப்பார்களேத் தவிர, திருடியவர் கண்டிப்பாக கஷ்டங்களை அனுபவிப்பதில்லை. திருடியவன் நல்லதையே அனுபவிப்பான். ஆயிரம் டாலர்களை திருடிய ஒருவன், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆடம்பர உணவு உண்ணலாம்.

ஆ.) நீ திருடினால், உன்னிடம் வேறு எவராவது திருடுவார்கள்.

நீ யாரிடமாவது திருடினால், உன்னிடமிருந்து வேறு எவராவது திருடுவார்கள் என்று சிலர் வாதிடுவார்கள். என்னிடமிருந்து எவரும் திருட முடியாத அளவுக்கு நான் ஒரு பலம் படைத்த திருடன். தவிர என்னைப் பாதுகாக்கவென்று பல அடியாட்களை நான் வைத்திருக்கிறேன். நான் வேறு எவரிடமிருந்தும் திருட முடியுமேத் தவிர, என்னிடமிருந்து எவரும் திருட முடியாத அளவுக்கு நான் ஒரு பலம் பொருந்திய திருடன். திருடுவது ஒரு சாதாரண மனிதனுக்கு வேண்டுமெனில் கஷ்டமான வேலையாக இருக்கலாம். ஆனால் என் போன்ற படைபலம், பணபலம் உள்ள ஒருவனுக்கு திருடுவது எளிதானது.

இ.) திருடினால் காவல் துறை கைது செய்யும்.

திருடினால் காவல் துறை கைது செய்யும் என்று சிலர் வாதிடலாம். நான் திருடினாலும் காவல் துறை என்னை கைது செய்ய முடியாத அளவுக்கு நான் காவல் துறையினரை விலைக்கு வாங்கியிருக்கிறேன். மந்திரிகளை கூட நான் விலைக்கு வாங்கக் கூடிய அளவிற்கு எனக்கு பணபலம் உண்டு. ஒரு சாதாரண மனிதன் திருடினால் அவனை காவல் துறை கைது செய்யும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நானோ காவல் துறை கூட கைது செய்ய முடியாத அளவிற்கு படைபலமும், பணபலமும் உள்ளவன். எனவே நான் திருடினால் என்னை காவல் துறை கைது செய்யாத அளவிற்கு நான் ஒரு பலம் பொருந்திய குற்றவாளி.

ஈ.) திருடுவதன் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.
திருடுவதன் மூலம் எளிதாக பணம் கிடைக்கிறது. பணம் கிடைக்க அதிகமாக கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் வாதிடலாம். திருடுவதால் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். பணம் எளிதாக கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்தால்தான் நான் திருடுகிறேன். ஓரு மனிதன் எளிதான முறையிலும் பணம் சம்பாதிக்கலாம். கடினமான முறையிலும் பணம் சம்பாதிக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புத்திசாலியான மனிதன் எளிதான முறையில் பணம் சம்பாதிக்கும் வழியைத்தான் தேர்ந்தெடுப்பான்.

உ.) திருடுவது மனிதத் தன்மைக்கு எதிரானது.
திருடுவது மனித குலத்திற்கு எதிரானது. ஓரு மனிதன் மற்ற மனிதர்களின் நலத்தைப் பற்றியும் சிந்தித்து செயல்பட வேண்டும் என சிலர் வாதிடலாம். இவ்வாறு வாதிடுபவர்களைப் பார்த்து நான் சில கேள்விகளை கேட்கிறேன். ‘மனிதத் தன்மை’ என்கிற சட்டத்தை எழுதி வைத்தது யார்?. நான் எதற்காக அந்த சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்?.

மனிதத் தன்மை என்கிற சட்டம் – உணர்வு பூர்வமான மனிதர்களுக்கு வேண்டுமெனில் சரியானதாகத் தெரியலாம். ஆனால் நான் ஒரு தர்க்க ரீதியான, சுயநலம் கொண்ட மனிதன். பிறருடைய நலம் பேணுவதால் எனக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே மனிதத் தன்மை என்பது எல்லாம் எனக்கு ஒரு பொருட்டேயல்ல.

ஊ.) திருடுவது சுயநலம்.
திருடுவது சுயநலம் என்று சிலர் வாதிடலாம். திருடுவது சயநலம் என்பது நூறு சதவீதம் உண்மையானதுதான். திருடுவதால் நான் எனது வாழ்க்கையை கஷ்டமின்றி சுகமாக அனுபவிக்கலாம் என்கிற சூழ்நிலையில், நான் ஏன் ஒரு சுயநலவாதியாக இருக்கக் கூடாது?. திருடுவது தவறு என்கிற தர்க்கரீதியான வாதம் ஒன்றைக் கூட எவராலும் எடுத்து வைக்க முடியாது.

இவ்வாறு திருடுவது தவறு என்கிற தர்க்கரீதியான வாதம் ஒன்றைக் கூட எவராலும் எடுத்து வைக்க முடியாது. மேற்காணும் தர்க்க ரீதியான வாதங்கள் யாவும் சாதாரண மனிதர்களை வேண்டுமானால் திருப்தி கொள்ள வைக்கலாம். ஆனால் மேற்படி தர்க்க ரீதியான வாதங்கள் சமுதாயத்தில் பலம் வாய்ந்த குற்றவாளிகளை திருப்தி படுத்த முடியாது. மேற்கூறப்பட்ட வாதங்கள் எதுவும் சரியான காரண காரியங்களுடன் நிரூபிக்க பட முடியாத வாதங்கள் ஆகும். எனவேதான் தற்போது உலகம் முழுவதும் எண்ணற்ற குற்றவாளிகள் இருக்கின்றனர்.
இவ்வாறுதான் சமுதாயத்தில் மலிந்து போய்க் கிடக்கும் இன்னபிற குற்றங்களான வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்றவையும் சரியானது அல்ல என்று சமுதாயத்தில் பலம் வாய்ந்த குற்றவாளிகளுக்கு முன்பு தர்க்க ரீதியாக நிரூபிக்கப்படாத குற்றங்கள் ஆகும்.

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா





நாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Uநாளும் ஒரு தகவல் - Page 5 Tநாளும் ஒரு தகவல் - Page 5 Hநாளும் ஒரு தகவல் - Page 5 Uநாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Oநாளும் ஒரு தகவல் - Page 5 Hநாளும் ஒரு தகவல் - Page 5 Aநாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Eநாளும் ஒரு தகவல் - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 12:14 am

கருஞ்சீரகம்

காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.

அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள்.
(ஸஹீஹ் புகாரி 5687)


அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதைiயில் 'சாமைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது' என்று கூறினார்கள்.

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:
'சாம்' என்றால் 'மரணம்' என்று பொருள். 'அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) 'ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள்.
(ஸஹீஹ் புகாரி 5688)

Anñisa




நாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Uநாளும் ஒரு தகவல் - Page 5 Tநாளும் ஒரு தகவல் - Page 5 Hநாளும் ஒரு தகவல் - Page 5 Uநாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Oநாளும் ஒரு தகவல் - Page 5 Hநாளும் ஒரு தகவல் - Page 5 Aநாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Eநாளும் ஒரு தகவல் - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 12, 2013 12:01 pm

அரைகுறை ஆடையுடன் கூடிய மேற்கத்திய வாழ்க்கைதான் சுதந்திரத்தின் அடையாளம் என்று நான் வாழ்ந்த போது உணராத சுதந்திரமும் சமுகத்தில் எனக்கு கிடைக்காத அங்கீகாரமும் இன்று ஹிஜாபின் மூலமே எனக்கு கிடைத்தது. ஒரு முன்னாள் முஸ்லீம் அல்லாத பெண் என்கிற அனுபவத்தில் சொல்கிறேன் , ஹிஜாப் பெண்ணுரிமையின் அடையாளம்,சம நீதியின் குறியீடும், பெண் விடுதலையின் புதிய குறியீடும் நிகாப்தான் என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும்.ஹிஜாப் என் வாழ்கையில் ஏற்படுத்திய அமைதி மற்றும் மகிழ்ச்சியை போன்றே எல்லா பெண்களின் வாழ்விலும் கொண்டுவரும் என்பதில் சந்தேகம் இல்லை. - சாரா போக்கர்

ஹிஜாபின் பெருமை உலகெங்கிலும் பரவி வருகிறது.இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டும் வருகிறது .. முஸ்லிம் மக்கள் ஹிஜாப் பேணுவதில் எந்த பெருமையும் இல்லை.. மேற்குலக நாகரிகத்தில் மூழ்கிப் போன மாற்று மத சகோதரிகள் அதை உணர்ந்து அதன் பெருமையைச் சொல்லும் போது தான் அதன் மேன்மை புரிகிறது. இஸ்லாமிய பெண்களாகிய நாங்கள் அதை பற்றி பெருமிதமாக சொல்வதை விட முஸ்லிம்களை ஒடுக்க நினைக்கும் நாட்டில் இருந்து கொண்டு,மேற்கத்திய ஆடைகுறைப்பு நாகரிகத்தில் ஊறி திளைத்த ஒரு பெண் ஹிஜாப் மற்றும் குர்ஆனின் பெருமையைக் கூறும் பொழுது நமக்கு மெய் சிலிர்க்கவே செய்கிறது ..

சாராபோக்கர்!
மேலை நாட்டு கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து ஒரு கால கட்டத்தில் இஸ்லாத்தை புரிந்து கொண்டு , ஹிஜாபின் பெருமை உணர்ந்து அல்லாஹ்வின் வழி காட்டலில் இன்று முஸ்லிம்மாக வாழ்ந்து வரும் மாடல் அழகி இவர்!

ஆரம்பகாலத்தில்:
அமெரிக்காவின் நடுப்பகுதியில் பிறந்து, வளர்ந்த ஒரு அமெரிக்க பெண் . மற்ற பெண்கள் போலவே அந்த பெரிய நகரத்திற்கு உண்டான ஆடம்பர வாழ்க்கை முறையிலேயே வளர்ந்தார். ஒரு கட்டத்தில் , பகட்டு வாழ்க்கை முறைக்கு பெயர் போன புளோரிடா, மியாமி தென் கடற்கரை பகுதிக்கு நான் குடி பெயர்ந்தார். ஆரம்பத்தில் மேற்கத்திய பெண்களின் சராசரி மனநிலையே இவருக்கும் இருந்தது.பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் உடைகள் மற்றும் அலங்கார அணிகலன்கள் அணிவதும் அடுத்தவர் தம்மை கவுரமாக நினைப்பதே வாழ்க்கையின் அந்தஸ்து என்றும் எண்ணம் கொண்டிருந்தார். தனது கடுமையான உழைப்பின் மூலம் தனி நபர் பயிற்சியாளர் என்ற தகுதிக்கு தன்னை உயர்த்திகொண்டதோடு கடற்கரை ஒட்டி ஒரு வீடும் சொந்தமாக வாங்கும் அளவுக்கு பொருளாதார அளவில் உயர்ந்த நிலையிலும் நாகரீக வாழ்க்கை வாழும் ஒரு பெண்மணியாக தன்னை ஆக்கினார்!

ஆண்டுகள் உருண்டோட ஆரம்பித்தது! பெண் அடிமைத்தனத்தை எதிர்க்கிறேன் பேர்விழி என்று உருவெடுத்த சாராவிற்கு வாழ்கைத்தரம் உயர்ந்த அளவுக்கு வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் உயரவில்லை.. மாறாக குறைந்து கொண்டே வந்ததை உணர ஆரம்பித்தார். தன் வாழ்க்கை முறை மற்றும் மனநிம்மதிக்கும் இடையேயான இடைவேளை அதிகமாகி கொண்டே போவதை உணரஆரம்பித்தார். போதை மற்றும் பார்ட்டிகளுக்கு அடிமையாய் இருந்த சாரா அவற்றில் இருந்து விடுபடவேண்டி தியானம், சேவை மற்றும் மத ரீதியான காரியங்களில் ஈடுபட தொடங்கினார்.ஆனால் அனைத்து வழிமுறைகளும் ஒரு தற்காலிக வலி நிவாரணியாக இருந்ததே தவிர அவருக்கு நிரந்தர தீர்வேதுவும் கொடுக்கவில்லை!

பெண்ணியம்,பெண் சுதந்திரம் மற்றும் புதிய உலகம் உருவாக வேண்டும் என்று கருத்துகளோடு உலாவி கொண்டு இருந்த சாராவிற்கு அதே எண்ணத்துடன் ஒத்துப்போகக்கூடிய பொதுவுடைமை மற்றும் சுயமரிதை தொடர்பாக போராடி வரும் ஒரு நண்பரின் அறிமுகம் கிடைத்தது. அந்த கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அவருடன் இணைந்து சாரா செயல்பட ஆரம்பித்தார். தான் இணைந்த புதிய இயக்கம் அவருக்கு வித்தியாசமாக இருந்தது! ஒரு சிறிய வட்டத்திற்குள் பெண்ணியம் பெண் உரிமை என்று இருந்த சாராவிற்கு சுதந்திரம், நீதி, சுயமரியாதை எல்லாம் அனைத்து மக்களுக்கும் சமமானது என்றும் மக்கள் அனைவரும் சமமே முதன்முறையாக உணர ஆரம்பித்தார்.




நாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Uநாளும் ஒரு தகவல் - Page 5 Tநாளும் ஒரு தகவல் - Page 5 Hநாளும் ஒரு தகவல் - Page 5 Uநாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Oநாளும் ஒரு தகவல் - Page 5 Hநாளும் ஒரு தகவல் - Page 5 Aநாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Eநாளும் ஒரு தகவல் - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 12, 2013 12:01 pm

மாற்றம் நிகழ்ந்த தருணம்:
அக்காலகட்டத்தில் தான் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது! மேற்கத்திய நாடுகளில் எதிர்மறையான கருத்துக்கள் கொண்ட ஒரு நூல் என்று சொல்லப்படக்கூடிய நூலை தற்செயலாக ஒரு நாள் படிக்க நேர்ந்தது. ஆம் குர்ஆன் தான் அது! அது வரை இஸ்லாம் என்றால் மனைவியை அடித்து கொடுமைபடுத்தும் பழக்கம்,வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண்கள்,பயங்கரவாதம் மட்டுமே இஸ்லாம் என்று நினைத்துக்கொண்டிருந்த அவர் எண்ணத்தை அடியோடு மாற்றியது குர்ஆன்! குரானை படிக்க படிக்க அதன் பாணி, எழுதப்பட்ட விதம் மற்றும் அணுகுமுறை ஆகியவை சாராவை அதிகம் ஈர்த்தது!! படைக்கபட்டவை மற்றும் படைப்பாளிக்கான உறவை அதில் சொல்லி இருந்த விதம் சாராவை மிகவும் கவர்ந்தது.

குர் ஆன் முதன் முதலாக படித்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை இவ்வாறு விவரிக்கிறார்:
எந்த விதமான மொழிபெயர்ப்பும் தேவை இல்லாமல் எளிமையாக படிக்கும் வண்ணம் இருந்த குரான் என் இதயம் மற்றும் ஆன்மாவிற்கு மிகவும் நெருக்கமான முகவரியை எனக்கு கொடுத்தது.. இறுதியில் அந்த ஒரு கணத்தில் குர்ஆன் என்னை பார்த்ததன் உண்மையை உணர்தேன். தன்நம்பிக்கை மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ ஒரு முஸ்லிமாக மாற முடிவெடுத்தேன்.

ஆம்... சாரா தன் இரத்தத்திலேயே ஊறிய மேற்கத்திய கலாச்சாரத்தை தூக்கி எறிந்துவிட்டு ஒரு முஸ்லிம்மாக மாற முடிவெடுத்தார். உடனே அழகான நீண்ட உடையையும் தலையை மறைக்கும் விதமான ஸ்கார்ப்பும் வாங்கிக்கொண்டார். மேற்கத்திய பெண் என்ற ரீதியில் எந்த வீதியில் அரைகுறை ஆடைகளுடன் நடமாடினாரோ அதே தெருவில் தலையில் இருந்து கால் வரை மறைக்கும் விதமாக இருக்கும் ஹிஜாப் அணித்துச் செல்ல தொடங்கினார். அந்த அனுபவத்தை பற்றி சாரா குறிப்பிடுகையில் :பழகிய முகங்கள் ,பழகிய கடை வீதி என்றாலும் ஹிஜாப் அணிந்து நடமாடும் போது முதன்முறையாக மனதினில் தெம்பும் ,நிம்மதியும் ,தன்னிறைவும் பெற்ற ஒரு உணர்வு நிகழ்ந்தது என்னுள்.! தடைகள் தகர்ந்து புதிய உலகிற்குள் நுழைந்த சுதந்திர உணர்வை பெற்றேன்.வேட்டைக்கான இரையை போன்று ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட நான் இன்று இந்த சமுதாயம் முற்றிலும் புதிய கோணத்தில் என்னை பார்ப்பதை உணர்ந்தேன். என் தோள்களில் இருந்து மிக பெரிய பாரம் இறக்கி வைக்கப்பட்டது போன்று உணர்ந்தேன்.வேலை, ஷாப்பிங், ஒப்பனை என்று கழிந்த என் வாழ்க்கை இப்பொழுது சரியான திசையை நோக்கி செல்வதை உணர்ந்தேன்.இஸ்லாம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான மார்க்கமாக உணர்ந்தேன்.

இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாயக்கொண்டு, ஹிஜாப்பை தன் உரிமையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த சாரா திருமணம் செய்ததும் ஒரு முஸ்லீம்மை தான்! நிகாப்(முகத்தை முழுமையாக மூடும் துணி) போடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போன போது அதைபற்றிய ஆர்வம் அதிகரித்தது சாராவிற்கு! தான் ஏற்கெனவே அணிந்து கொண்டிருந்த ஹிஜாப் இல் இருந்தால் போதுமா, அல்லது நிகாப் அணிய வேண்டுமா என தன் கணவரிடம் ஆர்வமாய் கேட்க ஹிஜாப் அணிவது கடமை என்றும், நிகாப் அவரவரின் தனிபட்ட விருப்பம் என்றும் அவர் கூறினார். ஆனாலும் சாரா விடவில்லை..ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நிகாப் அணிய ஆசையாக உள்ளதாக மீண்டும் தன்கணவரிடம் சொன்னார். அதோடு, அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன நிம்மதியையும் அது அதிகப்படுத்தும் என்றும் அவரிடம் கூறிகிறார். சாராவின் ஆர்வத்தை கண்டு கணவர் தன் மனையின் முடிவை ஆதரித்தார். 'இஸ்தால்' என்று சொல்லப் பட்ட ஒரு தளர்ச்சியான, தலை முதல் கால்வரை மூடும் ஒரு கருப்பு கவுனையும், கண்களைத் தவிர தலையையும் முகத்தையும் முழுமையாக மூடும் நிகாபையும் வாங்கிக் கொடுத்தார்.




நாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Uநாளும் ஒரு தகவல் - Page 5 Tநாளும் ஒரு தகவல் - Page 5 Hநாளும் ஒரு தகவல் - Page 5 Uநாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Oநாளும் ஒரு தகவல் - Page 5 Hநாளும் ஒரு தகவல் - Page 5 Aநாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Eநாளும் ஒரு தகவல் - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 12, 2013 12:02 pm

வெகு விரைவில் சில அரசியல்வாதிகள்,கத்தோலிக்க பாதிரிகள் மற்றும் ,மனித உரிமை போராளிகள் என்று சொல்லிகொள்பவர்களிடமிருந்து ஹிஜாப்
பெண்ணடிமைத்தனத்தின் அறிகுறி என்றும் ,முன்னேற்றத்துக்கான தடை என்றும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அந்த வேளையில் ஒரு எகிப்திய அதிகாரி ஹிஜாப் பிற்போக்கு சிந்தனையின் அடையாளம் என்றும் குறிப்பிட்டார்.

அந்த தருணத்தை பற்றி சாரா குறிப்பிடுகையில் :
பெண்களுக்கு என்று பிரத்தியோகமான உடை மற்றும் சட்டங்கள் திணிக்கும் சில அரசாங்கள் இருக்கும் போது அதை எதிர்க்கவேண்டியவர்கள் எதிர்ப்பதில்லை! ஆனால் உண்மையான உரிமைகளான வேலை, கல்வி போன்ற எத்தனையோ துறைகளில் பெண்கள் பின்தங்கி இருக்கும் போது ,அதை எல்லாம் விட்டு விட்டு ஹிஜாபை கையில் எடுத்து கொண்டு பெண் விடுதலைகளுக்கு போராடுகிறோம் பேர்விழி என்று கூறிக்கொள்ளும் சில கையாலாகதவர்களின் வேற்று கூச்சலாகவே என்னால் இதை பார்க்க முடிந்தது. நல்ல கட்டளைகளை நிறைவேற்றவும் எந்த தீயசக்திகளுக்கு எதிராகவும் நீதி நெறியினை நிலைநாட்டவும் ஹிஜாப் தான் சரியான வழி. ஹிஜாப் அடிமைத்தனத்தின் அடையாளம் அல்ல அது முஸ்லிம் பெண்களின் உரிமை,சுதந்திரம் மற்றும் ,பாதுகாப்பின் குறியீடு என்று உணர வேண்டும்.

தன் கவர்ச்சியான உடையையும் , மேற்கத்திய போலி வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்ட சாரா, படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும், சுயமரியாதையும் கண்ணியமும் உள்ள ஒரு பெண்ணாக தன்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதிலும்தான் அதிக சந்தோசமிருக்கிறதென்றும் அதனால்தான் நிகாப் அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும், தன்னை விட்டுப் பிரிக்க முடியாத அதை அணியும் உரிமைக்காக உயிரை விடவும் செய்வேனென்றும் கூறுகிறார். மாஷா அல்லாஹ்...

சாரா ஹிஜாப் எதிர்ப்பாளர்களுக்கு சொன்ன பதில் இஸ்லாத்தின் கொள்கை மீதான அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுவதாக அமைந்துள்ளது.

"நாகரீக மோகத்தில் ஹிஜாபை இழிவுபடுத்துபவர்களுக்கும் அதனை புறக்கணிப்பவர்களுக்கும் நான் கூற விரும்புவது ஒன்று தான்! நீங்கள் உங்கள் அறியாமையினால் எதை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே இழந்து கொண்டிருகிறீர்கள்"


தன்னை சார்ந்த சமூகத்திற்கு ஒரு நல்ல முஸ்லிம் பெண்ணா இருப்பதற்கும் ,கணவனுக்கு உறுதுணையாய் நிற்கும் ஒரு முஸ்லிம் மனைவியாக இருப்பதற்கும், மேலும் தன் குழைந்தைகளை இஸ்லாம் நெறிமுறையில் வளர்த்து வருங்கால மனிதகுலத்திற்கு ஒளி வீசும் ஒளிகீற்றுகளாய் வளர்ப்பதற்கும் தன்னால் ஆனதை முஸ்லீம் பெண்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

இஸ்லாமிய வாழ்வியல் நெறியோடு முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை வாழ்ந்து, இப்போது இஸ்லாம் காட்டித்தந்த அழகான பாதையில் பயணிக்கும் சாரா தற்சமயம் "த மார்ச் பார் ஜஸ்டிஸ்" என்ற மனித மற்றும் சிவில் உரிமைகள் இயக்கத்தின் தகவல் தொடர்பு இயக்குனராக உள்ளார். மேலும் "த குளோபள் சிஸ்டர்ஸ் நெட்வொர்க்" கின் துணை நிறுவனராகவும், புகழ்பெற்ற "ஷாக் அன்ட் ஏவ் கேலரி" யின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அவரின் முந்தைய பாவங்களை மன்னித்து , இம்மையிலும் மறுமையிலும் வெற்றிகளை வழங்குவானாக. ஆமீன்

-islamiyapenmani.com




நாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Uநாளும் ஒரு தகவல் - Page 5 Tநாளும் ஒரு தகவல் - Page 5 Hநாளும் ஒரு தகவல் - Page 5 Uநாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Oநாளும் ஒரு தகவல் - Page 5 Hநாளும் ஒரு தகவல் - Page 5 Aநாளும் ஒரு தகவல் - Page 5 Mநாளும் ஒரு தகவல் - Page 5 Eநாளும் ஒரு தகவல் - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக