புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
96 Posts - 49%
heezulia
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
7 Posts - 4%
prajai
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Barushree
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
223 Posts - 52%
heezulia
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
16 Posts - 4%
prajai
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு தகவல்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 21, 2013 9:07 pm

First topic message reminder :

நாளும் ஒரு தகவல் - Page 4 542410_139383786221154_1303990847_n

காரூன்

மூஸா
அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும்
செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது.

நிச்சயமாக,
காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது
அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக்
கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு
கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்:
“நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு)
ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.

“மேலும்,
அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்;
எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து
விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை
செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ்
குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).

(அதற்கு
அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான்
கொடுக்கப்பட்டிருக்கிறேன்!”. இவனுக்கு முன் இவனை விட மிக்க
வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து
வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ்
அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள்
செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட
மாட்டார்கள்.

அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன்
தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர்
விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு கொடுக்கப்பட்டதைப் போன்று
நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று
கூறினார்கள்.

கல்வி ஞானம் பெற்றவர்களே “உங்களுக்கென்ன கேடு! ஈமான்
கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட
மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய
மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

ஆகவே, நாம் காரூனையும் அவன்
வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி
செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக்
கொள்ளவும் முடியவில்லை.

முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை
விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான்
நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்;
அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்)
அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய
மாட்டார்கள்” என்று கூறினார்கள். அல்குர்ஆன் 28:76-82

கெய்ரோவிலிருந்து 150 கிலோமீட்டர் தென்மேற்க்கில் கஸர காரூன் என்ற இடத்தில் தான் அவனுடைய ஆலயம் உள்ளது.

காரூனின் ஆலயம்

காரூனின் கிணறு

காரூனின் ஏரி என இப்பொழுதும் அழைக்கபடுகின்ற ஏரி.

காரூனும் அவனுடைய சுற்றத்தார்களும் புதைந்துபோன இடம்.

நன்றி முகநூல்.

நாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Tநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Oநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Aநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Eநாளும் ஒரு தகவல் - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 1:13 pm

நல்ல பகிர்வு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 12:11 am

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:

இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது – இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் – கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?

பதில்:
கஃபா என்பது முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்கி நிற்கும் திசையாகும். முஸ்லிம்கள் கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் – கஃபாவை தொழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்லாமியர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அல்லது வேறு எதற்கும் தலைவணங்குவதும் இ;ல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அல்லது வேறு எதனையும் தொழுவதுமில்லை.

அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
‘(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.’

1. இஸ்லாமிய மார்க்கம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது:

உதாரணத்திற்கு இஸ்லாமியர்கள் இறைவனைத் தொழ விரும்பினால் – ஒரு சாரார் வடக்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். மற்றொரு சாரார் தெற்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். ஆனால் அந்த ஏக இறைவனாம் அல்லாஹ்வைத் தொழுவதில் கூட இஸ்லாமியர்கள் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்; இறைவனைத் தொழும்போது இஸ்லாமியர்கள் அனைவரும் கஃபாவை முன்னோக்க வேண்டும் என பணிக்கப்பட்டிருக்கிறார்கள். கஃபாவிற்கு மேற்குப்புறத்தில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிழக்குத் திசையில் கஃபா இருப்பதால்) கிழக்குத்திசை நோக்கியும் கஃபாவிற்கு – கிழக்;குத் திசையில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு மேற்குத் திசையில் கஃபா இருப்பதால்) மேற்குத் திசை நோக்கியும் தொழுவார்கள்.

2. உலக வரை படத்தின் மத்தியில் கஃபா அமைந்துள்ளது.

இஸ்லாமியர்கள்தான் உலக வரைபடத்தை முதன் முதலாக வடிவமைத்தார்கள். உலக வரைபடத்தை வடிவமைத்த இஸ்லாமியர்கள் உலக உருண்டையின் தெற்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் – வடக்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். அப்படி வடிவமைத்தபோது இஸ்லாமியர்கள் நோக்கித் தொழும் திசையான கஃபா – உலக வரைபடத்தின் மத்தியில் அமைந்திருந்தது. பின்னர் – மேற்கத்திய உலகின் வரைபடவல்லுனர்கள் உலக வரைபடத்தை வடிவமைத்தபோது – உலக உருண்டையின் வடக்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் – தெற்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். மேற்கத்தியர்கள் உலக வரைபடத்தை மாற்றி வடிவமைத்தாலும் – கஃபா அமைந்தது உலக வரைபடத்தின் மத்தியில்தான்.

3. கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறையைச் சுட்டிக்காட்டவே!

இஸ்லாமியர்கள் மக்காவிற்கு செல்லும் பொழுது மஸ்ஜிதே ஹரத்தில் உள்ள கஃபாவை சுற்றி வலம் வருவார்கள். அவ்வாறு கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறை என்னும் ஏக தெய்வ கொள்கையில் இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுட்டிக் காட்டவும் ஒரு இறைவனையே வணங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவுமே ஆகும். ஒரு வட்டம் ஒரே ஒரு மத்திய புள்ளியை மாத்திரம் கொண்டிருப்பது போன்று வணக்திற்குரிய இறைவனும் அல்லாஹ் ஒருவனே என்பதை உணர்த்த வேண்டியும் ஆகும்.

4. உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்று:

ஹஜ்ர் அல் – அஹ்வத் என்னும் கருப்புக் கல்லைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்றில் கீழக்கண்டவாறு அறிவிக்கிறார்கள்:
‘நல்லதோ அல்லது கெட்டதோ செய்ய முடியாத கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உன்னைத் தொட்டு – முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் உன்னைத் தொட்டு முத்தமிட்டிருக்க மாட்டேன்’ .
மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி என்னும் செய்தி புத்தகத்தில் 56வது அத்தியாயத்தில் 675வது செய்திகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

5. கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்தல்:

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் – நபித் தோழர்கள் கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்துள்ளனர். கஃபாவை வணங்குவதாக இஸ்லாமியர்களை நோக்கிக் குற்றம் சுமத்துபவரை பார்த்து கேட்கிறேன் – எந்தச் சிலை வணங்கி அவர் வணங்கக் கூடிய சிலையின் மீது ஏறி நிற்பார்?

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

~முத்து டாட் காம் ~

நாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Tநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Oநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Aநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Eநாளும் ஒரு தகவல் - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 12:12 am

ஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே! இது ஏன்?

பதில்:

அருள்மறை குர்ஆன் – வாரிசுகளுக்கு – முறையாக சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி சரியான விளக்கமளிக்கிறது. சொத்துக்கள் பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 180வது வசனத்திலும், அதே அத்தியாயத்தின் 240வது வசனத்திலும், நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 7முதல் 9வது வசனங்களிலும், அதே அத்தியாயத்தின் 19வது வசனத்திலும், 33வது வசனத்திலும், ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 106 முதல் 108வது வசனங்களிலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 11 மற்றும் 12 வது வசனமும் 176 வது வசனம் ஆகிய மூன்று வசனங்களும் நெருங்கிய உறவினர்களுக்கிடையே சொத்துக்களை பங்கிடுவது பற்றி மிகத் தெளிவான விளக்கமளிக்கிறது.

‘உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து, அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.‘ (அல்-குர்ஆன் 4 : 11)

‘இறந்தவருக்குக் குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்குக் குழந்தை இல்லாதிருந்து, பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம். (மீதி தந்தைக்கு உரியதாகும்): இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான். (மீதி தந்தைக்குச் சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான், உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்: ஆகையினால் (இந்த பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்: நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.’(அல்-குர்ஆன் 4 : 11)

‘இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால் பாகம்தான். (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். தவிர, உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின், நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான். தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஒரு ஆணோ, அல்லது ஒரு பெண்ணோ, இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ இருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் அதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸணத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது: (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.’.
( 4 : 12)

‘(நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்;: ஒரு மனிதன் இறந்து விட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன், அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான். இரு சகோதரிகள் இருந்தால், அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள். அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும், பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு. நீ;ங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.‘ (அல்-குர்அன் 4 : 176).

சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் பெண் வாரிசுகளுக்கு, ஆண் வாரிசுகள் பெறும் பங்கைவிட பாதி பாகம் அவர்களின் (பெண்வாரிசுகளின்) பங்காக கிடைக்கிறது. இறந்து போனவர் – தனக்கு வாரிசுகள் எதுவுமின்றி – தனது மனைவியின் முந்தைய கணவருக்குப் பிறந்த இரண்டு வாரிசுகள் – (அதாவது ஒரு மகனும் – மகளும்) இருந்தால் -அந்த மகனுக்கும், மகளுக்கும் – இறந்து போனவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆறில் ஒரு பாகமே – அவர்களது பங்காக கிடைக்கும். மேற்படி நபருக்கு வாரிசுகள் இருந்தால் – இறந்து போனவரின் சொத்தில் ஆறில் ஒரு பாகம் அவரது பெற்றோருக்கும் – கிடைக்கும்.

சில சமயங்களில் பெண் வாரிசுகள், ஆண் வாரிசுகளைவிட இரண்டு மடங்கு சொத்துக்களை தங்களது பங்காக பெறுவதும் உண்டு. இறந்து போனவர் ஒரு திருமணமாகிய பெண்ணாக இருந்து – அவருக்கு குழந்தைகளோ அல்லது சகோதர – சகோதரிகளோ இல்லாத பட்சத்தில் – அவரது கணவருக்கும் – இறந்து போன பெண்ணுடைய பெற்றோருக்கும் கிடைக்கும் பங்கு என்னவெனில் – கணவருக்கு பாhதி பங்கும், இறந்து போன பெண்ணுடைய – தாயாருக்கு(உயிரோடு இருக்கும் பட்சத்தில்) மூன்றில் ஒரு பங்கும் – தந்தைக்கு ஆறில் ஒரு பங்கும் கிடைக்கும். இது போன்ற வேளையில் பெண்ணுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு – ஆணுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கைவிட இரு மடங்கு அதிகமாகும்.

நாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Tநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Oநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Aநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Eநாளும் ஒரு தகவல் - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 12:13 am

ஆயினும் பெண்களுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கை விட – ஆண்களுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு அதிகம் என்பது உண்மை. கீழ்க்காணும் உதாரணங்களை அதற்கு எடுத்துக் காட்டாக கொள்ளலாம்:

1. மகளுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு – மகனுக்கு கிடைக்கும் சொத்தை விட பாதி பாகம்.

2. இறந்து போனவருக்கு குழந்தைகள் இல்லை என்னும் பட்சத்தில் – இறந்த போனவரின் தாயாருக்கு எட்டில் ஒரு பகுதியும் – இறந்து போனவரின் தந்தையாருக்கு நான்கில் ஒரு பகுதியும் சொத்தில் பங்காக கிடைக்கும்.

3. இறந்து போனவருக்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் – இறந்த போனவரின் தாயாருக்கு நான்கில் ஒரு பகுதியும் – இறந்து போனவரின் தந்தையாருக்கு இரண்டில் ஒரு பகுதியும் சொத்தில் பங்காக கிடைக்கும்.

4. இறந்து போனவருக்கு முன் வாரிசு அல்லது பின் வாரிசு இல்லாத பட்சத்தில் – அவரது சகோதரருக்கு கிடைக்கும் பங்கைவிட பாதி பாகமே அவரது சகோதரிக்கு கிடைக்கும்.

இஸ்லாத்தில் பெண்கள் மீது பொருளாதாரச் சுமையோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும் பொருப்போ சுமத்தப்படவில்லை. ஒரு பெண் திருமணம் முடிக்கப்படும் வரை அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது தந்தை அல்லது அவளது சகோதரனின் கடைமயாகும். அவளது திருமணத்திற்குப் பிறகு, அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது கணவன் அல்லது அவளது மகனின் கடைமையாகும். இஸ்லாத்தில் குடும்பத்தின் பொருளதார தேவைகள் அனைத்தையும் நிiவேற்றும் பொறுப்பு ஆண்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. மேற்படி குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டே இஸ்லாமிய ஆண்களுக்கு, பெண்களைவிட சொத்தில் அதிக பங்கு அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு இரண்டு மக்களை உடைய ஒரு மனிதர் (ஒரு ஆண், ஒரு பெண்) இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இறந்து போன மனிதருக்கு ரூபாய் 150,000 மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால் – இறந்து போனவருடைய மகனுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும், இறந்து போனவருடைய மகளுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள சொத்துக்களும் அவர்களது பங்காக கிடைக்கும். ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக கிடைக்கப்பெற்ற மகனுக்கு குடும்பத்தில் உள்ள எல்லா செலவினங்களின் மீதும் பொறுப்பு உண்டு. அவருக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முழுவதையுமோ அல்லது அந்து சொத்துக்களில் பெரும் பங்கையோ (ரூபாய் என்பது ஆயிரம் மதிப்பள்ள சொத்துக்களை) – அவர் குடும்பத்திற்காக செலவு செய்துவிட்டு – எஞ்சியுள்ள இருபதினாயிரம் மதிப்புள்ள சொத்துக்களை மாத்திரம் அவர் தனது பங்காக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்ற மகள் – அதிலிருந்து ஒரு பைசா கூட எவருக்கும் செலவு செய்யாது (ஏனெனில் இஸ்லாம் பெண்கள் மீது குடும்பத்தின் எந்த பொருளாதார சுமையையும் சுமத்தாத காரணத்தால்) முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்க முடியும்.

இஸ்லாமிய சொத்துரிமையால் பயன் பெறுவது யார் என்று இப்போது சொல்லுங்கள். ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்று, அதில் என்பதாயிரம் ரூபாயைச் செலவு செய்து விட்டு மீதி இருபதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கும் – ஒரு இஸ்லாமிய ஆண்வாரிசா? அல்லது ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்றுக் கொண்டு, அதிலிருந்து ஒரு பைசா கூட செலவு செய்யாது முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்வாரிசா?

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

முத்து டாட் காம்

நாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Tநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Oநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Aநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Eநாளும் ஒரு தகவல் - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 12:14 am

இஸ்லாம் உடலுக்கு திரையிட சொன்னதே தவிர அறிவிற்கு திரையிட சொல்லவில்லை..

• இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்கு செல்ல தடையில்லை.

• அப்படி வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் அதை குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு கிடையாது.

• இஸ்லாத்தில் பெண்கள் வெளியே செல்ல தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கல்வி கற்க தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் விளையாட்டில் பங்குகொள்ள தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கணவனை தேர்ந்தெடுக்க உரிமை உண்டு.

• இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு.

இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்...

இஸ்லாத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை இஸ்லாம் சொல்வது ஒன்றே ஒன்றுதான் – ஆண்கள் தான் பெண்களை நிறுவகிக்க வேண்டும் என்பதே. இது இஸ்லாத்தில் இல்லாத மக்களும் பின்பற்ற கூடிய ஒன்றுதானே... இது தான் எதார்த்த உலகத்தில் நாம் அன்றாடம் பார்ப்பது ..இதில் விமர்சிக்க என்ன இருக்கிறது ?

முஸ்லீம்கள் செய்யும் தவறுகளுக்கு இஸ்லாத்தை குறைகூறாதீர்கள். இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அறியாமல் ,புரியாமல் ,அல்லது புடிக்காமல் யாரேனும் ஏதும் செய்தால் அவர்கள் தவறு செய்திருக்கிறார்களே ஒழிய, இஸ்லாம் அவர்களுக்கு எந்த தீங்கையும் செய்யவில்லை.

பெண்களும்–ஆண்களும் சமம் அவர்களை வேறுபடுத்தி பார்க்ககூடாது என்று போலியாக கோசம் போடுபவர்களிடம் நாம் சில கேள்விகளை முன்வைக்கிறோம்..

01. இயற்கையாகவே ஆணுக்கும் ,பெண்ணுக்கும் மூளையிலையே வித்தியாசம் இருக்கிறது என்கிறது இன்றைய அறிவியல் இதற்கு நீங்கள் யாரைகுறை சொல்ல போகிறீர்கள்..?

02. சரி ஆணும், பெண்ணும் சமம் என்கிறீர்கள் அப்படியானால் ஒன்றாக விளையாட விட்டு பார்க்க வேண்டியது தானே..!
CRICKET,TENNIS,FOOTBALL என்று எதை எடுத்துகொண்டாலும் ஏன் தனிதனியாக நடத்துகிறீர்கள் அனைவரும் சமம் அல்லவா ?

03. ஆணும்,பெண்ணும் சமம் – பிறகு எதற்கு ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் தனி தனி கழிவறைகள் ?- எதற்கு தனி தனி Q ? -
எதற்கு தனி தனி உடைகள்..?

04. அப்போ உங்களுக்கு தேவையானதை,சரி என்று பட்டதை நீங்கள் சரி காணுவீர்கள் மற்றதை கண்மூடி தனமாக எதிர்ப்பீர்கள் அப்படித்தானே ?

05. ஆண்கள் –பெண்கள் சமம் பிறகு ஏன் ? சினிமாவில் , பொதுவாழ்வில் பெண்களுக்கு மட்டும் அரைகுறை ஆடை – ஆண்களுக்கு கிடையாதா ? ஏன் பாரபட்சம் ?

06. ஆமா ஏன் ஆண்கள் பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை ? இது பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமையல்லவா ? ஆண்கள் மட்டும் என்ன உசத்தியா ? உங்கள் அறிவியல் வளர்ச்சியில் எல்லாமே சாத்தியமாமே ? செய்து காட்டுங்களேன் !

இன்னும் கேட்டுகொண்டே போகலாம் ஆனால் பதில்கள் இன்னுமில்லை...

இஸ்லாத்தை விமர்சிக்கும் அத்தனை அறிவுஜீவிக்கும் சொல்லிகொள்கிறோம்

“நீங்கள் உங்கள் பார்வையில் இஸ்லாத்தில் குறைகளை கண்டால் அதை எங்களிடம் முன்வைப்பதற்கு முன் முதலில் நீங்கள் அதற்க்கான சிறந்த தீர்வை கொண்டு வாருங்கள். அதாவது – இது இஸ்லாத்தில் தவறு –இப்படி இருந்தால் தான் சரி என்று தீர்வோடு வாருங்கள். வீணாக விதண்டா வாதம் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்..”

muslim pengal

நாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Tநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Oநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Aநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Eநாளும் ஒரு தகவல் - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 12:17 am

பெண் பிள்ளைகளை நல்லொழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்

இரண்டு பெண் குழந்தைகளை பருவமடையும் வரை -முறையாக- வளர்த்தவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் விரல்களை இணைத்துக் காண்பித்தார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : முஸ்லிம் 4765)

இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் என நபி (ஸல்) அவர்கள் தம் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் -ரலி, நூல் : திர்மிதீ 1837)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
இரு சிறுமிகளை சுமந்தவளாக என்னிடம் ஒரு ஏழைப் பெண் வந்தார். நான் அவருக்கு மூன்று பேரீத்தம் பழங்களைக் கொடுத்தேன். இருவருக்கும் ஒவ்வொரு பேரீத்தம் பழத்தைக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ஒன்றை தான் உண்பதற்காக வாய் வரை உயர்த்தி விட்டார். அப்போது அவருடைய இரு பிள்ளைகளும் அதனையும் கேட்டனர். தான் உண்ண நினைத்த அப்பழத்தை இரண்டாகப் பிளந்து அவ்விருவருக்கும் கொடுத்தார். அவருடைய இச்செயலைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்ட நான், இச்சம்பவத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், அவளின் இச்செயலின் காரணமாக நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான். அல்லது அவளை நரகத்திலிருந்து உரிமை விட்டுவிட்டான் என்றார்கள். (நூல் : முஸ்லிம் 4764)

புகாரீ, முஸ்லிம் இரண்டிலும் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

ஒரு பெண்மணி இரண்டு சிறுமிகளுடன் என்னிடம் வந்து யாசகம் கேட்டார். அப்போது ஒரு பேரித்தம் பழத்தைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. எனவே என்னிடம் இருந்த அதனை அவரிடம் கொடுத்தேன். அவர் அதனை இரண்டாகப் பிளந்து தன் இரு பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு, அதில் எதனையும் அவர் உண்ணாமல் தம் பிள்ளைகளுடன் வெளியேறிச் சென்றார். இச்சம்பவத்தை என்னிடம் வந்த நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், பெண் பிள்ளைகளின் காரணமாக ஏதேனும் சோதனைக்கு ஆளாக்கப்பட்ட ஒருவர் -அக்கஷ்டங்களுடன்- அவர்களுக்கு கருணை காட்டினால் அவரை நரகத்தை விட்டும் தடுக்கும் திரையாக அப்பிள்ளைகள் ஆகிவிடுவார்கள் என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 4763)

எவருக்கேனும் மூன்று பெண் பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லாஹ்வுக்குப் பயந்து அவர்களை முறையாகப் பேணிவளர்த்தால் அவர் சொர்க்கத்தில் என்னுடன் இவ்வாறு இருப்பார் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் உயர்த்தி சைகை செய்தார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : அபூ யஃலா)

ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து அவர்களை ஆதரித்து, இரக்கம் காட்டி, பொறுப்புடன் வளர்த்தால் அவருக்கு நிச்சயமாக சொர்க்கம் கிடைத்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தால்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தாலும்தான்! என்று கூறினார்கள். அவர்கள் ஒரு பெண் பிள்ளையைப் பற்றி கேட்டிருந்தால் ஒரு பெண் பிள்ளை இருந்தாலும்தான்! என நிச்சயமாகக் கூறியிருப்பார்கள் என அக்கூட்டத்தில் இருந்த சிலர் கருதினர்.
(அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : அஹ்மத் 13729)

யாரேனும் இரண்டு அல்லது மூன்று பெண் பிள்ளைகளையோ, இரண்டு அல்லது மூன்று சகோதரிகளையோ அவர்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்களை விட்டும் இவர் மரணிக்கும் வரை பொறுப்பேற்றுக் கொண்டால் நானும் அவரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் தம் நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் -உயர்த்தி- சைகை செய்தார்கள்.

மற்றொரு அறிவிப்பில் : அவர்கள் பருவம் அடையும் வரை என்று வந்துள்ளது.

(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : அஹ்மத் 12041, இப்னு ஹிப்பான்)

நாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Tநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Oநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Aநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Eநாளும் ஒரு தகவல் - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 12:18 am

ஹலோ! மங்கையர்களே உங்களைதான்...!!

நம் பெண்கள் நல்ல முன்னேற்ற பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.... கல்வியிலும் அலுவலகங்களிலும் தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள். நாம் வெளியில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தான் இந்த பதிவு.... இப்படிதான் இருங்கள் என்று சொல்லவில்லை, இப்படியும் முயன்று பாருங்களேன்... வேறு மாற்று வழிகள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்........

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;

மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள்,அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;

மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றிப் பெறும் பொருட்டு,நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்'. (அல்குர்ஆன் 24: 31)

01. உங்கள் ஆடைகள் கண்ணியமானதாக இருக்கட்டும்.ரொம்ப 'டைட்டா'கவும் இல்லாமல் அதிக 'லூசா'கவும் இல்லாமல்,கண்களை உறுத்தாமல் கச்சிதமாக இருக்கட்டும்....

02. உடலை முழுக்க மூடும் 'புர்கா' அல்லது 'அப்பாயா' போடுவது உடை விஷயத்தை எளிதாக்கிவிடும்.அப்படியில்லையென்றால்,முழுக்கை 'சல்வார்' அல்லது முழுக்கை 'குர்தா' போன்றவை அணிந்து தலையை மூடும் scarf போட்டுக் கொள்ளலாம்.....

03. அதிக அலங்காரத்தையோ வாசணை திரவியங்களையோ முடிந்தளவு தவிர்க்கப் பாருங்கள்....

04. ஆண்களிடம் நட்பாகப் பழகுவது தவறில்லை.ஆனால், அது ஒரு கண்ணியமிக்க நட்பாக மட்டுமே இருக்கட்டும்.மாறாக,தேவையில்லாத 'வெட்டி' அரட்டைகளுக்கும் 'வழிசல்'களுக்கும் இடம் கொடுப்பதாக இருக்க வேண்டாம்....

05. யாரேனும் தங்களிடம் நட்பின் பேரில் உரிமை எடுத்துக் கொள்ள முற்பட்டால், அவர்களிடம் கடுமையாக நடக்க தயங்காதீர்கள்....

06. புன்னகை முகமாக இருங்கள். ஆனால்,தேவையில்லாமல் சிரிக்கும்,வரையில்லாமல் பேசும் பெண்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டாம்....

07. நன்பர்களைப் பற்றி பெற்றோரிடம் எந்த ஒளிவுமறைவும் வைத்துக் கொள்ளாதீர்கள்.உங்கள் நட்பு வட்டாரத்தில் இருக்கும் ஆண்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள்.அது உங்கள் நன்பர்களை உங்களுடன் வரைமுறையோடு பழகச் செய்யும்.....

8. 'late night' போன்களையும் 'sms' களையும் தவிருங்கள்......

09. தற்போது batch party,batch tour போன்றவை சகஜம்.அச்சமயங்களில் முடிந்தளவு பெண்கள் கூட்டத்தோடு சேர்ந்துக் கொள்ளுங்கள்.

10. எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக தங்களைக் காட்டிக் கொள்ளாதீர்கள்.....

11. பிரச்சனைகளை பொறுமையுடன் கையாள்பவராக இருங்கள்.....

மொத்தத்தில், பிறரின் பார்வைக்கு நீங்கள் ஒரு மதிப்புமிக்க கண்ணியமான பெண்ணாகத் தெரிய வேண்டுமே தவிர பேதை பெண்ணாக அல்ல......

Anñisa | முஸ்லிம் பெண்கள்

நாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Tநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Oநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Aநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Eநாளும் ஒரு தகவல் - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 12:19 am

விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான்.

(மது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான்.

திருடன் திருடும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான்.

(மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப்
பார்த்துக் கொண்டிருக்க கொள்ளையடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி
கொள்ளையடிக்கமாட்டான்.

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல்:- ஸஹீஹ் புகாரி. 6772.

நாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Tநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Oநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Aநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Eநாளும் ஒரு தகவல் - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 12:20 am

அடகு வைக்கப்பட்ட பிராணிக்காகும் (பராமரிப்புச்) செலவுக்கு பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம்.

பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம்.

சவாரி செய்பவனும், பாலை அருந்துபவனும் தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும்.

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

நூல்:- ஸஹீஹ் புகாரி. 2512..

நாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Tநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Oநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Aநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Eநாளும் ஒரு தகவல் - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 12:20 am

நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்),

"அப்துர் ரஹ்மானே..! ஆட்சிக் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள்.

ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால், அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள்.

கேட்காமல் உங்களுக்கு அது அளிக்கப்பட்டால், அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும்.

நீங்கள் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக
நீங்கள் கருதினால் உங்களின் சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)தற்கான
பரிகாரத்தைச் செய்துவிடுங்கள்.

சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துங்கள்" என்றார்கள்.

என்று அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

நூல்:-ஸஹீஹ் புகாரி.7146.

நாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Tநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Uநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Oநாளும் ஒரு தகவல் - Page 4 Hநாளும் ஒரு தகவல் - Page 4 Aநாளும் ஒரு தகவல் - Page 4 Mநாளும் ஒரு தகவல் - Page 4 Eநாளும் ஒரு தகவல் - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக