புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
43 Posts - 50%
ayyasamy ram
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
30 Posts - 35%
prajai
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
3 Posts - 3%
Jenila
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
1 Post - 1%
jairam
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
30 Posts - 21%
prajai
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
7 Posts - 5%
Jenila
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
4 Posts - 3%
Baarushree
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
3 Posts - 2%
Rutu
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
1 Post - 1%
jairam
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் !


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 19 Feb 2013 - 13:19


அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! Images?q=tbn:ANd9GcQyIWxKFeE6QSI2xXVhgJYBo8c-Z86fDi1ZDbjd5IUALrNZNYkGeA
இது என்னுடைய 12,000மாவது பதிவு நண்பர்களே ! நான் இந்த கட்டுரையை சர்வோதயா நாள் அன்றே எழுத வேண்டும் என்று இருந்தேன். சர்வோதயா நாள் என்றால் என்ன வென்று தெரியாதவர்களும் இங்கு இருக்கலாம். அவர்களுக்காக நான் இதை விளக்க கடமைப்படிட்டிருக்கிறேன். அதாவது நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் மரணத்தை தழுவிய அந்த துக்கமான நாளை தான் நாம் சர்வோதயா நாள் என்று அழைக்கிறோம். அது ஜனவரி 30ம் தேதி.

முன்பெல்லாம் நான் சிறுமியாக இருந்த போது ஜனவரி 30ம் தேதி காலை 11 மணிக்கு, எங்கள் பள்ளி இல் ஒரு மணி அடிக்கும் நாங்க எல்லோரும் எழுந்து அந்த தேசத்தந்தைக்கு மௌன அஞ்சலி செலுத்துவோம். மறுபடி 11.02 க்கு ஒரு மணி அடிக்கும் அப்போது எங்கள் மௌனத்தை கலைப்போம். பள்ளிகளில் மட்டும் அல்ல அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவ மனைகளிலும் இந்த மௌன அஞ்சலி யை எல்லோரும் பின் பற்றினார்கள். 1970 இல் என் அம்மா என் கடைசி தம்பிகளை ஜனவரி 30ம் தேதி காலை 7 மணிக்கு ஒரு ஆண் குழந்தை அடுத்து 7.20 மற்றும் ஒரு ஆண் குழந்தை என்று பெற்றிருந்தார்கள்.ஆம் எங்க அம்மாக்கு இரட்டை பிள்ளைகள் பிறந்தார்கள்.புன்னகை அன்று 11 மணி க்கு மணியடித்ததும், அங்கிருந்த செவிலி எங்க அம்மாவையும் மணி அடித்ததும் எழுந்து நிற்க சொன்னார்களாம். "காந்தி எவ்வளவோ கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கினார் ; அதற்கு முன் உன்னுடைய பிரசவித்த வலி ரொம்ப சின்னது, 2 நிமிஷம் நிற்பதால் உன் உடம்புக்கு ஒன்றும் ஆகாது எழுந்திரு" என்றளாம். அம்மா சொல்வார். {அது போல இப்ப யாரும் சொல்வாளா தெரியலை சோகம் } அப்படி இருந்த அந்த நல்ல வழக்கம் எப்ப எப்படி நின்று போனது என்று தெரியலை. சோகம்

எனக்கு நல்லா நினைவில் இருக்கு , எங்க கிருஷ்ணா 7 வது வரை இந்தியாவில் தான் படித்தான் , அது வரை அந்த பழக்கம் இருந்தது. நான் அவனை எப்போதும் அகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 அன்று கண்டிப்பாக கொடியேற்றும் விழாவுக்கு அனுப்பிவிடுவேன். நான் பள்ளி சென்ற காலத்தில் கூட எங்க அம்மா எங்கள் அனைவரையும் ( நங்கள் 5 பேர் பிள்ளைகள்) அனுப்பிவிடுவார்கள். எனக்கும் அதே பழக்கம். ஆட்டோ டிரைவர் லீவு கேட்டால் கூட நான் அனுமதிக்க மாட்டேன். காத்திருந்து கிருஷ்ணாவை அழைத்துவர செய்வேன்.புன்னகை அதன் பிறகு நாங்கள் சௌதி சென்று விட்டோம். அங்கும் இந்தியன் எம்பசி ஸ்கூல் இல் இந்த வழக்கம் இருந்தது. நாங்கள் மீண்டும் கிருஷ்ணா 12 வது முடித்ததும் இந்தியா வந்தோம். முதல் வருடம் அவன் B .E . சென்று கொண்டிருந்தான், அந்த வருடம் ஜனவரி 30 அன்று எங்க வீட்டின் அருகிலேயே 2 பள்ளிகளிருந்ததால், கண்டிப்பாக அவர்கள் 11 மணிக்கு ஒரு ஸ்பெஷல் மணி அடிப்பார்கள் என்று நினைத்திருந்தேன் ........சோகம் இல்லை சரி என்று நான் 2 நிமிடம் மௌனமாக அஞ்சலி செலுத்திவிட்டு, பிறகு எங்கள் வீடுகளை 'மெஇண்டென்' செய்யும் மாமி இடம் இது பற்றி விசாரித்தேன். மாமி சிரிக்காத குறைதான் .....சோகம் " என்ன சுமதி எந்த உலகத்தில் இருக்க?, அதெல்லாம் இப்ப யார் செய்யரா?" என்றாளே பார்க்கணும். எனக்கு ரொம்ப வருத்தமாக போச்சு. சர்வோதயா நாள் என்றால் என்ன என்று கூட இந்த காலத்து பசங்களுக்கு தெரியாது என்கிறாள். சாயங்காலம் கிருஷ் வந்ததும் அவனும் சொல்கிறான், " அம்மா சௌதி லையே நாங்க ப்ரே பண்ணுவோம் இங்க ஒன்னும் இல்லமா, கேட்டா பசங்க சிரிக்கறாங்க" என்கிறான். நானும் என் அனுபவத்தை சொன்னேன். எங்கள் இருவருக்கும் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது அன்று. பிறகு யார் யாரிடமோ கேட்டும் எப்ப அந்த வழக்கம் நின்று போனது என்று தெரியலை. சோகம்

எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு நம் தேச தந்தை மற்றும் தியாகிகளைப்பற்றி சொல்லித்தரா? எதற்குமே நேரம் இல்லாமல் அலைகிறார்களே..... எதற்கு? பிள்ளைகளுக்கு ஆகஸ்ட் 15 மட்டும் ஜனவரி 26 பள்ளி எதற்கு விடுமுறை என்று கூட தெரிவதில்லை.
சுதந்திர தினம் எது குடியரசு தினம் எது என்று கூட தெரியாது. அன்று பள்ளி விடுமுறை, டிவி பார்க்கலாம். அல்லது 4 குத்தாட்டம் ( அது கூட தேசிய பாடல்கள் அல்ல ) பழகிவிட்டு மேடையில் ஆடிட்டு வரலாம் என்று மட்டுமே தெரிகிறது.

ஒருநாள் சன் டிவி இல் ஒரு நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் பார்த்தேன் ; சிறு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அது. அதன் அமைப்பாளர் ஒரு குழந்தை யை கேட்கிறார் 500 ருபாய் தாளில் , கண்ணாடி போட்டிருப்பரே அவர் பெயர் என்ன ? என்று, அதற்கு அந்த குழந்தை சொல்கிறது அது "பவர் ஸ்டார்' என்று. அதைக்கேட்டு அனைவரும் சிரிக்கிறார்கள். ஒருவருக்கு கூட ஒரு குற்ற உணர்வு இல்லவே இல்லை எனக்கு அவர்களை அப்படியே சுடனும் போல இருந்தது. என்னால் முடிந்தது சேனல் ஐ மாற்றுவது தான். என்ன ஒரு பொறுப்பு அற்ற ஜனங்கள் . கண்டிப்பாக அது பெற்றோர்கள் சொல்லித்தந்தது தான். அந்த குழந்தை தெரியாது என்று சொல்லி இருந்தால் கூட பரவாஇல்லை. ஏதோ ஒரு பொறம்போக்கு (மன்னிக்கணும்) பேரை சொல்கிறதே என்று எனக்கு ரொம்ப வெறுப்பாக இருந்தது.

நீங்கள் சமீப கால தினசரிகளில் படித்திருக்கலாம்;

ஒரு பள்ளி இன் +1 மாணவர்கள் 6ம் வகுப்பு மாணவர்களை அடித்து , குடிப்பதற்காக பணம் கேட்டார்களாம்.அவர்கள் அப்படி கேடட போதே குடித்திருந்தார்களாம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இன்னும் ஒன்று. + 1 மாணவர்கள் இருவர் அங்கிருந்த பியூன் னுடன் சேர்ந்து பள்ளி இன் பெஞ்சை விற்று விட்டு குடித்தார்களாம்.

மற்றும் ஒரு செய்தி 4 வது படிக்கும் மாணவி இடம் + 1 மாணவர் சில்மிஷம் என்ன கொடுமை சார் இது

இது போல பல சொல்லலாம். இவர்களின் பெற்றோர் இவர்களை கவனிப்பதை விடுத்து என்ன செய்கிறார்கள் என்பது மிலியன் டாலர் கேள்வி. கோபம்

நம் முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் 2020 இல் நம் நாடு வல்லரசாகும் என்று சொன்னார். ஏன் அப்படி சொன்னார், அந்த காலத்தில் நம் நாட்டின் மக்கள் தொகை இல் இளைஞர்கள் அதிக அளவில் இருப்பார்கள் அவர்கள் சாதிப்பார்கள் என்று தான் சொன்னார். இன்றைய பெற்றோர்களுக்கு அந்த பொறுப்பு இருப்பதாக வே தெரியலை சோகம் மேலே சொன்ன இளைஞர்கள் 2020 இல் என்ன மாதிரி இருப்பார்கள் ? இவர்களை நம்பியா நம நாடு இருக்கு ? பயம் பயம் பயம்

இது போல பொறுப்பு அற்ற பிள்ளைகள் ஒரு புறம்; வெறும் குத்தாட்டத்திலும், தமாஷ் என்கிற பெயரில் இதைப்போல பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள தங்கள் குழந்தைகளை தயார் படுத்தும் பொறுப்பு இல்லா பெற்றோர் ஒருபுறம் . (எல்லா பெற்றோர்களையும் நான் குறை சொல்லவில்லை. இவ்வாறு செய்பவர்களை மட்டும் தான் சொல்கிறேன்.) நம நாட்டின் எதிர் காலம் ??????????????????????????

இந்த தலைமுறை குழந்தைகளுக்கு அவர்கள் பார்த்து பின்பற்ற நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் , எனவே நாம் நம் தலைமுறை தலைவர்களைப்பற்றி தான் சொல்லணும். அந்த காலத்தில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்தை பெற்று த்தந்தர்கள் என்று சொல்லணும்.

வெளி நாடுகளில் "பெட் டைம் ஸ்டோரி' என்கிறது ரொம்ப பிரபலம். அது போல நாமும் பழகனும். சின்ன சின்ன கதைகளாக சொல்லணும். சும்மா நேரம் இல்லை என்று சொலக்கூடாது. நாம் கதை சொல்ல எவ்வளவு பேர் இருக்கா? காந்தி, நேரு, வல்லபபாய் பட்டேல், திலகர், திருப்பூர் குமரன், வாஞ்சி நாதன் என பட்டியல் நீளுமே !

மேலும் நாங்க சின்ன வர்களாக இருந்த போது எங்க விட்டுக்கு 'சர்வோதயா மாமி' என்று ஒருவர் வருவார். வெகு வருஷங்கள் நாங்க அவர் எங்க உறவினர் என்றே நினைத்திருந்தோம் புன்னகை காலை ஒரு பத்துமணி வாக்கில் சனிக்கிழமைகளில் வருவார் . பொதுவாக மாதம் இருமுறை வருவார். வரும் போது கைகுத்தல் அவல், ஊதுபத்தி, ரொம்ப பளப்பு இல்லாத சோப்பு கட்டிகள், பனை வெல்லம் என்று பல பொருட்கள் கொண்டுவருவார். எங்கள் வீட்டிலேயே அம்மா மற்றும் பாட்டி யுடன் பேசி விட்டு கொண்டு வந்த பொருட்களை தருவார். சில சமயம் எங்களுடன் சாப்பிடுவார் அல்லது அவர் எடுத்து வந்துள்ள டப்பாவிலிருந்து சாப்பிடுவார். பிறகு எங்களுக்கு நல்ல நல்ல கதைகள் சொல்வார். நாங்கள் அதற்காகவே காத்திருப்போம். கதைகள் முடிந்ததும் கொஞ்சநேரம் ஓய்வு எடுப்பார் பிறகு சென்றுவிடுவார். காபி டீ குடிக்க மாட்டார் . மோர் தான் குடிப்பார். ஆனால் இப்போது அது போல வருகிறார்களா தெரியலை.
அதற்கு பதில் காந்தி ஜெயந்தி மற்றும் சர்வோதயா டே இன் போது கடைகளில் தள்ளுபடி விலை இல் பொருட்கள் தருகிறார்கள் அல்லது 'மேளா' ஏற்ப்பாடு செய்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அதைப்போன்ற 'காதி' பொருட்களை எவ்வளவு பேர் வாங்கறா, அதன் பலன்களை குழந்தைகளுக்கு சொல்லித்தரா தெரியலை.

இதையெல்லாம் நான் இங்கு கொட்டுவதன் நோக்கமே, குறைந்த பக்ஷம் இதைப்படிக்கும் உறவுகளாவது, தங்கள் சந்ததி இனருக்கு நம் முன் தலை முறை வாழ் பெரியவர்கள் மற்றும் தலைவர்களின் அருமை பெருமைகளை சொல்லி வளருங்கோ, இந்த அபத்த டிவி நிகழ்ச்சிகளை பார்க்காமலும் அதில் பங்கு பெறாமலும் இருங்கோ என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளத்தான் புன்னகை

டிவி காராளை கேட்டால் மக்கள் பார்ப்பதால் தான் நாங்கள் இப்படி நிகழ்ச்சிகள் தருகிறோம் என்பார்கள். நாம் பார்க்காமல் தவிர்த்தாலே சில நிகழ்ச்சிகள் நின்றுவிடும். அதற்கு உதவுங்கோ. :வணக்கம்: அன்பு மலர்

தாய் மொழிப்பற்று மற்றும் தேசப்பற்று ரொம்ப முக்கியம் நமக்கு. நிறைய பேர் வெளிநாடுகளில் இருக்கா அவர்களுக்கு பொறுப்பு இரண்டு மடங்குஆகிறது. காந்தி இன் கொள்கைகளை பசங்களுக்கு சொல்லுங்கோ , ரொம்ப சிம்பிள் தான் புன்னகை முதலில் 'மன்னிப்பு' கேட்க (சாரி சொல்ல ) பழக்கணும். அடுத்தது 'நன்றி' சொல்ல பழக்கனும். முளைத்தது முதலே எல்லாத்துக்கும் 'ஈகோ' தப்பு செய்தால் 'மன்னிப்பு' கேட்டுத்தான் ஆகணும் என்று சொல்லி பழக்கனும். அடுத்தது பெரியவாளை மதிக்க கத்து தரனும்.

"ஒழுக்கம் தான் அதன் அடிப்படையே. "ஸெல்ப் டிசிப்ளின்" சுய ஒழுக்கம் அது தான் இப்போ ரொம்ப ரொம்ப தேவை புன்னகை

சர்வோதயம் என்பது மகாத்மா காந்தி கண்ட சமுதாயக் கொள்கைகளின் வடிவத்துக்குப் பெயர். காந்தி தான் அடைய விரும்பிய சமுதாயத்தைச் சர்வோதயச் சமுதாயம் என்ற முறையில் வடிவமைத்தார். ஒழுக்கத்தை முதன்மைப்படுத்தும் இச்சமுதாய முறைமை குறித்து, ‘ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடிப்படை. சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றின் சாரமும் என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக் கொண்டே வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கு சத்தியாக்கிரகம் பின்வரும் கருத்துக்களைப் புலப்படுத்துவதாக இருக்கும்.

1. இது தைரியசாலிகளின் ஆயுதம். ஒருபோதும் கோழைகளின் ஆயுதம் அல்ல.
2. எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் ஒருபோதும் பழிவாங்க முயலாதே.
3. எதிரியையும் ஆதரி. ஆனால், தீய செயலுக்கு வெறுப்பை காட்டிக்கொள்.
4. எதிரியை தோற்கடிக்காமல் அல்லது புண்படுத்தாமல், காயப்படுத்தாமல் அல்லது இழிவுபடுத்தாமல், அன்பினூடாக எதிரியை வெற்றி கொள்வதன் மூலம் முரண்பாட்டை தீர்ப்பதில் உறுதியாக இரு.
5. துன்பத்தை ஏற்படுத்தாமல் துன்பத்தை ஏற்றுக்கொள்;.
என்பவையே அவை.

காந்தியின் அகிம்சை போராட்டம் நான்கு அடிப்படைகளைக் கொண்டன. அவை சத்தியாக்கிரகம் (ஆத்ம வலிமை), சர்வோதயா (யாவர்க்கும் நன்மை), சுவராஜ் (சுய ஆளுகை) மற்றும் சுவதேஷி (இது எனது நாட்டுப் பொருள்) என்பவையே அவை.



சத்தியாக்கிரகத்தின் இந்த அம்சங்கள் இன்றைய யதார்த்தத்திற்கு முரண்பட்டவை என்று நோக்கப்படக் கூடும். ஆனால், இன்று உலகிலே அநேகமான முரண்பாடுகள் இதன் அடிப்படையில் தீர்க்கப்பட்டிருக்கிறது. 2000ம் ஆண்டு சேர்பியாவில் ஒட்போர் புரட்சி மூலம் மிலோசெவிக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், "வன்முறையற்ற முரண்பாட்டுக்கான சர்வதேச நிலையமானது, அகிம்சை செயற்பாடுகள் மற்றும் உபாயங்களின் முன்னேற்றத்திற்கான நிலையம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். மேலும், ஜோர்ஜியா, உக்கிரைன், லெபனான்இ கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் அகிம்சைப் பாணியிலான வன்முறையற்ற மாபெரும் வெகுஜன இயக்கங்கள் ஜனநாயக மலர்ச்சிக்கும் அமைதிக்கும் வித்திட்டிருக்கின்றன.

இவையெல்லாம் நாம் செய்தித்தாள்களில் காந்தி ஜெயந்தி அன்று அல்லது சர்வோதய நாள் அன்று படிப்போம் அவ்வளவுதான்.
ஆனால் இனி கொஞ்சம் பின்பற்ற பாருங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 19 Feb 2013 - 13:40

ரொம்ப சிறப்பான பகிர்வு நன்றி அம்மா ....நான் படிக்கும் பொது கூட என் பள்ளியில் இது போல் நடந்ததில்லை நீங்க சொல்லி தான் இப்போ தெரியும்

அன்று பள்ளி விடுமுறை, டிவி பார்க்கலாம். அல்லது 4 குத்தாட்டம் ( அது கூட தேசிய பாடல்கள் அல்ல ) பழகிவிட்டு மேடையில் ஆடிட்டு வரலாம் என்று மட்டுமே தெரிகிறது.

என் பொண்ணு படிக்கும் பள்ளியில் கூட மாம்பழமாம் மாம்பழம் பாடலுக்கு சிறு பிள்ளைகளை ஆட விட்டார்கள்[அதில் என் பொண்ணும் அடக்கம் } அந்த நிகழ்ச்சிக்கு போயிட்டு ரொம்ப டென்ஷனா தான் வீட்டுக்கு வந்தேன் ...அந்தப் பிள்ளைகளுக்கு அதன் அர்த்தம் தெரியாது...நாம் அந்த அர்த்தத்தோடு தான் அதை பார்ப்போம் ரொம்ப அசிங்கமாயிடுச்சு..... சோகம் அநியாயம் என்ன கொடுமை சார் இது

12000 பதிவுக்கு வாழ்த்துகள் அம்மா சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 19 Feb 2013 - 13:48

ஜாஹீதாபானு wrote:ரொம்ப சிறப்பான பகிர்வு நன்றி அம்மா ....நான் படிக்கும் பொது கூட என் பள்ளியில் இது போல் நடந்ததில்லை நீங்க சொல்லி தான் இப்போ தெரியும்

அன்று பள்ளி விடுமுறை, டிவி பார்க்கலாம். அல்லது 4 குத்தாட்டம் ( அது கூட தேசிய பாடல்கள் அல்ல ) பழகிவிட்டு மேடையில் ஆடிட்டு வரலாம் என்று மட்டுமே தெரிகிறது.

என் பொண்ணு படிக்கும் பள்ளியில் கூட மாம்பழமாம் மாம்பழம் பாடலுக்கு சிறு பிள்ளைகளை ஆட விட்டார்கள்[அதில் என் பொண்ணும் அடக்கம் } அந்த நிகழ்ச்சிக்கு போயிட்டு ரொம்ப டென்ஷனா தான் வீட்டுக்கு வந்தேன் ...அந்தப் பிள்ளைகளுக்கு அதன் அர்த்தம் தெரியாது...நாம் அந்த அர்த்தத்தோடு தான் அதை பார்ப்போம் ரொம்ப அசிங்கமாயிடுச்சு..... சோகம் அநியாயம் என்ன கொடுமை சார் இது

12000 பதிவுக்கு வாழ்த்துகள் அம்மா சூப்பருங்க

நன்றி பானு, நீங்க சொல்லும் பாட்டு எது என்று எனக்கு தெரியலை , என்றாலும் அந்த சூழ்நிலைக்கு ஒத்துவராத பாட்டு என்று மட்டும் புரிகிறது புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue 19 Feb 2013 - 15:36

அம்மா, காந்தி உருவாகிய காங்கிரஸ் தான் இந்தியாவ 52 வருடம் ஆண்டு வருது....இப்பவும் அவங்க தான்....நான் பள்ளியில் படிக்கும் நாள்களில் (அது கிருஸ்துவ பள்ளி) இது போல நானும் அஞ்சலி செலுத்தி உள்ளேன்...ஆனால் இன்று அந்த வழக்கம் கடை பிடிக்க படவில்லை என்பதோடு இன்றைய ஆட்சியாளர்கள் யாரும் காந்தி சமாதிக்கு கூட செல்லவில்லை என்பது தான் மிக வேதனையான விஷயம்....அவர் உருவாகிய கட்சியே அவரை மறந்த பிறகு மற்றவர்களை குறை கூறி என்ன பயன்.......


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 19 Feb 2013 - 16:08

நல்ல தொரு விழிப்புணர்வு பகிர்வு அம்மா!

இப்பலாம் இதெல்லாம் ட்ரென்ட் ஆக மாறியுள்ளது.
குழந்தைகளை பாட வைப்பதும் பேச வைப்பதும்.
பெற்றோர்களும் இதுக்கொரு காரணம் ஆகும்.

12000 பதிவுக்கு வாழ்த்துகள் அம்மா..! மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 19 Feb 2013 - 16:25

பகிர்வுக்கு நன்றிம்மா




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 19 Feb 2013 - 16:35

நல்ல விழிப்புணர்வு பதிவு ....
இவ்வளவு தட்டச்சு செய்து எங்களுக்கு சமர்பிதமைக்கு நன்றிகள்...

அந்த டிவி நிகழ்ச்சியை நானும் கண்டேன்...ஆதிரா நகைச்சுவை சேனலில் ஒளிபரப்பாகியது....
அந்த குழந்தை சொல்வதற்கு எல்லாரும் சிரிக்கிறார்கள்.. அந்த குழந்தைகள் சொந்தமாக சொல்வது போலே தெரியவில்லை...
2 வயது குழந்தைகள் இதையெலாம் பேசுமா ?????????????????????????? சிரிப்பதற்காக சொல்லி கொடுத்து பேச வைக்கிறார்கள் ..... அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! 56667 அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! 56667 அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! 56667 அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! 56667 அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! 56667 அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! 56667
குழந்தைகளை பெற்றோர்களே கெடுக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம் தான்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue 19 Feb 2013 - 16:55

ரொம்ப...ரொம்ப...அருமையான...முக்கியமான...தேவையான பதிவு. வெறும்
"பகிர்வுக்கு நன்றி" என்று வார்த்தையில் முடித்துவிட முடியாது. தளத்தின் மிகச் சிறந்த பதிவுகளுள் ஒன்றைப் பதிந்த கிருஷ்ணம்மாவிற்கு வணக்கங்கள்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 19 Feb 2013 - 18:00

சிறப்பான பதிவு .

நான் படிக்கும் போது கூட என் பள்ளியில் இது போல் நடந்ததில்லை நீங்க சொல்லி தான் இப்போ தான் சர்வோதயா நாள் பற்றி தெரியும்.

ரமேஷ் நாகா சொல்லுவது போல "பகிர்வுக்கு நன்றி" என்று வார்த்தையில் முடித்துவிட முடியாது.

சிறப்பான பதிவுக்கு மீண்டும் ஒரு முறை தலை வணங்குகின்றேன் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 19 Feb 2013 - 19:27

Guna Tamil wrote:அம்மா, காந்தி உருவாகிய காங்கிரஸ் தான் இந்தியாவ 52 வருடம் ஆண்டு வருது....இப்பவும் அவங்க தான்....நான் பள்ளியில் படிக்கும் நாள்களில் (அது கிருஸ்துவ பள்ளி) இது போல நானும் அஞ்சலி செலுத்தி உள்ளேன்...ஆனால் இன்று அந்த வழக்கம் கடை பிடிக்க படவில்லை என்பதோடு இன்றைய ஆட்சியாளர்கள் யாரும் காந்தி சமாதிக்கு கூட செல்லவில்லை என்பது தான் மிக வேதனையான விஷயம்....அவர் உருவாகிய கட்சியே அவரை மறந்த பிறகு மற்றவர்களை குறை கூறி என்ன பயன்.......

குறை சொல்ல வில்லை குணா புன்னகை என் ஆதங்கத்தை கொட்டினேன். இதனால் ஒரே கட்டுரை இல் எல்லாவற்றையும் ஒழுங்கு பருத்துவது முடியாது என்று எனக்கு தெரியும். ஒரு விழிப்புணர்வு தர முடியும், நாம் நம் குழந்தைகளை இட்டுச்செல்ல வேண்டிய பாதை எது என்று யோசிக்க வைக்கக்கூடிய கட்டுரையாக இது இருக்கணும் என்று என் ஆசை. வந்த பின்னுட்டங்களை பார்க்கும்போது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கு, என் கைக்கு எட்டும் தூரம் வரை என்னால் முடித்ததை செய்யும் த்ருப்தி,

சொந்த அப்பா அம்மாவையே மறக்கும் இந்த காலத்தில் .................அவர் நம் தேசத்தந்தை இவரை நான் நினைவில் வையுங்கள் என்று நான் சொல்வது விநோதமாக இருக்கலாம் என்றாலும் அது தேவையான ஒன்று . ஏன் என்றால் ஆட்சியாளர்களுக்கு அவர் பேர் வேண்டுவது போல நமக்கு அவரின் பிறந்தநாளுக்கு லீவு வேண்டுமே, அதை அனுபவிக்கும் வரையிலாவது அவரை நினைவில் வைக்கணும், எத்தனை தலை முறையானாலும் என்று நான் நினைக்கிறேன். ஓகே வா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக