புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னுவதெல்லாம்... Poll_c10மின்னுவதெல்லாம்... Poll_m10மின்னுவதெல்லாம்... Poll_c10 
21 Posts - 66%
heezulia
மின்னுவதெல்லாம்... Poll_c10மின்னுவதெல்லாம்... Poll_m10மின்னுவதெல்லாம்... Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னுவதெல்லாம்... Poll_c10மின்னுவதெல்லாம்... Poll_m10மின்னுவதெல்லாம்... Poll_c10 
63 Posts - 64%
heezulia
மின்னுவதெல்லாம்... Poll_c10மின்னுவதெல்லாம்... Poll_m10மின்னுவதெல்லாம்... Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மின்னுவதெல்லாம்... Poll_c10மின்னுவதெல்லாம்... Poll_m10மின்னுவதெல்லாம்... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மின்னுவதெல்லாம்... Poll_c10மின்னுவதெல்லாம்... Poll_m10மின்னுவதெல்லாம்... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னுவதெல்லாம்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 15, 2013 7:56 am

செய்கூலி இல்லை. சேதாரம் இல்லை என்று அடிக்கடி ஊடகங்களில் நகைக்கடைகளின் விளம்பரங்கள் வருகின்றன. சேதாரம் இல்லாமல் நகைககள் செய்ய இயலுமா? நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டிருக்கும் சமயத்தில் சேதாரத்திற்கான விலையை, வாங்குவோர் தலையில் சுமத்தாமல் நகைக் கடைகளே அந்தச் சுமையை ஏற்றுக் கொள்ளுவது என்பது சாத்தியமா? அப்படிப்பட்ட தியாகிகளா அவர்கள்? தங்களைத் தற்காத்துக்கொள்ளநுகர்வோர்கள் செய்ய வேண்டியது என்ன? இந்த விஷயங்களை ஆராயக் களம் இறங்கியது ‘புதிய தலைமுறை’.
-
சேதாரம் என்றால் என்ன?
இயந்திரம் மூலமாகவோ, கைவேலைப்பாடாகவோ தங்கத்தில் நகைகள் செய்யும்போது சிதறும் அல்லது வீணாகும் தங்கமே சேதாரம் என்று சொல்லப்படுகிறது.
-
சேதாரம் இல்லாமல் நகை செய்யமுடியுமா?
முடியாது. சிறிது கூட தங்கம்வீணாகாத அளவுக்கு நகை செய்யும் அளவிற்குத் தொழில் நுட்பம் முன்னேறியிருக்கிறது. ஆனால், அது இங்கு இன்னும் பரவலாகவில்லை. நகைசெய்யும்போது சேதாரம் வரத்தான் செய்யும்.
-
சேதாரம் எதில் அதிகம்? மனிதர் செய்வதிலா? இயந்திரம் செய்வதிலா?
பட்டறையில் மனிதர்களால் செய்யப்படும் நகைகளில்தான்சேதாரம் அதிகமாகும். இயந்திரங்களின் மூலம் மோல்டு செய்யப்படும் நகைகளில் அந்த அளவு சேதாரம்ஏற்படாது. எனினும் அந்த நகைகளை ஃபினிஷிங் செய்வது மனிதர்கள்தான். அப்போது சிறிய அளவில் சேதாரம் உண்டாகும். சேதாரம் டிசைன்களைப் பொருத்து மாறுபடும்.
-
கல் வைத்த நகைகள் செய்தால், சேதாரம் அதிகமாகுமா?
கல் நகைகள் செய்யும்போது அதிகளவில் சேதாரம் ஏற்படும். அதன் மீது செய்யப்படும் அதிக வேலைப்பாடு காரணமாக அதிகளவு சேதாரம் ஏற்படுகிறது.மோல்டிங், பின்னர் அளவு தட்டி ராவி சுத்தம் செய்தல், பம்பிங், கல் வைத்து செதுக்கல் எனப் பல நிலைகளை அந்த நகைகள் உருவாகும்போது சந்திக்கின்றன. இவையெல்லாம்ஒவ்வொரு இடத்தில் செய்யப்படும்போது ஒவ்வொரு இடத்திலும் ஏற்படும்.
-
916 கே.டி.எம். என்பது என்ன?
24 கேரட் உள்ள நகைகளே சுத்தத் தங்கம் அல்லது சொக்கத் தங்கம் எனப்படும். சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது. கொஞ்சம் செம்பு அல்லது காட்மியம் கலந்தால்தான் நகையாக்க முடியும். கிராம் தங்கத்தில் எவ்வளவு செம்பு/காட்மியம் கலக்கப்படுகிறதுஎன்பதைப் பொருத்து தங்கத்தின் சுத்தத் தன்மை மாறுபடுகிறது.
-
916 தங்கம் என்பது, 100 கிராம் தங்கத்தில் 91.6 கிராம் சொக்கத் தங்கம் இருக்கும். இதுவே 22 கேரட் ஆபரணத் தங்கமாகும். காட்மியம் என்பதன் சுருக்கமே, ‘கே.டி.எம்.’ இந்தக் காட்மியத்தை பயன்படுத்தித்தான் நகைகளை ஒட்ட வைக்கிறார்கள்.
தங்கம், வெள்ளி, செம்பு என்றமூன்று உலோகக் கலவைகளின் பொடியால்தான் அந்தக்காலத்தில் நகைகளை ஒட்டி வந்தார்கள். இவ்வாறு ஒட்டப்பட்ட நகையை உருக்கும்போது கிடைக்கிற தங்கம் சுத்தமாக இருக்காது.ஆனால், காட்மியம் உபயோகித்து ஒட்டிய தங்க நகையை உருக்கும்போது சுத்தமான தங்கம் கிடைக்கிறது. ஒட்டி முடித்தவுடன் காட்மியம் ஆவியாகிவிடுவதே இதற்குக் காரணம். ஆனால், சில நாடுகளில் கே.டி.எம். தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுஒரு ரசாயனம்.
-
ஹால்மார்க் என்பது என்ன?
விற்பனைக்கு வரும் நகைகள் தரமான தங்கத்தில் செய்யப்பட்டதுதானா எனச்சோதித்து, அதற்கு முத்திரையிடும் பணியை இந்திய தர நிர்ணய அமைப்பு செய்கிறது. அப்படி இடப்படும் முத்திரைக்குப் பெயர்தான் ஹால்மார்க். ஆனால், இந்த ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்படாததால், ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளும் முத்திரை இல்லாத மற்ற நகைகளும் ஒரே கடையில் விற்கப்படுகின்றன. ஆனால், அந்தக் கடை ஒட்டுமொத்தமாக இது ஹால்மார்க் முத்திரைக் கடை என்று தனது கடையை விளம்பரப்படுத்திக் கொள்கிறது. எனவே, எந்தெந்த நகைகள் ஹால்மார்க் முத்திரையுடன் உள்ளன என்பதை விழிப்புடன் பார்த்து வாடிக்கையாளர்கள்வாங்க வேண்டும்
ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளிலும் கூட பல இடங்களில் ஏமாற்று வேலை நடப்பதாகச் சொல்லப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தர நிர்ணய அமைப்பு, நாடு முழுக்க உள்ள நகைக் கடைகளில் 120 தங்க நகைகளை எடுத்து சோதனை செய்தது. இதில் 14ல் மட்டுமே சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் சொன்ன அதே தரம் இருந்தது. இதைத் தொடர்ந்து நுகர்வோருக்கு தரமான தங்க நகைகள் கிடைப்பதை உறுதி செய்ய, தேசிய அளவில் பிரத்யேகக் கமிட்டி அமைய வேண்டும் என்று பேச்சு கிளம்பியது. ஆனால், இன்றுவரை அது செயல்வடிவம் பெறவில்லை.
-
வெளிநாடுகளில் தங்கத்தின் தரம் எப்படி?
பல நாடுகளில் தரம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே நகைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மொத்த வியாபாரிகள், தொழிற்சாலைகளிலிருந்து நகைகள் வாங்கும்போது அதில் ஏதேனும் ஒரு நகையின் தரத்தைசோதனை செய்து, பின்னர் வாங்குவதே அமீரகத்தில் நடந்துகொண்டிருக்கும் வழக்கம்.
அமீரக அரசாங்கத்தின் தங்கக்கட்டுப்பாட்டு வாரியம் மூன்று மாதத்திற்கொருமுறை ஒவ்வொரு கடைக்கும் வருகை தந்து, அங்குள்ள நகைகளில் சிலவற்றை இவர்களின் பரிசோதனைக்கு எடுத்துச் செல்வார்கள். அப்படி எடுத்துச் செல்லும் நகைகளில் தரம் குறைவாக இருந்தால், அந்த நகைகள் அனைத்தையும் உருக்குவதற்குகட்டளையிடுகிறார்கள். இரண்டாம் முறையும் தரம் குறைவு என்றால், அபராதமும் ஒரு மாத காலம் கடையடைப்பும்செய்வார்கள். மூன்றாம் முறைகடையின் லைசென்சை ரத்துசெய்து விடுவார்கள். இந்தக் கட்டுப்பாட்டினால் தங்கத்தின் தரம், அமீரகத்தில் இன்றுவரையில் தலைதூக்கி சர்வதேசச் சந்தையில் பெயரும் பெற்றுவருகிறது.-
சேதாரம் அதிகம் வாங்கினால்,நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்க முடியுமா?
சேதாரம் அதிகம் வாங்கியதாக நேரடியாக குறைதீர்மன்றத்தில் வழக்குதொடுக்க முடியாது. ஆனால், 916 என்று கூறுவார்கள். ஆனால், 91.6 டச்சுக்குப் பதிலாக 85 டச்தான் இருக்கும். அதுபோன்ற சமயங்களில் அதை ஆதாரத்துடன் குறைதீர்மன்றத்தில் புகாரளித்து தீர்வு காணலாம். தங்கத்தின் தரத்தைஆய்வகத்தில் கொடுத்து, சான்றிதழ் வாங்கி அதனை ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 15, 2013 7:59 am

இங்கு உடனடியாக என்ன செய்யலாம்?
புதுச்சேரியில் நகை விற்பனைசெய்யப்படும்போது வழங்கப்படும் ரசீதில் சேதாரம், செய்கூலி ஆகியவற்றைத் தனித்தனியாக குறிப்பிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, மனிதத் தன்மை நுகர்வோர் மைய அமைப்பின் தலைவர் உத்திரேஸ்வரன் புதுவை முதல்வரிடம் மனு கொடுத்துள்ளார். அதில், ‘புதுச்சேரியில் உள்ள நகைக்கடைகளில் நகை விற்கும்போது அவர்கள் கட்டாயமாக பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரை வாங்கி, பில்லில் குறிப்பிடவேண்டும். அவர்கள் அளித்த துல்லிய எண்ணையும் குறிப்பிட வேண்டும். அதேபோல் பில்லில் நகை வாங்குபவர்கள் எவ்வளவு எடை நகை வாங்குகிறார்கள், அதற்குரிய தொகை எவ்வளவு, நகைக்கான கூலி எவ்வளவு, வரிகள் எவ்வளவு என்பதையும் தனித்தனியாகக் குறிப்பிட வேண்டும். எஸ்டிமேட் பில்களை உபயோகிக்க அனுமதிக்கக் கூடாது. இதனால், அரசுக்கு வர வேண்டிய வருவாய் பாதிக்கப்படும். இவ்வாறு எஸ்டிமேட் பில்களை உபயோகிக்கும் நகைக் கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதை நாடு முழுக்கப் பின்பற்றலாம்.
-
உலகிலேயே அதிக அளவில் தங்க ஆபரணங்களைப் பயன்படுத்துபவர்கள் இந்தியப் பெண்கள். இந்த நிலையில் தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் வைப்பதும், தரமான தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் சந்தைக்கு வருவதை உறுதி செய்வதும் அரசின் கடமையாகும்.
-
புதிய தலைமுறை..



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 15, 2013 10:18 am

நன்று , பவுன் ராஜ் . நன்றி
DERAR BABU
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் DERAR BABU



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 15, 2013 10:43 am

சேதாரம் இல்லாமல் நகைககள் செய்ய இயலுமா? நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டிருக்கும் சமயத்தில் சேதாரத்திற்கான விலையை, வாங்குவோர் தலையில் சுமத்தாமல் நகைக் கடைகளே அந்தச் சுமையை ஏற்றுக் கொள்ளுவது என்பது சாத்தியமா? அப்படிப்பட்ட தியாகிகளா அவர்கள்?

இந்த கேள்விகளுக்கான பதில்களை 'புதிய தலைமுறை' கண்டுபிடிகக்லையா? சோகம் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கேன் ரிலாக்ஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Feb 15, 2013 4:09 pm

இத டி.கே.ராமச்சந்திரன், சாவித்திரி அம்மா அவுங்களத்தான் கேக்கனும். அவுங்க பாடின பாட்டுதானே அது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக