புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
9 Posts - 4%
prajai
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்டைக்கத்தி ராஜாக்கள்


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Sat Feb 09, 2013 12:54 pm

அட்டைக்கத்தி ராஜாக்கள்
சிறுகதை

பொதுவாகவே இலக்கியக் கூட்டங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. எப்போதோ ஒரு முறை தெரியாத்தனமா நண்பர் ஒருவரின் வற்பறுத்தலுக்காகச் சென்று கவிதை என்ற பெயரில் சில கன்னாபின்னாக்களையும்…தத்துவம் என்ற பெயரில் சில தத்துப்பித்துக்களையும் கேட்டு….மனம் நொந்து….நெடுநாள் அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து…ஏதோ இப்போதுதான் கொஞ்சமாய்த் தேறி…பழைய நிலைமைக்கு வந்திருக்கேன்.

இந்த நேரத்தில் எனக்கு மாபெரும் சோதனை என் மகள் அஞ்சலி மூலமாக வந்தது.

'அப்பா…இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நீங்க ப்ரீதானே?”

'ஏம்மா எதுக்குக் கேட்கறே?”

'அன்னிக்கு ஆர்.எஸ்.புரம் நகரத்தார் சங்க கட்டிடத்துல ஒரு இலக்கியக் கூட்டம் நடக்குதுப்பா… அதுக்கு நான் கண்டிப்பா போயாகணும்….நீங்களும் கூட வர்றீங்க”

எனக்கு பகீரென்றது. 'என்னது….இலக்கியக் கூட்டமா?…நானா?…அம்மா தாயே…என்னை ஆளை விடு…நம்மால் ஆகாது”

'அப்பா…நான் எப்படிப்பா தனியாப் போறது?”

'உங்கம்மாவைக் கூட்டிட்டுப் போ…”

'அது சரி…எனக்காவது ஓரளவுக்கு டவுன் பஸ் பழக்கமிருக்கு…அம்மாவுக்கு எந்த நெம்பர்…எங்க போகும்னே தெரியாது…அதைக் கூட்டிட்டுப் போகச் சொல்றீங்களே…” சிணுங்கிளாள் அஞ்சலி.

'அம்மா…வேண்டாம்மா…வேற என்ன வேணாலும் செய்யச் சொல்லு…செய்யறேன்…இலக்கியக் கூட்டம் மட்டும் வேண்டாம்மா..” கெஞ்சினேன் நான்.

அவள் பிடிவாதமும் என் மறுப்பும் கடுமையாக மோதியதில் அவள் பிடிவாதமே வெல்ல நான் பலியாடானேன்.

ஞாயிற்றுக் கிழமை.

ஓன்பது மணி நிகழ்ச்சிக்கு காலை எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி டவுன் பஸ்ஸைப் பிடித்து ஒன்பதே காலுக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது அரங்கினுள் எண்ணி நாலே பேர்தான் இருந்தனர்;

'சார்…நிகழ்ச்சி…இருக்கல்ல?” சந்தேகப்பட்டு ஒருவரிடம் கேட்டேன்.

'இருக்கு…இருக்கு…எப்படியும்…பத்து….பத்தரைக்கு ஆரம்பிச்சிடுவாங்க”

இரண்டாம் வரிசையில் இருக்கை பிடித்து அமர்ந்தோம்.

கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் சேரத் துவங்கி பத்தரை மணி வாக்கில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படும் தறுவாயில் அரங்கின் முக்கால்வாசி நாற்காலிகள் நிரம்பியிருந்தன.

யார் யாரோ வந்து எதையெதையோ பேசிவிட்டுச் சென்றபின் சிறப்புப் பேச்சாளர் தன் உரையைத் துவக்கினார்.

'யாரும்மா இவரு?” கிசுகிசுப்பான குரலில் அஞ்சலியிடம் கேட்டேன்.

'என்னப்பா இப்படிக் கேட்டுட்டீங்க?….இவருதாம்பா 'ஆம்பூர் அனலேந்தி'….நல்ல இலக்கியவாதி….சாட்டையடிப் பேச்சாளர்…பத்திரிக்கைகளிலெல்லாம் கூட இவரு பேரு அடிக்கடி வருமே…”

எனக்கென்னவோ அப்படியொரு பெயரை இதுவரை கேட்டதாகவோ….படித்ததாகவோ சுத்தமாகவே ஞாபகத்திலில்லை. 'என்னத்தைப் பேசிக் கிழிச்சுடப் போறான் இவன்?' என்கிற அலட்சிய மனப்பான்மையோடிருந்த என்னை சற்று கவனிக்க வைத்தது அவரின் பேச்சு.

'ஈவ் டீஸிங்'” என்கிற பெண்களுக்கெதிரான சமூகக் கொடுமை பற்றியும்…அது சம்மந்தப்பட்ட பெண்களையும்…அவளது குடும்பத்தாரையும் உளரீதியாக எந்த அளவிற்குப் பாதிக்கின்றது என்பது பற்றியும்….அக்கொடுமையினால் உயிரிழந்த மாந்தர்களைப்பற்றியும்…அது போன்ற கொடுமைகளை இழைக்கும் இளைஞர்களை…ஆண் வர்க்கத்தினரை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பது பற்றியும் அந்த ஆம்பூர் அனலேந்தி பேச்சில் தெறித்த அனல் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. நான் மட்டுமல்ல…மொத்தக் கூட்டமும் அனலேந்தி என்ற பெயருக்குப் பொருத்தமானவர்தான் இவர் என்கிற கருத்தை தம் அதிர வைக்கும் கரவொலியால் தெரிவித்தது.

'நடப்புச் சமூகத்தில நம் கண்ணெதிரே நிகழும் இது போன்ற கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் மனதைரியம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்….அப்படி ஏற்படாத பட்சத்தில் 'நான் கோழை” என்பதை பகிரங்கமாக அறிவித்து விட்டு முச்சந்தியில் விஷமருந்திச் சாக வேண்டும்….அல்லது தூக்கில் தொங்க வேண்டும்…”என்று அவர் பேசிய போது எழுந்த கைதட்டல் அரங்கின் மேற்கூரையில் மோதி எதிரொலித்தது.

அஞ்சலி பெருமிதமாய்த் திரும்பி என்னைப் பார்க்க நான் புருவத்தை உயர்த்தி ஆமோதித்தேன்

கூட்டம் முடிந்து கிளம்பி, பேருந்து நிலையத்தை வந்தடையும் போது மாலை மூன்று மணி ஆகிவிட்டது.

எங்களுக்கான பஸ் புறப்படத் தயாராக நின்று கொண்டிருக்க ஓடிப் போய் ஏறிக் கொண்டோம்.

பஸ்ஸில் கூட்டம் சற்றுக் குறைவாகவே இருக்க இருவருக்கும் இடம் கிடைத்து அமர்ந்தோம். குனிந்து பாக்கெட்டில் கை விட்டு சில்லரை எடுக்கும் போது 'சிவானந்தா காலனி ஒண்ணு குடுங்க….”

எங்கோ கேட்ட குரலாய்த் தெரிய நிமிர்ந்து பார்த்தேன். எனக்கு முன் இருக்கையில் ஆம்பூர் அனலேந்தி.

'ஓ..இவரும் இந்த பஸ்ஸில்தான் வருகிறாரா?”

பஸ் வடகோவை மேம்பாலம் நிறுத்தத்தில் நின்ற போது நான்கு ஜீன்ஸ் இளைஞர்கள் சத்தமாய்ப் பேசிச் சிரித்தபடியே பஸ்ஸில் ஏறினர்.

பஸ்ஸிற்குள் இப்போது சிகரெட் வாடை.

எங்கள் இருக்கைக்கு அருகில் வந்து சாய்ந்தபடி நின்று கொண்டு அவ்வப்போது அஞ்சலியை அவர்கள் பார்வையால் தீண்ட நான் முறைக்க ஆரம்பித்தேன்.

'மச்சி….இப்பெல்லாம்…மயிலுக…செக்யூரிட்டியோடவே வருதுகப்பா…” காதில் கடுக்கன் அணிந்தவன் சொல்ல,

'நீ ஏனப்பா அதக் கண்டுக்கறே?….நமக்கு மயிலுகதான் முக்கியம்…அத்த மட்டும் பாப்பியா…அத்த விட்டுட்டு…”

'மச்சி…இங்கொரு செவப்பு மயிலு…எப்படி செழிப்பாயிருக்கு கண்டுக்கினியா?”

அஞ்சலி சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.

'செழிப்பிற்குக் காரணமான விவசாயி கூடவே வரானே”

நான் பற்களை 'நற…நற' வென்று கடித்தேன.;

'மச்சி…உனுக்கு செம்மயிலு பிடிக்குமா?..செம்மீனு பிடிக்குமா?”

என் நரம்புகள் முறுக்கேற 'ராஸ்கல்….ஓங்கி அறைஞ்சேன்னா…உம்மூஞ்சி…செம்மூஞ்சி ஆய்டும்” ஆவேசமாய்க் கத்தினேன்.

பஸ்ஸிலிருந்த அனைவரும் என்னைத் திரும்பிப் பார்த்தனர;. ஆம்பூர் அனலேந்தி உட்பட.

ஆனால் யாரிடமும் எவ்வித ரீயாக்ஷனும் இல்லை. 'நமக்கென்ன?”என்கிற பாணியில் அவர்களனைவரும் மீண்டும் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கையில் மூழ்கியது என்னை வியப்பிலாழ்த்தியது.

'மச்சி…விவசாயி கூவுறானே?”

'என்ன பண்ணச் சொல்றான்?…ஏர் உழுகச் சொல்லுறானா…இல்ல தண்ணி காட்டச் சொல்றானா?” தொங்கு மீசை இளைஞன் சொல்ல, மற்றவர்கள் 'ஹோ”வென்று கோரஸாய்ச் சிரித்தனர்.

எனக்கு அவமானமாகவும்…ஆத்திரமாகவும் இருந்தது.

'ஈவ் டீஸிங்” கைப் பற்றிப் பொறி பறக்கப் பேசிய ஆம்பூர் அனலேந்திக்கு பின்னால் நடக்கும் கூத்து நன்றாகவே தெரியும்…தெரிந்தும் அமைதியாய்…காது கேளாதவராய் அமர்ந்திருந்தார்.

'அடப்பாவி…மேடைல அந்த முழங்கு முழங்கினானே….இங்க கண் எதிரே நடக்குது…தெரிஞ்சும் தெரியாத மாதிரி வர்றானே…அப்ப மேடைல பேசினதெல்லாம் வெறும் கைதட்டலுக்காகத்தானா?..பேச்சு வேறு…செயல் வேறு…என்பதுதான் சிறந்த இலக்கியவாதிக்கான தன்மையா?”

இப்போது என் கோபம் அந்த இளைஞர்கள் மீதிருந்து அந்த போலி இலக்கியவாதியின் மேல் தாவியது. 'விடக் கூடாது இவனை” என்கிற பாணியில் முன் இருக்கையில் இருந்த ஆம்பூர் அனலேந்தியின் தோள்களைத் தட்டினேன்.

திடீரென்று கண்களை மூடித் துhங்குவது போல் அவர் பாசாங்கு செய்ய,

'த்துh..நீயெல்லாம் ஒரு மனுசனா…அட்டைக்கத்தி ராசா…”

மனசுக்குள் திட்டி விட்டு அந்த இளைஞர்கள் பக்கம் திரும்பி 'என்ன தம்பிகளா…ஈவ் டீஸிங்கா?….இதுக்கு என்ன தண்டனை தெரியுமா?”

'அய்யா பெரியவரே..நீங்க பாட்டுக்கு தண்டனைன்னு சொல்லி…'எம் பொண்ணைக் கல்யாணம் பண்ணி வெச்சுடுவேன்'னு மட்டும் சொல்லிடாதீங்க…நாங்க நாலு பேரும் பாகிஸ்தானுக்கு ஓடிப் போய்டுவோம்…” என்று காதில் கடுக்கன் போட்டவன் சொல்ல,

மற்றவர்களின சிரிப்பு உச்சத்திற்குப் போனது. எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.

அடுத்த பஸ் நிறுத்தத்தில் அந்த ஆம்பூர் அனலேந்தி எழுந்து அவசரமாய் அவசரமாய் இறங்க எட்டிப் பார்த்தேன். அது அவர் இறங்க வேண்டிய நிறுத்தமே அல்ல. அப்படியானால் ஏன் இறங்கணும்?..

'கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் மனதைரியம் இல்லாதவர்கள் 'நான் கோழை”என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு முச்சந்தியில் விஷமருந்திச் சாக வேண்டும்….அல்லது தூக்கில் தொங்க வேண்டும்”

அவரின் அனல் பேச்சு என் காதுகளில் ஒலிக்க,

மொத்த எச்சிலையும் ஒன்று திரட்டி ஜன்னல் வழியே 'சொத்” தென்று துப்பினேன்.

அதையும் பார்த்து விட்டு, பாராதது போல் சென்றார் ஆம்பூர் அனலேந்தி.


(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்.






Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Feb 09, 2013 1:28 pm

அடப்பாவி…மேடைல அந்த முழங்கு முழங்கினானே….இங்க கண் எதிரே நடக்குது…தெரிஞ்சும் தெரியாத மாதிரி வர்றானே…அப்ப மேடைல பேசினதெல்லாம் வெறும் கைதட்டலுக்காகத்தானா?..பேச்சு வேறு…செயல் வேறு…என்பதுதான் சிறந்த இலக்கியவாதிக்கான தன்மையா?”

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




அட்டைக்கத்தி ராஜாக்கள் Mஅட்டைக்கத்தி ராஜாக்கள் Uஅட்டைக்கத்தி ராஜாக்கள் Tஅட்டைக்கத்தி ராஜாக்கள் Hஅட்டைக்கத்தி ராஜாக்கள் Uஅட்டைக்கத்தி ராஜாக்கள் Mஅட்டைக்கத்தி ராஜாக்கள் Oஅட்டைக்கத்தி ராஜாக்கள் Hஅட்டைக்கத்தி ராஜாக்கள் Aஅட்டைக்கத்தி ராஜாக்கள் Mஅட்டைக்கத்தி ராஜாக்கள் Eஅட்டைக்கத்தி ராஜாக்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 09, 2013 1:29 pm

சூப்பர் கதை முகில்.

அட்டைகத்திகள் தான் நம் நாட்டில் அதிகம். எனக்கு இது வரை இதுபோல் சம்பவங்கள் நிகழவில்லை - நிகழ்ந்தால் தான் தெரியும் நானும் அட்டை கத்தியா என!!!




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 09, 2013 3:39 pm

நல்ல கதை. இனியவன் சொன்ன மாதிரி அட்டை கத்திகள் தான் அதிகம் நம்ம நாட்டில் .



அட்டைக்கத்தி ராஜாக்கள் Uஅட்டைக்கத்தி ராஜாக்கள் Dஅட்டைக்கத்தி ராஜாக்கள் Aஅட்டைக்கத்தி ராஜாக்கள் Yஅட்டைக்கத்தி ராஜாக்கள் Aஅட்டைக்கத்தி ராஜாக்கள் Sஅட்டைக்கத்தி ராஜாக்கள் Uஅட்டைக்கத்தி ராஜாக்கள் Dஅட்டைக்கத்தி ராஜாக்கள் Hஅட்டைக்கத்தி ராஜாக்கள் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 09, 2013 6:29 pm

யினியவன் wrote:சூப்பர் கதை முகில்.அட்டைகத்திகள் தான் நம் நாட்டில் அதிகம். எனக்கு இது வரை இதுபோல் சம்பவங்கள் நிகழவில்லை - நிகழ்ந்தால் தான் தெரியும் நானும் அட்டை கத்தியா என!!!
சினிமாவில் மட்டுமே சூப்பர் ஹீரோவை பார்க்க முடியும் அண்ணே , நிஜத்தில் அனைத்து சாமான்ய மனிதர்களும் அட்டை கத்திகள் தான் , வேறென்ன செய்ய சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 09, 2013 7:19 pm

ஊருக்கு தான் உபதேசம் வெளிவேட காரர்கள்.!
நல்ல கதை.! பகிர்விற்கு நன்றி.!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக