புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
68 Posts - 45%
heezulia
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
5 Posts - 3%
prajai
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
4 Posts - 3%
Jenila
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
2 Posts - 1%
jairam
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
1 Post - 1%
M. Priya
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
1 Post - 1%
kargan86
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
9 Posts - 4%
prajai
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
6 Posts - 3%
Jenila
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
4 Posts - 2%
Rutu
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
2 Posts - 1%
jairam
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சைவ சமயம் சில வினாவிடை Poll_c10சைவ சமயம் சில வினாவிடை Poll_m10சைவ சமயம் சில வினாவிடை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைவ சமயம் சில வினாவிடை


   
   
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Tue Jan 19, 2010 8:40 am


  1. சரியை முதலிய வழிபாடுகளின் பயன் யாது?
    சரியை நெறியில் நின்று வழிபாடுகள் செய்தவர்கள் சிவலோகத்திற்குச் சென்று அவ்வுலகத்தில் உள்ள போகங்களை அனுபவிப்பர்.

    கிரியை நெறியில் நின்றவர்கள் சிவலோக போகத்தை அனுபவிப்பதோடு, சிவபெருமானுக்கு அருகில் இருக்கும் பேற்றைப் பெறுவர்.

    யோக நெறியாளர்கள் சிவபெருமான் கொண்டுள்ள திருமேனிகளில் ஒன்றைப் பெற்று சிவலோகத்தில் சிவபோக அனுபவம் உடையவராய் வாழ்வர்.

    ஞான நெறியில் நின்றவர்கள் சிவபெருமான் திருவடியில் இரண்டறக் கலந்து நின்று நித்தியானந்தத்தை அனுபவித்து வாழ்வர்.

    இந்நான்கு பயன்களையும் முறையே சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய முத்திகள் எனக் கூறுவர்.
  2. இந்த ஒரு பிறப்பிலேயே முத்தியைப் பெற்றிவிட முடியுமா?
    சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய
    சிவபுண்ணிய நெறிகளில் உள்ளன்போடு ஒழுகி வருபவர்கள் இந்தப் பிறப்பிலேயே
    முத்தியைப் பெற்றுவிட முடியும் என்று சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
    அவ்வாறு ஒழுகி வருபவர்களின் மும்மல அழுக்கை நீக்கி அவர்களை ஞானசாகரத்தில்
    மூழ்குவித்துச் சிவானந்தம் மேலிடச் செய்து மேல் வரும் பிறப்பை ஒழித்து
    இறைவன் முத்தியைத் தந்தருள்வான் என்று சிவாகமங்கள் ஆகிய சித்தாந்தத்தில்
    தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.எனவே சிவாகம நெறியின் படி நடப்பவர்கள்
    இப்பிறப்பிலேயே முத்தியைப் பெறலாம் என்பது தெளிவு.
  3. சரியை முதலிய நெறிகளில் நின்று எவ்வாறு ஒழுகினால் இப்பிறப்பிலேயே முத்திகிட்டும்?
    சரியையில் சரியை, சரியையில் கிரியை முதலிய
    பதினாறு வகைகளில், ஞானத்தில் சரியை ஞானத்தில் கிரியை முதலிய நான்கு
    வழிகளில் நின்று ஒழுகினால் இப்பிறப்பிலேயே முத்தி கிட்டும்.
    அந் நான்கு வழிகள் வருமாறு :-
    ‘ஞானத்தில் சரியை' என்பது, திருமுறைகள் மற்றும் சைவசித்தாந்தப் பொருள்களைப்பற்றித் தக்கவர்களிடம் ‘கேட்டல்' ஆகும்.
    ‘ஞானத்தில் கிரியை' என்பது, அவற்றைக் காரண காரிய இயைபுபடுத்தி எடுத்துக்காட்டுக்களையும் கருத்தில் கொண்டு ‘சிந்தித்தல்' ஆகும்.
    ‘ஞானத்தில் யோகம்' என்பது அவற்றைச் சந்தேகமோ விபரீதமோ இன்றித் தெளிதல் ஆகும்.
    ‘ஞானத்தில் ஞானம்' என்பது, அவ்வாறு
    தெளிவடைந்த பிறகு, சிவபெருமானின் திருவருளையன்றி நமக்கு எந்தவிதச் செயலும்
    இல்லை; அறிவும் இல்லை; என்று நினைந்த ‘சிவபெருமானையே சதாகாலமும்
    நினைந்திருத்தல்' ஆகும். இதனை ‘நிட்டை கூடுதல்' என்று சாத்திரங்கள்
    பேசும்.
    சாத்திரங்களைக் கற்றலும், பதி, பசு,
    பாச உண்மைகளை ஆராய்தலும் பர ஞானம் எனப்படும். சரியை முதலிய நான்கனுள்
    ஈற்றில் உள்ள ஞானத்தை இருவகையாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒன்று
    அபரஞானம்; மற்றொன்று பரஞானம்.
    அபர ஞானம், பரஞானத்தைக் கூடுவிக்கும்;
    சாத்திரங்களைக் கற்பதோடு அமையக் கூடாது; சரியை, கிரியை, யோகங்களுக்கு
    அங்கமாகத்தான் சாத்திரங்களை ஓத வேண்டும். சரியை, கிரியை, யோகங்களின்
    மூலமும் சாத்திர ஞானத்தின் மூலமும் நாம் இறைவனிடத்து, பத்தியை (அன்பை)
    மிகுவித்துக் கொள்ள வேண்டும். அன்பின் முதிர்வில் இறைவன் குருநாதனாக வந்து
    ‘பரஞானம்' ஆகிய வியாபக உணர்வை நமக்கு உணர்த்துவான். வியாபக உணர்வின்
    மூலந்தான், இறைவனோடு இரண்டறக் கலந்து, பேரின்பத்தை அனுபவிக்க முடியும்.
    எனவே பரஞானத்திற்கு பத்தி மிகவும் இன்றியமையாதது என்பதை நாம் நன்றாக
    உணரவேண்டும்.
    இந்நால்வழிகளும் உயிர்கள் முத்தி பெறும்பொருட்டே உள்ளமையால் சைவசித்தாந்த சாத்திரங்களைக் கற்க வேண்டுவது இன்றியமையாததாகும்.

    இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,
    “கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
    கிளத்தல் என ஈர் இரண்டாம்; கிளக்கின் ஞானம்
    வீட்டை அடைந்திடுவர்" (276)

    என்று அருணந்திசிவம் அருளிச் செய்துள்ளார்.

    ‘ஞானம் கிளக்கின்' என்பது ஞானத்தில் சரியை
    என விரித்துக் சுறுமிடத்து என்பது பொருள். ‘நிட்டை கிளத்தல்' என்பது,
    ‘நிட்டை கூடுதல்' ஆகும்.
  4. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?
    குளித்துத் தூய்மையான ஆடை அணிந்து, திருநீறு அணிந்து, திருமுறைகளை ஓதிச் சிவ சிந்தனையுடன் செல்லல் வேண்டும்.
  5. திருக்கோயிலுக்கு அண்மையில் சென்றவுடன் யாது செய்தல் வேண்டும்?
    தூல இலிங்கமாகிய திருக்கோபுரத்தை வழிபட்டு, இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து இறைவன் புகழ்பாடிக் கொண்டு உள்ளே புகுதல் வேண்டும்.
  6. திருக்கோயிலுக்கு உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?
    பலி பீடத்துக்கு முன் வீழ்ந்து வணங்க வேண்டும்.
  7. கிழக்கு நோக்கிய திருக்கோயிலிலும் மேற்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?
    வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
  8. தெற்கு நோக்கிய திருக்கோயிலிலும் வடக்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?
    கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
  9. எந்தத் திக்குகளில் கால் நீட்டி வணங்கக் கூடாது?
    கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்கல் ஆகாது.
  10. ஆடவர்கள் எப்படி வணங்க வேண்டும்?
    எட்டு உறுப்புக்கள் நிலம் தோய வணங்க வேண்டும்.
  11. எட்டு உறுப்பு வணக்கமாவது யாது?
    தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.
  12. பெண்டிர் எப்படி வணங்க வேண்டும்?
    ஐந்து உறுப்புகள் நிலம் தோய வணங்க வேண்டும்.
  13. ஐந்து உறுப்பு வணக்கமாவது யாது?
    தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.
  14. எத்தனை முறை விழுந்து வணங்க வேண்டும்?
    மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை விழுந்து வணங்க வேண்டும். ஒரு முறை, இருமுறை வணங்கலாகாது.
  15. விழுந்து வணங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?
    திருக்கோயில் திருச்சுற்றினை வலம் வரல் வேண்டும்.
  16. எவ்வாறு வலம் வரல் வேண்டும்?
    இரண்டு கைகளையும் தலையிலாவது, மார்பிலாவது
    குவித்து வைத்து சிவப் பெயர்களை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல
    வைத்து வலம் வரல் வேண்டும்
  17. எத்தனை முறை வலம் வரல் வேண்டும்?
    மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை வலம் வர வேண்டும்.
  18. திருக்கோயிலில் எந்த முறையாக வழிபாடு செய்ய வேண்டும்?
    முதலில் விநாயகரை வழிபட்டுப் பின்
    பெருமானையும் உமையம்மையையும் வழிபாடு செய்து, திருநீறு வாங்கிக் கொண்டு
    அதன்பின் அம்பலவாணர், தென்முகப் பரமன் (தக்ஷ¢ணாமூர்த்தி), சேயிடைச்
    செல்வர், பிறைமுடிப் பெருமான், முருகப் பெருமான் முதலிய திருமேனிகளை வழிபட
    வேண்டும்.
  19. விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?
    முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும்
    நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக் காதை
    வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல்
    வேண்டும்.
  20. திருக்கோயிலில் வழிபாடு செய்யும்போது என்ன செய்ய வேண்டும்?
    இரண்டு கைகளையும் தலையிலோ, மார்பிலோ குவித்துக் கொண்டு மனம் கசிந்துருக வழிபாடு செய்தல் வேண்டும்.
  21. எந்தக் காலத்தில் வழிபாடு செய்தல் கூடாது?
    திருமஞ்சனம், அமுது செய்வித்தல் காலங்களில் வழிபாடு செய்தல் கூடாது.
  22. திருமஞ்சன( அபிடேக ) நேரத்தில் திருச்சுற்றினை வலம் வரலாமா?
    உள் திருச்சுற்றினை வலம் வரல் ஆகாது.
    வந்தால் இறைவர் திருமஞ்சன நீர் செல்லும் பாதையைக் கடவாமல் அப்புனித நீரை
    மிதியாமல் முழுதாகாத பிறை வட்டம் போன்று வலம் வர வேண்டும்.
  23. வழிபாடு முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
    சண்டேசுரர் கோயிலை அடைந்து கும்பிட்டு,
    இறைவர் பிரசாதம் கோயிலிலிருந்து எடுத்துச் செல்ல இருப்பின் அவர் அனுமதி
    பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனின் கைகளைத் தடவி ஏதும் கொண்டு
    செல்லவில்லையெனத் தெரிவித்துச் சிவவழிபாட்டுப் பலனைத் தரும்படி வேண்ட
    வேண்டும்.
  24. ஏன் சண்டேசர் வழிபாட்டில் இவ்வாறு செய்யல் வேண்டும்?
    சண்டேசரே இறைவனுடைய உண்டதும் உடுப்பதுமான
    அனைத்து பிரசாதங்களுக்கும் அதிபதி. எனவே அவரது அனுமதி இன்றி எந்தப்
    பிரசாதத்தையும் சிவாலயத்திலிருந்து எடுத்து வருதல் குற்றம்.
  25. சண்டேசர் வழிபாட்டின் பின் யாது செய்தல் வேண்டும்?
    கொடிமரம் முன்னர்ச் சென்று விழுந்து வணங்கி திருவைந்தெழுத்தை இயன்றவரை கணித்து எழுந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
  26. திருக்கோயிலில் செய்யத் தகாதன யாவை?
    ஒழுக்கம் இல்லாது போதல், கால் கழுவாது
    போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கடித்தல், மூக்கு நீர் சிந்துதல்,
    ஆசனத்து இருத்தல், மயிர் போதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை
    கொள்ளல், தலையில் ஆடை தரித்துக் கொள்ளுதல், தோளிலே துண்டு இட்டுக்
    கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், காலணி இட்டுக் கொள்ளுதல், பூசித்து
    கழித்த பொருள்களைக் கடத்தல், பூசித்து கழித்த பொருள்களை மிதித்தல், கொடி
    மரம், பலி பீடம், திருமேனி என்னும் இவைகளின் நிழலை மித்தல், வீண் வார்த்தை
    பேசுதல், இறைவருக்கும் பலி பீடத்துக்கும் குறுக்கே போதல் முதலியவைகளாம்.
  27. சிவஸ்தலங்களைத் தரிசனஞ் செய்ய வேண்டிய முறைமை யெப்படி?
    விநாயகமூர்த்தி, மூலலிங்கம்,
    சபாபதிமூர்த்தம், சோமாஸ்கந்தமூர்த்தம், பரிவார தேவர்கள், மூலஸ்தானம்,
    அம்மையார், சண்டேசுரர், பயிரவர் என்னும் மூர்த்தங்களைக் கிரமமாகத்
    தரிசிக்கவேண்டும். முதல் விநாயகமூர்த்தியைத் தரிசித்தவுடன்
    நந்திதேவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு மூலலிங்க முதலாகத் தரிசிக்க
    வேண்டும்.
  28. பரிவார தேவர்கள் யார்?
    இருபத்தைந்து மூர்த்தங்களில் சபாபதியும்
    சோமாஸ்கந்தமூர்த்தமுந் தவிரச் சந்திரசேகரர் முதலிய இருபத்து மூன்று
    மூர்த்தமுமாம். பிரமதேவன், விஷ்ணு, துர்க்கை, சுப்பிரமணியர், வீரபத்திரர்,
    நவக்கிரகங்கள், வாமாதி அஷ்ட சத்திகள் பரமேசுவரர்களுமாம்.
  29. எந்தப்புறத்திலிருந்து தரிசிக்க வேண்டும்?
    கிழக்கு நோக்கிய சந்நிதியானால்
    சிவபெருமானுடைய வலப்பக்கமாகத் தென்புறத்தில் நின்று தரிசிக்க வேண்டும்.
    தெற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு வலப்பாகமாக மேற்புறத்தில்
    நின்றும், மேற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு இடப்பாகமாகத்
    தென்புறத்தில் நின்றும், வடக்குநோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு
    இடப்பாகமாக மேற்புறத்தில் நின்றும் தரிசிக்கவேண்டும்.
  30. துவஜஸ்தம்பத்தில் பணியவேண்டிய கிரமமெப்படி?
    கிழக்கு நோக்கிய சந்நிதியானால்
    பலிபீடத்தின் அக்கினி மூலைக்கு எதிராகச் சமீபத்தில் சிரசுவைத்து மார்பு
    பூமியிலேபடும்படி இரண்டு கைகளையும் வடக்காக நேரே நீட்டிப் பின்பு
    தோள்களிலே மண்படும்படி இரண்டு கைகளையும் தெற்கே நீட்டி இரண்டு காதுகளையும்
    பூமியிலே பொருந்தச் செய்து அஷ்டாங்கவந்தனஞ் செய்யவேண்டும். கைகளைத் தெற்கே
    நீட்டும்போது முன்னதாக வலக்கை நீட்டிப் பின்பு இடக்கை நீட்டவேண்டும். காது
    மண்ணில் பொருந்தச் செய்யும்போது முந்தி வலக்காதும் பின்பு இடக்காதும்
    பொருந்தவேண்டும். தெற்கு நோக்கிய சந்நிதியானாலும் மேற்கு நோக்கிய
    சந்நிதியானாலும் பலிபீடத்தின் நிருதிமூலையில் முன்சொன்ன முறைமைப்படியே
    சிரசுவைத்து நமஸ்காரம் செய்தல்வேண்டும். வடக்கு நோக்கிய சந்நிதியானால்
    பலிபீடத்தின் வாயுமூலையில் சிரசுவைத்துக் காலை மேற்காக நீட்டி
    முன்சொன்னப்படிப் பணியவேண்டும். ஆனால் பகல் பதினைந்து நாழிகைக்கு மேற்பட்ட
    காலத்தில் தரிசிக்கப்போனால் மேற்கே காலை நீட்டக்கூடாமையினாலே அஷ்டாங்க
    பஞ்சாங்கத்துடன் பணியாமல் நின்றபடி இரண்டு கைகளையுங்குவித்து உச்சியின்
    மேல் வைததுக்கொண்டு தரிசிக்க வேண்டும்.
  31. பகல் பதினைந்து நாழிகைக்குமேல் தரிசனம் செய்வதற்குக் காரணமென்ன?
    சூரியகிரகணம், மகரசங்கராந்தி முதலாகிய புண்ணிய காலங்கள் பகல் பதினைந்து நாழிகைக்குமேல் வருமானால் தரிசிக்கப்போக வேண்டும்.
  32. சூரிய அஸ்தமனத்தின்பின் தரிசிக்கப்போனால் எப்படிப் பணியவேண்டும்.
    பகல் பதினைந்து நாழிகைக்குமேல் சூரிய
    அஸ்தமனமாவதற்கு முன்வரையில், அஷ்டாங்கத்துடன் பணியலாகாதேயன்றி மற்றக்
    காலங்களிலே யெல்லாம் அஷ்டாங்கத்துடனே தான் பணியவேண்டும்.
  33. அஷ்டாங்க பஞ்சாங்க மென்பதை யல்லாமல் வேறு விதமான நமஸ்காரங்களுமுண்டோ?
    ஏகாங்கம், துவிதாங்கம், திரிவிதாங்கம் என மூன்றுமாம்.
  34. மேற்கூறிய நமஸ்காரங்களை முறையே விளக்குக?
    சிரசினால் மாத்திரம் வணங்குவது
    ஏகாங்கமாம். சிரசின் மேல் வலக்கரத்தைக் குவித்து வணங்குவது துவிதாங்கமாம்.
    இரண்டு கைகளையும் சிரசின்மேல் குவித்து வணங்குவது திரிவிதாங்கமாம்.
    பஞ்சாங்கமாவது சிரமும், இரண்டு வைகளும், இரண்டு முழந்தாள்களும்
    பூமியின்மேல் படும்படி வணங்குதலாம். அஷ்டாங்கமாவது சிரம், இரண்டு கைகள்,
    இரண்டு முழந்தாள்கள், இரண்டு காதுகள், நெற்றி இவைகள் பூமியிற்படிய
    வணங்குதலாம்.
  35. பிரதக்ஷணம் செய்யவேண்டிய முறைமை யெப்படி?
    காமியத்தை விரும்பினர்வள் வலமாகவும்,
    மோக்ஷத்தை விரும்பினவர்கள் இடமாகவும், காமியத்தையும், மோக்ஷத்தையும்
    விரும்பினவர்கள் வலமிடமாகவும் பூரணகர்பபவதி எண்ணெய் நிறைந்த குடத்தைச்
    சிரசின்மேல் வைத்துக்கொண்டு காலில் விலங்கு பூட்டப்பட்டவளாய் நடப்பதுபோல
    அதிக மெதுவாய்ப் பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். அப்போது பரமசிவனது பாதங்களைச்
    சிந்தித்துக்கொண்டும செபவடங் கையிலே வைத்துக்கொண்டும் பஞ்சாக்ஷரசெபஞ்
    செய்து கொண்டும் இரண்டு கைகளையும் மார்புக்குச்சரியாக வைத்துக்கொண்டும்
    வரவேண்டும்.
  36. சிவசந்நிதியில் எத்தனை பிரதக்ஷணம் செய்ய வேண்டும்?
    மூன்று அல்லது ஏழு பிரதக்ஷணஞ் செய்ய வேண்டும். இந்தத் தொகைக்கு மேற்படவும் செய்யலாம்.
  37. எந்தக் காலங்களில் ஆலயத்துக்குப் போக வேண்டும்?
    காலை, உச்சி, அந்தி யென்னும் திரிசந்தி காலங்களிலும் போகலாம்.
  38. இந்த மூன்று கால மல்லாத காலத்தில் தரிசனஞ்செய்ய ஆலயத்துக்குப் போகலாகாதோ?
    கிரகண புண்ணியகாலம், சங்கராந்தி புண்ணியகாலம் நேரிடுமானால் தரிசனஞ்செய்யப் போகலாம்.
  39. எந்த ஆவரணங்களில் பிரதக்ஷணம் செய்ய வேண்டும்?
    முதலாவரணந் (கருவறை) தவிர மற்ற ஆவணங்களில் பிரதக்ஷணஞ் செய்யலாம்.
  40. ஆவரணங்களின் முறைமை யெப்படி?
    சிவலிங்கப் பெருமானைக்
    கெர்ப்பக்கிரகத்தில் சூழ்ந்து வரத்தக்கதாக இருப்பதே முதலாவரணம். மற்றைய
    ஒன்றின்பின்னொன்றாய் இரண்டு முதல் ஐந்து ஆவரணங்களாம். அதற்கப்பால்
    ஊரின்புலமே ஆறா மாவரணம்.
    இப்படி வரும் ஆவரணங்களில் ஸ்தூபி
    நிழலாவது துவஜஸ்தம்ப நிழலாவது நேரிடுவதாயிருந்தால் அந்த ஆவரணத்தைவிட்டு
    அப்புறத்திலிருக்கும் ஆவரணத்தில் பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். சுவாமி
    உத்சவங்கொண்டருளுகின்ற காலத்தில் சுவாமியின் பின்வரும்போது மேற்சொன்ன
    நிழலிருக்குமானாலும் குற்றமில்லை.
  41. பிரதக்ஷணம் இத்தனை நாழிகை செய்ய வேண்டு மென்கிற நியதியுண்டோ?
    ஒரு ஜாமப் பொழுதளவு செய்யவேண்டும்; அவ்வாறு செய்தால் ஜெனனமரணம் நீங்கிச் சிவலோகம் அடைவார்கள்.
  42. சோமசூக்தப் பிரதக்ஷணமென்பது யாது?
    அதாவது பிரதக்ஷணஞ்செய்யத் தொடங்கும்போது
    நந்திதேவரைத் தரிசித்துக்கொண்டு அங்கிருந்தபடியே யிடமாகச் சென்று சண்டேச
    நாயனாரைத் தரிசித்துச் சென்ற வழியே திரும்பிவந்து மறுபடியும் நந்திதேவரைத்
    தரிசித்து அங்கிருந்து வலமாகச் சென்று சண்டேச நாயனாரைத் தரிசித்துத்
    திரும்பிவந்து நந்திதேவரைத் தரிசித்துப் பின்பு சிவலிங்க தரிசனஞ் செய்து
    பணியவேண்டும். இவ்வாறு ஒரு பிரதக்ஷணஞ் செய்தால் அனந்தம் பலனுண்டு.
    பிரிந்து வருகின்றபடியே பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். இந்தப் பிரதக்ஷணம்
    பிரதோஷ காலத்திற் செய்தால் விசேஷமான பலனுண்டு.
  43. பிரதோஷ காலமாவது எது?
    பகல் இருபத்தாறேகால் நாழிகைக்கு மேற்பட்ட
    மூன்றே முக்கால் நாழிகையளவும் சூரியாஸ்தமனமான மூன்றே முக்கால் நாழிகைக்கு
    உட்பட்டதுமான காலம் பிரதோஷகாலம். இக்காலத்திற் சிவதரிசனஞ் செய்வது முக்கிய
    மானதால் சிவனடியார்களாயுள்ளாரியவரும் அவசியம் சிவதரிசனம் செய்யவேண்டும்.
  44. பிரதோஷமென்பதற்குப் பொருளென்ன?
    இராத்திரியின் முன் என்பதாகும்.
    சம்ஸ்கிருதத்தில் ரசனி முகமென்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு
    சொல்லப்படுகின்ற பிரதோஷகாலம் திரியோதசி திதியிற் சிறந்தது. பிரதோஷ
    விரதமும் இந்தத் திதியிலனுஷ்டிக்க வேண்டும்.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 19, 2010 9:14 am

இளவல் திரு சொரூபனுக்கு வணக்கம்
அருமையான கட்டுரை. சிவ நெறிச் செல்வர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை. மனமார்ந்த பாராட்டுக்கள், தொடரட்டும் உங்கள் பணி
அன்புடன்
நந்திதா

N.R.Ranganathan
N.R.Ranganathan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 09/02/2013

PostN.R.Ranganathan Sat Feb 09, 2013 7:00 am

நல்ல பதிவு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 09, 2013 9:24 am

சிறந்த பதிவு!



சைவ சமயம் சில வினாவிடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக