புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
98 Posts - 49%
heezulia
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
7 Posts - 4%
prajai
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
2 Posts - 1%
cordiac
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
225 Posts - 52%
heezulia
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
18 Posts - 4%
prajai
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உயிர் உருவான கதை Poll_c10உயிர் உருவான கதை Poll_m10உயிர் உருவான கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் உருவான கதை


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 06, 2013 9:09 am

பூமியில் உயிர் உருவானது எப்படி? என்று மனிதகுலம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இத்தகைய தொடக்ககால புதிர்களுக்கு விடைகாணும் ஆசை, மனிதர் அனைவருக்கும் உள்ளது. தொழில் நுட்ப முன்னேற்றம் மிகுந்துள்ள இந்த காலக்கட்டம் உயிரின தோற்றத்தை தெளியவைக்கும் எனபலர் எண்ணுகின்றனர். ஆனால் எவ்வளவுக்கு தொழில் நுட்ப ரீதியில் முன்னேறுகிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக பூமியின் தொடக்காலம் பற்றியகேள்விகள் ஆழமாகியுள்ளதோடு,அதை ஒட்டிய பல்வேறு திசைகளும் வெளிப்பட்டுள்ளன.கடந்த ஐம்பது ஆண்டுகளில், பூமி தற்போது உள்ள நிலையை அடைவதற்கு முன், என்ன வடிவத்தில் இருந்தது என்பதுபற்றிய நிலைப்பாடுகள் பல மாறியுள்ளன.ரஷ்ய அறிவியலாளரான அலெக்சாண்டர் ஒப்பாரின் 1924-இல் வெளியிட்ட தனது ஆய்வுக்கட்டுரையில், கார்பன் மூலக்கூறுகள் நிறைந்த பூமியின் நீர், வளி மண்டலத்தில் ஏற்பட்ட மின்னல் ஆகியவற்றிலிருந்து உருவான குழம்பிலிருந்து, உலகின் முதல் உயிர் உருக்கள் தோன்றின என்றார். மிகவும் பிரபலமடைந்தத இக்கோட்பாட்டின் சாத்தியக்கூற்றை ஆராய 1953 இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெரால்ட் யூரேயின் மாணவரான ஸ்டான்லி மில்லர் ஈடுபட்டார். பூமி உருவாவதற்கு முன்னர் இவ்வுலகம் இருந்த நிலைமையை செயற்கையாக உருவாக்கி, அதில் உண்டாகும் மாற்றங்களைஆராய்வதே அவரது நோக்கம். மூடிய தெர்மா குடுவை போன்ற அமைப்பில் நீரையும் வாயுவையும் அடைத்தார். வளி மண்டலத்தில் ஏற்பட்ட மின்னலுக்கு பதிலாக, அதனுள்மின்சாரத்தை செலுத்தினார். இரண்டு வாரங்களுக்கு பிறகு,அதிலிருந்த நீர் பழுப்பு வண்ணமடைந்து, புரோதத்தை உருவாக்கக்கூடிய அமினோ அமிலம் தெர்மா குடுவையில் படிந்திருந்ததை அவர் கண்டார். தெளிவுப்படுத்தி எடுக்கப்பட்ட கலவையில் உயிர்களின் அடிப்படை இயக்கத்திற்கு இன்றியமையாத பல மூலக்கூறுகளையும் கண்டுடறிந்தார். மில்லரின் இந்த சோதனை மூலம், தொன்மையான நீர்நிலைகளின் கரிம மூலக்கூறுகளாலான குழம்பிலிருந்து உயிர் உருவானது என்ற கண்டுபிடிப்பு, பூமி கோளில்ஏற்பட்ட இயற்கையான மாற்றங்களினால் உயிர்கள் தோன்றியதற்கான ஆதாரமாக புகழப்பட்டது.
-
2)அந்தாட்டிக்கா பனிப்பாறைகளின் கீழே புதையுண்ட நிலையில் பாரிய மலைத்தொடர்
அல்ப்ஸ் மலைத் தொடர் அளவான பாரிய மலைச் சிகரங்கள் அந்தாட்டிக்கா பனிப் பாறைகளின் அடியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புவியீர்ப்பு உணர்கருவிகள்,”ராடர் கருவிகள்”என்பனவற்றைப் பயன்படுத்தி மேற்படி பனிப்பாறையின் கீழுள்ள மலைத் தொடர் தொடர்பான வரைபடத்தை நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். மேற்படிஆய்வில் பங்கேற்ற பிரித்தானிய அந்தாட்டிக்கா ஆராய்ச்சி நிறுவனத்தின் பூகற்பவியல் ஆராய்ச்சியாளரான போஸ்டோ பெர்ராசியோலி இது தொடர்பில்”ரொய்ட்டர்”செய்தி ஸ்தாபனத்திற்கு அளித்த பேட்டியில், “இந்த மலைத் தொடரானது அல்ப்ஸ் மலைத் தொடர் அளவில் இருந்தது மட்டுமல்லாமல்,உயர்ந்த சிகரங்களையும் பள்ளத்தாக்குகளையும் கொண்டுள்ளது.இந்த மலை,4-கிலோமீற்றர்(2.5-மைல்)உயரமான பனிப்பாறையின் கீழ் புதையுண்டுள்ளது”என்று கூறினார்.
-
3)பால்வீதியில் 40 ஆயிரம் கோள்களில் உயிரினம் இருக்கிறது; விஞ்ஞானிகள் தகவல்
அமெரிக்காவில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பால்வீதியில் உள்ள கோள்களில் உயிரினங்கள்இருக்கிறதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்காக விஞ்ஞான டன்கன் பார்கன் ஒரு கம்ப்ïட்டர் புரோகிராமை தாயாரித்து ஆய்வு செய்தார். இதில் பால்வீதிகளில் உள்ள 37 ஆயிரத்து 964 கோள்களில் உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்தது.இது பற்றி டன்கன் போர் கன் கூறியதாவது:-நான் உருவாக்கிய கம்ப்ïட்டர் புரோகி ராம் மூலம் 330 கோள் களில் தண்ணீர், தாதுப் பொருட்கள், வெப்பநிலை போன்றதகவல்களை ஒப்பிட்டு பார்த்து அவை எந்த விகிதத்தில் அமைந் தால் உயிரினங்கள் வாழ ஏற்றவையாக இருக்கும் என்பதை கண்டறிந்தேன். அதன் பின் இந்த விகிதத்தை கொண்டு பால்வீதியில் உள்ள கோள்களில் உயிரினங்கள் வாழ ஏற்றவையாக இருக் கின்றனவா என்பது கண்டு பிடிக்கப்பட்டது. பிற கோள்களிலுள்ள உயிரினங்கள் அமீபா போன்ற நுண்ணுயிராக இருக்காமல் வளர்ச்சி அடைந்தஉயிரினங்களாக இருக்கும். பிற கிரகத்திலுள்ள உயிரினங்களை சந்திக்க 300 முதல் 400 ஆண்டுகள் ஆகும். இந்த பால் வீதியில் 361 அறிவுக்கூர்மையான நாகரீகமடைந்த உயிரினங் கள் இருக்கிறது. அவற்றை நம்மால் ஆள இயலாது. நாங்கள் ஆராய்ந்தகோள்கள் நம்மை விட மிகப்பழமையானவையாக இருப்பதால் அவை நம் முடைய நாகரீகத்தை விட முன்னேற்றமடைந்ததாக இருக்கும்.
-
4)9000 வருடங்களுக்கு முற்பட்ட மனித எச்சங்கள்
இஸ்ரேலிய கடற்கரைக்கு அப்பால் மீட்கப்பட்ட 9000 வருடங்கள் பழைமையான தாயொருவரதும் அவரது குழந்தையினதும் எச்சங்களிலிருந்து, அவர்களுக்கு காசநோய் பாதிப்பு இருந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஹபியா எனும் அண்மையிலிருந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய பண்டைய நியோலிதிக் கிராமமான அலிட்யாமிலிருந்தே இந்த தாயினதும் குழந்தையினதும் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. 500,000 வருடங்களுக்கு முன்பே காசநோய் இருந்ததாக வேறு சிலஆராய்ச்சியாளர்கள் உரிமை கோரி வருகின்ற போதும், அது தொடர்பான உறுதியான ஆதாரம் மேற்படி இஸ்ரேலிய எச்சங்களில் கிடைத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
-
5)சூரிய சக்தியால் இயங்கும்அதிசய விமானம்
சூரிய சக்தியால் இயங்கும் கார்கள் ஏற்கனவே வெளி வந்துவிட்டன. இப்போது சூரிய சக்தியால் இயங்கும் விமானங்களும் பறக்கத் தொடங்கி விட்டன.இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் `செபிர்-6′ என்ற புதிய ரக குட்டி விமானத்தை உருவாக்கிஇருக்கிறார்கள்.அமெரிக்க ராணுவத்தின் உளவுப் பிரிவுக்காக இந்த சூரிய சக்தி விமானம் உரு வாக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் அரிசோனா பகுதியில்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 06, 2013 9:18 am

இந்த சூரிய சக்தி விமானத்தின் சோதனை ஓட்டம் நடந் தது.இந்த ஆள் இல்லாத குட்டி விமானம் 83 மணி 37 நிமிட நேரம் இரவு பகலாக தொடர்ச்சியாக பறந்து உலக சாதனை படைத்துள்ளது.30 கிலோ எடை உள்ள இந்த குட்டி விமானம் 60 ஆயிரம் அடி உயரத்தில் பறக் கும் ஆற்றல்கொண்டது. பகல் நேரத்தில் சூரிய சக்தியை பயன்படுத்தி பேட்டரி ரீசார்ஜ் செய்து கொண்டு இரவு நேரத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளும்.
-
6)சூரியத் தொகுதி எல்லை ஆய்வுக்கான முதலாவது விண்கலம் வெற்றிகரமாக பயணம்
நாசாவின் “ஐ.பி.ஈ.எக்ஸ்’ விண்கலமானது பசுபிக் சமுத்திரத்திலுள்ள கவாஜலெயின் அதேரஓல் எனும் இடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.47 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. மேற்படி விண்கலமானது சூரியத் தொகுதியின் எல்லைக்கு அப்பால் என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பான தரவுகளைச் சேகரித்து பூமிக்கு அனுப்பவுள்ளது. இத்தகைய ஆய்வு முயற்சிக்காக விண்கலமொன்று ஏவப்படுவது இதுவே முதல் தடவையாகும். “ஐ.பி.ஈ.எக்ஸ்’ என்பது, நட்சத்திரங்களுக்கிடையிலானஎல்லை ஆய்வு சாதனம் என்பதன்சுருக்கப் பெயராகும். நட்சத்திரங்களுக்கிடையிலானஎல்லையில் நிலவும் குளிர்மையான வாயுக்கள் தொடர்பில் இந்த சாதனம் ஆய்வு செய்யவுள்ளது. மேற்படி விண்கலமானது பிற்பகல் 1.53 மணியளவில் அதனை ஏவப்பயன்பட்ட பெகாஸஸ் ஏவுகணையிலிருந்து தனிப்படுத்தப்பட்டு, தனது சுய உபகரணமுறைக் கட்டுப்பாட்டில் செயற்பட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 45 நாள் பரிசோதனைக் காலக் கட்டத்தின் பிற்பாடு, தனது இரு வருட கால விண்வெளி ஆய்வுப் பயணத்தை மேற்படி விண்கலம் ஆரம்பிக்கும் என கிறீன்பெல்ட்டிலுள்ள நாசாவின் கோட்டார்ட் ஸ்பேஸ்பிளைட் நிலையத்தின் முகாமையாளர் கிரெக் பிரெஸியர் தெரிவித்தார். மேற்படி விண்கலமானது சக்தியேற்றம் பெற்ற உயர்வேகஅணுத்துணிக்கைகளின் விளைவுகளை அடிப்படையாக வைத்து, சூரியத்தொகுதிக்கு அப்பாலுள்ள நிலைமை தொடர்பானபிரதிமை ஒன்றை தயாரிக்கவுள்ளது. இந்த பிரதிமையானது நுண்ணிய எண்ணற்ற வண்ணப்புள்ளிகளால் உருவாக்கப்படவுள்ளது. சூரியனிலிருந்து அனைத்து திசைகளிலும் மணிக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் வீசிய சூரியப் புயலொன்றையடுத்தே, இந்த சூரியத் தொகுதி எல்லைப் பகுதி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி சூரியத் தொகுதி எல்லைப் பகுதியிலிருந்து அபாயமிக்க பிரபஞ்சக் கதிர்கள் பூமியை சுற்றியுள்ள விண்வெளியைத் தாக்கக் கூடிய வாய்ப்புள்ளதால் இது தொடர்பான ஆய்வு அவசியம் என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். “”இந்த ஆய்வின் முடிவில் ஆச்சரியமொன்று காத்திருக்கிறது என்பதை எம்மால் அறிய முடிகிறது” என“ஐ.பி.ஈ,எக்ஸ்’ விண்கலத்தின் பிரதான ஆய்வாளர் டேவிட் மக்கொமஸ் தெரிவித்தார்.
-
7)தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்!! ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!!
தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் ஏன் இப்படிக்கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, Microwave Oven எனப்படும் நுண்ணலை அடுப்புகளின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
சாதாரண அடுப்பில் சமைக்கும்போது, முதலில் வெப்பம் பாத்திரத்தை அடைந்து, பின்னர் அதனுள்ளிருக்கும் பதார்த்தத்தினுள் நுழைகிறது. அதாவது, சாதாரண வெப்பக்கடத்தல் முறை மூலம் அங்கு சமையல் நடைபெறுகிறது. நுண்ணலை அடுப்பின் அமைப்பு முற்றிலும் வேறுமாதிரியானது. சாதாரண Electric Ovenகளில் வெப்பத்தை உண்டாக்க heaterகள் இருக்கும்.ஆனால்,அப்படியொருஅமைப்பே இல்லாதபோது Microwave Oven களில் எவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படுகிறது? இந்த விந்தையை நுண்ணலைதான் செய்கிறது.மின்சாரத்தின் மூலம் சக்திவாய்ந்த மைக்ரோ அலைகள் Microwave Oven இனுள் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மைக்ரோ அலைகள் சாதாரணமாக, செக்கனுக்கு 45 கோடி அதிர்வுகள் என்ற எண்ணிக்கையில் இருக்கும்.இந்த நுண்ணலைகள், சூடாக்குவதற்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தத்தின் மூலக்கூறுகளை அசைத்து – அவற்றை அதிர்வுறச் செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று உராய, வெப்பம் பிறப்பிக்கப்படுகிறது. இந்தச் செயற்பாடு பதார்த்தத்தின் சகல பாகங்களிலும் நிகழ்வதால் பதார்த்தம் முழுவதும் ஒரே நேரத்தில் விரைவாகச் சூடேறிவிடுகிறது.podiyan.commicro மைக்ரோ அலைகளினால் அசைக்கக்கூடிய மூலக்கூறுகளைக்கொண்ட பொருட்களை மட்டுமே Microwave Ovenமூலம் சூடாக்க இயலும். பீங்கான், கண்ணடி போன்றவற்றின் மூலக்கூறுகளை மைக்ரோ – வேவினால் அசைக்க இயலாது.எனவே இவற்றினால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில்வைத்துச் சமைத்தால் பாத்திரம் சூடேறாது – ஆனால் பதார்த்தம் சமைக்கப்பட்டுவிடும். இதனால் பாத்திரத்தைச் சூடாக்கச் செலவழிக்கப்படவேண்டிய சக்தி மீதமாகிறது. உலோகப் பாத்திரங்களை Microwave Oven இனுள் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், உலோகம் — மின்காந்த அலைகளை,அதாவது மைக்ரோவேவை தன்னுள்ஊடுருவ அனுமதிக்காது.இதெல்லாம் சரி, தண்ணீரை Microwave Oven இல் சூடேற்றினால் அப்படி என்ன தகாத விளைவு நேரும்?சாதாரண அடுப்பில் தண்ணீரைச் சூடக்கினால், பாத்திரத்தின் அடியில் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாத்திரத்தின் உள்ளே வாயுக்குமிழிகள் உருவாகி, அவை மெல்ல மேலெழுந்து – மேற்பரப்பை அடைந்தவுடன் வெடித்து நீராவியையும் வெளியேற்றும். இந்தச் செயற்பாடு, தண்ணீர் அதிகமாகவெப்பமாவதைத் தடுத்து, தண்ணீரின் கொதி நிலையான 100செல்ஸியஸ் அளவிலேயே தொடர்ந்து பேண உதவுகிறது.இவ்வாறான நிகழ்வுMicrowave Oven இல் ஏற்படுவதில்லை. Microwave Oven இனுள் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டு தண்ணீர் சூடாகும். ஆனால், வெப்பத்தின் சீர்ப் பரம்பலால் வாயுக் குமிழிகள்ஏற்படுவதில்லை.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 06, 2013 9:26 am

நீராவி வெளியேறாததால் தண்ணீரின் சூடு அதன் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவையும் கடக்கிறது. இந்த நிலை, Super Heat நிலை என்று அழைக்கப்படுகிறது.இந்த நிலையில் தூசி போன்ற சிறு பொருள் தண்ணீரில் புகுமானால் அது வாயுக் குமிழிகள் உண்டாகும் வாய்ப்பைத்தோற்றுவித்துவிடும். ஏற்கனவே மைக்ரோ அலைகளின் தூண்டலால் உராய்வுநிலையில் இருக்கும் தண்ணீர் மூலக்கூறுகள் – வாயுக் குமிழிகளை உயர் அழுத்தத்துடன் வெளியேற்ற – அவை வெடித்துச்சிதறி அடர்த்தியான நீராவியை உருவாக்கும். இந்த நிலையில் மின்கசிவு, சடுதியான வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.எனவேதான், Microwave Oven களில் தண்ணீரைச் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
-
அறிவுலகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக