புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
6 Posts - 18%
i6appar
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
1 Post - 3%
Jenila
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
88 Posts - 35%
i6appar
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
2 Posts - 1%
Jenila
தாய் மனசு….தங்க மனசு Poll_c10தாய் மனசு….தங்க மனசு Poll_m10தாய் மனசு….தங்க மனசு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மனசு….தங்க மனசு


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Fri Feb 01, 2013 1:37 pm

தாய் மனசு….தங்க மனசு
(சிறுகதை)

கொதிக்கும் எண்ணையில் வெடிக்கும் கடுகாய் பொரிந்து கொண்டிருந்தாள் பத்மா.

'அப்பவும் நெனச்சேன்….இப்படி ஏதாச்சும் இருக்கும்னு…இதுக்கு முன்னாடியெல்லாம் நான் சண்டை போட்டுக்கிட்டு…கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டா…ரெண்டு மூணு நாள்ல ஓடோடி வந்து என்னையச் சமாதானப்படுத்தி…திருப்பிக் கூட்டிக்கிட்டுப் போன மனுஷன்…இந்தத் தடவை பதினஞ்சு நாளாகியும் வராதப்பவே நான் சந்தேகப்பட்டேன்…”

'அடி சும்மா பொரியாதடி…ஏன் இந்தத் தடவ நீ போயி சமாதானப்படுத்தறது…அது மட்டும் செய்ய மாட்டே…அப்படித்தானெ?” பத்மாவின் தாயார் லட்சுமி மருமகனுக்காய் பரிந்து பேசினாள்.

'நீ சும்மா இரும்மா…உனக்கு ஒண்ணும் தெரியாது…எல்லாம் அந்த மாமியார் கெழவி பண்ற வேலை…” பத்மா ஆவேசமாய்க் கத்திச் சொல்ல,

'க்கும்..” என்று முகவாய்க் கட்டையை தோளில் இடித்துப் பழிப்புக் காட்டினாள் லட்சுமி.

'நம்ம பொரிக்கடை சரசு சொல்லித்தான் எனக்கே தெரியும்…இப்ப அந்த மாமியார்க் கெழவி கிராமத்திலிருந்து வந்து எங்க வீட்டுலதான் இருக்குதாம்…நான் சண்டை போட்டுட்டு வந்துட்ட தகவல் தெரிஞ்சதும்…உடனே பொறப்பட்டு வந்து எம் புருஷன்கூட ஒட்டிக்கிச்சாம்”

'அது செரி…மவனூட்டுக்கு ஆத்தாக்காரி வந்திருக்கா…அதிலென்ன தப்பு?”

'நான் இருக்கறப்ப வர வேண்டியதுதானே?…ஏன் நான் சண்டை போட்டுக்கிட்டு வந்த உடனே வரணும்?…நல்லாத் திட்டம் போட்டுத்தான் வேலை செய்யறா கெழவி…அது வந்து ஓதி உட்டுட்டு இருக்கறதுனாலதான்…எம்புருஷன் வீராப்பா சமாதானம் பேச வராம இருக்காரு” பத்மாவின் குரல் லேசாய்க் கரகரத்தது.

'அடியேய்…எவளோ பொரிக்கடைக்காரி சொன்னா…புண்ணாக்குக் கடைக்காரி சொன்னா!;ன்னு கேட்டுட்டுப் பேசாதடி”

'அம்மா…உனக்கு வெவரம் பத்தாதும்மா…நான் சொல்லித்தரேன் கேட்டுக்க…'டேய்..உனக்கு சோறு பொங்கிப் போட நானாச்சுடா…விட்டெறிடா அந்தச் சனியனை…வந்தா வர்றா…வராட்டிப் போறா”ன்னு எம்புருஷன் மனசை மாத்தி வெச்சிருக்கா….இல்லாட்டி மனுஷன் இத்தனை நாளு வராம இருப்பாரா?” சொல்லி முடித்து விட்டுக் கண் கலங்கிய மகளை குறுஞ்சிரிப்புடன் பார்த்தாள் லட்சுமி. 'புருஷன் மேல அம்புட்டு ஆசை இருக்கறவ ரோஷத்தையெல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு கொஞ்சம் இறங்கித்தான் போனா என்னவாம்?”

மறுநாள் காலை ஏழு மணியிருக்கும்.

மூட்டை முடிச்சுக்களுடன் கிளம்பிக் கொண்டிருந்த மகளிடம் கேட்டாள் லட்சுமி. 'எங்கடி?…எங்க கௌம்பிட்ட காலங்காத்தாலே?”

'ம்….எம்புருஷன் வீட்டுக்கு”

'என்னாது?..புருஷனூட்டுக்கா?…ஏண்டி…என்னாச்சு உனக்கு?”

'இதென்ன கேள்வி?…எம்புருஷன் வீட்டுக்குப் போறதுக்கு எனக்கு என்ன ஆவனும்?”

சொல்லிவிட்டு அவசர அவசரமாய்த் தெருவில் இறங்கி நடந்தாள் பத்மா.

எதுவும் புரியாது சிலையாய் நின்றாள் லட்சுமி.

பத்து மணி வாக்கில் புருஷன் வீட்டை அடைந்த பத்மா வந்ததும் வராததுமாய் மாமியாருடன் யுத்தத்தைத் துவக்கினாள்.

'ஏங் கெழவி…நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷியா? பையனுக்கு புத்திமதி சொல்லிக் குடுத்து…'போடா…போயி பொண்டாட்டியக் கூட்டியாந்து குடித்தனம் பண்ணுடா”ன்னு சொல்றத விட்டுட்டு ….அவனுக்கு இல்லாததையும்…பொல்லாததையும் சொல்லிக் குடுத்து ரெண்டு மூணு நாள்ல சமாதானம் பேச வர்ற மனுசனைப் போகாமப் புடிச்சு வெச்சிருக்கியே…உன்னையெல்லாம் வீட்டுக்குள்ளார வெச்சிருந்தா குடும்பம வௌங்குமா?”

மெல்லத் தலையைத் தூக்கி நிதானமாய் அவளைப் பார்த்தாள் அவள் மாமியார் துளசியம்மாள். அந்தச் சூழ்நிலையில்….அவள் இருக்கும் மனநிலையில் தான் இப்போது எது பேசினாலும் எடுபடாது தவறாகவே போய்விடும் என்பதைத் தன் அனுபவ அறிவால் புரிந்து கொண்ட துளசியம்மாள் 'சரி தாயி…நீதான் வந்துட்டியல்ல…இனி நீயாச்சு…உம்புருஷனாச்சு…நான் கௌம்பறேன்”

சொல்லி விட்டு நில்லாமல் உடனே தன் துணிப்பையைத் தூக்கிக் கொண்டு அவள் வெளியேற,

'போ…போ…இனிமே இந்தத் திசைப் பக்கமே தலை வெச்சுப் படுத்துடாத..” என்று கத்தலாய்ச் சொன்ன பத்மா 'இதெல்லாம் என்னிக்கு செத்தொழியுதோ அன்னிக்குத்தான் எனக்கும் எம்புருஷனுக்கும் நிம்மதி” என்று தாழ்ந்த குரலில் சொன்னாள்.

வயதாகிவிட்ட போதிலும் கேட்கும் திறனில் சிறிதும் குறைபாடில்லாத துளசியம்மாளுக்கு மருமகள் கூறிய இறுதி வார்த்தைகளும் தெளிவாய்க் கேட்டுவிட மனமொடிந்து போனாள். கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. துக்கம் தொண்டையை அடைக்க ஒரு நீண்ட பெருமூச்சின் மூலம் அதை நிவர்த்தி செய்து விட்டு,

தெருவில் இறங்கி பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் மனநிலையைப் போலவே கால்களும் தளர்வாகி…தள்ளாடின.

----

அவள் சென்றபின், அரை மணி நேரத்திற்குப் பிறகு,

'தொளசிம்மா…தொளசிம்மா…”

வாசலில் குரல் கேட்க எட்டிப் பார்த்தாள் பத்மா. பக்கத்து வீட்டு செல்லாயி நின்று கொண்டிருந்தாள். அவள் தன் மாமியாருக்கு நெருக்கமானவள் என்பதால் அவளை எரித்து விடுவது போல பார;த்த பத்மா 'அது இல்லை…போயிடுச்சு” என்றாள் வெறுப்பாய்.

'அப்படியா?…என்கிட்டக் கூடச் சொல்லிக்காமப் போயிடுச்சே” அந்தச் செல்லாயி அங்கலாய்க்க,

'வேணுமின்னா உம்புருஷனை கிராமத்து அனுப்பிச்சு கெழவிகிட்டக் கேட்டுட்டு வரச் சொல்லேன்…'ஏன் சொல்லாமப் போயிட்டே?”ன்னு” படு நக்கலாகச் சொன்னாள் பத்மா.

அவளின் அந்த பதிலால் அதிர்ந்து போன செல்லாயி 'ஏண்டியம்மா…சண்டை கிண்டை போட்டுத் தொரத்தி விட்டுட்டியா…என்ன?”

'ஆமா…எனக்கு அதுதானே வேலை!…ஹூம் பேசறா பாரு பேச்சு!…மருமக சண்டை போட்டுட்டுப் போனதே சாக்குன்னு மகன் கூட வந்து சொத்துக்காக ஒட்டிக்கிட்ட அந்தக் கெழவி கூட சண்டை போட்டாலும் தப்பில்ல…நாலு சாத்து சாத்தினாலும் தப்பில்ல…”

'ச்சீய்…வாயைக் கழுவுடி மொதல்ல…யாரைப்பத்தி என்ன பேசுறே?…உனக்கு என்னடி தொpயம் உன் மாமியாரைப் பத்தி!....அவளோட மனசைப் பத்தி!…தெய்வமடி அவ!…நீயெல்லாம் அவளை உக்கார வெச்சுக் கும்பிடணும்..”

அந்தச் செல்லாயின் ஆவேசப் பேச்சில் வாயடைத்துப் போய் நின்றாள் பத்மா.

'என்னமோ சொன்னியே…இவ சொல்லிக் குடுத்துத்தான் உம்புருஷன் உன்கிட்ட சமாதானம் பேச வரலைன்னு…நெஜம் அது இல்லைடி….இவ தெனமும் நூறு வாட்டி சொல்லுவா…அப்பப்ப சண்டை கூடப் போடுவா…'போடா…போயி…அவளைச் சமாதானம் பண்ணிக் கூட்டிக்கிட்டு வாடா”ன்னு…உம்புருஷன்தான் வெட்டுருப்பா மாட்டேன்னுட்டுக் கெடந்தான்… ”

'அப்படி நெனைக்கறவளாயிருந்தா அவ ஏன் இங்க இருக்கணும்?…பொறப்பட்டுப் போக வேண்டியதுதானே கிராமத்துக்கு?…இங்க இருந்திட்டு இவருக்கு மூணு நேரமும் கொறையாமப் பொங்கிப் போடறதுனாலதான் இந்தாளுக்கு பொண்டாட்டியொட அருமையும் அவசியமுந் தெரியாமப் போயிருச்சு…நாலு நாள் வெளில…கடை கண்ணில அரையுங் குறையமா சாப்பிட்டிருந்தா அப்பத் தெரிஞ்சிருக்கும் வீட்டுச் சோத்தோட அருமை…பொண்டாட்டி கையோட பெருமை….அது தொpயறதுக்குத்தான் வாய்ப்பே குடுக்காம கெழவி நாக்குக்கு ருசியா சமைச்சுக் கொட்டியிருக்காளே….அதா அந்தாளுக்கு ‘சமைச்சுப் போட பெத்தவ இருக்கா…சம்பாரிக்க நாம இருக்கோம்…பொண்டாட்டிச் சனியன் இருந்தா என்ன?…இல்லாட்டித்தான் என்ன?‘ ன்னு தோணிடுச்சு” தன் பக்கத்து நியாயத்தை ஆணித்தரமாக பத்மா சொல்ல,

அதைக் கேட்டு சன்னமாய்ப் புன்னகைத்தாள் செல்லாயி.

'என்ன குருஞ்சிரிப்பு சிரிக்கறே?…நான் சொன்னது சரிதானே?…இந்தக் கெழவி மட்டும் இவரு கூட இல்லாம இருந்திருந்தா…எம்புருஷன் என்னைத் தேடி ஓடி வந்திருப்பாருதானே?…”

'நானும் ஆரம்பத்துல அப்படித்தாம்மா நெனச்சேன்…ஒரு நாள் வாய் விட்டுக் கேட்டும் போட்டேன்..அதுக்கு உன் மாமியார் சொன்ன பதில் என் நெஞ்சை வலிக்க வெச்சிட்டுதடி…போன வாரம் ஏதோ பேப்பர்ல படிச்சாளாம்…எங்கியோ ஊர்ல…யாரோ ஒருத்தன்….பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு பொறந்த வூட்டுக்குப் போயிட்டதுனால…மனசு தாங்காம மூணாம் நாளே தூக்குல தொங்கிட்டானாம!;….ஆம்பள மனசு வெளிப் பார்வைக்குத்தான் மொரடாத் தெரியுமாம்…நெஜத்துல பொம்பள மனச விடக் கோழை மனசு ஆம்பள மனசுதானாம்!…. அதைச் சொல்லிப் போட்டு..'எம்மகனும் அந்த மாதிரி ஏதாச்சும் பண்ணிக்கிட்டான்னா…பாவம் என் மருமக படிக்காதவ…வௌளைச் சோளம!;…எப்படி இந்த உலகத்துல வாழ்வா?….அதனால அவளுக்கு அவ புருஷனை பத்திரமாத் திருப்பிக் கொடுக்கனும்கறதுக்காகத்தான் ..நான் இங்க வந்து இவன் கூட இருக்கேன்! ..நாளைக்கே அவ வந்துட்டா…'இந்தாடியம்மா உம்புருஷன்…இனி நீ பத்திரமாப் பாத்துக்க…”ன்னு சொல்லிப் போட்டு போய்க்கிட்டெ இருப்பேன்”னா…அவளைப் போய்…நீ…ச்சை…”

செல்லாயி சொல்லச் சொல்ல மறைந்திருந்த அந்த மகத்தான உண்மையின் பயங்கரத்தை உணர;ந்து கொண்ட பத்மா குமுறிக் குமுறி அழுதாள்

அதே நேரம்,

பேருந்தில் உறங்கியபடியே பயணித்துக் கொண்டிருந்த துளசியம்மாள் உறக்கத்தில் 'எப்படியோ அதுக ரெண்டும் நல்லா இருந்தா அது போதும் எனக்கு” என்று வாய்விட்டுச் சொல்ல,

அவளைப் பரிதாபமாய்ப் பார்த்தாள் பக்கத்து சீட் பெண்மணி.


(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 01, 2013 5:07 pm

கதை சூப்பர் மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக