புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
85 Posts - 77%
heezulia
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
250 Posts - 77%
heezulia
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
8 Posts - 2%
prajai
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வசியம் Poll_c10வசியம் Poll_m10வசியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசியம்


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Fri Feb 01, 2013 3:55 pm

வசியம்
(சிறுகதை)

பக்கத்து வீட்டுப் பெண் லீலாவுடன் அந்த மலையடிவார சாமியாரைச் சந்திக்க வந்திருந்த கலைவாணி அங்கு போலீஸ் வேலை பார்க்கும் தன் பெரியப்பா மகன் தண்டபாணியைப் பார்த்ததும் ஆடிப் போனாள். 'அடக் கடவுளே!...தண்டபாணி அண்ணன் வேற இங்க வந்திருக்கே…அய்யய்யோ…அது என்னைப் பார்த்துட்டா பெரிய பிரச்சினை ஆயிடுமே…என்ன பண்றது?”

அவன் கண்ணில் படாமல் நழுவி விடலாம் என்கிற எண்ணத்துடன் லீலாவை இழுத்துக் கொண்டு வேக வேகமாக நடந்தவளை தண்டபாணியின் குரல் இழுத்து நிறுத்தியது.

'கலை…ஏய்…கலை!” துhரத்திலிருந்தே கத்திக் கொண்டு வந்தவன் அவர்களை நெருங்கியதும் 'என்ன புள்ளே…இங்க வந்திருக்கே…என்ன விஷயம்?” கேட்டவன் முகத்தில் ஏகப்பட்ட சந்தேக கொப்புளங்கள்.

'அது…வந்து..இவதான்…சாமியாரை….” லீலாவைக் காட்டியபடி அவள் திக்கித் திணற

அந்த லீலாவே முன் வந்து விஷயத்தைப் போட்டுடைத்தாள். 'அது…வேற ஒண்ணுமில்லை….இவ புருஷன்காரன் இவ கிட்ட அன்பா…அணுசரணையா இல்லாம எப்பப் பார்த்தாலும் எரிஞ்சு விழுந்திட்டே இருக்கானாம்!...பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவ முடியாம என்கிட்ட வந்து ‘ஓ….‘ன்னு ஓப்பாரி வெச்சா!...நான்தான் இந்தச் 'சாமியார்கிட்டச் சொல்லி வசிய மருந்து வாங்கித் தர்றேன்….அதை உம்புருஷனுக்கு தெனமும் சாப்பாட்டுல கலந்து கொடு…ஆள் வசியமாகி…உன் காலடியே கதின்னு கெடப்பான்”னு சொல்லிக் கூட்டியாந்தேன்!....அது செரி…போலீஸ்காரருக்கு இங்கென்ன ஜோலி?....ஏதாச்சும் வசிய மருந்து வாங்கவா?...இல்ல பயந்துக்காம இருக்கறதுக்கு தாயத்து வாங்கவா?”

அந்த வம்புக்காரியின் கிண்டல் பேச்சில் கோபத்தின் உச்சிக்குப் போன தண்டபாணி 'தெரியாமத்தான் கேட்கறேன்…உங்களுக்கெல்லாம் மண்டைல மூளைன்னு ஒண்ணு இருக்கா?...இல்ல அந்த எடம் வெற்றிடமாவே இருக்கா?” கத்தலாய்க் கேட்டான்.

'ஆங்…நீங்கதானே போலீஸ்காரரு?...கண்டுபிடிச்சு சொல்லுங்க….கேட்டுக்கறோம்!”

'ச்சூ....நீ பேசாதே!....”என்று அந்த லீலாவைக் கையமர்த்தி விட்டு கலைவாணியின் பக்கம் திரும்பிய தண்டபாணி 'கலை…நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்க மாட்டியே?”

அவள் இட,வலமாய்த் தலையாட்ட

'புருஷன் பொண்டாட்டிக்குள்ளார நடக்கற விஷயங்களை இப்படியா அக்கம் பக்கத்துப் பொம்பளை கிட்டே எல்லாம் சொல்லுவாங்க?...ஆயிரம் இருக்கும் புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் நடுவுல….அடிச்சுக்குவாங்க…புடிச்சுவாங்க…அதையெல்லாம் பெரிசு பண்ணிக்கிட்டு…வசிய மருந்து…அதுஇதுன்னு…ச்சை!......அப்பப்ப கோவிச்சுக்கறதும்…அப்பப்ப கொஞ்சிக்கறதும்தாம்மா தாம்பத்யம்”

அவசரமாய் இடை புகுந்தாள் அந்த லீலா 'கோவிச்சுக்கறது மட்டுந்தானிருக்கு அந்த மனுசன்கிட்ட”

'நீங்க….ரெண்டு பேருமே ஒரு அடிப்படை விஷயத்தை மறந்துட்டுப் பேசறீங்க!...ஏம்மா கலை…உன் புருஷன் மேகநாதன் என்ன சாதாரண ஆளா?...அவங்கப்பாவுக்குப் பிறகு அந்தப் பண்ணையம் மொத்தத்தையும் அவன்தான் கவனிச்சுட்டிருக்கான்!....எத்தனை ஆளுங்களைக் கட்டி மேய்க்கறான்…தெனமும் எத்தனை பிரச்சினைகளை…சந்திக்கறான்…!...அங்கெல்லாம் அவன் தன் கோபத்தைக் காட்ட முடியாது…காட்டவும் கூடாது…அப்படிக் காட்டினா பண்ணையம் நடக்காது….தெனமும் பஞ்சாயத்துதான் நடக்கும்!...பேச வேண்டிய இடங்களிலெல்லாம் சாமார்த்தியமா…நாசூக்கா…யார் மனமும் புண் படாதபடி பேசி எல்லாத்தையும் கட்டிக் காக்கற மனுசன் உன்கிட்ட கொஞ்சம் கோபமாப் பேசறான்னா அதுக்குக் காரணம் உன் மேல் வெறுப்பல்ல…உன் மேல் உள்ள உரிமை…உன்னை ஒரு வடிகாலா நெனச்சு இறக்கறான்!..அதைப் புரிஞ்சுக்கிட்டு நீ பதிலுக்குக் கோவிச்சுக்காமப் போறதுதாம்மா வாழ்க்கை!”

இரண்டு பெண்களும் பதில் பேச இயலாது தண்டபாணியையே பார்த்துக் கொண்டு நிற்க

'த பாரும்மா…உன்னோட அன்பான பேச்சால…அணுசரனையான நடத்தையால…அரவணைப்பான பணிவிடைகள்னால…சிரிச்ச முகத்தால…புருஷனை வசியம் செய்ய முயற்சி செய்!...அதை விட்டுட்டு இப்படி ஒரு ஏமாற்றுக்கார சாமியார்ப்பயல குடுக்கற கண்ட மருந்தை வாங்கிக் குடுத்து கட்டுன புருஷனோட உசுருக்கு உலை வைக்காதே!”

‘விருட்‘டென நிமிர்ந்தாள் கலைவாணி 'தண்டபாணி அண்ணே…என்ன சொல்றீங்க?”

'ஆமாம் கலை….நாங்க ஒரு போலீஸ் படையே இங்க வந்திருக்கறது எதுக்குத் தெரியுமா?...அந்த போலிச் சாமியாரை அரெஸ்ட் பண்றதுக்குத்தான்!...காரணம் தெரிஞ்சா இன்னும் ஆடிப் போயிடுவே…உன்னைய மாதிரியே இவன் குடுத்த வசிய மருந்தை வாங்கிட்டுப் போயி புருஷனுக்குக் குடுத்த பல பொம்பளைக இப்ப ஸ்டேஷன்ல வந்து குமுறிக்கிட்டிருக்காங்க!”

'ஏன்?....எதுக்கு?”

'பின்னே?....வசிய மருந்துங்கற போ;ல இவன் குடுத்த அந்த வஸ்து…பக்க விளைவுகளை ஏற்படுத்தினதுல பல புருஷன்மார்கள் ஆஸ்பத்திரில உசுருக்குப் போராடிட்டுக் கெடக்கறாங்க!...”

'அய்யோ!” வாயைப் பெரிதாகத் திறந்து உள்ளங்கையால் அதை அடைத்தபடி கூவினாள் கலைவாணி.

'போங்கம்மா…போங்க!...வசிய மருந்து உங்ககிட்டயே இருக்கு…அதைக் குடுத்து புருஷனை வசியம் பண்ணப் பாருங்க…போங்க…போங்க!”

உடன் வந்த பக்கத்து வீட்டு லீலாவை அப்படியே கழற்றி விட்டு விட்டு புருஷனைக் காண வீடு நோக்கி ஓடினாள் கலைவாணி.

(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்






ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 01, 2013 5:00 pm

கதை அருமை பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Feb 01, 2013 9:37 pm

கதை அருமை..... சூப்பருங்க



வசியம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக