புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
48 Posts - 32%
i6appar
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
1 Post - 1%
prajai
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
48 Posts - 32%
i6appar
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
1 Post - 1%
prajai
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இலவசம் Poll_c10இலவசம் Poll_m10இலவசம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசம்


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Fri Feb 01, 2013 3:45 pm

இலவசம்
(சிறுகதை)


சற்று நேரம் ஆஸ்பத்திரி நெடியிலிருந்து தப்பிச் சென்று வெளிக்காற்றை சுவாசிக்கலாம், என்கிற எண்ணத்தோடு ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி எதிரிலிருந்து அந்த ஜூஸ் கடை பெஞ்சில் வந்தமர்ந்தேன்.

என் மனைவியின் உறவினர் ஒருவர் கிராமத்திலிருந்து சிகிச்சைக்காக அந்த மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆகியிருந்தார்.

'ஏங்க…எங்க ஊர்க்காரங்க…எனக்கு மாமன் முறையாகுது…நாம கண்டுக்காம விட்டுட முடியுமா?...அவ்வளவுதான்…நாளைக்கு ஊர்ப்பக்கம் போனோம்…பேசியே மானத்தை வாங்கிடுவாங்க…நம்மால ஆன உதவிகளைச் செஞ்சே தீரணும்”

'ப்ச்…ஏண்டி…நமக்கிருக்கற புடுங்கல்களே…நம்மோட மென்னியத் திருகுது…இதுல இந்தச் சமூக சேவையெல்லாம் தேவையாடி நமக்கு,”

'பின்னே?...'நம்ம தேவி வீடு அங்கதான் இருக்கு…அவ கவனிச்சுக்குவா”ங்கற நம்பிக்கைலதான் எங்க அத்தையே மாமனைக் கொண்டாந்து இங்க அட்மிட் பண்ணியிருக்கு”

'சரி…என்னமோ பண்ணு…' வேண்டா வெறுப்பாய் அவளுடன் கிளம்பி வந்து, அந்தக் கிராமத்து மாமனையும்…அவன் பொண்டாட்டியையும் ஒரு வித கடுப்போடு விசாரித்து விட்டு, நழுவினேன்.

'ஏங்க…ஒரு சாத்துக்குடி ஜூஸ்” சற்று உயரம் குறைவான அந்தப் பெண் தன் கட்டைக் குரலில் கேட்க,

'பதினஞ்சு ரூபா ஆகும்மா” கடைக்காரன் ‘வெடுக்‘கென்று சொன்னான்.

'பதினஞ்சு ரூபாயா?..இதென்ன அநியாயமாயிருக்கு…எங்க ஊருல சாத்துக்குடி சர்பத்து அஞ்சே ரூபாதான்”

'அப்படியா தாயி…எந்த ஊரு…உங்க ஊரு?”

'கெழக்க…சென்னிமலை பக்கத்துல…” அவள் அப்பாவித்தனமாய்ச் சொல்ல,

'அப்ப பஸ் பிடிச்சு…அங்கியே போயி ஜுஸ் வாங்கிட்டு வந்துடு”

அவள் ‘பொசுக்‘கென்று சுருங்கிப் போய், 'இல்ல…அது வந்து…எம்புருஷன் வயத்து வலின்னு இங்க அட்மிட் ஆகியிருக்கு…அதுக்குத்தான் ஜுஸு”

'த பாரு…பதினஞ்சு ரூபா இருக்கா?...இருக்குன்னா சொல்லு உடனே போட்டுத் தர்றேன்”

'சரி….போடு” தன் கையில் இறுக்கிப் பிடித்திருந்த கசங்கிய நோட்டுக்களை எண்ணியபடி சொன்னாள் அவள்.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அந்தக் கடைக்காரன் மேல் கடுப்பாயிருந்தது. 'பாவிப்பயல்…மனிதாபிமானமே கொஞ்சங்கூட இல்லாதவனா இருப்பான் போலிருக்கு”

அப்பெண் அங்கிருந்து நகர்ந்ததும், என் பார்வை ஆஸ்பத்திரி வாசலை அலுப்புடன் பார்த்தது. 'அவங்களே கிளம்புன்னு சொன்னாலும் இவ கிளம்பி வர மாட்டா…ஒட்டுப்பிசினு”

'ண்ணா…எலுமிச்சம் பழ சர்பத் இருக்காண்ணா?”

ஒரு சிறுவன் எம்பி நின்று கேட்டான்.

'ம்…ம்…இருக்கு…இருக்கு…பத்து ரூவா” கடைக்காரன்.

அந்தச் சிறுவன் விலையைக்; கேட்டதும் பேந்த பேந்த விழிக்க,

'எலுமிச்சம் பழ சர்பத் வாங்குற மூஞ்சியப் பாரு…போடா அந்தப் பக்கம்” கடைக்காரன் பிச்சைக்காரனை விரட்டுவது போல் விரட்ட, ஓடியே போனான் சிறுவன்.

'அடக் கெரகம் புடிச்சவனே…இப்படியுமா ஒரு மனுசன் இருப்பான்…இருசு மனசோட..” நான் அங்கலாய்த்தேன்.

மைனர் சங்கிலி வெளியே தெரியும்படி சட்டை பட்டனைத் திறந்து விட்டுக் கொண்டிருந்த ஓரு இளம் வயதுக்காரன் கடை முன் வந்து நின்று, 'ஹல்லோ…கால் கிலோ திராட்சை பேக் பண்ணுங்க பிரதர்”

'ஹூம்…கால் கிலோவெல்லாம் தர்றதில்லை…வேணுமின்னா அரைக் கிலோவா வாங்கிக்கோ”

'எனக்கு கால் கிலோவே போதுமே” அவன் தோள்களைக் குலுக்கியபடி சொல்ல,

'அப்படின்னா…பஸ் ஸ்டான்டுக்கு வெளிய கூடைக்காரி வெச்சிருப்பா…அவ கிட்டப் போய் வாங்கிக்க!' பதிலுக்கு கடைக்காரனும் தோள்களைக் குலுக்கியபடி சொன்னான்.

மறு வார்த்தை பேசாமல் அரைக் கிலோ வாங்கிக் கொண்டு நகர்ந்தான் மைனர்.

எனக்குள் அந்தக் கடைக்காரன் மீது அளவு கடந்த ஆத்திரம் பொங்கியது. 'இவனுகளையெல்லாம் மொட்டை வெய்யல்ல நிக்க வெச்சு…முதுகுத் தோலை உரிச்சு உப்பு மிளகாய்ப் பொடியத் தேய்க்கணும்!…இவன்கிட்ட வாங்க வர்றவங்களையெல்லாம் ரொம்பவே இளப்பமா நெனச்சுப் பேசறான்….என்னமோ காசு வாங்காம சும்மா குடுக்கற மாதிரி”

அவனுடைய ஒவ்வொரு அசைவையும் எரிச்சலுடன் பார்த்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தேன். இயல்பாகவே அவனிடம் ஒரு திமிர்த்தனமும்…தெனாவெட்டும் அமைந்திருப்பதாய்ப் பட்டது எனக்கு.

'ஆப்பிள் ஜூஸ்…இருக்காண்ணே?” சற்றுக் குழறியவாறே கேட்ட இளைஞன் தள்ளாட்டமாய் பெஞ்சில் அமர்ந்தான். அவன் தேக சோர்வு முகச் சுளிப்பில் நன்றாகவே தெரிந்தது.

'ம்…இருக்கே….போடவா?”

அந்த இளைஞன் மேலும் கீழுமாய்த் தலையாட்டினான்.

நான் இப்போது அந்த இளைஞனைக் கவனிக்க ஆரம்பித்தேன். தலை வாரப்படாமல் பரட்டையாய் இருக்க…கண்களிரண்டும் கோவைப் பழமாய்ச் சிவந்திருக்க…வாய் வெளுத்திருந்தது. 'தண்ணிக்கேசு போலிருக்கு” உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.

கடைக்காரன் சற்றுப் பெரிய கண்ணாடி டம்ளரில் வழிய வழிய ஆப்பிள் ஜூஸை நிரப்பி நீட்டினான்.

அந்த இளைஞன் சிரமப்பட்டு எழ முயற்சிக்க, 'அட…நீங்க ஏன் தம்பி சிரமப்படறீங்க…இருங்க நானே வாரேன்” சொல்லியவாறே கடையை விட்டு வெளியே வந்து கொடுத்தான் அந்தக் கடைக்காரன்.

எனக்கு ஆச்சரியமாயிருந்தது.

ஜூஸைப் பருகி முடித்த அந்த இளைஞன் வாயைத் துடைத்தபடி எழுந்து, பாக்கெட்டில் கையை விட்டு இருபது ரூபாய்த்தாளை எடுத்து நீட்டினான்.

வாங்காமல் நின்ற கடைக்காரன், 'ரத்த தானம் பண்ணிட்டுத்தானே வர்றீங்க?” கேட்டான்.

அவன், 'ஆமாம்” என்று மெல்லிய குரலில் சொல்ல,

'பரவாயில்லை…காசு வேண்டாம்…வெச்சுக்கங்க” என்று கடைக்காரன் சொன்ன போது வியப்பில் உறைந்து போனேன்.

அந்த இளைஞன், 'இல்லண்ணே…வாங்கிக்கங்க அண்ணே” என்று மறுபடியும் பணத்தை நீட்ட,

'வேண்டாம் தம்பி…நம்ம கடைல ”ரத்த தானம் பண்ணிட்டு வர்றவங்களுக்கு ஆப்பிள் ஜுஸ் இலவசம்”

என்னால் நம்பவே முடியவில்லை.

நன்றி சொல்லிக் கொண்டு அந்த இளைஞன் சென்றதும் கடைக்காரனிடம் கேட்டேன்.

'ஓ..அதைக் கேக்கறீங்களா?... அது ஒரு கதை சாமி…ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி மூலனூர்ப் பக்கத்துல ரெண்டு பஸ் நேருக்கு நேர் மோதி ஒரு விபத்தாச்சே ஞாபகமிருக்கா உங்களுக்கு…அதுல கூட பதினஞ்சு பேர் இறந்திட்டாங்க…”

யோசித்துப் பார்த்தேன் ஞாபகக் கூடைக்குள்ளிருந்து லேசாய் எட்டிப் பார்த்தது அந்த நினைவு, 'ம்…ம்…ஞாபகமிருக்கு சொல்லுங்க” என்றேன்.

'அந்த ஆக்ஸிடெண்ட்டுல அதிசயமா உயிர் பிழைச்சவன் நான் !…கண்டபடி அடி பட்டுக் கிடந்த என்னைய ஈரோடு ஜி.ஹெச்.ல சேர்த்திருந்தாங்க…அங்க யார் யாரோ வந்து விபத்துல காயம் பட்டவங்களுக்கு ரத்த தானம் செஞ்சாங்க…அப்படி யாரோ…முகம் தெரியாத ஒரு மனுசன் தானம் செஞ்சிட்டுப் போன ரத்தத்துலதான் நான் இன்னிக்கு உசுரோட இருக்கேன்…அதனால என் கடைல 'ரத்த தானம் செஞ்சிட்டு வர;றவங்களுக்கு ஜுஸ் இலவசம்” ங்கற கொள்கையை வெச்சிருக்கேன்..”

நெகிழ்ந்து போனேன் நான்.

'இவனையா நான் 'மொட்டை வெய்யில்ல நிக்க வெச்சு முதுகுத் தோலை உரிச்சு உப்பும் மிளகாய்ப் பொடியுத் தேய்க்கணும்”ன்னு சொன்னேன்…அப்படின்னா…கிராமத்திலிருந்து நம்ம ஆளுங்க இருக்காங்க என்கிற தைரியத்துல இங்க வந்து அட்மிட் ஆகியிருக்கற என் மனைவியோட மாமனை ஒரு தூசாய்….ஒரு தொந்தரவாய்..நினைச்சு இங்க வந்து உட்கார்ந்திட்டிருக்கற என்னை என்ன பண்ணினால் தகும்? ” என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

சட்டென்று எழுந்து ஆஸ்பத்திரிக்குள் நடந்தேன்.

(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்













View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக