புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
79 Posts - 68%
heezulia
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
3 Posts - 3%
prajai
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
3 Posts - 3%
Barushree
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
1 Post - 1%
nahoor
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
133 Posts - 75%
heezulia
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
8 Posts - 4%
prajai
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
3 Posts - 2%
Barushree
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
1 Post - 1%
nahoor
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_m10முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 31, 2013 8:51 am

http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/benny%20quik.jpg
முந்தைய பாண்டிய நாடு அல்லது மதுரை நாடு, என்பது இப்போதைய தேணி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, மற்றும் தென்திருவாங்கூர் பகுதியும் அடங்கும். தென் திருவாங்கூர் பகுதியை தனியாக ஆட்சி செளுத்திய மன்னர்கள் பாண்டிய மன்னருக்கு திறை (வரி) செலுத்தி வந்தனர்.


1529-1564 விஸ்வநாத நாயக்கர் ஆட்சியிலும், 1564-1572 முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர், 1572-1595 வீரப்ப நாயக்கர் ஆட்சிகாலத்திலும் 1595-1601 இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்திலும் 1601-1623 முத்துவீரப்ப நாயக்கர் 1623-1659 திருமலை நாயக்கரும் ஆட்சி செய்தனர்.


அப்போதெல்லாம் முறையாக வரி செலுத்திவந்த திருவாங்கூர் மன்னர்கள் கடைசியாக இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் வரியை செலுத்த மறுத்தனர்.




பின்னர் ரராணி மங்கம்மாள் படையெடுத்து சென்று திருவாங்கூர் மன்னரை வெற்றி கொண்டு தனக்கு வரவேண்டிய வரியை வசூல் செய்துகொண்டு வந்தார் என்பது வரலாறு. அப்போதெல்லாம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது கேரளாவின் தென்பகுதி.

பின்னர் கிழக்கிந்திய கம்பெனியினர் நம் நாட்டை கைப்பற்றி தங்களது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த போது, 1790-ம் வருடம் மார்ச் 6-ல் மதுரை மாவட்டம் உதயமானது.


அதே வருடம், ஏப்.5-ல் ஏ.மிக்லட் என்ற ஆங்கிலேயர் முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 1798-ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி அவர்கள் சிவகிரி மலையில் உற்பத்தியாகி வடக்கு நோக்கி வரும் முல்லை ஆற்றையும், சதுரகிரி மலையில் உற்பத்தியாகி தெற்கு நோக்கி வரும் பெரியாறு ஆகிய இரண்டு நதிகளையும் ஒரே இடத்தில் சேர்த்து ஒரு அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.


நதிகள் அமைப்பு எப்படியுள்ளது, அணை கட்டமுடியுமா..? எந்த இடத்தில் அனைகட்டலாம் என்பதை ஆராய முத்து இருளப்பபிள்ளை என்பவரின் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழுவினர் காடுகளிலும் மலைகளிலும் ஏறி இறங்கி நடந்து காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தையும், அணை கட்ட தேவைப்பட்டும் செலவின் தொகையும் மதிப்பீடு தயார் செய்தனர்.


ஆனால், மன்னர் சேதுபதியும் அவரது நாடும் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட காரணத்தால் போதிய நிதி வசதியின்றி பண நெருக்கடியில் திணறிய மன்னரால் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

1807-ல் மதுரை மாவட்ட ஆட்சியராக வந்

த “ஜார்ஜ் பேரிஸ்” என்பவர் மன்னர் சேதுபதியின் திட்டத்துக்கு உயிர் கொடுத்தார். மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார். அதன்படி மலைப்பகுதிகளில் ஆய்வு செய்த கார்டுவெல், 1808-ல் இது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை தந்தார்.


பின்னர் 1837-ல் “கோணல்” பேபர்சின்ன... என்பவர் முல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, மலைப்பகுதியில் தங்கி வேலை செய்த வேலையாட்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதாலும், அவர்கள் கூலி அதிகம் கேட்டதாலும் கையில் இருந்த பணமெல்லாம் செலவாகி விட்டபடியால் வேலையை நிறுத்திவிட்டு திரும்பி விட்டார்.


1867-ல் இராணுவ மேஜரரான “ரைவ்ஸ்” என்பவர் மலைப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை கிழக்கே பக்கமாக திருப்புவது தான் இந்த இடத்தில் அணை கட்டுவதன் முக்கிய நோக்கம் என்றும், இதற்க்கு தோராயமாக 17.50 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் என்று அறிக்கை ஒன்றை சென்னை மாகான ஆளுநரிடம் சமர்பித்துள்ளார்.


இதன் பின்னர், மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது.


பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை “சுமித்” என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த “வாக்கர்” என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார்.


இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணை கட்டும் திட்டம் மேலும் தள்ளிவைக்கப்பட்டது.


“சுமித்” அவர்களுக்கு பிறகு அந்த இடத்துக்கு வந்த “கோணல்” பென்னிகுக் அவர்கள். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை தயார் செய்து ஆங்கிலேய அரசின் பார்வைக்கு அனுப்பி அதற்கு அனுமதியும் பெற்றார்.


ஆங்கிலேய அரசின் ஆணைப்படி கோணல் ஜான் பென்னிகுக் அவர்கள் மதுரையிலிருந்து ஆற்றின் வழியே நடந்து சென்று முல்லையாரும், பெரியாரும் சந்திக்கும் இந்த இடத்தில் அணை கட்டலாம் என்று ஒரு திட்டத்தை 1882-ல் தயாரித்தார்.


இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது.


இப்படி செய்தால், அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வெளியே வரும் தண்ணீரை “வைரவன்” ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கொண்டுவந்து கலந்து மீண்டும் வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.


பென்னி குயிக் அவர்களின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது, எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில்1886-ம் ஆண்டு, சென்னை மாகன ஆளுநர் ஹாமில்டன் என்பவர் முன்னிலையில் அணை கட்ட திருவாங்கூர் மன்னருடன் 999 ஆண்டுகளுக்கு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு 1887 செப்டம்பர் மாதம் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது.


இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான “பென்னிகுக்” அவர்கள் கட்டிட பணிக்கு நவீன இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்தார், இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் இங்கிலாந்திலிருந்து கொண்டுவந்தார்.


இந்த இயந்திரங்களை சென்னை மாகாணத்தின் கூடலூர் மாலைப்பகுதியிலிருந்து திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள தேக்கடி என்ற இடம் வரையிலும், அங்கிருந்து அணை கட்டும் காட்டுப்பகுதிவரையும் கம்பிவடப் (வின்ச்) பாதைகளை அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது என்று தெரிகிறது.


ஆங்கிலேயப் பொறியாளர் கோனல் பென்னிகுக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டபோது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், புலி, காட்டெருமை போன்ற காட்டு மிருகங்கள், அவப்போது திடீரென கொட்டும் கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளம் போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான பெரிய வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.


அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு கூடுதல் பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் “கர்னல்” பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தையும், இங்கிலாந்திலுள்ள தனது நண்பர்கள் மூலம் கிடைத்த பணத்தையும் கொண்டு வந்து தனது செலவிலேயே சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.


இந்த முல்லை பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும் அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார்.


இந்த அணையை கட்டி முடிந்த போது நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலேயர்கள் உட்பட 422 மனித உயிர்கள் பலியாகியிருப்பதாக இங்கிலாந்து நாட்டில் உள்ள காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ள “பிரிடிஷ் ஆட்சியில் இந்தியா” என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள “ஆவணங்கள்” சொல்லுகின்றது.


இங்கிலாந்து நாட்டில் பிறந்து இந்தியாவில் வேலை செய்ய வந்த இடத்தில் அணைகட்டும் பணிக்கு சென்று அங்கு ஏற்பட்ட விசக்காய்ச்சலுக்கு பலியாக்கி பினத்தைக்கூட கீழே கொண்டு வரமுடியாமல் பல ஆங்கிலேயர்களின் உடல்கள் மலை மேலேயே புதைக்கபட்டுள்ளதாகவும் அந்த ஆவணங்கள் கூறுகிறது.



அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்ததால் அதனுடன் இடம் மற்றும் இலாபப்பங்கீடு போன்றவைகளுக்கான பேச்சு வார்த்தை நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு 6.10.1886-ல் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.



இதன்படி திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு (தற்போதைய கேரள மாநில) த்திற்கு தமிழகம் அணையின் 155 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கும் பகுதியான 8000 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணைகட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக 100 ஏக்கர் சேர்த்து 8100 ஏக்கருக்கு வருடா வருடம் குத்தகைப் பணம் செலுத்த வேண்டும் என்பது உட்பட 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது.



கேரளாவிற்கு, தாமிழகம் குத்தகைத்தொகையாக 1896-லிருந்து 1970-வரை ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் பணம் கொடுத்து வந்தது. கேரளாவின் வேண்டுகோளின்படி 1970-ம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி, ஆண்டிற்கு 5 ரூபாய் என்றிருந்த குத்தகைத்தொகையை 30 ரூபாய் என்று உயர்த்தப்பட்டது.


அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம் குட்டை போன்ற நீர் நிலைகளிலும் வளரும் மீன்களை பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து கேரள எழுதி வாங்கிக் கொண்டது.

இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடி உயரத்துக்கு மேல் தேங்கி நிற்கும் தண்ணீர் குகை மூலமாக வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு தமிழகத்தின் பலமாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது.


தமிழகத்தின் பாதி மாவட்ட மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் ஆதாரமாக இருந்து, பத்திக்கும் அதிகமான மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கொடுத்து கொண்டிருக்கும் இந்த அணையை நம்மோடு கலை, பண்பாடு, இனம், மொழி, நாடு என்று எந்த சொந்தமும் இல்லாத ஒரு ஆங்கிலேயானான “பென்னிகுக்” என்கிற ஒரு வெள்ளையன் தன்னுடைய சொந்த பணம் போட்டு கட்டி கொடுத்துள்ளான்.


ஆனால், நான் இந்தியன், நான் இந்திய நாட்டுக்கு என் உயிரையும் உடலையும் கொடுப்பேன் என்று போலி வசனம் பேசும் கேரள அரசியல்வாதிகள் இழிவாக நடந்து கொள்கிறார்கள்.

இந்த கட்டுரையை இன்னுமொரு முறை படித்துவிட்டு சொல்லுங்கள் தமிழருக்கு நண்பன் யாரென்று...


தன்னுடைய சொத்தை விற்று அனைகட்டிய பெருமகன் பென்னிகுக் அவர்களுக்கு தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் “பென்னிகுக்” அவர்களின் நினைவை போற்றும் வகையில் முழு உருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.


தேனி மாவட்டத்தில் உள்ள பல விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுக் படம் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு “பென்னிகுக்” என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் பாலார்பட்டி, கூழையனூர் போன்ற ஊர்களில் பென்னிகுக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்துத் தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் கூட உள்ளது.

நன்றி : இலக்கியம் நக்கீரன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 31, 2013 10:33 am

தகவல் சூப்பருங்க




முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Mமுல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Uமுல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Tமுல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Hமுல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Uமுல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Mமுல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Oமுல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Hமுல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Aமுல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Mமுல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  Eமுல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 2:57 pm

ஆங்கிலேயர்களை இழிவாக சொல்லும் நாம் அவர்கள் நமக்களித்து விட்டு சென்ற எண்ணற்ற தொழில்நுட்பங்களை கொண்டுள்ளோம் என மறந்து விட வேண்டாம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக