புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
79 Posts - 68%
heezulia
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
20 Posts - 17%
mohamed nizamudeen
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
4 Posts - 3%
prajai
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
2 Posts - 2%
Tamilmozhi09
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
1 Post - 1%
nahoor
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
133 Posts - 75%
heezulia
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
20 Posts - 11%
mohamed nizamudeen
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
7 Posts - 4%
prajai
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
1 Post - 1%
nahoor
மாற்று(ம்) திறனாளி I_vote_lcapமாற்று(ம்) திறனாளி I_voting_barமாற்று(ம்) திறனாளி I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்று(ம்) திறனாளி


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Wed Jan 30, 2013 12:13 pm

மாற்று(ம்) திறனாளி
(சிறுகதை)

மாலை ஏழு மணிவாக்கில் வீடு திரும்பிய குணசேகர் உள்ளே வரும் போதே 'செல்விக்குட்டி….அப்பா உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் கண்டுபிடி” என்று கூவிக்கொண்டே வந்தார். இரண்டு கைகளும் பின்புறம் எதையோ மறைத்துக் கொண்டிருந்தன. ஆனால் சோக முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்த எட்டு வயது செல்வியின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.

'அடடே…என் ராசாத்திக்கு ஏதோ கோவம் போலிருக்கே..” என்றபடி அவள் அருகில் அமர்ந்து அவள் தாடையைத் தொட்டுத் தூக்கி 'ஏண்டா செல்லம்…அம்மா திட்டிட்டாளா?”

அது இட, வலமாய்த் தலையாட்டியது.

'இல்லையா?…அப்ப ஸ்கூல்ல…டீச்சர் திட்டினாளா?”

'ம்ஹூம்” என்றவாறு உள் அறையில் தரையில் அமர்ந்து எதையோ வரைந்து கொண்டிருந்த தங்கை நிர்மலாவைக் காட்டினாள்.

செல்வியும் நிர்மலாவும் இரட்டைகள். ஓரே அச்சில் வார்த்தாற் போல் ஒரே நிறத்தில்….ஒரே பருமனில்….ஒரே உயரத்தில் இருக்கும் அவர்களிடத்தில் ஒரே வித்தியாசம் சின்னவள் நிர்மலாவின் வலது கால் கணுக்கால் பகுதி சற்று வளைந்திருப்பதும்….அதன் காரணமாய் அவள் நடக்கும் போது சற்று விந்தி விந்தி நடப்பதும்தான். பாவம் சிக்கலான ஆயுதப் பிரசவ போராட்டத்தின் விளைவு அது.

சின்னவளை அவள் சுட்டிக் காட்டியதன் மூலம் நிலைமையை ஓரளவு யூகித்துக் கொண்ட குணசேகர் 'ஓ….தங்கச்சிப் பாப்பா உன் கூட சண்டை போட்டுட்டாளா?”

மறுபடியும் செல்வி இட, வலமாய்த் தலையாட்ட,

'அய்யய்யோ…ஒண்ணும் புரிய மாட்டேங்குதே!” என்று தலையைப் பிய்த்துக் கொண்டவர் சமையலறைப் பக்கம் திரும்பி 'கலா…ஏய் கலா…” மனைவியை அழைத்தார்.

'என்னங்க…?”

கையைத் துடைத்தபடி வந்தவளிடம் கேட்டார் 'ஏண்டா செல்விக்குட்டி சோகமா இருக்கா?”

'அதையேன் என்கிட்டக் கேட்கறீங்க…அவகிட்டவே கேளுங்க…”

'அதுதான் வாயைத் திறந்து பேசவே மாட்டேங்குதே..”

'என்ன?…பேச மாட்டேங்குதா?….அது செரி..இத்தனை நேரம் என்கிட்ட சரிக்கு சரி பேசி சண்டை போட்டாள் அல்ல…அதுல வாய் வலி கண்டிருக்கும்..”

'ஓ…அப்ப நீதான் சண்டை போட்டிருக்க…”

'அய்யய்யோ…சாமி…என்னை ஆளை விடுங்க..எனக்கு வேலையிருக்கு” சொல்லிவிட்டு சமையலறையை நோக்கி அவள் ஓட்டமாய் ஓடி விட, உள் அறையிலிருந்து விந்தி விந்தி நடந்து வந்த சின்னவள் நிர;மலா குணசேகரன் தோளைத் தொட்டு 'டாடி..நான் சொல்றேன்…” என்றாள்.

'சொல்லுடா…என் தங்கம்”

'வந்து…வந்து….ஸ்கூல்ல பரத நாட்டியம் சொல்லித் தர்றாங்க…மாசம் ஐநூறு ரூபா பீஸ்...”

'அவ்வளவுதானே?…நான் சொல்றேன் நீ சேர்ந்துக்கடா செல்லம்…” என்றான் குணசேகர் செல்வியைப் பார்த்து,

அதுவரை அமைதி காத்து அமர்ந்திருந்த செல்வி திடீரென்று ஆவேசமாகி 'நீ என்னைச் சேரச் சொல்லுறே…ஆனா இந்த அம்மா….என்னைய சேர வேண்டாம்…தங்கச்சி மட்டும் சேரட்டும்னு சொல்லுறா…”

'சரி…சரி…ரெண்டு பேருமே சேருங்க…”

'அது செரி…ரெண்டு பேருக்கு மாசம் ஆயிரம் ரூபாயை டான்ஸ் க்ளாஸூக்குக் குடுத்துட்டு…பற்றாக்குறைக்கு எங்க போறது?..ம்ஹூம்…அதெல்லாம் சரிப்பட்டு வராது…ஏதோ ஒருத்திக்குன்னா…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாம்…”

'அப்படின்னா பெரியவளைச் சேர்த்து விடலாமே…”

'த பாருங்க…இந்த விஷயத்துல நான் எடுக்கறதுதான் முடிவு….சின்னவதான் சேர்றா…அவ்வளவுதான்…மேற்கொண்டு இதைப் பத்தி பேச வேண்டாம்;” கறாராய்ச் சொல்லி விட்டு கணவன் அழைப்பதையும் செல்வி வாய் விட்டு அழுவதையும் சிறிதும் சட்டை செய்யாது சமையலறை நோக்கி நடந்தாள் கலா.

'அன்னிக்கும் இப்படித்தான் டிராயிங் க்ளாஸூக்கு என்னை வேண்டாம்னுட்டு தங்கச்சிய சேர்த்து விட்டுச்சு….இப்ப டான்ஸ் க்ளாஸூக்கும் அதே மாதிரி செய்யுது இந்த அம்மா..” அழுது ஆர்ப்பாட்டம் செய்த மூத்தவள் செல்வியை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது குணசேகருக்கு.

'ச்சே…ஏன்தான் இந்தக் கலா இப்படிப் பிடிவாதம் பிடிக்கறாளோ?”

இரவு. குழந்தைகள் இரண்டும் உறங்கியபின் தன்னிடம் வந்த கணவர் முகத்தை உற்று நோக்கினாள் கலா. அதில் வாட்டம் தெரிய அதற்கான காரணத்தை யூகித்துக் கொண்டவள் 'என்னங்க…என் மேல் கோபமா?” கேட்டாள்.

'ம்ம்ம்…கோபம்னு இல்லை…ஒரு வருத்தம்…அவ்வளவுதான்..”

'எனக்குத் தெரியும்…நான் பெரியவளை விட்டுட்டு சின்னவளை மட்டும் டான்ஸ் க்ளாஸ்ல சேர்த்து விடறேனே…அதுதான் உங்க வருத்தத்திற்குக் காரணம்….சரிதானே?”

'ஆமாம்…அன்னிக்கு டிராயிங் க்ளாஸூக்கும் இப்படித்தான் செய்தே…ஏன்?…என்னாச்சு உனக்கு?”

பதிலேதும் சொல்லாமல் மெலிதாய்ச் சிரித்தாள் கலா.

அவளின் அச்சிரிப்பு அவனுள் கோபத்தை மூட்டி விட 'ஏண்டி…சின்னவளே ஊனக்காலை வெச்சுக்கிட்டு…விந்தி விந்தி…நடந்திட்டிருக்கா…அவளுக்கு பரத நாட்டியம் ரொம்ப முக்கியமா?” கத்தலாய்க் கேட்டான்.

'ஆமாங்க…சொன்னாலும் சொல்லாட்டியும் அவளுக்குத்தாங்க அது ரொம்ப முக்கியம்…” அவளும் கத்தலாகவே பதில் சொல்ல, வாயடைத்துப் போனார் குணசேகர்.

சில அவஸ்தையான நிமிடங்களுக்குப் பிறகு 'என்ன கலா…என்ன சொல்ற நீ?..கொஞ்சம் புரியம்படிதான் சொல்லேன்…” தணிவாய்க் கேட்டார் குணசேகர்.

'இங்க பாருங்க…நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்கங்க….பெரியவ செல்வியைப் பற்றிப் பிரச்சினையே இல்லைங்க…அவ நார்மலா இருக்கா…சுமாராப் படிச்சு..எதிர்காலத்துல ஒரு சுமார் லெவலுக்கே வந்தாலும் யாரும் அவளை ஏதும் குறை சொல்ல முடியாது…அவ கல்யாணம் கூட ஈஸியா நடந்திடும்…ஆக…ஒரு இயல்பான வாழ்க்கைங்கறது அவளுக்கு உத்தரவாதமாயிருக்கு..என்ன நான் சொல்றது சரிதானே?”

'சரிதான்…”

'ஆனா சின்னவளைப் பொறுத்தவரை அப்படியில்லை….அவ உடல்ல ஆண்டவன் ஒரு குறையை வெச்சிட்டான்…இப்ப….பெரியவ மாதிரியே இவளும் ஒரு சுமார் லெவல்ல இருந்தான்னு வெச்சுக்கங்க….அப்ப அவளோட குறை அவளுக்கும் சரி…மத்தவங்களுக்கும் சரி ஒரு பெரிய விஷயமாத் தெரியும்…அது அப்படித் தெரியக் கூடாதுன்னா…அவ படிப்பு தாண்டிய சில விஷயங்கள்ல திறமைசாலியா இருக்கணும்…”

நெற்றியைச் சுருக்கியவாறே கேட்டுக் கொண்டிருந்த குணசேகருக்கு லேசாய்ப் புரிய ஆரம்பித்தது.

'இப்பவே அவளுக்கு ஓவியம் நல்லா வருது….இன்னும் டிராயிங் க்ளாஸ்ல சேர்த்து அதை அவ டெவலப் பண்ணினா நிச்சயம் ஓவியத்துல ஒரு சாதனையைப் படைப்பா…அதே மாதிரிதான் பரத நாட்டியம்…இப்ப இருந்தே பயிற்சியில் ஈடுபட்டா நாட்டியத்துல ஒரு சாதனையாளரா அவ வர முடியும்…அது மாதிரியான சாதனைகளை அவ நிகழ்த்தும் போது அவ மாற்றுத் திறனாளியா மத்தவங்க கண்ணுக்குத் தெரிய மாட்டா…குறைகளை மாற்றும் திறனாளியாத்தான் தெரிவா…அதனாலதான்….”

தன் மனைவியின் அற்புதமான தொலை நோக்குப் பார்வையில் மெய் சிலிர்த்துப் போன குணசேகர் அவளை பெருமையாய்ப் பார்த்து பொறுமையாய் அணைத்தார்.

(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்








View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக