புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழனி ஆண்டவர் சிலையை விஞ்ஞான சோதனை செய்தவரின் கருத்து
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
http://murugan.org/tamil/saravanan.htm
இந்து ஆலயங்களில் உள்ள தெய்வங்களின் சிலைகளை கருங்கல் பாறைகளில் செய்வார்கள். அதற்குக் காரணம் அவற்றில் இயற்கையாக அமைந்து உள்ள அதி இழுவிசை சக்தியே. மேலும் கருங்கல் பாறைகள் பெரும் பலம் மிக்கவை . அது மட்டும் அல்லாமல் இயற்கை உருவாக்கி உள்ள பஞ்ச பூத சக்திகளான தண்ணீர், காற்று, நெருப்பு மற்றும் ஈதர் போன்ற அனைத்துப் பொருட்களும் அதற்குள் உள்ளன.
ஆனால் அப்படி இல்லாமல் பழனி ஆலயத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷ்யம் என்ற பொருளினால் செய்யப்பட்டு உள்ளது. சமஸ்கிருதத்தில் 'நவ' என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. 'நவ' என்றால் 'புதியது' அல்லது 'ஒன்பது' என்ற அர்த்தங்கள் உள்ளன. அது போலவே 'பாஷணம்' என்றால் 'விஷம்' அல்லது 'தாதுப் பொருட்கள்' என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. பழங்காலத்திய இலக்கியங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நவபாஷண சிலையை செய்தவர் சித்த முனிவரான 'போகர்' என்று கருத்து தெரிவித்து உள்ளார்கள்.
அங்குள்ள மூலவரின் சிலை நவபாஷணங்களினால் செய்யப்பட்டு உள்ளது. அதை மிகவும் நுண்ணியமாக ஒன்பது விஷப் பொருட்களின் கலவையினால் செய்து உள்ளார். அந்த ஒன்பது நச்சுத் தன்மைக் கொண்ட பொருட்களும் ஒன்றாகியபோது உடைக்க இயலாத பலம் மிக்க பொருளாக மாறியதும் அல்லாமல் பல வியாதிகளை குணப்படுத்தும் ஒருவித மருத்துவத் தன்மைக் கொண்ட பொருளாகவும் மாறி இருந்தது. அதற்குப் பின்னரே அந்தக் கலவையில் செய்த பொருளில் மூலவருடைய சிலை செய்யப்பட்டு உள்ளது.
அப்படிப்பட்ட ஒரு கலவையில் ஒரு சிலையை வடிவமித்து இருப்பதில் இருந்தே சித்த முனிவரான போகர் ரசவாத கலவைகளில் கைதேர்ந்தவர் என்பது மட்டுமல்ல , தொலைதூர கண்ணோட்டத்துடன் பின்னர் வர உள்ள காலத்து முருக பக்தர்களின் உடல் நலனில் பெருமளவு அக்கறை கொண்டு இருந்தவர் என்றும், அவர் மிக உயர்வான தெய்வீக நிலையில் இருந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.அந்த சிலையின் அருகில் சென்று உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு கழுத்துக்கு கீழே உள்ள பாகங்கள் தக்க விகிதாசாரத்தில் தற்போது இல்லை என்பது தெரியவரும்.
பக்தர்கள் உபயோகித்து இருந்த சில அபிஷேகப் பொருட்களினால் அந்த சிலையின் கைகளும் கால்களும் மிகவும் சேதம் அடைந்து உள்ளன. தொடைப் பகுதியில் முட்டிக்கு கீழே உள்ள கால்கள் மிகவும் மெல்லியதாகி விட்டது தெரிகின்றது. இரண்டு இரும்புக் கம்பிகள் ஒரு பீடத்தில் நிற்பது போலவும், எலும்புகள் தேய்ந்து போன நோயாளிகளின் கால்களைப் போலவும் தோற்றம் தரும் அளவிற்கு அந்த சிலை பழுது அடைந்துள்ளது. உடலின் பல பாகங்களில் சிறு சிறு பள்ளங்கள் போன்றவை தோன்றி உள்ளன. அந்த சிலை சொரசொரப்பான உடல் அமைப்பைக் கொண்டது போல காட்சி அளிக்கின்றது. கூர்மையான பொருள் போல சில பகுதிகளில் எதோ நீட்டிக் கொண்டு உள்ளது . அந்த சிலையின் கால்கள் பலவீனமாகி விட்டதினால் சிலையின் கனத்தைத் தாங்க முடியாமல் எந்த நேரமும் அந்த சிலையின் கால்கள் உடைந்து விடுமோ என்று கூட ஒரு கால கட்டத்தில் பயந்தார்கள்.
அந்த நிலை முற்றிக் கொண்டே போகத் துவங்கியதும், பல பக்தர்களும் மக்களும் அந்த சிலையின் உருவத்தை கண்டு அஞ்சி தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்களை அனுப்பினார்கள். அதனால் கவலையுற்ற தமிழக அரசும் 1983 -84 ஆம் ஆண்டுகளில் பழனியில் உள்ள அந்த பெருமை வாய்ந்த சிலை மேலும் பழுதாகி விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என தீர்மானித்து பல யோசனைகளைப் பரிசோதித்தது. அந்த சிலையை மாற்றி விடலாமா என்று கூட ஒரு கட்டதில் யோசனை செய்யப்பட்டது.
ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அகம விதிப்படி ஆலயங்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டப் பின் அந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி செய்தப் பின் முதலில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு இருந்த அதே சிலையை அது முன்னர் இருந்த இடத்திலேயே வாய்க்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக பழுதடைந்த சிலையை மாற்றி அதற்குப் பதிலாக அதே மாதிரியான சிலையை செய்து அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளதான முன் உதாரணம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட நிகழ்வுகள் எந்த ஆலயத்திலும் நடைபெற்றது இல்லை.
கற்பாறைகளில் செய்யப்பட்ட சிலைகளைக் கூட ஆலயங்கள் பழுது பார்க்கப்பட்டபோது தற்காலிகமாக அதே ஆலயத்தில் எங்காவது ஒரு பகுதியில் கொண்டு போய் வைத்து இருந்து , ஆலய வேலைகள் முடிந்தப் பின் அதே சிலையை அஷ்டபந்தனங்கள் செய்தப் பின் (வெண்ணையில் சில மூலிகைகளை கலந்து பசைப் போல தயாரித்து அந்த சிலை முழுவதையும் பூசுவதே அந்த நிகழ்ச்சி) முதலில் இருந்த இடத்திலேயே சிலையை கொண்டு போய் வைத்து விட்டு அதை மீண்டும் பிரதிஷ்டை செய்து விடுவார்கள். ஆனால் மூலவர் சிலையையே மாற்றி அமைத்து உள்ளதான சரித்திரமே எந்த ஆலயங்களிலும் கிடையாது.
பழனியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் வடிவமோ இன்னும் வித்தியாசமானது. மூலவர் சிலை பல மூலிகைகளைக் கொண்டு விசேஷமான கலவையில் தயாரிக்கப்பட்டு வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிலையாக வரும்கால சந்ததியினரின் உடல் நலத்தை மனதில் கொண்டு தெய்வாம்சம் கொண்ட 'போகரால்' செய்யப்பட்டு உள்ளது. அதை தயாரித்த விதமோ, அல்லது அந்த மூலிகைகளின் கலவையின் அளவோ எவருக்கும் தெரியாது. முதல் நாள் இரவு நல்ல சந்தனத்தை அரைத்து பசைப் போல செய்து அதை அந்த சிலை மீது பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது வேறு ஒரு மருத்துவக் குணம் கொண்டப் பசையாக மாறி வியாதிகளை தீர்க்கும் முறையில் மாறி விடுவதினால் அந்த சிலை மீது ஊற்றப்படும் தண்ணீரைக் குடித்தால் பல நாள்பட்ட நோயும் விலகுகின்றன என மக்கள் கருதினார்கள். அதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரம் உள்ளது என ஆலயம் வெளியிட்டு உள்ள புத்தகக் குறிப்பில் காணப்படுகின்றது.
ஒரு சாரரின் கருத்துப்படி அந்த சிலையில் உள்ள பொருட்களில் லட்சக்கணக்கான சில கிருமிகள் உள்ளன என்றும், அவற்றில் சில அபிஷேக நீருடன் கலந்து வெளியேறுவதினால் அதைப் பருகும் மக்களின் உடலில் உள்ள தீய அணுக்கள் மடிந்து வியாதிகள் வெளியேறுகின்றன என நம்பினார்கள். அந்த அபிஷேகப் பொருட்கள் பலநாட்கள் பத்திரமாக வைக்கப்பட்டு சித்த மருந்துகளாக பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனால்தானோ என்னவோ பழனி மலை அடிவாரங்களிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பல சித்த மருத்துவசாலைகள் பரவி உள்ளன என்பது வியப்பை அளிக்கும் செய்தியாக இருக்கவில்லை. பழனி தண்டாயுதபாணியே முதல் மருத்துவராக விளங்குவதினால் அந்த மூலவர் சிலையை மாற்றி அமைக்கலாம் என்ற யோசனையை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அந்த சிலை மேலும் பழுதடைந்து அழிந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அதற்கான வாழிமுறைகளை கண்டறிய ஒரு உயர்மட்டக் குழுவை அரசாங்கம் நியமித்தது. நல்ல கல்விமானும், பெரும் தெய்வ பக்தி மிகுந்தவருமான நீதிபதி சதாசிவம் அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் ஐந்து உப குழுக்களை ஏற்படுத்தி பல்வேறு வழிகளையும் ஆராய்ந்தது பார்த்து அந்தப் பிரச்னைக்கு தீர்வு தரக் கூடிய வகையில் கருத்துக்களைத் தருமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அந்தக் குழுக்களில் இருந்தவர்கள்:
பெரிய மடங்களின் மடாதிபதிகள், சமயத் தலைவர்கள்
புகழ் பெற்ற ஸ்தபதிகள்
ஆகமங்களில் சிறந்து விளங்கியவர்கள்
பூசாரிகள் மற்றும் பண்டாரங்கள்
விஞ்ஞானிகள்
நானும் ஒரு விஞ்ஞானி என்பதினால் அந்த உப குழுவில் இருந்த விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்று இருந்தேன். அந்த மூலவரின் சிலை எந்தப் பொருளினால் செய்யப்பட்டு உள்ளது என்பதைக் கண்டறியும் வேலை எங்களுக்கு தரப்பட்டு இருந்தது. நாங்கள் உண்மையைக் கண்டறியும் குழுவில் இருந்ததினால் மூலவரின் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டோம். அதை இன்னமும் என் வாழ்நாளில் கிடைத்த பெரிய பாக்கியமாகவே கருதுகிறேன். நாங்கள் அந்த சிலையின் அருகில் சென்று அதை ஆராய்ந்து பார்த்தோம். சிலையின் முகமோ எந்த விதமான சேதமும் அடையாமல் புத்தம் புதிய சிலையைப் போலவே காணப்பட்டதைக் கண்டு வியந்தோம். பூதக் கண்ணாடியைக் கொண்டு ஆராய்ந்ததில் அது கருங்கல் அல்லது அதைப் போன்றப் பொருள் போலவே தெரிந்தது. அடுத்து கழுத்துப் பகுதிகளையும் அதற்கு கீழே இருந்த உடல் பகுதிகளையும் ஆராய்ந்தபோது சிலையின் உடல் பாகத்தின் நிலையைக் கண்டு திடுக்கிட்டோம். முகத்திற்கும் உடம்புப் பகுதிக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. உடல் முழுவதும் சிதைந்து போய் சிறு சிறு பள்ளங்களும் இருக்க உடலின் சில பாகங்கள் நீண்டு கூர்மையான பொருட்களைப் போல நீண்டு இருந்தது. இரண்டு கால்களும் ஒரு மெல்லியக் குச்சி ஒரு பீடத்தில் நின்று உள்ளதைப் போல காணப்பட்டது. பலம் இழந்து போய் இருந்த மெல்லிய கால்களினால் எந்த நேரத்திலும் அந்த சிலை விழுந்து விடக் கூடிய அபாய நிலையில் இருந்தது.
மூலவரின் முகமோ புத்தம் புதிதாக இருக்க உடல் மட்டும் சிதைந்து போய் இருந்ததினால் முன்னர் நம்பப்பட்டதுபோல அந்த சிலை பழுதடைந்து இருந்தது அபிஷேகத்தினால் இருக்க முடியாது என்பது தெரிய வந்தது. அபிஷேகத்தினால் சிலை சிதைந்து உள்ளது என்பது உண்மை என்றால் முகம் மட்டும் எந்த மாறுதலும் அடையாமல் இருக்க, உடல் பகுதிகள் மட்டும் எப்படி பழுதடைந்து இருக்க முடியும் என்றக் கேள்வி எழுந்தது. ஆகவே அபிஷேகம் செய்து சிலை பழுதடிந்துள்ளது என்றக் கருத்து தவறானது என எங்களுக்கு புரிந்தது.
அடுத்த செய்தி, கர்பக் கிரகத்தில் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த அர்ச்சகர்கள் மற்றும் பண்டாரங்களுக்கும் பழனியில் இருந்த சித்த வைத்தியர்களுக்கும் இடையே இருந்த தொடர்புப் பற்றியது. அவர்களிடையே இருந்திருந்த தொடர்ப்பினால் சில விஷமிகள் அவ்வப்ப்போது அந்த சிலையின் உடலை சிறிது சுரண்டி அதில் கிடைத்தப் பொருட்களை சித்த வைத்தியர்களுக்குக் கொடுத்து இருக்கலாம், அதைக் கொண்டு அவர்கள் சில மருந்துகளை தயாரித்து இருக்கலாம் என்பதினால்தான் சிலை பழுதடைந்து உள்ளது எனப் பரவலாக கூறப்பட்டது. ஏன் எனில் பழனியில் இருந்த சில சித்த வைத்தியசாலைகள் திடீர் எனப் பெரும் புகழ் பெற்றன. அந்த சிலை எதோ ஒரு வகையிலான கருங்கல்லினால் செய்யப்பட்டு உள்ளது போல தோற்றம் தந்தாலும் அதை விஞ்ஞான பூர்வமாக எங்களால் நிரூபிக்க முடியவில்லை என்பதின் காரணம் அந்த சிலையில் இருந்து விழுந்த எந்தப் பொடித் தூள்களுமே எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த சீலையின் மீது ஊற்றப்படும் அபிஷேக நீர் அந்த சிலையின் மீதுள்ள நவபாஷண பொருள் மீது ஏறி வருவதினால் ரசாயன மாற்றம் அடைந்து அது வியாதிகளை குணப்படுத்தும் தன்மைக் கொண்டதாக மாறி விடுகின்றது எனவும், அந்த நீரைப் பயன்படுத்தியவர்களுக்கு பெரும்பான்மையான வியாதிகள் விலகி உள்ளன என்றும் அங்குள்ளவர்கள் எங்களிடம் கூறினார்கள். ஆகவே அந்த அடிப்படையிலும் எங்களுடைய சோதனைகளை தொடரலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் நல்ல சந்தனத்தை பசையைப் போல அரைத்து அதை அந்த சிலையின் மீது பூசினோம். அதை இரவு முழுவதும் அந்த சிலையின் மீதே இருக்குமாறு விட்டு வைத்து விட்டு மறுநாள் அந்த சந்தனப் பசையை எடுத்து பரிசோதனைக்கு உள்ளாக்கினோம். அணுத்தூள்களை சோதனை செய்யும் கருவியான 'பேர்க்கின் எல்மார் ௭௦௭' எனும் மிக நீளமான கருவியை திரவப் பொருட்களை ஆராய்ச்சி செய்யும் நிலையில் துல்லியமாக நிலை நிறுத்தி விட்டு அந்த சிலையில் இருந்து வெளியேறி மாற்றத்தைத் தரும் பொடிகள் ஏதும் சந்தனத்துடன் கலந்து வருகின்றதா என ஆராய்ந்து பார்த்தோம். என்ன ஆச்சர்யம். சிலை மீது இருந்து எடுத்த சந்தனப் பசையில் எந்தப் பொடிகளுமே கலந்து வரவில்லை என்றாலும், அந்த சந்தனப் பசை மருத்துவ குணம் கொண்டப் பசையாக மாறி இருந்ததைக் கண்டோம். பலமுறை அந்த சந்தனக் கலவையை எடுத்து ஆராய்ந்தபோதும், ஒரே மாதிரியான முடிவையே தொடர்ந்து காட்டிக் கொண்டு இருந்தது. ஆகவே இரவு முழுவதும் சிலை மீது நாங்கள் பூசி வைத்து இருந்த சந்தனப் பசை என்ன ரசாயன மாற்றம் அடைந்து இருந்தது என்பதை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அது எங்களுக்கு உணர்த்திய உண்மை என்ன என்றால், எந்த நவீன விஞ்ஞானக் கருவிகள் மூலமும் தெய்வீகத் தன்மைக் கொண்டப் பொருட்களை ஆராய முடியாது என்பதே.
அதன் பின் நாங்கள் எங்களுடைய அறிக்கையை தயாரித்து தலைமை செயலாளருக்கு அனுப்பினோம். அவரும் அவற்றுக்கு தேவையான மேற் குறிப்புக்களுடன் அதை அரசாங்கத்திடம் சமர்பித்தார். அந்த சிலையின் உருவ பாதுகாப்பைக் கருதி அந்த சிலைக்கு பயன்படுத்தி வந்த அபிஷேகப் பொருட்களுக்கு பல கட்டுப்பாடுகளை அறிவித்து அதன்படித்தான் சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்து இருந்தோம். அந்த ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தபோதே இன்னொரு வதந்தியும் நிலவிக் கொண்டு இருந்ததைக் கண்டோம். அந்த செய்தி என்ன என்றால் சித்த முனிவரான போகர் பழனியில் தான் செய்து வைத்து இருந்த சிலையைப் போலவே மூன்று சிலைகளை செய்ததாகவும், அவற்றில் இரண்டு சிலைகளை பூமியில் எங்கேயோ மறைத்து வைத்து உள்ளதாகவும், தக்க சமயத்தில் தெய்வீகப் பிறவி ஒருவர் அதைக் கண்டுபிடித்து வெளியில் எடுத்து அந்நாள்வரை பயன்படுத்தி பழுதடைந்து உள்ள சிலையை மாற்றி அமைப்பார் என்பதே. இதன் மூலம் தெரிய வந்தது என்ன என்றால் இறைவன் நம்மிடம் கொடுத்து உள்ள பொருட்களை முறையாகப் பயன்படுத்தினால் நாம் பல நன்மைகளை அடைய முடியும். ஆனால் மனிதர்களால் இறைவனது படைப்புக்களை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது. ''மனித குலத்துக்கு தான் செய்து உள்ள சேவை, புராதான காலமாக வந்துள்ள நியமங்களை மதித்து நடக்க வேண்டியதின் அவசியத்தை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டும்'' என்பதே.
முருகனுடைய சிலையில் இருந்து எந்தப் பொருள் ரசாயன மாற்றத்தைத் தருகின்றது என்பதை நவீனக் கருவியினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்ற உண்மையை பெரும்தன்மையுடன் ஒரு விஞ்ஞானி வெளிப்படுத்தி உள்ளார்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஆச்சரியமான தகவல்...
இன்னும் மூலவரின் சிலை அதே நிலையில் தான் உள்ளதா...
இன்னும் மூலவரின் சிலை அதே நிலையில் தான் உள்ளதா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- velmurugan1986புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 25/01/2013
எனக்கு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்
ஆச்சரியமான தகவல்... பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பல வருடங்களுக்கு முன்பே (15) திக மீட்டிங்க்ல இதப் பத்தி சொல்லுவாங்க - முருகனக் கூட விடல சுரண்டிட்டானுங்க நம்மாளுகன்னு
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
:அடபாவி:
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் கூட அப்ப பேபரில் இந்த செய்தியை படித்து இருக்கிறேன், ஆனால் அவர்கள் பரிந்துரதுரை என்ன அதன்படி இப்போது பழனிஆண்டவர் சிலை பலமாக ஆக்கப்படுள்ளதா ? தெரியவில்லையே யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்.
நல்ல பதிவு கேசவன் நன்றி
நல்ல பதிவு கேசவன் நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1