புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
91 Posts - 61%
heezulia
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%
viyasan
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%
eraeravi
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
283 Posts - 45%
heezulia
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
19 Posts - 3%
prajai
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுள் என்றால் என்ன?  Poll_c10கடவுள் என்றால் என்ன?  Poll_m10கடவுள் என்றால் என்ன?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் என்றால் என்ன?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jan 18, 2013 7:46 pm

மூலம்: சுவாமி தயானந்த சரஸ்வதி (Discourses on certain topics என்ற நூலில்இருந்து)
தமிழில்: வேதம் கோபால்.
:-
கடவுள் என்ற தலைப்பு நம் எண்ண கருத்தாக்கத்திற்கோ நம் கற்பனையாலோ பேசப்படும் விவாத பொருள் அல்ல. இருப்பினும் இது ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும், ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறாகவே பேசப்பட்டு வருகிறது. கடவுள் யார் என்று ஒருவருக்கும் தெரியாது. இருந்தாலும் எல்லோரும் ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதைபோல் கடவுள் என்ற தத்துவத்தை வசைமாரி பொழிந்ததுபோல் எதையுமே சாடி இருக்கமுடியாது. அதையும் கடவுள் ஒருவரால்தான் கையாளமுடியும். அவரை பல பெயர் சொல்லி அழைக்கின்றோம். கடவுள் தண்டனை அளிப்பவர் என்றும், பயங்கரமானவர் என்றும், அதே நேரத்தில் அவர் அன்பே உருவானவர் என்றும் சொல்லுகிறோம். சில தத்துவங்கள் இரண்டு செய்தியை சொல்லுகிறது – கடவுள் உன்னிடம் அன்பு பாராட்டுகிறார் ஆனால் நீ விழிப்புடன் ஜாக்கிரதையாக நடக்கவேண்டும். இது எப்படி இருக்கின்றது என்றால் நான் அன்பு பாராட்டுவேன், ஆனால் என் கண்களில் படாதே என்பதுபோல். இப்படி கடவுள் பலவாராக விளக்கப்படுகிறார்.கடவுள் மறுப்பாளர்கள் கூட நீங்கள் எந்த கடவுளை மறுக்கிறீர்கள் என்றால் அவர்கள் மேல் உலகில் அமர்ந்துகொண்டு இந்த அண்டங்களை கீழே உருட்டி விட்டவராகக் கருதும் கடவுளைத் தான் என்கின்றார்கள். நாமும் அந்த கடவுளை மறுக்கின்றோம்.அப்படி ஒரு கடவுள் இல்லை என்பதை நம்மால் நிருபிக்கமுடியும்.
:-
ஒருவர் கடவுள் உண்டு என்றோ அல்லது இல்லை என்றோ சொன்னாலும் அவரது இருப்பு ஒரு புரியாத புதிர்தான். ஆனால் அதைப் புரிந்துகொள்ள நிறைய திட்ட வழிமுறைகளும், இயற்கை நியதிகளும் உள்ளன. இவை பலவானதும் வேறுபாடுகள் கொண்டதும் ஆகும். ஆனால் அதுவே பிரபஞ்சம் ஆகாது. இந்த உலகம் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல இயற்கை நியதிகள் அளிக்கப்பட்டுள்ளன. நமக்கு பௌதீக உடல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளேயே உடல் வளர பல சுழல் செயல்பாடுகள் முறையே அளிக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருக்க பிராணவாயு அளிக்கப்பட்டுள்ளது. வயிற்றுப் பசியை போக்க உணவுதேவை, அது தாராளமாக வெளியில் கிடைக்கிறது. இந்தஉணவு சக்திகளை தர ஜீரணசக்திஅளிக்கப்பட்டுள்ளது. பல விதஉணர்வுகள், உணர்ச்சியை வெளிப்படுத்த சிந்திக்க மூளை, அதன் மூலம் பலவற்றைத் தெரிந்துகொள்ள ஏதுவாக அளிக்கப்பட்டுள்ளது.
:-
இதனால் நமது தேவைகளை அடைய, சுதந்திரமாக சிந்திக்க, குறிக்கோள்களை அடைய என்று பலவிதமான தெரிந்த இயற்கை நியதிகளும், நமக்கு இருக்கின்றதா என்று தெரியாத இயற்கை நியதிகளும்,இருக்கின்றது என்று தெரிந்தும் தெரிந்துகொள்ள முடியாத இயற்கை நியதிகளும் உள்ளன. புதிய கண்டுபிடிப்புகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. எல்லா விஞ்ஞான முன்னேற்றமும் நமக்கு”அளிக்கப் பட்டதே” ஆகும். உண்மையில் எதுவும் நம்மால் படைக்கப் படவில்லை. ஒரு துளி பொருளை நாம் உணடாக்கவும் இல்லை அழிக்கவும் இல்லை. இப்படி நமது தேவைகள் எல்லாமுமே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதன் செயல் முறையும் அதிசயத்தக்கது. இப்படி நமதுதேவைகளை அளித்தவர் என்று ஒருவர் நிச்சயம் இருக்கிறார்.
:-
கடவுள் என்றால் என்ன என்ற கேள்வியை நாம் தவிர்க்கமுடியாது. இது உடலோடும், உயிரோடும் ஒன்றியது. உண்மை என்னவென்றால் கடவுள் இப்படித்தான் என்ற எல்லை உடையவர். இதை அவர் அவர் எண்ணஓட்டத்தின்படி சித்தரிக்கப்படுபவர் அல்ல. ஒன்றும் ஒன்றும் கூட்டினால் மூன்றுதான் என்பது என்நாட்டில் வழக்கம் என்றோ அல்லது ஒனறும் ஒன்றும் கூட்டினால் நான்குதான் எங்கள் கலாசாரம் என்றோ கூறமுடியாது. அதைப்போல் கடவுள் என்ற உண்மைக்கு ஒரு இறுதி தீர்ப்புதான் இருக்கமுடியும். கடவுள் என்பது உண்மை என்றால் நாம் அவரை நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டும். கடவுள் என்ற சொல் பல பாதிப்புக்களை உடையதால் புனிதமான சமஸ்கிருத சொல்லான ஈஸ்வரன் என்ற சொல்லை பயன் படுத்துவோம்.
:-
ஈஸ்வரன் என்ற வேதத்தின் பதமே ஒரு வித்தியாசமானது. நான்கு வேதங்கள் முடிவில் வேதாந்தத்தை பற்றி கூறுகையில் இந்த ஈஸ்வரன் பற்றி சில சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் ஈஸ்வரன் என்பதே அறிவிற்கு ஒரு வழிகாட்டியாக பிரமாணமாக உள்ளது. ஈசாவாஸ்ய உபநிடதம் ”ஈசாவாஸ்யம இதம் சர்வம்” (இங்கே உள்ளது அனைத்தும் ஈசனே) என்கிறது. எனவே நாமும் அதை அப்படியே உற்று நோக்குவோம். இங்கே இருப்பதெல்லாம் ஈஸ்வரன்தான், ஈஸ்வரன் அல்லாது வேறு ஒன்று இல்லை. நாமும் தூய்மையான எண்ணத்துடன் எல்லாம் ஈஸ்வரன்தான் என்று பார்ப்போம். வேதம் இங்கே இருப்பது ஒரு ஈஸ்வரன் என்றுசொல்லவில்லை இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரன்தான் என்கிறது. (TheVeda is not saying there is one Ishwara; its says there isonly Ishwara ) .
:-
நீ அதை பார்க்கவில்லை என்றால் அதை உண்மையில்லை என்று நிரூபிக்க வேண்டும். அது ஒரு வெறும் நம்பிக்கையைசார்ந்தது அல்ல. இது நாம் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று. நாம் புரிந்துகொண்டுவிட்டோமானால் அதுவே சர்வ நிச்சயம், யதார்த்தம். இங்கே ஊகத்திற்கு வேலை இல்லை. ஈஸ்வரன் என்பது நம்பிக்கை சார்ந்த ஒரு பொருள் அல்ல. புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றேயாகும். நாம் ஈஸ்வரனை மானசீகமாகவோ, பட்டும் படாமலுமோ பாராட்டலாம். ஆனால் இங்கே நம்பிக்கைக்கு வேலை இல்லை. இங்கே எனக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. நான் எதையும் நம்ப தேவையில்லை. ஒரு பௌதீக பேராசிரியர் சக்தி-பொருண்மை (Energy-matter) என்பதை கூறுகையில் E=mc2 என்கிறார். ஒரு எம்.எஸ்.சி. மாணவன் அவர் வகுப்பில் எழுந்து எனக்கு உங்கள்மேல் நம்பிக்கையிருப்பதால் எனக்கு அந்த சமன்பாடு பற்றிபுரியாவிட்டாலும் பரவாயில்லை என்பது எப்படி முட்டாள் தனமோ அப்படித்தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பதுவும். இந்த அகிலமே ஈஸ்வரன்தான் என்றால் அது வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல; நாம் துருவித் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jan 18, 2013 7:58 pm

ஈஸ்வரன் என்றால் என்ன ?
இங்கே நாம் காண்பதெல்லாம் பல இயற்கையாகவே உருவானவை, பல இயற்கையில் உருவான ஒன்றோடு ஒன்று புத்திசாலித் தனமாக இணைந்து காணப்படுகிறது. ஆனால் இப்படி பிணைக்கப் பட்ட ஒன்று பிணைத்தபின் பிரித்தால் பிணைப்பினால் உண்டான செயல் திறன் இருப்பதில்லை. ஒரு மோட்டார்வண்டியை எடுத்துக்கொள்வோம்.அது பல பாகங்களைக் கொண்டு புத்திசாலித்தனமாக இணைக்கப் பட்டு செயல் படுகிறது. இப்படிப் பட்ட புத்திசாலிதனத்துடன் இணைக்கப்பட்டு ஒரு செயற்கையான செயல் திறனை வெளிப்படுத்துவதை நாம் சிருஷ்டி என்கின்றோம். இது ஒரு அதிசயமான நிஜம். தூக்கணாம் குருவியின் கூடு ஒரு சிருஷ்டி. மோட்டார் வாகணம் ஒரு சிருஷ்டி. இரண்டு சக்கர சைக்கிள், ஒலிபெருக்கி இங்கே உள்ள பெறும் சுவர்கள் இவை எல்லாமே ஒரு சிருஷ்டிதான். நாம் ஒரு தூக்கணாம் குருவி கூடு மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பதை காண்கையில் அது இயற்கையிலேயே கிடைக்கும் தழைகள், நார்கள் கொண்டு பின்னப்பட்டாலும் அதை நாம் ஒரு இயற்கையில் உண்டான பொருளாகக் காணவில்லை.. இந்த இயற்கைப் பொருள்கள் புத்திசாலிதனமாக பின்னப்பட்டுள்ளது. அது தானே மேலே பறந்து ஒரு கூடாக மாறவில்லை. அந்த பொருட்களை பறவை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து சாமர்த்தியமாக புத்திசாலித்தனத்துடன் இணைத்துக் கூடாக மாற்றியிருக்கிறது.
:-
மேலும் பல இயற்கையான பொருள்கள் உண்டு. நம் கண்ணே ஒரு இயற்கைப் படைப்புதான். அது ஒரு தாய் தந்தையரால் உருவாக்கப்பட்டது அல்ல. அதுவும்கூட புத்தி சாதுரியத்துடன் பல பாகங்களைக் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. கரோனா,ரிடினா, ஆப்டிக் நர்வ் என்று சேர்ந்து அதன் செயல்பாடுகள் வியக்கதக்க அளவில் உள்ளது. நமது இருதயம் ரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களுக்கு பம்ப் செய்கிறது. இந்த ரத்தம் இல்லாமல் ஒரு திசுக்களும் உயிரோடு இருக்காது, அது இறந்துவிடும். நமது இதயமே ஒரு ’பம்ப்’ (காற்றடிக்கும் சாதனம்). அது இடைவிடாது ஒருவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வேலை செய்கிறது. இதுவும் ஒரு அதிசயக்கத் தக்க உடல் உறுப்பே ஆகும். மேலும் இருதயம் ரத்தத்தை உடலின் பலபாகங்களுக்கு தானே பம்ப் செய்வதோடு அல்லாமல் சாமர்த்தியமாக ரத்தத்தை தன்னுள்ளும் இழுத்துக் கொள்கிறது. இங்கே எல்லாவற்றைவிட உயர்வான செயல் திறன் வெளிப்படுகிறது. இது மிகவும் முக்கியமான நிஜம். அது எப்படி செயல்படுகிறது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
:-
நாம் புரிந்துகொண்ட வகையில் இவை எல்லாமுமே ஒர் அறிவாற்றலைச் சார்ந்தது. நாம் நுண் உயிர் செல்களை பரிசோதிக்கையில் நமக்கு மேலும் பல விஷயங்கள் தெரியவருகிறது. இந்த நுண் உயிர் செல்கள் உயிரியலின் (biology) நியதிகளுக்குக் கட்டுப்பட்டது. உண்மையில் நுண் செல் என்பது ஒரு உயிரியல் அலகு. அது பொதுவான பல தன்மைகளை எல்லா நுண் செல்களிடத்திலும் கொண்டுள்ளது. ஒரு பேச்சுக்காக இந்த நுண் செல்கூறுகள் சுவாமி தயானந்தருக்கு என்று ஒரு மாதிரியாகவும் (ஏன் என்றால்அவர் சுவாமிஜி!) என்றும் மற்றவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும் என்பது உண்மையில் நிஜம் இல்லை. நமது கண்கள் பல அணுக்கூறுகளின் சேர்க்கை. காதும் அவ்வாறே, அதில் ஏதும் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த மொத்த அணுக்கூறுகளும் பல்வேறுவிதமாக இணைக்கப்பட்டு, பல்வேறுவிமான செயல்திறன்களை வெளிப்படுத்துவது என்பது ஒரு புத்தி சாதுரியத்துடன் செய்யப்பட்டுள்ளது. இப்படி அதிசயத்தக்க புத்தி சாதுரியத்துடன் இயற்கையாகவே பிணைக்கப் பட்டுள்ளவைகளை நாம் அந்த அணுக்கூறுகள் தாமே இயங்கி இணைந்தது என்று கூறமுடியாது. சலனமற்ற புத்திசாதுரியம் இல்லாத அணுக்கூறுகள் தானாகவே இயங்கி ஒன்றுபட்டு நமது கண், காது, இருதயமாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.ஏன் இந்த மொத்த உடலே ஒரு புத்தி சாதுரியத்துடன இணைக்கப் பட்டுள்ளது. இதில்எந்த தனிப்பட்ட மனிதனின் பங்கும் கிடையாது. எனவே இது ஒரு அதிசயதக்க செயல்பாடு என்பதும், அது இந்த ஜகத்தின் ஒரு அங்கம் என்பதும் உண்மை.
:-
இயற்பியலை எடுத்துக் கொண்டால், நாம் புரிந்து கொள்வது, கண் எதிரே உள்ள உலகம், இந்த பூமி, நாம் உயிர் வாழ்வதற்க்காக உண்டான இந்த உடல், மூளை, உணர்வு பாகங்கள்எல்லாமுமே ஒரு புத்தி சாதுரியத்துடன் பிணைக்கப் பட்டுள்ளது என்ற விஷயம் தான். இதுதான் சிருஷ்டி என்பதாகும். எனவே இந்த பிரபஞ்ச படைப்புகள் எல்லாம் ஆச்சரியத்தில் அமிழ்த்தும் ஒர் உன்னத சிருஷ்டியாகும். எனவே இந்தபிரபஞ்சமே ஒரு அதிசயதக்க உருவாக்கமே ஆகும். இந்த உருவாக்கம் மிகவும் சாமர்த்தியத்துடன் பிணைக்கப் பட்டுள்ளது. உருவாக்கம் என்றால் அது அறிவு சார்ந்ததே ஆகும். அறிவு இயங்கக் கூடிய ஒரு வஸ்து ஜடப் பொருளாக (inert) இருக்கமுடியாது.
:-
அவர் நமது உணர்வுகளுக்கு புலப்படும் அறிவாற்றலை உடையவர். அவரை நாம் புரிந்துகொள்ள வேண்டும், பின் பற்ற வேண்டும். அவரை நாம் காண்கிறோமோ இல்லையோ என்பது வேறு. நாம் ஒரு அழகியஓவியத்தைப் பார்க்கையில் நம் கண் எதிரே ஓவியமும் அதை உருவாக்கியவர் திறமையும் மனக்கண் முன் தோன்றுகின்றன.அதைபோல நாம் இந்த பரந்த பிரபஞ்சமான, புத்தி சாதுரியத்துடன் உருவாக்கப்பட்ட ஜகத்தை கண்ணால் பார்க்கின்றோம் அதை உருவாக்கியவர் இங்கிருந்தாலும் எங்கிருந்தாலும் அவர்தான் அனைத்தும் செய்பவர் (”சர்வஸ்ய கர்த்தா”) அனைத்தும் அறிந்தவர் (”சர்வகஞ:”), எல்லா மன உணர்வுகளுக்கும் புலப்படும் இந்த சர்வசக்திமானையே நாம் சமஸ்கிருத மொழியில்”ஈஸ்வரன்” என்றும், ஆங்கிலத்தில் God என்றும் சொல்கின்றோம்.
:-
நன்றி தமிழ்ஹிந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக