புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 15, 2013 1:24 pm

First topic message reminder :

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்
ரமணி

01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம்
தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு.
நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும்
நகையென மின்னும்
தகைசால் தெய்வீகத் துறவி
ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே.

மராட்டிய மாநில மூதூர் ஒன்றில்
விராட்டுரு முனியின் வீதியோர முகாம்.
யானைமேல் அமர்ந்து
நாலுபேர் சாலைவழிப்
போவதைப் பார்த்தார் பெரியவர்.
அவர்களை உடனே அழைத்து உசாவினார்:
இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ?

நாங்கள் ஓர்காலம் நீங்காத செல்வமுடன்
பாங்காக வாழ்ந்தோம் ஸ்வாமீ!
எந்தைதம் காலம் எய்திய காலை
விந்தையான முறையில்
தனங்கள் அனைத்தும் தானம் செய்துவிட்டு
வனமிகிவ் வானை எம்வசம் தந்து
கற்றது ஊரெல்லாம் சொற்றியே
உற்ற காலம் கழித்து வாழ்வீர்
என்று சொல்லி நன்று மறைந்தாரே!

அதன்படி நாங்களும் அங்கும் இங்கும்
மெதுவாக யானைமேல்
ஊர்விட்டு ஊர்சென்று
பேர்மிகு புராணக் கதைகள் சொல்கிறோம்
பக்திப் பாக்கள் பாடுகிறோம்
ஏதோ கொஞ்சம்
தீதில்லாப் பொருள்கிடைக்கும் எமக்கும் யானைக்குமே!

ஹாஹா என்று சிரித்தார் பெரியவர்.
இங்கேயும் இதுதான் நடைமுறை!
இவர்களும் என்னை யானைபோல்
தவறாது ஊர்விட்டு ஊராக
அழைத்துச் செல்லும் இடங்களில் நானும்
உழைக்கிறேன் பக்தி உள்பலம் பெருகவே.

இவர்கட்கும் சாப்பாடு பணமெனக் கிடைக்கும்
எனக்கும் பக்தர்கள்
எனக்கும் உமக்கும் ஒரேதொழில்!
பெரியவர் சிரிப்பில் நகைச்சுவை உணர்வும்
சரிசம உள்ளமும் கண்ட பக்தருளம்
விரிவும் உவகையும் வியப்பும் உற்றதே!

--ரமணி 08/01/2013

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 13, 2013 11:26 am

07. அற்புதங்கள் நிகழ்வன, நிகழ்த்தப்படுவன அல்ல!
(நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா)

தரவு
நகரத்தார் குடும்பத்திலொரு சிவபக்த செட்டியார்
அகரத்தின் ஆதியாக அவதாரப் பிரம்மமாகக்
கருணையலை பாயவிட்டுக் கரைசேர்க்கும் காஞ்சிமகான்
அருள்புரிந்த அனுபவத்தை அகம்நெகிழச் சொல்லுவரே.
ஆசார சீலமுடன் மாசற்ற பக்தியுடன்
பாசமிகு தன்மகனைப் பரிவுடனே அழைத்துக்கொண்டு
திருப்தியுடன் செட்டியாரும் தரிசனம் செய்துகொண்டு
திரும்பும்போ தவர்மகனும் திடீரென்று கிசுகிசுத்தான்.

தாழிசை
காதலுடன் சிறுவனவர் காதிட்டதைக் கண்ணுற்று
ஆதவன்நேர் அருமுனிவர் அருள்சுரக்க வினவினரே
குழந்தையவன் உங்களிடம் காதிட்ட தென்னவோ?
பிழையில்லை தயங்காமல் என்னிடம்நீர் கூறலாமே.

சற்றேதயங் கியவண்ணம் செட்டியார் சொன்னதிது
குற்றங்கள் பொறுத்தருள்வீர் குழந்தையவன் கேட்கின்றான்
பெரியவர் மடியினிலே பச்சைநிறப் பாவாடையில்
பரிவுடனே அமர்ந்திருக்கும் பாப்பாஅவள் யாரென்று.

யாருக்கும் தென்படாத தாயுருவக் குழவிசெட்டி
யார்பையன் கண்ணுக்குத் தெரிவதனை நம்புவதா
கூடாதா எனக்குழம்பி கூடிநின்றோர் ஆவலுடன்
ஆடாமல் அசையாமல் ஆன்றவிந்தார் முகநோக்கினர்.

தனிச்சொல்
எனவாங்கு

சுரிதகம் (ஆசிரியச் சுரிதகம்)
சிறுவன் சொன்னது வாஸ்தவ மென்று
குறுமுனிச் சித்தர் கூற லுற்றார்:
திருமடக் குருவினர் பரம்பரை தனக்கு
வருமருள் இப்படி வரப்பிர சாதமாய்.
எங்கள் மடிதனில் சாரதா தேவீ
தங்குவ ளென்பது தரணியி லைதிகம்
குபேர னுக்கே காட்சி தெரியும்
குபேர னாவான் குழந்தை விரைவில்.
அன்று நடுத்தர வர்க்கமா யிருந்தும்
ஆண்டுக ளிரண்டு ஓடிய பின்னர்
செட்டியார் பையன் சட்டென வேறு
செல்வக் குடியினில் வளர்மக னானான்.
அறுபத் தொன்பது வயதில் இன்றவர்
சிறுவர் இருவரை ஈன்று வளமுடன்
சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வருகிறார்.
பாரில் அதிசயம் யாவும்
நேருவ துண்டு நிகழ்த்துவ தில்லை.

--ரமணி 13/05/2013

பயன்பட்ட சுட்டிகள்:
INCARNATION OF BHRAHMA SWARUPAM ! | Kanchi Periva Forum
[url]http://balhanuman.wordpress.com/2010/11/13/பிரம்மத்தின்-அவதாரம்/[/url]

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jun 02, 2013 7:35 am

08. இருவினைப் பலன்கள்

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
[அரையடி = விளம் மா தேமா; அடியெதுகை, சீர்கள் ஒன்றிலும் நான்கிலும் மோனை.]

அடியவர் ஒருவர் நெஞ்சில்
. அரித்திடும் கேள்வி யொன்று
விடைதெரி யாமல் நின்றார்
. வினைகளின் பலன்கள் பற்றி.
உடலினை உகுத்து ஆவி
. உலகினை விட்டுச் செல்லும்
நடைமுறை வாழ்வில் எங்கு
. நல்வினை பாவத் துய்ப்பு? ... 1

நரகினில் பாவம் யாவும்
. நலங்கெடத் துய்த்த பின்னர்
இருந்திடும் மீதி புண்யம்
. ஏகிடும் சுவர்க்க வாழ்வில்!
பிறப்பினில் மீண்டும் துய்க்க
. பேறுகள் வினைகள் ஏது?
இருமுறை சிட்சை என்றே
. பிறவிகள் ஆகு மன்றோ? ... 2

இழிநிலைப் பிறவி வாய்க்க
. இருக்குமே பாவ மூட்டை
செழுமையில் பிறக்க உண்டு
. செறிந்திடும் புண்ய மூட்டை
பழுதிலாக் கதியீ தென்று
. பனுவலும் உரைத்து நிற்க
பிழையிது என்றே தோன்ற
. பக்தரும் அல்ல லுற்றார். ... 3

பெரியவர் காஞ்சி யோகி
. பக்தரின் மனத றிந்து
அருளுரை சொன்ன போது
. அகன்றதே ஐய மெல்லாம்!
பரிவுடன் முனிவர் சொன்ன
. பொருள்மிகு உவமை தன்னில்
பரிதிமுன் மூட்டம் போலச்
. சடுதியில் தெளியும் உள்ளம்! ... 4

குளிர்ந்திடும் போது தண்ணீர்
. திரவமாய் இருப்ப துண்டு
ஒளிர்ந்திடும் கதிரில் தண்ணீர்
. திரவமாய் இருப்ப துண்டு
குளிர்தழல் அளவை விஞ்ச
. உறைந்திடும், ஆவி யாகும்!
அளவுடன் இருந்தால் தண்ணீர்
. நிலையினிற் பிறழா தன்றோ? ... 5

நல்வினை பாவம் எல்லாம்
. நம்முடன் தொடரும் சன்மம்,
வல்வினை யாக அன்றி
. வரம்பினில் இவையே நின்றால்!
எல்லையை இரண்டும் மீறி
. எடுப்பினில் நிற்கும் போது
தொல்லைதான் நரகம் சொர்க்கம்
. தீர்ந்தது தொடரும் சன்மம்! ... 6

முத்தியே கால எல்லை
. மரபுகள் மீறி நிற்கும்
உத்தியாய் நிற்கும் மேல்கீழ்
. உலகினில் காலம் உண்டு
நத்திடும் சுவர்க வாழ்வு
. நல்வினை தீரத் தீரும்
அத்தனை நரக வாழ்வும்
. அற்றிடும் காலம் உண்டு. ... 7

பாவமே எஞ்சிப் போக
. பாரினில் துக்க வாழ்வு!
ஆகவே தருமம் செய்து
. புண்ணியம் சேர்த்துக் கொள்வாய்!
ஆகம நூல்கள் சொல்லும்
. அறவழி இதுவே என்று
யோகமாய் வாழ்ந்து பார்த்து
. உயர்வதில் கிட்டும் முக்தி! ... 8

--ரமணி, 01/06/2013

பயன்பட்ட சுட்டிகள்:
Doubt clarified through Maha Periyavaa's lecture | Kanchi Periva Forum

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jun 21, 2013 11:14 am

09. ’அவருன்னை என்னடா பண்ண முடியும்?’

(கலித்துறை)
காஞ்சிமா முனிவரது கருணையிலே கனிந்துவந்த கோமகனார்
வாஞ்சையுடன் அவரிவரை வாடாவென் றழைக்கும் வாக்காளர்
காஞ்சனமாம் எழுத்துலகில் பரணீதர மெரினாவாம் ஶ்ரீதர்சொலும்
ஆஞ்சனேயர் போல்நின்று அவராசான் காத்தருளிய அனுபவமிது. ... 1

அற்புதங்கள் நிகழ்த்திவரும் கற்பனைமிகு சித்தர்களில் அவரொருவர்
பற்பலவாம் நோய்களையும் குணமாக்கும் திறமைகள் படைத்தவரவர்
தற்செயலாய் உருவான சூழ்நிலையில் சகோதரர்க்குத் தாளாத
வற்றாத வயிற்றுவலி வந்திடவே சென்றேன்நான் வினைதீர்க்க. ... 2

பூசைசெய்து அண்ணனுக்குத் தந்தாரவர் திருநீற்றுப் பிரசாதம்
ஆசையுடன் அவர்பற்றி எழுதுவதைச் சித்தரவர் எதிர்நோக்கி
வாசலுக்கு ஈர்த்திட்ட சூழ்நிலையில் வேறேதும் வழியின்றி
ஆசையோ ஆர்வமோ ஏதுமின்றிச் சென்றேன்நான் அழைப்பேற்று. ... 3

நடுநிசியில் அறைக்கதவைத் தாளிட்டவர் அற்புதங்கள் நிகழ்த்தினார்
வடித்துவைத்த சாதமவர் வன்கையில் அரிசியானது வற்றிப்போய்
அடுப்பினிலே சமைத்திட்ட பருப்பெல்லாம் துவரையாய் ஆயிற்று
தடையின்றிப் பழனி-மதுரை திருச்சானூர்ப் பிரசாதங்கள் தருவித்தார்! ... 4

வேறென்ன வேண்டும்*ஓய் ஏனெதுவும் பேசவில்லை வியக்கவில்ல
பாறங்கல் மனதினிலே நினைவென்ன என்றாரவர் ஆறாது
கூறுவதற் கேதுமிலை இன்னும்பல அற்புதக் கூத்தர்நீர்
வேறென்ன சொல்லநான் என்றவுடன் கோபத்தில் வீறிட்டார். ... 5

எழுத்தாளர் என்பதனால் பேச்சினிலே சாமர்த்திய எண்ணமோ
வழுத்துகிறேன் இப்பொழுதே உபதேச மந்திரத்தை வாருமையா
எழுதிக்கொள் வீரென்றார் வந்ததுவே காகிதமுடன் எழுதுகோலும்
பழுத்தபழம் காஞ்சிமகான் படம்நெஞ்சில் தொட்டுப் பார்த்தேன். ... 6

உபதேசம் வேண்டாமே என்றவுடன் சத்தமிட்டார் உரத்தகுரலில்
விபரீதம் தாமுமக்குப் பலபேரென் உபதேசம் வேண்டிநிற்பார்
அபவாதம் அடியேனின் அடிவயிற்றில் அச்சமென அழுத்தியது
கபடமுடன் அவரெழவே பெரியவரைத் தியானித்தேன் காப்பதற்கே. ... 7

வந்தவரென் வலதுபக்கத் தோள்தொட்டுப் பேசினார் வன்சொற்கள்
இந்தக்கை யால்தானே எழுதுகிறீர் நிறுத்தவாவிதன் இயக்கத்தை
பந்தெனவே மென்மையாயவர் அழுத்திடவே என்வலக்கை பந்தமற்றுக்
கந்தலாகத் திகில்பற்றிப் பெரியவரை நினைத்தேனே கண்ணீருடன். ... 8

வாய்பேசா ஊமையெனநான் அந்நிலையிலும் காத்தேனென் உறுதியினை
பேய்கண்ட என்முகத்தில் மாளாத பயம்கண்ட பொல்லாதவர்
செயென்று நான்கருதி இப்பொழுதே உம்கையைச் சரிசெய்கிறேன்
ஆய்ந்துநீர் பார்த்தேயென் ஆற்றல்களை எழுதிடுவீர் அகமுவந்து. ... 9

போகலாமா எனக்கேட்டு விடைபெற்றேன். பயமெல்லாம் போனவுடன்
ஆகட்டும் பார்க்கலாம் மீண்டொருநாள் என்றாவர் தாகத்தில்.
ஏகியதும் வீட்டிற்குக் காண்பித்தேன் அவர்பொருட்கள் ஏவியதை
மேவியதே நீங்காத அச்சமென் தூக்கத்தை மாய்த்தவண்ணம். ... 10

ஆழமாக உறைந்ததுவே துயரமுடன் துன்பமுடன் அச்சமுமே
வேழமாக இருந்தவன்நான் வீட்டெலியாய் மாறிவிட வெதும்பினேனே
தோழனிடம் பகிர்ந்துகொண்டேன் துயரமெலாம் புறமேகத் தீர்வுகாண
ஏழைமனம் வலிமைபெறப் பெரியவரிடம் ஏகுவோமே என்றானவன். ... 11

பெரியவரோ யாத்திரையில் ஆந்திரமா நிலவெல்லைப் பகுதியிலே
இரண்டுமூன்று இடங்களிலே கார்நிறுத்திக் கேட்டோமவர் இருக்குமிடம்
இரவுமணி பதினொன்றோர் மரத்தடியில் கூண்டுவண்டி யிருந்திடவே
பெரியவருமோர் பாழடைந்த மண்டபத்தில் இருந்தாரே பக்கத்தில். ... 12

காவலராம் சுப்பையா மரத்தடியில் மெய்மறந்து கண்ணுறங்க
ஆவலுடன் பார்த்தபோது வாசலிலே கண்ணனுமே அமர்ந்திருந்தார்
தாவியே இறங்கினோம் கார்விட்டு நடந்தோம் துறைநோக்கி
நாவெடுத்தார் கண்ணனுமே எங்கேடா வந்தீங்க நடுநிசியில்? ... 13

கதையெல்லாம் அப்புறந்தான் பெரியவரை உடன்நாங்கள் காணவேண்டும்
அதுதானே முடியாது இந்நேரம் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்
அதோசாக்குத் திரைபின்னால் தரையினிலே உள்ளதுவே அவர்படுக்கை
எதுவாயினும் விடிகாலையில் தூங்குங்கள் உம்காரில் அதுவரையில். ... 14

கார்நோக்கிப் புறப்பட்டோம் திரைபின்னால் பெரியவர்குரல் கேட்டதுவே
யார்வந்தது ஶ்ரீதரா வரச்சொல்லு என்றாரவர் கார்மேகமாய்
ஆர்வமுடன் உட்சென்று அடிபணிந்து அழுதேனே ஆற்றாமையால்
தீர்வெனவே அவரன்புடன் என்னப்பா வெனக்கேட்டார் தீங்குரலில். ... 15

வான்மழையாய் வாத்சல்யம் வாஞ்சைபொங்கும் குரலிலவர் வர்ஷிக்க
நானெதுவும் ஒளிக்காது அவரிடம் விவரித்தேன் நாணம்விட்டு
ஏனிந்த சஞ்சலமுடன் பயம்துயரம் இதிலிருந்து எனைமீட்பீர்
தானெல்லாம் பொறுமையாய்க் கேட்டுவிட்டுக் கேட்டாரவர் ஏன்போனாய்? ... 16

சுருக்கென்று கேள்விதைக்க அண்ணனின் வயிற்றுவலி பொறுக்காமல்
மருத்துவரின் அறுசிகிச்சை ஆனபின்னும் அந்நோய்தான் மாளாது
வருத்துவதை உடனடியாய் ஏதேனும் அற்புதங்கள் வாயிலாக
சுருக்கவே குணமாக்கு வாரவரே எனுமாசையில் சென்றேன்நான். ... 17

பெரியவரிடம் ஆசிபெற்றபின் வேறொருவர் ஆசைகாட்டப் போனதற்கு
ஒருவாரமாய் அனுபவிக்கிறேன் தண்டனையை என்றேன்நான். அவராலே
வரும்வினைகள் நினைத்தாலே என்னுடலும் என்மனதும் விறைக்கிறது
பெரியவர்தான் காப்பாற்ற வேண்டுமெனை மன்னித்து பயம்போக்கி. ... 18

என்னபயம் அவராலுனை என்னடா பண்ணமுடியும்? என்றாசான்
சொன்னதுமே நன்றியிலே அழுதேன்நான் குறைந்ததுவே சுமையேல்லாம்
இன்னம்நீ இதுபோலே செய்பவரிடம் போகாதே என்றுரைத்தார்
இன்னலிலை பத்திரமாய் ஊருக்குச் செல்வாய்நீ இப்போதே. ... 19

பன்னிரண்டு மணியாகவே இரவுக்குத் தங்கிவிட்டுப் போகிறேனே
என்றுநான் சொன்னதற்கு ஒருபயமிலை கிளம்புநீ இப்போதே
என்றுமீண்டும் பெரியவரும் உத்திரவு தந்தவுடன் எழுந்துமீண்டும்
அன்னாரின் தாள்பணிந்து புறப்பட்டோம் ஊர்நோக்கி இருவருமே. ... 20

பூரணமாய் நிலவொளிரப் பூரணமாய் மனமமைதி பெற்றிடவே
பூரணனவர் சொன்னசொல் அவராலே உனையென்ன பண்ணமுடியும்
காரணத்துடன் காதொலித்துக் காத்துநிற்க விடைதெரிந்தது கேள்வியிலே
வேறொருவர் பயமெதற்கு நானிருக்க என்றதுவே விடிவானது. ... 21

அவர்சொன்னது கவசமென அமைந்திடவே நீங்கியதென் அச்சமெலாம்
தவமுனிவர் அரண்சொற்களில் துயர்நீங்கி நிம்மதியும் தோன்றியதே
அவமானம் புறமேகிட ஆனந்தம் பிறந்ததென் அகத்தினிலே
உவப்புடனே நண்பனுடன் உரையாடிப் பயணித்து ஊர்சேர்ந்தோம். ... 22

--ரமணி, 21/06/2013

மூலம்:
பரணீதரனின் புத்தகம் ’அன்பே... அருளே...’
WHAT CAN HE DO TO YOU ? | Kanchi Periva Forum

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Aug 01, 2013 7:14 am

10. தீயும் தீண்டாத் திருமேனி

(ஓரிரு விகற்பக் கலிவிருத்தம்?)
அறுபதுடன் எட்டோடு ஆயிரம் தொள்ளாயிரம்
செறிந்தவோர் ஆண்டினிலே திருவுருவ தரிசனம்
நிகழ்ந்ததோர் பக்தர்க்குக் காஞ்சிமகா முனிவரது
செகந்திராபாத் குன்றுமஹா கணபதியின் கோவிலிலே. ... 1

பெரியவர் அவர்க்குத்தன் திருவுருவப் படத்துடனே
திருப்பதி ஶ்ரீநிவாசப் பெருமாளின் படத்தையும்
கருணையுடன் தரபக்தர் அகமகிழ்ந்து விரைவாகத்
திரும்பினார் ஊருக்குத் திருவுருவப் படங்களுடன். ... 2

படங்களைப் பெரிதாக்கிச் சட்டமிடத் திட்டமிட்டுக்
கடைதனிலே கொடுத்தார் படங்களைச் சென்னையிலே.
இடிபோல் ஒருசெய்தி இருநாளில் வந்ததுவே
கடையினிலே தீப்பற்றிப் பொருளெல்லாம் எரிந்தனவாம்! ... 3

அடித்துப் பிடித்தோடி அடியவர் வந்துபார்க்க
கடையின் நிர்வாகி அவரிடம் சொன்னதிது:
கவலைப்பட வேண்டாம்சார் காஞ்சிமுனி பெருமாளின்
நகல்களைச் சிறிதும்தீ நாக்குகள் தீண்டவில்லை! ... 4

மகிழ்ச்சியுடன் படம்பெற்று நண்பருடன் காரினிலே
ஜகத்குரு முகாம்கார்வேட் நகர்நோக்கிச் சென்றார்கள்.
வழியிலோர் பிள்ளையார் ஆலயத்துள் சென்றிவர்கள்
வழிபட்ட போதின்னோர் ஆச்சரியம் வந்துற்றது! ... 5

ஶ்ரீமடப் பாரிஷாதர் தேடிவந்தார்; பெரியவர்
தாமதம் இல்லாமல் வரச்சொன்னார் உங்களை;
இரண்டுபேர் படத்துடன் மெட்ராஸில் இருந்துகாரில்
வருவரோரை உடனடியாய் அழைத்துவா என்றாரவர். ... 6

அல்பமாந்தர் இருவருமே ஆடித்தான் போனார்கள்
கல்யாண குணத்தவர்தம் அடியவர்கள் வந்தவுடன்
சொல்லாமல் ஏதுமே பூச்சொரிந்தார் படங்கள்மேல்
பல்லாயிரம் ஆசிதந்து பக்தர்களை அனுப்பிவைத்தார். ... 7

அதேபக்தர் திருக்கடையூர் ஆலயத்தில் ஓர்முறை
அதேநண்பர் அருகிருக்க அமிர்தகட ஈஸ்வரர்க்கு
அபிஷேகம் நடப்பதனை ஆனந்தமாய் தரிசித்தார்
அபிஷிக்தன் அடியாரின் ஆனந்தம் அதிகரித்தான்! ... 8

கருவறை லிங்கம்மேல் உருவொன்று தெரிந்தது
உருவதுவே தெளிவாகி முழுமதியாம் முகத்துடனும்
அபயம்தரும் கரத்துடனும் ஆன்றவிந்தார் காட்சிதந்தார்.
உபயமாம் தரிசனம்தம் உளம்விரித்த தெனநினைத்தார். ... 9

அருகிருந்த நண்பரிவர் கரம்தொட்டுக் காண்பித்தார்:
பெரியவா கருவறை லிங்கம்மேல் பார்த்தீரா
சங்கரா என்னபாக்யம்! எங்களுக்கா? இப்படியா?
அங்கவரே அமிர்தகட அத்தனென்று உணர்த்திவிட்டார்! ... 10

குருபிரம்மா குருவிஷ்ணு குருதேவ மஹேஸ்வரராம்
குருமூலம் பரப்பிரம்ம உருவற்ற பரவொளியாம்
குருவுருவே சகுணகுணத் திருவுருவம் தனைத்தாங்கி
அருமருந்தாய்த் தரிசனம்தரும் அனுபூத அடியார்க்கே. ... 11

--ரமணி 31/07/2013

*** *** ***


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Aug 24, 2013 9:17 am

11. சந்திரமௌலீஸ்வரர்க்கு சங்கர வில்வார்ச்சனை
(வெண்டளைக் கலிவிருத்தம்)

சந்த்ரமௌ லீஸ்வரரின் தாள்போற்றி நாள்தோறும்
மந்த்ரஶ்ரீ ருத்ர திரிசதியா ராதனை
இந்த்ர சரஸ்வதி பேர்கொண்ட காஞ்சிமுனி
சந்திர சேகர சங்கரரின் வில்வார்ச்சனை. ... 1

வில்வதளம் எல்லாம் இலைமூன்று கொண்டவையாய்
சொல்வதற் கேதும் துளையின்றி வாடாத
நல்லவகை வில்வதளம் வல்லிதின் வேண்டுமே
நல்வழியில் வில்வதளம் கொய்யவும் வேண்டுமே. ... 2

பணியாள் ஒருவர் வழிபாடு முன்னே
அணியுள்ள வில்வ தளங்கள் பிரித்தே
மணிபோலத் தேர்ந்தெடுத்து வைப்பார் தனியே
பணியாள் அவரை அழைப்பதே வில்வமென. ... 3

ஏதோவோர் காரணத்தால் வில்வம் வருவது
நாள்தோறும் குன்றி நலிந்துபோக லானது
ஏதோகண் பட்டாலும் ஏற்ற இலைகளிலை
மாதேவன் கோவிலின்று கொள்வதும் கூடாது. ... 4

ஹிந்திப் புலவரைக் கேளென்றார் காஞ்சிமகான்
சந்தடி இல்லா நகராட்சிப் பூங்காவில்
சிந்தை கனிந்ததோர் முஸ்லிம்*ஆ சானுக்கு
அந்தப் புலவர் தினம்பாடம் சொல்லிவந்தார். ... 5

மாமுனியின் சிப்பந்தி பண்டிதரைக் கேட்கவே
தாமத மின்றியவர் காண்பித்தார் பூங்காவில்
நாமம் அறியா மரஞ்செடி மத்தியில்
மாமரம்போல் பச்சை மரகத வில்வம். ... 6

கண்படாத ஓரிடத்தில் தண்பச்சை வில்வமரம்
பண்டிதர் மட்டும் அறிந்திருத்தல் மாமுனிக்குத்
திண்மையாய்த் தோன்றிய தெங்ஙனம் தந்தையே?
பெண்நானென் தந்தையிடம் கண்விரித்துக் கேட்டேன். ... 7

பெரியவரின் லீலைகளில் ஒன்றம்மா இஃது
சிரித்தவாறே என்தந்தை சொன்னதைநான் நம்பவில்லை
பெரியவரின் ஊகமிது ஹிந்திப் புலவர்
அரன்பக்த ராகையால் கண்டிருக்க லாமென்று. ... 8

அப்படி யில்லையது மைதிலி, இப்படியோர்
ஒப்பிலா ஸித்தி துறவிக்கே கைகூடும்.
அப்படி யாயின் அவருக்கே பூங்காவில்
செப்பமாய் ஓர்வில்வம் தென்பட வேண்டாமோ? ... 9

பெரியவர் சக்திப் பெருமை யதுவே
அரியதோர் ஸித்தியொன்று ஆன்றவிந்து வந்ததைத்
தெரியாமல் உள்ளே மறைத்துப் பிறர்முன்
அறியாத வர்போல ஆடுமோர் ஆட்டம்! ... 10

பூங்கா மரம்பற்றிச் சொன்னாலென் னாகும்பார்!
தூங்காது சீடரும் போவோர் வருவோர்கண்
ரீங்கார வண்டுபோல் செய்தி பரப்பிமகான்
ஓங்கார ப்ரம்மமென தண்டோரா போட்டிருப்பார்! ... 11

இதனால் சுவாமிகள் இந்த நிகழ்வில்
இதமுறும் காரணமாய்ப் பின்நின்று, என்னை
முதனிறுத்தி சற்றே புகழ்தந்து, தன்னைப்
பதமாகத் தன்னுள் மறைத்துச் செயல்பட்டார். ... 12

நெஞ்சுருகிப் போனேன் செவியுற்ற தத்துவத்தில்!
தஞ்சம் அடியார்க்குத் தந்து விளையாடி
கிஞ்சித்தும் தன்னிலை இன்னதெனக் காட்டாது
விஞ்சிடும் வாஞ்சை விளைத்திடும் ஞானி! ... 13

--ரமணி, 17/08/2013

மூலம்:
’மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’
ஏழாம் தொகுதி, பக்.7-11
வானதி பதிப்பகம்

*** *** ***


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Sep 01, 2013 8:02 am

12. முருக பக்தர் பெற்ற அனுபவம்
(பக்தர்: க. இராஜா)
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா விளம் மா தேமா நிரல்)

வாவியுள் உறையும் அன்னம்
. ஆவியுள் உறையும் சாது (1)
பாவியர் வினைகள் குன்ற
. நாடெலாம் அலையும் சித்தர் (2)
மேவியே காஞ்சி பீடம்
. மெய்யறி வித்த வேந்தர் (3)
யாவரும் வணங்கிப் போற்றும்
. காஞ்சிமா முனிவ ராவார். ... 1

அடியவன் அவரை நாடி
. தனிப்பெருங் கருணை பெற்றேன்
அடியவர் யாரு மில்லா
. நாற்பது நிமிட நேரம்
முடிவிலாக் காட்சி தந்தென்
. உயிரினுக் குயர்வு தந்தார்
கடிதிலே பொழுது சென்றும்
. மனதிலே என்றும் நிற்கும். ... 2

ஒருதினம் மனைவி யோடு
. தரிசனம் செய்யச் சென்றேன்
அருகிலே அழைத்துக் கேட்டு
. ஊர்பெயர் சொன்ன உடனே
திருப்பழ னம்பஞ் சாபன் (4)
. பேத்தியின் கணவன் நீரா
ஹரிகதா கதைசொல் வாரா
. அவர்மகன் கூட என்றார்! ... 3 (5)

என்பிதா கந்த சாமி
. வேலவன் பக்தர் நாங்கள்
என்சிறு பிராயம் தொட்டு
. வீட்டிலே தினமும் பூசை
சென்னைகந் தகோட் டத்தில்
. திருப்புகழ் இராம லிங்கம் (6)
சொன்னதோர் உரையை நானும்
. சந்தமாய்ப் பண்ணி சைத்தேன். ... 4

பஞ்சமு தவண்ணம் என்று (7)
. பாம்பனூர் சுவாமி செய்து
கொஞ்சிடும் தமிழில் சொன்ன
. ஒப்பிலாக் கவியை நானும்
அஞ்சுபண் களிலே சந்தப்
. படுத்திநான் பாடி யின்னும்
கொஞ்சமாய் வண்ணம் செய்து
. திருப்புகழ் பாடு கின்றேன். ... 5

பெரியவர் வியப்பைக் காட்டி
. இரண்டினைப் பாடச் சொல்லிப்
பரிவுடன் கேட்டுச் சொன்னார்
. அந்தஶ்ரீ பாம்பன் சாமி
அறிமுகம் எனக்கு இல்லை
. சுவாமியோ ஜகநா தன்னோ (8)
ஒருவரும் சொல்ல வில்லை!
. முதன்முதல் கேட்ட தின்பம். ... 6

சொன்னவர் சால்வை தந்து
. அருளுடன் ஆனுப்பி வைத்தார்
என்பெயர் சுவாமி நாதன்
. எந்தைசுப் பிரமண் யம்தான்
உந்தையும் கந்த சாமி
. சுவாமியே முருகன் கீர்த்தி!
அன்னவர் அருளால் என்றும்
. அறுமுகன் பாட்டென் வாழ்வாம். ... 7

--ரமணி, 22/08/2013, கலி.06/05/5114

மூலம்:
’முருகனிடம் முருகிய பக்தி’, க. இராஜா
’மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’
இரண்டாம் தொகுதி, பக். 211-214
வானதி பதிப்பகம்

குறிப்பு:
(1) ’பரமஹம்ஸ’ என்று மூலத்தில் உள்ளது
(2) ’பரிவ்ராஜக’ என்று மூலம்
(3) ’மஹாசந்நிதானம்’ என்று மூலம்
(4) ஹரிகதா காலட்சேப சக்ரவர்த்தி,
திருப்பழனம் பிரம்மஶ்ரீ பஞ்சாபகேச சாஸ்திரிகள்
(5) அவர்மகன்: ஶ்ரீ டி.பி. கல்யாணராம சாஸ்திரிகள்
(6) திருப்புகழ் சதுரர் திரு.இராமலிங்கம் பிள்ளை (பள்ளி ஆசிரியர்)

(7) ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த பாடல்
’பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்’
தரவிறக்கம்: http://www.adiyaar.com/Adiyaar_Com%20-%20Panchamirtha%20Vannam.Pdf

(8) ’சுவாமி’ = மஹாமஹோபாத்யாய ஶ்ரீ சுவாமிநாத அய்யர்
ஜகநாதன் = கி.வா.ஜகந்நாதன்

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 01, 2013 8:46 am

காஞ்சி மாமுனிவர் , அவர் ஞாபக சக்தி ,அவருடைய அருள் பார்வை மிகவும் பிரசித்தம். தரிசனம் செய்தாலே நம் மனதில் இனம் புரிய உவகை ,மனநிம்மதி......அனுபவித்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.
அவரது எளிமை ,இனிமை அதற்கு அடிமை இவ்வுலகம் .

ரமணியன்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Sep 01, 2013 8:59 am

13. வேள்வியில் உற்ற தரிசனம்
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா விளம் விளம் தேமா)

வயதினில் முதிர்ந்த பாட்டி வரையிலாப் பெரியவர் பக்தி
அயர்ந்திடும் வயதில் ஆசை அகத்திலோர் வேள்வியைச் செய்ய
பயனென ஏதும் வேண்டாள் பெரியவர் வருகையே போதும்
நயமுடன் முனிவர் சொன்னார் வருகிறேன் நிச்சயம் என்றே. ... 1.

வேள்வியும் தொடங்கப் பாட்டி பெரியவர் வராததில் மாய்ந்தாள்
ஆளெலாம் வைத்தே வேள்வி யைப்படம் பிடித்திடச் செய்தாள்
வேள்வியும் பெறவே முற்று பெரியவர் சுவடையே காணோம்
கேள்வியே நின்ற தெஞ்சி பெரியவர் ஏன்வர வில்லை? ... 2.

வேள்விநை வேத்யம் கொண்டு பெரியவர் தரிசனம் செய்தாள்
கேள்வியை அவர்பால் கேட்டாள் பெரியவா வருகையே இல்லை!
தாள்பட வில்லை யென்று யாரவர் உன்னிடம் சொன்னார்?
ஆளெலாம் வைத்தே வேள்வி யைப்படம் எடுத்ததைக் கேட்டார். ... 3.

புகைப்படம் அச்சில் பார்நீ! நகைப்புடன் பெரியவர் சொன்னார்
புகைப்படம் அச்சில் பார்க்க பூரண ஆகுதித் தீயில்
முகைத்தது முனிவர் தோற்றம் கோலினைக் கையினில் தாங்கி!
திகைப்படம் இன்றும் சேலம் பெரியவர் அகத்தினில் காட்சி. ... 4.

ஐந்தெனும் பூதம் செய்தே ஆள்பவன் பூமியில் வந்தால்
ஐந்தினைப் பெரிதும் நம்பும் அடியவர் அழைத்திட உள்ளம்
நைந்திடச் செய்வான் என்று ஐயுறல் தக்கதோ சொல்வீர்
பைந்தமிழ் மொழியில் இன்று பகன்றது பெரியவர் லீலை. ... 5.

அடியவர்க் கிதுபோல் இன்னோர் தருணமும் பெரியவர் தோன்றும்
வடிவினைக் கீழே காண்பீர் பெரியவர் கோவிலோ ரிக்கை
குடமுழுக் குவேள்வித் தீயில்! உளம்கனிந் தோர்பலர் நேரில்
திடமுடன் கண்ட தைநம் விழிகளால் காணுவோம் லீலை. ... 6.

--ரமணி, 31/08/2013,  கலி.15/05/5114

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 2 1318_zps7fd7ef81

உதவி (படமும் கட்டுரையும்):
http://periva.proboards.com/thread/4896/

*** *** ***

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 01, 2013 12:35 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 
:வணக்கம்: ஆண்டவா !:வணக்கம்: 
:வணக்கம்::வணக்கம்:  :வணக்கம்:

ரமணியன்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Dec 26, 2013 7:52 pm

17. நந்தன் தரிசனம்
(அறுசீர் விருத்தம்: அனைத்தும் காய்ச்சீர்)

ஏதோவோர் கிராமத்தில் முகாமிட்ட
. ஏகம்பக் கச்சிமுனி யோர்காலை
யாதோவோர் காரணமாய் வயல்வரப்பில்
. பரிவாரம் உடன்வரவோர் நடைசென்றார்
சாதாவென் றோருழவர் தூரத்தே
. தண்டனிட்டார் கோவணமே ஆடையென
மாதேவன் பார்த்துவிட்டுச் சென்றாரே
. யாதொன்றும் பேசாத உருவெனவே.

மீள்வந்த ஐயனின்முன் வரப்பினிலே
. ஏருழவர் காய்கறிகள் குவித்திருந்தார்
தாள்நிறுத்திக் கைசொடுக்கி உழுவாரைத்
. தன்முன்னே கூப்பிட்டார் தவஞானி
’ஆளெனவே எனைக்கருதிப் பெறுவீரோ
. மாட்டீரோ என்றிவைநான் இவண்குவித்தேன்!’
காளகண்ட னானமுனி கோவணரைக்
. கருணையொடு கண்கூர்ந்தே ஏற்றாரே.

’இற்றைநாள் பிக்ஷைக்குச் சேர்த்துக்கோ’
. செப்பிடுவார் ஐயனும்தம் அடியவர்க்கே
நிற்காது அத்துடனே கருணைவெள்ளம்
. நிமலனொரு நாடகமும் நடத்திடுவார்
சற்றுதூரம் சென்றவரும் நட்டநடு
. சாலையிலே வெய்யிலிலே போய்நின்றே
மற்றவர்போல் சிறுசெய்தி பேசிடுவார்
. மனமில்லா தோரடியார் பின்தொடர.

வற்றியதம் மேனியினை மெல்லசைத்தே
. வத்திரமும் தலைக்கேறத் தலையிறங்கத்
தெற்காலே கிழக்காலே மேற்காலே வடக்காலே
. சிறுகுனிந்தும் தலைநிமிர்ந்தும் கரம்நடித்தும்
ஒற்றைக்கால் மடித்துநின்றும் விடுத்துநின்றும்
. ஒருமணிநே ரம்நின்று ’படுத்திடவே’
உற்றடியார் பாலுவென்பார் பட்டபாடு
. உப்பேதும் இல்லாத ஆட்டமதோ?

அதன்பிறகு முகாம்சென்று பூசனைகள்
. வழக்கம்போல் பிக்ஷைபின் ஓய்வெடுத்தார்
மெதுவாக பாலுவிடம் வினவினரே
. வெகுநேரம் வெய்யிலிலே நின்றாயோ?
அதுவெல்லாம் இல்லையென்றும் விடாப்பிடியில்
. காரணம்கேள் என்றாரே பாலுவிடம்
இதுவேறே என்றுகொஞ்சம் சலிப்புடனே
. என்னவென்று பாலுவுமே கேட்டாரே.

’என்னையேநீ முன்னாடி பின்னாடி
. ஏறெடுத்துப் பார்ப்பதென்றால் என்னசெய்வாய்?’
’முன்னாலே பின்னாலே போய்நிற்பேன்
. ஒருபக்கம் பார்ப்பதுவும் அப்படியே’
இன்றுகாலை வயல்வேலை பார்த்தவனாய்
. என்முன்னே நின்றவனோர் நந்தனடா
’அன்னவனுக் கேதுநேரம் அதனாலே
. நன்றவனே பார்த்திடவே செய்தேனே!’

--ரமணி, 25-26/12/2013, கலி.11/09/5114

உதவி:
http://www.periva.proboards.com/thread/6046/

*****


Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக