புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
21 Posts - 3%
prajai
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 15, 2013 1:24 pm

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்
ரமணி

01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம்
தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு.
நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும்
நகையென மின்னும்
தகைசால் தெய்வீகத் துறவி
ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே.

மராட்டிய மாநில மூதூர் ஒன்றில்
விராட்டுரு முனியின் வீதியோர முகாம்.
யானைமேல் அமர்ந்து
நாலுபேர் சாலைவழிப்
போவதைப் பார்த்தார் பெரியவர்.
அவர்களை உடனே அழைத்து உசாவினார்:
இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ?

நாங்கள் ஓர்காலம் நீங்காத செல்வமுடன்
பாங்காக வாழ்ந்தோம் ஸ்வாமீ!
எந்தைதம் காலம் எய்திய காலை
விந்தையான முறையில்
தனங்கள் அனைத்தும் தானம் செய்துவிட்டு
வனமிகிவ் வானை எம்வசம் தந்து
கற்றது ஊரெல்லாம் சொற்றியே
உற்ற காலம் கழித்து வாழ்வீர்
என்று சொல்லி நன்று மறைந்தாரே!

அதன்படி நாங்களும் அங்கும் இங்கும்
மெதுவாக யானைமேல்
ஊர்விட்டு ஊர்சென்று
பேர்மிகு புராணக் கதைகள் சொல்கிறோம்
பக்திப் பாக்கள் பாடுகிறோம்
ஏதோ கொஞ்சம்
தீதில்லாப் பொருள்கிடைக்கும் எமக்கும் யானைக்குமே!

ஹாஹா என்று சிரித்தார் பெரியவர்.
இங்கேயும் இதுதான் நடைமுறை!
இவர்களும் என்னை யானைபோல்
தவறாது ஊர்விட்டு ஊராக
அழைத்துச் செல்லும் இடங்களில் நானும்
உழைக்கிறேன் பக்தி உள்பலம் பெருகவே.

இவர்கட்கும் சாப்பாடு பணமெனக் கிடைக்கும்
எனக்கும் பக்தர்கள்
எனக்கும் உமக்கும் ஒரேதொழில்!
பெரியவர் சிரிப்பில் நகைச்சுவை உணர்வும்
சரிசம உள்ளமும் கண்ட பக்தருளம்
விரிவும் உவகையும் வியப்பும் உற்றதே!

--ரமணி 08/01/2013

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 15, 2013 5:44 pm

"பேச்சிலும் கருணை
மௌனத்திலும் கருணை
விழிகளிலும் கருணை, பக்தர்கள்கண்
அளவிலா அனுசரணை. "

நன்றி , ரமணி. மகிழ்ச்சி

ரமணியன்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 15, 2013 6:02 pm

அன்புடையீர்,

வணக்கம். உங்கள் பதில் அருமை.

இதோ இன்னொரு தரிசனம் நான் இன்று கவிதைப் படுத்தியது கீழே.

அன்புடன்,
ரமணி


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 15, 2013 6:05 pm

02. எச்சில் தோஶம்
(கலிவிருத்தம்)

காளஹஸ்திக் கொருமுறை காஞ்சிமஹான் சென்றபோதவர்
காலடி பட்டுக் குலம்தழைக்கத் தம்மில்லம்
தினமும் வேண்டிநின்ற திடபக்தர் இல்லத்தில்
அனுக்கிரகம் செய்யவெண்ணி அகமுவந்தார் காஞ்சிமஹான்.

பக்தர் ஒருநாள் பூசையை முடித்து
பக்தியுடன் நைவேத்தியக் கற்கண்டை வாய்நிறைக்க
வெளியினில் யாரோவர வந்து பார்த்தால்
விளித்தபடி காஞ்சிமஹான் வீட்டின்முன் நிற்கிறார்!

கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை
மெய்சிலிர்க்கும் பக்தர்க்கு வாய்நிறையக் கற்கண்டு!
வந்தேன் நானிங்கு அனுதினம்நீ அழைத்ததால்
வந்தவனை வாவென்று வரவேற்க மாட்டாயோ?

வழியேதும் தெரியாமல் உமிழ்ந்துவிட்டுக் கற்கண்டை
விழிநீர் வரபக்தர் ’அபசாரம், அபசாரம்!
அபசாரம் பண்ணிவிட்டேன்’ என்றுரைத்துப் பதறினார்
உபசரித்த கரங்களால் உதவாத வாய்புதைத்து.

மஹான்தம் விழிகளில் மிகுந்த கருணையுடன்
தகாதது எதுவும்நீ செய்யவில்லை பக்த!
வாயில் புலால்வைத்தும் வாய்ஜலம் கொண்டும்
நாயனார் கண்ணப்பன் நாயகனை வழிபட்டான்!

தவறென்று நமக்கது தோன்றினும் தகவென்று
உவந்தான் அன்றோ உமைபாகன் இத்தலத்தில்!
சிவானந்த லஹரியில் ஆச்சார் யாளுமே
சிலாகித்துச் சொல்கிறாரே இத்தகு பக்தியை!*

கண்ணப்பன் வாழ்ந்த காளஹஸ்தித் திருத்தலத்தில்
எண்ணமே பெரிது எச்சில் தோஷமில்லை
என்று காஞ்சிமஹான் உரைத்த பின்னரே
நன்றென பக்தர் ஆறுதல் அடைந்தார்.

--ரமணி, 15/01/2013

Source:

மொமென்ட்ஸ் அண்ட் மெமரீஸ்

குறிப்பு:
*காஞ்சி மஹான் குறிப்பிட்ட சிவானந்த லஹரிச் செய்யுள்:

मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते
गण्डूषांबुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।
किंचिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते
भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ॥ ६३ ॥

mArgA-vartita-pAdukA pashupater-a~ggasya kUrchAyate
gaNDUShAMbu-niShechanaM pura-ripor-divyA-bhiShekAyate |
kiMchid-bhak****a-mAMsa-sheSha-kabalaM nav-yopahArAyate
bhaktiH kiM na karotyaho vanacharo bhaktAvat-aMsAyate || 63 ||

The way faring sandals become the kusa crown of Pashupathi,
The gargled mouthful of water become the holy water of bath ,
To him who destroyed the three cities,
The just tasted pieces of the remaining meat ,
Become the holy offering to the Lord,
And wonder of wonders, the hunter who lives in the forest
Becomes the king of devotees.
What is there in this world that devotion to the Lord cannot do?

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 15, 2013 7:14 pm

மகான் அவர்களை பற்றி கூற , இல்லை இல்லை போற்றிக் கூற ஆயிரமாயிரம் விஷயங்கள்.
கண்ணீர் பெருக வைக்கும் கருணை செயல்கள். அறிந்ததை மீண்டும் மீண்டும் அறிவதில் ஆனந்தம்.
நன்றி , தொடருங்கள் , ரமணி.

ரமணியன்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Feb 11, 2013 7:19 am

03. காஞ்சி முனிவரும் பூக்காரியும்
(குறள் வெண்செந்துறை)

காஞ்சிமடம் அருனிகிலோர் பூக்காரி. காமாட்சி என்பதவள் பெயராகும்.
காஞ்சிமகா பெரியவரை வணங்கிடுவாள் வாஞ்சையுடன் அப்பாவென் றேவிளித்து.

அனுதினமும் பெரியவரை அர்ச்சிப்பாள் விநயமுடன் ஒருகூடைப் பூக்கொணர்ந்து.
வினவுவார் பெரியவர் அவளிடம்: வீணாக்கு கிறாயம்மா பூவினை!

வீணாகும் பூவிற்றுன் பிழைப்பினைப் பேணுதல் வேண்டாமா என்பாரவர்.
காசென்ன பெரியது சாமீயுன் ஆசிதான் வேண்டும் என்பாளவள்.

மடத்திலோர் நியதியுண்டு: இரவினில் மாமுனிவர் துயில்கொள்ளச் சென்றபின்
இடமில்லை அவரை எழுப்புதற்கு. இதற்கோர் விதிவிலக்கு காமாட்சி.

பெரியவர் கட்டளை அவளுக்கு: பூவிற்றல் முடிந்தபின் தரிசனம்.
கருணையுளம் ஒப்புமோ அவள்கொண்ட கனிபக்தி பிழைப்பினைக் கெடுக்கவே?

ஓரிரவு நாகராஜனைப் பணித்தார் ஒன்பதுமணி செய்திகேட்டுச் சொல்ல.
பாரினில் நடப்பது குறித்துப் பரிவுடன் கேட்டார் பெரியவர்.

இகமறுத்த ஜகத்குரு என்றாலும் இன்னல்கள் தீர்க்க உலகியலும்
உகந்தவர் கேட்டு அலசி உன்னதத் தீர்வுகள் சொல்வார்.

பெரியவர் கால்களில் வெல்வெட்டுப் பாதுகை. புதுக்கோட்டை ஜானாவெனும்
பெண்மணியின் அன்புக் காணிக்கை. பாதுகை வேண்டினார் நாகராஜன்.

பெரியவர் அன்று முழுவதும் பாதுகையைக் கழற்றாமல் அணிந்திருந்தார்.
பரிவுடன் அளித்தார் பாதுகையைப் பூக்காரி தரிசனம் செய்தபோது.

’இந்தாஇது உனக்குத்தான், எடுத்துக்கோ!’ விந்தையில் உறைந்த காமாட்சி
வந்தனையுடன் பெற்றுக் கொண்டாள் அந்தமில் கருணைப் பரிசினை!

எத்தனைபேர் பாதுகை விழைந்தனர் அவளிடம்! ’வட்சரூபாய் தருகிறோம்
அத்தனையும் உனக்கே’ என்றபோதும் அசையவில்லை அவளது அசலபக்தி.

பெரியவர் அவள்தேவை அத்தனையும் பரிவுடன் நிறைவேறச் செய்தார்
திருமணம் அவள்வீட்டில் நிகழ்ந்த தருணம் பொருளுதவி பலசெய்தார்.

பெரியவர் சித்தியான பின்னரும் பூக்காரியின் அர்ச்சனையவர் சமாதிக்கு.
ஒரேஒரு வித்தியாசம் பெரியவர் இருந்தபோது வெறுமனே அனுப்பமாட்டார்.

அப்பா நீயிருந்தால் எனக்குத் தப்பாமல் பிரசாதம் அளிப்பாயே
இப்போதுநான் வெறுங்கூடை யுடனே! என்றவள் உட்கார்ந்து புலம்பினாள்.

புலம்பியவள் கூடையில் அதிட்டானம் உள்ளிருந்து யாரோ எறிந்ததுபோல்
மலரொன்று விழுந்தது செம்பருத்திப் பூவின் பிரசாதம் என்றே!

பெரியவர் மறைந்ததுநம் விழிகளில் இருந்தே. இதுபோன்ற நிகழ்வுகளால்
பிரத்தியட்ச மாகநின்று அவரென்றும் அருள்பாலித்தல் பலரது அனுபவம்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Mar 14, 2013 10:51 am

04. அறிவுரையில் நகைச்சுவை
(பலவிகற்பக் கலித்துறை)

காஞ்சிமகா பெரியவர் கால்நீட்டி சயனித்த காலை
காய்ந்த முகத்துடன் கிழவர் ஒருவர் வந்தார்.
பிரபோ! எதுவுமே முடியலை ஜுரம்வருது அடிக்கடி
பெரியவாதான் காக்கணுமென் இதயமும் பழுதென அங்கலாய்த்தார்.

பெரியவர் முனகிக் கொண்டே பேசினார் அவரிடம்
அருகில் உட்கார் உனக்கோர் சிறுகதை சொல்கிறேன்.
கிழவர் அமர்ந்தார் குழந்தையின் ஆர்வத்துடன் கதைகேட்க.
முனிவர் கதைசொன்னார் கனிவுடன் சன்னக் குரலிலே.

குறிசொல்லும் பூசாரி ஒருவர் கிராமத்தில் இருந்தார்
அறிவித்த தெல்லாம் பலித்திடும் ஆற்றல் உள்ளவரவர்
ஒருநாள் கோவிலைத் திறந்தபோது பொருட்கள் பலவும்
திருடுபோ னதுகண்டு தோழனைத் தேடி விரைந்தார்.

அந்தப் போலீஸ் தோழனோ இவரைத்தேடி விரைந்தோடி
வந்ததால் இருவரும் வழியில் சந்தித்தது விந்தை!
தேடிப்போன மூலிகை காலிலகப் பட்டதென்றார் பூசாரி.
கும்பிடப் போனதெய்வம் குறுக்கே வந்ததென்றார் காவலர்.

என்சைக்கிள் திருடு போய்விட்டது நீதான் குறிசொல்லணும்
உன்னைத் தேடிவரக் காரணம் இதுவென்றார் காவலர்.
அடராமா! கோயில் திருட்டை உன்னிடம் சொல்லவே
படபடத்து நான்வந்தேன் உன்னிடம் என்றார் பூசாரி.

உனக்கு குணமாக வந்தாய்நீ என்னிடம் இவ்வயதில்!
எனக்கே இங்கு மூன்று தினம்போலக் காய்ச்சல்!
பூசாரியும் போலீஸும் சந்தித்தது போலில்லை யாஇது?
ஆசாரியர் சிரிக்க சிரித்துவிட்டார் அந்தக் கிழவருமே.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Mar 22, 2013 11:55 am

05. காஞ்சி முனிவரின் கருணா கடாட்சம்
(நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா)

தரவு (ஆறடி)
சாதுர்மா சியம்போது சாதுகைசால் மாமுனிமுன் ... [சாதுகை=சாத்துவிகம்]
மாதொருவர் இரண்டாவது மகளுடனே தழைந்துநின்றார்
கல்யாண மங்கைக்குக் கோளாறு மூளையிலே
பல்வகையில் முயன்றுபார்த்தும் பலனில்லை குணமில்லை.
பெரியவர்முன் குடமொடுங்கும் பாம்பாக நின்றவள்மேல்
அருட்பார்வை சொரிந்தார்முனி அவளைக்கூர்ந் துநோக்கியே.

தாழிசை (நாலடி மூன்று)
அளவில்லாக் கவலையுடன் அங்குநின்ற அன்னையவள்
உளம்தனிலே ஜயசங்கர உச்சாரணத் துடன்சோர்ந்து
முந்தையநாள் இரவினிலே மகளுடனே தங்கிவிட்டாள்
எந்தையவர் தரிசனமே வந்துசேர்ந்தும் கிடைக்காமல்.

காதல்மகள் புத்தியெல்லாம் பேதலித்துக் கத்திமயங்க
மாதவளும் மனதினிலே முனிநாமத் துடனுறங்கப்
போததுவே புலர்ந்தவுடன் பெரியவரை தரிசித்துப்
பேதையைக் காப்பாற்றப் பரிவுள்ளம் வேண்டிநின்றாள்.

மூன்றுநாட்கள் முன்னின்று மஹாமுனியைத் தரிசிக்க
ஆன்றவிந்து அடங்கிய சான்றோரின் அருட்பார்வையில்
மூன்றாம்நாள் மகளுக்கு மாமுனிவர் ஆணையிட்டார்
ஆன்மவுயர் தருகின்ற அபிராமி அந்தாதிசொல.

தனிச்சொல்
எனவாங்கு

சுரிதகம் (ஆசிரியச் சுரிதகம்)
’தாரமர்க் கொன்றையும் சண்பக மாலையும்’
வாரணக் கடவுளை விளித்து மகளவள்
பெரியவர் தாமரைத் திருவடி நோக்கியே
வரிசையில் அடிகளை விளம்பித் தொடரப்
பாடிய வள்தனைப் பெரியவர் பார்க்க
நாடிய அதிசயம் நிகழ்ந்த தப்போது
கணீரென்ற குரலில் கற்றது சொற்றவள்
திடீரென நடுவில் திணறியே மயங்க
அவளை அப்படி யேவிடப் பணித்த
தவமுனி கண்ணொளித் தகவினில் மகளவள்
கொஞ்ச நேரத்தில் மயக்கம் தீர்ந்து
சிந்தை தெளிந்து எழுந்த விந்தையைக்
கண்ட தாய்மகள் கண்ணீர் பெருகத்
தண்டம் ஏந்தியார் திருவடி வீழ்ந்தனர்.
குருவின் கருணைப் பார்வை விழுந்தால்
அருகாத அல்வினை அவனியி லுண்டோ?

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Apr 21, 2013 7:12 pm

06. சாது போர்த்திய சால்வை

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
[அரையடி = மா காய் மா; சீர்கள் ஒன்றிலும் ஐந்திலும் எதுகை/மோனை]


கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கினான்
. வானுயர் புகழ்பேகன்
தீனச் சிறுவர்க்குப் போர்வை நல்கினார்
. மாமுனி காஞ்சிமகான்
தான தருமத்தின் மூல வேரென
. ஆன வேதமெலாம்
கான ஸ்வரத்தோடு கற்றுப் பயின்றிடும்
. மாணவச் சிறுவரவர்.

வேத மாணவர்கள் பயணம் சென்றனர்
. வரையுயர் பூமியிலே
வேத மானவரும் உடன்சென் றாரே
. பாத யாத்திரையில்
ஆத வன்மேற்கில் மறையப் பொங்கியே
. ஆர்த்திடும் குளிரிரவில்
ஊதற் காற்றடிக்கச் சிறுவர் தவிப்பரெனப்
. பதைத்தது முனிவருளம்.

மறையின் கணம்கற்றுப் பழமாய்க் கனிந்த
. மறைமுது புலவருக்கே
முறையென் றளித்தவர்க்கு முகமன் செயவுள
. விலைமிகு சால்வைகளை
அறையில் சிறுவர்கள் போர்வை களின்றி
. உறங்கிடப் பாடுபடும்
குறைகள் நீக்கியவர் குளிரைப் போக்கி
. உறையிடக் கோடுத்தாரே.

அந்த நேரத்தில் தரிசித் திடவென
. வந்தார் மறைமுதியார்
விந்தப் பாதவிணை பற்றும் முதியவர்
. சிந்தை மகிழ்ந்திடவே
வந்த விருத்தர்க்குப் பரிசில் எனவே
. தந்திடச் சால்வையினை
இந்தக் கணத்தினிலே கொண்டு வாவெனத்
. தந்தையன் ஆணையிட்டார்.

மடத்தின் மேலாளர் சால்வை தேடியும்
. உடனடிக் கிடைக்கவில்லை
கொடுத்த உத்தரவின் ஏவல் இடம்பொருள்
. காத்திடும் எண்ணமுடன்
அடுத்த வர்யாரும் அறியா வண்ணம்
. சிறுவன் ஒருவனிடம்
உடைமை யென்றிருந்த சால்வை ஒன்றினை
. எடுத்துக் கொடுத்துவிட்டார்.

சால்வை பறிகொடுத்த சிறுவன் வருந்தியே
. வேறுவழி யேதுமின்றிக்
காலை முடக்கிவைத்துக் கையை மடக்கியே
. கண்ணுறங்கிப் போனானே
காலை கண்விழிக்க சொகுசுப் போர்வை
. கதகதப் புடன்தன்மேல்!
சாலப் பரிவுடனே மேல வர்வினவ
. நிகழ்ந்தது புரிந்துகொண்டான்.

கூர்த்த பார்வையிலே சிறுவன் ஒருவனுக்கு
. நேர்ந்தது அறிந்தமகான்
வார்த்தை யெதுவுமுடன் பேசா மலேயே
. வழிபாடுகள் முடித்தார்.
ஆர்த்த குளிர்போக நண்பன் பெற்ற
. ஆறுதல் தனக்கிலையெனப்
பார்த்து துக்கத்தில் வருந்தா தோவப்
. பாலகன் எனக்கேட்டார்.

எங்கே மகான்தன் சால்வை யையெடுத்து
. பங்கம் தீர்த்திடவே
அங்கே தூங்குகிற அறியாச் சிறுவன்மேல்
. தங்கும் சால்வையென
அங்கம் தெரியாது போர்த்தி விடேன்றே
. அறிவித்து விடுவாரோ?
பொங்கும் கவலைவர மேல வர்தானே
. சங்கடம் தீர்க்கவந்தார்.

என்பால் இரண்டுள்ள சால்வை களிலொன்றை
. நன்றாய்த் தருகின்றேன்
என்றே மேலாளர் சொல்ல முனிவரும்
. நன்கு தூங்குவோன்மேல்
மென்மை யாகமிகப் போர்த்தி விட்டுச்செல்
. என்று விடைகொடுத்தார்.
நன்மை விளைவித்து நம்மைக் காப்பவர்
. நடமாடும் தெய்வமன்றோ?

--ரமணி, 21/04/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Apr 26, 2013 9:56 am

கணிதத்தில் அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைதத் தத்துவங்கள்

Source: Email message from our respected member Sri M K Anantha raman

From one of the Great talks of Kanchi Periyava – short, simple yet profound, lucid, humorous too.

நாம அத்வைதத்த எடுத்துட்டாலும், த்வைதமா இருந்தாலும், விசிஷ்டாத்வைதமா இருந்தாலும் ஒரு ஜீவனுக்கு இறுதி இலக்கு பரமாத்மா தான். இதுல 'செகண்ட் தாட்'டே கிடையாது. ஆனா என்ன ஒவ்வொரு மார்க்கமும், ஒரு ஜீவாத்மா எப்படி, எந்தசூழ்நிலைல, என்ன வழிமுறைல பரமாத்மாவை அடையும்கறதுல வேறுபடறது.

இங்கே இருக்கற நிறைய பேர் கணிதம் படிச்சிருப்பீங்க என்ற நம்பிக்கைல சொல்றேன். மத்வாசார்யாரின் த்வைத மார்க்கம் கொஞ்சம் ஸ்ட்ரிட். சங்கரரின் அத்வைத மார்கத்துல பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு சதுரத்தின் பக்கத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு மாதிரி. அதாவது பக்கத்தை மிகச் சரியாக நாலு மடங்கு செய்தால் அதன் சுற்றளவு வந்து விடும். நான்கு என்பது ஒரு RATIONAL நம்பர். எந்த Ambiguityயும் கிடையாது.

ஆனால் த்வைத மார்க்கத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு வட்டத்தின் விட்டத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு போன்றது.விட்டத்தை பை (Pi)மடங்கு பண்ணா அதன் சுற்றளவு வரும். ஆனால் நீங்க படிச்சிருப்பீங்க பை என்ற நம்பர் ஒரு Irrational number என்று. அதாவது அதை இரண்டு முழுஎண்களின் விகிதமாக எழுத முடியாது. இருபத்து இரண்டு bi ஏழு அப்படீங்கறது ஒரு approximation தான்.

பை (Pi) என்ற இந்த விகிதம் முடிவில்லாமல் அனந்தமாகப் போய்க்கொண்டே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். மூணு புள்ளி ஒண்ணு நாலு அப்படீன்னு எழுதி அதற்குப் பிறகு கோடி கோடி இலக்கங்கள் போட்டாலும் பை (Pi) என்ற எண் முடிவு பெறாது. எனவே வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தைப் போல இத்தனை மடங்கு அப்படீன்னு சரியாக, உறுதியா சொல்லவே முடியாது. விட்டத்தின் எல்லை அதன் சுற்றளவு தான். சுற்றளவு என்பது ஒரு முழுமையான எண். வட்டத்தின் விட்டமும் ஒரு முழுமையான எண். ஆனால் இவை இரண்டின் விகிதம் ஒரு முற்றுப்பெறாத எண். விட்டம் தான் ஜீவாத்மா, சுற்றளவு தான் பரமாத்மா என்று எடுத்துக்கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் இலக்கு என்றாலும் அது ஜீவனின் இத்தனையாவது படிநிலை என்று உறுதியாக சொல்ல முடியாது.

விட்டத்தின் ஏதோ ஒருமுடிவிலி மடங்கில் சரியாக வட்டத்தின் சுற்றளவு வரலாம். ஆனால் எத்தனை துல்லியமாக கணக்குப் போட்டாலும் (Pi)பையை கோடி தசம ஸ்தானம் வரை எடுத்துக்கொண்டாலும் விட்டத்தின் மடங்குக்கும் சுற்றளவுக்கும் ஒரு சிறிய மைன்யூட்வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும். அதே போல ஜீவனின் இலக்கு பரமாத்மா என்று சொன்னாலும் பரமாத்வை அடைய (பரமாத்மாவாக மாற) ஜீவாத்மா எண்ணிலாத, கணக்கற்ற படிகளை கடக்க வேண்டி இருக்கிறது. ஒரு ஜீவன் சாதனைகளை செய்து படிப்படியாக எவ்வளவு தான் முன்னேறினாலும் அது சுற்றளவை நெருங்கலாமே தவிர சுற்றளவாக மாற முடியாது.

த்வைதம் ஸ்ரீமன் நாராயணனை சுற்றளவாக நிர்ணயம்செய்கிறது. உலகின் எண்ணிறைந்த ஜீவன்கள் தான் வட்டத்தின் எண்ணிறைந்தவிட்டங்கள். விட்டம் சுற்றளவாக மாற எண்ணிறைந்த முடிவிலியான படிநிலைகளைக்கடக்க வேண்டும். இதை தான் அவர்கள் தாரதம்யம் என்று அழகாகச் சொல்கிறார்கள்.

அதாவது ஒரு ஜீவாத்மா பரமாத்மாவாக முழுவதும் மாறி விடுவதை , எப்படி கணிதம் விட்டம் சுற்றளவாக மாறி விடுவதை தடை செய்கிறதோ , அப்படி த்வைதத்தின் பஞ்சபேத தத்துவம் தடை செய்கிறது. விட்டம் சுற்றளவா மாறுது அப்படீன்னா பை (Pi) அப்படீங்கறது ஒரு Rational நம்பர் அப்படீன்னு ஆயிடும். கணிதத்தின் முக்கிய எண்ணான பையின் அழகே அது கணிக்க முடியாமல் irrational ஆக இருப்பது தான்.எனவே ஜீவன் மற்றும் பரமாத்வாவின் உறவும் இப்படி நிச்சயமற்று Irrational ஆகஇருக்கிறது என்கிறார் மத்வாச்சாரியார்.

ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு பற்றிய சமன்பாடுகளிலும் இந்த பை அப்படீங்கற நம்பர் வருது. அப்படீன்னா நம்மால் பிரபஞ்சத்தில் எதையும் இதுஇதன் இத்தனை மடங்கு அப்படீன்னு சொல்ல முடியாது. எதிலும் ஒரு நிச்சயமின்மைஇருக்கவே செய்யும். இதை தான் மத்வாச்சாரியார் பஞ்சபேதம் , அதாவது சமமின்மைஎன்கிறார். ஒரு ஜடப்பொருளும் ஜீவாத்மாவும் பேதப்பட்டது, ஏன் ஒரு ஜீவன் இன்னொன்றில் இருந்து பேதப்பட்டது. ஒரு ஜீவன் பரமாத்மாவிடம் இருந்துபேதப்பட்டது. என்கிறார்.

சங்கரர் மாதிரி சி இஸ் ஈக்குவல் டு ஃபோர் ஏ (C= 4A) அப்படீன்னு சொல்லிட்டா, பரமாத்வா ஜீவனின் இத்தனையாவது படி அப்படீன்னு சொல்லிட்டா நாம பரமாத்மாவை வரையறை செய்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ள அடைச்சுட்ட மாதிரிஇருக்கும். ஆனால் வேதாந்தம் பரமாத்மாவை நி-சீமா , எல்லையற்றவன், வரம்பு வரையறை அற்றவன் என்று சொல்கிறது.

எனவே மத்வாச்சாரியார் ரொம்ப சைன்டிபிக்-கா சி இஸ் ஈக்குவல் டு பைடி அப்படீங்கறார். ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா திரிகோணமிதில சைன் (sine) மற்றும் காஸ் (cos) மதிப்புகளை கண்டுபிடிக்கும் 'டைலர்' சீரீஸை அப்பவே கண்டுபிடித்தவர் மத்வாசாரியார். அவர் ஒரு பெரிய கணிதவியல் மேதை கூட .அவர் எவ்வளவு அழகா தன் சித்தாந்தத்தை கணிதத்தில் இருந்து, கணிதத்தின் ஒரு அழகான எண்ணில் இருந்து எடுத்திருக்கார் என்பது அற்புதம்.


சரி இங்க விசிஷ்டாத்வைதம் ,அதாவது ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் நெறி என்னஅப்படீன்னா, பரமாத்மா என்பது வட்டம் போல மாயத்தோற்றம் காட்டும் ஒரு சதுரம்என்பது. இந்த மார்க்கம் த்வைதம் மற்றும் அத்வைதம் இரண்டையும் ஓரளவுஒத்துக்கொள்கிறது.

அரிஸ்டாடிலின் கோல்டன் மீன் (Golden Mean) அப்படீன்னுசொல்வாளே அது மாதிரி .ஒரேயடியாக ஒரு ஜீவனிடம் நீ தான் பரமாத்மா அப்படீன்னு சொல்ல முடியாது. அவனுக்கு மிதப்பு வந்து விடும். அதே போல உன்னால்எத்தனை சாதனை செய்தாலும் பரமாத்மாவாக எப்போதும் மாற முடியாது என்று சொன்னால் அவன் மனமுடைந்து விரக்தியாகி விடுவான். எனவே நீ அஞ்ஞானத்தில்இருக்கும் வரை பரம்பொருள் உனக்கு ஒரு குழப்ப வட்டம். நீ ஞானம் பெற்றால் அதுஉனக்கு ஒரு தெளிந்த சதுரம் என்று சொல்கிறது இந்த நெறி.

அதாவது வெளியே குப்பன்,சுப்பன், கந்தன், கண்ணன் என்று பலபேர்களில் அழைக்கப்படுபவர்கள் பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டருக்கு 'டிக்கெட்' ஆக மாறி விடுவது போல.

பெரியாவாளுக்கு நிகர் பெரியவாள்தான்.
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !

*** *** ***


Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக