புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
2 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
2 Posts - 1%
சிவா
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
432 Posts - 48%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
29 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 82 of 84 Previous  1 ... 42 ... 81, 82, 83, 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 09, 2021 4:31 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (554)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இத் தொடரைப் பாருங்கள்:
1 . கையிற்று வீழ்ந்தான் – கை முறிந்து விழுந்தான்
முறிந்த செயல் (வினை), கையினுடையது; ஆனால் , தொடரானது இந்த வினையைக் கொண்டு முடியாமல், முதலின் (இங்கே கை யாருடையதோ அவன்) ,வினை கொண்டு (’வீழ்ந்தான்’)முடிந்துள்ளது.

இதனை அனுமதிக்கிறார் தொல்காப்பியர்:

“அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றின்
சினையொடு முடியா முதலொடு முடியினும்
வினையோர் அனைய என்மனார் புலவர்” (வினையியல் 34)

‘அம்முக் கிளவியும்’ - அந்த மூன்று ( ‘செய்து’, ‘செய்யூ’, ‘செய்பு’) வினையெச்சச் சொற்களும்.
‘சினை வினை’ – மேலை எடுத்துக்காட்டுத் தொடரில், கை முறிதலாகிய செயல்.
‘வினையோர் அனைய’ – சினையின் வினையாயினும், முதலின் வினையாயினும் இரண்டும் சமமே.

2 . கையிறூ வீழ்ந்தான் – கை முறிந்து விழுந்தான்
இறூ – முறிந்து.
விழுந்தவன் – முதல் ; கை – சினை
ஆனால், ‘வீழ்ந்தான்’ எனும் வினைமுடிபு, வினை முதல் கொண்டு முடிந்துள்ளதைக் கவனிக்க!
4 . கையிறுபு வீழ்ந்தான் – கை முறிகின்றதால் வீழ்ந்தான்
இங்கும் மேலை விளக்கத்தை ஒட்டி மகிழ்க!.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 09, 2021 8:40 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (555)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ ‘செய்து’, ‘செய்யூ’, ‘செய்பு’ என்ற மூன்று வினையெச்ச வாய்பாடுகளைப் பார்த்தாகி விட்டதால்,மீதியைப் பார்ப்போம்’ என்ரு நம்மை அழைக்கிறார் தொல்காப்பியர்:

“ஏனை எச்சம் வினைமுத லானும்
ஆன்வந் தியையும் வினைநிலை யானும்
தாமியல் மருங்கின் முடியும் என்ப ” (வினையியல் 35)

‘ஏனை எச்சம்’ – வினை.நூ. 31இல் = 9 வாய்பாடுகள்
வினை.நூ.32இல் = 6 வாய்பாடுகள்
வான்,பான், பாக்கு = 3 வாய்பாடுகள்
மொத்தம் , 18 வாய்பாடுகள்; இவற்றில், வினை.நூ. 32,33 ஆகியவற்றில் , ‘செய்து’, ‘செய்யூ’ ‘செய்பு’ ஆகியவற்றை விளக்கிவிட்டதால், ஏனைப் 15 வினையெச்ச வாய்பாடுகளே மேலை நூற்பாவில் பேசபடுகின்றன.
இப் பதினைந்து வினையச்ச வாய்பாடுகளும் வினைமுதல் வினையைக் கொண்டும் முடியலாம் அல்லது தொடரில் வந்து சேரும் வேறு வினையைக் கொண்டும் முடியலாம் !
நச்சர் தந்த சுருக்க எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கப் பட்டியலாக வரையலாம்!:-

1 . ‘செய்தென’ – மழை பெய்தெனப் புகழ் பெற்றது.
(மழை பெய்ததால் , அது புகழ் பெற்றது; இங்கே வினை முதல் ‘மழை’; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘பெற்றது’)
- மழை பெய்தென மரம் குழைத்தது.
( இங்கே ‘குழைத்தது’ என்ற வினை, வினை முதலான மழையின தல்ல; மாறாக மரத்தினது ஆகும். குழைத்தது - துளிர்த்தது)

2 . ‘செய்யியர்’ – மழை பெய்யியர் எழுந்தது.
(மழை பெய்வதற்கு எழுந்தது; இங்கே வினை முதல் ‘மழை’; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘எழுந்தது’)
- மழை பெய்யியர் பலி கொடுத்தனர்.
( இங்கே ‘கொடுத்தனர்’ என்ற வினை முடிபானது, வினை முதலான மழையின தல்ல; மாறாகப் பலி கொடுத்தவர்களுக் கானதாகும் .)

3. ‘செய்யிய’ – மழை பெய்தெனப் புகழ் பெற்றது.
(மழை பெய்ததால் , அது புகழ் பெற்றது; இங்கே வினை முதல் ‘மழை’; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘பெற்றது’)
- மழை பெய்தென மரம் குழைத்தது.
( இங்கே ‘குழைத்தது’ என்ற வினை, வினை முதலான மழையின தல்ல; மாறாக மரத்தினது ஆகும்.)

4. ‘செயின்’ – மழை பெய்யின் புகழ் பெறும்.
(மழை பெய்தால் , அது புகழ் பெறும்; இங்கே வினை முதல் ‘மழை’; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘பெறும்’)
- மழை பெய்யின் குளம் நிறையும்.
( இங்கே ‘நிறையும்’ என்ற வினை, வினை முதலான மழையின தல்ல; மாறாகக் குளத்தினது ஆகும்.)

5. ‘செய’ – மழை பெய்யப் புகழ் பெற்றது.
(மழை பெய்ததால் , அது புகழ் பெற்றது; இங்கே வினை முதல் ‘மழை’; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘பெற்றது’)
- மழை பெய்ய மரம் குழைத்தது.
( இங்கே ‘குழைத்தது’ என்ற வினை, வினை முதலான மழையின தல்ல; மாறாக மரத்தினது ஆகும்.)

6. ‘செயற்கு’ – மழை பெய்தற்கு முழங்கும்.
(மழை பெய்வதற்காக , மேகம் முழங்கும்; இங்கே வினை முதல் ‘மேகம்’; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘முழங்கும்’)
- மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும்.
( இங்கே ‘வாழ்த்துதும்’ என்ற வினை, வினை முதலான மழையின தல்ல; மாறாக வாழ்த்தும் மக்களது ஆகும்.)

7. ‘பின்’ – இறந்தபின் இளமை வாராது.
( இங்கே வினை முதல் ‘உடல்’; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘வாராது’)
- கணவன் உண்டபின் காதலி முகம் மலர்ந்தது.
( இங்கே ‘மலர்ந்தது’ என்ற வினை, வினை முதலான கணவன தல்ல; மாறாகக் காதலியுடையது ஆகும்.)

8. ‘முன்’ – கடுத் தின்னாமுன் துவர்த்தது .
( இங்கே வினை முதல் ‘கடு’; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘துவர்த்தது’)
- மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது.
( இங்கே ‘தீர்ந்தது’ என்ற வினை, வினை முதலான மருந்தினுடைய தல்ல; மாறாக நோயினுடையது ஆகும்.)

9. ‘கால்’ – உரைத்தக்கால் உரை பல்கும் .
( இங்கே வினை முதல் ‘உரை’; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘பல்கும்’)
- விதியென்று விடுத்தக்கால் ,காதலன் வரும் செய்தி எட்டியது.
( இங்கே ‘எட்டியது’ என்ற வினை, வினை முதலான ’நாம்’ என்பத னுடையதல்ல; மாறாகக் காதலன் வரும் என்ற செய்தி ஆகும்.)

10. ‘கடை’ – நல்வினைதான் உற்றக்கடை உதவும்.
( இங்கே வினை முதல் ‘நல்வினை’; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘உதவும்’)
- நல்வினைதான் உற்றக்கடை தீவினை வாராது .
( இங்கே ‘வாராது’ என்ற வினை, வினை முதலான நல்வினையி னுடையதல்ல; மாறாகத் தீவினையுடையது ஆகும்.)

11. ‘வழி’ – நல்வினைதான் உற்றவழி உதவும்.
( இங்கே வினை முதல் ‘நல்வினை’; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘உதவும்’)
- நல்வினைதான் உற்றவழித் தீவினை வாராது.
( இங்கே ‘வாராது’ என்ற வினை, வினை முதலான நல்வினையி னுடையதல்ல; மாறாகத் தீவினையி னுடையது ஆகும்.)

12. ‘இடத்து’ – நல்வினைதான் உற்றவிடத்து உதவும்.
( இங்கே வினை முதல் ‘நல்வினை’; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘உதவும்’)
- நல்வினைதான் உற்றவிடத்துத் தீவினை வாரா.
( இங்கே ‘வாரா’ என்ற வினை, வினை முதலான நல்வினையி னுடையதல்ல; மாறாகத் தீவினையி னுடையது ஆகும்.)

13. ‘பான்’ – உண்பான் வந்தான்.
( இங்கே வினை முதல் ‘உண்ண வந்தவன்; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘வந்தான்’. உண்பான் வந்தான் – உண்ண வந்தான்)
- கற்பான் நூல் செய்தான்.
( இங்கே ‘செய்தான்’ என்ற வினை, வினை முதலான கற்பவ னுடையதல்ல; மாறாக நூல் எழுதியவ னுடையது ஆகும். கற்பான் நூல் செய்தான் – கற்க நூல் எழுதினான்)

14. ‘பாக்கு’ – உண்பாக்கு வந்தான்.
( இங்கே வினை முதல் ‘உண்ண வந்தவன்; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘வந்தான்’. உண்பாக்கு வந்தான் – உண்ண வந்தான்)
- செல்வம் தருபாக்கு யாம் விரும்புதும் .
( இங்கே ‘விரும்புதும்’ என்ற வினை, வினை முதலான செல்வம் தருபவ னுடைய தல்ல; மாறாக விரும்புவ னுடையது ஆகும். தருபாக்கு – தர )

15. ‘வான்’ – கொள்வான் வந்தான்.
( இங்கே வினை முதல் ‘கொள்ள வந்தவன்”; அதனுடைய கொண்டு முடியும் வினை ‘வந்தான்’. கொள்வான் - கொள்ள)
- நமது நலன் நுகர்வான் யாம் விரும்புதும்.
( இங்கே ‘விரும்புதும்’ என்ற வினை, வினை முதலான நுகர்பவ னுடைய தல்ல; மாறாக ‘யாம்’ என்பத னுடையது ஆகும். நுகர்வான் - நுகர)

‘ஆன்வந் தியையும் வினைநிலை’ –
‘ மழை பெய்யின் குளம் நிறையும்’ என்ற தொடரில், இரு வினைகள் உள; ஒன்று ‘பெய்தல்’ ; மற்றது ‘நிறைதல்’. ‘பெய்தல்’ என்ற வினைக்கான வினை முதல் மழை; ஆனால் , இன்னொரு வினை வந்து இயைகிறது (சேர்கிறது); சேரும் அந்த வினைதான் ‘நிறையும்’; இதுவே ‘ஆன்வந் தியையும் வினைநிலை’ !

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 10, 2021 10:21 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (556)
                                               -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வினையெச்ச வாய்பாடுகளை முடித்து, இப்போது  ‘அந்த வினையெச்ச வாய்பாடுகள் ஒரே தொடரில் அடுக்கி வரலாமா?’ என்ற வினாவுக்கு விடை கூறுகிறார்!:-

“பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி
சொன்முறை முடியாது அடுக்குந வரினும்
முன்னது முடிய முடியுமன் பொருளே”       (வினையியல் 36)

 ‘பன்முறையானும்’ – பல எச்சங்களாலும்,
 ‘வினையெஞ்சு கிளவி’ – வினையெச்சச் சொற்களானவை,
  ‘சொன்முறை முடியாது’ – வினைமுற்றுடன் முடியாது,
 ‘அடுக்குந வரினும் ’ – அடுத்தடுத்து  அடுக்கி வந்தாலும்,
‘முன்னது முடிய முடியுமன் பொருளே’ – இறுதி எச்சம் எந்த முற்றைக் கொண்டு  
முடிகிறதோ , அதுவே முன் வந்த எச்சங்களுக்கும் முடிபாம்!

‘உழுது உண்டு தின்று ஓடிப் பாடி வந்தான்’ – இத் தொடரில், ஐந்து எச்சங்கள் வந்துள்ளன; இறுதி எச்சமான  ‘பாடி’ என்பது, ‘வந்தான்’ என்ற வினை முற்றுக்கொண்டு முடிந்துள்ளது. இதனால்,
‘உழுது வந்தான்’ , ‘உண்டு வந்தான்’ , ‘தின்று வந்தான்’, ‘ஓடி வந்தான்’ என, மற்ற எச்சங்கட்கும் ‘வந்தான்’ என்பதே வினை முற்றாம்!

மேல் ஐந்து எச்சங்களுமே ‘செய்து’ எனும் ஒரே வாய்பாட்டு வினையெச்சங்கள் ஆகும். நூற்பாப்படி, வெவ்வேறு வாய்பாட்டு எச்சங்கள் ஒரே தொடரில் அடுக்கி வந்தாலும் , மேலைக் கருத்து உண்மையாதல் வேண்டும்!

இதனை நச்சர் ஒரு தொடரால் மெய்ப்பிக்கிறார்:
‘உண்டு பருகூஉத் தின்குபு வந்தான்’
இத் தொடரில்,
உண்டு – ‘செய்து’ வாய்பாட்டு வினையெச்சம்
பருகூஉ –  ‘செய்யூ’ வாய்பாட்டு வினையெச்சம் (பருகூஉ - பருகி)
தின்குபு –  ‘செய்பு’ வாய்பாட்டு வினையெச்சம் (தின்குபு –
தின்றுகொண்டு)
நச்சர் தொடரில் மூன்று வெவ்வெறு வினையெச்ச வாய்பாடுகள் வந்துள்ளதைக் கவனிக்க!
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 11, 2021 5:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (557)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஆடிய கால்’ – இத் தொடரில் , ‘ஆடிய’ என்பது பெயரெச்சம்; ‘கால்’ என்பது பெயர்; பெயரெச்சம் ஒரு பெயரைக் கொண்டு முடிதல் வேண்டும்.
இங்கே ‘ஆடிய’ என்பது, ‘செய்த’ என்ற வாய்பாட்டில் வந்துள்ளது.

இதுபோன்று பிற பெயரெச்ச வாய்பாடுகள் உளவா? பெயரெச்சங்கள் கொண்டுமுடியும் சொற்கள் பற்றி விதி உள்ளதா?
இதற்கு விடையையே இப்போது கூறலுறுகிறார் தொல்காப்பியர்:

“நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய
செய்யுஞ் செய்த என்னுஞ் சொல்லே” (வினையியல் 37)

‘செய்யும்’ , ‘செய்த’ எனும் இரு பெயரெச்ச வாய்பாடுகள் , நிலன், பொருள், காலம், கருவி, வினைமுதற் கிளவி, வினை ஆகிய ஆறு பொருட் சொற்களைக் கொண்டு முடியும்! இங்கே ‘வினை’ என்பது தொழிற்பெயரைக் குறிக்கும் என்பர்.

‘செய்யும்’ எனும் வாய்பாட்டுப் பெயரெச்சத்திற்குக் கல்லாடனார் மற்றும் பிறர் தந்த சுருக்க எடுத்துக்காட்டுகளை நாம் வருமாறு விளக்கலாம்!:

1 . ‘நிலம்’ - அவன் உண்ணும் இல்லம் (படர்க்கை ஆண்பாலுடன்)
(உண்ணும் – பெயரெச்சம்; ‘இல்லம்’ என்ற நில அடிப்படையான சொல்லைக் கொண்டு முடிந்துள்ளது.)

- அவள் உண்ணும் இல்லம் (படர்க்கைப் பெண்பாலுடன்)
- அது உண்ணும் இல்லம் (படர்க்கை ஒன்றன்பாலுடன்)
- அவை உண்ணும் இல்லம் (படர்க்கைப் பலவின்பாலுடன்)
- அவர் உண்ணும் இல்லம் (படர்க்கைப் பலர்பாலுடன்)

2 . ‘பொருள்’ - அவன் உண்ணும் சோறு (படர்க்கை ஆண்பாலுடன்)
(உண்ணும் – பெயரெச்சம்; ‘சோறு’ என்ற பொருளைக் கொண்டு முடிந்துள்ளது.)

- அவள் உண்ணும் சோறு (படர்க்கைப் பெண்பாலுடன்)
- அது உண்ணும் சோறு (படர்க்கை ஒன்றன்பாலுடன்)
- அவை உண்ணும் சோறு (படர்க்கைப் பலவின்பாலுடன்)
- அவர் உண்ணும் சோறு (படர்க்கைப் பலர்பாலுடன்)

3 . ‘காலம்’ - அவ னுண்ணுங் காலை (படர்க்கை ஆண்பாலுடன்)
(உண்ணும் – பெயரெச்சம்; ‘காலை’ என்ற கால அடிப்படையான பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.)

- அவ ளுண்ணுங் காலை (படர்க்கைப் பெண்பாலுடன்)
- அது வுண்ணுங் காலை (படர்க்கை ஒன்றன்பாலுடன்)
- அவை யுண்ணுங் காலை (படர்க்கைப் பலவின்பாலுடன்)
- அவ ருண்ணுங் காலை (படர்க்கைப் பலவின்பாலுடன்)

4 . ‘கருவி’ - அவன் எறியுங் கல் (படர்க்கை ஆண்பால்)
(எறியும் – பெயரெச்சம்; ‘கல்’ என்ற கருவிப் பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.)

- அவள் எறியுங் கல் (படர்க்கைப் பெண்பாலுடன்)
- அது எறியுங் கல் (படர்க்கை ஒன்றன்பாலுடன்)
- அவை எறியுங் கல் (படர்க்கைப் பலவின்பாலுடன்)
- அவர் எறியுங் கல் (படர்க்கைப் பலர்பாலுடன்)


5 . ‘வினைமுதல்’ - உண்ணுமவன் (படர்க்கை ஆண்பாலுடன்)
(உண்ணும் – பெயரெச்சம்; ‘அவன்’ என்ற வினைமுதற் பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.)

- உண்ணுமவள் (படர்க்கைப் பெண்பாலுடன்)
- உண்ணுமது (படர்க்கை ஒன்றன்பாலுடன்)
- உண்ணுமவை (படர்க்கைப் பலவின்பாலுடன்)
- உண்ணுமவர் (படர்க்கைப் பலர்பாலுடன்)

6 . ‘வினை’ - அவன் உண்ணும் ஊண் (படர்க்கை ஆண்பாலுடன்)
(உண்ணும் – பெயரெச்சம்; ‘ஊண்’ என்ற உண்ணப்படும் தொழிலை – வினையை – உணர்த்தும் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளது.)

- அவள் உண்ணும் ஊண் (படர்க்கைப் பெண்பாலுடன்)
- அது உண்ணும் ஊண் (படர்க்கை ஒன்றன்பாலுடன்)
- அவை உண்ணும் ஊண் (படர்க்கைப் பலவின்பாலுடன்)
- அவர் உண்ணும் ஊண் (படர்க்கைப் பலர்பாலுடன்)

இனிச், ‘செய்த’ எனும் வாய்பாட்டுப் பெயரெச்சதிற்கான எடுத்துக்காட்டுகள்:-

1 . ‘நிலம்’ – விளைந்த ஊர்
2 . ‘பொருள்’ – எழுதிய சுவடி
3. ‘காலம்’ – சென்ற திங்கள்
4. ‘கருவி’ – அறுத்த அரிவாள்
5. ‘வினைமுதல்’ – கொடுத்த வள்ளல்
6. ‘வினை’ – கூடிய கூட்டம்

***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 13, 2021 10:33 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (558)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது ‘செய்யும்’ எனும் வாய்பாட்டுப் பெயரெச்சம் பற்றி மேலும் ஒரு கருத்தைக் கூறுகிறார் தொல்காப்பியர்!

முன்னர்ச் ‘செய்யும் ’ எனும் வாய்பாட்டு வினைமுற்றுப் பற்றி ஓதும்போது (வினை.27), அது பல்லோர் படர்க்கை, முன்னிலை , தன்மை ஆகிய மூன்றுக்கும் பொருந்தாது என்றாரல்லவா? ஆனால் ‘செய்யும்’ எனும் வாய்பாட்டுப் பெயரெச்சத்திற்கு அந்த விலக்குப் பொருந்தாது என்கிறார்!

இதோ அந் நூற்பா:
“அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி
முதற்கண் வரைந்த மூவீற்றும் உரித்தே” (வினையியல் 38)

அவற்றொடு – நிலம், பொருள், காலம், கருவி, வினைமுதல், வினை ஆகியவற்றொடு.
மூவீற்றும் – மூன்று வகைகளிலும்

இந் நூற்பாவிற்குக் கல்லாடனார் தந்த சுருக்க எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம்!:

1 . ‘நிலம்’ -அவர் உண்ணும் இல்லம் ( உண்ணும்-‘செய்யும்’எனும் பெயரெச்சம்)
(படர்க்கைப் பலர்பாலுடன்)
2 . ‘பொருள்’ -அவர் உண்ணும் சோறு (படர்க்கைப் பலர்பாலுடன்)
3 . ‘காலம்’ -அவர் ஓதும் காலை ( ஓதும் -‘செய்யும்’எனும் பெயரெச்சம்)
(படர்க்கைப் பலர்பாலுடன்)
4 . ‘கருவி’ -அவர் எறியும் காலை ( எறியும் -‘செய்யும்’எனும் பெயரெச்சம்)
(படர்க்கைப் பலர்பாலுடன்)
5 . ‘வினைமுதல்’ –உண்ணுமவர் வந்தார்( உண்ணும் -‘செய்யும்’எனும் பெயரெச்சம்)
(படர்க்கைப் பலர்பாலுடன்)
6. ‘வினை’ -அவர் உண்ணும் ஊண் ( உண்ணும் -‘செய்யும்’எனும் பெயரெச்சம்;
ஊண் - உண்ணப்படும் வினையைக் குறித்த தொழிற்பெயர்)
(படர்க்கைப் பலர்பாலுடன்)
7 . ‘நிலம்’ –நீ யுண்ணும் இல்லம் ( உண்ணும் -‘செய்யும்’எனும் பெயரெச்சம்)
(முன்னிலை ஒருமையுடன்)
8 . ‘நிலம்’ –நீயி ருண்ணும் இல்லம் (முன்னிலைப் பலர்பாலுடன்)
9 . ‘பொருள்’ –நீ யுண்ணும் சோறு (முன்னிலை ஒருமையுடன்)
10 . ‘பொருள்’ –நீயி ருண்ணும் சோறு (முன்னிலைப் பலர்பாலுடன்)
11 . ‘காலம்’ –நீ ஓதுங் காலை (முன்னிலை ஒருமையுடன்)
12 . ‘காலம்’ –நீயிர் ஓதுங் காலை (முன்னிலைப் பலர்பாலுடன்)
13 . ‘கருவி’ –நீ எறியும் கல் (முன்னிலை ஒருமையுடன்)
14 . ‘கருவி’ –நீயிர் எறியும் கல் (முன்னிலைப் பலர்பாலுடன்)
15 . ‘வினைமுதல்’ – உண்ணும் நீ வந்தாய் ( உண்ணும்- ‘செய்யும்’ எனும்
வாய்பாட்டுப் பெயரெச்சம்) (முன்னிலை ஒருமையுடன்)
16 . ‘வினைமுதல்’ – உண்ணும் நீயிர் வந்தீர் (முன்னிலைப் பலர்பாலுடன்)
17 . ‘வினை’ – நீ உண்ணும் ஊண் (முன்னிலை ஒருமையுடன்)
18 . ‘வினை’ – நீயிர் உண்ணும் ஊண் (முன்னிலைப் பன்மையுடன்)
19 .‘நிலம்’ – யான் உண்ணும் இல்லம் (தன்மை ஒருமையுடன்)
20. ‘நிலம்’ – யாம் உண்ணும் இல்லம் [தன்மைப் பன்மை(exclusive plural)யுடன்]
21 . ‘நிலம்’ – நாம் உண்ணும் இல்லம் [உளப்பாட்டுத் தன்மைப் பன்மை(inclusive
plural)யுடன்]
22 . ‘பொருள்’ – யான் உண்ணும் சோறு (தன்மை ஒருமையுடன்)
22 . ‘பொருள்’ – யாம் உண்ணும் சோறு (தன்மைப் பன்மையுடன்)
23 . ‘பொருள்’ – நாம் உண்ணும் சோறு (உளப்பாட்டுத் தன்மைப் பன்மையுடன்)
24 . ‘காலம்’ – யான் உண்ணுங் காலை (தன்மை ஒருமையுடன்)
25 . ‘காலம்’ – யாம் உண்ணுங் காலை (தன்மைப் பன்மையுடன்)
26 . ‘காலம்’ – நாம் உண்ணுங் காலை (உளப்பாட்டுத் தன்மைப் பன்மையுடன்)
27 . ‘கருவி’ – யான் எறியுங் கல் (தன்மை ஒருமையுடன்)
28 . ‘கருவி’ – யாம் எறியுங் கல் (தன்மைப் பன்மையுடன்)
29 . ‘கருவி’ – நாம் எறியுங் கல் (உளப்பாட்டுத் தன்மைப் பன்மையுடன்)
30 . ‘வினைமுதல்’ – உண்ணும் யான் வந்தேன் ( தன்மை ஒருமையுடன்)
31 . ‘வினைமுதல்’ – உண்ணும் யாம் வந்தேம் ( தன்மைப் பன்மையுடன்)
32 . ‘வினைமுதல்’ – உண்ணும் நாம் வந்தேம் ( உளப்பாட்டுத் தன்மைப்
பன்மையுடன்)
33 . ‘வினை’ – யான் உண்ணும் ஊண் ( தன்மை ஒருமையுடன்)
34 . ‘வினை’ – யாம் உண்ணும் ஊண் ( தன்மைப் பன்மையுடன்)
35 . ‘வினை’ – நாம் உண்ணும் ஊண் (உளப்பாட்டுத் தன்மைப் பன்மையுடன்)

***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 14, 2021 1:38 pm

பெயர் எஞ்சு கிளவியும் வினை எஞ்சு கிளவியும்,
எதிர் மறுத்து மொழியினும், பொருள் நிலை திரியா.

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 1571444738 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 82 1571444738

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 15, 2021 6:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (559)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உண்ணும் சாத்தன் – இது பெயரெச்சத் தொடர். ‘உண்ணும்’, உடன்பாட்டுப் பொருளில் (affirmative sense) வந்துள்ளது.

உண்டு வந்தான் – இது வினையெச்சத் தொடர். ‘உண்டு’, உடன்பாட்டுப் பொருளில் வந்துள்ளது.
இவ்வாறு பெயரெச்சம் வினையெச்சங்கள் எல்லாமே உடன்பாட்டுப் பொருளில்தான் வரவேண்டுமா?

‘இல்லை’ என்கிறார் தொல்காப்பியர்; இதோ நூற்பா:-

“பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும்
எதிர்மறுத்து மொழியினும் பொருள்நிலை திரியா ” (வினையியல் 39)

பெயரெச்சம், வினையெச்சம் இரண்டுமே உடன்பாட்டுப் பொருளிலும் வரும் , எதிர்மறைப் பொருளிலும் வரும் என்பதே இந் நூற்பாவின் கருத்து.

வினையியல் நூற்பா 37இன் கீழ், ‘செய்யும்’ எனும் வாய்பாட்டுப் பெயரெச்ச உடன்பாட்டுப் பொருளில் வந்ததற்கு எடுத்துக்காட்டுகளைப் பார்த்தோம். இப்போது, இதே ‘செய்யும்’ எனும் வாய்பாட்டுப் பெயரெச்சம் எதிர்மறைப் பொருளில் வருவதைக் கீழே காண்போம்:

1 . ‘நிலம்’ – உண்ணா இல்லம் (இங்கே ‘உண்ணா’ – எதிர்மறைப் பெயரெச்சம்)
2 . ‘பொருள்’ – உண்ணாச் சோறு
3 . ‘காலம்’ – உண்ணாக் காலம்
4 . ‘கருவி’ – வனையாக் கோல்
5 . ‘வினைமுதல்’ – ஓதாக் கந்தன்
6 . ‘வினை’ – உண்ணா ஊண் (’ஊண்’ , உண்ணப்படும் வினையைக் குறித்தல்
காண்க)

இனிச், ‘செய்த’ எனும் வாய்பாட்டு எதிர்மறைப் பெயரெச்சதிற்கான எடுத்துக்காட்டுகள்:-

1 . ‘நிலம்’ – விளையா ஊர்
2 . ‘பொருள்’ – எழுதாச் சுவடி
3. ‘காலம்’ – கடவாத் திங்கள்
4. ‘கருவி’ – அறுக்கா அரிவாள்
5. ‘வினைமுதல்’ – கொடுக்கா ‘ வள்ளல்’
6. ‘வினை’ – கூடாக் கூட்டம் (கூட்டம் – கூடுதல் எனும் வினை அடியாக இப்
பெயர் வந்தது)

இப்போது , வினையெச்ச வாய்பாட்டுச் சொற்கள் எதிர்மறைப் பொருளில் வருவதைக் காண்போம்!:

1 . ‘செய்து’ – உண்ணாது வந்தான் ( ‘உண்ணாது’ – எதிர்மறை வினையெச்சம்)
2 . ‘செய்யூ’ – உண்ணாது வந்தான் ( ‘செய்யூ’ வாய்பாட்டுக்கும் எதிர்மறை
‘உண்ணாது’ என்பதே )
3 . ‘செய்பு’ – உண்ணாது வந்தான் ( ‘செய்பு’ வாய்பாட்டுக்கும் எதிர்மறை
‘உண்ணாது’ என்பதே )
4 . ‘செய்தென’ – மழை பெய்யாது அறம் பெறாதாயிற்று
5 . ‘செய்யியர்’ – உண்ணாமைக்கு வந்தான்
6 . ‘செய்யிய’ – உண்ணாமைக்கு வந்தான் (இதுவும் ‘செய்யிய’ வாய்பாட்டு
எச்சத்திற்கு எதிர்மறையே)
7 . ‘செயின்’ – மழை பெய்யாவிடின் அறம் பெறாது
8 . ‘செய’ – உண்ணாமைக்கு வந்தான் (இதுவும் ‘செய’ வாய்பாட்டு
எச்சத்திற்கு எதிர்மறையே)
9 . ’செயற்கு’ - உண்ணாமைக்கு வந்தான் (இதுவும் ‘செயற்கு’ வாய்பாட்டு
எச்சத்திற்கு எதிர்மறையே)
10 .‘பின்’ – தான் உண்ணாதபின் வந்தான்
11 . ‘முன்’- தான் உண்ணாதமுன் வந்தான்
12 . ‘கால்’- தான் உண்ணாதக்கால் வரும்
13 . ‘கடை ’- தான் உண்ணாதக்கடை வரும்
14 . ‘வழி’- தான் உண்ணாதவழி வரும்
15 . ‘இடத்து’- தான் உண்ணாதவிடத்து வரும்
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 16, 2021 9:31 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (560)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

படித்து வந்தான் – இது வினையெச்சத் தொடர்.
இது பற்றி முன்பே பேசியுள்ளோம். ஆனால், தொடரின் இரு சொற்களுக்கிடையே வேறு சொல் வரலாமா?

‘வரலாம்’ என்பதுதான் அடுத்த நூற்பா:
“தத்தம் எச்சமொடு சிவணுங் குறிப்பின்
எச்சொல் லாயினும் இடைநிலை வரையார் ” (வினையியல் 40)

அப்படி இடையே நுழையும் சொல்லானது, முன் எச்சச் சொல்லோடு பொருள் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்!

இதன்படி,
படித்துக் குமணன் வந்தான் √

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள்:
1 . உழுது சாத்தன் வந்தான்
2 . உழுது ஏரோடு வந்தான்
3 . கொல்லும் காட்டுள் யானை
4 . கொன்ற காட்டுள் யானை

இடையில், நுழையும் சொல், முன் எச்சச் சொல்லோடு பொருந்தாது வருவதற்கும் எடுத்துக்காட்டைத் தந்துள்ளார் சேனாவரையர்:
உண்டு விருந்தொடு வந்தான் – இத் தொடரில், ‘விருந்தொடு’ என்பது, முன் வினையெச்சச் சொல்லான ‘உண்டு’ என்பதோடு பொருட்பொருத்தம் கொள்ளவில்லை என்பதறிக.

இடையில் நுழையும் சொல்லானது, எச்சச் சொல்லாகவும் இருக்கலாம் என்று விளக்கம் தருகிறார் சேனாவரையர்; அவரின் எடுத்துகாட்டுகள்:
1 . உழுது ஓடி வந்தான்
2 . கவளங் கொள்ளாக் களித்த யானை

தொடர்ந்து தொல்காப்பியர் , ‘செய்யும்’ எனும் வாய்பாட்டுப் பெயரெச்சச் சொல்லின் ஈறு பற்றி ஓதுகிறார்:
“அவற்றுள்
செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகரம்
அவ்விட னறித லென்மனார் புலவர்” (வினையியல் 41)


பொருள் - ‘செய்யும்’ எனும் வாய்பாட்டுப் பெயரெச்சச் சொல்லின், ஈற்றிலே உள்ள மெய் ஏறிய உகரமானது, கெடும், சில இடங்களில்; அப்படிப்பட்ட இடங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று புலவோர் கூறுவர்!

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம்.

வாவும் புரவி – இத் பெயரெச்சத் தொடர். இதில், ‘வாவும்’ எனும் பெயரெச்சத்தில், உகரம் ஏறிய மெய், ‘வு’. நூற்பாப்படி இந்த ‘வு’ கெடும்! கெட்டு, ‘வாம்புரவி’ என்று ஆகும்! ‘வாம்புரவி’ என எங்காவது வந்தால், இந்த விளக்கம் நினைவுக்கு வரவேண்டும்!

இதைப் பொன்றே , ‘போகும் புழை’ என்பது , ‘போம்புழை ’ என்றாகும்!

‘ஆகுங் காலம்’ – ஆங்காலம்
‘போகுங் காலம்’ – போங்காலம்
- என்றெல்லாம் ஆவதை நாம் உணரலாம்!
‘செய்யும்’ எனும் பெயரெச்சம் பற்றித்தானே மேலே பார்த்தோம்?
‘செய்யும்’ எனும் முற்றுச் சொல் வந்தால், ‘ஈற்று மிசை உகரம் மெய்யொடும் கெடும் , மெய்யை விட்டுவிட்டு உரம் மட்டும் கெடும்’ என்ற விளக்கத்தைத் தருகிறார் சேனாவரையர்!

அவரின் எடுத்துக்காட்டுகள் :
‘அவனொடு மொழிமே’ – இதில் , ‘மொழியுமே’ என்பதிலுள்ள உகரம் மெய்யோடு கெட்டு, அஃதாவது ‘யு’ கெட்டு, ‘மொழிமே’ ஆகியுள்ளது!

‘தோழியும் கலுழ்மே’ – இதில், ‘கலிலுமே’ என்பதன் உகரம் மட்டும் கெட்டு, அஃதாவது மெய்யான ‘ழ்’ கெடாமல், ‘கலுழ்மே’ ஆகியுள்ளது!

‘கூந்தல் புரளுமே’ – கூந்தல் புரள்மே (உகரம் மட்டும் கெட்டது)
‘நல்லதை அறியுமே’ – நல்லதை அறிமே (உகரம் மெய்யோடு கெட்டது )
- என்றெல்லம் வரக் காணலாம்!

ஓலைச் சுவடிகளிலிருந்து நூல் பதிப்பிப்போரும் , செம்பதிப்பு ( Critical Edition) உருவாக்குவோரும் இவற்றைக் கவனிக்க!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 18, 2021 1:10 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (561)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ அவன் உண்டு வந்தான்’ – இதில், ‘உண்டு’ எனும் சொல்லானது ‘செய்து’எனும் வினையெச்ச வாய்பாட்டில், இறந்த காலம் காட்டி நின்று, ‘வந்தான்’ எனும் இறந்தகால வினை முற்றோடு முடிந்துள்ளது.
இப்படி, இறந்தகால முற்றோடு முடியாமல் , எதிர்கால முற்றோடு முடியலாமா?

‘முடியலாம் ’ என்கிறார் தொல்காப்பியர் :

“செய்தெ னெச்சத் திறந்த காலம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்”

‘செய்தென் எச்சத்து’ – ‘செய்து’ எனும் வினையெச்சச் சொல்லினது,
‘இறந்த காலம்’ – முடிப்புச் சொல்லான இறந்தகாலச் சொல் போல,
‘ எய்திட னுடைத்தே வாராக் காலம்’ – எதிர்காலம் காட்டும் சொல்லும் நிற்கலாம்!
வாராக் காலம் – எதிர் காலம்

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம்:
1 . நீ உண்டு வருவாய்
இங்கு, ‘உண்டு’ என்ற எச்சமானது இறந்தகாலம் காட்டினாலும், ‘வருவாய்’ என்ற எதிர்கால முற்றோடு இயந்து முடிந்துள்ளதைக் காண்க.

2. நீ உழுது வருவாய்
இங்கும், ‘உழுது’ என்ற எச்சமானது இறந்தகாலம் காட்டினாலும், ‘வருவாய்’ என்ற எதிர்கால முற்றோடு இயந்து முடிந்துள்ளதைக் காண்க.

தொடர்ந்து, ‘மூன்று காலங்களுக்கும் உரிய இயற்கைப் பொருகளை, நிகழ்காலப் பொருண்மை கொண்ட ‘செய்யும்’ எனும் வாய்பாட்டுச் சொல்லால் சொல்லுக!’ என்று காட்டுகிறார் தொல்காப்பியர்!:

“முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை
எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்” (வினையியல் 43)

‘முந்நிலைக் காலம்’ – இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்
‘இயற்கை, எம்முறைச் சொல்லும்’ – இயற்கையைக் குறிக்கும் எந்தச் சொல்லும்
‘மெய்ந்நிலைப் பொதுச் சொல்’ – மூன்று காலங்களுக்கும் பொதுவாய் நிற்கும் நிகழ்காலத்திற்கு உரியதான பொதுச்சொல்.

உரையாசிரியர்தம் எடுத்துக்காட்டுகள்:

1 . மலை நிற்கும்
2 . ஞாயிறு இயங்கும்
3 . திங்கள் இயங்கும்
4 . தீச் சுடும்
5 . யாறு ஒழுகும்

நாமும் வருமாறு சில எடுத்துக்காட்டுகளைச் சிந்திக்கலாம்;

1 . மீன் நீந்தும்
2 . மயில் ஆடும்
3 . மான் தாவும்
4 . காய் பழுக்கும்
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 20, 2021 8:54 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (562)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஒருவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்; அடுத்தவன், ‘இன்னும் கிளம்பவில்லையா?’ என்று கேட்கும்போது, ‘இதோ கிளம்பிவிட்டேன்’ என்கிறான்!

அவன் இன்னும் புறப்படவில்லை;இனிமேல்தான்(எதிர்காலத்தில்தான்) புறப்படுவான்; ஆனாலும், இறந்தகாலத்தில், ‘கிளம்பிவிட்டேன்’ என்கிறான்!

இதைப்போன்றே , இன்னும் வேலையை முடிக்காமல் இருக்கும் ஒருவன், ‘இதோ முடித்துவிட்டேன்’ என்று இறந்தகாலச் சொல்லைப் பயன்படுத்துகிறான்! அவன் வேலையைச் செய்துகொண்டுதான்(நிகழ்காலத்தில் ) இருக்கிறான் ; முடிக்கவில்லை; ஆனால் விடைகூறப் பயன்படுவதோ இறந்தகாலம்!

இவ்வாறு எதிர்காலத்தில் அமையவேண்டிய சொல்லையும் , நிகழ்காலத்தில் சொல்லவேண்டிய சொல்லையும் இறந்தகாலத்தில் சொல்லலாமா?

சுவையான இத் தருணத்திற் கென்றே வருகிறது அடுத்த தொல்காப்பிய நூற்பா!:

“வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள என்மனார் புலவர்” (வினையியல் 44)

அஃதாவது, மேலே நமது எடுத்துக்காட்டுகளில் , இறந்தகாலத்தில் சொல்லவேண்டி வந்ததற்குக் காரணம் என்ன?
விரைவுதான் ! அவசரம்தான்!
இதனை அங்கீகரிக்கிறது தொல்காப்பியம்!

‘வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்’ – எதிர்காலத்திலும், நிகழ்காலத்திலும்,
‘ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி’ – பொருந்தி வரக்கூடிய வரக்கூடிய வினைச் சொற்களை,
‘இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்’- இறந்தகாலப் பொருள் ஏற்படுமாறு சொல்லுதல்,
‘விரைந்த பொருள என்மனார் புலவர்’ – ஒரு விரைவு விடை கருதியே ஆகும் என்பர்!
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



Page 82 of 84 Previous  1 ... 42 ... 81, 82, 83, 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக