புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 81 of 84 •
Page 81 of 84 • 1 ... 42 ... 80, 81, 82, 83, 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

தொடத் தொடத் தொல்காப்பியம் (544)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகளின் ஈறுகள் பற்றியது அடுத்த நூற்பா!;
“பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉங்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே” (வினையியல் 24)
அஃதாவது ஒன்றன் பாலிலும் , பலவின் பாலிலும் வரும் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் யாவும் , முன் சொன்னபடி, அஃறிணை வினைமுற்றுகள் பெற்ற ஈறுகளையே பெறும்!
இவற்றுக்குக் கல்லாடனார் தரும் சுருக்க எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கப் பட்டியலாகத் தரலாம்!:
1. ’து’ ஈறு பெற்ற படர்க்கை ஒன்றன்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் – 1.உடைத்து
2. சிறிது
3. கருங்கோட்டது
4.குறுங்கோட்டது 5.பொன்னன்னது
6.வடாஅது
7.மூவாட்டையது
8.உண்டிலது
(கருங்கோட்டது – கரிய கொம்புடையது; குறுங்கோட்டது –
குறுகிய கொம்புடையது;வடாஅது – வடக்குத் திசையது;
மூவாட்டையது – மூன்று ஆண்டுகள் வயதுடையது;
உண்டிலது – உண்ணவில்லை; உண்டிலது – அஃறிணை
ஒருமை எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று)
2. ‘று’ ஈறு பெற்ற படர்க்கை ஒன்றன்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் –
1.செம்மற்று
2.அன்று
3.குறுங்கோடிற்று
4.மேற்று
5.வைகற்று
6.செலவிற்று
(செம்மற்று – சிறப்பினை யுடையது; அன்று –
இல்லை;குறுங் கோடிற்று – குறுகிய கொம்புடையது;
மேற்று – குறித்தது; வைகற்று- கழிந்த நாளது;செலவிற்று- தன்மையது)
3. ‘டு’ஈறு பெற்ற படர்க்கை ஒன்றன்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் – 1.குண்டுகட்டு
2.குறுதாட்டு
(குண்டுகட்டு – குழிந்த கண்ணுடைத்து;குறுந்தாட்டு-
குறுகிய தாளுடைத்து)
4. ‘அ’ ஈறு பெற்ற படர்க்கைப் பலவின்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள்- 1.பொருள
2.அல்ல
3.கரிய
4.கோட்ட
5.பொன்னன்ன
6.வடக்கண்ண
7.மூவாட்டைய
(பொருள – பொருளுடையவை; கோட்ட – கொம்புடையவை; வடக்கண்ண;
வடக்குக்குச் சார்ந்தவை; மூவாட்டையது – மூன்று ஆண்டுகள்
வயதுடையவை)
5. ‘ஆ’ ஈறு பெற்ற படர்க்கைப் பலவின்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள்- 1.இம் மணி நல்ல
2.இம் மணி பொல்லா
(இம் மணி நல்ல- இதில், ‘நல்ல’ என்பதே குறிப்பு வினைமுற்று; இம் மணி பொல்லா – இதில், ‘பொல்லா’ என்பதே குறிப்பு வினைமுற்று; ‘பொல்லா’, எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று)
6.‘வ’ ஈறு பெற்ற படர்க்கைப் பலவின்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்று- 1.கதவ (கதவ – கோபம் உடைய)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தொடத் தொடத் தொல்காப்பியம் (545)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குறிப்பு வினைமுற்றுகளை அடுத்து, விரவு வினைகளை எடுக்கிறார் தொல்காப்பியர்.
விரவு வினைகளின் தன்மை, வருமுறை,தொகை பற்றிய அவரது நூற்பா!:
“முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி
இன்மை செப்பல் வேறென் கிளவி
செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னும்
அம்முறை நின்ற ஆயெண் கிளவியும்
திரிபுவேறு படூஉஞ் செய்திய வாகி
இருதிணைச் சொற்குமோ ரன்ன உரிமைய” (வினையியல் 25)
1. ‘முன்னிலை’ – நம் முன்னே இருப்பவனிடம் அல்லது இருப்பதனிடம் சொல்லும் விரவு வினைமுற்றுச் சொல்:
1. சோறு உண்பாய்
2. புல் உண்பாய்
2. ‘வியங்கோள்’ – ஏவல் பொருளைக் கொள்ளக்கூடிய விரவு வினைமுற்றுகள்:
1.பசு வாழ்க
2.நண்பன் வாழ்க
2.பால் அருளுக
3.பொருள் அருளுக
4. கூடுவிட்டு ஒழிக
5. வீட்டை விட்டு ஒழிக
3. ‘வினையெஞ்சு கிளவி’ – விரவு வினையெச்சங்கள்:
1.எழுந்து கொம்பை அசைத்தது
2.எழுந்து நின்றான்
3.வந்து பேசினாள்
4.வந்து தின்றது
4.‘இன்மை செப்பல்’ – ‘இல்லை’எனும் விரவுக் குறிப்பு வினைமுற்று:
1.குருவி இல்லை
2. அவள் இல்லை
6.‘வேறு என் கிளவி’ – ‘வேறு’எனும் விரவுக் குறிப்பு வினைமுற்று:
1.அவன் வேறு
2. அது வேறு
7.‘செய்ம்மன’ என் கிளவி – ‘செய்ம்மன’ எனும் விரவு வினைமுற்று:
1.குழந்தைகள் உண்டன
2. ஆடுகள் உண்டன
8.‘செய்யும்’ என் கிளவி – ‘செய்யும்’ எனும் விரவு வினைமுற்று:
1. அவள் ஆடும்
2. மயில் ஆடும்
9.‘செய்த’ என் கிளவி – ‘செய்த’ எனும் விரவுப் பெயரெச்சம்:
1.அவள் கடித்த பழம்
2. குரங்கு கடித்த பழம்
மேல் எடுத்துக்காட்டுகளே , உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்தி வரக்கூடிய விரவு வினை, எச்சங்களைத் தெளிவாக்கும்!

தொடத் தொடத் தொல்காப்பியம் (546)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அடுத்து, முன்னிலைச் சொல்லாக வரக்கூடிய ஆண்பால், பெண்பால்,ஒன்றன்பால் விரவு வினைமுற்றுகளின் ஈறுகளைப் பேசுகிறார்!:-
“அவற்றுள்
முன்னிலைக் கிளவி
இஐ ஆயென வரூஉம் மூன்றும்
ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்” (வினையியல் 26)
இந் நூற்பாவில் கூறும் ஈறுகள்- ‘இ’, ‘ஐ’, ‘ஆய்’
இம் மூன்று ஈறுகள் பெற்ற முன்னிலை விரவு வினைகளுக்கு நச்சர் எடுத்துக்காட்டுகள் தருகிறார். சுருக்கமாக நச்சர் தரும் இவற்றைக், கீழ்வருமாறு விளக்கமாக ,ஆண்பால் ஒருமைக்கும்,பெண்பால் ஒருமைக்கும், அஃறிணை ஒருமைக்கும் இயையுமாறு நாம் காணலாம்!:
(அ) ‘இ’ ஈறு பெற்ற முன்னிலை எதிர்கால விரவு வினைகள்-
1. ‘உண்டி’ – (i) குமணா நாளை உண்டி
(ii) குமுதா நாளை உண்டி
(iii) கிளியே நாளை உண்டி
(உண்டி = உண்பை = உண்பாய்)
2.‘உரைத்தி’ – (i) குமணா நாளை உரை
(ii) குமுதா நாளை உரை
(iii) கிளியே நாளை உரை
(உரைத்தி =உரைப்பை = உரைப்பாய்)
3.‘தின்றி’ – (i) குமணா நாளை தின்றி
(ii) குமுதா நாளை தின்றி
(iii) கிளியே நாளை தின்றி
(தின்றி =தின்பை = தின்பாய்)
4. ‘ஊக்கி’ – (i) குமணா நாளை ஊக்கி
(ii) குமுதா நாளை ஊக்கி
(iii) கிளியே நாளை ஊக்கி
(ஊக்கி = ஊக்குவாய்)
5.‘ஒத்தி’ – (i) குமணா நாளை ஒத்தி
(ii) குமுதா நாளை ஒத்தி
(iii) கிளியே நாளை ஒத்தி
( ஒத்தி = ஒப்பாய்)
6.‘சூழாதி’ – (i) குமணா நாளை சூழாதி
(ii) குமுதா நாளை சூழாதி
(iii) கிளியே நாளை சூழாதி
(சூழாதி = சூழாதே)
(ஆ) ‘இ’ ஈறு பெற்ற முன்னிலை நிகழ்கால விரவு வினைகள்-
1. ‘உரைக்கிற்றி’ – (i) குமணா இப்போது உரைக்கிற்றி
(ii) குமுதா இப்போது உரைக்கிற்றி
(iii) கிளியே இப்போது உரைக்கிற்றி
(உரைக்கிற்றி =உரைக்கின்றாய்)
2. ‘கூறி’ – (i) குமணா இப்போது கூறி
(ii) குமுதா இப்போது கூறி
(iii) கிளியே இப்போது கூறி
(கூறி = கூறுகின்றாய்)
(இ) ‘ஐ’ ஈறு பெற்ற முன்னிலை இறந்தகால விரவு வினைகள்-
1. ‘உண்டனை’ – (i) குமணா நேற்று உண்டனை
(ii) குமுதா நேற்று உண்டனை
(iii) கிளியே நேற்று உண்டனை
2. ‘கரியை’– (i) குமணா நேற்றுக் கரியை
(ii) குமுதா நேற்றுக் கரியை
(iii) கிளியே நேற்றுக் கரியை
(கரியை – கரிய நிறமுடையாய்)
(ஈ) ‘ஐ’ ஈறு பெற்ற முன்னிலை நிகழ்கால விரவு வினைகள்-
1.‘உண்ணாநின்றனை’ – (i) குமணா இன்று
உண்ணாநின்றனை
(ii) குமுதா இன்று உண்ணாநின்றனை
(iii) கிளியே இன்று உண்ணாநின்றனை
(உண்ணாநின்றனை= உண்கின்றாய்)
2. ‘கரியை’– (i) குமணா இன்று கரியை
(ii) குமுதா இன்று கரியை
(iii) கிளியே இன்று கரியை
(உ) ‘ஐ’ ஈறு பெற்ற முன்னிலை எதிர்கால விரவு வினைகள்-
1. ‘உண்பை’ – (i) குமணா நாளை உண்பை
(ii) குமுதா நாளை உண்பை
(iii) கிளியே நாளை உண்பை
(உண்பை = உண்பாய்)
2. ‘உண்குவை’ – (i) குமணா நாளை உண்குவை
(ii) குமுதா நாளை உண்குவை
(iii) கிளியே நாளை உண்குவை
(உண்குவை = உண்பாய்)
3. ‘கரியை’– (i) குமணா நாளை கரியை
(ii) குமுதா நாளை கரியை
(iii) கிளியே நாளை கரியை
(ஊ) ‘ஆய்’ ஈறு பெற்ற முன்னிலை இறந்தகால விரவு வினைகள்-
1. ‘உண்டாய்’ – (i) குமணா நேற்று உண்டாய்
(ii) குமுதா நேற்று உண்டாய்
(iii) கிளியே நேற்று உண்டாய்
(உண்பை = உண்பாய்)
2. ‘கரியாய்’ – (i) குமணா நேற்றுக் கரியாய்
(ii) குமுதா நேற்றுக் கரியாய்
(iii) கிளியே நேற்றுக் கரியாய்
(எ) ‘ஆய்’ ஈறு பெற்ற முன்னிலை நிகழ்கால விரவு வினைகள்-
1.‘உண்ணாநின்றாய்’–(i)குமணா இன்று உண்ணாநின்றாய்
(ii) குமுதா இன்று உண்ணாநின்றாய்
(iii) கிளியே இன்று உண்ணாநின்றாய்
(உண்ணாநின்றாய் = உண்கின்றாய்)
2. ‘கரியாய்’ – (i) குமணா இன்று கரியாய்
(ii) குமுதா இன்று கரியாய்
(iii) கிளியே இன்று கரியாய்
(ஏ) ‘ஆய்’ ஈறு பெற்ற முன்னிலை எதிர்கால விரவு வினைகள்-
1.‘உண்பாய்’– (i) குமணா நாளை உண்பாய்
(ii) குமுதா நாளை உண்பாய்
(iii) கிளியே நாளை உண்பாய்
2. ‘கரியாய்’ – (i) குமணா நாளை கரியாய்
(ii) குமுதா நாளை கரியாய்
(iii) கிளியே நாளை கரியாய்

தொடத் தொடத் தொல்காப்பியம் (547)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது, முன்னிலைப் பலர்பாலிலும் பலவின்பாலிலும் வரக்கூடிய விரவு வினைமுற்றுகளின் ஈறுகள் பற்றிப் பேசுகிறார் தொல்காப்பியர்!:-
“இர்ஈர் மின்னென வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
சொல்லோ ரனைய என்மனார் புலவர்” (வினையியல் 27)
இந் நூற்பாப்படி, ‘இர்’, ‘ஈர்’, ‘மின்’ ஆகிய மூன்று ஈறுகளைப் பெற்று, முன்னிலை விரவு வினைகளாகப் பலர்பாலிலும், பலவின் பாலிலும் நடக்கும்!
இவற்றுக்கு நச்சர் சுருக்கமாகத் தந்த எடுத்துக்காட்டுகளை, நாம் விளக்கமாக வருமாறு வரையலாம்!:
1. உண்டனிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் இறந்தகால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நேற்று உண்டனிர்
2. உண்டனிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் இறந்தகால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நேற்று உண்டனிர்
3. உண்ணாநின்றனிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் நிகழ்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே இன்று உண்ணாநின்றனிர்
4. உண்ணாநின்றனிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் நிகழ்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே இன்று உண்ணாநின்றனிர்
5. உண்பிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நாளை உண்பிர்
6. உண்பிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நாளை உண்பிர்
7. உண்குவிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நாளை உண்குவிர்
8. உண்குவிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நாளை உண்குவிர்
9. உண்டீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் இறந்தகால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நேற்று உண்டீர்
10. உண்டீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் இறந்தகால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நேற்று உண்டீர்
11. உண்ணாநின்றீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் நிகழ்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நேற்று உண்ணாநின்றீர்
12. உண்ணாநின்றீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் நிகழ்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நேற்று உண்ணாநின்றீர்
13. உண்பீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று.
(எ-டு) மக்களே நாளை உண்பீர்
14. உண்பீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நாளை உண்பீர்
15. உண்குவீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நாளை உண்குவீர்
16. உண்குவீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நாளை உண்குவீர்
17. உண்மின் – ‘மின்’ ஈறு பெற்ற , முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று (எ-டு) மக்களே நாளை உண்மின்
18. உண்மின் – ‘மின்’ ஈறு பெற்ற , முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று (எ-டு) மயில்களே நாளை உண்மின்
19. உண்ணன்மின் – ‘மின்’ ஈறு பெற்ற , முன்னிலைப் பலர்பால் எதிர்கால எதிர்மறை விரவு வினைமுற்று (எ-டு) மக்களே நாளை உண்ணன்மின்
20. உண்ணன்மின் – ‘மின்’ ஈறு பெற்ற , முன்னிலைப் பலவின்பால் எதிர்கால எதிர்மறை விரவு வினைமுற்று (எ-டு) மயில்களே நாளை உண்ணன்மின்

தொடத் தொடத் தொல்காப்பியம் (548)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தொல்காப்பியர் , எட்டு வழிகளில் விரவு வினைகள் ஏற்படும் என்றார்(வினை.25). இந்த எட்டுவழிகளில், ‘முன்னிலை’ பற்றிச் சற்றுமுன் பார்த்தோம் (வினை.26,27).; மீதி ஏழு வழிகள் உள்ளன அல்லவா? இவை பற்றியதே கீழ்வரும் நூற்பா:
“எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி
ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே” (வினையியல் 28)
எஞ்சிய கிளவி – 1.வியங்கோள்
2. வினையெச்சம் (’வினையெஞ்சு கிளவி’)
3.இல்லை (’இன்மை செப்பல்’)
4.வேறு (’வேறென் கிளவி’)
5.செய்ம்மன
6.செய்யும்
7.செய்த
-இந்த ஏழுமே தன்மை,முன்னிலை,படர்க்கை, ஆண்பால் ஒருமை , பெண்பால் ஒருமை, பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றுக்கு உரிய , அவ்வப் பொருளிடத்துப் பயிலும்போது என்கிறார் சேனாவரையர்.
கீழ்வரும் நம் விளக்கப் பட்டியல் சேனாவரையரின் சுருக்க எடுத்துக்காட்டுகளை மேலும் விளக்கும்:
1.வியங்கோள்- (அ) அவன் செல்க (படர்க்கை ஆண்பால்)
(ஆ)அவள் செல்க(படர்க்கைப் பெண்பால்)
(இ) அவர் செல்க (படர்க்கைப் பலர்பால்)
(ஈ) அது செல்க (படர்க்கை ஒன்றன்பால்)
(உ) அவை செல்க (படர்க்கைப் பலவின்பால்)
2.வினையெச்சம் - (அ) உழுது வந்தேன் (தன்மை ஒருமை)
(ஆ) உழுது வந்தேம்(தன்மைப் பன்மை)
(இ) உழுது வந்தாய் (முன்னிலை ஒருமை)
(ஈ) உழுது வந்தீர் (முன்னிலைப் பலர்பால்)
(உ) உழுது வந்தாள் (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) உழுது வந்தான் (படர்க்கை ஆண்பால்)
(எ) உழுது வந்தது (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) உழுது வந்தார் (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) உழுது வந்தன (படர்க்கைப் பலவின்பால்)
3. இல்லை - (அ) யா னில்லை (தன்மை ஒருமை)
(ஆ) யா மில்லை (தன்மைப் பன்மை)
(இ)நீ யில்லை (முன்னிலை ஒருமை)
(ஈ)நீ ரில்லை (முன்னிலைப் பன்மை)
(உ) அவ ளில்லை (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவ னில்லை (படர்க்கை ஆண்பால்)
(எ) அது வில்லை (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவ ரில்லை (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை யில்லை (படர்க்கைப் பலவின்பால்)
4.வேறு - (அ) யான் வேறு (தன்மை ஒருமை)
(ஆ) யாம் வேறு (தன்மைப் பன்மை)
(இ) நீ வேறு (முன்னிலை ஒருமை)
(ஈ) நீயிர் வேறு (முன்னிலைப் பலர்பால்)
(உ) அவள் வேறு (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவன் வேறு (படர்க்கை ஆண்பால்)
(எ) அது வேறு (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவர் வேறு (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை வேறு (படர்க்கைப் பலவின்பால்)
5. செய்ம்மன - (அ) யா னுண்மன (தன்மை ஒருமை)
(ஆ) யா முண்மன (தன்மைப் பன்மை)
(இ) நீ யுண்மன (முன்னிலை ஒருமை)
(ஈ) நீயி ருண்மன (முன்னிலைப் பன்மை)
(உ) அவ ளுண்மன (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவ னுண்மன (படர்க்கை ஆண்பால்)
(எ) அது வுண்மன (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவ ருண்மன (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை யுண்மன (படர்க்கைப் பலவின்பால்)
6. செய்யும் - (அ) யான் உண்ணும் ஊண் (தன்மை ஒருமை)
(பெயரெச்சம்) (ஆ) யாம் உண்ணும் ஊண் (தன்மைப் பன்மை)
(இ) நீ உண்ணும் ஊண் (முன்னிலை ஒருமை)
(ஈ) நீயிர் உண்ணும் ஊண் (முன்னிலைப் பன்மை)
(உ) அவள் உண்ணும் ஊண் (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவன் உண்ணும் ஊண் (படர்க்கை ஆண்பால்)
(எ) அது உண்ணும் ஊண் (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவர் உண்ணும் ஊண் (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை உண்ணும் ஊண் (படர்க்கைப் பலவின்பால்)
7. செய்யும் - (அ) அவள் வரும் (படர்க்கைப் பெண்பால்)
(வினைமுற்று) (ஆ) அவன் வரும் (படர்க்கை ஆண்பால்)
(இ) அது வரும் (படர்க்கை ஒன்றன்பால்)
(ஈ) அவை வரும் (படர்க்கைப் பலவின்பால்)
8. செய்த - (அ) யான் உண்ட ஊண் (தன்மை ஒருமை)
(பெயரெச்சம்) (ஆ) யாம் உண்ட ஊண் (தன்மைப் பன்மை)
(இ) நீ உண்ட ஊண் (முன்னிலை ஒருமை)
(ஈ) நீயிர் உண்ட ஊண் (முன்னிலைப் பன்மை)
(உ) அவள் உண்ட ஊண் (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவன் உண்ட ஊண் (படர்க்கை ஆண்பால்)
(எ) அது உண்ட ஊண் (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவர் உண்ட ஊண் (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை உண்ட ஊண் (படர்க்கைப் பலவின்பால்)

தொடத் தொடத் தொல்காப்பியம் (549)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘வியங்கோள்’ என்று பார்த்தோமல்லவா? இதற்கு ஒரு விளக்கம் தருகிறார் தொல்காப்பியர்:
“அவற்றுள்
முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடும்
மன்னா தாகும் வியங்கோள் கிளவி” (வினையியல் 29)
அஃதாவது, வியங்கோள் ஆனது, தன்மை இடத்தும் முன்னிலை இடத்தும் வராது! படர்க்கை இடத்திலேதான் வரும்!
படர்க்கை இடத்து வியங்கோள் – 1. அவன் செல்க!
2.அவள் செல்க!
3.அவர் செல்க!
4.அது செல்க!
5. அவை செல்க!
கல்லாடனாரின் இந்த எடுத்துக்காட்டுகளால், வியங்கோள் என்பது உயர்திணையில் மட்டும் வராமல், அறிணையிலும் வரும் என்று அறிகிறோம்!
உரையாசிரியர்தம் உரைகளின்படி, ‘சிறுபான்மை தன்மை முனிலை ஆகிய இடங்களிலும் வியங்கோள் வரும்!’ .
தன்மை இடத்தில் வியங்கோள்- 1. யான் செல்க!
2.யான் வாழ்வேனாக!
3.நாம் செழிப்போமாக!
முன்னிலை இடத்தில் வியங்கோள்- 1. நீ செல்க!
2. நீ வாழ்க!
3.யானும் நின்னொடு உடன் உறைக!
4.கடாவுக பாக!
5.நீ வாழி!
6. நீயிர் வாழிய!
வியங்கோளுக்கும் ஏவலுக்கும் என்ன வேறுபாடு?
வியம் – ஏவல் ; கோள்- கொள்ளுதல்
வெறும் ஏவலாக இருந்தால், அது ‘ஏவல்’!
அந்த ஏவலைக் கொள்ளும் குறிப்பு இருந்தால் அதுதான் ‘வியங்கோள்’!
அதை எடுத்து வா – இத் தொடரில் வெறும் ஏவல்தான் உள்ளது ; ஆகவே
‘வா’என்பது ‘ஏவல்’!
அதை எடுத்து வருக – இத் தொடரில், வெறும் ஏவல் இல்லை; ஏவலைப் பெறுவான், அந்த ஏவலைக் கொள்ளும் ஒரு குறிப்பும் உள்ளது!; ஆகவே ‘வருக’ என்பது வியங்கோள்!
வியங்கோள் – Optative mood.

தொடத் தொடத் தொல்காப்பியம் (550)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வினையியலில், அடுத்து நாம் பார்க்கப்போவது, ‘செய்யும்’ எனும் வினை முற்றை!:
“பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றும் நிகழும் காலத்துச்
செய்யும் என்னுங் கிளவியோடு கொள்ளா” (வினையியல் 30)
‘செய்யும்’ எனும் வாய்பாட்டு வினை முற்றானது, உயர்திணைப் படர்க்கைப் பலர்பால், உயர்திணை முன்னிலை, உயர்திணைத் தன்மை ஆகியவற்றில் நிகழ்காலம் குறித்து வராது!
இவை நீங்களான மற்றவை ‘செய்யும்’ எனும் வினைமுற்றில் நிகழ்காலம் காட்டி வரும்!:-
1.அவன் உண்ணும் √ (= அவன் உண்கிறான்) (உயர்திணைப் படர்க்கை ஆண்பால்)
2.அவள் உண்ணும் √ (= அவன் உண்கிறாள்) (உயர்திணைப் படர்க்கைப் பெண்பால்)
3.அது உண்ணும் √ ( எ-டு:‘மாடு உண்கிறது’) (அஃறிணைப் படர்க்கை ஒருமை)
4.அவை உண்ணும் √ (எ-டு:‘மாடுகள் உண்கின்றன’) (அஃறிணைப் படர்க்கைப் பன்மை)
‘செய்யும்’ வாரா இடங்கள்:-
1. அவர்கள் உண்ணும் × ( ‘பல்லோர் படர்க்கை’) (epicene plural)
2. நீ உண்ணும் × ( ‘முன்னிலை’) (second person)
3. நான் உண்ணும் × ( ‘தன்மை’) (first person)
செய்யும் என்னும் கிளவி = செய்யும் என்னும் வாய்பாடு (pattern)
அவன் நாளை பாடும் = அவன் நாளை பாடுவான்
- இத் தொடரில், பாடும் என்பது ‘செய்யும்’எனும் வாய்பாட்டில் வந்துள்ள வினைமுற்றே.
ஆனால் எதிர்காலத்தில் அல்லவா வந்துள்ளது?
உரையாசிரியன்மார் , இவ்வாறு வந்தால் இதனைக் ‘கால மயக்கம்’ என்று எடுத்துக்கொள்க எனக் குறிக்கின்றனர்!

தொடத் தொடத் தொல்காப்பியம்[b][/b] (551)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது, வினையெச்ச வாய்பாடுகளைக் கூறுகிறார் தொல்காப்பியர்:-
“செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென”
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி (வினையியல் 31)
சேனாவரையரின் உரைப்படி, மேல் ஒன்பது வினையெச்ச வாய்பாடுகளும் குறிக்கும் காலங்கள்:
1. செய்து வாய்பாடு – இறந்தகாலம் காட்டும்
2. செய்யூ வாய்பாடு – இறந்தகாலம் காட்டும்
3. செய்பு வாய்பாடு – நிகழ்காலம் காட்டும்
4. செய்தென வாய்பாடு – இறந்தகாலம் காட்டும்
5. செய்யியர் வாய்பாடு – எதிர்காலம் காட்டும்
6. செய்யிய வாய்பாடு – எதிர்காலம் காட்டும்
7. செயின் வாய்பாடு – எதிர்காலம் காட்டும்
8. செய வாய்பாடு – இறந்தகாலம், நிகழ்காலம்,எதிர்காலம் என்ற முக்காலங்களையும்
காட்டும்
9. செயற்கு வாய்பாடு – எதிர்காலம் காட்டும்
இந்த ஒன்பது வினையெச்ச வாய்பாடுகளுக்குச் சேனாவரையர் தந்த சுருக்க எடுத்துக்காட்டுகளை விளக்கப் பட்டியலாக நாம் வருமாறு தரலாம்:
1. ‘செய்து’ – அவன் நக்கு மகிழ்ந்தான் – அவன் சிரித்து மகிழ்ந்தான்
அவன் உண்டு வந்தான் – அவன் சாப்பிட்டு வந்தான்
அவன் வந்து கொடுத்தான் – அவன் வந்து வழங்கினான்
அவன் சென்று சேர்ந்தான் – அவன் போய்ச் சேர்ந்தான்
அவன் ஓடி விளையாடினான் – அவன் ஓடுதலைச் செய்து
விளையாடினான்
அவன் வீரனாய் நின்றான் - அவன் வீரன் ஆகி நின்றான்
அவன் போய் ஒளிந்தான் – அவன் சென்று ஒளிந்தான்
2. ‘செய்யூ’ - அவன் உண்ணூ வந்தான் – அவன் உண்டு வந்தான்
அவன் தின்னூ வந்தான் – அவன் தின்று வந்தான்
3. ‘செய்பு’ – அவன் நகுபு வந்தான் – அவன் சிரித்துக்கொண்டு வந்தான்
அவன் கற்குபு உள்ளான் – அவன் கற்றுக்கொண்டு இருக்கிறான்
4. ‘செய்தென’ – சோலை புக்கென வெப்பம் நீங்கிற்று – சோலை
நுழைந்தபின் வெப்பம் அகன்றது.
உண்டெனப் பசி நீங்கிற்று – உண்டதால் பசி நீங்கியது
உரைத்தென உணர்ந்தான் – உரைத்தபின் உணர்ந்தான்
மருந்து தின்றெனப் பிணி நீங்கிற்று – மருந்து உண்டதால்
நோய் தீர்ந்தது
5. ‘செய்யியர்’ – அவள் உண்ணியர் வருவாள் – அவள் உண்ண வருவாள்
அவள் ஆடியர் வருவாள் – அவள் ஆட வருவாள்
அவள் தின்னியர் வருவாள் – அவள் தின்ன வருவாள்
அவள் போகியர் வருவாள் – அவள் போக வருவாள்
6. ‘செய்யிய’ – அவன் உண்ணிய வருவான் – அவன் உண்ண வருவான்
அவன் நோக்கிய வருவான் – அவன் நோக்க வருவான்
அவன் நசுக்கிய வருவான் – அவன் நசுக்க வருவான்
அவன் வெட்டிய வருவான் – அவன் வெட்ட வருவான்
7. ‘செயின்’ – மழை பெய்யிற் குளம் நிறையும் – மழை பெய்தாற் குளம்
நிறையும்
வேகமாக நடப்பின் போய்விடலாம் – வேகமாக நடந்தால்
போய்விடலாம்
அழகாகப் பேசின் கைதட்டுவர் - அழகாகப் பேசினால்
கைதட்டுவர்
8.‘செய’ - மழை பெய்யக் குளம் நிறைந்தது – மழை பெய்ததாற் குளம்
நிறைந்தது(இறந்தகாலம்)
ஞாயிறு பட வருகிறான் – ஆதவன் மறையும்போது வருகிறான்
(நிகழ்காலம்)
கற்க வருவான் – கற்றுக்கொள்ள வருவான் (எதிர்காலம்)
9. ‘செயற்கு’ – அவர் உணற்கு வந்தார் – அவர் உண்ண வந்தார்
அவர் தினற்கு வந்தார் – அவர் தின்ன வந்தார்
அவள் பாடற்கு வந்தாள் – அவள் பாட வந்தாள்
அவர் வீடு கட்டற்கு வந்தார் – அவர் வீடு கட்டுவதற்கு
வந்தார்

தொடத் தொடத் தொல்காப்பியம் (552)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேலே ஒன்பது வகையான வினையெச்ச வாய்பாடுகளைத் தொல்காப்பியர் கூறினார்; அதன் பின்னர், வினையெச்சப் (verbal participle) பொருள்தரக் கூடிய சில கால ஒட்டுகளை(suffixes) நல்குகிறார்:-
“பின்முன் கால்கடை வழிஇடத்து என்னும்
அன்ன மரபின் காலங் கண்ணிய
என்ன கிளவியும் அவற்றியல் பினவே” (வினையியல் 32)
இதன்படி, வினையெச்சத்தில் வரக்கூடிய பின் ஒட்டுகளும் இவை குறிக்கும் காலங்களும்:
1 . பின் (இறந்தகாலம்; நிகழ்காலம்)
2 . முன் (இறந்தகாலம்)
3 .கால் (இறந்தகாலம்; நிகழ்காலம்; எதிர்காலம்)
4 . கடை (இறந்தகாலம்)
5 . வழி (இறந்தகாலம்; நிகழ்காலம்; எதிர்காலம்)
6 . இடத்து (இறந்தகாலம்; நிகழ்காலம்; எதிர்காலம்)
7. இவை போன்ற பிற
கீழ்வரும் எடுத்துக்காட்டுகளில் , இந்த வினையெச்ச ஒட்டுகளின் பயிற்சி தெளிவாகும்!:
1 . ‘பின்’ – நீரே பொய் கூறிய பின், யார் உண்மையைச் சொல்வார்? (இறந்தகால எச்சம்)
நீ இவ்வாறு கூறுகின்ற பின், சொல்வதற்கு என்ன இருக்கிறது?
(நிகழ்கால எச்சம்)
2 . ‘முன்’ – வருமுன் காப்போம் (இறந்தகால எச்சம்)
3 . ‘கால்’ – நாம் நேற்றுச் சண்டை போட்டக்கால் (இறந்தகால எச்சம்)
அவர்உதவியை இப்போது நாடுங்கால் (நிகழ்கால எச்சம்)
நாளை அவர் வேலைக்கு வருங்கால் (எதிர்கால எச்சம்)
4 . ‘கடை’ – அன்று துன்பம் வந்தக்கடை (இறந்தகால எச்சம்)
5 . ‘வழி’ – மருத்துவர் தொடுவழி நோய் நீங்கிற்று (இறந்தகால எச்சம்)
அவள் ஆடுவழி என்னை மறக்கிறேன் (நிகழ்கால எச்சம்)
அவள் உரைக்கும் வழி போகாதே (எதிர்கால எச்சம்)
6. ‘இடத்து’ – பயிர் முற்றியவிடத்து அறுவடை செய்தான் (இறந்தகால எச்சம்)
அவன் சினந்து பேசியவிடத்து அமைதிப்படுத்துகிறாள்(நிகழ்கால எச்சம்)
அரசன் ஆணையிடுமிடத்து, நிறைவேற்றப்படும் (எதிர்கால எச்சம்)
7 . ‘ஏனைக் கிளவி’ : (அ) வான் – கொள்வான் வந்தான் – கொள்ள வந்தான் (எதிர்கால
எச்சம்)
(ஆ) பான் – உண்பான் வந்தாள் – உண்ண வந்தாள்(எதிர்கால
எச்சம்)
(இ) பாக்கு – உண்பாக்கு வந்தார் – உண்ண வந்தனர்(எதிர்கால
எச்சம்)
(ஈ) வாக்கு – கொள்வாக்கு வந்தாள் – கொள்ள வந்தாள்(எதிர்கால
எச்சம்)
(உ) மெல்ல – அவள் மெல்ல நடந்தாள் (காலத்தை
வெளிப்படையாகக் காட்டாத குறிப்பு வினையெச்சம்)
(ஊ) அல்லது – அன்பால் அல்லது இது முடியாது(காலத்தை

(எ) அல்லால் - தாயல்லால் பிள்ளைக்குக் கதியில்லை(காலத்தை

(ஏ) இன்றி – காசின்றி என்ன நடக்கும்? (காலத்தை

(ஐ) அன்றி – அப்பாவன்றி வீட்டில் துரும்பும் அசையாது (காலத்தை

தொடத் தொடத் தொல்காப்பியம் (553)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தொடர்ந்து தொல்காப்பியர் சில வினையெச்சங்களின் வினை முடிபு பற்றிப் பேசுகிறார்:
“அவற்றுள்
முதல்நிலை மூன்றும் வினைமுதல் முடிபின” (வினையியல் 33)
அவற்றுள் – ‘செய்து’ முதலிய ஒன்பது (வினை. 31) , ’பின்’முதலிய ஆறு (வினை.32) வினையெச்சங்களுள்,
முதல்நிலை மூன்றும்- ‘செய்து’, ‘செய்யூ’, ‘செய்பு’ ஆகிய மூன்றும்,
வினைமுதல் முடிபின – தம் எழுவாயின் வினை கொண்டு முடியும்.
இதனையே நச்சர் – “செய்து,செய்யூ, செய்பு என்னும் மூன்றும், அவ் வெச்சவினையை நிகழ்த்தின கருத்தாவினது வினையினை உணர்த்தும் சொல்லினையே முடிபாகக் கொண்டு முடிதலையுடைய” என்றார்.
இவரது எடுத்துக்காட்டுகள்- 1. உண்டு வந்தான் (இங்கே ‘செய்து’ எனும் வாய்பாட்டு வினை ‘உண்டு’; இந்த வினையைச் செய்தவனது வினையைக் குறிப்பதே ‘வந்தான்’)
2 .உண்ணூ வந்தான் (இங்கே ‘செய்யூ’ எனும் வாய்பாட்டு வினை ‘உண்ணூ’; இந்த வினையைச் செய்தவனது வினையைக் குறிப்பதே ‘வந்தான்’)
3. உண்குபு வந்தான் (இங்கே ‘செய்பு’ எனும் வாய்பாட்டு வினை ‘உண்குபு’; இந்த வினையைச் செய்தவனது வினையைக் குறிப்பதே ‘வந்தான்’)
4 .கற்று வல்லன் ஆயினான் (இங்கே ‘செய்து’ எனும் வாய்பாட்டு வினை ‘கற்று’; இந்த வினையைச் செய்தவனது வினையைக் குறிப்பதே ‘ஆயினான்’)
5 .கல்லூ வல்லன் ஆயினான் (இங்கே ‘செய்யூ’ எனும் வாய்பாட்டு வினை ‘கல்லூ’; இந்த வினையைச் செய்தவனது வினையைக் குறிப்பதே ‘ஆயினான்’)
6 . கற்குபு வல்லன் ஆயினான் (இங்கே ‘செய்பு’ எனும் வாய்பாட்டு வினை ‘கற்குபு’; இந்த வினையைச் செய்தவனது வினையைக் குறிப்பதே ‘ஆயினான்’)
கீழ்வரும் தொடரைப் பாருங்கள்:
அவன் உண்ணிய வந்தான் ( = அவன் உண்ண வந்தான்)
‘உண்ணிய’ என்பது, ‘செய்யிய’ எனும் வினையெச்ச வாய்பாடு.
ஆனால், ‘உண்ணிய’ என்றால், இந்த எச்ச வினையையைச் செய்தவர் யார் என்று கூற முடியாது!
இவ்வாறு ஆராய்ந்துதான் , மேல் நூற்பாவில், மூன்று வினையெச்ச வாய்பாடுகள் மட்டும் வினைமுதலால் முடியும் என்றார் தொல்காப்பியர்!

- Sponsored content
Page 81 of 84 • 1 ... 42 ... 80, 81, 82, 83, 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 81 of 84